Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் ஆளாளுக்கொரு கூற்றுரைப்பது எம்மை ஆள்பவர்களுக்கே நன்மை பயக்கும் - விக்னேஸ்வரன்

Featured Replies

wicki%20sambanthan_CI.jpg

எனது அன்பான தமிழ்ப் பேசும் சகோதர சகோதரிகளே!

குழப்பமான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ்ப் பேசும் மக்கள் என்பதால் நாம் அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளோம்,

அச்சுறுத்தப்பட்டுள்ளோம், பாகுபாட்டுக்குள்ளாக்கப்பட்டுள்ளோம். எமது பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படக் கூடும் என்ற எண்ணத்தை நாம் எட்ட முடியாதுள்ளது. இந்த நேரத்தில்த் தான் ஜனாதிபதித் தேர்தல் எம்மிடையே முகம் காட்டியுள்ளது. எவ்வழியில் நாம் செல்ல வேண்டும்? உங்களைப் போல் என் மனதிலும் ஆசுரா, ஆளுசா, வேறு ஒரு போட்டியாளரா அல்லது தேர்தலைப் பகிஷ்கரிப்பதா என்பது போன்ற பல எண்ணங்கள் எழுந்து குழப்பத்தை ஊட்டி வந்துள்ளன. ஆனால் ஆர அமர இருந்து விசாரித்த பின்னர் தமிழ்ப் பேசும் மக்களாகிய எங்களுக்கு, அதாவது வடகிழக்குத் தமிழர், முஸ்லீம்கள், மலையகத் தமிழர், கொழும்புத் தமிழர், பிற மாகாணத் தமிழர் யாவர்க்கும் இருக்கும் ஒரே ஒரு வழி பொது வேட்பாளராகிய மைத்திரிபால சிரிசேனாவை ஆதரித்து அவரின் அடையாளச் சின்னமாகிய அன்னப்பட்சிக்கு வாக்களிப்பதே சாலச் சிறந்தது என்று புலப்படுகிறது. என்னுடைய தீர்மானத்திற்கான காரணங்களைச் சுருக்கமாகக் கூறிவிடுகின்றேன்.

அதற்கு முன், பல கட்சிகளைக் கொண்ட எமது கூட்டமைப்பானது ஏற்கனவே மைத்திரிபால சிரிசேன அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பதை முதலில் கூறிவைக்கின்றேன். அவர்கள் தீர்மானம் சரியோ பிழையோ என்பது முக்கியமல்ல. சரி பிழை கூறுவோர் கூட மகிந்தவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று திடமாகக் கூறாதிருப்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். இதை ஏன் கூறுகின்றேன் என்றால் எமது தமிழ்ப்பேசும் மக்கள் ஒற்றுமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக இதுவரை காலமும் வாழ்ந்துவரவில்லை. அதனால் எமக்கெதிரானவர்கள் எங்கள் ஒற்றுமையின்மையைத் தமக்குச் சாதகமாகப் பாவித்து வந்துள்ளனர். இந்தச் செயற்பாடு சுதந்திரத்திற்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வந்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் நாம் ஐக்கியத்துடன் ஒன்றுபட்டு முன்னேறுவதே எமது தலையாய கடப்பாடு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் எடுத்துக் கொண்ட தீர்மானத்திற்கு எதிராகச் செயற்படுவது எம்மை அரசியல் ரீதியாக வலுவற்ற, ஒரு பிரிவுபட்ட பிரிவினராக உலகத்திற்கு எடுத்துக் காட்டும். நாம் அரசியலில் ஏதேனும் பெற வேண்டும் என்றால் எமது ஐக்கியம் மிக மிக முக்கியம். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் நாம் ஆளாளுக்கொரு கூற்றுரைப்பது, எம்மை ஆள்பவர்களுக்குத் தான் நன்மையைப் பயக்கும்.

எமது ஐக்கியத்தின் மூலம் அரசியல் ரீதியாக நாம் பலம் மிக்க ஒரு பிரிவினர் என்பதை எடுத்துக் காட்டவேண்டும். எமது ஐக்கியம் தெற்கில் உள்ளவர்களின் அரசியல்க் கூட்டுக்களை வடிவமைக்கக் கூட உதவலாம். நாம் ஒவ்வொருவரும் தயங்காது சென்று, வரும் 8ந் திகதி வாக்களிப்பது எமக்கு அரசியல் ரீதியாக ஒரு மரியாதையைக் கொடுக்கும். அரசியல் பேரத்திற்கும் எம்மை ஆயத்தப்படுத்தும். உதித்து வரும் புதிய ஜனநாயக சூழலையும் இப் புதிய சூழலில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதிலும் நாம் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகின்றேன்.

எமது சகோதர சகோதரி உறுப்பினர் சிலர் எமது மக்களை சுதந்திரமாகத் தாம் நினைத்தவாறு வாக்களிக்க விட வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளனர். இதில் முக்கியமாக நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால் எவருமே, நான் முன்னர் கூறியது போல், மூன்றாம் முறை வர எத்தனிக்கும் தற்போதைய ஜனாதிபதிக்கு வாக்களியுங்கள் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. மாறாக தற்போதைய ஜனாதிபதியின் கீழ் எமது இனம் அடைந்த தாங்கவொண்ணா அவலங்கள் பற்றியே அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எமது தமிழ்க் குடிமக்கள் சார்பான மக்கள் குழுவும் அவ்வாறே கூறியுள்ளனர். மகிந்தவின் கீழான எமது இன ஒடுக்க நடவடிக்கைகள் பற்றி சகலரும் பிரஸ்தாபித்துள்ளனர்.

அப்படியானால் அத்தகைய அவலங்களைத் தரும் ஆட்சியை மாற்ற வேண்டியது எமது தலையாய கடமையல்லவா? தேர்தலைப் பகிஷ்கரிப்பதாலோ, முகவரியில்லாத வேட்பாளருக்கு முன்னின்று வாக்களிப்பதாலோ, வாக்கைச் சிதைப்பதாலோ கொடுங்கோல் குடும்ப ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரலாமா? முடியாது. இவை அனைத்தும் சிங்கள மக்களின் பெரும்பான்மையர் வாக்குகளைப் பெறக் கூடிய தற்போதைய ஜனாதிபதிக்குச் சார்பானதாவே அமையும். எங்கள் வாக்குக்கு மதிப்பு ஏற்பட வேண்டுமானால் எதிரணிப் பொது வேட்பாளருக்கு நாங்கள் எங்கள் வாக்குகளை அளிப்பதாலேயே நாம் மதிப்பையும் பெற்று மாற்றத்தையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இதை எமது மக்கள் தமது சிந்தைக்கெடுக்க வேண்டும்.

இதுவரை பதவியில் உள்ளவர் செய்தவற்றை எதிரணி வேட்பாளர் தொடர்ந்து செய்ய மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம் என்பதே எமது சகோதர சகோதரிகளின் அடுத்த கேள்வி. அதற்குத் தமிழர்கள் எவராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. ஆனால் தமிழர்களை ஏமாற்றி அல்லது தமிழர்கள் ஏமாந்ததால் பதவிக்கு வந்தவரே மகிந்த அவர்கள். நாம் 2005ம் ஆண்டுத் தேர்தலில் வாக்கிடாது விட்டதால் வளமான வாழ்க்கையைப் பெற்றவர் அவர். வந்தபின் குடும்ப ஆட்சியை நிறுவியுள்ளார். 2005ல் தனக்கு மறைமுகமாக ஆதரவு தந்தவர்களை “பயங்கரவாதிகள்” என்று தொடர்ந்து கூறியே தனக்குச் சார்பாகச் சிங்கள வாக்குகளைப் பெற்று வருபவர் அவர்.

ஆனால் மைத்திரிபால அப்படியல்ல. தமிழர்களை ஏமாற்றித் தனது பதவியை வகிக்க அவர் எத்தனிக்கவில்லை. அத்துடன் அவருக்குச் சார்பாக சிறுபான்மையினர் பலர் ஒன்று சேர்ந்துள்ளனர். எமது முஸ்லிம் சகோதரர்களும் மனோ கணேசன் அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்தும் மலையகச் சகோதரர்களும் மைத்திரிபாலாவுக்குப் பக்க பலமாக இருக்கின்றார்கள். எனவே ஒரு  குறிப்பிட்ட சிறுபான்மை மக்கட் குழாத்தினை சிரிசேன அவர்களால் ஓரம் கட்ட முடியாது போகும். ஜனநாயகம், ஒற்றுமை, ஒன்று சேர்தல் போன்ற பிரயோகங்களையே அவர் பாவித்து வருகின்றார். அவரால் அராஜகத்தையும் பெரும்பான்மையினரின் ஏகோபித்த அரசியலையும் ஆதரிப்பது கடினமாக இருக்கும். அதுமட்டுமல்ல. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றவும் அவர் முன்வந்துள்ளார். நீதித்துறையையும் அரசாங்கப் பொதுச் சேவைகளையும் அரசியல் அடிமைத்தனத்தில் இருந்து அகற்றி வைக்கவும் முன்வந்துள்ளார். எனவே அவர் தலைமைத்துவத்தின் கீழ் எமக்கெதிரான பாகுபாட்டு அரசியலைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதே எனது கணிப்பீடு. இதுவரை காலமும் தமிழ்ப் பேசும் மக்கள் அனுபவித்த அராஜகத்தின் பாதிப்பை தற்போது சிங்கள மக்களும் அனுபவிப்பதாலேயே பொது எதிரணி வேட்பாளர் என்ற ஒருவரை அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். ஆகவே அவர்கள் நிட்சயமாக ஜனநாயகம் நோக்கி நடைபோட வேண்டிய ஒரு கடப்பாட்டினை கொண்டவர்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. அத்துடன் மைத்திரி ஒரு விவசாயியின் மகன். பொலநறுவையைச் சேர்ந்தவர். வாழ்விடங்கள் பற்றியும் வாழ்வாதாரங்கள் பற்றியும் அறிந்த ஒருவர் அவர் என்பதை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேறு சிலர் வேறு பல விவாதக் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள். அதாவது உலக அரங்கங்களில் நாம் இதுவரை பெற்ற உத்வேகத்தை நாம் இழந்து விடக் கூடும் என்கின்றார்கள். ஆனால் முடுக்கிவிட்ட முன்னைய செயற்பாடுகள் சர்வதேச அரங்கங்களில் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டே இருப்பன. நாம் வெளிநாட்டுத் தாபனங்களின் உதவியை நாடியது உள்ளூரில் நிலைமை பக்கச் சார்பாக உருவெடுத்தது என்பதால் அல்லவா? நிலைமையைச் சீர்படுத்தி நீதித்துறையை முன்போல முதிர்ச்சியுடனும் முன்மாதிரியாகவும் ஆக்கத் தலைப்பட்டால் அது நடைபெறப் பல மாத காலங்கள் ஆகும். அதற்கிடையில் ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை தமது செயல்ப்பாடுகளைப் பரிபூரணமாகச் செயற்படுத்திவிடும்.

இன்னுமொரு வாதம் என்னவென்றால் சிங்கள அடிப்படை வாதக் கட்சிகள் மைத்திரியுடன் சேர்ந்துள்ளதால் எமக்கு எதுவுமே கிடைக்காது என்பது. ஒருவரை நாம் ஒரு தேர்தலில் ஆதரிக்கும் போது அவரின் அனைத்து நண்பர்கள், நலன் விரும்புவோர், நாடிவருவோர் யாவரையும் நாம் ஆதரிக்கின்றோம் என்று பொருளல்ல. ஆகவே நாம் மைத்திரிபாலவுக்கு வாக்களித்தால் அது ஜாதிக ஹெல உருமையினருக்கு வாக்களித்தது போன்றது என்பது பிழையான வாதம். உண்மையில் அவர்களைப் போன்றவர்கள் ஒரே அணியில் இருப்பது ஒரு வரப்பிரசாதம் என்றே கொள்ள வேண்டும். எத்தனை சிக்கலான வழக்குகளில் மூர்க்கத்தனமாக முரண்டு பிடித்த தரப்பனரை எம் போன்ற நீதிபதிகள் ஒரு ஐக்கியமான செயற்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். உதாரணத்திற்கு இணுவில் கந்தசாமிக் கோவில் வழக்கு எத்தனை வருடங்களாக இழுபட்டு இழுபட்டு எம் காலத்தில் அது ஒரு சுமுகமான தீர்வைக் கண்டது? ஆகவே எம்மை எதிர்க்கும் ஜாதிக ஹெல உருமையினர் கூட ஜனநாயகத்தை வரவேற்பதால் எம்மால் அவர்களுடன் பேசித் தீர்க்க இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்பதை எம் மக்கள் மறக்கக் கூடாது.

இன்றைய குடும்ப ஆட்சிக்கு எதிரான வாக்கு ஜனநாயகத்திற்கு அளிக்கப்படும் வாக்கு. நாம் துன்பம் அனுபவிக்கும் போது சிங்கள மக்கள் வாளாதிருந்தனர். எமக்கு தமிழர்களான அவர்களுடன் தொடர்பில்லை என்று நினைத்திருந்தனர். ஆனால் எமக்கு நடந்தவை அவர்களுக்கு நடக்கும் போது தான் அவர்கள் இன்று ஜனநாயகம் பற்றிப் பேசுகின்றார்கள். நாம் அவ்வாறல்லாமல் எக் காலத்திலும் ஜனநாயக உணர்வு பூண்டவர்கள் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். நாம் ஜனநாயகத்தை வேண்டி நிற்பதால் வேட்பாளர் தோற்றால்க் கூட நாம் தலை நிமிர்ந்து நிற்கலாம்.

ஆகவே எனதருமை சகோதர சகோதரிகளிடம் நான் வேண்டுவது யாதெனில் நேரத்திற்கு வாக்களிக்க நீங்கள் ஒவ்வொருவரும் போங்கள். அன்னச் சின்னத்திற்கு வாக்களித்து மைத்திரிபால சிரிசேனாவை வெல்ல வழிவகுங்கள்! அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தடைசெய்யலாம். ஆனால் நீங்கள் உங்கள் ஜனநாயக உரிமையை விட்டுக் கொடுக்காதீர்கள். எம்மைக் குறி வைத்து மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் இருவர் அரசாங்க அனுசரணையுடன் அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று கேள்விப்பட்டேன். மனிதர்களைப் பலியிடவா அல்லது யாழ் நூலகம் போன்றவற்றை எரிக்கவா அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்பதை நானறியேன். ஆனால் இப்பேர்ப்பட்ட காரியங்களினால் எம் மக்கள் துவண்டு விடாது எவ்வாறு எம்மை வடமாகாண சபைக்குப் பெருவாரியாக வாக்களித்து வெற்றிபெறச் செய்தீர்களோ அவ்வாறே வெற்றி பெற மைத்திரிபாலவுக்கு வாக்களியுங்கள்!

வடமாகாண சபையை முடக்கப் பார்த்த இன்றிருக்குஞ் ஜனாதிபதியைத் தமது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள்!

இறைவன் அருள் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்றென்றும் இருக்கும்! அதனால் நீங்கள் எந்த விதத் தடங்கலும் இன்றி தவிப்பும் இன்றி தடையும் இன்றி எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்களித்து வெல்லப் பண்ணலாம்! வேறு சிந்தனைகள் இன்றி வெற்றிக்கு வழிவகுப்பீர்களாக!

நன்றி 

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்

முதலமைச்சர்

வடமாகாணம்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115153/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் இல்லாத நிதானமான அறிக்கை.

தேர்தலின் பின்னான தன் செயல்பாடுகளால் சீவிக்கு என்று ஒரு தனி இமேஜ் வடக்கில் உருவாகியுள்ளது.

மக்கள் இவரின் அறிவுரையை கேட்பர் என எதிர்பார்க்கலாம்.

வாக்களிப்பை புறக்கணிப்பதால் எமக்கு பெருந்தீமை வந்து சேரும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இருப்பும்.. எம்மவர் ஒற்றுமையும்.. என்பது..சி வி யால் உணரப்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடே ஆயுதங்களின் மெளனிப்பு.

 

தமிழரசுக் கட்சி தலைமையில் உள்ள ஒரு சிலரின்.. தவறான தாந்தோன்றித்தன அணுகுமுறைகள் தான்.. கூட்டமைப்பை பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறது.

 

சம்பந்தன் கூட்டமைப்பு பிரநிதிகளோடு பேசி.. ஒரு பொது முடிவை எட்டி இருக்க வேண்டும். அத்தோடு வடக்குக் கிழக்கில் உள்ள இதர அரச சாரா கட்சிகளை அழைத்து அவர்களோடும் பேசி ஒரு முடிவுக்கு வந்திருந்தால்.. காத்திரமான பொது முடிவை எட்டி இருக்கலாம்.

 

ஆனால்.. இந்தியாவிடம் ஆலோசிக்க கொடுத்த முன்னுரிமைக்கு.. சொந்த மக்களிடம் கருத்துக் கேட்க தமிழரசுக் கட்சி தலைமை விரும்பவில்லை. அதன் விளைவே இது. இவர்கள் சுதந்திரத்துக்கு முன்னிருந்தே இதே தவறை தலைக்கண கணவான் அரசியல் செய்கிறோம் என்ற போர்வையில்  முன்னெடுக்கிறார்கள்.

 

இந்த தலைமையின் முடிவை இளைய சமூகம்  வரவேற்பதாக இல்லை. இது தலைமைக்கே இழுக்கு ஆகும்.

 

மக்களை குழப்புவது தமிழரசுக் கட்சி தலைமையின் மதிநுட்பமற்ற செயற்பாடுகளே அன்றி பிற உறுப்பினர்களோ.. கட்சிகளோ அல்ல.

 

மக்கள் எடுத்திருக்கும் தீர்மானங்கள் இவையாகவே இருக்க முடியும்.

 

1.மைத்திரி + மகிந்தவை நிராகரிப்பது. இதற்காக தேர்தலை புறக்கணிப்பது அல்லது செல்லுபடிற்ற வாக்கை அளிப்பது.

 

2.போனால் போய் தொலையுது மைத்திரிக்கு போட்டு தள்ளுவம்.

 

3. டக்கிளசுக்காக மகிந்தவுக்கு போடத்தானே வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஈபிடிபி மற்றும் சுதந்திரக் கட்சி அடிவருடிகள்.

 

Tamils of struggle polity need not worry who becomes SL president

[TamilNet, Saturday, 03 January 2015, 18:28 GMT]

While SL president Mahinda Rajapaksa is almost open in telling that electing the next president is choosing between China and the USA, senior Tamil grassroot leaders and activists in the island are of the opinion that Eezham Tamils put in a situation of struggle polity need not worry who succeeds as president. “Tamils should not participate in this election. Whether the future of Tamils is linked to the Sinhalese or not has to be decided by the Sinhalese. [...] The TNA leaders in their decision [of supporting Mr Sirisena] failed in guiding the Tamils in the right way,” said senior ITAK Central Committee member and former UN consultant Ma'ravan-pulavu K. Sachithananthan, speaking to media in Jaffna on Saturday. The former Jaffna University academic was addressing along with Ananthy Sasitharan of the NPC and ITAK Youth Wing Leader VS Sivakaran.
 

Sachi_Ananthy_Sivaharan_JPC_108383_445.j


Talking to media on the sidelines of the press conference, Mr Sivakaran said that the group representing the TNA leadership was going after USA and India and has failed to take its own stand on the presidential election.

Mr Sivakaran was addressing the journalists in Jaffna on the lack of internal democracy in making the crucial decisions of the ITAK Central Committee. After several attempts to course-correct the problem at the internal meetings, the youth wing leader was forced to bring the facts to the media, he said. Ms Ananthy was an eyewitness to the internal discussions, he said, giving a detailed account of the issue. He also gave a written statement to media in Tamil.

Ms Ananthy Sasitharan, who also issued a written statement by email to TamilNet, was explaining her stance with regards to the suppression of her opinion by the TNA hierarchy.

Meanwhile, adding to the stand of the election boycott opinion, Tamil activists for alternative politics in the island said that choosing between China and the USA has to be left to the Sinhala Nation. Tamils should not be blamed and penalised by the Sinhala Nation for the choice. The very predicament of China coming into the picture of ‘choice’ is a manifestation of the policies of the USA and India that allowed a genocidal war in the island, the activists said.

In the entire history of Indian foreign policy after Mrs Indira Gandhi's time, the one and only ‘firm’ foreign policy decision taken by New Delhi was on facilitating the genocide of Eezham Tamils. Now, without any answer to the genocide and national question of Eezham Tamils, both the USA and India are keen only in ‘regime’ to their favour in Colombo. Therefore, what remains to Eezham Tamils is their struggle polity and this polity need not worry about the presidential ‘choice’. Whoever comes, the struggle would continue unless the fundamentals are resolved, should be the message the struggle polity should convey with confidence, the activists further said.

 

உறுப்பினர்களின் கருத்தை.. அவர்களின் சொந்தக் குரலில் கேட்க.. கீழ் உள்ள இணைப்பை பார்வையிடுங்கள்.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37569

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பில் 13 எம்பிக்கள், 40 ற்கும் மேற்பட்ட மா ச உ க்கள், நூற்றுக்கணக்கான பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் அனந்தி, ரவிகரன், சிவாஜிதான் எதிர்கீனம். இதை எப்படி தமிழரசுக்கட்சியின் முடிவு எனலாம்?

சிவகரன் அனந்தி போன்ற விபரம் பத்தாதவர்களை சச்சி போன்ற மலைவிழுங்கிகள் பாவித்து பயனடிகிறார்கள் என்பதே உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி.. சாதாரண உறுப்பினர் கிடையாது. விக்னேஸ்வரனுக்கு (முதலைமைச்சர்) அடுத்தபடியாக மக்களின் பெருந்தொகை விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒருவர். :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி.. சாதாரண உறுப்பினர் கிடையாது. விக்னேஸ்வரனுக்கு (முதலைமைச்சர்) அடுத்தபடியாக மக்களின் பெருந்தொகை விருப்பு வாக்குகளைப் பெற்ற ஒருவர். :lol::icon_idea:

 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவராக போட்டியிட்டு அந்த வாக்குகளை பெற்றவர் அனந்தி.

அந்த தலைமையை அவர் ஏற்றுக்கொண்டதால் கிடைத்தவை இந்த வாக்குகள். அனந்தி தன்னிச்சை வேட்பாளராக நின்று இந்த வாக்குகளை பெறவில்லை. 

புலிகள் இல்லாத நிலையில் என்பது விக்னேஸ்வரனின் முக்கியமான கருத்து. எது நோக்கம் என்பதையும் விக்கி தெளிவுபடுத்தியிருக்கிறார். அரசியல் தீர்வு என்பது தமிழர்களுக்கு முக்கியமானதொன்று. சம்பந்தர் விக்கி ஆகியோர் வெறுமனே இக் கருத்தைக் கூறவோ மைத்திரிக்கான ஆதரவை எடுத்திருப்பதோ சாதரணமானதில்லை. தமிழ் சிங்கள முஸ்லிம்களின் பெரும்பாலானவர்களின் முடிவுகள் உணரப்பட்டுத்தான் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி, ரவிகரன், சிவாஜிலிங்கம் தனித்து போட்டியிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

புலத்து புலிப் பினாமிகளின் சொற்கேட்டு தனித்து போட்டியிட்ட கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி ஆகியோரின் தற்போதைய நிலையே மேற்படி மூவருக்கும் நடக்கும்.

அதேபோன்று அரசுடன் இணைந்து போட்டியிட்ட கனகரத்தினம், கிழக்கில் தங்கேஸ்வரி போன்றோர் தற்போது எங்கே என்று தேட வேண்டியதாக இருக்கின்றது.

புலத்திலும் யாழ். களத்திலும் சவுண்டு விடுகின்றவர்கள் வாக்குப் போட்டால் கூட இவர்களால் நாடாளுமன்றம் ஏன் உள்ளுராட்சி சபைக்கு கூட செல்ல முடியாது.

இப்போதுள்ள தெரிவு , பொது எதிரணிக்கு வாக்களிப்பதுதான் நல்லம், அனந்தி இப்ப ஏன் தேர்தலை புறக்கணிக்க சொல்கின்ரா என்று தெரியவில்லை . அப்படி புறக்கணிபதுவும் மகிந்தவுக்கு வாக்கு போடுவதும் ஒன்றுதான் . அப்படியான செயலை யர்ர் செய்ய சொன்னாலும் இவர்கள் விலை போய் விட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும் . மகிந்த அரசு ஏதும் deal பேசிவிட்டார்கள் போல , ஒருவேளை அவரது கணவரை விடுவிப்போம் என்று . 
 
மகிந்தவின் தோல்வியால் , பாதிக்கப்பட போவது முதலில் சீனாதான் . ஆனால் ரணில் மேற்குலகின் கையாள் . ஆனாலும் இப்போதுள்ள வல்லமையை பார்த்தால் சீனாவினை ஒன்றும் செய்யமுடியாது . ஆதலால் புது அரசாங்கமும் இருதலைகொள்ளி எறும்பின் நிலைதான் . இங்க இந்தியாவால் ஒன்றும் புடுங்க முடியாது .
 
தொடர்ந்தும் முறுகல் நிலைதான் இருக்கும் இதுவே எங்களுக்கு பயன்தர நல்ல சந்தர்ப்பம்.
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவராக போட்டியிட்டு அந்த வாக்குகளை பெற்றவர் அனந்தி.

அந்த தலைமையை அவர் ஏற்றுக்கொண்டதால் கிடைத்தவை இந்த வாக்குகள். அனந்தி தன்னிச்சை வேட்பாளராக நின்று இந்த வாக்குகளை பெறவில்லை. 

 

அனந்திக்காக சம்பந்தனோ.. சுமந்திரனோ.. மாவையோ வாக்குக் கேட்கவில்லை. மக்களாகத்தான் அவரை அரசியலில் இறக்கிவிட்டார்கள். மக்களாகவே வெல்லவும் வைத்தார்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. சுமந்திரன்.. சம்பந்தன் உருவாக்கவில்லை. தேசிய தலைவரின் எண்ணக் கருவில்.. உருப்பெற்ற ஒன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!!! தேசிய தலைவர் இதில் சம்பந்தப்பட்டார் என்ற ஒற்றை நிலைப்பாடு தான் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு என்றானதே தவிர..

 

சம்பந்தன் தனித்து நின்றாலும்.. கோவணமும் மிஞ்சாது. சுமந்திரன் தனித்து நின்றால் கேஸ் கொடுக்கவும் காசு இருக்காது. மாவைக்கும் அதே கதிதான். :D:icon_idea:

 

உதுக்காவெண்டாலும் அனந்தி அடுத்த தேர்தலில் தனித்து நிக்கவேண்டும்.

அவவின்ர பவரை சம்பந்தருக்கு காட்டவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி தேசிய தலைவரின் நிழலில் நிற்கட்டும். அவாக்கு அந்த தகுதி உண்டு. சம்பந்தன் தன்ர பவரை காட்ட அடுத்த முறை தனித்து நிற்கட்டும். கூட சுமந்திரனும் நிற்கட்டும்.

 

யாழ் களத்தில் சிலருக்கு சாணக்கியரும்.. அறிவாளியும் என்ன ஆகினமுன்னு ஒருக்கா பார்ப்பமே..??! :icon_idea::)

கூட்டமைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம்பந்தர் தான் திருமலை மக்களின் பிரதினிதி. முசிந்தால் நெடுக்கர் வந்து சம்ப்ந்தருக்கு எதிரா நிண்டு பார்க்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்காக சம்பந்தனோ.. சுமந்திரனோ.. மாவையோ வாக்குக் கேட்கவில்லை. மக்களாகத்தான் அவரை அரசியலில் இறக்கிவிட்டார்கள். மக்களாகவே வெல்லவும் வைத்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. சுமந்திரன்.. சம்பந்தன் உருவாக்கவில்லை. தேசிய தலைவரின் எண்ணக் கருவில்.. உருப்பெற்ற ஒன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!!! தேசிய தலைவர் இதில் சம்பந்தப்பட்டார் என்ற ஒற்றை நிலைப்பாடு தான் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு என்றானதே தவிர..

சம்பந்தன் தனித்து நின்றாலும்.. கோவணமும் மிஞ்சாது. சுமந்திரன் தனித்து நின்றால் கேஸ் கொடுக்கவும் காசு இருக்காது. மாவைக்கும் அதே கதிதான். :D:icon_idea:

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை. 2001 அக்டோபரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 தேர்தலில் காலங்களில் தான் சிவராமின் உதவியுடன் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல்

ஏறினார்கள். அப்போது புலிகளைப் பகைத்தால் வில்லங்கம் எனக் கருதி கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்திக்காக சம்பந்தனோ.. சுமந்திரனோ.. மாவையோ வாக்குக் கேட்கவில்லை. மக்களாகத்தான் அவரை அரசியலில் இறக்கிவிட்டார்கள். மக்களாகவே வெல்லவும் வைத்தார்கள்.

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. சுமந்திரன்.. சம்பந்தன் உருவாக்கவில்லை. தேசிய தலைவரின் எண்ணக் கருவில்.. உருப்பெற்ற ஒன்றே தமிழ் தேசியக் கூட்டமைப்பு..!!! தேசிய தலைவர் இதில் சம்பந்தப்பட்டார் என்ற ஒற்றை நிலைப்பாடு தான் கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு என்றானதே தவிர..

 

சம்பந்தன் தனித்து நின்றாலும்.. கோவணமும் மிஞ்சாது. சுமந்திரன் தனித்து நின்றால் கேஸ் கொடுக்கவும் காசு இருக்காது. மாவைக்கும் அதே கதிதான். :D:icon_idea:

 

 

சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் பின்னால்.....

கூசா... தூக்கிக் கொண்டு திரியும் கோஸ்டிகளுக்கு.... இது எங்கை விளங்கப் போகுது.phil_19.gif:D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகள் உருவாக்கவில்லை. 2001 அக்டோபரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 தேர்தலில் காலங்களில் தான் சிவராமின் உதவியுடன் புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேல்

ஏறினார்கள். அப்போது புலிகளைப் பகைத்தால் வில்லங்கம் எனக் கருதி கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.

 

தமிழ் தேசிய எண்ணக்கரு.. 1996 இல் கருக்கொண்டது. விடுதலைப்புலிகளிடம் இருந்து..யாழ் பல்கலைக்கழக சமூகத்திடம் போய்.. பின்னர் அது கொழும்புக்கு வந்தது. நேச தமிழ் தேசிய சக்திகளை ஒருங்கிணைக்க விரும்பி.. 1998 இல் தேசிய தலைவர் ஒட்டுக்குழுக்களுக்கு பகிரங்க மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை தந்தார்.

 

அதன் பின் கொழும்பை தளமாகக் கொண்டியங்கிய ரெலோ.. விநோதலிங்கம்.. மற்றும் சிவராம்.. போன்றவர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக சமூகத்தின்.. விடுதலைப்புலிகளின் கூட்டு முயற்சியில் உருவானதே தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அந்த வடிவம். இதில்..ரெலோ.. புலி எதிர்ப்பு நிலைப்பாட்டை கைவிட்டு.. தமிழ் தேசிய ஆதரவு.. தமிழீழ ஆதரவு நிலைப்பாடு எடுத்தமை.. முக்கிய திருப்பமாக அமைந்திருந்தது.

 

நீங்கள் புலி ஒவ்வாமை என்ற சிங்களக் காய்ச்சலில் இருந்து விடயங்களை நோக்காமல்...(கொழும்பில் வாழ்வதற்காக சிங்களவர்கள் முன்னிலையில்.. புலியை எதிர்ப்பதாக காட்டிக்  கொள்ளும் நம்மவர்கள் அதிகம்.. நாங்கள் இந்தக் கூட்டங்களை எல்லாம் கடந்து தான் வந்துள்ளோம்) நேர்த்தியோடு நோக்க வேண்டும்.. வாலி. நாங்களும் கொழும்பில் சிங்களவர்களோடு வாழ்ந்து தான் வந்துள்ளோம். வாக்காளத்து வாங்குவதில்லை. நேர்மையாக சில விடயங்களை பதிவிடுவது அவசியம். :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம்பந்தர் தான் திருமலை மக்களின் பிரதினிதி. முசிந்தால் நெடுக்கர் வந்து சம்ப்ந்தருக்கு எதிரா நிண்டு பார்க்கட்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
தமிழருக்கு இன்றைய தேவை ஒற்றுமை .... வழிநடத்த ஒரு நல்ல அமைப்பு.
சுயநல கூட்டம் இருக்கும் கூத்தமைப்பு சொந்த முகத்தை காட்டிவிட்டது இனி இப்பிடியே பிளவு பட்டு போக வேண்டியதுதான்.
 
அனந்தி போன்றவர்களும் இதை உட்பிரச்சனையாக வைத்து உரியவர்களுடன் பேசி இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.
பொது மேடைக்கு வந்தது .... கட்சியை பிரிக்கும் ஒரு செயலாகும்.
உள்ளிருந்துகொண்டு திருத்தியிருக்க வேண்டும். 
 
இன்னும் ஆறு எழு வருடத்தில் சம்மந்தர் சேடம் இழுக்க தொடங்கிவிடுவார்.
பின்னர் யார் எங்கே நிற்பது என்பதை சிங்களவன்தான் முடிவெடுப்பான்.
அப்படியொரு பிற்போக்கு நிலைமையை சுயநலத்தால் உருவாக்கி வைத்திருக்கிறது இன்றைய கூத்தமைப்பு. 
 
மாக வெற்றி ஒன்றை சிங்களவன் இனிமேல்தான் சாதிக்க போகிறான்.  

தலைவர் உருவாகிய தேசிய கூட்டமைப்பில்  நின்று தான் சம்பந்தர் முதன் முதன் தேர்தலில் வென்றவர் இல்லாவிட்டால் அவருக்கு அரசியல் வாழ்வே இல்லை . :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

 

தலைவருக்கு ஒரு கொஞ்சம் அரசியல் தெரிந்ததே யோகேஸ்வரன் வீட்டிற்கு சென்று இடைக்கிடை இவர்களை சந்தித்ததால் தான் .

  • கருத்துக்கள உறவுகள்

 

 

தலைவருக்கு ஒரு கொஞ்சம் அரசியல் தெரிந்ததே யோகேஸ்வரன் வீட்டிற்கு சென்று இடைக்கிடை இவர்களை சந்தித்ததால் தான் .

அரசியல் தெரிந்த யோகேஸ்வரன் மக்களிடம் போய் வந்திருந்தால்.
அரசியல் தெரியாத தலைவருக்கு யோகேஸ்வரன் வீட்டிற்கு போய்வர தேவை இருந்திருக்காது. 
 
யாருக்கு என்ன தெரியும் என்பது பொருட்டல்ல ......
தெரிந்ததை வைத்து என்ன செய்கிறீர்கள் என்பதே உலகில் தரிசனம் ஆகிறது.
 
எடிசனுக்கு தெரிந்த அனைத்தும் இன்று புத்தகத்தில் இருக்கிறது. அந்த புத்தகங்களை படித்துவிட்டால் நீங்கள் இன்னொரு எடிசன் ஆகிவிட முடியாது.
படித்ததை வைத்து என்ன கிழித்தீர்கள் என்பதே உலகிற்கு தேவை. 
 
உங்களுக்கு தெரிந்ததை வைத்து கடந்த 30 வருடம் சேறடிக்க மட்டுமே உங்களால் முடிந்தது என்றால்..?
உங்களுக்கு தெரிந்தது சேறு என்பதுதான் அதன் பொருள். 
உங்களுக்கு கசக்கும் என்று ..... சேறை  உண்மை   சர்வதேச அரசியல் விஞ்ஞானம் என்று உலகம் சொல்லபோவதில்லை.
எது எதுவோ .... அதை அதுவாகத்தான் கண்பார்வை உள்ளவர்கள் பார்ப்பார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.