Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனந்தியை நீக்கவேண்டாம் வலிமேற்கு பிரதேச பொதுமக்கள் தமிழரசு கட்சிக்கு எச்சரிக்கை!

Featured Replies

சச்சி தமிழரசு கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கிடையாது 

மறவன்புலவு சச்சிதானந்தம் தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் என தமிழ்நெற் கூறுகின்றது. 
 
Senior ITAK Central Committee Member and former UN consultant Ma'ravan-pulavu K. Sachithananthan addressed the press in Jaffna before the presidential election together with Mr Sivakaran and Ms Ananthy, clarifying their position on the SL presidential election. 
 
ஆனால் தான் சம்பந்தப்பட்ட மத்தியகுழு கூட்டத்திற்கு செல்லவில்லை என பேட்டியில் கூறுகின்றார்.
 
சிவகரன் தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணித்தலைவர். கருத்துக்கள் வெறுமையாக உள்ளது. (உ+ம் மாவை பற்றிய கருத்துகள்).
 
அனந்தியின் கருத்துகள் இலங்கை ஒரு நாடு நாம் அதில் ஒரு பகுதி என்பதனை எற்கமறுக்கும் கருத்துகளாகவே உள்ளது. எமக்கு இலங்கை ஒரு நாடு என்பதே இப்போது உள்ள தெரிவு ( இப்போது மட்டுமல்ல எப்போதும்தான்). 
 
இவர்களது கருத்துக்களை கூட்டமைப்பும் ஏற்கவில்லை மக்களும் ஏற்கவில்லை. மக்கள் ஜனாதிபதி தேர்தலில் வடமாகாணத்தில் 69.42% மாகாணசபை தேர்தலில் வடமாகாணத்தில் 64.15% வாக்களித்துள்ளார்கள். அதாவது மாகாணசபை தேர்தலை விட 5% அதிகம். மக்கள் கூட்டமைப்பு கூறாவிட்டாலும் மகிந்த மீதான கோபத்தில் மைத்திரிக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். பகிஸ்கரித்திருக்க மாட்டார்கள். கூட்டமைப்புக்கு சர்வதேச ஆலோசனைகள் கிடைத்திருந்தாலும் மக்கள் மனதறிந்து முடிவெடுத்திருந்தார்கள் - வெற்றியும் பெற்றார்கள்.
 
மக்கள் முடிவிற்கு தலைவணங்கவும் உட்கட்சி ஜனநாயகத்தையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
 
எனது தனிப்பட்ட கருத்து: அனந்தி, சிவகரன், சச்சி மீது நச்சயம் கூட்டமைப்பு நிச்சயமாக ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். விரும்பினால் இவர்கள் பிரிந்து செல்லலாம் ஆனால் இவர்களது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியே.
  • Replies 53
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் பெட்டியை வெட்டி வெளிய வர வேண்டி  இருக்கும் தமிழ் மக்களின்  உண்மையான  அபிலாசைகளை புரிந்து கொள்ள. தமிழ் மக்களின் சமஸ்டி..  கோரிக்கை என்பது ஏலவே தெரி்வாக பரிசீலிக்கப்பட்ட ஒன்று. ஒரு நாடு இரண்டு அரசுகள் வரை அதுபோனதுண்டு.

ஆனால் தமிழ் மக்களின் விருப்பு.. சுயநிர்ணய    உரிமை.. தன்னாட்சி அதிகாரம்.. வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகம். இதில்   அவர்கள் விட்டுக்கொடுக்க எதுவும்  இல்லை.

அனந்தி தான் சார்ந்த காணாமல் போன மக்களின் கருத்துக்களை முன் வைத்தே தேர்தல் புறக்கணிப்பை சொந்தக் கருத்தாக வெளியிட்டார். அதற்கு அவர் 100% உரித்துடையவர்.

சச்சி.. மத்திய குழு கூட்டத்திற்கு போகவில்லை என்பதற்காக   அவர் மத்திய குழு  உறுப்பினர்  இல்லை என்றானால்.. சச்சியின் நிலைப்பாடு வெளிப்பட்ட    உடன்   அதனை நிராகரித்து இருக்கலாமே தமிழரசுக் கட்சி. இன்று வரை அதை அவர்கள் செய்யவில்லையே..??! ஏன்.. அதுக்கு விளக்கம் கேட்டால்.. 1948 இல்  இருந்த   ஒன்றுபட்ட  இலங்கை.. ஒற்றையாட்சி என்பது இன்றைக்கு ஒவ்வாது. இன்று தேசங்கள்..  போர்கள்    இன்றி.. ஒரு தேர்தலோடு பிரியும் நி்லைக்கு பக்குவப்பட்டு நிற்கிறது   உலகம். சிங்களம்     அதி்ல  இருந்து அதிக காலம் விலகி   இருக்க முடியாது. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி
 
எல்லா அமைப்புக்களிலும் உள் ஜனநாயகம் என்று ஒன்று உண்டு. கூட்டமைப்பிலும்தான். தலைவர் சொன்னால் சரி என்று ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. அவ்வாறு இருந்தால் கூட்டமைப்பால் இத்தனை குழுக்களை உள்ளடக்கி வைத்து இருக்க முடியாது. அதுவும் பல முன்னால் ஆயுத போராளிக் குழுக்களை.
கருத்து வேறுபாடுகளை அமைப்புக்கு உள்ளே விவாதித்து முடிவுக்கு வரவேண்டும். பெரும்பாண்மை எடுக்கும் முடிவிற்கு கட்டுப்பட வேண்டும்.  பெரும்பாண்மை எடுத்த முடிவிற்கு எதிராக வெளியே விமர்சிப்பது என்பதை எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளாது (புலிகள் உட்பட). அனந்தி மீது ஒழுங்காற்று நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்பட வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கையை நான் மனதார வரவேற்கின்றேன்.
 
இங்கு சிலர் இது சம்மந்தனின் முடிவு, மாவையின் முடிவு, சுமந்திரனின் முடிவு அல்லது இவர்கள் மூவரது முடிவு போன்று பதிவிடுகின்றார்கள். நிச்சயமாக இருக்கமுடியாது. அப்படி இருந்தால் கூட்டமைப்பின் தலைவர்களிற்கு எதிராக உறுப்பினர்களிடமிருந்து அனந்திக்கு ஆதரவான கருத்துக்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை வரவில்லை. இவை அனந்தி தன்னிச்சையாக நடப்பதை உறுதிப்படுத்துகின்றது. 
 
நடவடிக்கை சரியானதே.        ..
 
செம ஆளையா  ...அனதிக்கு புது விளக்கம் கொடுக்கிறார்....என்ன செய்யிறது அங்கை கலர் மாறிட்டுத்து..இனி புதுக்கொடி பிடிக்கவேணும்....

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் இருந்து இணக்க அர்சியல் செய்து சனம் திரத்திப்போட்டுது...இப்பயாழில் வந்து இணக்க அரசியல் பேசுகினம்..கொத்தாய் பறந்து வந்திருக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி தான் சார்ந்த காணாமல் போன மக்களின் கருத்துக்களை முன் வைத்தே தேர்தல் புறக்கணிப்பை சொந்தக் கருத்தாக வெளியிட்டார். அதற்கு அவர் 100% உரித்துடையவர்........

இந்த உண்மையை திரித்து வெளியிட்டு அரசியல் லாபம் கண்டவர்களை அடையாளம் காண்பதை விட்டு விட்டு...அழிக்க நினைப்பவர்களை தூக்கிபிடிப்பது எந்த்வகையில் நியாயம்....இது எமது இனத்தின் இருப்பையே கேள்விகுறியாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டாக இருந்தாலும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் விளையாட வேணும். தானே அரசன் என்று விளையாடுபவா் எல்லாம், விளையாட்டிலிருந்து விலத்தப்படுவது விதி. விதி, முறை தெரியாதவா், கட்டுப்பட விரும்பாதவா், விளையாட்டுக் குழுவிலை சேரக்கூடாது.

யாழ்ப்பாணத்தில் இருந்து இணக்க அர்சியல் செய்து சனம் திரத்திப்போட்டுது...இப்பயாழில் வந்து இணக்க அரசியல் பேசுகினம்..கொத்தாய் பறந்து வந்திருக்கினம்...

என்னைப்பற்றி சில வரிகள்
 
நேரம் கிடைக்கும் போதெல்லாம் எதையாவது வாசிக்கும் பழக்கம்.
நான் ஈழச்செய்திகளை ஓரிடத்தில் வாசிக்கவும் வாசகர்களது கருத்துக்களை அறியவும் யாழ்களம் 10 வருடங்களிற்கு மேல் உதவுகின்றது.
 
எனக்கு பதிவிடுதலில் இருந்த தயக்கம் தனிநபர் தாக்குதல் மட்டுமே.   
எனது பதிவில் இது எனது தனிப்பட்ட கருத்து என எழுதியிருந்தேன்.
உங்கள் கருத்தை நெடுக்ஸ் எழுதியதைப் போல நாகரீகமாக எழுதலாம்தானே.
 
ஆரோக்கியமான கருத்தாடல்கள் மனித குலத்திற்கே தேவையானது.
 
Reading make a full man conference a ready man and writing an exact man

பொறுத்து பொறுத்து பொங்கிய வரிகள்தான் அவை....ஏனெனில் எமது இனத்தின் போராடத்தினையும்...அதன் அழிவுகளையும் கொச்சைப்படுதும் வரிகழுக்கு கொடுக்கப்பட்ட பதில்தன் இவை...இனத்தை விற்று அண்டிப்பிழைக்க நாம் (எமது இனம்) போராடவில்லை உங்கள் வரிகளை திரித்தினால் ...நாமும் அவ்வழியில் வருவோம்....என்னதான் சொன்னாலும் எமது இனம் என்று சிந்தியுங்கள்.....
 
Reading make a full man conference a ready man and writing an exact man

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டாக இருந்தாலும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் விளையாட வேணும். தானே அரசன் என்று விளையாடுபவா் எல்லாம், விளையாட்டிலிருந்து விலத்தப்படுவது விதி. விதி, முறை தெரியாதவா், கட்டுப்பட விரும்பாதவா், விளையாட்டுக் குழுவிலை சேரக்கூடாது.

 உங்கள் நினைப்பு ....எமது மக்கள் வாக்களித்தது  சம்பந்தரின் விருப்புக்கோ....மைத்திரியி ன் ஆசையினால் என்று...இது தவறு...மக்களின் எண்ணம் முத்லில் மஹிந்தரை கிளப்ப வேண்டும் என்பதே...இதனை செய்து காட்டியும் இறுக்கிறார்கள்.... அனந்தி  சொன்னது  தன்னுடைய நிலைப்பாட்டை.....அதனை  மக்கள்  ஏற்று மகிந்தவை கொண்ண்டுவர அவர் சொல்லவில்லை......அனந்தியின் கருத்தை உங்களப்போன்றவர்கள்  திரித்து தொலைக்காட்சியில் காட்டி லாபம் பெற நினைத்தது  உங்கள் கெட்டித்தனம்..... மக்களின் இந்த மனநிலையை அறியாது சம்பந்தர் கோஸ்டி வெளிகிட்டதை விரைவில்  உணர்ந்து கொள்வர்....இதற்கு மூலகாரணம் ரணில்...அவரின் தற்போதைய செயல்பாடு....விஜயகலாவை முன்நிறுத்துவதே....இதற்கு முதல் தடை அனந்தி....கூட்டமைபையே அற்வே ஒழிக்கும் ரணிலின் முயற்சி இது என்பதை வெகு விரைவில்  உணர்வீர்கள்...

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிய அனந்திமீது கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கிறது என்றால்..

தனக்கு பிடித்த கொடி என சிங்கக்கொடியை தூக்கிப் பிடித்த சம்பந்தன், கூட்டமைப்பின் ஒப்புதலுடனா அதனைச் செய்தார்?!
அதற்காக அவரை யார் விசாரிப்பது?!  :o  :icon_idea:

Edited by sOliyAn

அப்படிப் போடுங்க அரிவாளை.....இந்த விளையாட்டெல்லம் நம்ம நசுங்கல் ரனில்லின்ரை செயல்பாடு..முளைச்சு மூணுநாள் ஆகவில்லை ..தொடங்கிவிட்டார் ..விளையட்டுக்காட்ட...

வணக்கம்.
இங்கு நான் கூறியது, ஒரு கட்சிக்கு, கழகத்திற்கு என்றொரு விதிமுறைகள், கடப்பாடுகள் உண்டு. அதை மதித்து நடப்பது, அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரினதும் கடமை. தனிமனிதனாக யாரும் எதுவும் கூறலாம். ஆனால் கட்சியிலிருப்பவர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொரு கருத்தைக் கூறுவது ஒரு கட்சியின் ஒருமைப்பாட்டுக்கு அழகல்ல. இதைத்தான் நான் இங்கு குறிப்பிட்டேன். யாரையும் பெயர் குறிப்பிட்டு எழுதவில்லை. ஒரு விதிமுறை கடைப்பிடிப்பதின் அவசியம். தவறின், இப்படியான விமர்சனங்கள் எழுவது இயற்கை. இதற்காக எங்கேயோ என்னை தொடர்பு படுத்துமளவிற்கு, நானொன்றும், நீயா? நானா? நடத்தவில்லை. நன்றி. வணக்கம்.  
மகிந்த & கூட்டத்தை வெளியேற்றுவது அமெரிக்க & இந்திய வின் முதல் வேலையாக இருந்தது . ஆனால் கூட்டமைப்பை யும் இந்த முடிவு எடுக்க சொல்லி இருந்தார்கள் . இவற்றுக்கு அப்பால் தமிழ் மக்கள் எவரும் இந்த கொலைகார பாவியை ஆதரிக்கவில்லை . இதனால் எல்லாரின் கனவும் ஒருபுள்ளியில் சந்தித்தது . வெற்றியும் கண்டார்கள் . 
 
உண்மையில் ஆனந்திதான் மகிந்தவை முற்றிலும் எதிர்த்து இருக்க வேண்டும் , அவரின் கணவர் உட்பட பெருமளவான போராளிகள் கோத்தவின் அடக்குமுறையில் இருந்தார்கள் . இப்ப என்னவென்று தெரியவில்லை . இவர்களை விடுவிப்பது என்றால் புது அரசாங்கம் வரவேண்டும் அதுவும் கூட்டமைப்பின் ஆதரவுடன் தான் பாராளுமன்றத்தை தக்க வைக்க வேண்டும் .
 
இந்த நிலையில் ஏன் அப்படி ஒரு கருத்தை சொன்னார் . யார் துண்டினர்கள் . இப்ப என்ன சூழ்நிலையோ அதற்கேற்ற வகையில் தான் நாம் பயணிக்க வேண்டும் . எங்களது இராணுவ பலம் இப்ப இல்லை . அதனால் நாம் காரியத்தை சாதிக்க வேண்டும் இதை விட்டுட்டு சாத்தியம் இல்லாத வழியில் பயணிக்க கூடாது .
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிய அனந்திமீது கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்கிறது என்றால்..

தனக்கு பிடித்த கொடி என சிங்கக்கொடியை தூக்கிப் பிடித்த சம்பந்தன், கூட்டமைப்பின் ஒப்புதலுடனா அதனைச் செய்தார்?!

அதற்காக அவரை யார் விசாரிப்பது?! :o:icon_idea:

மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப்போட்டு குதர்க்கமாக கதைப்பது என்றால் இப்படி ஆயிரம் சொல்லலாம்.

இன்னும் மூன்று மாதங்களில் தேர்தல் வரும்போது பெரும்பான்மை தமிழ் மக்கள் யார் யாருக்கு வாக்கு போடுகின்றார்கள், யார் யாருக்கு நாமம் போடுகின்றார்கள் என்று தெரியும்தானே.

100 நாளைக்குள் யார் யார் பிளேட்டை மாத்துகிறார்கள் என்று பாத்திடலாம் என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

100 நாளைக்குள் யார் யார் பிளேட்டை மாத்துகிறார்கள் என்று பாத்திடலாம் என்கிறீர்கள்.

இந்த கருத்துக்களத்தில் தமிழ் மக்களின் சமகால அரசியல் நகர்வுகள் சம்மந்தமான கருத்துக்களில் வேற்றுமை விரிந்து கிடக்கின்றது. இது அங்கு வாழும் மக்களின் நடப்பு, மற்றும் சுபீட்சமான எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது இல்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள், அமைப்புக்கள், ஊடகங்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களில் ஒற்றுமையான கருத்தியல் போக்கு அவசியம். இல்லாவிட்டால் இதனால் அவதிப்படப்போவது தமிழர்களாகப்பிறந்த, பிறக்கப்போகும் நாங்கள், எங்கள் எதிர்கால சந்ததிகள் அனைவருமே.

  • கருத்துக்கள உறவுகள்
ஒற்றுமை இல்லை என்றால் ....
மக்களை முள்ளிவாய்காலுக்கு  கூட்டிப்போன புலிகளை போய்  கேளுங்கள்.
 
எங்களை ஏன் கேட்கிறீர்கள் ?  
  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்துக்களத்தில் தமிழ் மக்களின் சமகால அரசியல் நகர்வுகள் சம்மந்தமான கருத்துக்களில் வேற்றுமை விரிந்து கிடக்கின்றது. இது அங்கு வாழும் மக்களின் நடப்பு, மற்றும் சுபீட்சமான எதிர்கால வாழ்க்கைக்கு ஆரோக்கியமானது இல்லை.

வெளிநாடுகளில் வாழும் தமிழ்மக்கள், அமைப்புக்கள், ஊடகங்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களில் ஒற்றுமையான கருத்தியல் போக்கு அவசியம். இல்லாவிட்டால் இதனால் அவதிப்படப்போவது தமிழர்களாகப்பிறந்த, பிறக்கப்போகும் நாங்கள், எங்கள் எதிர்கால சந்ததிகள் அனைவருமே.

யாழுக்கு  நான் வருவதற்கு ஒரு நோக்கமுண்டு என தொடர்நது இங்கு எழுதி வருகின்றேன்.

அதன்படி

எல்லோரும் பொறுப்புடன் சிந்திக்கணும்

எழுதணும் என்பதே எனது நீண்டநாள் வேண்டுகோள்..

கூட்டமைப்பே  தமிழரின் ஒரே ஒரு துரும்பு என தொடர்ந்து எழுதிவருகின்றேன்

அதேநேரம்

புலம் பெயர் தேசத்தில் ஒரு சிலர் விடும் தப்புக்களுக்காக

எல்லோரையும ஒரே மூட்டையில் போட்டு

புலம் பெயர் வியாபாரிகள் என்பதும் வேண்டாத விளைவுகளையே தரும்

எவரையும பகைக்கும் நிலையில் நாமில்லை

அதிலும் எமது உறவுகளையே  ஒதுக்கலாமா....???

முதல்ல கிணற்றில உள்ள  கழிவு  ஓயில நீக்குங்க பிறகு.................................

  • கருத்துக்கள உறவுகள்

அப்படிப் போடுங்க அரிவாளை.....இந்த விளையாட்டெல்லம் நம்ம நசுங்கல் ரனில்லின்ரை செயல்பாடு..முளைச்சு மூணுநாள் ஆகவில்லை ..தொடங்கிவிட்டார் ..விளையட்டுக்காட்ட...

சம்பந்தரும் ரணிலும் ஒரே கோட்டில் செல்வதைப் பார்த்தால் வெகுவிரைவில்   கூட்டமைப்பு உடைந்து விடும்.

அதன் பின்னர் தாயகத்தில் பல தமிழ்க் கட்சிகளும் ரணிலுடனோ

அல்லது இன்னொரு சிங்களக் கட்சியுடனோ  ஒட்டியிருக்கும் நிலை ஏற்படும்.

"வலி வடக்கு பிரேதச மக்கள் எச்சரிக்கை" என்று செய்தி போட்டிருந்தால் ஓரளவு நம்பியிருக்கலாம். 20 ஆண்டுகளாக அங்கே குடியிருந்து, விவசாயம் செய்கின்ற அந்த மக்கள் தொடர்ந்து அங்கேயே இருக்கும் படியான ஆட்சி தொடர்வதற்கு பாடுபட்ட ஆனந்திக்கு, அவர்கள் ஆதரவாக அறிக்கையும், தமிழரசுக் கட்சிக்கு எச்சரிக்கையும் விட்டிருந்தால், அதை புரிந்து கொண்டிருக்கலாம்.

சோறுக்கும்

சுதந்திரத்துக்கமான இடைவெளி  இது தான்..

அது கிடைக்கும்வரை

அவர்களது போராட்டம் தொடரும்...

சோறு கிடைத்துவிட்டது

அடுத்தது சுதந்திரம் நோக்கிய தேடல்....

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கிணற்றில உள்ள  கழிவு  ஓயில நீக்குங்க பிறகு.................................

வாங்கோ வணக்கம் :lol:

Sampanthan polity interdicts Ananthy Sasitharan from ITAK

[TamilNet, Saturday, 17 January 2015, 16:54 GMT]

The Jaffna District General Secretary of Ilangkai Thamizh Arasuk Kadchi (ITAK) K. Thurairasasingam has sent a registered letter to Ms Ananthy Sasitharan, the popularly elected provincial councillor in the North, stating that she had been interdicted from the ITAK for having acted against the decision of the ITAK to support Maithiripala Sirisena in the Sri Lankan Presidential Election, informed TNA sources in Jaffna said. Ms Sasitharan has ‘violated’ the party discipline by issuing statements, conducting a press conference and by making opinion contrary to what the party had decided, the letter dated 11 January 2015, states. 

The interdiction affects Ms Sasitharan's membership in the ITAK and its central executive committee, the letter further said adding that she will soon receive the charge sheet against her. 

However, the accusations were baseless on procedural grounds, the TNA sources further said. 

Mr Thurairasasingam is aligned with R. Sampanthan and M.A. Sumanthiran of the ITAK.

In the meantime, ITAK Youth Wing leader VS Sivakaran, in a statement issued on Friday said that a section was conspiring against the Tamil national activists with a hidden motive of unseating the activists, who are not prepared to compromise the fundamental concepts of Tamil Sovereignty (thaayakam), Nationhood (theasiyam) and the Right to Self-Determination (thannaadchi). 

Senior ITAK Central Committee Member and former UN consultant Ma'ravan-pulavu K. Sachithananthan addressed the press in Jaffna before the presidential election together with Mr Sivakaran and Ms Ananthy, clarifying their position on the SL presidential election. 

The press conference was convened after the ITAK leader and parliamentarian Mavai Senathirajah had threatened Ms Ananthy to resign from the ITAK after her interview to the BBC Tamil Service and a Canadian Tamil radio.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.