Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனி ஈழம் சாத்தியமற்றது..!- மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக பிரபாகரன் பார்க்கப்படுகின்றார்: - தர்மலிங்கம் சித்தார்த்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
siththarthan-400-seithy-news.jpg

தர்மலிங்கம் சித்தார்த்தன். ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை குமுதம் சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!.

இன்னமும் முகாம்களில் கணிசமான மக்கள் அடைப்பட்டிருக்கிறார்களா?

யாழ்ப்பாணம்” வலிவடக்கு பகுதியில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் முகாம் அமைத்து மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது போன்ற முகாம்களில் அடைப்பட்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை உத்தேசமாக முப்பதாயிரம் இருக்கும்.

அவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகிறதா?

2009 இறுதிப் போருக்கு பிறகு அவர்களுக்கு அரசு உதவிகள் நிறுத்தப்பட்டுவிட்டன. இவர்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தவர்கள். இப்போது உள்நாட்டில் வேறு தொழில்கள் எதையும் செய்ய முடியாமல் பரிதாபமான முறையில் தான் காலத்தை கழிக்கிறார்கள்.

உங்களது வடக்கு மாகாண அரசு, ஏன் உதவவில்லை?

அவர்களுக்காக ஒரு நிதியம் அமைத்து உதவும் திட்டம் இருக்கிறது ஆனால் இதுவரை இலங்கை அரசு மறைமுகமாக அதற்கு தடைபோட்டு வந்திருக்கிறது. அண்மையில் யாழ்ப்பாணம் வந்த புதிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, “ தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவால் ஜெயித்தேன் என வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். எனவே, புதிய அரசு என்ன செய்யப் போகிறது? என்பதைப் பார்க்க வேண்டும்.

மைதிரிபால அரசு மீது தமிழர்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மகிந்த காலத்தில் ஒவ்வொரு தமிழனும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பில் இருந்தார்கள் இப்போது அந்தப் பயம் இல்லை. தமிழர் பகுதியில் புதிதாக சிங்களவர் குடியேற்றம் இல்லை. தமிழர்களின் மீள் குடியமர்த்தல் பற்றி கதைக்கிறார்கள். ஜெயில்களில் இருப்பவர்களை விடுதலை செய்வது குறித்து பட்டியல் தயாரித்து கொண்டிருக்கின்றார்கள்.

புதிய அரசு அமைந்து, இரண்டு மாதம் ஆகிறது. இவர்களின் நூறு நாள் வேலை திட்டத்தில் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு அரசியல் தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லை.

வடக்கு மாகாண அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

மகிந்த அரசு இருந்தவரை, மக்கள் எதிர்ப்பார்த்த அளவில் செயல்பட முடியவில்லை. இப்போது புதிய அரசு வந்திருக்கிறது. மாகாண அரசின் நடவடிக்கைகளில் நேரடி தலையீடுகளை இலங்கை அரசு தவிர்க்க வேண்டும் கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் அபிவிருத்தி பணிகளை மாகாண அரசின் மூலமாக செய்ய வேண்டும். ஆளுனரின் தலையீட்டை தடுக்க வேண்டும் ஆளுனரின் தலையீட்டை தடுக்க வேண்டும் இதெல்லாம் நடந்தால்தான் மாகாண அரசால் செயல்பட முடியும்.

வாழ்விடங்களுக்குத் திரும்பிய தமிழர்கள் நிம்மதியாக இருக்க முடிகிறதா?

முல்லைத்தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழர்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை (வயல்களை) இராணுவம் பறித்து சிங்களவர்களிடம் கொடுத்திருக்கிறது. அவர்களால் தங்களின் நெல் வயல்களில் வேலை செய்ய முடியாது.

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கொக்குத்திருவாய் என்ற இடத்தில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் பறித்து கொண்டு போவதாக அந்தப் பகுதியினர் என்னிடம் கூறினர். வடக்கு மாகாணம் முழுக்க இப்படி களவு, கொள்ளை அதிகம் இருக்கிறது சமூக ரீதியான பிரச்சினை இருக்கிறது போலீஸ் நடவடிக்கை இல்லை.

மீண்டும் தமிழீழப் போராட்டத்திற்கு வாய்ப்பு இருக்கிறதா?

இந்த தருணத்தில் இன்னொரு ஆயுதப் போராட்டம் உருவாகும் என நான் நம்பவில்லை காரணம். மக்கள் மிகக் களைத்துவிட்டார்கள் மக்களிடமும் முன்னாள் போராளிகள் பலரிடமும் பேசிவிட்டு அவர்களின் மனநிலையை அறிந்து இதைச் சொல்கிறேன்.

ஆனால் தமிழீழம் தான் தீர்வு! என தமிழகத் தலைவர்களான நெடுமாறன் வைகோ போன்றவர்கள் வலியுறுத்துகிறார்களே?

இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நியாயமான தீர்வைக் கொண்டுவரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அழுத்தம் தான் இந்திய அரசை இலங்கை பிரச்சினையில் ஓரளவு செயல்பட வைத்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டால் ஈழக் கோரிக்கை குறைந்துவிடும்.

இலங்கைத் தமிழர்கள், தமிழீழக் கோரிக்கையை கைவிட்டுவிட்டதாகக் கூற முடியுமா?

முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன் ஆனால் தனி ஈழம் சாத்தியமற்றது. என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் அந்த கோரிக்கையை முழுமையாக கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழும் மனநிலைக்கு கொண்டு வரவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பு! அதாவது நாங்களும் இலங்கை நாட்டின் மக்கள் தான் என தமிழ் மக்கள் உணரும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

மீண்டும் ஆயுத போராட்டத்தை தமிழர்கள் ஆரம்பிக்கக்கூடும் என்கின்ற பயத்தில் தான் அதிகாரங்களை பகிர்ந்தளிக்க சிங்கள அரசு தயங்குகிறதா?

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் வரும் என்கின்ற நம்பிக்கை சிங்கள சிங்களத் தலைவர்களுக்கே இப்போது இல்லை. அதேசமயம் சிங்கள மக்களை தங்கள் பக்கத்தில் வைக்க இதை ஒரு அரசியல் உத்தியாக பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் இது எதிர்விளைவுகளை தான் உருவாக்கும். என்பதுகளில் நாங்களாக விரும்பி ஆயுதத்தை எடுக்கவில்லையே சிங்கள அரசுகள் எங்கள் மீது திணித்த இராணுவ அழுத்தங்கள் தான் ஆயுதப் போராட்டங்களுக்கு காரணம் எனவே இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்.

இந்தியாவிடம் என்ன மாதிரியான ஆதரவை எதிர்ப்பார்க்கின்றீர்கள்?

இரண்டு விதமான எதிர்ப்பார்ப்புக்கள் உண்டு மக்களுக்கு வீடுகள் உள்ளிட்ட வாழ்வாதார உதவிகள் இன்னும் கூடுதலாக தேவை!

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நியாயமான அரசியல் தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்

தமிழ் மாகாண கவுன்சிலுக்கு நில அதிகாரம், மத்திய அரசின் நேரடி தலையீடு அற்ற நிர்வாகம் நாங்களே எங்கள் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கான அதிகாரம் எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் அதிகாரம் ஆகியவற்றை பெற்று தர வேண்டும்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விசிட் குறித்து தமிழ் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சுதந்திரத்திற்கு பிறகு யாழ்ப்பாணம் வரும் முதல் இந்தியப்பிரதமர் மோடி தான் வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரனை அவர் சந்தித்துப் பேசுவார் என நினைக்கின்றோம். அது போல இலங்கைத் தமிழ் மக்களையும் சந்தித்துப் பேச வேண்டும் தமிழர்களின் மீள்குடியேற்றம், கைதிகள் விடுதலை ஆகிய தீர்வுகளுக்கு மோடி அழுத்தம் கொடுப்பார் என மக்கள் எதிர்ப்பார்கின்றார்கள்.

தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி இலங்கை பிரதமர் ரணில் பேசியிருக்கின்றாரே?

அவரது பேச்சை ஏற்க முடியாது அதேசமயம் இலங்கைத் தமிழ் மீனவ சமூகம் முப்பது வருடங்களாக அழிவை எதிர்நோக்கிய சமூகம். வறுமை கோட்டுக்கு கீழ் நின்று வாழும் சமூகம். அந்த சமூகம் தங்கள் தொழிலை செய்வதற்கு வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும் இதை தமிழ் நாட்டில் உள்ள அரசியல் தலைமைளும் மீனவர்களும் உணர்ந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தை மூலமாக பிச்சினையைத் தீர்க்க வேண்டும்.

இரு நாட்டு தமிழ் மீனவர்களின் மோதலாக இந்தப் பிரச்சினையை இலங்கை அரசுதான் திசை திருப்புகிறதோ?

இரு தரப்பு தமிழ் மீனவர்களும் கடலில் சந்திக்க வேண்டியிருக்கிறது தொழில் போட்டி இருப்பது இயற்கை எனினும் அதை ஊதி பெருக்க சிங்கள அரசு முயற்சிக்கும் எனில் தமிழர்களும் தமிழர்களும் மோதுவதை சிங்கள அரசு விரும்பும்.

தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பும் சூழல் உள்ளதா?

அவர்களுக்காக வாழ்விட வசதிகள் அங்கு வழங்கப்பட்டால் தான் அது சாத்தியம். அங்கு குடி பெயர்ந்த மக்களுக்கே இன்னும் வாழ்வாதாரம் கொடுக்கவில்லையே. இந்தியாவில் உள்ள அகதிகளின் காணிகள், இலங்கையில் தமிழர்களாலேயே பிடிக்கப்பட்டிருக்கலாம்.

அதை எல்லாம் சரி செய்ய கால அவகாசம் தேவைப்படலாம்.

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களா?

தமிழ் மக்களில் பலர் அவர் இல்லை என்று நம்புகிறார்கள் சிலர் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக அவர் பார்க்கப்படுகின்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=128282&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஈழம் சாத்தியமற்றது..!- மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக பிரபாகரன் பார்க்கப்படுகின்றார்.

இதைச் சொல்லத்தான் இவ்வளவு காலமும் ஆக்களில்லாமல்.. இவர் ஆயுதம் எடுத்துப் போராடி.. ஆக்களை சொந்த மக்களைக் கொன்று தள்ளிட்டு இப்ப திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார். 

போய் வேற ஏதாவது வேலை இருந்தாப் பாருங்க.

மக்களுக்கு தெரியும்.. எது சாத்தியம்.. யார் என்றும்.. தேசிய தலைவர் என்பது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

(ஆனால் தமிழீழம் தான் தீர்வு! என தமிழகத் தலைவர்களான நெடுமாறன் வைகோ போன்றவர்கள் வலியுறுத்துகிறார்களே?

இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நியாயமான தீர்வைக் கொண்டுவரும் முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். கடந்த காலங்களில் தமிழ் மக்களின் அழுத்தம் தான் இந்திய அரசை இலங்கை பிரச்சினையில் ஓரளவு செயல்பட வைத்திருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக சுதந்திரமாக வாழும் நிலை ஏற்பட்டால் ஈழக் கோரிக்கை குறைந்துவிடும்.)

இது

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியம் இல்லையென்பதாக ஞானம் சொன்னவர், சொல்பவர் ஏன் இன்னமும் தன் கட்சியில் 'தமிழ் ஈழம்' என்ற பெயரை கொண்டுள்ளார்? :o:wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியம் இல்லையென்பதாக ஞானம் சொன்னவர், சொல்பவர் ஏன் இன்னமும் தன் கட்சியில் 'தமிழ் ஈழம்' என்ற பெயரை கொண்டுள்ளார்? :o:wub:

தமிழ் ஈழம் என்ற பெயரை எடுத்துவிட்டால் என்னத்தை வைத்து அரசியல் செய்கிறது   :blink:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தியம் இல்லையென்பதாக ஞானம் சொன்னவர், சொல்பவர் ஏன் இன்னமும் தன் கட்சியில் 'தமிழ் ஈழம்' என்ற பெயரை கொண்டுள்ளார்? :o:wub:

நீங்க தான் புரிந்து கொள்ளணும்

தமிழீழம் சாத்தியமற்றது என்று சொல்லும் அதேவாய்தான்

தமிழீழத்தை தனது கடைசி செக்கன்வரை கொண்டு போன பிரபாகரனை மக்கள் மதிக்கிறார்கள் என்றும் சொல்லுது..

அதன்படி தமிழீழம்  என்றும் மதிப்புக்குரியது தான்

இப்ப நாங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியிருக்கு....

எமக்கும் ஒரு காலம் வரும்..

அதுவரை...........

உணர்ச்சி மேவிய பதில்கள் இல்லாமல் மிகவும் நிதானமானவும் பொறுப்பாகவும் பதில்கள் தந்துள்ளாஅர். நன்றி சித்தார்த்தன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்ச்சி மேவிய பதில்கள் இல்லாமல் மிகவும் நிதானமானவும் பொறுப்பாகவும் பதில்கள் தந்துள்ளாஅர். நன்றி சித்தார்த்தன்

இந்த பேட்டியையும் குறை சொல்லுகிற இலங்கை வம்சாவளிகளை விட இத்தகைய தலையங்கம் போட்ட குமுதம் மேல்.

உணர்ச்சி மேவிய பதில்கள் இல்லாமல் மிகவும் நிதானமானவும் பொறுப்பாகவும் பதில்கள் தந்துள்ளாஅர். நன்றி சித்தார்த்தன்

இவருடன் மிக நெருங்கி பழகியவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் .

அரசியலில் இறங்கி முழு ஏமாற்றத்துடன் திரும்பிவந்தேன் .கனடாவில் வியாபாரம் ஒன்றை தொடங்கி கையை நன்கு சுட்டுக்கொண்டேன் .

நான் சொல்ல வருவது என்னவென்றால் -தெரியாத வேலைக்கு போகக்கூடாது அல்லது எல்லோருக்கும் எல்லா அலுவலும் சரிவராது .

லண்டனில்  சித்தருடன் பல கூட்டங்களுக்கு ஒன்றாக சென்றுஇருக்கின்றேன் அவர் எமது ,சர்வதேச அரசியலில் மிக தெளிவானவர். நிதானமாகத்தான் கதைப்பார்.கோபம் வரவே வராது

.

எனக்கு பல தடவைகள் புத்திமதி சொல்லியிருக்கின்றார் அரசியலில் நீரோட்டத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமே ஒழிய இதுதான் முடிவு என்று ஒன்றை எடுக்ககூடாது என்று .அப்படியே அவர் இருந்து தனது தகப்பன் மாதிரி எம் பி யாக வரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிவிட்டார் .இப்போதும் அரசியலிலும் இருக்கின்றார் .

அப்படி அரசியல் செய்ய எமக்கு சரிப்பட்டுவராது .சரி பிழை கதைக்காமல்   ஓடுகின்ற ஆற்றில் ஓட முடியாது .கொலை கொள்ளை நடந்தாலும் இதுவும் தாண்டி போகும் என்று அரசியல் செய்வதை விட அரசியல் செய்யாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு .ஒருவரை கொல்லவும் பின் அவருக்கு சிலை வைக்கவும் எமக்கு என்றும் முடியாது .

இன்று நாட்டில் அரசியல் செய்பவர்கள் அனேகர் அவரது அலைவரிசையில் அரசியல் செய்தவர்கள் தான் .

சாத்தியம் இல்லையென்பதாக ஞானம் சொன்னவர், சொல்பவர் ஏன் இன்னமும் தன் கட்சியில் 'தமிழ் ஈழம்' என்ற பெயரை கொண்டுள்ளார்? :o:wub:

முதலில் பேட்டியை வாசியுங்கள் அதில் அவரது கட்சி என்ன என்று தெளிவாக இருக்கு .

நீங்க தான் புரிந்து கொள்ளணும்

தமிழீழம் சாத்தியமற்றது என்று சொல்லும் அதேவாய்தான்

தமிழீழத்தை தனது கடைசி செக்கன்வரை கொண்டு போன பிரபாகரனை மக்கள் மதிக்கிறார்கள் என்றும் சொல்லுது..

அதன்படி தமிழீழம்  என்றும் மதிப்புக்குரியது தான்

இப்ப நாங்க கொஞ்சம் அடக்கி வாசிக்கவேண்டியிருக்கு....

எமக்கும் ஒரு காலம் வரும்..

அதுவரை...........

இனியாவது கொஞ்சம்  அரசியல் படியுங்கண்ணை.எவ்வளவு காலத்திற்கு இப்படியே மொக்கை போட போகின்றீர்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டு இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன்னர் விரட்டியடிக்கப்பட்ட மக்களின் இடங்கள் மீண்டும் கிடைப்பதே எதிர்காலத்திலும் சாத்தியம் இல்லைப்போல் தெரிகின்றது. எல்லாத்தரப்பினரும் எல்லாப்பக்கத்தாலும் தொடர்ந்து பொதுமக்களை சுரண்டுகின்றார்கள். நாளாந்தம் அடுத்தவேளை பசிபோக்க போராடும் மக்கள் ஒருபுறம், வாய்க்கு ருசியாய் புசித்துக்கொண்டு கதைவிடும் கூட்டம் இன்னொரு புறம். 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பேட்டியை வாசியுங்கள் அதில் அவரது கட்சி என்ன என்று தெளிவாக இருக்கு .

இனியாவது கொஞ்சம் அரசியல் படியுங்கண்ணை.எவ்வளவு காலத்திற்கு இப்படியே மொக்கை போட போகின்றீர்கள் .

Plote க்கும் இவருக்கும் தொடர்பில்லையோ?

ஈழம் என்பது  இப்ப  முப்பது வருடம் வந்த சொல் அல்ல ஆகவே ஈழம் என்னும்  பெயருக்கு  எவரும் உரிமை  கோர  கூடாது  ஆக்கும் ...

சித்தார்த்தான்  தெளிவா இருக்கிறார் என்பதில் ஒரு ஐயம் இல்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இவருடன் மிக நெருங்கி பழகியவன் என்ற ரீதியில் சொல்லுகின்றேன் .

அரசியலில் இறங்கி முழு ஏமாற்றத்துடன் திரும்பிவந்தேன் .கனடாவில் வியாபாரம் ஒன்றை தொடங்கி கையை நன்கு சுட்டுக்கொண்டேன் .

நான் சொல்ல வருவது என்னவென்றால் -தெரியாத வேலைக்கு போகக்கூடாது அல்லது எல்லோருக்கும் எல்லா அலுவலும் சரிவராது .

லண்டனில்  சித்தருடன் பல கூட்டங்களுக்கு ஒன்றாக சென்றுஇருக்கின்றேன் அவர் எமது ,சர்வதேச அரசியலில் மிக தெளிவானவர். நிதானமாகத்தான் கதைப்பார்.கோபம் வரவே வராது

.

எனக்கு பல தடவைகள் புத்திமதி சொல்லியிருக்கின்றார் அரசியலில் நீரோட்டத்தில் நாம் ஓடிக்கொண்டே இருக்கவேண்டுமே ஒழிய இதுதான் முடிவு என்று ஒன்றை எடுக்ககூடாது என்று .அப்படியே அவர் இருந்து தனது தகப்பன் மாதிரி எம் பி யாக வரவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிவிட்டார் .இப்போதும் அரசியலிலும் இருக்கின்றார் .

அப்படி அரசியல் செய்ய எமக்கு சரிப்பட்டுவராது .சரி பிழை கதைக்காமல்   ஓடுகின்ற ஆற்றில் ஓட முடியாது .கொலை கொள்ளை நடந்தாலும் இதுவும் தாண்டி போகும் என்று அரசியல் செய்வதை விட அரசியல் செய்யாமல் இருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு .ஒருவரை கொல்லவும் பின் அவருக்கு சிலை வைக்கவும் எமக்கு என்றும் முடியாது .

இன்று நாட்டில் அரசியல் செய்பவர்கள் அனேகர் அவரது அலைவரிசையில் அரசியல் செய்தவர்கள் தான் .

விரண்டாவதமாக பேசவில்லை ....
உண்மையாக மனதில் வரும் கேள்வி இது.
 
இந்த அரசியலால் அவர் எம்பி ஆனார் ...
மக்கள் என்ன ஆனார் ??
 
தெளிவா இதைவிட 2000 ஆண்டுக்கு முன்பே வள்ளுவர் எழுதிவைத்திருக்கிறார்.
நாட்டை தெளிவுபடுத்த முடியாவிட்டால்.
தெளிவா பேசி என்ன பலன்  ???
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் பேட்டியை வாசியுங்கள் அதில் அவரது கட்சி என்ன என்று தெளிவாக இருக்கு .

இவர் புளாட் குறூப் (PLOTE) தலீவர் இல்லையா? :o:(

  • கருத்துக்கள உறவுகள்

இவர் புளாட் குறூப் (PLOTE) தலீவர் இல்லையா? :o:(

Tamils are Enemies   என்று கட்சியில் சேர்ந்தவர்களுக்கு வகுபெடுத்து.
தமிழர்களை போட்டுத்தள்ள கற்று கொடுத்துவிட்டார்கள்.
அதனால் கட்சியில் இருந்த யாருக்கும் கட்சியின் பெயரில் என்ன இருக்கு என்று இதுவரைக்கும் தெரியாது.
ஏதும் கொள்கை இலட்சியம் வேண்டி போகிறவனுக்குதான்.
என்ன கட்சி என்பது முக்கியம். 
  • கருத்துக்கள உறவுகள்

பாவங்கள் சிலருக்கு இப்பதான் எது சாத்தியமில்லை என்ற தெளிவு வந்திருக்குதாம். அதில நிதானம் வேற.. வவுனியாவில் வதை முகாம் வைச்சு.. தமிழீழத்தை உருவாக்கி எல்லை காத்த சொந்த மக்களை எதிரியோடு நின்று சுட்டுத்தள்ளேக்க.. அவருக்கு கோபமே இல்லையாம்.. நிதானமா தான் சுட்டுத்தள்ளினவராம். உண்மையைச் சொன்னால் உணர்ச்சி அரசியல்... என்று அல்லது தேசிய அரசியல்... தாங்கள் அதுக்கு வெளில என்று நல்லா காலத்துக்கு ஏற்ப வேசம் போடுவார்கள் நம்மவர்கள். கேடு கெட்ட கொள்கைகள்.. இதனால் இவை அடைந்தது...?! அடுத்தவன் உருவாக்கத்துக்குள் அடைக்கல அரசியல். இதைவிட... எதுவும் இவைக்கு சாத்தியமில்லை.  :lol:  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா: தனிநாடு சாத்தியம்..

சித்தார்த்தன்: ஆமாம்.. ஆமாம்.. நாம் போராடுவோம்..

இந்தியா: இடையில் ஒருதரம் மாலைதீவுக்கும்..

சித்தார்த்தன்: ஆமாம்.. ஆமாம்.. இதோ போகிறோம்..

இந்தியா: இனிமேல் தனிநாடு எல்லாம் சாத்தியமில்லை.

சித்தார்த்தன்: ஆமாம்.. ஆமாம்.. சாத்தியமில்லை..

இந்தியா (சில ஆண்டுகளுக்குப் பிறகு): தனி வடக்கு ஈழம் சாத்தியம்.

சித்தார்த்தன்: ஆமாம்.. ஆமாம். சாத்தியம்..

(இதுக்குப் பெயர் அரசியல் இல்லை.. :D இப்படி நடந்து கொள்பவர்கள் எதையும் சாதித்ததாக சரித்திரமும் இல்லை.. )

Edited by இசைக்கலைஞன்

ம்ம்ம்

இதில கவனிக்கவேண்டிய முக்கியமான விடயம்

இந்த அரசியலை எங்களையும் படிக்கச்சொல்லி  அவரது வாரிசு இங்க சிபாரிசு செய்கிறார்.... :(

இந்த அரசியலை வேண்டியா

50 ஆயிரம் பேர் சாகும் போதும்  இலட்சியத்தை மட்டும் சொல்லிச்சென்றார்கள்....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஆயிரக்கணக்கான மக்களைக் காவுகொடுக்கும் திட்டம் சாத்தியமில்லைத் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு தாங்கள் பலி கொடுத்தது.. பலி எடுத்தது.. காட்டிக்கொடுத்தது.. எதுவும் ஞாபகத்தில இல்லை. 

தாங்கள்.. இல்லாத இடத்தில் தனி நாடு பிடிக்கப் போய்.. அங்கின இப்பவும் ஜெயில் வழிய தோழர்களை உள்ள அடைச்சிட்டு.. இவை உல்லாசம் அனுபவிக்கிறதும் ஞாபகத்தில இல்லை.

இவை தான்.. பாக்குநீரிணையில்.. மீன்பிடிப்படகில் எவ் எம் மைக்கை வைச்சுக் கொண்டு இந்தா.. இந்த தைப்பொங்கலுக்கு தமிழீழம் மலருது.. என்றிட்டு.. தாங்கள் மலர்களோடு நாடு நாடா அகதின்னு போய் செற்றிலாகிட்டினம். எனி தமிழீழம் இவைக்கு என்னத்துக்கு. அவைட பிள்ளைக்குட்டி கொலிடே போக எத்தனை நாடிருக்குது. 

உந்தப் புளொட் கும்பல் தான் சர்வதேச அளவில் போதைவஸ்துக் கடத்தி.. வியாபாரம் செய்திட்டு.. புடிபட்டதும்..புலிகளை சாட்டிட்டு.. தாங்களும் அழிஞ்சு... புலிகளின் பெயரைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினதுகள்.

அதுகளுக்கு தமிழீழம் எப்பவும் தேவைப்படல்ல. எனியும் தேவைப்படாது. தேவைப்பட்டால் தானே சாத்தியப்பட செயற்பட முடியும்.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

siththarthan-400-seithy-news.jpg

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக ஈழத்தமிழர்கள் நம்புகிறார்களா?

தமிழ் மக்களில் பலர் அவர் இல்லை என்று நம்புகிறார்கள் சிலர் இருப்பதாக கூறுகின்றனர். எனினும் மக்கள் மத்தியில் மதிப்பு மிக்க தலைவராக அவர் பார்க்கப்படுகின்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=128282&category=TamilNews&language=tamil

தலைவரைப் பற்றிய மதிப்பை சக தோழர்களிடமும் சொல்லுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.