Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் நடக்கவுள்ள தாலி அகற்றும் விழா: வலுக்கும் எதிர்ப்பு

Featured Replies

தமிழகத்தில் திராவிடர் கழகம் சார்பில் நடத்தப்படும் தாலி அகற்றும் விழாவுக்கு கடும் கண்டனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கைப்பேசி மூலம் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிடர் கழகம் சார்பில் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் வருகிற ஏப்ரல் 14ம் திகதி, தாலி அகற்றும் விழா நடத்தப்படும் என்று கி.வீரமணி அறிவித்திருந்தார்.

தி.க. சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி, தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று கூறி, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட 10 இந்து அமைப்புகள் சார்பில் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தாலி அகற்றும் போராட்டம் தொடர்பாக திராவிடர் கழகத்தின் மகளிர் பாசறை சார்பில் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் திகதி அன்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெறும் பெண்களின் அடிமைத்தளையாம் தாலி அகற்றும் புரட்சி விழாவில் பங்கேற்று தாலியை அகற்றிக் கொள்ள விரும்புவோர் கைப்பேசியில் முன்பதிவு செய்தல் அவசியமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் தொடர்பு கொண்டு சில பெண்கள் முன்பதிவு செய்துள்ள நிலையில், பலர், தங்களது எதிர்ப்பையும், கடுமையாக பதிவு செய்கின்றனர் என்று கூறப்படுகிறது.

மேலும், பெரியார் திடலில் நடைபெறும் போராட்டம் என்பதால் இந்த விழாவுக்கு பொலிசாரிடம் அனுமதி பெற தேவையில்லை என்று தி.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

http://www.newindianews.com/view.php?22UMM203lOS4e2DmKcb240Wdd204Abc2mDNe42OlT022gAA3

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் திராவிடர் என்பதை அகற்றிவிட்டுத் தமிழராகித் தமிழரிடையே இருக்கும்  சாதி சமயங்களை நீக்கினால் தால தானாக நீங்கிவிடும்!

இந்த திருட்டுக் திராவிட கூட்ட்டத்தை வெளியேற்றினால் தான் தமிழனுக்கு நிம்மதி

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை மாகாணம் என்று இருந்தபோது (இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா எல்லாம் சேர்ந்தது) திராவிட அரசியல் உருவாகியது சரி.. பின்பு தமிழ்நாடு என்று பிரிந்த பிறகு திராவிட அரசியல் எதற்கு? :icon_idea:

எல்லாம் பொருளியல் தான், இந்தியா சுதந்திரம் அடைய முன்னர் பிரித்தானிய இந்தியாவை 3 பெரும் பிரிவுகளாக பிரித்து அதற்கு 3 தலைநகரங்களும் அமைத்தது, அவை பொம்பேய்,கல்கட்டா,சென்னை அதனால் தென் இந்தியாவின் பொருளாதர வளம் முழுவதும் சென்னையிலும் தமிழகத்திலும் தான் குவிந்தது, இந்தியா சுதந்திரம் பெற்ற காலப்பகுதியில் தென் இந்தியாவில் வளமான பிரதேசமாக இருந்த தமிழ் நாட்டில் இருக்க தெலுங்கரும் கன்னடரும் போட்ட திட்டம் தான் இந்த திராவிட இயக்கம்.தமிழர் என்ற ஒரு தனி இனத்தை அழித்து அதை திராவிடம் என்ற குழுமத்துக்குள் அடக்க இவர்கள் வரைந்த திட்டம் தான் இது அதில் மாபெரும் வெற்றியும் கண்டார்கள்,இறுதியில் இவர்கள் தமிழ் இனத்தை மட்டும் அல்ல சைவ மதத்தையும் சேர்த்தே அழிக்கிறார்கள். தம்து குள்ள நரி புத்தியை ஒழிக்க பர்பாணனுக்கு பின்னால் ஒழித்து கொண்டது இந்த கன்னட (ஈ.வே.ராமசாமி) தெலுங்கு (முத்துவேல் கருணாநிதி) கும்பல்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதோ.. கெட்டதோ.. நம்பிக்கை என்பது வாழ்க்கையின் அடித்தளம்!

பல உறவினர்கள், சான்றோர்கள், தெய்வங்கள் முன்னிலையில் ' தாலி' என்பது சம்பிரதாய பூர்வமாக, எல்லோரது ஆசீர்வாதங்களுடனும் கட்டப்படுகின்றது!

அதனை அறுத்து எறிவது என்பது மிகவும் கொடுமையானது!

எனவே இனி வரும் காலங்களில் நடைபெறும் திருமணங்களில் 'தாலி' கட்டாது திருமணம் செய்வது 'அவரவர்' விருப்பத்தைப் பொறுத்தது!

தமிழன் தனது பண்டிகைகளையும், சம்பிரதாயங்களையும் இழந்து கொண்டு போவதானது... தமிழினத்தின் தற்கொலைக்கு ஒப்பானது!

நேற்று விவாதத்தில் தந்தி டீவிகாரன்  கேட்ட கேள்விக்கு  வீரமணி  அடிக்கடி  சொன்ன  பதில்  நான் நாயக்கர்  ஒரு  சட்டவாளர்  என்பதை தவிர வேறு  ஒன்றும்  இல்லை ....

எதுக்கு  இந்துமதத்தை  மட்டும் குறிவைத்து  செய்படுவது  இஸ்லாம் பெண்களின்  பார்தா கழட்டும்  போராட்டம்  செய்வதில்லை .....

உங்களுக்கு  பிராமணன்  தன்  பிரச்சினை  என்றால் அவர்களின்  பூணுல்  அறுக்கும்  செயலை  செய்யுங்கள்  எதுக்கு  தாலி  அறுப்பு ...

தாலி என்பது  எவர்  சொன்னது  ஒடுக்குமுறை  என்று  அது  ஒரு  அடையாளம்  திருமணம்  ஆகியவர்  என்று  அவ்வளவுதான் .

சென்னை மாகாணம் என்று இருந்தபோது (இன்றைய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரா எல்லாம் சேர்ந்தது) திராவிட அரசியல் உருவாகியது சரி.. பின்பு தமிழ்நாடு என்று பிரிந்த பிறகு திராவிட அரசியல் எதற்கு? :icon_idea:

ஆக  இந்த  தமிழர்  அரசியல் என்னவென்று  சொன்னால்  நல்லா  இருக்கும் ....அதுக்காக  திருவிளையாடல்  படம்  பாருங்க  என்று  சொல்லக்கூடாது ஆமா ... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாலியறுப்பு............சைவ / தமிழர் கலாச்சாரங்களின் அடிமடியிலே கையை வைக்கின்றார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக  இந்த  தமிழர்  அரசியல் என்னவென்று  சொன்னால்  நல்லா  இருக்கும் ....அதுக்காக  திருவிளையாடல்  படம்  பாருங்க  என்று  சொல்லக்கூடாது ஆமா ... :D

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு, திராவிட அரசியலில் இருந்து ஆந்திர, கன்னட, மலையாள அரசியல்கள் பிரிந்தபிறகு மிகுதி இருப்பது தமிழ் அரசியல்தான். ஒரு மூலப்பொருளில் இருந்து சில இரசாயனங்கள் பிரிந்துவிட்டால் அந்த மூலப்பொருளை அங்கே காணமுடியாது. மிகுதியாக இருப்பது இன்னொரு இரசாயனமாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக ஜிப்சம் உப்பில் உள்ள நீர் பிரிந்துவிட்டால் மிகுதியாக இருப்பது ஜிப்சம் அல்ல.. அது அன்ஹைட்ரைட்.

CaSO4.2H2O = CaSO4 + 2H2O :D

நீர் பிரிந்துவிட்ட பிறகும் ஜிப்சம் அப்படியே உள்ளது என்று கூறுவது பித்தலாட்டம். :o

இங்கு..

ஜிப்சம் (CaSO4.2H2O) = திராவிட அரசியல்

நீர் (2H2O) = மலையாள, கன்னட, ஆந்திர அரசியல்

அன்ஹைட்ரைட் (CaSO4) = தமிழ் தேசிய அரசியல் :icon_idea::D

அஞ்சரன் திருவிளையாடல் படம்பார்க்க போறம் நீங்களும் வாறியளே?  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி பெருமாள் சொல்லுவார் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறேன் என்று - அது இந்த ஜிப்சம் உப்பா இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி பெருமாள் சொல்லுவார் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறேன் என்று - அது இந்த ஜிப்சம் உப்பா இருக்குமோ?

அட உங்கள் ஜிப்சத்தை விடுங்கள்.

உங்களின் சுய விபரக் கோவை படித்தேன், அபாரம்!

அதுசரி, பொலொன்னறுவை ராஜஸ்த்தானியென்றால் மட்டக்களப்பும் அடங்குமா??? சும்மா தெரிந்துகொள்ளலாம் என்றுதான் கேட்கிறேன்.

அதுசரி, மட்டக்களப்பில் எந்த வருடங்களில் இருந்தீர்கள் என்று நான் கேட்டதற்கு இற்றைவரை பதில் இல்லை ? மிக்கேலில் படித்தீர்களா??

  • கருத்துக்கள உறவுகள்

தாலி அறுப்பார்...........grumpy-grandpa-waving-bye-smiley-emotico

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தாங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் என்பதற்காக இப்படியான கலாச்சாரத்துக்கு புறம்பான வேலைகளை செயய்கின்றார்கள். மிகவும் பொருத்தமான உதாரணம் குஷ்பூ.

மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட பின்பு, திராவிட அரசியலில் இருந்து ஆந்திர, கன்னட, மலையாள அரசியல்கள் பிரிந்தபிறகு மிகுதி இருப்பது தமிழ் அரசியல்தான். ஒரு மூலப்பொருளில் இருந்து சில இரசாயனங்கள் பிரிந்துவிட்டால் அந்த மூலப்பொருளை அங்கே காணமுடியாது. மிகுதியாக இருப்பது இன்னொரு இரசாயனமாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக ஜிப்சம் உப்பில் உள்ள நீர் பிரிந்துவிட்டால் மிகுதியாக இருப்பது ஜிப்சம் அல்ல.. அது அன்ஹைட்ரைட்.

CaSO4.2H2O = CaSO4 + 2H2O :D

நீர் பிரிந்துவிட்ட பிறகும் ஜிப்சம் அப்படியே உள்ளது என்று கூறுவது பித்தலாட்டம். :o

இங்கு..

ஜிப்சம் (CaSO4.2H2O) = திராவிட அரசியல்

நீர் (2H2O) = மலையாள, கன்னட, ஆந்திர அரசியல்

அன்ஹைட்ரைட் (CaSO4) = தமிழ் தேசிய அரசியல் :icon_idea::D

இதுக்குத்தான்  கேள்வி  கேட்பது  இல்லை ,

ஆசிரியர்  கேட்ட  நிறுவல் போல ...

நீங்கள் மகள் 

உங்க மகள் நான் 

ஆகவே நான் நீங்கள் 

எப்பதா நிக்குது சிம்பிள்  உதாரணம் ...

சீமான் கயல்விழி பிரிக்க  முடியாது திராவிடம் தமிழ்  :icon_idea:

அஞ்சரன் திருவிளையாடல் படம்பார்க்க போறம் நீங்களும் வாறியளே?  :D  :lol:

உடனம் பார்த்திட்டன் நான்  அதில்  ஒரு  சந்தேகம்   நீங்க  பார்க்கும்  போது  உன்னிப்பா  பாருங்க அண்ணே ..

வள்ளி திராவிட  பெண்ணு  தெய்வானை ஆரிய பெண்ணு  போல  இருக்கு  கலர்ல இதுதான்  முருகன்  இணக்க அரசியலோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் குனியும்

புதியவற்றை வரவேற்கும் தமிழரின் தலையிலும்

இந்துக்களின் தலையிலும் தான் மிளகாய் அரைக்கமுடியும்

நல்லா அரையுங்கோ..

ஆனால்

தமிழனைத்தொட்டுப்பார்

அவன் தலையில் கைவைத்துப்பார்

தலை இருக்காது என்ற நிலை வரும்

வரணும்.......

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இந்த  அரசியல்வாதிகளின் அலப்பறை  தாங்கமுடியவில்லை.

உண்மையிலேயே இவர்கள் கோமாளிகள் தானா என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது

தமிழகத்தில் இந்த  அரசியல்வாதிகளின் அலப்பறை  தாங்கமுடியவில்லை.

உண்மையிலேயே இவர்கள் கோமாளிகள் தானா என்ற சந்தேகம் அதிகரிக்கின்றது

அதை  எப்பவோ  சரத் பொன்சேகா  எப்பவோ  சொல்லிட்டார்  வாத்தியார் .

  • கருத்துக்கள உறவுகள்

சோத்தில போடுற உப்பு NaCl

ஜிப்சம்... சோடியம் குளோரைட்டை விட கரைதிறன் குறைவானது. எனவே கடல்நீரை ஆவியாக்கும் போது அது முதலில் வீழ்படிவாகிவிடும். அது தான் பாத்தி மாறி பாத்தி.. கடல்நீரை அவியாக்கி.. இறுதியில்.. சோடியம் குளோரைட் பெறுவார்கள்.

ஆனையிறவு உப்பளத்தில்.. இதே பொறிமுறைதான் பயன்படுத்தியது.

ஜிப்சத்தை சோத்தில சேர்க்கிறது என்று சொல்லுற நிலைமைக்கு ஒரு சமுதாயம் நம்மிடையே.  :lol:  :D  :icon_idea:

தமிழகத்தில்... கறுப்புச் சட்டைக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படின்னு தெரியும் தானே. அவை தாலியை அறுத்தால் தான் அவைட வாழ்க்கை முறைக்கு அது சுலபமா இருக்கும். 

இப்ப பொம்பிளைங்க தாலி ஒரு வேலி என்றே பார்க்கிறதில்ல. கள்ளம் செய்யிற பெண்களும் ஆண்களும் அதை ஒரு பொருட்டாவே மதிக்கிறதில்ல. எனவே தாலியை அறுக்கிறது.. வேலி தாண்டினவைக்கு பிரச்சனையே இல்ல.  :lol:  :D

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் தாலி ஒரு பாதுகாப்புத்தானே... ஆத்திரம் அவசரத்துக்கு , அடைவுக்கு...!  அதையும் அறுத்துப் போட்டு அம்மணிகளை நிர்க்கதியாக்கப் போறார்கள்..! தில் இருந்தால் அறுக்கும் ஒவ்வொரு தாலிக்கும் அப் பெண்ணின் கையில் அம்பதினாயிரம் குடுத்திட்டு அறுக்கட்டும்....!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ நெடுக்கு,

ஜிப்சம் உப்பை சோத்தில சேர்க்கச் சொன்னது ஒரு பகிடியப்பா....

அதுக்குப் போய் NaCl, KCl என்று சீரியசா ஏல் கெமிஸ்றில சப்பின இங்க வந்து துப்பக் கூடாது :)

இப்படி செஞ்சா இனி ஆசனிக் வைக்கிறத விட வேறு வழியில்லை :)

ரகு,

என்ன கா கேக்கிரிய, மட்டகளப்பில்லா ம லா வா? :) நாடு முழுக்க பொலன்நறுவையின் கீழ் இருந்ததாம்.

சுய விபரக் கோவை பிடித்ததில் மகிழ்ச்சி. அதுலேயே போட்டிருக்க்கே பாலர் வகுப்பு 1 ம் தவணை எண்டு :)

புனித மைக்கேலில் படிக்கவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.