Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2025இல் இந்தியா சிதறலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்

 

1.jpg
 
 
 சுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பலநாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்அதேபோல இந்தியத் தேர்தல்ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் திருலிண்டோ அவர்களும் ஓய்வு பெறுவதற்குமுன் ஊடகவியலாளர் சந்திப்பில் “இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் தேர்தல்முறை எவ்வாறு இருக்கும்?” என்ற கேள்விக்கு விடை அளிக்கும் போது “இருபத்தைந்துஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இருக்குமா?” என்று பதில் கேள்வி எழுப்பினார்இதுபோன்றஐயங்கள் சிந்தனையாளர்களிடையே தோன்றிக் கொண்டே இருக்கின்றனகாரணம் தேசஅரசுகளை நிறுவிக் கொள்ளும் தகுதியும் ஆற்றலும் உள்ள பல்வேறு தேசிய இனங்கள் இந்தியஒற்றை வல்லாண்மை அரசின் காலனிகளாக சிறைப்பட்டிருப்பதுதான்தேசிய இனங்கள் தங்களின்அடையாள மீட்புக்காகவும் நீர்நில உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்திற்காகவும் தொடர்ந்துபோராடிக் கொண்டிருக்கின்றனஇந்தத் தொடர் போராட்டங்களுக்கு இந்திய ஒற்றை வல்லாண்மைஅரசு முகம் கொடுக்க முடியாமல் போகும் நிலையில் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்றுஓப்பன் (OPEN) என்ற ஆங்கில வார இதழில் (சூலை, 2010) வெளியான கேஸ்ரோலிக் குழுவின்ஆய்வறிக்கையின் சாரமே இக்கட்டுரை.
 
·         இந்திய ஐக்கிய நாடுகள்
·         அரை – தற்சார்புள்ள நகர அரசுகள்
·         22க்கும் மேலான புதிய அரசுகள்
 
இந்திய ஆளும் வர்க்கம் மாற்றுத் திட்டங்கள், வழிகள் மேற்கொள்ளாவிட்டால் 2025இல் இந்தியத்துணைக் கண்டம் இந்த திசை வழியில்தான் செல்லப்போகிறது எனக் கூறுகிறது ஆய்வறிக்கை.
 
கேஸ்ரோலிக் குழு’ - நிதிவணிகம்பொது அலுவல்ஊடகம்கொள்கை உருவாக்கம்தன்னார்வதொண்டு நிறுவனங்கள் என்று பல துறைகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் இந்தியமரபு வழிவந்த ஐம்பது வயதிற்குட்பட்ட உயர்மட்ட வல்லுநர்களைக் கொண்டது.
 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிமக்களின் வாங்கும் சக்திஉலக அரங்கில் இந்தியா பெற்றுள்ள ஏற்புஎன்ற பெருமித நிலை ஒருபுறம் உள்ளதுதகவல் அறியும் சட்டம்வாக்காளர்களின் முதிர்ச்சி என்றவிழிப்புணர்வு நிலையும் வளர்ந்துள்ளது. ஆயினும், கட்டுக்குள் கொண்டுவர முடியாத எங்கும்நிறைந்திருக்கும் இலஞ்சம், ஊழல், அதிகாரவர்க்கத்தின் இரக்கமற்ற ஆணவப் போக்கு மறுபுறம் உள்ளது.
 
“இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள சமூக உணர்வாளர்கள்சிந்தனையாளர்கள் பலஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும்புறக்கணிக்கும் போக்கு மறுபுறம்” என்று அதிகார வர்க்கத்தின் மனப்போக்கை படம் பிடித்துக்காட்டுகிறது.
 
“மக்கள் தொகைப் பெருக்கம் ஏற்படுத்தும் அழுத்தங்கள்மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் உண்மைநிலைக்கும் உள்ள இடைவெளிசாதி மற்றும் பழங்குடி மக்களின் சிக்கல்களின் வேர்களைக்கண்டறியும் அக்கறையின்மை. மேலும் அவர்களின் வாழ்வாதாரம்சொத்துப் பாதுகாப்புசட்டம்ஒழுங்கு, நீதிக்குப் பொறுப்பு ஏற்கும் கடமையைத் தவிர்க்கும் போக்கினால் மா.லெ. குழுக்களின்வன்முறைப் போராட்டங்களுக்கு வழிவகுத்தல் போன்ற நடவடிக்கைகள் இந்திய ஒருமைப்பாட்டைக்கேள்விக்குள்ளாக்கும் காரணிகளாகும்” என்று இந்த ஆய்வுக்குழுக் கூறுகிறது.
 
மேலும் பாகிஸ்தான்வங்க தேசம்சீனாநேபாளம்மியான்மர் போன்ற அண்டை நாடுகளில் ஏற்படும்அரசியல்பொருளாதாரசமூக மாற்றங்களினால் இந்தியாவில் ஏற்படும் தாக்கங்கள்அண்டைநாடுகளில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக அந்நாட்டு மக்கள் இந்தியாவிற்கு இடம் பெயரும்வாய்ப்பும் அதன் விளைவாக மண்ணின் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நெருக்கடியும் அடையாளஇழப்பும் ஏற்படுவதற்கு எதிராக வெளியாருக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கும் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
 
பல்வேறு காரணங்களால் நிலவுடைமை நொறுங்கிப் போவதாலும் இடுபொருள்களின் விலையுயர்வு,விளை பொருள்களுக்கு உரிய ஞாயமான விலையின்மைவெள்ளப் பெருக்குவறட்சி போன்றசொல்லொன்னா துயரங்களுக்கு ஆட்படும் விவசாயிகளும்விவசாய கூலிகளும் நகர்ப்புறங்களைநோக்கி படையெடுப்பதால் நகர்ப்புறங்கள் குடிநீர்ப் பற்றாக்குறைசுகாதாரச் சீர்கேடுகளுக்குஉள்ளாவதால்புறநகர்ப் பகுதிகள் வேகமாக உருவாதல்உழவுத்தொழில் நசிவால் உணவு உற்பத்திகுறைந்து உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய அபாய நிலை ஏற்படும்.
 
வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு சுருங்கிப் போதல்உள்நாட்டில் படிப்புக் கேற்ற வேலை தேடும்இளைஞர்கள் பெருகுதல் இந்நெருக்கடிகளின் விளைவாக இளைஞர்கள் மதங்களின் பிடியிலிருந்துவிலகி பகுத்தறிவுச் சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படுதல் என்ற பல்வேறு காரணிகளின் காரணமாக,இந்த நிலை ஏற்படும் எனத் தங்களின் முடிவுகளுக்கானக் காரணத்தை வரிசைப்படுத்துகிறதுகேஸ்ரோலிக் குழு.
 
இறுதியாகநிலவும் நெருக்கடிகளுக்கு அடிப்படையானக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைமுற்றாகக் களைவதற்கான தெளிவான கொள்கைத் திட்டங்களை முன்வைக்காமல், அச்சிக்கல்கள்வரம்பு மீறாமல், அதே நேரத்தில் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் ஆளும்வர்க்கத்தினுடைய அணுகுமுறை கவலையளிப்பதாகச் சுட்டிக்காட்டுகிறது அக்குழு.
 
கேஸ்ரோலிக் குழு மேலே பட்டியலிட்டுள்ள முரண்பாடுகள் முற்றிவரும் நிலையில் இந்தியாதவிர்க்க இயலாதவாறு மீண்டும் பிரிவினைக்கு உள்ளாகும் என்னும்  ஆய்வு முடிவுகள் அச்சத்தின்விளைவாக எழுந்த கற்பனையாக இருக்குமாஅல்லது உண்மையில் நடந்தேறுமாகேஸ்ரோலிக்குழு’ அளித்துள்ள காலவரையரைக்குள் (2025) பிரிவினை நடந்தேறாவிட்டாலும்இந்தியா பல தேசங்களாகப் பிரிவது தவிர்க்க முடியாதது என்பது இயக்கவியல் உணர்த்தும் பாடம்.
 
இந்திய விடுதலைப் போருக்குத் தலைமைதாங்கிய பெருமுதலாளியப் பார்ப்பனிய இந்தி ஆதிக்க ஆற்றல்கள் வெள்ளையனை வெளியேற்ற அவர்களால் செயற்கையாக இணைக்கப்பட்ட பல்வேறுமொழி இன மக்களுக்கு ஆசைவார்த்தை கூறியும் உறுதிமொழியளித்தும் தங்களுக்குப் பின்அணிதிரட்டிக் கொண்டார்கள்விடுதலைக்கு முன் மாநிலங்கள் விரும்பினால் பிரிந்து போகலாம்என்று வாக்குறுதி அளித்தவர்கள் விடுதலைக்கு பின் மாநில அதிகாரங்களைப் பறித்து மாநகராட்சிஅளவிற்கு மதிப்பிழக்கச் செய்தனர்மொழிவழி மாநிலங்களைப் பெற உயிரிழப்பும் பெரும்போராட்டங்களும் தேவையாயிருந்தனஇவ்வாறு பல வழிகளிலும் வஞ்சிக்கப்பட்ட பன்மொழி பேசும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களை மீட்டெடுப்பதற்காகவும் வாழ்வுரிமைக்காகவும் நீர் -நில உரிமைகளுக்காகவும்சட்டம் ஒழுங்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகவும்தொடர்ந்து போராடி வருகின்றனர்.
 
இன்றைய காலகட்டம் தேசிய இன உரிமைப் போராட்டக் காலகட்டம். ஒரு நாடு என்ற சிறைக்குள்அடைக்கப்பட்ட பல்வேறு தேசிய இனங்கள் பிரிந்து பல்வேறு தேசிய இன அரசுகள் உருவாகிக்கொண்டிருப்பதும், பிரிந்திருந்த தேசிய இனங்கள் ஒரு தேசமாகஒரு நாடாக உருவாகிக் கொள்வதுமான காலகட்டம். 14 நாடுகளைக் கொண்டிருந்த ஐரோப்பா முதல் உலகப் போருக்குப் பின்26 நாடுகளாகவும் இரண்டாம் உலகப் போருக்கு பின் 35 நாடுகளாகவும் மாறியதுசோவியத் ஒன்றியம்வீழ்ச்சிக்குப் பிறகு புதிதாக 15 நாடுகள், செக்கோசுலோவேக்கியா இரண்டு நாடுகளாதல்,யூகோசுலேவியா ஆறு நாடுகளாதல் எனப் புதிய தேசிய இன அரசுகள் உருவாயினகனடாவில்கியுபெக்கும் கூட்டு முடியரசில் (United Kingdom) ஸ்காட்லாந்தும் தனி அரசு இலக்கை நெருங்கிவருகின்றன.
 
உலகமயத்தை வலியுறுத்துகிற உலக வணிக மாநாடுகள் நடைபெறும் காலங்களில், உலகின் பலபகுதிகளில் வாழும் பல தேசிய இன மக்கள் தங்கள் அடையாளங்களான பாரம்பரிய உடைகளுடனும்,அணிகலன்களுடனும்உற்பத்திப் பொருட்களுடனும் மாநாடுகள் நடக்கும் அரங்குகள் முன் கூடிஆர்ப்பாட்டம் செய்தும்உலகமய மாநாட்டுக்கு மாற்றாக தேசிய இன மக்களின் மாநாடுகள் நடத்தியும்வருகின்றனர்இதுபோன்ற நடவடிக்கைகள் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் அடைபட்டுச்  சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் தேசிய இன மக்களிடையே நம்பிக்கையையும் எழுச்சியையும் ஊட்டிவருவதால் அந்நாடுகள் கொதி நிலையை அடைந்து கொண்டிருக்கின்றன.
 
இந்தியா ஒரு தேசம் அல்ல, பல தேசங்களைக் கொண்ட ஏகாதிபத்திய நாடு என்ற முடிவிற்கு வருவதுதவிர்க்க முடியாததுமாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் இந்தியாவும் இன்று உலகம்போய்க் கொண்டிருக்கும் திசைவழியில்தான் தவிர்க்க முடியாமல் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதுஎன்பதற்கு அடையாளம்தான் இந்தியத் தேசியம், இந்திய ஒருமைப்பாடு முழக்கங்கள்கேள்விக்குள்ளாக்கப்பட்டு மாநில உணர்வுகள் மொழி, இன உரிமை முழக்கங்கள் முன்னுக்கு வருவது!
 
இன்றைய உலக சமூகத்தின் அடிப்படை அலகு ஒரு தேசிய இனம்அதற்கொரு நாடு என்பதாகும்.இந்த அறிவியல் அணுகுமுறையில் முகிழ்த்ததுதான் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின்,
 
எமது தேசிய மொழி தமிழ்
எமது தேசிய இனம் தமிழர்
எமது தேசம் தமிழ்த் தேசம்
எமது இலக்கு  இறையாண்மையுள்ள  தமிழ்த் தேசக் குடியரசு
 

என்னும் தமிழ்த் தேசியக் கருத்தியல் இயல்பானதுஅறம் சார்ந்ததுஇது ஒரு கட்சியின்,இயக்கத்தின் கருத்தியல் அன்றுஇது ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கருத்தியல். தமிழ்த் தேசியப் பேரியக்கம் முன்வைக்கும் தமிழ்த் தேசியம் சரியான நிலைபாடு என்பதைத் தான் கேஸ்ரோலிக் குழு அறிக்கை மறுவகையில் உணர்த்துகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் தமிழர்கெல்லாம் திருநாள்!

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் தமிழர்கெல்லாம் திருநாள்!

 

ஆனால் தமிழ் நாட்டுடன் சேரவேண்டிய நிலை வருமோ? நினைத்துப் பார்க்க முடியவில்லை! (No offense ராஜவன்னியன்! :D )

  • கருத்துக்கள உறவுகள்

நோ......

அது சட்டியில் இருந்து நெருப்புக்குள் குதித்த மாதிரி ஆகிவிடும் ( நோ ஒபென்ஸ் எகெய்ன்).

ஒரு மொழி பேசும் இரு நாடுகளாக இருந்து விட்டுப்போவேமே. கனடாவும், யு எஸ் சும் போல.

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்னம் நினைப்பதுண்டு.. இந்தியா பிளவுபட்டால் வரைபடம் எப்படி இருக்குமென்று..

ஆந்திரா நாடு, கேரளா நாடு, கர்நாடகா நாடு, மகாராஷ்டிரா நாடு இத்யாதி.........

மிகுதி இந்தி பேசும் மாநிலங்கள் "இந்தியா"வாக இருக்கும்.. அந்த நாட்டின் வால்போல தமிழ்நாடு தொங்கிக் கொண்டிருக்கும்.. :(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

மண்டையைப் போடுவதற்கிடையில் அந்த கண் கொள்ளா காட்சியை காண வேண்டும்.

 

தமிழ்நாடு தனியே நின்று ஓகோ என்று வர வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, சந்தோஷ நாளை பார்த்த பிறகு தான்.... கண் மூட வேண்டும்.
 

இந்தியா சிதறிய முதல் நாள், முதல் விமானத்தில் தமிழ்நாடு சென்று... அங்குள்ள மக்களுடன், எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வேன்.

அந்த, சந்தோஷ நாளை பார்த்த பிறகு தான்.... கண் மூட வேண்டும்.

 

இந்தியா சிதறிய முதல் நாள், முதல் விமானத்தில் தமிழ்நாடு சென்று... அங்குள்ள மக்களுடன், எனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வேன்.

நிச்சயமா சிறியர்.

நானும் உங்களுடன் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இணந்து கொள்வேன்.  :D  :icon_idea:

தமிழ் ஈழம் கிடைக்க முன்னம் தமிழ் நாடு இந்தியாவிலிருந்து பிரிவதை பார்க்கவேண்டும். 
 

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமா சிறியர்.

நானும் உங்களுடன் அந்த மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் இணந்து கொள்வேன்.  :D  :icon_idea:

 

அப்போ.... தமிழ்நாட்டு ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ.. 

வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்கள் தான் இருப்பார்கள்.

அவர்களை சந்தித்து, கை குலுக்கவும்... ஆசை. :)  

Edited by தமிழ் சிறி

தமிழ்நாடு தனிநாடாக பிரிந்தாலும் திமுக, அதிமுக போன்ற ஊழல் கூட்டம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன? அப்ப அந்த ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காபத்த முடியாது.
முதல்ல தமிழ்நாட்டில ஒரு தமிழன் (நீதி நேர்மை ஞாயம்  உள்ள ஆள்) முதலமைச்சர் ஆக வரவேண்டும். அதைவிட்டு வந்தவன் போனவன் எல்லாம் முதலமைச்சர் ஆக இருந்தால், அவனுக்கு என்ன நாடு எப்படிபோனாலும், அவனுக்கு தன்ரை சொந்த பந்தங்களுக்கு சொத்துப்பத்து, பதவி பட்டம் சேர்ப்பதில்தான் கவனம் இருக்கும், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும். 
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு தனிநாடாக பிரிந்தாலும் திமுக, அதிமுக போன்ற ஊழல் கூட்டம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் தமிழ்நாட்டின் நிலை என்ன? அப்ப அந்த ஆண்டவனாலும் தமிழ்நாட்டை காபத்த முடியாது.

முதல்ல தமிழ்நாட்டில ஒரு தமிழன் (நீதி நேர்மை ஞாயம் உள்ள ஆள்) முதலமைச்சர் ஆக வரவேண்டும். அதைவிட்டு வந்தவன் போனவன் எல்லாம் முதலமைச்சர் ஆக இருந்தால், அவனுக்கு என்ன நாடு எப்படிபோனாலும், அவனுக்கு தன்ரை சொந்த பந்தங்களுக்கு சொத்துப்பத்து, பதவி பட்டம் சேர்ப்பதில்தான் கவனம் இருக்கும், நாடு குட்டிச்சுவர் ஆகிவிடும்.

தமிழ்நாடு பிரிந்துவிட்டது என்றாலே இந்தப் போலி திராவிட மற்றும் பார்ப்பன குமபல்கள் துரத்தப்பட்டுவிட்டன என்று பொருள்..! :icon_idea::D

தமிழ்நாடு பிரிந்துவிட்டது என்றாலே இந்தப் போலி திராவிட மற்றும் பார்ப்பன குமபல்கள் துரத்தப்பட்டுவிட்டன என்று பொருள்..! :icon_idea::D

அப்படி நடந்தால் அது மிகவும் சந்தோசமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் பிரியுமென்றால்

அதற்கான விலையையும் ஈழமே கொடுக்கவேண்டியிருக்கும்....

தமிழகம் எமது  தொப்பிள்க்கொடி என்பதால் தான் தற்பொழுதும் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்

தமிழகம் பிரியுமென்றால் தற்பொழுது கொடுத்துக்கொண்டிருப்பதைவிட

அது மிகமிக அதிகமாக இருக்கும்......... :(  :(  :(

தமிழகம் பிரியும்போது கருணாநிதி உயிருடன் இருப்பாரா?

ஆரோ ஒருவர் 2 நாடு கேக்குறார், ஒரு நாட்டுக்கு ஒழுங்கா போராட வக்கில்லை அதுக்க 2 நாடு

நாடு கேட்ட கேடுக்க நரி ஞாயிற்டுக்கிழமையில் லீவு கேட்டிச்சாம் :icon_mrgreen:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி நடந்தால் மகிழ்ச்சியே .
ஆனாலும் இந்தத் திராவிடக் கட்சிகள் இருக்கும் வரை தமிழ் நாடு  இந்தியாவிலிருந்து பிரிவதற்குச்  சாத்தியமில்லை. முதலில் அவர்களை ஒழித்துத் தமிழர்கள்  தமிழ் நாட்டைக் கைப்பற்ற வேண்டும்

இந்தியாவில் பல நாடுகள் உருவானாலும் ஈழமும் தமிழ் நாடும் தனித்தே இருக்கவேண்டும்

அப்போ.... தமிழ்நாட்டு ஜனாதிபதியாகவோ பிரதமராகவோ.. 

வைகோ, சீமான், வேல்முருகன் போன்றவர்கள் தான் இருப்பார்கள்.

அவர்களை சந்தித்து, கை குலுக்கவும்... ஆசை. :)  

யாரப்பா வேல்முருகன் . :icon_mrgreen:

 

Edited by arjun

இறுதியாக வந்த தகவலின் படி....இந்தியா சிதற மாட்டாதாம் :icon_idea:

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

நீங்கள் எங்கள் சோழமகராஜர்களை மறந்துவிட்டீர்களா? இல்லை மறைத்துவிட்டீர்களா?

தாயக நிலங்கள் இணைய தரைவழி பாலம் கட்டுவோம் அந்நன்னாளில் :)

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

 

அகண்ட தமிழ் ஈழத்திலோ

அகண்ட தமிழகத்திலோ ஆசையில்லை

பல தமிழர் நாடுகள்

இதுவே தேவை...

அவசியமும் கூட..

 

இதுவும் கற்பனை தான்

ஆனால்....

  • கருத்துக்கள உறவுகள்

சேவயர்,

நரிக்கும் ஆசா பாசங்கள் இருக்கும் தானே?

:)

ஜின்சிஸ் கான், தைமூர், அலெக்ஸாண்டர், பிரித்தானியா, சோவியத் இப்படிப் பலர் கட்டிய சாம்ராஜ்யங்களை காலம் காலில் போட்டு மிதித்தது வரலாறு.

இது இந்தியாவுக்கும் நடக்கலாம். கட்டாயம் என்றில்லை. நடந்தால் நல்லம் அவ்வளவே.

தமிழ் நாடு தனி நாடாகினால் ஒரு வருடத்துக்குள் இலங்கை பிளவு படுவது தவிர்க முடியாதது ஆகும்.

கற்பனைதான் ஆனா நல்லா இருக்கில்ல :)

 

தனி நாடு கிடைத்தாலும் தமிழர்கள் பிரிந்து அடிபட்டு மறுபடியும் சிங்களவனிடம் மண்டியிடுவதை தவிர்க்க முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

மறந்துதான் போனேன். கடாரம் கண்டவன் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பான் - நீங்கள் சொல்பது 100% யதார்தமான பேச்சு. ஜாதிக்கொரு நாடு கேட்டிட மாட்டோம் :)

வடக்கு கிழக்கு என பிரிந்திட மாட்டோம்?

நரிண்ட தலையில ஆயிரம் பேனனாம், ஆனா சிங்கத்துக்கு மண்டை உடையணும்ணு ஆசப் பட்டிச்சாம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையும்போது ஈழத்தீவில் தமிழர்கள் இருக்கமாட்டார்கள். எல்லோரையும் சிங்களவர்கள் ஒன்றில் விரட்டியடித்திருப்பார்கள் அல்லது சிங்களவர்களாகவே மாற்றியிருப்பார்கள். இலங்கையில் தமிழ் பேசுவது முஸ்லிம்களாக இருப்பார்கள் <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.