Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலா - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலா

-       வ.ஐ.ச.ஜெயபாலன்

 

நீலப் பாவாடையில் குங்குமமாய்  

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்.  

வாழ்த்துடன் நிறைந்தன வலசைப் பறவைகள்.

எனினும் அன்பே

உலாவுக்கான உன் செல்பேசி அழைப்புத்தான்

இந்த வசந்த நாளை அழகாக்கியது,

 

 

 

வண்ணத்துப் பூச்சிகளாய்                               காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக.

காவியம் ஒன்றின் இறை வணக்கம்போல

கைகளும் படாத வெகு நாகரீகத்தோடுதான்

உலாவை ஆரம்பித்தோம்.

காடு வருக என

கதவுகளாய்த் திறந்தது.  

 

 

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட               கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

என் அன்பே

முகமறைப்பில் இருளில் இணையத்தில்

கண்காணா தொலைவில்தான்

இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..

முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்

விடுதலைப் பிரதேசமல்லவா

 

.

நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு

உன் மந்திர நினைப்புகளை ஒலி

தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..

 

 

 

எனது கவிதைதொகுதி பின்வரும் ஒன்லைன் விற்பனையில் கிடைக்கிறது

http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category

 

 

 

 

 

 

 

 

 

 

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீலப் பாவாடையில் குங்குமமாய்

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்

 

 

வண்ணத்துப் பூச்சிகளாய்

காற்றும்பூத்துக் குலுங்கும் வழி நெடுக.

 

தனித்துவமான வரிகள்.  நற்கவிதைக்கு பாராட்டுகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நட்புமிகு கவிஞர் செய்யோன் யாழ்வேந்தனுக்கு நன்றிகள்.

 

என் பணிச் சுமையின் மத்திலும் அவ்வப்போது யாழ் வருவது உங்களைப்போன்ற சித்தம் அழகிய உற்வுகளுடன் கலந்துரையாடுகிற வாய்ப்புக்காகவே.

 

உலா யாழில் முதன்முதல் வெளிவந்ததால் தமிழில் மிக பிரபலமான ஒரு சங்சிகையில் பிரசுரிக்கப்படும் வாய்பை இழந்தபோதும் நம்மவரான உங்களுடன் கலந்துரையாடல் மகிழ்ச்சி.

 

ஈழ ஆயுதப்போராட்டம்  அரசியல் இராணுவ பார்வை தொடர்பான ஆய்வுகளிலும் எனது முடிவுறாத நாவல்களில் ஒன்றையாவது முடித்திடவும் முயன்றபடிக்கு.செய்யோன் யாழ்வேந்தன் நாம் மீண்டும் என்றாவது யாழில் சந்திக்கலாம்.  

Edited by poet

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நட்புமிகு கவிஞர் செய்யோன் யாழ்வேந்தனுக்கு நன்றிகள்.

 

என் பணிச் சுமையின் மத்திலும் அவ்வப்போது யாழ் வருவது உங்களைப்போன்ற சித்தம் அழகிய உற்வுகளுடன் கலந்துரையாடுகிற வாய்ப்புக்காகவே.

 

உலா யாழில் முதன்முதல் வெளிவந்ததால் தமிழில் மிக பிரபலமான ஒரு சங்சிகையில் பிரசுரிக்கப்படும் வாய்பை இழந்தபோதும் நம்மவரான உங்களுடன் கலந்துரையாடல் மகிழ்ச்சி.

 

ஈழ ஆயுதப்போராட்டம்  அரசியல் இராணுவ பார்வை தொடர்பான ஆய்வுகளிலும் எனது முடிவுறாத நாவல்களில் ஒன்றையாவது முடித்திடவும் முயன்றபடிக்கு.செய்யோன் யாழ்வேந்தன் நாம் மீண்டும் என்றாவது யாழில் சந்திக்கலாம்.  

 

 

உங்களது பணிகள் நிறைவுற இயற்கை துணை நிற்கட்டும்.  எங்களோடும் அவ்வப்போது உரையாடுங்கள்.  ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் என்ற திரியில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறேன்.  அதில் சில உங்களை கவரும் வண்ணம் இருக்கும் என்று நம்புகிறேன்.

என்றும் மாறா அன்புடன்

சேயோன் யாழ்வேந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதை இவ்வளவு நாளும் எப்படி எனது கண்ணில் படாமல் போனது என்பது ஒரு ஆச்சரியமே!

 

உங்கள் பெயரில் உள்ள அத்தனை வலைத்தளங்களையும் அலசியிருக்கிறேன்!

 

உங்கள் கவிதையின் உவமானங்கள், கம்பன் கை பட்டிருக்கா விட்டால், இராமாயணம் என்றைக்கோ செத்துப்போயிருக்கும் என்ற எனது நம்பிக்கைக்கு வலுவூட்டுபவையாய் இருக்கும்!

 

நெடுந்தீவு ஆச்சியிலிருந்து...கனடா வானத்தில் பறந்த வாத்துக்கள் .. மலக்குடலாய் நெழிந்த தேம்ஸ் நதி வரை, மனதில் பதித்து வைத்திருக்கிறேன்!...

 

அந்த 'வழுக்கியாறு' கவிதையை மிஞ்ச இன்னுமொரு கவிதை பிறக்கவில்லை என்பதே எனது எண்ணம்!

 

உறங்கு நிலையிலிருந்து வெளியில் வாருங்கள், கவிஞரே!

 

துருவத்துக் கவிஞர்களுக்கு மட்டுமே உறங்கு நிலை தேவை!

 

வெல்லை வெளியில் திரிந்தவனுக்கும்... ஆல மரத்து விழுதுகளில்.. அன்ன ஊஞ்சல் ஆடியவனுக்கும்.. எதற்கு 'உறங்குநிலை"?

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

அழகான வரிகள், யாழில் அருமையாய் சில இடங்களில் மட்டும் மகோகனி மரங்கள் , கொன்றை மரங்கள் இருந்தன ஒரு காலத்தில். வசந்தகாலத்தில் அவை பூத்துக் குலுங்கி நிக்கும்போது நிலம் முழுதும் உருவிப் போட்ட கூறைச்சேலையாய் காட்சி தரும்...!

 

 

நன்றி ஐயா...! :)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கையூரான். எபோதாவது நாம் சந்திக்கிறபோது நிறைய பேசலாம். உலா இந்த வாரம் எழுதிய கவிதை.றாதனால்தான் உங்க கண்களுக்கு தெரியவில்லை. உறங்குநிலை கலைஞர்களின் பெரும் பிரச்சினை. வரலாறு தொட்டு தேல்விகள் ஆதரவின்மை பால் தனிமை புறக்கணிப்பு என்பவற்றுள் ஒன்றோ பலவோ தீவிரமாகும்போது கலைஞர்களை உறங்கு நிலை பாதித்திருக்கிறது. இது உலக கலை இலக்கிய வரலாற்றில் சந்திக்கிற பிரச்சினைதான். ஈழத்தில் தமிழனாக பிறந்த கலைஞர்களின் விதி இதுதானே. 

 

 

 

நன்றி சுவே, யாழில் இப்பவும் மகோகனியும் வாகையும் பூக்கவே செய்கின்றன, அமக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை. எபோதாவது சந்திப்போம்.

 

 

எனது சென்னை

தொலைபேசி இலக்கம் 00919941484253

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

படித்தவுடன் கருத்தெழுத நேரப்பற்றாக்குறைதான் காரணம். மன்னிக்கவும். வழமைபோல் உங்கள் கவிதை மிகுந்த ஆளுமையுடன் காணப்படுகிறது. உவமான உவமேயங்கள் மிக நேர்த்தியாக கோர்க்கப்பட்டுள்ளன. பலரின் கவிதைகள் ஒருமுறைதான் படிப்போம். சிலரின் கவிதைகள் பலமுறை படிக்கத் தூண்டும். அவ்வகையில் உங்கள் கவிதையும் மீண்டும் மீண்டும் படித்துச் சுவைக்க வைக்கும் தன்மையுடையது. கவிஞர் ஜெயபாலன் அவர்களே தொடருங்கள் உங்கள் படைப்புக்களை. படித்துச் சுவைக்க பலர் காத்திருக்கிறோம்.

நல்லதொரு கவிதையை தந்த பொயட்டுக்கு நன்றி... மீசை நரைத்தாலும் மனுசனுக்கு காதல் கவிதைகளின் ரசனை மட்டும் இன்னும் பீறிடுகின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

உலா

 

 

 

என் அன்பே

முகமறைப்பில் இருளில் இணையத்தில்

கண்காணா தொலைவில்தான்

இன்னும் தமிழ்பெண் சிறகசைக்க முடியுதென்பாய்..

முதலிரவுப் படுக்கையாய் பூச்சூடிய இந்தக் காடும்

விடுதலைப் பிரதேசமல்லவா

 

.

நீ முணுமுணுக்கும் பாடலை உரக்கப் பாடு

உன் மந்திர நினைப்புகளை ஒலி

தோன்றினால் சொல் கை கோர்க்கலாம்..

 

 

கவிக்கு நன்றி கவித்தோழரே.....

உங்களுக்கு  வாழ்த்த

வகுப்பெடுக்க நம்மளவு இடம் தரா...

தமிழரின் சொத்து நீவிர்

உடல் நலத்தில் கவனம் செலுத்துக...

 

வாழ்க தோழரே....

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்குரிய காவலூர் கன்மணிக்கு என் அன்பான நல்வாழ்த்துக்கள் நீங்கள் மிக தேர்ந்த கவிதை.ஆர்வலர் ரசிகர்.  .உங்கள் கருத்துக்கள் எப்பவும் இன்ச்பிறேசன் தருபவை. தொடர்ந்தும் நீங்கள் எனது எழுத்துக்களை வாசிக்க வேணும்.

விசுவும் நிழலியும் கருத்து விவாதங்களோடும் என் எழுத்துகளில் ஆர்வம் காட்டுகிறவர்கள். இதுதான்  இன்று தமிழருக்கு அவசியமான பண்பு.  சொத்து என அடிக்கடி விழிக்கும் விசு போன்றவர்கள் என்மீது வைதிருக்கும் நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் தகுதியாக வாழவேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை 

 

நிழலி உனக்கு மீசை நரைக்கும்போது பல விசயங்களில் தெளிவு ஏற்ப்படும். உடல் உளம் நலமாயிருந்தால் 30க்கும் 80பதுக்கும் அதிகம் விதியாசமில்லை என்பதை உணர்வாய். நீ உணர்ந்து மன்னிக்க வேண்டுகிறேன் ஜெயபாலன் என்கிறபோது நான் உயிரோடு இருக்கமாட்டேனே

 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்திற்குப்பிறகு அழகான கவிதை ஒன்றை வாசிக்கிறேன். இந்தப் பொயட்டுக்கு மட்டும் எப்படி இப்படியான கற்பனைகள் தோன்றுகின்றன??????  இந்த கவிஞனின் கற்பனைஉலகைப்பார்த்து பொறாமையாக இருக்கிறது. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதாயினி வல்வை சகறா,

 

கவிதை ஆற்றல் ஆதர்சம் கவிதை தேடல் உழைப்பு  உத்திகள் சார்ந்தது, நீங்களும் ஆற்றல் மிக்க கவிஞர்தான். கவிதைக்கான ஆதர்சம் சூழ்ந்த இயற்கையும் பாராட்டும் எதிர்பால் கவிதை ஆர்வலர்களும் தருகிற  கொடைதான்.

 

கவிதைக்கான உழைப்பில் உத்திகள் சார்ந்த எடிற்றிங் முக்கியம். நமக்குள் இருக்கும் இடைவெளி பெருமளவுக்கு ஆற்றல் சார்ந்ததல்ல என்பதை புரிந்து கொள்வது பயனுள்ளது.

 

அதுசரி நான் உங்களோடு கோவம். தமிழகம் வந்து புத்தகம் வெளியிட்ட நீங்க ஏன் என்னுடன் பேசவில்லை?

 

யாழில் முன்பெல்லாம் புதிய பின்னூட்டம் வரும்போது கவிதைகள் யாழ் இனையத்தின் முன்பக்கத்தில் மேலே வரும். அது எழுதுகிறவனுக்கு ஆக்கமும் ஊக்கமும் தருவது. மீண்டும் அந்த முறையை கொண்டுவரும்படி யாழ் முனைவர்களிடம் சொல்லுங்கப்பா

Edited by poet

 

 

நீலப் பாவாடையில் குங்குமமாய்  

எழுஞாயிறு கசிய

பூத்தது விடலை வானம்.  

 

 

 

 

 

 

 

சிருஸ்டி வேட்கையில் உருவிப்போட்ட               கூறைச்சேலையாய்

வண்டாடும் மரங்களின்கீழ்

உதிரிப்பூ கம்பளங்கள்.

 

 

 

 

எத்தனை தரம் இந்தக் கவிதையை வாசித்தேன் என்றே நினைவில்லை. திரும்ப திரும்ப வாசிக்கிறேன். 

எப்படி சொல்ல... 

ஒரே வரிதான் எனக்கு நினைவுக்கு வந்தது அதுவும் உங்களின் வரிதான் 

 

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

 

மிக்க நன்றி கவிதைப் பகிர்வுக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான கவிதை அண்ணா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

மெசொபொத்தேமியா சுமேரியர். தங்களுக்கு என் அன்பான புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது கவிதைதொகுதி பின்வரும் ஒன்லைன் விற்பனையில் கிடைக்கிறது

http://www.crea.in/publicationsdetails.php?id=42&customer=inr&page=0&category

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலா இவ்வரக் குமுதத்தில் (4.5.2015 பக்கம் 58 580) இடம் பெற்உள்ளது. 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்திற்குப்பிறகு அழகான கவிதை ஒன்றை வாசிக்கிறேன் - 

வல்வை சகாறா

 

கவிதாயினி ஏன்  உங்கள் நூல்வெளியீட்டு விழாவுக்கு சொல்லவில்லை. நான் அப்போது சென்னையில்தான் இருந்தேன், கவலை

Edited by poet

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.