Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதனால் மனிசர் இப்பிடி .........

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர்.

நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை ஏன் சொல்ல முடியாது எமக்குள்ளே குமைந்து போகிறோம். காரணம் என்ன ????

நீங்களும் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சூழ்நிலையில் பொய்(கள்) சொல்லி இருந்ததால் வரும்  குற்ற உணர்வாக இருக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் என்றோ ஒரு நாள் ஏதோ ஒரு சூழ்நிலையில் பொய்(கள்) சொல்லி இருந்ததால் வரும்  குற்ற உணர்வாக இருக்கலாம

நான் இப்பதிவை எழுதியதன் நோக்கம் எனது குற்ற உணர்வினால் அல்ல. யாழ் களத்தில் உள்ள பலரும் ஒருவருக்காக ஒருவர் நடித்துக்கொண்டு போலியாக எழுதிக்கொண்டு நல்லவர்களாக வேடமிட்டபடி நடமாடுகின்றனர். அவர்கள என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கத்தான்.

ஆனால் பலர் இதில் கருத்தெழுத முன்வராததில் இருந்தே நிறைய விடயங்கள் தெரிகின்றன.

குட்டிச் சுவருடன் மோதி எந்தப் பயனும் இல்லை என்பதும் தெரிகிறது

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இது வழக்கம் போல ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு, சிலர் வர வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டு திறந்த திரியா? இப்படிக் குறிப்பிட்ட உறுப்பினர்களின் பதில் பெற வேண்டுமனால் தனி மடல் பாவிக்கலாமே? நான் நினைக்கிறேன் மட்டுறுத்துனர்கள் சேர்வர் இடத்திற்குக் காசு கட்டித் தான் யாழ் நடத்துகிறார்கள். முக நூல் மாதிரிப் பாவிக்க முடியாது சுமே! யோசியுங்கள்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இப்பதிவை எழுதியதன் நோக்கம் எனது குற்ற உணர்வினால் அல்ல. யாழ் களத்தில் உள்ள பலரும் ஒருவருக்காக ஒருவர் நடித்துக்கொண்டு போலியாக எழுதிக்கொண்டு நல்லவர்களாக வேடமிட்டபடி நடமாடுகின்றனர். அவர்கள என்ன கூறுகிறார்கள் என்று பார்க்கத்தான்.

ஆனால் பலர் இதில் கருத்தெழுத முன்வராததில் இருந்தே நிறைய விடயங்கள் தெரிகின்றன.

குட்டிச் சுவருடன் மோதி எந்தப் பயனும் இல்லை என்பதும் தெரிகிறது

அதில் எந்த தப்பும் இல்லை சுமே...

அவரவரது குணாதிசியங்கள்

நடவடிக்கைகள்

நடத்தைகள் சார்ந்து யாழில் கருத்து பகிர்வதில்லை.

கருத்துக்கு தான் கருத்து...

கருத்துக்கு எதிர்கருத்து இருந்தால் வைக்கின்றனர் என்று தான் நினைக்கின்றேன்..

மற்றும்படி ஒருவருடைய நடத்தைகள் சம்பந்தப்பட்டது என்றால்

நீங்கள் இவ்வளவு தரம் வாயைக்கொடுத்தும்

கூப்பிட்டும்

இந்த திரிக்கு இவ்வளவு பொறுமை காத்ததே

யாழ் கள உறவுகளின் பொறுமையையும் கட்டுப்பாட்டையும் சொல்லி  நிற்கிறது..

  • கருத்துக்கள உறவுகள்

...

ஆனால் பலர் இதில் கருத்தெழுத முன்வராததில் இருந்தே நிறைய விடயங்கள் தெரிகின்றன...

முகம் மறைத்து நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை, அதே நேரம் இங்கே வந்து பெரும்பாலோரும் எழுதிச் செல்லவேண்டும் என்ற கடப்பாடும் இல்லை தானே!

இதற்கு நோவானேன்? :o

உங்கள் எதிர்பார்ப்பு, குழந்தைத்தனமாக தெரிகிறது! :)

Edited by ராசவன்னியன்

சுமே அக்கா உங்களுடன் கதைத்து பிரியோசனம் இல்லை என்று நான் கருதுவதனால் மட்டுமே உங்கட திரியில் கருத்தெழுதவில்லை என முடிவு செய்தேன். வேற ஒரு பயமும் இல்லை

நீங்கள் அதிபராக இருப்பதாக கூறும் தமிழ் பாடசாலையில் (கல்வி) கற்கும் மாணவர்கள் நினைத்து தான் ஒரே ஏக்கம்!!!!!

உண்மை பொய் பற்றி கதைக்கிரிங்கலேய் உங்களுக்கு அதிபர் பதவி கிடைத்தது பற்றி கொஞ்சம் சொல்லுங்கலேன்......நீங்கள் விசுகு அண்ணா பாடசாலை பற்றி கேட்ட போது நழுவி சென்ற விதம் இருக்கே....அம்மா

தயவு செய்து வேற திரிக்கு வாங்கோ அங்க கதைப்பம் எண்டு சொல்லி போடாதேங்கோ

நீர் சுண்டல் தானே கடலை தானா எண்டு சமாளிவுகேஷன் பண்ணாதேங்கோ

யாரும் இரண்டு முகவரி வைத்திருக்க வேண்டிய அவசியமல்ல......அப்படி இருப்பினும் நாம் அதை பற்றி அலட்டிகொள்ளாமல் கருத்துக்கு கருத்து எழுதலாமே.......

நாம் சிறியவர்களாக இருக்கும் போது எம்மைப் பண்புடன் தான் பெற்றவர் வளர்க்கின்றனர். துணிவு வேண்டும், நேர்மை வேண்டும், தவறைச் சுட்டிக்காட்ட வேண்டும், பொய் சொல்லாதே இப்படி ...... சமூகத்துக்கும் தனி மனிதருக்கும் தேவையான நல்லவற்றையே சொல்லிச் சொல்லி வளர்த்தாலும், வளந்த பின்னர் பல தீய குணங்களின் வடிவங்களாக பலர் மாறிப்போகின்றனர்.

நண்பனாய் இருக்கட்டும் உறவாக இருக்கட்டும் ஏன் கொம்பனாகக் கூட இருக்கட்டும் பொய் பேசுபவர்களைக் கண்டு நீ கூறுவது பொய் என்று அவருக்கு நேரே சொல்ல ஏன் பயம் கொள்கின்றோம். இத்தனைக்கும் அந்த நபர் சார்ந்து நாம் இருக்காது எம் காலிலேயே நின்றாலும் கூட, அவர்களால் எமக்கு எந்தத் துன்பமும் நிகழ முடியாது என்று எமக்கு நன்றாகத் தெரிந்தும் கூட, அநியாயத்தை, பொய்யை, அவர் தவறை ஏன் சொல்ல முடியாது எமக்குள்ளே குமைந்து போகிறோம். காரணம் என்ன ????

இப்படியான நிலைமையில் என்னுடைய காலஞ்சென்ற அப்பா, அப்பப்பா சொன்ன நன்னெறிகளை மற்றும் பழமொழிகளை  நினைத்து ஆறுதலடைவேன். எல்லோரும் திருக்குறளை ஆதாரம் காட்டி கதைப்பினம். ஆனால் எல்லாக் குறள்களிலும் எனக்கு உடன்பாடு இல்லை. இதற்காக வள்ளுவரை குறை சொல்ல இங்கு நான் வரவில்லை. அந்த தத்துவ ஞானி, தான் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்னரும் தமிழர்கள் வாழ்வாங்கு வாழ அக்கறையோடு சொல்லப்பட்ட நல்ல அறிவுரைகள் அவை. 
எனக்கு உடன்பாடு இல்லாத குறள்கள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு இரண்டு குறள்களை எழுதுகிறேன்.
ஒன்று 
"மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்!"
இது ரோஷமுள்ள ஒரு மானஸ்தனுக்கு வள்ளுவர் சொல்லுறார் உன்னுடைய மானத்துக்கு பங்கம் வந்தால் "கவரிமானை" போல் செத்துப் போடா.
இன்னும் ஒன்று..
"தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே 
 நாவினாற் சுட்ட வடு"
உன்னை நெருப்பால் சுட்டால் ஓகே ஆனால் யாரவது உன் மனது நோகும்படி சொன்னால் மறக்காமல் இரு.
இந்த மேலே குறிப்பிட்ட குறள்களுக்கு உள்ளர்த்தம் யாதெனில் "அடுத்தவன் செய்கின்ற  பிழைகளுக்காக உன்னை நீயே நோகடிச்சுகோ "
இதற்கு என்னால் உடன் பட முடியாமல் உள்ளது.
அதற்கு மாறாக, வள்ளுவரின் மேற்குறிப்பிட்ட குறள்களுக்கு நேரெதிராக மேற்கத்தையர்களின் பழ மொழி ஒன்று இக்காலத்து நடைமுறைக்கு பொருந்துவதாக இருக்கிறது.
 
Sticks and stones may break my bones but words will never hurt me.
something that you say which means that people cannot hurt you with bad things they say or write about you.
 Criticism has never bothered me. Sticks and stones may break my bones, and all that.
 
"நீ என்ன சொன்னாலும் பரவாயில்லை. சொல்லிப்போட்டிரு. ஆனால் உன்னுடைய வன்முறையை நிச்சயமாக தாங்கிக் கொள்ள மாட்டேன்." என்ற கருத்துப்பட உள்ளது. இல்லையா?
 
இதே போல் என்னுடைய அப்பா உயிரோடு இருந்த காலத்தில் ஒரு நீதிக் கதை சொல்வார். நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். "மலம் தின்னும் பன்றியை வீதி ஓரத்தில் பார்த்த புனிதமான கோயில் யானை, பத்தடி விலத்தியே நடந்து சென்றதாம். இதனை பார்த்த பன்றி யானையின் பலம் என்னெவென்று தெரியாமல், தனக்கு பயந்துதான் யானை எட்டத்த போகுது என்று நினைத்ததாம்." 
யானை தனது பலத்தை நிரூபிப்பதற்க்காக பன்றியை தூக்கி கடாசிவிட்டுப் போகலாம். இதனால் அழுக்குப்படுவது யார்?
 
அப்படியானால் நீங்கள் சொல்லும் பொய் களவு செய்வோரை எப்படித் திருத்தலாம் என்ற உங்கள் ஆதங்கத்துக்கு பதில் என்ன?  தானாக உணர்ந்து திருந்தினால் ஒழிய  யாரையும் குற்றம் சொல்லித் திருத்த முடியாத காலம். அது மட்டும் அல்ல அவ்வையாரின் கொன்றை வேந்தன் சொல்லும் "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்னும் நல்லுரையில் ஒரு படிப்பினை உண்டு. அந்த படிப்பினையை பட்டறிந்தவர்கள் இங்கே அர்ஜுனும், நிழலியும் (அவர்களே தமது கருத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்). 
 
Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

சுமே அக்கா உங்களுடன் கதைத்து பிரியோசனம் இல்லை என்று நான் கருதுவதனால் மட்டுமே உங்கட திரியில் கருத்தெழுதவில்லை என முடிவு செய்தேன். வேற ஒரு பயமும் இல்லை

நீங்கள் அதிபராக இருப்பதாக கூறும் தமிழ் பாடசாலையில் (கல்வி) கற்கும் மாணவர்கள் நினைத்து தான் ஒரே ஏக்கம்!!!!!

உண்மை பொய் பற்றி கதைக்கிரிங்கலேய் உங்களுக்கு அதிபர் பதவி கிடைத்தது பற்றி கொஞ்சம் சொல்லுங்கலேன்......நீங்கள் விசுகு அண்ணா பாடசாலை பற்றி கேட்ட போது நழுவி சென்ற விதம் இருக்கே....அம்மா

தயவு செய்து வேற திரிக்கு வாங்கோ அங்க கதைப்பம் எண்டு சொல்லி போடாதேங்கோ

நீர் சுண்டல் தானே கடலை தானா எண்டு சமாளிவுகேஷன் பண்ணாதேங்கோ

யாரும் இரண்டு முகவரி வைத்திருக்க வேண்டிய அவசியமல்ல......அப்படி இருப்பினும் நாம் அதை பற்றி அலட்டிகொள்ளாமல் கருத்துக்கு கருத்து எழுதலாமே.......

ஏன் இப்படி மனிசர்.

கேள்வி கேட்டவுடன் திரிப்பக்கமே தலை வைத்து கூட படுப்பதில்லை.

ஏன் தான் இப்படி மனிசரோ..??

  • கருத்துக்கள உறவுகள்

வாதம் வலுக்கிறது ...... :wub: 
சூடு பிடிக்கிறது ..... :icon_mrgreen:  தொடரட்டும் 

ஏன் இப்படி மனிசர்.

கேள்வி கேட்டவுடன் திரிப்பக்கமே தலை வைத்து கூட படுப்பதில்லை.

ஏன் தான் இப்படி மனிசரோ..??

அண்ணை பொறி வைத்து விட்டு எத்தனை நாளாக காத்திருப்பது

எலியை ஏரியாவிலே காணோம் :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை பொறி வைத்து விட்டு எத்தனை நாளாக காத்திருப்பது

எலியை ஏரியாவிலே காணோம் :icon_idea:

எலி உந்த பொறிப்பக்கம் மட்டுதான் வருதில்லை போல கிடக்குது ...

உடையார் அண்ணையிண்ட குண்டலினி எழுப்பும் திரி பக்கம் எலியைக்கண்டதாக தகவல்  :D  :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எலி நாட்டில இல்லாததால யாழ்ப்பக்கம் வரேல்லை எண்டவுடன சந்தோசப்பட்டுவிட்டியளோ. இந்த எலி எந்தப் பொறிக்குள்ளையும் மாட்டாது  சேவியர் & அக்னியஸ்த்ரா :lol:

அத்துடன் சண்டை போடும் மூட் இன்று இல்லை. :D

அப்போ

உங்களுக்கு மூட் வந்தா....

நாங்கள் என்ன...........??? :o 

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

உங்களுக்கு மூட் வந்தா....

நாங்கள் என்ன...........??? :o 

என் தந்தை சுகவீனம் உற்ற நிலையில் இருப்பதால் எனக்கு எழுதுவதற்கு மூட் இல்லை இந்தத் திரியில். போதுமா விசுகு அண்ணா ???

  • கருத்துக்கள உறவுகள்

என் தந்தை சுகவீனம் உற்ற நிலையில் இருப்பதால் எனக்கு எழுதுவதற்கு மூட் இல்லை இந்தத் திரியில். போதுமா விசுகு அண்ணா ???

அப்பா

நல்ம் பெற வேண்டுகின்றேன்..

அக்கா இன்று போய் நாளை போர்க்கு வாருங்கள்

உங்கள் தந்தை நலம்பெற இறைவனை பிரார்த்திக்குறேன்

நீங்கள் நாட்டில் இல்லை என சந்தேகம் இருந்தது

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தந்தையார் பூரண நலம் பெறவேண்டும், சகோதரி...!!

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தந்தையார் பூரண சுகமடைய இறைவனை பிராத்திக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தந்தையார் பூரண நலம் பெறவேண்டும்

உங்கள் தந்தை நலம்பெற வேண்டும், அக்கா!

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் தந்தையார் பூரண சுகமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.