Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்ப்பிற்கு மத்தியில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரும் சுதந்திர விழாவில் கலந்துகொண்டனர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதனால் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டோம் இரா. சம்பந்தன்

புதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக இலங்கை சுதந்திரதினத்தை தமிழ் தலைமைகள் புறக்கணித்து வந்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் சுதந்திரதின நிகழ்வுகளில் ஏன் பங்குபற்றினீர்கள் என்று கொழும்புத் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
ஆட்சிமாற்றத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் நிரந்தர சமாதானத்தை சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இதன்போது இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
வடக்கில் வாழ்பவர்களுக்கும் தெற்கில் வாழ்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும் யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னும் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் நீங்க வேண்டும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தற்போது அதிகமும் பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இவ்விதமான கருத்துக்கூறல்கள் இடம்பெற்ற போதும் இதற்கான திட்டங்கள் இடம்பெற்றதாக தான் கூறப்போவதில்லை என்று சுட்டிக்காட்டிய சம்பந்தன் இந்த நடவடிக்கையில் தாம் பங்காளிகயாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். 
 
இதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கும் இந்த விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவுமே இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார். 
 
இந்த நடவடிக்கைகளின் மூலம் புதிய சூழலில் நடக்கும் இந்த சுதந்திரனத்தில் பங்குகொள்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 
 
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்போ தமிழரசு கட்சியோ சுதந்திர விழாவை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததாக தெரியவில்லை. எனவே அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

தமிழர் தரப்பு மீண்டும் கீழிறங்கி வந்து நேசக்கரம் நீட்டுகிறது. சிங்கள ஆட்சியாளர்கள் இந்த முறை என்ன செய்வார்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 
வெளிநாட்டிலிருந்து துள்ளுபவர்கள் கொஞ்சம் ஓரமா போய் துள்ளலாம். (எவரும் கணக்கில் எடுப்பதில்ல என்பதால்)

mr1.jpg

சம்பந்தர் இதில இருந்து தூங்கி வழியிற நேரம் பேசாம வீட்ட படுத்து நல்லா நித்திரை கொண்டிருக்கலாம்.  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூங்காமல் முழிச்சு இருந்தால் அதனால் வரக்கூடிய ஆபத்துக்கள் காரணமாகவே நம்மாள் தூங்குவதுபோல் பாசாங்கு செய்கின்றார். கண்களை திறந்தபடி உள்ள படத்தைக்கண்டால் நம்மாட்களும் விடப்போவதில்லை. முளித்து இருந்தால் அருகில் உள்ள யாராவது கையில் கொடியைத்திணித்து வில்லங்கத்தில் மாட்டிவிடக்கூடும். தவிர, சம்பந்நருக்கு உலகெல்லாம் எத்தனை முதலாளிகள். பாவம் அவர் வேறு என்னதான் செய்யமுடியும்?
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நடவடிக்கைகளின் மூலம் புதிய சூழலில் நடக்கும் இந்த சுதந்திரனத்தில் பங்குகொள்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

1512407_1536663419891825_850063994746732

இதுக்கு போகாமல் விட்டு விட்டு எதிர்காலத்தில் அவர்களுடன்  தண்ணி பார்ட்டிகளுகும் இரவு விருந்துகளுக்கும் எப்படி போவது என்று திரு சுமந்திரன், சம்பந்தன்  நினைத்திருந்தால் அதில் தவறு எதுவும் இல்லை.

வெட்கித் தலை குனிவோம்.

கனடாவில் இருக்கும் அவர்களை வாழ்த்தியவர்களிடமும் இந்த செய்தி போய் சேருமா? அல்லது அவர்களுக்கு இது தணிக்கையா? இதற்குத்தான் என்னிடமுள்ள ஒரு தனிப்பட்ட பழக்கம்.எல்லோரிடமும் விருந்தோம்பலையும் ஏற்கவும் மாட்டேன் இனாம் கையூட்டு என்பன பெறவும் மாட்டேன் இதைதான் எனது பிள்ளைகளுக்கும் சொல்லி வளர்த்துள்ளேன்.உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணக்கூடாது அல்லவா

போனது இல்லாமல் எல்லாருக்கும் முன்னம் போய் தனிய நிக்கிறமாதிரி பார்த்தால் யாரோ வெருட்டி போனமாதிரி கிடக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்பந்தர் கலந்துகொண்டதை இரண்டு கோணத்தில் ஆராயலாம்.

ஒன்று, சிங்களச் சுதந்திர தினம் என்பது ஒரே நாட்டைப் பங்கிட்டு வாழும் சகோதர இனத்தின் சுதந்திர தினத்தில் பக்கத்து நாட்டு அதிதி என்கிற பெயரில் கலந்துகொண்டிருந்தால், அதை வரவேற்கலாம். அது இரு அயலக இனங்களுக்கும் இடையிலான புரிந்துணர்வை அதிகரிக்கும், நல்ல சமிக்ஞைகளைக் காட்டும் என்கிற சம்பந்தரின் நியாயம் எடுபடலாம்.

ஆனால், அவர் அயலக இனத்து மக்களின் சுதந்திர தினம் என்றில்லாமல், சிங்கள சுதந்திரதினத்தின் பங்காளியாக கலந்துகொன்டிருந்தால், அவர் தன்னைத்தானே கேட்கவேண்டிய கேள்விகள் நிறையவே உள்ளன.

1. கிடைத்த சுதந்திரம் யாருக்கானது ?

2. இந்தச் சுதந்திரத்திற்கும் தமிழருக்குமிடையே என்ன சம்பந்தம் இருக்கிறது ?

3. கிடைத்த இந்தச் சுதந்திரத்தின்மூலம் தமிழர் இதுவரை அனுபவித்தவை எவை ?

4. இதுவரை தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்ட நல்லெண்ண சமிக்ஞைகளுக்கு என்ன நடந்தது ?

5. இப்போது மட்டும் தமிழர் தரப்பு சமிக்ஞைகளை சிங்களம் நல்ல முறையில் ஏற்றுக்கொண்டு இந்தச் சுதந்திரம் தமிழருக்கும் உரித்தானதுதான் என்பதை உணரும் வகையில் சிங்களத்துக்குள் நடந்த மாற்றம் என்ன?

6. இன்றைய அரசுக்கு சம்பந்தரின் நிபந்தனையற்ற ஆதரவென்பது எதுவரை நீள்கிறது ?

இவை சில கேள்விகள் மட்டும்தான். இவற்றைவிடவும் அவருக்கே தெரிந்த இன்னும் பல கேள்விகள் இருக்கலாம்..

Edited by ragunathan

மதிப்புக்குரிய அனந்தி அவர்களை கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்படாததால் இடை நிறுத்தினோம் ...............கட்சி.
 
மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயாவையும் ,சுமேந்திரன் ஐயாவையும் தமிழர்களின் கொள்கைகளுக்கு கட்டுப்படாததால் இடை நிறுத்துவோம் ...............மக்கள்.
 
இதை செய்வாங்களா மக்கள் ??? :icon_mrgreen:
 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்பதனால் சுதந்திரதின நிகழ்வில் கலந்து கொண்டோம் இரா. சம்பந்தன்

புதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 

தொடர்ச்சியாக இலங்கை சுதந்திரதினத்தை தமிழ் தலைமைகள் புறக்கணித்து வந்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் சுதந்திரதின நிகழ்வுகளில் ஏன் பங்குபற்றினீர்கள் என்று கொழும்புத் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 
 
ஆட்சிமாற்றத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியவர்கள் நிரந்தர சமாதானத்தை சமத்துவத்தின் அடிப்படையில் ஏற்படுத்த வேண்டும் என்றும் இதன்போது இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார். 
 
வடக்கில் வாழ்பவர்களுக்கும் தெற்கில் வாழ்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்றும் யுத்தத்தின்போதும் யுத்தத்தின் பின்னும் தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் நீங்க வேண்டும் அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற தற்போது அதிகமும் பேசப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
 
இவ்விதமான கருத்துக்கூறல்கள் இடம்பெற்ற போதும் இதற்கான திட்டங்கள் இடம்பெற்றதாக தான் கூறப்போவதில்லை என்று சுட்டிக்காட்டிய சம்பந்தன் இந்த நடவடிக்கையில் தாம் பங்காளிகயாக இருக்க விரும்புவதாக தெரிவித்தார். 
 
இதனை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் நாட்டில் உள்ள ஏனைய மக்களுக்கும் இந்த விடயத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவுமே இலங்கை சுதந்திரதின நிகழ்வில் பங்கு கொண்டதாக அவர் குறிப்பிட்டார். 
 
இந்த நடவடிக்கைகளின் மூலம் புதிய சூழலில் நடக்கும் இந்த சுதந்திரனத்தில் பங்குகொள்வதன் மூலம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் 
 
அடுத்த சுதந்திர விழாவுக்கு தமிழீழம் கிடைத்துவிடும்.

இதில் கூட்டமைப்பிற்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கும் என்றே நினைக்கின்றேன். அமெரிக்கா, மேற்குலக நாடுகள், இந்தியா போன்றவை ஒருமைப்பட்ட இலங்கையினை ஏற்றுக்கொள்ளக்கூடிய சில சமிக்கைகளை காட்டுமாறு நிர்ப்பந்திருக்கலாம்.
 
ஏப்பிரலில் தேர்தலைச் சந்திக்கப்போகும் கூட்டமைப்பு இவ்வாறான விடயத்தை தான்தோன்றித்தனமாக செய்ய ஒன்றும் தெரியாத பாப்பாக்கள் இல்லை. நிச்சயமாக ஏதோ வெளிக்காரணி இதன் பின்னால் உள்ளதாகவே தெரிகின்றது.
 
பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

ஆனால் தன்னிச்சையாக ஒரு அமைப்பில் உள்ள ஒருவர் அதுவும் தலைவர் செயற்படுவது ஏற்கக்கூடியதல்ல. சுதந்திர தின விழாவில் பங்கேற்கக்கூடாது என கட்சியில் பிரேரணை நிறைவேற்றப்படவில்லை என்ற வாதம் ஏற்கமுடியாதது. கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டி சுதந்திர தின விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற பிரேரணயை கொண்டு வந்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். 
 
சம்மந்தரின் இந்தப் போக்கு கண்டிக்கப்பட வேண்டியதே. என்னதான் நெருக்குவாரங்கள் இருந்தாலும் கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தினை  ஏற்று நடப்பதுதான் ஒரு ஜனநாயகவாதிக்கு அழகு.
 
Edited by ஜீவன் சிவா

நியாயமான கருத்து....

தமிழருக்கு தூர நோக்கம் ஒன்றுண்டு

அதை மனதில் வைத்தே எழுதி வருகின்றேன்

கூட்டமைப்பு உடையக்கூடாது என்பதும்

அதற்குள் பிடுங்குப்பாடுகள் வரக்கூடாது என்பதும் தான் எனது கருத்து..

இதையே தான் அனந்திக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட எதேச்சதிகார முடிவின் போதும் எழுதினேன்

(பொதுக்குழுவில் விசாரிக்கப்படவில்லை. ஒருவர்  இருவர் தமக்குள் முடிவெடுத்து அறிவிக்கிறார்கள் என்று)

அதுவும் இது போன்ற முடிவுகளின் தொடக்கமே.....

அவற்றை கண்டித்து தடுத்திருந்தால்

இந்த முடிவை எடுக்க ஒன்றுக்கு 100 தடவை யோசித்திருப்பார்கள்... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதிப்புக்குரிய அனந்தி அவர்களை கட்சியின் கொள்கைகளுக்கு கட்டுப்படாததால் இடை நிறுத்தினோம் ...............கட்சி.
 
மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயாவையும் ,சுமேந்திரன் ஐயாவையும் தமிழர்களின் கொள்கைகளுக்கு கட்டுப்படாததால் இடை நிறுத்துவோம் ...............மக்கள்.
 
இதை செய்வாங்களா மக்கள் ??? :icon_mrgreen:

இதை செய்வாங்களா மக்கள் ???  :icon_mrgreen:
 
செய்வார்கள் அண்ணே.. கடந்த தேர்தலிலும் செய்தார்கள். அடுத்த தேர்தலிலும் செய்வார்கள். வீடு சின்னத்துக்கு வாக்குதானே.. போட்டிடலாம். 

இதை செய்வாங்களா மக்கள் ???  :icon_mrgreen:
 
செய்வார்கள் அண்ணே.. கடந்த தேர்தலிலும் செய்தார்கள். அடுத்த தேர்தலிலும் செய்வார்கள். வீடு சின்னத்துக்கு வாக்குதானே.. போட்டிடலாம். 

வீடு சின்னத்திற்கு வாக்குப்போடுவது பிரச்சனை இல்லை சகோ .வீட்டிற்குள்  இருக்கவேண்டியவர்களை இருத்தி விட்டு உண்ட வீட்டிற்கே வஞ்சகம் செய்வோரை வெளியேற்ற வேண்டும் ....அதுதான் தற்போது தேவையான ஒன்று .

  • கருத்துக்கள உறவுகள்

sampanthan-slflag1.jpg

84f5f659-079f-4d6b-afdd-2a430ce66cce_zps

குமாரசாமி அண்ணா.... 

சமயோசித சிந்தனையுடன் இணைக்கப் பட்ட, உங்களது படத்திற்கு நன்றி. :)

இதை செய்வாங்களா மக்கள் ??? :icon_mrgreen:

செய்வார்கள் அண்ணே.. கடந்த தேர்தலிலும் செய்தார்கள். அடுத்த தேர்தலிலும் செய்வார்கள். வீடு சின்னத்துக்கு வாக்குதானே.. போட்டிடலாம்.

வீடு உடைத்து திருடும் திருட்டுப்பயலே வீட்டு சின்னத்தில். தேர்தலில் நின்றாலும் எல்லோரும் வீட்டு சின்னத்துக்கு போட்டு அந்த திருட்டுப்பயலை எம்.பி யாக்குவோம். அதை தானே ஐம்பதுகளின் இருந்து செய்துவருகிறோம். போடடா தம்பி வீட்டுக்கு நேரே என்று ஐம்மபதுகளில் இருந்து கத்திய கூட்டம் நாம். எந்த நாடு போய் வந்தாலும் இந்த புத்தி மாறாது.

ஐம்பதுகளிலேயே இந்த வீடுடைக்கும் வீட்டு சின்ன கூட்டத்தை விரட்டி ஐக்கிய தேசியகட்சியை எமது மக்கள் தெரிவு செய்திருந்தால் எவ்வளவு சந்தோசமாக வாழ்ந்திருக்கலாம்.

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீடு சின்னத்திற்கு வாக்குப்போடுவது பிரச்சனை இல்லை சகோ .வீட்டிற்குள்  இருக்கவேண்டியவர்களை இருத்தி விட்டு உண்ட வீட்டிற்கே வஞ்சகம் செய்வோரை வெளியேற்ற வேண்டும் ....அதுதான் தற்போது தேவையான ஒன்று .

வீடே அவர்களுடையதுதானே.. அவர்கள் அல்லவா மற்றவர்களை வெளியேற்றுகிறார்கள். வெளியேறியவர்களின் அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் கதியைத் தான் பார்த்தோமே.

தேர்தல் என்று வந்தால், ஒரே சொய்ஸ், வீடுதான்.

வீட்டுக்குள் இருப்பவர்கள் யார் என்று பார்க்கும் பழக்கம் கிடையாது. வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு வாக்கும் கிடையாது. 

தேர்தல் என்று வந்தால், ஒரே சொய்ஸ், வீடுதான்.

வீட்டுக்குள் இருப்பவர்கள் யார் என்று பார்க்கும் பழக்கம் கிடையாது. வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு வாக்கும் கிடையாது. 

முற்றிலும் உண்மை.
 
இதைத் தெரிந்ததால்தான் வீட்டைக் கூட்டி கழுவி சுத்தமாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருங்கள் என்று கத்துகின்றோம். தாயகத்தில் எமக்கு வேறு வீடில்லை என்பதற்காக வீட்டை அசுத்தமாகவும் அசிங்கமாகவும் வைத்திருக்கலாமா?

அவர் சொல்லவருவது வேறு....

நாங்கள் இப்படித்தான் வைத்திருப்போம்

வெளிய போறது என்றால்  போ...

இதுக்கு ஐனநாயகம் என்றும் பெயராம் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முற்றிலும் உண்மை.
 
இதைத் தெரிந்ததால்தான் வீட்டைக் கூட்டி கழுவி சுத்தமாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருங்கள் என்று கத்துகின்றோம். தாயகத்தில் எமக்கு வேறு வீடில்லை என்பதற்காக வீட்டை அசுத்தமாகவும் அசிங்கமாகவும் வைத்திருக்கலாமா?

இதற்கு ஒரு பதில் இருக்கிறது. அதை நீங்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வீர்கள் என்று தெரியாது. பலர் திட்டுவார்கள் என்று தெரியும்.

ஒரு தனி நபரின் ability, capacity, decision making talent ஆகியவற்றில் ஒரு அமைப்பு தங்கி இருக்கும்வரை, வெளியேயிருந்து கத்துவது கேட்காது - தோல்வியை சந்திக்கும்வரை. கருணாநிதி, பிரபாகரன், ஜெயலலிதா, மகிந்த அனைவரது அமைப்புகளுக்கும் இது பொருந்தும்.

வெளியேயிருந்து கத்துவதை சம்பந்தன் கேட்கப் போவதில்லை.

ஏனென்றால், அவர் ஸ்ரீலங்காவின் சிங்கக்கொடியை பிடித்து ஆட்டியபோது கேட்காத கத்தல் சத்தமா? அதற்கு பின் மாகாணசபை தேர்தலில் அவரது கட்சி வாரிக்கொண்டு போகவில்லையா?

அடுத்த தேர்தலிலும் தமிழர் பகுதிகளில் சம்பந்தர் கட்சிக்கே வாக்கு. சம்பந்தர் சீட் கொடுப்பவர்களே வேட்பாளர்கள். ஏன் வெளிக் கத்தலுக்கு காது கொடுக்க வேண்டும்? 

இதற்கு ஒரு பதில் இருக்கிறது. அதை நீங்கள் எந்தளவுக்கு ஏற்றுக்கொள்வீர்கள் என்று தெரியாது. பலர் திட்டுவார்கள் என்று தெரியும்.

........

அடுத்த தேர்தலிலும் தமிழர் பகுதிகளில் சம்பந்தர் கட்சிக்கே வாக்கு. சம்பந்தர் சீட் கொடுப்பவர்களே வேட்பாளர்கள். ஏன் வெளிக் கத்தலுக்கு காது கொடுக்க வேண்டும்? 

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
 
சம்பந்தர் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது தவறு என்பது எனது கருத்தல்ல. அதனை முறைப்படி கட்சிக்குள் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அனந்தி வெளியேற்றப்பட்டது சரியே என்று கருத்திட்ட என்னால் சம்பந்தரின் தன்னிச்சையான இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
எனது ஆதங்கமெல்லாம் கூட்டமைப்பு ஒரு பலமான ஆயிரமாயிரம் விழுதுகளைப் பெற்ற ஆலமரமாக வேண்டும் என்பதே. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போதுள்ள சிறிதளவான ஒற்றுமை கூட சம்பந்தரின் திறமைதான். சம்பந்தரில்லாத கூட்டமைப்பை யோசித்துப் பார்க்கவும் முடியாது. மாவையிடம் சம்பந்தருக்கிருக்கும் ஆளுமை இல்லை. அதற்கும் மேலாக சம்பந்தர் வட கிழக்கை இணக்கும் ஒரு பாலமாகவும் உள்ளார். 
 
சம்பந்தரின் பின்னரான கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கும் திறமையை சுமந்திரனில் பார்க்கின்றேன். இங்கு யாழ்களத்தில் இது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து.
 
நாம் என்ன செய்தாலும், சொன்னாலும் மக்கள் வாக்கு எமக்கே என்ற மமதையிலிருந்து கூட்டமைப்பு வெளிவந்து சிறந்த முறையில் ஜனநாயக ரீதியிலான அமைப்பாக கட்டப்படவேண்டும். எமது மக்களிற்காக இதைக் கூட்டமைப்பு செய்தேயாக வேண்டும். ஏனெனில் எமது மக்களின் எதிர்காலம் அவர்கள் கைகளில்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் நானும் ஒத்துப்போகின்றேன்.
 
சம்பந்தர் சுதந்திர தின விழாவில் பங்கேற்றது தவறு என்பது எனது கருத்தல்ல. அதனை முறைப்படி கட்சிக்குள் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அனந்தி வெளியேற்றப்பட்டது சரியே என்று கருத்திட்ட என்னால் சம்பந்தரின் தன்னிச்சையான இச்செயலை ஏற்றுக் கொள்ள முடியாது.
 
எனது ஆதங்கமெல்லாம் கூட்டமைப்பு ஒரு பலமான ஆயிரமாயிரம் விழுதுகளைப் பெற்ற ஆலமரமாக வேண்டும் என்பதே. கூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போதுள்ள சிறிதளவான ஒற்றுமை கூட சம்பந்தரின் திறமைதான். சம்பந்தரில்லாத கூட்டமைப்பை யோசித்துப் பார்க்கவும் முடியாது. மாவையிடம் சம்பந்தருக்கிருக்கும் ஆளுமை இல்லை. அதற்கும் மேலாக சம்பந்தர் வட கிழக்கை இணக்கும் ஒரு பாலமாகவும் உள்ளார். 
 
சம்பந்தரின் பின்னரான கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கும் திறமையை சுமந்திரனில் பார்க்கின்றேன். ???
இங்கு யாழ்களத்தில் இது பலருக்கு பிடிக்காமல் இருக்கலாம் ஆனால் இது எனது தனிப்பட்ட கருத்து.
 
நாம் என்ன செய்தாலும், சொன்னாலும் மக்கள் வாக்கு எமக்கே என்ற மமதையிலிருந்து கூட்டமைப்பு வெளிவந்து சிறந்த முறையில் ஜனநாயக ரீதியிலான அமைப்பாக கட்டப்படவேண்டும். எமது மக்களிற்காக இதைக் கூட்டமைப்பு செய்தேயாக வேண்டும். ஏனெனில் எமது மக்களின் எதிர்காலம் அவர்கள் கைகளில்.

சில விடயங்களில் ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது..

தொடர்ந்து  எழதுங்கள்

எழுதுவோம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“சம்பந்தரின் பின்னரான கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கும் திறமையை சுமந்திரனில் பார்க்கின்றேன்”

என்ற கருத்தும்,

“கூட்டமைப்பைப் பொறுத்தவரை தற்போதுள்ள சிறிதளவான ஒற்றுமை கூட சம்பந்தரின் திறமைதான்” என்ற கருத்தும் யாழ்.கொம்மில் பதியப்பட்ட ஆச்சரியமான கருத்துக்கள்.

உங்களுக்கு விசுகு எழுதிய-

“சில விடயங்களில் ஒத்துப்போகக்கூடியதாக உள்ளது..

தொடர்ந்து  எழதுங்கள்,  எழுதுவோம்” (எழுத்துப் பிழை உள்ளது)

ஒரு மிக நேர்மையான ஸ்டேட்மென்ட்.  விசுகு போன்றவர்கள் கண்டிப்பாக அரசியலுக்குள் வரவேண்டும்.

இங்கு கூட்டமைப்பை காப்பறவேண்டும என பலரும் கருதுகிறீகள். தமிழ் மக்களின் விடுதலையை வென்றெடுக்கவே 1950 களில் தமிழரசுக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அது தமிழ்மக்களை விடுதலை பெற்ற தன்னாட்சி சமஸ்டி உரிமைகள் பெற்ற இனமாக வாழ போராடும் என்ற நம்பிக்கையிலேயே அன்று தொடக்கம் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.அல்லது சிங்கள கட்சிகளுக்கு நேரடியாகவே வாக்களித்திருப்பார்கள்.

ஆனால் இன்று சிங்களத்திடம் அஜெஸ்ட் செய்யும் விபச்சார அரசியலை தமிழரசுக்கட்சி மேற்கொள்வதால் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?

நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களித்து சிறந்த சலுகைககையாள்வதில் மக்கள் நேரடியாக அனுபவிக்கட்டுமே. ஏன் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு சில சுயநலவாதிகளின் நன்மைக்காகவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.