Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் 142 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது

Featured Replies

:( :( என்ன கொடுமை இது ....! விமானம் திட்டமிட்டே ஒரு விமானியால் வீழ்த்தப்பட்டிருக்கு :(

  • Replies 68
  • Views 4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் இன்னொருவனை நம்பி எங்கள் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது எதுவுமே நடக்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி ப்ளைட்  ஏறமுதல் கப்டனின் முகத்தை வடிவாய் பார்த்து வைக்கணும், முடிந்தால் அவர்களின் மன நல அத்தாட்ச்சி பத்திரம் மெடிக்கல் ரிப்போட் எல்லாத்தையும் வாசலில் தொங்கவிட சொல்லணும் .

இனி அனைத்து விமானிகளினதும் back ground check up ஐ அதிகப்படுத்தனும்...எந்த விமானி எப்ப என்ன செய்வார் என்றே தெரியல :(

  • கருத்துக்கள உறவுகள்

இனி அனைத்து விமானிகளினதும் back ground check up ஐ அதிகப்படுத்தனும்...எந்த விமானி எப்ப என்ன செய்வார் என்றே தெரியல :(

 

அவர் இசுலாமீயராக இருந்தால்

ஐரோப்பாவில் பெரும் பதட்டநிலை வரலாம்.. :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி நடப்பது இது முதல் தடவையல்ல.. இதற்கு முன்னமும் ஒரு விமானி தனது சொந்தப் பிரச்சினைக்காக விமானத்தை விழுத்தியவர். ஏதோ ஒரு அரபு நாட்டு விமானி.. மறந்துவிட்டது.

ஆகவே, இனிமேல் விமானம் ஏறும்போது, இறங்கினால் கிங்கு.. விழுந்தால் சங்கு என்றிட்டு ஏறவேண்டியதுதான்.. :lol::D

விமானத்தில் ஏற முதல் உயில் எழுதுபவர்கள் எழுதிவைப்பதுடன் மரணத்திற்கு முன்பு செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்திட்டு விமானம் ஏறினால் சங்கோ கிங்கோ பிரச்சனையில்லை :):(

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தில் ஏற முதல் உயில் எழுதுபவர்கள் எழுதிவைப்பதுடன் மரணத்திற்கு முன்பு செய்யவேண்டியவற்றை எல்லாம் செய்திட்டு விமானம் ஏறினால் சங்கோ கிங்கோ பிரச்சனையில்லை :):(

 

 

சகோதரி  உயில் எழுதும்போது

இந்த அண்ணரை மறக்கவேண்டாம்.. :)

ஆழ்த்த அனுதாபங்கள்   :(

 

வந்தவர் எல்லாம் தங்கி  விட்டால் இந்த மண்ணில் நமக்கு  இடம் ஏது . :(

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை விழுத்திய உதவி விமானி 28 வயதுடையவர்.
630 விமானப் பறப்பு மணித்தியால அனுபவம் கொண்டவர்.
பாவிக்கு... இந்த வயதிலை, என்ன பிரச்சினையோ..... :o

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இத்தனை உயிர்களை பலிகொள்வதா ? உலகம் எங்கே செல்கின்றது ??  :o  :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த விமானியின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காக இத்தனை உயிர்களை பலிகொள்வதா ? உலகம் எங்கே செல்கின்றது ??  :o  :(

 

1.இவருக்கு மன நோய்.

2.விமான சேவை நிறுவனத்தைப் பழி வாங்கும் செயல்

3.தனிப்பட்ட பிரச்சனை என்றால் வீட்டு முகட்டிலேயே தொங்கியிருக்கலாம்.

4.அல்லது பெரிய விமானிக்குத் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் தவறு நடந்துவிட்டது

 

  • கருத்துக்கள உறவுகள்

1.இவருக்கு மன நோய்.

2.விமான சேவை நிறுவனத்தைப் பழி வாங்கும் செயல்

3.தனிப்பட்ட பிரச்சனை என்றால் வீட்டு முகட்டிலேயே தொங்கியிருக்கலாம்.

4.அல்லது பெரிய விமானிக்குத் தனது திறமையைக் காட்ட வேண்டும் என்ற ஆவலில் தவறு நடந்துவிட்டது

 

 

கதவை.... இறுக்கிப் பூட்டிப் போட்டு, தனது திறமையை... காட்ட வெளிக்கிட்டது தான்... பெரிய பிழையாய் போயிட்டுது. :)

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்தை விழுத்திய உதவி விமானி 28 வயதுடையவர்.

630 விமானப் பறப்பு மணித்தியால அனுபவம் கொண்டவர்.

பாவிக்கு... இந்த வயதிலை, என்ன பிரச்சினையோ..... :o

இதுககுத்தான் பெண்கள் சகவாசமே வேண்டாம் என்கிறார் நெடுக்ஸ்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

a08q0171_photo_5.jpg

விமானம் தானியங்கி முறையில் பறக்கும் போது மேலே உள்ளதை பிடித்து இழுத்தால் மனித கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும்.

ஆகவே முதன்மை விமானி வெளியே போனதும் பணிப்பெண் உள்ளே சென்றாரா என்பதையும் ஆராயவேணும்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் இன்னொருவனை நம்பி எங்கள் பாதுகாப்பை ஒப்படைக்கும் போது எதுவுமே நடக்கலாம்.

 

திருமணத்தின் போது இது பொருந்தும். நாமே தானே நமக்கு பாதுகாப்பு.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அல்ப்ஸ் மலை உச்சியில் மோதினால் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று யாரும் உதவி விமானிக்கு சொல்லிச்சினமோ என்னமோ..?! எனி இமயமலைப்பக்கமா போற விமானங்களில் பயணிக்கவே கூடாது.  :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கின்றது. ஏதோ ஒன்றை மறைக்க முயற்சிக்கின்றார்கள் போல் தெரிகின்றது.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்னமோ சந்தேகமாக இருக்கின்றது. ஏதோ ஒன்றை மறைக்க முயற்சிக்கின்றார்கள் போல் தெரிகின்றது.  :rolleyes:

 

அந்த.... உதவி விமானியில் தான்.. பிழை என்றால், அவரின் படத்தை.... வேளே காட்ட ஏன் தயங்குகின்றார்கள் என்பதும்  புரியவில்லை. இதுவே... வேறு நாடுகளில், நடந்திருந்தால்... படம் எப்பவோ... வெளி வந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த.... உதவி விமானியில் தான்.. பிழை என்றால், அவரின் படத்தை.... வேளே காட்ட ஏன் தயங்குகின்றார்கள் என்பதும்  புரியவில்லை. இதுவே... வேறு நாடுகளில், நடந்திருந்தால்... படம் எப்பவோ... வெளி வந்திருக்கும்.

 

6351948-3x2-700x467.jpg

 

http://www.abc.net.au/news/2015-03-26/germanwings-co-pilot-andreas-lubitz-crashed-plane-deliberately/6351854

ஆழ்த்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Who was Andreas Lubitz? Germanwings co-pilot who 'intentionally killed' 150 passengers in deliberate Alps crash

  • tom-porter.jpg?w=54&h=54&l=50&t=40
 
andreas-lubitz.jpgAndreas Lubitz was the co-pilot on the Germanwings plane that crashed in the Alps(Facebook)
 
 
 

The German co-pilot who allegedly flew a Germanwings flight into the French Alps has been named as Andreas Lubitz, who was aged 28. Prosecutors claimed information suggested he was fully conscious as the plane went down.

"The co-pilot is alone at the controls," prosecutor Brice Robin said, drawing on information gathered from the black box recorder. "He voluntarily refused to open the door of the cockpit to the pilot and voluntarily began the descent of the plane."

Details of Lubitz's life are still emerging, with investigators confirming he did not have any known terrorist links. According to the website of the flight club where he was a member, the co-pilot was from Montabaur in Rhineland Palatinate.

"He was very happy. He gave off a good feeling."
- Peter Ruecker, fellow pilot

Members of the Montbaur flying club where Lubitz renewed his glider license last month said he was pleased to have gained a job with Germanwings. 

"He was happy he had the job with Germanwings and he was doing well," longtime club member Peter Ruecker, told AP. "He was very happy. He gave off a good feeling."

Ruecker said that Lubitz had a girlfriend. "I can't remember anything where something wasn't right," he said.

Others who knew him said he may have been suffering psychological problems.

The mother of an ex-classmate of Lubitz told how the co-pilot had confided in her daughter a few years ago.

She added though that he had seemed normal when her daughter saw him before Christmas.

 "I can only image the whole thing was a knee-jerk reaction. It can't have been planned, although it was actually like a killing spree," she said.

She said: "He apparently was suffering from burnout or depression."

Lufthansa said that Lubitz had missed a few weeks training six years ago, though did not confirm the reason.

Montabaur city mayor Gabriele Wieland, speaking to the DPA press agency, said Lubitz lived with his parents in Montabaur and also had a residence in Dusseldorf, where the Germanwings flight was heading before it crashed.

German media reports he had 630 flight hours and joined budget airline Germanwings straight out of Lufthansa Flight Training School in Bremen in September 2013. Authorities have not confirmed if he had any experience as a professional pilot prior to that.

At a press conference on 26 March, Lufthansa announced Lubitz interrupted his training for a number of weeks six years ago. They did not provide details on the reasons for this interruption, but said he had been subjected to health checks afterwards. 

They said he had passed all psychological and physical tests prior to starting work as a pilot.

"Andreas became a member of the club as a youth to fulfil his dream of flying," the club said in a death notice on its website.

"He fulfilled his dream, the dream he now paid for so dearly with his life," the club said, reports the Wall Street Journal.

French authorities said his family had left Marseille, where a press conference was held earlier on 26 March. His Facebook page lists his interests as aviation and music. Police have been deployed to guard the pilot's family home, which they have searched, reports the BBC. 

Information from the black box recorder of the flight, which crashed on 24 March and killed 150 people, indicated Lubitz was alone in the cockpit, and intentionally started a descent while the other pilot was locked out.

The Airbus 320 from Barcelona to Dusseldorf hit a mountain near Barcelonette in the French Alps, after an eight-minute

descent.

http://www.ibtimes.co.uk/who-was-andreas-lubitz-germanwings-co-pilot-who-murdered-150-innocent-passengers-deliberate-alps-1493685

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.... உடையார், நுணாவிலான் இங்குள்ள ஊடகங்களில்... உருமறைப்பு செய்தே படத்தை பிரசுரிக்கிறார்கள்.

Edited by தமிழ் சிறி

விமானத்தின் இறுதி நிமிடங்கள்... அலறிய பயணிகள், பதறாத துணை விமானி, கதவை பலமாக தட்டிய தலைமை விமானி : துணை விமானி சதி :பரபரப்பு தகவல்

 

Pilot-Andreas-Lubitz-might.jpg

 

 

150 பேருடன் விபத்துக்குள்ளான ஜெர்மன் விங்ஸ் விமானம் துணை விமானியால் வேண்டுமென்றே மலையில் மோதச்செய்யப்பட்டுள்ளது என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. விமானத்தை மலையில் மோதச் சென்ற போது விமானிகள் கூக்குரலிட்டதாகவும் அதனை துணை விமானி கண்டகொள்ளவில்லை எனவும் தலைமை விமானி கதவை பல முறை பலமாக தட்டியும் உதைத்துள்ளதாகவும் ஆனால் துணை விமானி அமைதியாக இருந்து விமானத்தை மலையில் மோதியுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
விமான விபத்து
 
ஜெர்மனியின் லுப்தான்சா விமான நிறுவனத்தின் ‘ஜெர்மன் விங்ஸ்’ எயார் பஸ் ஏ-320 விமானம், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டசல்டொர்ப் நகருக்கு கடந்த 24 ஆம் திகதி 150 பேருடன் சென்றபோது விபத்துக்குள்ளானது.
 
பிரான்ஸ் நாட்டில் எல்ப்ஸ் மலையின் தென்பகுதியில், செய்ன் லெஸ் எல்ப்ஸ் என்ற கிராமத்துக்கு அருகே அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த 150 பேரும் உயிரிழந்தனர். 
 
பல நாட்டவர்கள்
அவர்களில் 72 பேர் ஜெர்மானியர்கள், 51 பேர் ஸ்பெயின் நாட்டினர், 3 பேர் அமெரிக்கர்கள். இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கொலம்பியா, டென்மார்க், இஸ்ரேல், ஜப்பான், மெக்சிகோ, ஈரான், நெதர்லாந்து, மொராக்கோ நாட்டினரும் பலியானவர்களில் அடங்குவர்.
 
தேடல் பணி
கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் விமானத்தின் சிதைவுகளையும், பலியானவர்களின் உடல்களையும் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
 
பிரான்ஸ் ஜனாதிபதி 
இதற்கிடையே சம்பவ இடத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆகியோர் நேற்று சென்றனர்.
 
ஒரு விமானி வெளியேறியது ஏன்?
இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் ஒரு கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதில் இருந்து, விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி பதிவுகள் ஆராயப்பட்டுள்ளன. 
அதில் விமானிகளில் ஒருவர், விபத்துக்கு முன்னதாக விமானி அறையை விட்டு வெளியே சென்றதும், அவர் திரும்ப வந்தபோது விமானி அறை கதவை தட்டியும், கதவு திறக்கப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.
 
இது தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரி ஒருவர், “வெளியே சென்ற விமானி, மீண்டும் வந்து கதவை லேசாக தட்டியுள்ளார். பதில் இல்லை. அதன்பின்னர் கதவை வலுவாக தட்டியுள்ளார். அதற்கும் பதில் இல்லை. அதன்பின்னர் எந்தப் பதிலும் இல்லை என்பது விமானி அறை ஒலிப்பதிவு கருவி மூலம் தெரிய வந்துள்ளது” என கூறியதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
 
ஓயப்போவதில்லை 
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறியும் வரை ஓயப்போவதில்லை என்று பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலண்டே கூறினார். 
 
ஒலிப்பதிவு கிடைத்துள்ளது
விபத்துக்குள்ளான ஜேர்மன் விங்ஸ் விமானம் எதற்காக கீழே இறங்கியது என்பது குறித்து எந்த முடிவுக்கும் இப்போதைக்கு வர முடியவில்லை. இப்போதுதான் ஒரு ஒலிப்பதிவு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது   அதை ஆய்வு செய்ய வேண்டும்”  என பிரான்ஸ் விசாரணை குழு தெரிவித்துள்ளது.
 
விமானிகள் இடையே  இணக்கமான உரையாடல்கள் 
விசாரணையில் தொடர்புடைய இராணுவ உயர் அதிகாரி ஒருவர், “விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி, விமானிகள் இடையே மிகவும் இணக்கமான வகையில் உரையாடல்கள் நடந்ததைத்தான் காட்டுகிறன்ன. விமானிகளில் ஒருவர் வெளியே  சென்றுள்ளார். அவர் எதற்காக வெளியே சென்றார் என்பது தெரியவில்லை. ஆனால், விமானத்துக்கு முடிவு ஏற்பட்டபோது, விமானி அறையில் ஒரு விமானிதான் இருந்திருக்கிறார், அவர் கதவைத் திறக்கவில்லை என்பது தெளிவாகின்றது என்றார்.
 
நடுவானில் வெடித்து சிதறவில்லை
 
தீவிரவாத தாக்குதல் குறித்த சந்தேகம் எழவில்லை என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பேர்னட் காஸிநியூவ் தெரிவித்துள்ளார். 
என்னதான் நடந்தது என்பதை இப்போது உறுதியாக கூற முடியாதபோதும், நடுவானில் விமானம் வெடித்து சிதறி இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 
2ஆவது கருப்பு பெட்டி கிடைக்கவில்லை
விபத்துக்குள்ளான விமானத்தின் 2ஆவது கருப்பு பெட்டி இன்னும் கிடைக்கவில்லை. இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
 
துணை விமானி சதி
இதற்கிடையே பாரீஸ் நகரில் பிரான்ஸ் அரசின் சட்டத்தரணி பிரைஸ் ரொபின் நேற்று இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அவரால் மீண்டும் விமானி அறைக்குள் செல்ல முடியாமல் போய்விட்டது. துணை விமானி ஹென்ட்ரூஸ் லூபிட்ஸ் வேண்டுமென்றே எல்ப்ஸ் மலையின் மீது விமானத்தை கீழாக செலுத்தி உள்ளார். 
 
அவரது நோக்கம், விமானத்தை விபத்துக்கு உள்ளாக்குவதுதான். கருப்பு பெட்டியில் இருந்த விமானி அறையின் ஒலிப்பதிவு கருவி மூலம் இந்த முடிவுக்கு வரவேண்டி உள்ளது. 
விமானி, விமானி அறையை விட்டு வெளியேறிய பின்னர் துணை விமானி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. விமானி அறையில் நிசப்தம் நிலவி உள்ளது. விமானம் கீழே வந்தபோது அலாரம் ஒலித்திருக்கிறது. கதவை ஓங்கி தட்டும் சத்தமும் கேட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
 
 இதன் மூலம் துணை விமானி சதி செய்துதான், விமானத்தை விபத்துக்குள்ளாக்கினார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனாலும், எதற்காக அவர் இந்த சதியில் ஈடுபட்டார், அதன் பின்னணியில் வேறு யாரும் உள்ளனரா என்பது இனிதான் கண்டறியப்பட வேண்டும் என கூறப்படுகிறது.
 
விமானத்தின் கடைசி நிமிடங்கள்... அலறிய பயணிகள், பதறாத துணை விமானி
 
எல்ப்ஸ் மலையில் மோதி விமானத்தை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்பது துணை விமானி ஹென்ட்ரூஸின் சதித்திட்டமாக இருந்திருக்கிறது.
 
அதற்கு வசதியாக விமானி, இயல்பாக கழிவறைக்கு சென்ற நேரத்தை அவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். 
 
கழிவறைக்கு சென்றிருந்த விமானி திரும்ப வந்து கதவைத் தட்டியபோது, துணை விமானி கதவை திறக்கவில்லை. ஏர்பஸ் விமானத்தில், அவசரமாக விமானி, விமானி அறைக்குள் போக வழி உண்டு. அதையும் துணை விமானி மூடி, விமானி உள்ளே வர முடியாதபடிக்கு தடை செய்திருக்கிறார்.
 
அடுத்த சில நொடிகளில்தான் துணை விமானி பொத்தானை அழுத்தி விமானத்தை கீழே கொண்டு வந்து மலை மீது மோத வைத்திருக்கிறார்.
 
விமானம் விபத்துக்குள்ளாகப் போவதை உணர்ந்த பயணிகள், பதற்றத்தில் அலறி இருக்கிறார்கள்.
 
ஆனால் துணை விமானி பதற்றமின்றி அமைதியாக இருந்திருக்கிறார். அவரது சுவாசமும் சாதாரணமாக இருந்திருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிலசெக்கன்களில் ஒரு மனிதனின் மூளையில் எற்படும்  மாற்றங்கள் எவ்வாறான அழிவுகளையும்

பாதகங்களையும் கொண்டுவரும்  என்பதற்கு இது ஒரு உதாரணம்...

இதற்கு மாற்றுவழிகள் இருக்குமா?

இவற்றை தடுக்கமுடியுமா???

ஆயிரம் கேள்விகள்

பதில் தான் பூச்சியம்.... :(  :(  :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
ermittler-tragen-kistenweise-beweismitte

 

Düsseldorf நகரத்தில் உள்ள துணை விமானியின் வீட்டிலிருந்த... சில பொருட்களையும்,  அவரின் ஆவணங்களையும்...

பொலிசார், மேலதிக விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளார்கள்.
இவர் மன அழுத்தம், போதைப் பொருள் பாவனை போன்றவற்றால்  பாதிக்கப் பட்டிருந்தாரா?  என்ற கோணத்திலும்.... ஆராய்கிறார்கள். மன அழுத்தத்தால்.... பாதிக்கப்பட்ட சிலரை, இலகுவில்... அடையாளம் கண்டு பிடிப்பது சிரமம் என்று, அது சம்பந்தமான வைத்தியர் தெரிவித்தார்.

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.