Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி! - நாளை கொழும்பில் கூட்டம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
anandasangari-200-news.jpg

தமிழ் பேசும் மக்களின் கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரியின் தலைமையில் நாளை கொழும்பில் ஒன்று கூடுகின்றனர். கொழும்பில் உள்ள கூட்டணியின் அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது என்று அக்கட்சியின் நிர்வாகச் செயலாளர் இரா.சங்கையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

   

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;சகலதமிழ் பேசும் மக்களையும் ஒன்றிணைத்துநம் கோரிக்கைகளைமுன் வைப்பதன் மூலமே எமது மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்வதோடு நீண்டகாலமாக புரையோடிப் போயிருக்கும் எமது இனப் பிரச்சினைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வினையும் பெற்றுக் கொள்ளமுடியும்.

 

சமீபகாலமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் ஒருவிசனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில தலைவர்களின் உருவப் பொம்மைகள் எரித்துக் கொள்ளும் அளவிற்கு நிலைமை மிக படுமோசமாகப்போய்க் கொண்டிருக்கின்றது. இதை மிகவும் தீவிரமாக அவதானித்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் , பாரதப்பிரதமர் மோடி ஆகியோர் சமீபத்தில் இலங்கை வந்தபோது கூட்டமைப்பின் தலைவர்களிடம் ஒற்றுமையாக செயற்படுமாறு,அறிவுரை கூறியுள்ளனர். இருந்தும் அவர்களின் செயற்பாடுகளில் எதுவிதமாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

 

அதுமட்டுமல்லகடந்தஐந்துஆண்டுகாலமாகஎமதுகட்சியின் செயலாளர் நாயகம் வீஆனந்தசங்கரி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக தன்னாலான அனைத்து ஒத்துழைப்புகளையும், முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தார். ஆனால் எவரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை. மாறாக தங்களுக்குள்ளேயே முரண்பட்டு கொண்டிருக்கின்றார்கள். இரு தடவைகள் தன்னுடைய பிரதமர் பதவியைப் பறித்த திருமதி,சந்திரிக்கா அம்மையாரோடு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, அதுவும் முரண்பட்ட வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்திருந்தும், ஒருகாலத்தில் ஒருவருக்கொருவர் அரசியலில் வைரம் பாய்ந்த எதிரிகளாக செயற்பட்டும் ,ஏதோ ஒருகாரணத்திற்காக தங்களுக்குள் ஒற்றுமையாக செயற்பட முடியுமானால், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத் தருவதற்காக ஒருகாலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஒன்று சேர்ந்து நண்பர்களாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயாவும்,ஆனந்தசங்கரி ஐயாவும் மீண்டும் அதேநோக்கத்திற்காக் ஏன் ஒற்றுமையாக செயற்படமுடியாது?இது மட்டும் மக்களுக்குபுரியாதபுதிராக இருக்கின்றது.

 

எனவேதான்,எந்தநோக்கத்துடன் வடக்கு, கிழக்கு ,மற்றும் மலையகம் சார்ந்த முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து தந்தை செல்வாவினால் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அடைய உறுதியுடன் செயற்பட தீர்மானித்துள்ளது. அனைத்து தமிழ்பேசும் மக்களின் கட்சிகளும் சரி,விடுதலை இயக்கங்களும் சரி, சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு ஒருநிரந்தரதீர்வை பெற்றுத்தரவே தம் தம் வழியில் போராடிவந்துள்ளன. சிலநேரங்களில் நெருக்குதல்கள், நிர்ப்பந்தங்கள், உயிராபத்துகள் மற்றும் ஒரு சில அமைப்புகளின் தாங்கள் மட்டும்தான், என்ற ஆணவப்போக்குகளின் செயற்பாடுகளினால், தவிர்க்க முடியாத சிலமுடிவுகள் எடுக்கத் தள்ளப்பட்டனர்.

 

எது எப்படி இருப்பினும் அத்தனைபேருமேஎம் மக்களின் எதிர் காலநலன்களுக்காகபாடுபட்டவர்கள்தான். யாரும் யாரையும் ஒதுக்கிவைக்கமுடியாது. எவரும் எவருக்கும் உயர்ந்தவர்களும் இல்லை தாழ்ந்தவர்களும் இல்லை. இந்தகொள்கையை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தமிழ் பேசும் மக்களின் கட்சிகளையும், அமைப்புக் களையும் அழைத்துஓரணியில் ஓன்றுசேர்ந்து, செயற் படும் நோக்கத்தோடு எமதுகட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் எதிர்வரும்புதன் கிழமை,காலை 10.00 மணியளவில் எமது கொழும்பு அலுவலகத்தில் ஒருகலந்துரையாடலை நடத்த தீர்மானித் துள்ளோம். தமிழ் பேசும் கட்சிகளும், அமைப்புகளும் அதில் கலந்துகொண்டு தமது கருத்துக்களைக் கூறி,ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நிரந்தர தீர்வினைப் பெறுவதற்கு ஒரணியாக நின்றுசெயற்பட அழைக்கின்றோம்.

 

http://seithy.com/breifNews.php?newsID=128434&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
எனவேதான்,எந்தநோக்கத்துடன் வடக்கு, கிழக்கு ,மற்றும் மலையகம் சார்ந்த முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து தந்தை செல்வாவினால் தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை அடைய உறுதியுடன் செயற்பட தீர்மானித்துள்ளது
மீண்டும் தமிழீழம் கேட்கப்போறார் போல....
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் தமிழீழம் கேட்கப்போறார் போல....

 

மீண்டும் கடிதம் எழுதாமல் இருந்தால்   போதும்...

  • கருத்துக்கள உறவுகள்

சங்கு அரி, சங்கு ஐயா - பெயரிலேயே சங்கூதீடாங்களே ஐயா!

இந்த டீ வடை சமபந்திக்கு பிளேன் டீ வாங்க காசில்லாதவந்த்ஹான் போவான் :)

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் தான் தன்னை தமிழ் மக்களின் முன்னால் நிறுத்துவம் என்று பார்க்கிறார். மக்களோ.. விரட்டி அடித்தப்படி. 

 

இவர் எனி கூட்டணி அமைச்சு.. சிங்கள மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டால்.. கூடின வாக்கு விழக்கூடும். தமிழ் மக்களிடம் எனி இவரின் பருப்பு வேகாது.  :icon_idea:  :)

  • கருத்துக்கள உறவுகள்

இவரும் தான் தன்னை தமிழ் மக்களின் முன்னால் நிறுத்துவம் என்று பார்க்கிறார். மக்களோ.. விரட்டி அடித்தப்படி. 

 

இவர் எனி கூட்டணி அமைச்சு.. சிங்கள மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டால்.. கூடின வாக்கு விழக்கூடும். தமிழ் மக்களிடம் எனி இவரின் பருப்பு வேகாது.  :icon_idea:  :)

 

 

இதில  பெரிய பகிடி என்னவென்றால்

கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லையாம்

அதனால தான் தாங்க  ஒற்றுமையை ஆரம்பிக்கவேண்டி இருக்காம்

அதை இவர் சொல்கிறார்.............. :(  :( 

தமிழரின் தலைவிதி

இதையெல்லாம் கேட்கவேண்டியிருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன்ஸ் முன்னணி அநந்தி சிவாஜி போன்றோரையும் இணைத்துக்கொண்டால் நல்லது!

கஜேந்திரன்ஸ் முன்னணி அநந்தி சிவாஜி போன்றோரையும் இணைத்துக்கொண்டால் நல்லது!

புலம் பெயர்ந்து கொடி பிடிப்பவர்களையும் சேர்த்தால் இன்னும் நல்லது . :o

  • கருத்துக்கள உறவுகள்

நோ இத அனுமதிக்க முடியாது. ஒரு சர்கசுக்கு ஒரு கோமாளிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து கொடி பிடிக்காத ஆட்கள் ஒரு கட்சி தொடங்க ஏலாதோ?? பிறகு அதிலை இருந்து ஒரு லிங்கை சம்ப/ சுமந் கூட்டமைப்புடன்   தொடுத்து விடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து கொடி பிடிக்காத ஆட்கள் ஒரு கட்சி தொடங்க ஏலாதோ?? பிறகு அதிலை இருந்து ஒரு லிங்கை சம்ப/ சுமந் கூட்டமைப்புடன்   தொடுத்து விடலாம்.

 

 

முதலில் இவர்களை தாயகத்திலுள்ள சனம்

புலம் பெயர்ந்தவர்களிடம் கை ஏந்தாத நிலையை உருவாக்கச்சொல்லுங்கள்

 

 

மக்கள் மீதும் அவர்களது வாழ்வின் மீதும் அக்கறையுள்ளவர்கள் அதைத்தான் இன்று செய்யணும்.

அது தான் ஆகக்குறைந்த மக்கள்  சேவை இன்று.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொறின் சிட்டிசன் - வேணுமெண்டா இங்க அரசியல் செய்யலாம். தாயக அரசியலை அங்கிருப்பவர்கள்செய்வார்கள்.

ராஜவன்னியன் ஸ்டைலில் சொல்வதானால் "யாருமே இல்லாத கடையில் ரீ ஆத்துறார்.
 
நோர்வேயில் படித்தார் (?)  கனடாவில் இருந்தார் இப்ப இலங்கையில் இருந்து சொல்கிறார். பரவாயில்லை ஏதோ இலங்கையிலிருந்தாவது புலம்புகிறார் என்று நினைக்க வேண்டியதுதான்.

Edited by ஜீவன் சிவா

சங்கரியின் மைண்ட் வாய்ஸ்: "சத்தியமா நானும் நல்ல அரசியல்வாதிதண்டா, சொன்னால் நம்புங்காடா டேய்."

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொறின் சிட்டிசன் - வேணுமெண்டா இங்க அரசியல் செய்யலாம். தாயக அரசியலை அங்கிருப்பவர்கள்செய்வார்கள்.

பொரினில் சிட்டிசன் இல்லாத ஆட்கள் என்ன செய்வது.
உயிரை பணயம் வைப்பதா ?? 
 
நல்ல வேளை நீங்கள் கொஞ்சகாலம் முந்தி பிறந்திருந்தால் ....
சேகுவரா 
அன்னை தெரசா 
போன்றவர்களுக்கு எதிராக கொடி பிடிக்க ஒரு கூட்டம் கூடி இருப்பீர்கள். 
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை கதையோட கதையா உங்களை சே, தெரேசா ரேஞ்சுக்கு உயர்த்தி போட்டியள்.

சே கியூபாவில் அமைச்சர் பதவியை உதறிவிட்டு பொலியாவில் போய் கொள்கைக்காக செத்தவன். ஆபிரிக்கா காடுகளில் கூடப் போய் போராடியுள்ளான்.

தெரேசாவும் அப்படியே.

வக்கணையா வெளிநாட்டில் இருந்தபடி ஊரில் நடக்கும் அரசியலை அப்படி செய், இப்படி செய் என்று சாய்மனை கதிரை அரசியல் செய்தவர்கள் இல்லை.

வேணுமெண்டால் ஊரில் போய் நிண்டு ( அமெரிக்கா பாஸ்போர்டை சுழட்டி எறிஞ்சுபோட்டு) அரசியல் செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வக்கணையா வெளிநாட்டில் இருந்தபடி ஊரில் நடக்கும் அரசியலை அப்படி செய், இப்படி செய் என்று சாய்மனை கதிரை அரசியல் செய்தவர்கள் இல்லை.

வேணுமெண்டால் ஊரில் போய் நிண்டு ( அமெரிக்கா பாஸ்போர்டை சுழட்டி எறிஞ்சுபோட்டு) அரசியல் செய்யுங்கோ.

 

உங்களை மாதிரி எண்டு சொல்ல வாறீங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே நூணா ஆசைஆசையா கேட்டும் என்னால் முடியாது என்ரு மறுத்துவிட்டேனே ( மேலே வாசிக்கவும், நுனிப்புல் மேயாமல்).

நான் செய்வது சாய்மனை கதிரை அரசியல்வாதிகள் மீதான விமர்சனம்.

நீங்கள் செய்வதுதான் சாய்மனைக்கதிரை அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பொறின் சிட்டிசன் - வேணுமெண்டா இங்க அரசியல் செய்யலாம். தாயக அரசியலை அங்கிருப்பவர்கள்செய்வார்கள்.

 

வேணுமெண்டால் ஊரில் போய் நிண்டு ( அமெரிக்கா பாஸ்போர்டை சுழட்டி எறிஞ்சுபோட்டு) அரசியல் செய்யுங்கோ.

முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது ......
நான் அங்குபோனால் ....
வேண்டுமானால் போய்  அமெரிக்காவில் செய்யுங்கள்...
அங்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியும் என்பீர்களே ?  

வக்கணையா வெளிநாட்டில் இருந்தபடி ஊரில் நடக்கும் அரசியலை அப்படி செய், இப்படி செய் என்று சாய்மனை கதிரை அரசியல் செய்தவர்கள் இல்லை.

வேணுமெண்டால் ஊரில் போய் நிண்டு ( அமெரிக்கா பாஸ்போர்டை சுழட்டி எறிஞ்சுபோட்டு) அரசியல் செய்யுங்கோ.

 

மருது அவருக்கு பிடிக்காத கருத்தை நீங்கள் எழுதுவதால் ஊருக்கு போய் அமெரிக்க பாஸ்போர்டை சுழட்டி எறிய சொல்லுறார். அவருக்கு பிடித்தபடி "சம்பந்தாய நமக, சுமந்திரனய நமக" , என்று கருத்து எழுதினால் அமெரிக்க பாஸ்போர்டுடன் ஊரில் பந்தா காட்டி அரசியல் கருத்து எழுதினாலும் கண்டுக்கமாட்டார் இந்த கோசான். இன்னும் ஊக்கமும் கொடுப்பார்.  அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருப்ப்பது உங்கள் திறமை என்றும் உங்களை அறிவு கொழுந்து என்று பாராட்டுவார்.

 

கஜேந்திரன்ஸ் முன்னணி அநந்தி சிவாஜி போன்றோரையும் இணைத்துக்கொண்டால் நல்லது!

 

எப்ப பார்த்தாலும் எந்த தலையங்கம் என்றாலும் அங்கங்கையெல்லாம் தேவையில்லாமல்  கஜேந்திரன்,  அனந்தி என்று   இழுக்கிறீங்க. ஏதாவது தனிப்பட்ட கடன்  பிரச்சனையா   வாலி சார்

 

 

 

Edited by trinco

எப்ப பார்த்தாலும் எந்த தலையங்கம் என்றாலும் அங்கங்கையெல்லாம் தேவையில்லாமல்  கஜேந்திரன்,  அனந்தி என்று   இழுக்கிறீங்க. ஏதாவது தனிப்பட்ட கடன்  பிரச்சனையா  வாலு சார் ஓ sorry  வாலி சார்

கஜேந்திரன்ஸ் முன்னணி ஒரு களிவுகெட்ட முன்னணி அண்ணை.....

அதில ஒருதர் அப்பாண்ட வாலை பிடிச்சு வந்தவர்....

மற்றர் சொல்லத் தேவையயில்லை....இடம் கிடைச்சா குவாக் குவாக் எண்டு கத்துவார்....

2006 தொடக்கம் 2010 வரை கட்டைக்கழுத்து கஜேந்திரன் எங்க இருந்தவர்......

அவருடைய வீர விளையாட்டுகள் கனக்க இருக்கு....

அவர் பற்றி ஒரு திரி எரிப்பதாக இருக்குறேன்...

அங்கே அழகாக சொல்கிறேன் ...

கூட்டமைப்பு சரியோ பிழையோ எண்டு கதைக்குறது தான் வேலை, தங்கட வேலையை பார்பதில்லை

ஏலும் எண்டா எலெக்சனில் வேல்லட்டும் பார்க்கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

எப்ப பார்த்தாலும் எந்த தலையங்கம் என்றாலும் அங்கங்கையெல்லாம் தேவையில்லாமல்  கஜேந்திரன்,  அனந்தி என்று   இழுக்கிறீங்க. ஏதாவது தனிப்பட்ட கடன்  பிரச்சனையா   வாலி சார்

 

அப்படி ஒன்றுமில்ல. வாலியர் உட்பட சிலர் சிங்களப் பெருந்தேசிய பெளத்த நீரோட்டத்தில் இரண்டறக் கலந்த விசுவாசத்தை காட்டி வருகிறார்கள். அவ்வளவே..!  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

பொறின் பாஸ்போர்டை தூக்கி எறிஞ்சுட்டு ஊரவனாக அங்கு போய் அரசியல் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

இந்த ரெண்டு தோணில நிக்கிறவிளையாட்டுத்தான் வேண்டாம் என்கிறேன்.

நான் செத்தாலும் ஊரில் அரசியல் செய்யப்போவதில்லை -

ரிங்கோ,

சபேசன் மீது இவ்வளவு பொறாமை கூடாது. அவர் இலங்கையில் அரசியலா செய்யுறார்?

மனுசன் வாழ்க்கையை சூப்பரா அனுபவிக்குது.

தும்படிக்கிற கடுப்பில சும்மா கண்டமேனிக்கு கருத்தெழுதக்கூடாது :)

மருது,

பொறின் பாஸ்போர்டை தூக்கி எறிஞ்சுட்டு ஊரவனாக அங்கு போய் அரசியல் செய்யுங்கள் என்றுதான் சொல்கிறேன்.

இந்த ரெண்டு தோணில நிக்கிறவிளையாட்டுத்தான் வேண்டாம் என்கிறேன்.

நான் செத்தாலும் ஊரில் அரசியல் செய்யப்போவதில்லை -

ரிங்கோ,

சபேசன் மீது இவ்வளவு பொறாமை கூடாது. அவர் இலங்கையில் அரசியலா செய்யுறார்?

மனுசன் வாழ்க்கையை சூப்பரா அனுபவிக்குது.

தும்படிக்கிற கடுப்பில சும்மா கண்டமேனிக்கு கருத்தெழுதக்கூடாது :)

எங்க இருந்து அரசியல் செய்வது என்பது முக்கியம் அல்ல . புலம் பெயர்ந்த மக்கள் இல்லையென்றால் ஈழத்தில் எங்களுடைய மக்களின் அன்றாட வாழ்க்கையே கேள்வி குறி ஆகி இருக்கும் . முடிந்தளவு உதவிகளை இப்பவும் செய்த வண்ணம் உள்ளார்கள் .
 
அரசியல் வாதிகள் தப்பான பாதையில் போகும் போது அதனை விமர்சிக்கும் உரிமை எங்களுக்கு உண்டு . அதனை விட்டிட்டு அங்க போய் தான் அரசியல் செய்யோணும் என்று இல்லை . இது மிரண்ட வாத கதை . வாய்சொல் வீரர்கள் சொல்லும் கதை . 
 
சம்பந்தனோ சுமந்திரனோ தங்கள் சொந்த வீட்டு பிரச்சனைக்கு தீர்வு எடுக்க இப்படி நடந்தால் எமக்கு ஒன்றும் இல்லை ஆனால் அவர்கள் செய்யும் கோமாளிதனம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வாழ்வு விடயத்தில் .
ஆயிரமாயிரம் போராளிகள் மக்களின் உயிர் தியாகத்தில் குளிர் காய முடியாது . இது தான் எங்கள் எல்லோரதும் ஆதங்கம் . விரண்டாவாதம் கதைக்க வரவில்லை . தந்தை செல்வா கண்ட அனுபவத்தை மற்றும் அவரின் வேண்டுதலை தேசிய தலைவர் அவர்கள் மிக சிறப்பாக வழிநடத்தி இன்று உலக வெளியில் தமிழ் மக்களின் நியாயமான் உரிமையை வெளிக்கொணர்ந்துள்ளார் . இனி வரும் சமுதாயமும் அரசியல் வாதிகளும் அதனை உணர்ந்து முன்னேற வேண்டும் . 
 
இனியும் சிங்களவனிடம் பிச்சை எடுக்க கூடாது . கடந்த அனுபவம் போதும் . 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.