Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரயிலில் மோதிப் படுகாயமடைந்த யாழ்.இந்து மாணவன் சாவு

Featured Replies

kukappiriyan%20f5659656.jpg

 

 

யாழ்.பிறவுண் வீதி முதலாம் ஒழுங்கையில் கடந்த மாதம் 19 ஆம் திகதி இரவு 7.10 மணியளவில் பாதுகாப்பற்ற வீதிக் கடவையைக் கடக்க முற்பட்ட சமயம் ரயில் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் சிகிச்சை பயனின்றி நேற்று கொழும்பில் உயிரிழந்தார்.
 
யாழ்.இந்துக் கல்லூரியில் உயர்தர வகுப்பில் கற்கும் கோப்பாயைச் சேர்ந்த குகப்பிரியன் (வயது-18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைபெற்றுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
  • Replies 80
  • Views 3.8k
  • Created
  • Last Reply

RIP

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

21 ஆம் நூற்றாண்டிலும் பாதுகாப்பற்ற வீதிக்கடவைகளை அமைக்கிறார்கள்.. காரணம் இந்த தொடருந்துத் தடங்கள் எமது மக்களின் நலனுக்காகப் போடப்பட்டவை அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் வந்த சத்தம் கேட்கவில்லையோ. சனம் தான் சூதானமாக நடக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் வந்த சத்தம் கேட்கவில்லையோ. சனம் தான் சூதானமாக நடக்க வேண்டும்.

பலரும் இவ்வாறுதான் நடந்து கொள்கிறார்கள்.. ஆனாலும் சிலரால் முடிவதில்லை.. குறிப்பாக செவிப்புலன் குறைந்தவர்கள் இந்தக் கடவைகளில் மோட்சம் பெற வேண்டியதுதான் ஒரே வழி.

இந்தியாவிலும் இப்படியான விபத்துக்கள் நடந்தேறுகின்றன. இங்கு குறிப்பிட்டளவானவர்கள் மோபைல் தொலைபேசியில் பேசியவாறு அல்லது பாடல்கள் கேட்டுக்கோண்டு புகையிரதப்பாதையைக் கடப்பது அல்லது நடப்பதும் காரணமாகின்றது.
 
அதற்காக பாதுகாப்பற்ற முறையில் புகையிரதப்பாதைக் கடப்புகளை குடிசனம் உள்ள பகுதிகளில் அமைப்பதனை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
 
 
ஆழ்ந்த இரங்கல்கள்
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

 

இப்பாதாவது கடவைக்குக் கடவை போட்டு விட்டார்களா , இல்லையா....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் மயப்படுத்தப்பட்ட இரயில் விடுதல்களும்.. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான.. ஏனோ தானோ கொள்கைகளுமே யாழ் தேவி வரவோடு நிகழும் பல மரணங்களுக்குக் காரணம்.

 

இந்த வீதி யாழ் நகரை அண்டியது மட்டுமன்றி.. பிரபல பாடசாலைகள் நிறைந்த பகுதியில் உள்ள ஒன்று. யாழ் இந்து மகளிர் கல்லூரி.. யாழ் இந்துக் கல்லூரி.. யாழ் சன்மார்க்கம் மகா வித்தியாலயம்.. யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை.. யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை.. என்று பல பள்ளி மாணவர்கள் பாவனையில் வைத்திருக்கும் வீதி. அத்துடன் யாழ் நகரை சென்றடைய விரும்பும் பொது மக்களும் மாணவர்களும்.. பாவிக்கும் வீதி.

 

1989/90 இல்.. இந்தியப் படைகள் இரயில் விட்ட போது.. கொட்டில் அமைத்து.. பாதுக்காப்புக் கடவை ஒன்று நிர்மானிக்கப்பட்டு.. காவலாளிகளும் வைக்கப்பட்டிருந்தனர்.

 

இப்போ.. அந்தத் தேவை சிங்கள இரயில்வேக்கு இல்லாமல் போனது எப்படி..??!

 

சிங்கள தொடரூந்துத் திணைக்களத்தின் அக்கறையற்ற தன்மையே இந்த மாணவன் உட்பட வடக்கில் யாழ் தேவி வரவின் பின்னான விபத்து மரணங்களுக்கு முக்கிய காரணம். :icon_idea::rolleyes::(


ஆழ்ந்த இரங்கல்கள்.. யாழ் இந்து மைத்தனுக்கு..!!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கேள்விப்பட்டவரை, இந்த ரயில்பாதையில் ரயில் வரும்போது சைக்கிளில் கடப்பது என 3 மாணவர்கள் பெட் பிடித்தனர். அப்படியே முயற்சித்தபோது, முதல் 2 மாணவர்களும் ரயில் வருமுன் பாதையை கடந்துவிட, 3வது மாணவர் ரயிலில் மோதி மரணமடைந்தார். மூவரும் யாழ் இந்து மாணவர்கள்.  விபத்து நடந்தது ரயில்வே கடவையே அல்ல. அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தாம்  மோட்டார் பைக்கில் கடந்து செல்ல தண்டவாள உயரத்துக்கு மண்ணால் போட்டு வைத்திருந்த  ஏற்றம் அல்லது பிட்டி.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

89/90 இலே பிரேமதாசா இனி இலங்கையில் பாதுகாப்பற்ற கடவை இருக்க கூடாது என்று சட்டம் போட்டு இதை செய்தவர்.

அண்மையில் சிங்கள பகுதியிலும் இப்படி சில சம்பவங்கள் நடந்திருக்கு.

இது ஒரு துறை/நிறுவனம் சார் பிரச்சினை எல்லாத்தையும் இனவாத கண்ணோடு பார்காமல் - ரெயில்வே திணைகளத்தை அணுகி முடிவு எடுக்கோணும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரம் அற்ற செய்திகளை எல்லாம்.. நான் அறிந்தேன்.. விசாரித்தேன் என்று.. சிறீலங்கா ஆட்சியாளர்களின்.. போக்குவரத்து.. மற்றும் திணைக்களங்களின் மாற்றான் மனப்பாண்மையை மறைக்க.. அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டாது.. தடுக்க.. எழுதுவதை யாழ் தொடர்ந்து அனுமதிக்கக் கூடாது.

 

இதே பகுதியில் வாழ்ந்தவன் என்ற வகையில்.. அங்கு.. இப்படியான விபரீதங்களை நடக்க பெற்றோரோ.. ஊரவர்களோ அனுமதிப்பதில்லை.

 

இச்சம்பவத்திற்கு முன்னரே..  இரயில் பாதை அமைப்பும்.. இம்முறை மிக உயரமாக உள்ளதாகவும் பிள்ளைகள் வீதியை கடக்க... பயப்பிடுவதாகவும் அப்பகுதி மக்கள் நேரிடையாக கருத்துப் பகிர்ந்திருந்தனர். வழமையான.. உயரத்தை விட.. இம்முறை.. இரயில் பாதை.. கொன்கிரீட் பாவனை காரணமாக உயர்ந்துள்ளது. இது கடக்கும் நேரத்தை அதிகரிக்கச் செய்யும்.

 

மக்கள் அதிக..நடமாட்டம் உள்ள பகுதிகளுக்குள்ளால்.. செல்லும் இந்தப் பாதைகள் தொடர்பில்.. திணைக்கள அதிகாரிகள் கவனமின்றி இருந்தமை உண்மையில் கண்டிக்கத்தக்கது. இந்த மரணம் அவர்களின் தவறே அன்றி மாணவர்களினது என்று சொல்ல முடியாது. வீதிக்கடவை ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டிருந்தால்.. கேட்டேன்.. விசாரித்தேன் கதைகளுக்கும் இடமிருக்காது. உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். தடுக்கப்படும். :icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மாணவனில் பிழை என்று யார் கூறினார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை.. தமிழை.. உச்சரிச்சு.. உணர்ந்து வாசித்தால் புரியும். சகபாடிகள் எழுதினம்.. எல்லாம் சரியாத்தான் இருக்கும் என்ற சிந்தனையோட்டத்தில் யாழில் கருத்துக்களை பார்த்தால்.. சகபாடிகள் விடும்.. ஒரு பிழையும் தெரியாது.

 

அப்பாவி மாணவர்கள் பந்தையம் கட்டி ரயிலுக்கு முன் வீதியைக் கடக்க.. பாய்ந்தனர்.. என்பது யாரில் குற்றம் சுமத்துகிறது..?! இதை நிரூபிக்க ஒரு சாட்சியமும் இல்லை. செய்திகளும் இல்லை. இப்பகுதியில் இச்சம்பவத்தை அடுத்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாணவர்களில் பிழை வைச்சுக் கொண்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி இருக்கமாட்டார்கள்.

 

ஏலவே நியானி சுட்டிக்காட்டியுள்ளார்.. குழுநிலை விவாதங்களை தவிர்க்கச் சொல்லி. :icon_idea:

Edited by nedukkalapoovan

இப்ப  தானே இந்த தலைமுறைக்கு ரயில்  புதுசு போக போக  பழகிடும் ...அனுதாபங்கள் .

 

நாங்க ரயிலை காணவில்லை இப்படியும் ஒரு தலைமுறை  :(

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க ராக்கெட்டையும் காணேல்ல. அமெரிக்காவில் காணினம். அதுக்காக...?! ராக்கெட் பற்றி அறியாமல் மக்கள் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடவைகாப்பு  இல்லாத புகையிரதப் பாதைகளில் முகாம்களில் நித்திரை கொள்ளும் ராணுவத்தினரையாவது காவல் வைப்பதன் மூலம் இப்படியான விபத்துக்களைத் தடுக்கலாம்.
ஆனால் சிங்கள அரசு இதனைச் செய்யாது.
அவர்களின் நோக்கமே எல்லாவிதத்திலும் தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதே.

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப  தானே இந்த தலைமுறைக்கு ரயில்  புதுசு போக போக  பழகிடும் ...அனுதாபங்கள் .

 

நாங்க ரயிலை காணவில்லை இப்படியும் ஒரு தலைமுறை  :(

இப்படியான சிந்தனைகள்தான் மேலும்மேலும் பாதகங்களை உருவாக்குபவை. ஆபிரிக்காவில் முதன்முதலாக ஒரு பாதை போட்டாலும், கொஞ்சம் மக்கள் சாகட்டும்.. பிறகு பழகிக்கொள்வார்கள் என்பதாக உள்ளது உங்களது சிந்தனை.

தொடருந்துக் கடவைகளில் உள்ள ஆபத்துக்களை நன்கு அறிந்தவர்கள் யார்?

1) வளர்ந்தவர்கள்?

2) சிறுவர்கள்?

3) உடல் ஊனமுற்றவர்கள்?

4) தொடருந்துப் பாதை வடிவமைப்புப் பொறியலாளர்கள்?

இதில் ஒன்றில்தான் விடை இருக்கிறது. அதை மக்கள் பிரதிநிதிகள் உணர்ந்து கொண்டால் இப்படியான விபத்துக்கள் நடைபெறுவதை தவிர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

தம்பியின் ஆத்மா சாந்தியடைய பிரார்திப்போம்

 

நடந்தது யாருக்கும் சரியாக தெரியாமல் கதைப்பது தவறு

ஆனால் சம்பவதினத்தன்று பாடசாலை விளையாட்டு போட்டி நடப்பதாக இருந்தது, பின்னர் பிற்போடப்பட்டது என்பது உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

கடவைகாப்பு  இல்லாத புகையிரதப் பாதைகளில் முகாம்களில் நித்திரை கொள்ளும் ராணுவத்தினரையாவது காவல் வைப்பதன் மூலம் இப்படியான விபத்துக்களைத் தடுக்கலாம்.

ஆனால் சிங்கள அரசு இதனைச் செய்யாது.

அவர்களின் நோக்கமே எல்லாவிதத்திலும் தமிழரின் விகிதாசாரத்தைக் குறைப்பதே.

ஆழ்ந்த இரங்கல்கள்

 

இதைத்தான் நானும் எழுத யோசித்தேன். 
 
சும்மா முகாங்களில் தூங்குபவர்களிற்கு இரண்டு கதிரை கொடுத்து இருத்திவிடலாம். தமிழரை கண்காணித்தது போலும் இருக்கும் தண்டவாளத்தை பார்த்தமாதிரியும் இருக்கும்.
 
கள உறவுகள் ஐயோ ராணுவமா என்று திரியைத் திசைதிருப்பி விட்வார்களோ என்ற நினைப்பில் கை விட்டேன்.
 
நன்றி பதிவிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.