Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுமந்திரனைக் கேலிசெய்து யாழ்ப்பாணத்தில் உருவப்பொம்மைகள் கட்டிவைப்பு

Featured Replies

sumantiranf656555.jpg

அநாமதேயிகளின் அட்டகாசமே இது என்கிறது இளைஞர் அணி!!
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக் கேலிசெய்து, வாசகங்கள் எழுதப்பட்ட உருவப்பொம்மைகள் யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் கட்டிவைக்கப்பட்டிருந்தன. நேற்றிரவு இளைஞர்கள் பலர் இந்த உருவப்பொம்மைகளை வீதிகளிலும், தமிழரசுக்கட்சி அலுவலகப் பகுதிகளிலும் கட்டிவைத்துள்ளனர்.
 
அந்த உருவப்பொம்மைகளில் எழுதப்பட்டுள்ள வாசகங்களுக்கு கீழே தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி என்று உரிமை கோரப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால யாழ்ப்பணம் வந்து திரும்பிய நிலையில், வடமராட்சி, தென்மராட்சி மற்றும் யாழ்.நகர் பகுதியென பரவலாக இந்த உருவப்பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
 
வடமராட்சியில் கரவெட்டி, மூத்தவிநாயகர் கோவிலடியில் சுமந்திரனினது அலுவலகமென திறக்கப்பட்ட தமிழரசுக்கட்சி அலுவலகம், கைதடியிலுள்ள வடமாகாணசபை வளாகம், யாழ்.நகரில் மார்டின் வீதியினில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையகம் ஆகிய இடங்களிலேயே சுமந்திரனின் உருவப்பொம்மைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
 
இதேவேளை வடமராட்சி, பருத்தித்துறை சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை கூட்டம் ஒன்றை நடத்த சுமந்திரன் திட்டமிட்டிருந்தார் என்றும், இதனையடுத்தே இவ்வாறு உருவப்பொம்மைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தமிழரசுக்கட்சி இளைஞர் அணியின் யாழ்.மாவட்ட தலைவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது "தமிழரசுக் கட்சிக்கே இளைஞர் அணி உள்ளது. கூட்டமைப்பு இளைஞர் அணி என்று குறிப்பிட்டே அந்த சுலோகங்கள் கட்டப்பட்டுள்ளன. இப்படி ஓர் அணி இருப்பது இன்றுவரை எனக்குதெரியாது. - என்றார்.
 
sumantiranf656554.jpg
http://www.malarum.com/article/tam/2015/03/04/8915/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-.html#sthash.MdvjVXzb.dpuf
 
  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்த முறையும் பின் கதவால் தான் பாராளுமன்றம் செல்ல வேணும் போல கிடக்கு....உது புலிகளின் வால்களின் வேலையாத்தான் இருக்கும்...என மனுசன் அறிக்கை விடபோகுது

  • கருத்துக்கள உறவுகள்
அடுத்த முறை என்பது எல்லோருக்கும்  கேள்விகுறியே ஒரு வேளை மூன்றாவது வித்திகுள்ளால் (பேச்சுக்குத்தான் )வந்தாலும்
 
சுமன்திறன் மாதிரியானது ஒன்டு கட்டாயம் வரும் அவர்  இந்திய இலங்கையின் அபிலாசைகளை நிறைவு செய்பவர் ஆகவே இருப்பார் "பொறுமையாக இருக்கணும் ,இந்த முறை சிங்களவன் கட்டாயம் தருவான் ,அரசியல் சாதுரியம் எண்டால் தெரியிமா? என்று பில்டப் விட்டுக்கொண்டு காலம் கடத்தி விடயத்தை ஆறப்போடும் விளையாட்டு நடக்கும் .
இந்த விடயம் சுமந்திரனுக்கு விளங்கினால் சரி முதலில் எங்களை பார்த்து வால்  கீல்  சொல்வதை விட்டு ஆக்கபூர்வமாக தமிழருக்கு கொஞ்சமாவது நன்மை கொண்டுவந்தால் உத்தமம்.
 
இல்லாவிடின் காக்கைவன்னியன்,துரையாப்பா , அமிர் ,கதிர்காமர் ,கருணா போன்றவர்கள் வரிசையில்தான்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

அந்த முன்ன்ணியினர் அவசரத்தில் சரியான பெயரைப் போட மறந்து போயிட்டினமாக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனை பிடிக்கவில்லை எனில் அடுத்த தேர்த்தலில் அவரை தெரிவு செய்யாமல் விடுவது தான்.

சுமந்திரனை பிடிக்கவில்லை எனில் அடுத்த தேர்த்தலில் அவரை தெரிவு செய்யாமல் விடுவது தான்.

நிச்சயமாக அடுத்த தேர்தல் பதில் சொல்லும். பின்கதவால் வரமாட்டார் முன்கதவால் பெரும்பாண்மையுடன் வருவார்.

  • தொடங்கியவர்

article_1425466881-DSCN2790.JPG

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக அடுத்த தேர்தல் பதில் சொல்லும். பின்கதவால் வரமாட்டார் முன்கதவால் பெரும்பாண்மையுடன் வருவார்.

 பகிடி விடுவதட்க்கும் நேரம் என்று  உண்டு பாஸ் ............................

நிச்சயமாக அடுத்த தேர்தல் பதில் சொல்லும். பின்கதவால் வரமாட்டார் முன்கதவால் பெரும்பாண்மையுடன் வருவார்.

உண்மை திரு ஜீவன் சிவா.

 பகிடி விடுவதட்க்கும் நேரம் என்று  உண்டு பாஸ் ............................

தமிழ் மக்கள் தாம் தமது தேசிய சக்திகள் என்று எந்த கட்சியை கருதுகிறார்களோ அந்த கட்சிக்கு முரண்பாடுகள், விரக்திகள், கருத்துவேறுபாறுகளுக்கு அப்பால் அபரிமிதமான ஆதரவை வழங்குவது அவர்களது பல கால  வழக்கம். முன்பு தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, தமிழீழ விடுதலை புலிகள் என என்ற அந்த வரிசையில் தமிழ் தேசிய கூட்டமைப்பை தமது தேசிய விடுதலை சக்தியாக தற்போது கருதுகிறார்கள். அந்த கட்சியில் சுமந்திரன் வாக்கு கேட்பதால் அவருக்கு  வெற்றி நிச்சயம். அந்த நம்பிக்கையில் திரு ஜீவன் சிவா கருத்து சொன்னாரே தவிர சுமந்திரன் உயர் பண்புகள் உள்ள நபர் என்பதால்  கவரப்பட்டு அவர் மீது நம்பிக்கை வைத்து  அவர் சுயேட்சையாகவோ அல்லது அவர் உருவாக்கிய தனி கட்சியலோ நின்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் அல்ல. அப்பிடித்தானே ஜீவன்.

கருணா விடுதலைப் புலிகளின் கிழக்கு  தளபதியாக இருந்த போது ஒட்டு மொத்தமாக தமிழ்மக்களின் அபரிமிதமான மதிப்பை பெற்ற ஒருவராக இருந்தார் என்பதை இங்கு  ஞாபகபடுத்துகிறேன். அதே கருணா புலிகளில் இருந்து வெளியறியபோது அனைத்து தமிழ் மக்களாலும் வெறுக்கபடும் ஒரு நபராக மாறினார்.

புலிகள் இருந்த போது நரிகளாக இருந்தவர்கள் தற்போது புலிகள் வேடம் போடுகின்றார்கள்

இங்கு கருத்து எழுதிய எவரும் சுமந்திரனை விமர்சிக்க தகுதி கிடையாது ,இன்றைக்கு எது மக்களுக்கு தேவையோ அதையே சம்பந்தன் ஐயாவும் ,சுமந்திரனும் செய்கின்றார்கள்.

நேற்று சம்பந்தன் ஐயா திருமலையில் மூதூர் பகுதியில் பல இடங்களுக்கும் சென்று மக்களை சந்தித்தவர் ,அதே நேரம் கஜேந்திரகுமார்( தேர்தல் வருதெல்லொ )காணமல் போனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கதைக்க துவங்கும் போது இங்கு அரசியல் பேசவேண்டாம் என்று மக்களால் தடுக்கப்பட்டார் .

அதே நேரத்தில்திருமலையில் சுமந்திரனை ஆவணப்பட வெளியீட்டுக்கு தலைமை வகிக்க அழைத்துள்ளார்கள் .

எவ்வளவு காலத்திற்கு பிறகு சம்பந்தன் மூதூருக்கு போனவர்? (தேர்தல் வருதல்லோ அதுதான் போயிருக்கார்)

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் போனது இதுக்கு

image.jpg

jpg images

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
சம்மந்தன் ஐயா மூதூருக்கு நேரில் சென்று...........
30 வருடங்களின் பின்பாவது தமிழ் மக்களுக்கு அங்கு என்ன நடந்தது என்று கேட்டு அறிந்துள்ளார்.
மிகவும் பாராட்டுக்கு உரிய திருகோணமலை மக்கள் பிரதிநிதி ! 
  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரத்தில்திருமலையில் சுமந்திரனை ஆவணப்பட வெளியீட்டுக்கு தலைமை வகிக்க அழைத்துள்ளார்கள் .

எமக்கிடையிலான  பிளவுகளும் 

கருத்துவேறுபாடுகளும்  இருக்கும் இந்த நேரத்தில்

அவற்றை முதலில் களையணும்..

இல்லையென்றால் எவராவது புகுந்து சிக்கல்களை பெருப்பித்து குளிர்காயவும்

நாம் மேலும் பிரிவுபடவும் வழி அமைத்துவிடும்..

தலை வணங்குகின்றேன் உங்கள் கருத்திற்கு. (பச்சைப்புள்ளி மிச்சம் இல்லை).

ஏன் யாவரும் எமது ஒற்றுமைதான் வெற்றி என்பதை புரிய மறுக்கிறார்கள்.

எமது தலைவிதி அப்படி. ம்ம்ம்ம்!!!!!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலை வணங்குகின்றேன் உங்கள் கருத்திற்கு. (பச்சைப்புள்ளி மிச்சம் இல்லை).

ஏன் யாவரும் எமது ஒற்றுமைதான் வெற்றி என்பதை புரிய மறுக்கிறார்கள்.

எமது தலைவிதி அப்படி. ம்ம்ம்ம்!!!!!!!!!!!!!

ஐயா

தமிழன் என்றொரு இனமுண்டு

தனியே

அதற்கோர் குணமுண்டு என்பார்கள்..

நான் இதற்காக உழைக்க தொடங்கி ரொம்ப நொந்தவன்

அடிபட்டவன்...

எவருடனும் முட்டுப்படாது எனது இனத்துக்கு ஏதாவது செய்யணும் என்பதே எனது இலக்கு

அதற்காக  சில மாற்றுக்கருத்தாளர்களையும் 

ஏன் எம்மிலுள்ள சிலஅதிதீவிரவாதிகளையும்  கூட அரவணைத்துச்செல்ல முயல்வது அதற்காகத்தான்..

அதனால்தான் சில தேவையற்ற விவாதங்களில் ஒதுங்கிவிடுவதுண்டு

ஆனால் அவை தமிழரின் சுயநிர்ணயப்போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் மட்டும்....

அதேபோல்  பிரான்சிலும் எல்லோரோடும்  தொடர்பிலிருப்பவன்.

நீ என்று சிந்திக்காதே

நாடு என்று சிந்தி...

இதுவே இன்றைய தேவை...

நன்றி  

தலை வணங்குகின்றேன் உங்கள் கருத்திற்கு. (பச்சைப்புள்ளி மிச்சம் இல்லை).

ஏன் யாவரும் எமது ஒற்றுமைதான் வெற்றி என்பதை புரிய மறுக்கிறார்கள்.

எமது தலைவிதி அப்படி. ம்ம்ம்ம்!!!!!!!!!!!!!

அண்ணை வெறும் பச்சை பிள்ளை போலிருக்கு .

வாங்கோ ஒன்றாக இருப்போம் ஒன்றாக சாப்பிடுவோம் ஒற்றுமையே தேவை என்ற படி முதுகில் குத்துபவர்கள் குத்தியவர்கள் தான் அதிகம் .

இப்படி குத்தி குத்தியபடியே மீண்டும் வாங்கோ வாங்கோ என்று கட்டியணைக்க வருவார்கள் குத்தை நல்லா வாங்குங்கோ .

இன்றைக்கு அண்ணையின் நித்திரை  போச்சு...

எத்தனை போத்தல் வெடிக்கப்போகுதோ.....

  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் வெட்டி தட்டத்தை பற்றியா பேசுறீங்கள் ...........???

இல்லை புளட்டுக்கு  வாங்கோ வாங்கோ 
என்று சேர்த்து ...... உள்ளுக்கு வைச்சே போட்டதை பற்றி பேசுறீங்களா ?? 
  • கருத்துக்கள உறவுகள்

சுழிபுரத்தில் வெட்டி தட்டத்தை பற்றியா பேசுறீங்கள் ...........???

இல்லை புளட்டுக்கு  வாங்கோ வாங்கோ 
என்று சேர்த்து ...... உள்ளுக்கு வைச்சே போட்டதை பற்றி பேசுறீங்களா ?? 

உங்களுக்கு இன்றும் நடுக்கம் போகலைப்போல........

தாட்டது என்று வரணும்..

  • கருத்துக்கள உறவுகள்
சிங்கள உணர்வாளர்களுடன் பேசும்போது ....
அப்படிதான் பேசணும்! 
 
சுத்த தமிழில் எழுதினால் அதுக்கே கோபபடுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய எவரும் சுமந்திரனை விமர்சிக்க தகுதி கிடையாது ,இன்றைக்கு எது மக்களுக்கு தேவையோ அதையே சம்பந்தன் ஐயாவும் ,சுமந்திரனும் செய்கின்றார்கள்.

அதைத்தான் நாம் கேட்கிறோம்  என்ன அவர்கள் இதுவரை காலமும் தமிழருக்கு செய்திட்டினம் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.