Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பகீரதி கொலை முயற்சியிலிருந்து காயங்களுடன் உயிர்தப்பினார்

Featured Replies

கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015) கொலை முயற்சியொன்றிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
 
பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள்  விசாரணை செய்வதற்கும் அனுமதி  வழங்கப்பட்டருந்தது.
 
இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும்  அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
 
அதனையடுத்து பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான  அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது. மேலும்  பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார்.
 
இந்நிலையில் முல்லைதீவு கண்டாவளையில் தனது குடும்பத்தவர்களுடன் தங்கியிருந்த பகீரதி அருகாகவுள்ள கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார். அவ்வேளையில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவர் அவரை கொலை செய்யும் முயற்சியாக மோதி தள்ளியுள்ளனர். தாக்குதலாளிகள் தப்பித்து சென்றிருந்ததால் அவர்களை அடையாளம் காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார். தூக்கி வீசப்பட்ட அவர் அபயக்குரல் எழுப்ப அயலவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
 
முன்னதாக தமது வீட்டை சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் வேவுபார்ப்பதில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் குடும்பத்தவர்கள் காவல்நிலையத்திற்கு ஒப்பமிட சென்று திரும்பியவேளையும் அச்சுறுத்தப்பட்டு பின்தொடரப்பட்டதாக தெரிவித்தனர்.
 
இதேவேளை, 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பகீரதி 2005ஆம்  ஆண்டில் பிரான்ஸ் சென்று திருமணம் முடித்திருந்தார்.
 
விடுமுறையைக் களிப்பதற்கு தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று வன்னியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாதகாலம் தங்கி மீண்டும்  பிரான்ஸ் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
 
ஒருபுறம் நீதியை பேணுவதாக காட்டிக்கொண்டு மறுபுறம் வடிகட்டல்களை அரச படைகள் முன்னெடுத்துவருவதன் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகின்றது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வெளிப்படையான எதிரி. மைத்திரி+ரணில்+சந்திரிக்கா.. கொடுமையான மறைமுக எதிரிங்க. அவர்களை ஏன் தமிழர்கள் நம்பினமோ..?! கடந்த காலங்களை மறந்துவிட்டார்களா..??!! :icon_idea:  :o

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த வெளிப்படையான எதிரி. மைத்திரி+ரணில்+சந்திரிக்கா.. கொடுமையான மறைமுக எதிரிங்க. அவர்களை ஏன் தமிழர்கள் நம்பினமோ..?! கடந்த காலங்களை மறந்துவிட்டார்களா..??!! :icon_idea::o

மக்கள் ததேகூ ஏதாவது நல்லது செய்யும் என நம்புகிறார்கள்.. அடுத்த தேர்தலிலும் நம்புவார்கள்.. ஆனால் புறச் சக்திகளுக்கு மண்டையை ஆட்டுவதுதான் ராஜதந்திரம் என்பதில் கூட்டமைப்பின் தலைமைகளுக்கு அப்படி ஒரு நம்பிக்கை.. :o:D

நம்ப நட நம்பி நடவாதே என்ற வாசகம் எனது அப்பாவின் அச்சகத்தில் சிறுவயதில் பார்த்ததில் இருந்து பின்பற்றி வருகிறேன்

செய்தி உறுதிப்படுத்தப்பட்ட  தகவலா  ...

  • கருத்துக்கள உறவுகள்

ஆமிட்ட கேட்டுச் சொல்லுறம்.. நீங்க ஆற அமர ஆறுதலா வாங்க.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உங்க, சும்மா கொடி பிடிச்சவர்களே, போகத் தயங்கும் போது, இயக்கத்தில் இருந்தவர் அங்கு போனது, காரணம் எதுவாக இருப்பினும், மிகத் தவறானது. பிரச்சனை என்னவெனில், இப்போது, பிரான்ஸ் அரசுக்கு இவரது இயக்கப் பின்னனி தெரிய வந்திருக்கும். இயக்கங்களில் இருந்தோருக்கு அகதி அந்தஸ்து தர பின்னடிக்கும் நிலையில், இது பிரச்சனையாகலாம்.

20 வருடங்களுக்கு முன், ஒருவரை தாக்கிய சாதாரண வழக்கில், பினை பாய்ந்து, வெளிநாடு வந்த ஒரு லண்டண் வெம்பிளி வாசி, சும்மா ஊர் பார்க்கப் போய், கைதாகி, 1 வருசம் உள்ள இருந்து, தண்டப்பணம் கட்டி கடந்த மாதம் தான் வந்து சேர்ந்தார்.

அந்தளவுக்கு, பழைய விடயங்களை எல்லாம், தரவேத்தி வைத்திருக்கிறார்கள்.

பாதுகாப்பு ரீதியில், அவரை வேண்டும் என்றே வெளிய விட்டு தொடர்புகளை நோட்டமிடக் கூடும்.

கோத்தா இருந்து இருந்தால், உள்ள போட்டுவிட்டு, திறப்பை கடலுக்குள் வீசியிருப்பார்.

என்ன செய்வது? முள்ளில் சேலை. முடிந்தளவு கிளியாமல் எடுக்கப் பார்க்க வேண்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

Ex-LTTE woman returned from France escapes assassination attempt in Vanni

[TamilNet, Thursday, 19 March 2015, 08:03 GMT]

A group of assailants believed to belong to a surveillance squad of the Sri Lankan military attempted on Wednesday night to assassinate 41-year-old Baheerathy Murukesu, who was arrested earlier this month at Colombo airport and later released on bail with a restriction to leave the island. The two-member squad, which was waiting outside her house at Ka'ndaava'lai in Mullaiththeevu, followed Ms Baheerathy and hit her with their motorbike. Baheerathy was thrown away, but survived the attempt on her life. She was arrested by the Sri Lankan ‘Terrorist Investigation Department’ earlier this month when she was visiting her family on vacation from France. Baheerathy headed a naval wing of the LTTE's Sea Tigers between 1997 and 2000 and had left the island in 2005, the SL police has stated earlier. 

The incident took place Wednesday night when Baheerathy was on her way to buy bread at a nearby shop. 

The villagers who rushed to the site of the attack admitted Baheerathy to the hospital. 

The family of Ms Baheerathy has earlier complained that the SL military was continuously present outside their house and was harassing them after they had secured Baheerathy's release. 

According to a Sri Lankan court order, Ms Baheerathy is under restriction to leave the island until the ‘legal’ proceedings are over. 

She was visiting her parents with her 8 year old girl last month. 

The SL TID has also blamed that her husband, living in Paris, was linked to the LTTE.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=37701

மூன்று வருடத்தில்  தளபதியா ,கணவன்தான்  பிரச்சினை  என்று  சொல்கிறார்கள் இங்கு  எங்கு  யாருடைய  அரசியல்  விளையாடுது  என்று  தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

உப்படி இல்லாத பொல்லாத கதைகளைக் கட்டி சிங்களவனை பாதுகாக்கிறதே எங்களுக்கு வெளிநாட்டில வேலையாப் போச்சுது.  :icon_idea:  :lol:

இல்லாத  புலியை  காட்டி  சீன்  போடுறது  போலத்தான்  இதுவும்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாங்கண்ணா.. இல்லாத புலிகளைப் புடிக்கிறாங்க. இருக்கிற புலி நீங்க சரியா பதுங்கிட்டீங்க.. புடிக்கல்ல.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளே இருந்தாலும் ஆபத்து. வெளியே வந்தாலும் ஆபத்து.
இது தான் சிறிலங்கா. கொலிடேக்குப் போகின்றவர்கள் ஜாக்கிரதை.
கூவிக் கூவி அழைக்கும் போதே தெரிகின்றது.

பொதுமக்களுக்கு எதுவித பிரச்சனை இல்லை .

பயங்கரவாதிகள் என்றால் எந்த அரசு வந்தாலும்  பிரச்சனைதான் .அது தவிர்க்கமுடியாதது .

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல பக்கத்திலும் இருப்பார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்களுக்கு எதுவித பிரச்சனை இல்லை .

பயங்கரவாதிகள் என்றால் எந்த அரசு வந்தாலும்  பிரச்சனைதான் .அது தவிர்க்கமுடியாதது .

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல பக்கத்திலும் இருப்பார்கள் .

 

உங்களின்  கணக்குப்படி கொடி பிடிக்கும் பொது மக்களும் பயங்கரவாதிகள் தானே

 

உங்களின்  கணக்குப்படி கொடி பிடிக்கும் பொது மக்களும் பயங்கரவாதிகள் தானே

 

பயங்கரவததற்கு துணை போவதும் பயங்கரவாதம் தான் .

 

இப்படி பிரச்சனை இருக்கின்றது என்றால் பிரான்சில் இருக்கும் இலங்கை தூதகரத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றிருக்கலாம் .

புலம்பெயர்  இணைய  புலி  வாலுகள்  சினிமாவை  நிறுத்தினால்  போதும்  ஊரில  உள்ளவன்  நிம்மதியா  வாழ  இங்க  சாப்பிட்டு  சேமிக்க  புரட்சி  அங்க  சாப்பாடு  இல்லாமல்  பட்டினி ...

 

அப்புறம்  எதை காரணம்  காட்டி  காசு சேர்க்கிறது  என்று  மட்டும்  கேட்ககூடாது   :icon_idea:

பயங்கரவததற்கு துணை போவதும் பயங்கரவாதம் தான் .

 

இப்படி பிரச்சனை இருக்கின்றது என்றால் பிரான்சில் இருக்கும் இலங்கை தூதகரத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றிருக்கலாம் .

நீங்கள் சொல்லிட்டிங்கள்ளே இனி அப்படி செய்யுறம் :icon_idea:

அது சரி பயங்கரவாதம் என்று நீங்கள் சொல்லுவது

1. தேசத் துரோகிகளை களைவது

2. ஆக்கிரமிப்பாலனை அழிப்பது

3. தமது நாட்டை கேட்பது

4 ....

5. ....

n. வேறு?

எதோ இந்த அக்காவினது செய்தி பத்திரிகையில் வருது.. இப்பிடி செய்தி எதுவுமே வரமால் எத்தனை பேர் காணமல் போயிருப்பாங்களோ? 


நீங்கள் சொல்லிட்டிங்கள்ளே இனி அப்படி செய்யுறம் :icon_idea:

அது சரி பயங்கரவாதம் என்று நீங்கள் சொல்லுவது

1. தேசத் துரோகிகளை களைவது
2. ஆக்கிரமிப்பாலனை அழிப்பது
3. தமது நாட்டை கேட்பது
4 ....
5. ....
n. வேறு?

 

 

மறுபடியும் ஆரம்பத்திலேருந்தா?.... 

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவததற்கு துணை போவதும் பயங்கரவாதம் தான் .

இப்படி பிரச்சனை இருக்கின்றது என்றால் பிரான்சில் இருக்கும் இலங்கை தூதகரத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு சென்றிருக்கலாம் .

உது என்ன கதை?

$25 டொலர் கட்டி E-விசா எடுத்துத் தான் போகலாம்.

மேலும், வலை விரித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேடனிடம், உன் வலையில் சிக்க வரலாமா என்று கேட்பீர்களா, என்ன?

பகீரதீ செய்தது முட்டாள் தனமானது என்றால், இங்க ஆளுக்காள், காலுக்க, கையுக்க வெடியளக் கொளுத்தி எறியினம். :D

83 அல்லது 84இல் ஒரு விரிவுரையாளர் ஒரு கதை சொன்னார். இப்பவும் ஞாபகமிருக்கு.
 
ஒரு அம்மாவிற்கு 5 பிள்ளைகள். தன்னை  கடைசிக்காலத்தில் வைத்துக் காப்பாற்றுபவனிற்கு தனது சொத்து முழுவதும் என பிள்ளைகளிடம் சொல்லியிருந்தா.
 
பிள்ளைகளும் அம்மாவுடன் சந்தோசமாக இருந்தார்கள். ஒரு நாள் அம்மாவிற்கு கடும் சுகவீனம். அம்மாவை யார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதில் பெரும் சண்டை. பலசாலி ஒருவன் மற்றய சகோதர்களை அடித்துப் போட்டுவிட்டு அம்மாவை காப்பாற்ற ஓடினான்.
 
 
அப்போது அம்மாவின்  உயிர்  பிரிந்திருந்தது.
 
புரிய வேண்டியவர்களிற்கு நிச்சயம் இக்கதை புரியும். ஆனால் இதுதான் நடந்தது.
 
 
மறுபடியும் ஆரம்பத்திலேயிருந்தா?

Edited by ஜீவன் சிவா

பொதுமக்களுக்கு எதுவித பிரச்சனை இல்லை .

பயங்கரவாதிகள் என்றால் எந்த அரசு வந்தாலும்  பிரச்சனைதான் .அது தவிர்க்கமுடியாதது .

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல பக்கத்திலும் இருப்பார்கள் 

நானும் பயங்கரவாதி தானே  சோறு  வாங்கி சாப்பிட்டாலும் துவக்கு காட்டி தானே சோறு தந்தவை.

 

தனக்குள்ளே சேறு  மற்றவைக்கு  கதை வேற  

நானே என்னை இந்த கேள்வியை கேட்கணும்  நானும் பயங்கரவாதியா?  இல்லை என்றால்  பயங்கரவாதிக்கு என்ன இலக்கணம் நம்மை நாமே கேட்கனும்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் பிறக்கும்போது ஒரு அதிசய தோலுடன் பிறந்துள்ளார்
கெட்டவைகள் எதையும் அவர் செய்தலும் அது அவருடைய செயல் ஆகாது.
அவர் ஒவ்வரு நாளும் பாட்டதாரி ஆகிக்கொண்டு இருப்பார்
மனிதர்களால் ஒரு இரு விடயங்களில்தான் பட்டம் பெற முடியும்.
 

பொதுமக்களுக்கு எதுவித பிரச்சனை இல்லை .

பயங்கரவாதிகள் என்றால் எந்த அரசு வந்தாலும் பிரச்சனைதான் .அது தவிர்க்கமுடியாதது .

அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பல பக்கத்திலும் இருப்பார்கள் .

அப்படியா? அப்ப உங்களுக்கு ஏன் பிரச்சனை இல்லை. அதி பயங்கரவாதிகளுக்கு பிரச்சனை இல்லை போல. பிரச்சனைகளை ஓரத்தநாட்டில் டம்ப் பண்ண தெரியணும். அப்படி செய்து விட்டு ஓடி வந்தவர்களுக்கும் பிரச்சனை இல்லைப் போல.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டர் சைக்கிள் அக்சிடெண்டை எல்லாம் கொலை முயற்சியாக காட்ட முயற்சி செய்கிறன கேடுகெட்ட புலம்பெயர் ஊடகங்களும், லங்காபுவத் சீ தமிழ்நெட்டும்.

அந்தளவுக்கு பகீரதி ஒன்றும் பெரிய ஆளில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.