Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுப்பர் சிங்கர் வெற்றிப் பரிசு அனைத்தும் அநாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்: - உலகத் தமிழர்களின் வெற்றியாளர் ஜசிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
jesicka-220215-200.jpg

உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்களை கொள்ளை கொண்ட ஒரு இசை நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை கவர்ந்து வரும் சூப்பர்சிங்கர் ஜுனியர் சீசன் 4 நிகழ்ச்சியின் மிகப்பிரம்மாண்டமான இறுதிச்சுற்று இன்று சென்னையில் நடைபெற்றது. சுப்பர் சிங்கர் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று மிகச் சிறந்த பாடகியாகத் தெரிவு செய்யப்பட்டு அமோக வெற்றியீட்டிய ஜெசிக்கா யூட்டுக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு கிலோ தங்கத்தின் பெறுமதியான பணம்அனைத்தையும் தமிழகத்திலும்,இலங்கையிலும் வாழும் அனாதைக் குழந்தைகளுக்கு வழங்கப்போவதாக ஜெசிக்காவின் தந்தை யூட் சூசைதாசன்,இன்று விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்த பொழுது,அங்கு கூடியிருந்த இரசிகர்கள், பலத்த ஆரவாரம் மூலம் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

விஜய் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் கடந்த ஒரு வருடமாக நடத்தப்பட்டு வந்த “சுப்பர் சிங்கர் – 4” நிகழ்ச்சியில் பொது மக்களின் வாக்குகளின் அடிப்படையிலும் நடுவர்களின் தெரிவி;ன அடிப்படையிலும் இறுதிப் போட்டிக்குத் ஆறு போட்டியாளர்கள் தயாராகி இருந்தனர்.இதில் இன்று நடைபெற்ற சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இசைப் போட்டிகளில் முதலாவது இடத்தைப் பெற்ற ஸ்பூர்த்திக்கு 70 இலட்சம் ரூபா பெறுமதியான வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட்டதுடன், பல விருதுகளும்,நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இப் பலமான போட்டியில் இரண்டாவது இடத்தைப் பெற்று இரசிகர்களின் அமோக ஆதரவையும், பாராட்டையும் பெற்ற ஜெசிக்கா யூட்டுக்கு ஒரு கிலோ தங்கம் பரிசாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்ச்சி தொடர்பாக கருத்து தெரிவித்த பொழுத, ஜெசிக்கா ஜூட்ஸ்,தனது ஆசிரியர்களுக்கும்,விஜய் தொலைக்காட்சிக்கும், நடுவர்களுக்கும்,தனது தாய்,தந்தை,சகோதரர்களுக்கும்;,அவரது இசையை நெறிப்படுத்திய அனந்த் அவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவி;ததுக் கொண்டார்.

ஜெசிக்கா யூட் இலங்கை வடமராட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த முனைப்பகுதியைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபுரோவை வசிப்பிடமகவும் கொண்டவர். ஜேசிக்காவின் விருப்பப்படி, அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்திற்கு ஈடான, பரிசுத் தொகுதியின் ஒரு பகுதியை ஜெசிக்கா அடிக்கடி சென்று வந்த, தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கும்,மிகுதிப் பகுதியை முழுமையாக இலங்கையில் ஈழத்தில் இருக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் வழங்கவுள்ளதாகவும் அவரது தந்தை யூட் சூசைதாசன் தெரிவித்தபொழுது,அந் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் கண்கள் குழமாகிக் கொண்டு வந்ததாக இந்நிகழ்சியில் நேரடியாகக் கலந்து கொண்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இகுருவிக்குத் தெரிவித்துள்ளார்.

சுப்பர் சிங்கர்- 4 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டியில் மூன்றாவது இடத்தைக் கரிபிரியா பெற்றுக் கொண்டார்.இவருக்கு 10 இலட்சம் மூபா பெறுமதியான புத்தம் புதிய கார் அருண் எக்சல் நிறுவனத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது. ஏனைய முதல் மூன்று இடங்களுக்குள் இடம் பெறாத போட்டியாளர்களாக பரத்,திரிசா,அனுசா ஆகியோர் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர்.இவர்களுக்குத் தலா ஐந்து இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக பிரபல திரைப்பட நடிகர்களான தனுஸ், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இளம் பாடகர்களுக்குத் தமது வாழ்த்துத்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

http://seithy.com/breifNews.php?newsID=126968&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தமிழகத்தின் செல்லக் குரல்களுக்களுக்கான தேடல் என்று விஜய் டிவி ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகின்ற "ஏர்டெல் சூப்பர் சிங்கர் 4" நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்தவர் கனடாவாழ் ஈழச்சிறுமியான ஜெசிகா. ஆனால் தான் பரிசாக பெற்ற 1 கிலோ தங்கத்தையும் தமிழகம் மற்றும் ஈழத்தில் வாழும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து தமிழர் நெஞ்சில் நீங்காத முதலிடத்தைப் பெற்றுவிட்டார்..

கனடா வாழ் ஈழத் தமிழராக இக்குழந்தையின் பாடல்களில் அரங்கம் மட்டுமல்ல, டிவி வழியாக இந்நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மனமுள்ள மனிதர்களும் கண்டிப்பாக கண்ணீர் சிந்தியிருப்பார்கள்.

அந்தக் குழந்தையின் உருக வைக்கும் குரலும், சோகம் கலந்த கானமும் கல்லையும் கரைய வைத்திருக்கும் என்பது உறுதி.

21-1424507415-super-singer-junior-41-600

கண்ணீர் மழையில் கரைந்த இதயங்கள்:

ஈழத் தமிழர்களின் தேசிய கீதமாக போற்றப்படுகிற "தோல்வி நிலையென நினைத்து" என்ற தன்னம்பிக்கை கலந்த பாடலையும், ஈழத் தமிழரின் துயரம் தோய்ந்த வலியை வெளிப்படுத்தும் "விடை கொடு எங்கள் நாடே" என்ற உருக்கமான பாடலையும் ஒன்றாக கலந்து ஜெசிக்கா பாடி முடித்தபோது நடுவர்கள், சிறப்பு விருந்தினர்கள், விஜய் டிவியின் தொகுப்பாளர்கள் உட்பட அரங்கத்தில் குவிந்திருந்த அனைவரும் கண்ணீர் மழையில் நனைந்திருந்தனர்.

உள்ளார்ந்த வலியை உணரவைத்த பாட்டு:

நடுவர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருடைய பாடலுக்கு கைத்தட்டலை அளித்தனர். அப்பாடல் மூலமாக ஈழத் தமிழர்களின் உள்ளார்ந்த வலியின் தாக்கத்தினை ஒவ்வொரு தமிழனின் மனதிலும் விதைத்துள்ளார், ஜெசிக்கா.

தமிழர்கள் ஒன்றுதான்:

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தனுஷ், "தமிழர்கள் எல்லாரும் ஒன்றுதான். அவர்களுடைய வலிகளை நான் பிரித்துப் பார்ப்பதில்லை.

மகத்தான விஷயம்:

ஆனால், இந்த சிறுவயதில் அங்கு நின்று கொண்டு அவர்களின் வலி, வேதனை, ஓலம் பற்றியெல்லாம் பகிர்ந்துக் கொள்கிறாய். நீ எவ்வளவு பெரிய, உன்னதமான விஷயம் செய்திருக்கின்றாய் என்பது உனக்கு தெரியாது" என்று மனம் கசிந்த நிலையில் தெரிவித்தார்.

தமிழர்களை உயர்த்திய ஜெசிக்கா:

மக்களின் பலத்த கரகோஷத்திற்கிடையில் வெளியான முடிவுகளில் குட்டிக் குழந்தையாய் பாடிய ஸ்பூர்த்தி முதலிடம் பெற்றார். இரண்டாம் இடத்தைப் பிடித்து 1 கிலோ தங்கம் வென்ற ஜெசிக்கா தமிழர்களே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் வகையில் ஒரு காரியம் செய்தார்.

தமிழ்க் குழந்தைகள் வாழ்வு மலர:

தனக்கு பரிசாக வழங்கப்பட இருக்கின்ற 1 கிலோ தங்கத்தை தமிழகம் மற்றும் ஈழத்தில் இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிப்பதாக தன்னுடைய தந்தை சார்பில் தெரிவித்து எல்லோரையும் உருக வைத்து விட்டார்.

நீங்கா இடம் பிடித்த ஜெசிக்கா:

முதலிடமோ, இரண்டாம் இடமோ பெரிதல்ல... அதன் பலனை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். அந்த வகையில் நம்மைப் போன்றவர்களே செய்யத் தயங்கும் ஒரு விஷயத்தை செய்து எத்தனை, எத்தனையோ கோடி உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்து நெகிழ்வில் ஆழ்த்தி விட்டார் ஜெசிக்கா.

நாமும் வாழ்த்துவோம்:

ஜெசிக்கா என்றால் கடவுளின் குழந்தை, செல்வம் என்று அர்த்தமாம். அப்படித்தான் தனக்கு கிடைத்த செல்வத்தை ஏழைக்குழந்தைகளுக்கு அதுவும் கொடூரப் போரில் பெற்றோரை இழந்த ஈழத் தமிழ்க் குழந்தைகளான தன்னுடைய உறவுகளுக்கு அப்படியே தாரைவார்த்துக் கொடுத்து நிஜமாகவே கடவுளின் குழந்தையாக மாறிவிட்டார்

ஜெசிக்கா... கண்கள் கலங்க...வணங்குகிறோம் 'தமிழச்சி' ஜெசிக்கா!

http://tamil.oneindia.com/news/tamilnadu/jessica-gifts-her-prize-tamil-children-sri-lanka-221447.html

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பார்த்தேன்.... சிலிர்த்துப் போனேன்... நன்றாக வாழவேண்டும் அந்தக் குழந்தை...!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்களும் நன்றிகளும்.....

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இந்தளவு பெரிய மனது இருக்காது.
நல்லதொரு உதாரணமான செயலிற்கு  நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பில்கேட்சில் இருந்து.. மதர் திரேசா வரை அனாதை இல்லங்களுக்கு கொடுத்திட்டு தான் வாறாங்க. இந்தக் காசை எமக்காக போராடி.. இன்று அனாதரவாக நிற்கும் போரளிகளின் மறுவாழ்வுக்கு அர்ப்பணித்திருக்கலாம். விஜய் ரீவிக்காரங்கள் அதைச் சொல்ல விடமாட்டங்கள் என்று பயந்திட்டினம் போல. :rolleyes::):icon_idea:

மேலும்.. இந்த சிறுவர் வதை நிகழ்ச்சி மூலம் விஜய் ரீவி சம்பாதித்த தொகையை அது இதய சுத்தியோடு வெளியிடுமா..?!!! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

ஏன் நெடுக்கு

இந்த அனாதை இல்லங்களுக்குள் இருப்பவர்கள் யார்.....???

  • கருத்துக்கள உறவுகள்

அனாதை இல்லங்களுக்கு கொடுக்க தடைகள் இல்லை. யாரும் பங்களிக்கலாம். ஆனால் 2009 மேக்குப் பின் கூட எம் போராளிகளை புலியாக கருதி ஒதுக்கி அவர்களை அவல வாழ்விற்குள்  தள்ளி.. தற்கொலைக்கும்.. பஞ்சத்துக்குள்ளும்.. பாலியல் தொழிலுக்குள்ளும்.. வாழ விடும்.. வேதனையை விட.. அனாதை இல்லங்களில் நிலைமை அவ்வளவு.. மோசமாக இருக்க வாய்ப்பில்லை. அந்தப் போராளிகளுக்கு நடக்கும்.. கொடுமையை.. வெளிக்கொணர்ந்து.. இந்த நிதியை அவர்களுக்கு அர்ப்பணித்திருந்தால்.. ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்காக போராடிய தங்கள் உறவுகளை கைவிடத் தயார் இல்லை என்ற செய்தி.. தமிழக.. ஊடகங்களுக்கும்.. இந்திய ஊடகங்களுக்கும்.. மக்களுக்கும்.. சொல்லப்பட்டிருக்கும். போராளிகளுக்கும் நன்மை கிட்டி இருக்கும்.

அனாதை இல்லங்களால்.. கனடாவில.. அகதி அந்தஸ்து பெற முடியாதில்ல. எமது போராளிகளின் போராட்டம் தானே... ஜெசிக்காவை கனேடிய தமிழிச்சி ஆக்கினது. அதைப் பற்றி... ஏன் சொல்ல மறக்கிறீங்க. மழுப்பிறீங்க. :rolleyes::(:icon_idea:

எனக்கே குழப்பமா இருக்கு நெடுக்கு...

இந்த போட்டியில் இவர் கலந்திரக்கக்கூடாது என்கின்றோம்

கலந்த  போது மேல வரக்கூடாது என்கின்றோம்

வெற்றி   பெறக்கூடாது

வாழ்க்கை போயிடும் என்கின்றோம்

வென்றதும் வியாபாரம் என்கின்றோம்

வென்ற பணத்தை தானம் செய்தால் அதுவும் பிழை என்கின்றோம்

வேறு ஒருத்தர் எடுத்திருந்தால்

ஒன்றும் பேசமாட்டோம்

இப்போ

ஐநா என்கின்றோம்

போராளிகள் என்கின்றோம்

தமிழர் தலமை மாறியிருக்கு என்கின்றோம்

என்னாச்சு என் இனத்துக்கு....?

இதிலிருந்து மீளுமா என் இனம்...

வெறுத்து வருகிறது.... :(  :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பில்கேட்சில் இருந்து.. மதர் திரேசா வரை அனாதை இல்லங்களுக்கு கொடுத்திட்டு தான் வாறாங்க. இந்தக் காசை எமக்காக போராடி.. இன்று அனாதரவாக நிற்கும் போரளிகளின் மறுவாழ்வுக்கு அர்ப்பணித்திருக்கலாம். விஜய் ரீவிக்காரங்கள் அதைச் சொல்ல விடமாட்டங்கள் என்று பயந்திட்டினம் போல. :rolleyes::):icon_idea:

மேலும்.. இந்த சிறுவர் வதை நிகழ்ச்சி மூலம் விஜய் ரீவி சம்பாதித்த தொகையை அது இதய சுத்தியோடு வெளியிடுமா..?!!! :rolleyes::icon_idea:

போராளிகள் மாவீரர்கள் ஆவதற்காகத்தானே இயக்கத்தில் இணைந்தார்கள். எனவே, அவர்களிற்கு மறுவாழ்வு தேவையில்லை. ஆனால், ஆயுதபோராட்டம் அப்படியானது அல்ல. தமிழீழம் கிடைக்கும்வரை அது தேவை. ஜெசிக்காவிற்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை ஐந்தாம் கட்ட ஈழப்போரிற்கு அர்ப்பணித்து இருக்கலாம். ஆனாலும் விஜய் ரீவி அனுமதித்தாலும் அப்படியெல்லாம் செய்வதற்கு அவர்களிற்கு உங்களைப்போல் வீரம் வேண்டுமே.

குதிரையின் குணம் அறிந்துதான் கடவுள் அதற்கு கொம்பு கொடுக்கவில்லை. உங்களுக்கு கருத்தியலுக்கு இது நன்றாகவே பொருந்துகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்..

இந்தப் போட்டியே... சிறுவர் வதை. இருந்தும் நடத்த அனுமதி... அதனால் அதை பற்றி தொடர்ந்து பேசிக்கிட்டிருக்க முடியாது. பெரிய ஆக்களின் வியாபாரம் அது. அவர்களை தட்டிக்கேட்க இன்னும் ஒருத்தரும் வரேல்ல.. என்ற திமிர் அவர்களுக்கு.

இது அப்பட்டமான.. பல கோடிகள் புரளும் விஜய் ரீவி நடத்தும்.. சிறுவர் வியாபாரம். அதை எவனுமே கண்டுக்கிறதில்ல.

விஜய் ரீவி மேற்குலக அகதித் தமிழர்களிடம் காசு பறிக்கும் பொறிமுறை. அதனை விளங்கிக் கொள்ளும் நிலையில்.. அகதித் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை தான் ஊர்ப் பிரச்சனை. அதுக்கு பிறகு உல்லாசப் பிரச்சனை. அதையும் தாண்ட முடியல்ல..

சினிமாவை மையப்படுத்தி இயங்கும்.. விஜய் ரீவி.. எம்மவர்களின் திறமையின் அளவுகோலானது கொடுமை. அதையும் புரிய வைக்க முடியல்ல..

இத்தனை இயலாமைகளையும் தாண்டி சிலதை எம் எருமைமாட்டு தமிழர்களுக்கு உணர்த்தனுன்னா.. இதுதான் வழி. :lol::icon_idea:

போராளிகள்.. மாவீரர்கள் ஆனது உங்களின் அகதி அந்தஸ்த்துக்கு.. அந்த உண்மையோடு வாருங்கள். மிச்சத்தை விலா வாரியா அலசுவம். கிழவி வந்தமா.. வெத்திலை இடிச்சமா வாயில போட்டமா... நாலு பேரை பார்த்து துப்பினமா.... என்றில்லாமல்.. பெட்டிக்கு வெளில வந்து சிந்திக்க கற்றுக் கொள்வது நல்லம். சமூகத் தேவையது. :icon_idea::rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஆம்..

இந்தப் போட்டியே... சிறுவர் வதை. இருந்தும் நடத்த அனுமதி... அதனால் அதை பற்றி தொடர்ந்து பேசிக்கிட்டிருக்க முடியாது. பெரிய ஆக்களின் வியாபாரம் அது. அவர்களை தட்டிக்கேட்க இன்னும் ஒருத்தரும் வரேல்ல.. என்ற திமிர் அவர்களுக்கு.

இது அப்பட்டமான.. பல கோடிகள் புரளும் விஜய் ரீவி நடத்தும்.. சிறுவர் வியாபாரம். அதை எவனுமே கண்டுக்கிறதில்ல.

விஜய் ரீவி மேற்குலக அகதித் தமிழர்களிடம் காசு பறிக்கும் பொறிமுறை. அதனை விளங்கிக் கொள்ளும் நிலையில்.. அகதித் தமிழர்கள் இல்லை. அவர்களுக்கு அகதி அந்தஸ்து கிடைக்கும் வரை தான் ஊர்ப் பிரச்சனை. அதுக்கு பிறகு உல்லாசப் பிரச்சனை. அதையும் தாண்ட முடியல்ல..

சினிமாவை மையப்படுத்தி இயங்கும்.. விஜய் ரீவி.. எம்மவர்களின் திறமையின் அளவுகோலானது கொடுமை. அதையும் புரிய வைக்க முடியல்ல..

இத்தனை இயலாமைகளையும் தாண்டி சிலதை எம் எருமைமாட்டு தமிழர்களுக்கு உணர்த்தனுன்னா.. இதுதான் வழி. :lol::icon_idea:

நன்றி

வணக்கம்...

நன்றாக வாழவேண்டும் அந்தக் குழந்தை...! வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் டி.வி. சார்பில் சிறந்த இளம் பாடகியாக தேர்வு செய்யப்பட்ட ஈழத்தை சேர்ந்த மாணவி ஜெசிக்கா, தனக்கு பரிசாக கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை, ஈழத்தில் போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகள் வளர்ச்சிக்காக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

singer%20jessica%20%20300.jpg

விஜய் டி.வி. சார்பில் நடததப்பட்டு வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச் சுற்று போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஈழத்தை சேர்ந்த ஜெசிக்கா என்ற மாணவி,  இரண்டாவது இடத்தை பிடித்தார்.

இறுதி சுற்றில் ஈழத்தமிழரின் தேசிய கீதமாக போற்றப்படுகிற 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலை, 'தோல்வி நிலையென நினைத்து' என்ற பாடலுடன் இணைத்து ஜெசிக்கா பாடிய போது, அரங்கத்தில் குழுமியிருந்த விருந்தினர்கள் உள்ளிட்டோர் கண்களில் கண்ணீர் தேங்கியது. ஜெசிக்கா பாடி முடிக்கவும் நடுவர்கள் உள்ளிட்டோர் எழுந்து நின்றி கை தட்டினர். 

விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் தனுஷ்,''இளம் வயதில் ஈழத்தமிழரின் வலிகளையும் வேதனைகளையும் தனது பாடலால் பதிவு செய்ய ஜெசிக்காவை பாராட்ட வார்த்தைகளே இல்லை'' என்றார்.

ஆனால்  உண்மையிலேயே ஜெசிக்கா செய்த அடுத்த செயலுக்கு பாராட்ட வார்த்தைகள் கிடையாது. இந்த நிகழ்வில் அவருக்கு பரிசாக வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தையும், தமிழக மற்றும் ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக வழங்குவதாக ஜெசிக்காவின் பெற்றோர் அறிவித்த போது, அரங்கத்தில் கூடியிருந்த ஒவ்வொருவரும்  உருகிதான் போனார்கள். 

தற்போது கனடாவில் வசித்து வரும் ஜெசிக்கா...''இது போன்ற போட்டியில் வெற்றி பெறுவதை விட எங்கள் மக்களின் வலிகளை பதிவு செய்ததையே வெற்றியாக கருதுகிறேன்'' என்றார்.

ஜெசிக்காவின் இந்த அறிவிப்பு உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்களை மட்டுமல்லாது தாய் தமிழகத்தையும் நெகிழச் செய்தது. 

http://news.vikatan.com/article.php?module=news&aid=38900&utm_source=facebook&utm_medium=EMagazine&utm_campaign=1

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2a9b86b768807d531dab8e58f1716559.jpg

ஈழத்துச் சிறுமியான ஜெசிக்கா இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சியின் சுப்பர்சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு கிலோ தங்கத்தைப்பெற்று ஈழத்தமிழர்களுக்கு பெருமையைத் தேடிக் கொடுத்துள்ளார். 

ஈழத்துச் சிறுமியான ஜெசிக்கா கடந்த கால அசாதாரண சூழல் காரணமாக புலம்பெயர்ந்து சென்று கனடாவில் வாழ்ந்து வருகின்றனர். குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெசிக்கா மீண்டும் வயல்காட் சுற்றின் ஊடாக மக்களது பூரண ஆதரவுடன் உள்ளே நுழைந்தார்.
 
இறுதிப் போட்டிவரை சிறப்பாக தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர். இறுதிப் போட்டியிலும் ஈழத்து நினைவுகளை கொண்டுவரும் பாடல் ஒன்றினைப் பாடி அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்தவர் .
 
ஒட்டுமொத்த தமிழ்  மக்களின்  வாக்குகளுடனும்  2ஆம் இடத்திற்கு தெரிவாகி ஒரு கிலோ தங்கத்தை பெற்றுக் கொண்டார். இதுமட்டுமல்ல தனக்குக் கிடைத்த பரிசுத் தொகையில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள அனாதைச் சிறுவர் இல்லங்களுக்கும் ஒரு பகுதியை ஈழத்தில் உள்ள சிறுவர் இல்லங்களுக்கும் வழங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
 
இதனூடாகவும் ஜெசிக்கா மேலும் மேலும் அனைவரது மனங்களையும் நிறைத்துள்ளார். 

http://onlineuthayan.com/News_More.php?id=644003884922391034

  • கருத்துக்கள உறவுகள்

சரி அந்தக்குழந்தை தனக்கு கிடைத்த முழுப்பணத்தையும் தனக்கு பிடித்த தான் அடிக்கடி சென்று வந்த, தமிழகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கும்,மிகுதிப் பகுதியை முழுமையாக இலங்கையில் ஈழத்தில் இருக்கும், அநாதைக் குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார்.

மற்றவர்கள் தங்கள் உழைப்பை தங்களுக்கு விரும்பியவர்களுக்கு கொடுக்கலாமே. எதற்கு மற்றவர்களின் விருப்பத்தில் மூக்கை நுழைக்கிறார்கள்.

சும்மா தானே என்று எழுதுகிறார்களா?

இப்படித்தானா இவர்களின் ஏனைய கருத்துக்களும்?

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ உறவுகள் சத்தப்படாமல்.. யுனி கிரான்டைக் (grant money) கூட எடுத்து.. ஊரில் உள்ள முன்னாள் போராளிகளை பராமரிக்க அனுப்பிட்டுத்தான் இருக்குதுங்கள். இவா மட்டும்.. ஏன் அதுகளில் இருந்து விலகி இருக்கனும்.. அதுகளோட சேரலாம் தானே. அவர்களும் இளையோர் தானே. மேற்கிற்கு அகதியாக வந்த தமிழர்களின் பிள்ளைகள் தானே. பொதுத் தேவையில்.. எது கூடிய அவசியம் அவசரமோ அதற்கு உதவி செய்வது தான் விவேகமானது. மற்றது வேடிக்கையானதாகிவிடும். :):icon_idea:

அனாதைச் சிறுவர்களுக்கு உதவி செய்வது  பிழையோ?

அல்லது நீங்கள் நினைத்த இடத்திற்கு அந்த உதவி போகவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

அனாதைப் பிள்ளைகளுக்கு என்றால் எந்த இடத்தில் உள்ள ஆனாதைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார் ஈழத்தில் ??? அதைக் கொடுக்கும்படி சன் டிவியை விட்டால் கொடுப்பார்களா??? உண்மையில் எனக்கு விளங்கவில்லை. நான் அந்த நிகழ்வின் முடிவைப் பார்க்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில எழுதினது நெடுக்கர் தானே. 15 வயது பிள்ளை தன்னால் முடிந்ததை செய்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?/topic/150573-யாழ்களம்-நிழலியின்-உதவியில்-சத/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில எழுதினது நெடுக்கர் தானே. 15 வயது பிள்ளை தன்னால் முடிந்ததை செய்கிறது.

http://www.yarl.com/forum3/index.php?/topic/150573-யாழ்களம்-நிழலியின்-உதவியில்-சத/

ஜெசிக்காவுக்கு கிடைத்த ஒரு கிலோ தங்கத்தை அவர் ஒருவருக்கும் தானம் செய்யாமல் பரிசை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி இருந்தால், உலக தமிழ் மக்களின் ஆதரவினால் வெற்றி பெற்ற இவா பரிசை ஏன் ஆதரவு அற்ற குழந்தைகளிற்கு கொடுக்கவில்லை என்று தாறுமாறாய் குற்றம் சுமத்தி இருப்பார்கள். 

பரிசை அநாதரவான குழந்தைகளிற்கு தானம் செய்வதாக அறிவித்தமையால் ஜெசிக்கா மீதும், அவர் குடும்பம் மீதும் குறை கண்டுபிடிப்பதற்கு புதிய காரணம் தேவைப்படுகின்றது. எனவே, நாம் பரிசுத்தொகையை முன்னாள் போராளிகளிற்கு கொடுக்கவில்லை எனும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம்.

பரிசை முன்னாள் போராளிகளிற்கு தானம் செய்வதாக அறிவித்து இருந்தால், இவா யார் முன்னாள் போராளிகளுக்கு உதவிசெய்வதாக கூறி எங்கள் விடுதலை போராட்டத்தை தொலைக்காட்சியில் மட்டம் தட்டுவதற்கு. முன்னாள் போராளிகளை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்வோம். இவா தாயக போராட்டத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் புகழ் பெறுவதை நிறுத்தவேண்டும் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இருப்போம்.

எங்களுக்கு யாரையாவது திட்டிக்கொண்டு இருக்கவேண்டும். இனி புதிய ஒருவர் வசமாய் மாட்டும்வரை இந்த ஜெசிக்காவையும், குடும்பத்தையும் விடுவதாய் இல்லை. 

வேற?

நாங்களும் எத்தனை ஆய்வுகள் செய்கின்றோம். ஆய்வுக்கட்டுரைகள் எழுதுகின்றோம். புழு, பூச்சி, புடலங்காய், பாகற்காய், பப்பாளி தொடக்கம் முன்னாண், மூட்டுக்கள், நிணனீர் தொகுதிவரை ஆராய்ச்சி செய்தாயிற்று. 

இவ்வளவு செய்யும் எங்களை கண்டுகொள்ளாமல் கேவலம் ஒரு 14வயது சிறுமியை மட்டும் எல்லோரும் பாராட்டிக்கொண்டு இருந்தால் எங்களுக்கு சினம் வராதா பின்ன??

  • கருத்துக்கள உறவுகள்

அனாதைப் பிள்ளைகளுக்கு என்றால் எந்த இடத்தில் உள்ள ஆனாதைப் பிள்ளைகளுக்குக் கொடுக்கிறார் ஈழத்தில் ??? அதைக் கொடுக்கும்படி சன் டிவியை விட்டால் கொடுப்பார்களா??? உண்மையில் எனக்கு விளங்கவில்லை. நான் அந்த நிகழ்வின் முடிவைப் பார்க்கவில்லை.

ஈழத்தில் எந்த இடத்தில இருக்கிற அனாதரவான பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம், அதிலயும் ஏரியா அது இது எண்டு பார்க்க வேணுமா? மேலும் சன் ரிவி நிச்சயமாகக் கொடுக்கப் போவதில்லை! ஏனெனில் நிகழ்ச்சியை நடத்தியது விஜை டி.வி! :icon_mrgreen:

Edited by Justin

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ உறவுகள் சத்தப்படாமல்.. யுனி கிரான்டைக் (grant money) கூட எடுத்து.. ஊரில் உள்ள முன்னாள் போராளிகளை பராமரிக்க அனுப்பிட்டுத்தான் இருக்குதுங்கள். இவா மட்டும்.. ஏன் அதுகளில் இருந்து விலகி இருக்கனும்.. அதுகளோட சேரலாம் தானே. அவர்களும் இளையோர் தானே. மேற்கிற்கு அகதியாக வந்த தமிழர்களின் பிள்ளைகள் தானே. பொதுத் தேவையில்.. எது கூடிய அவசியம் அவசரமோ அதற்கு உதவி செய்வது தான் விவேகமானது. மற்றது வேடிக்கையானதாகிவிடும். :):icon_idea:

கிரான்ற் காசை சத்தமில்லாமல் தானே நெடுக்கர் அனுப்ப முடியும்? :D ஊரவன் வரிப்பணத்தில இருந்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகக் கொடுக்கப் பட்ட பணத்தை எடுத்து உங்கள் விருப்பத்திற்குத் தானம் செய்வது திருட்டுக்கு ஒப்பானது, அதை சத்தமில்லாமல் தான் செய்ய வேண்டும்! தங்களுக்கு வந்த சம்பளத்தை அனுப்பினால் அது தியாகம் எனலாம், திருட்டு அல்ல! ஆனால் நீங்கள் கிரான்ற் காசை அனுப்புவதாகச் சொல்வது தான் நம்ப இயலாமல் இருக்கு! அல்லது இதுவும் நீங்கள் பிரிட்டிஷ் கவுன்சிலில் தகவல் எடுத்து புலமைப் பரிசிலில் இங்கிலாந்து வந்த மாதிரியான கதையா? (அந்த ஸ்கொலர்ஷிப்பின் பெயர் நீங்கள் இது வரை சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது! இல்லையா? :icon_idea:)

பில்கேட்சில் இருந்து.. மதர் திரேசா வரை அனாதை இல்லங்களுக்கு கொடுத்திட்டு தான் வாறாங்க. இந்தக் காசை எமக்காக போராடி.. இன்று அனாதரவாக நிற்கும் போரளிகளின் மறுவாழ்வுக்கு அர்ப்பணித்திருக்கலாம். விஜய் ரீவிக்காரங்கள் அதைச் சொல்ல விடமாட்டங்கள் என்று பயந்திட்டினம் போல. :rolleyes::):icon_idea:

மேலும்.. இந்த சிறுவர் வதை நிகழ்ச்சி மூலம் விஜய் ரீவி சம்பாதித்த தொகையை அது இதய சுத்தியோடு வெளியிடுமா..?!!! :rolleyes::icon_idea:

நெடுக்கர் என்னாச்சு? நல்லா தானே இருந்தீங்கள்?  :D
போட்டியில கலந்து கொள்ளுறதா இல்லையா?  
எந்த போட்டியில கலந்து கொள்ளுறது? 
போட்டியில் வென்ற பணத்தை தனக்கு பயன்படுத்துவதா அல்லது 
மற்றவர்களுக்கு கொடுப்பதா? யாருக்கு கொடுப்பது? 
இவற்றை எல்லாம் தீர்மானிப்பது ஜெசிக்காவினதும் அவரது 
குடும்பத்தினரதும் தனிப்பட்ட விடயம். அது அவர்களது தனி மனித 
கருத்து சுதந்திரம். அதுக்குள்ள மூக்கை நுழைக்கிற அருகதையோ 
தகுதியோ உங்களுக்கில்லை நெடுக்கர். 
அனால் நெடுக்கர் நீங்கள் ஒரு (யாழிலை) மாபெரும் விஞ்ஞானி. 
நிறைய Nature, Science, Cell, New England Journal of Medicine  போன்ற
உலக புகழ் பெற்ற விஞ்ஞான சஞ்சிகைகளில் எல்லாம் நிறைய First author paper publish
பண்ணின சிங்கன் அல்லவா நீங்கள் :D .
வெகு சீக்கிரம் நோபல் பரிசு பெறப்போகும் முதல் ஈழத்தமிழன் நீங்கள்
நாளைக்கு தங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும் போது மேடையில் 
அந்த பரிசை போராளிகளுக்கு சமர்ப்பித்தால் அதுக்கு பிறகு அப்படி 
சொல்லுற தகுதி உங்களுக்கு இருக்கும் நெடுக்கர். :D  :D  :lol:  

எத்தனையோ உறவுகள் சத்தப்படாமல்.. யுனி கிரான்டைக் (grant money) கூட எடுத்து.. ஊரில் உள்ள முன்னாள் போராளிகளை பராமரிக்க அனுப்பிட்டுத்தான் இருக்குதுங்கள். இவா மட்டும்.. ஏன் அதுகளில் இருந்து விலகி இருக்கனும்.. அதுகளோட சேரலாம் தானே. அவர்களும் இளையோர் தானே. மேற்கிற்கு அகதியாக வந்த தமிழர்களின் பிள்ளைகள் தானே. பொதுத் தேவையில்.. எது கூடிய அவசியம் அவசரமோ அதற்கு உதவி செய்வது தான் விவேகமானது. மற்றது வேடிக்கையானதாகிவிடும். :):icon_idea:

என்னது நெடுக்கர் University Research grant எடுத்து ஊருக்கு அனுப்பிறதா?  :D
அந்த நாட்டு மக்களிண்டை வரிபணத்திலை விஞ்ஞான ஆய்வுகளுக்காக 
கொடுக்கிற பணம் உங்கடை வீட்டு காசா என்ன நெடுக்கர்?  :lol:
நீங்கள் எப்பவாவது research grant எடுத்திருகிறீங்களா நெடுக்கர்? 
அந்த பணத்தை எவ்வாறு விஞ்ஞான ஆய்வுகளுக்கு உபயோகித்தீர்கள் 
என்பதை விளக்க வேண்டும் (Annual Progress report) 
Research findings publish பண்ண வேண்டும். 
ஊருக்கு அனுப்பிறதுக்கு அது என்ன சங்ககடை காசா என்ன?  :D  :D
யாழிலை இருக்கிறவன் எல்லாம் கேணயன் எண்ட நினைப்பில 
ஏரோபிளேன் ஒட்டுறீங்க்களா நெடுக்கர்?  :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.