Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாகனம் வாங்க உதவி தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது.

 

எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன்.

 

எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா  RAV ஐ பரிந்துரைக்கின்றனர்.

 

எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

டொயோட RAV 4 நல்ல வாகனம் தான். நான் கன காலமா ஹோண்ட சிவிக் தான் பாவிக்கிறான். ஆனாலும் நீங்கள் உயரம் கூடிய வாகனத்தை எதிர்பார்ப்பதால் எதாவது SUV க்கு போவது நல்லது. எனது அபிப்பிராயப்படி டொயோட Fortuner நல்ல வாகனம். RAV 4 ஐ விட கொஞ்சம் பெரிது. அல்லது சவோர்லேட் கப்டிவ வும் நல்லது. எதுக்கும் நீங்கள் கார் விற்பனை நிறுவனவனங்களுடன் தொடர்புகொண்டு test drive செய்து பார்த்து உங்களுக்கு பொருத்தமானதை வாங்கலாம் .

toyota-fortuner-2015-1-630x421.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ரொயொற்றா  RAV முதுகுவலிக்கு நிவாரணம் தராது. ஏனெனில் இது சிறிதளவே உயரமுடையது. ஆனால் எரிபொருள் பாவனை நன்று. உங்களுக்கு ஜீப் தான் வேண்டும் என்றால் புதிதாக வந்த மெடலைப் பாருங்கள். அமர்ந்து பார்த்து உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் மட்டும் தெரிவு செய்யுங்கள். மற்றவர் சொல்கிறார்கள் என்பதற்காகவோ அன்றி அழகுக்காகவோ எடுப்பதைத் தவிருங்கள். நீங்கள் குழந்தை குட்டிக்காரன் என்றால் volkswegan passat வான் எடுக்கலாம். டீசல் எடுத்தால் நன்கு பாவிக்கும். முதுகுக்கு மிக்க நேர்த்தியாகவும் இருக்கும். தனி ஆள் என்றால் ஹோண்டா கூட பரவாயில்லை. BMW ஜீப் பார்க்க அழகுதான் ஆனால் இருக்க ஏற்றது அல்ல. காசுப் பிரச்சனை இல்லை எனில் audi கூட எடுக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

Nissan NV 200

Hyundai i800

ரெண்டும் உயரமான வாகனங்கள் ( ஹை ஏஸ் போல).

நிசான் 7 சீட் ஆனால் 1.4 டீசல்

ஹையுண்டாய் 8 சீட் ஆனால் 2 டீசல்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அம்பாஸிடர் கார் வாங்கினாலும் அமெரிக்க வாகனத்தை வாங்கமாட்டேன். :D

  • கருத்துக்கள உறவுகள்

sitzkeile2.jpgsitzkeile.jpg

 

நான் வைத்திருப்பதும், ரொயொற்றா கொறலா தான்.... உண்மையில் அதன் ஆசனம் பின்பக்கம் பதிவு.

நீங்கள் முதுகு வலி காரணமாக, நீங்கள் வைத்திருக்கும் காரை மாற்ற முதல்.....

படத்தில் உள்ள ..... Sitzkeile  வாங்கி (15 € தான், அதன் ஆங்கிலப் பெயர் தெரியவில்லை)) வைத்து ஒரு மாதம் காரை ஓடிப் பார்த்து விட்டு.. அதற்குப் பிறகும்.... முதுகு வலி இருந்தால் மாற்றுங்கள். அத்துடன் வீட்டில், அலுவலகத்தில், சாப்பாட்டு மேசையில் இருக்கும் போதெல்லாம்... இந்த.... Sitzkeileவை பாவிக்க வேண்டும்.

அதற்குப் பிறகு... முதுகு வலி, உங்களுக்கு... "ரற்ரா" காட்டி விட்டுப் போய்விடும். :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  toyota highlander  hybrid  உங்கள் தேவையை பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்.

 

2014_Toyota_Highlander_Hybrid_Platinum_1

முதுகு வலிக்கு கார் மாத்திரமா பிரச்சனை ? அலுவலக இருக்கை தான் முக்கிய பிரச்சனை. காரில் எவ்வளவு நேரம் இருப்பீர்கள் ??
 
உறவினர் ஒருவரின் கொறலாவை ஒரு நாள் ஓடினேன். நம்மட பின் பக்கம் றோட்டில் தேஞ்சு நெருப்பு பொறி பறந்த மாதிரி ஒரு ஃபீலிங்.
( அவ்வளவு பதிவு )
 
  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் சொல்வது போல்...

காரிலோ

அலுவலகத்திலோ

ஏன் வீட்டிலும் கூட எவ்வாறு இருக்கின்றோம்?

எவ்வளவு நேரம் இருக்கின்றோம் என்பது முக்கியம்..

 

நான் பல வருடங்களாக உயரமான வாகனமே வைத்திருக்கின்றேன்.....

தற்பொழுதெல்லாம் உயரம் குறைந்த வாகனங்களில் இருப்பதோ

இறங்குவதோ மிகவும் சிரமாகப்போய்விட்டது எனக்கு...

 

இதற்கு உங்களது பொருளாதாரநிலை முக்கியம்...

எப்பொழுதும் உயரமான வாகனம் இரு மடங்கு விலை அதிகம்

அத்துடன் பாவிப்புச்செலவும் இருமடங்கு..

 

உதாரணமாக இதற்கு ஒரு ரயர் மாற்றும் செலவுக்கு

சிறிய கார்களின் 4 ரயரையும் மாற்றிவிடலாம்..

 

இது முதல் வைத்திருந்தது...

images.jpg

 

இது தற்போது....

 

Ford_Galaxy_2_0_TDCi_Titanium_II_Facelif

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது.

 

எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன்.

 

எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா  RAV ஐ பரிந்துரைக்கின்றனர்.

 

எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.

 

இதில் ஒரு மோடலை எடு ராசா. சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

 

tPixofTransportationinThailand-vi.jpg

 

2_wa.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் ஒரு மோடலை எடு ராசா. சுற்றுச்சூழலுக்கும் நல்லது.

 

tPixofTransportationinThailand-vi.jpg

 

2_wa.jpg

 

bullock_cart.jpg

 

கிழவி வண்டிலை சொல்லாத வரைக்கும் சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
image.jpg
  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் வாங்கியாச்சோ

 

உறவினர் ஒருவரின் கொறலாவை ஒரு நாள் ஓடினேன். நம்மட பின் பக்கம் றோட்டில் தேஞ்சு நெருப்பு பொறி பறந்த மாதிரி ஒரு ஃபீலிங்.
( அவ்வளவு பதிவு )

 

 

அண்ணை corolla வை விட ஹோண்ட சிவிக் இன்னும் பதிவு. ஆனாலும் ஓடுவதற்கு மிகவும் வசதியானது corolla வை விட பாரம் கூட எனவே 120 ல போனாலும் ஒரு அலுங்கல் குலுங்கல் இருக்காது. என்ன ரோட்ல ஸ்பீட் ஹம்ப் வந்தால் சிலவேளை கீழ்பக்கம் உரஞ்ச பார்க்கும் கவனமா ஓடினால் சரி

Honda CRV வாங்கலாம் விலையும் ஓக்கே, (4 wheel drive)

 

2015-Honda-CR-V-Touring.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் ஜேர்மன் தயாரிப்பான Mercedes Benz GLK அல்லது BMW வாங்கவே நான் சிபாரிசு செய்வேன் .

நான் பாவிக்கும் வாகனம் Jeep-Commander. எனக்கு மிகவும் சௌகரியமான வாகனம் .

ஆகவே அடிக்கடி தூர பயணம் மேற்கொள்வீர்கள் என்றால் நான் மேற் குறிப்பிட்ட வாகனத்தில் ஒன்றை தெரிவு செய்யுங்கள் .

 

 

jeep-commander-04.jpg

முதலில் நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்கள்? அந்த நாட்டில் உள்ள உள்ளூர் தயாரிப்பு வாகனங்களை வாங்க முயற்சி செய்யுங்கள்.இது பராமரிப்பு செலவை குறைக்கும்.உள்ளூர் தயாரிப்புகள் எப்போதும் பெளதீக சீதோஸ்ண நிலைக்கு ஏற்றனவாக உருவாக்கப்படுகின்றன.எப்போதும் குடும்ப மகிழூர்ந்துதான் (VAN) பாதுகாப்பானதும் வசதியானதும் சிக்கனமானதும் என்று கூறலாம்.இந்த வருட பாதுகாப்பான குடும்ப மகிழூர்ந்தாக ஹொண்டா ஒடிசி வாகனம் தெரிவாகியுள்ளது.(விபத்தின் போது பயணிகளுக்கான பாதுகாப்பு இதில் அதிகம் என்கிறார்கள்)இதற்கான காப்புறுதிக் கட்டணமும் சாதரண மகிழூர்ந்திலும் (CAR) விடக்குறைவு.ஜீப் வண்டிக்கு ஒப்பான எஸ் யூ வி வாகனங்கள் குலுக்குதல் மற்றும் தள்ளு விசையில் இயக்கப்படுபவை.தள்ளு விசையில்(REAR WHEEL DRIVE) இயக்கப்படும் வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர விசையில் (4x4) இயக்கப்படும் வாகனங்களும் பனிக்காலத்தில் வழுக்க கூடியவை.ஆகவே இழு விசையில்(FRONT WHEEL DRIVE) இயக்கப்படும் வாகனங்களே சிறந்தது.ஹொண்டா கார் பற்றிய கருத்து பார்த்திருந்தேன்.அந்த கார்களின் இருக்கைகள் சற்று உயரமாகவிருப்பதனால்.கால் வைத்து இருக்க இடவசதியுண்டு.அந்தக்கம்பனி இப்போது ஜப்பானிடம் இல்லை.இதை அமெரிக்காவாங்கி விட்டார்கள்.ஜப்பான் வாகனம் தான் நல்ல வாகனம் என்று எண்ணி ஏமாந்து விடாதீர்கள். உதாரணத்துக்கு (MAN) ஒரு ஐரோப்பிய கம்பனி தயாரிக்கும் பிரசித்தி பெற்ற கனரக வாகனம்.இதை இந்தியாவிலும் சீனாவிலும் தயாரிக்கின்றார்கள்.இதே போலத்தான் பென்ஸ் கூட இந்தியாவில் உருவாக்கப்படுகின்றது. தற்போதைய திறந்த பொருளாதார வர்த்தகக் கொள்கையின் மூலம் உற்பத்தி செலவை குறைத்து கொள்கின்றனர்

Edited by BLUE BIRD

Buy this..! :)

15k5g-toyota-fj-cruiser-hero-940x529.png

மணல் மற்றும் சேற்று நிலப்பகுதிக்காக பரிந்துரைக்கப்பட்ட வாகனம்

16.jpg

 

எனது சகோதரம் (ஒபாமா) இதைத்தான் பாவிக்கின்றார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.