Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் டாட்டா காட்டிய காதலி: தூக்கில் தொங்கிய யாழ் வாலிபன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதல் தோல்வி காரணமாக யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி பொலிகண்டி பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியம் நிசாந்தன் (28) என்ற பல்கலைகழக பட்டதாரி மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் ஒரு பெண்ணை காதலித்திருந்ததாகவும், பின்னர் அந்தப் பெண் வெளிநாட்டிலுள்ள ஒருவரை திருமணம் செய்ய தயாரானபோது, அவர் அந்தப் பெண்ணுடன் கடந்த சில தினங்களாக கடுமையாக சச்சரவுப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வெளிநாட்டு மாப்பிள்ளையில் காதலி உறுதியாக இருந்தததையடுத்து, வாலிபர் நேற்று தூக்கில தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

http://deepamnews.com/details.php?nid=3&catid=25687&hit=2

எந்தப் பிரச்சனைகளுக்கும் தற்கொலை தீர்வல்ல. இவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு செக்கன்ட் தன்னுடைய தாய் தந்தையரை நினைச்சுப் பார்க்கவில்லையே.... பிறகென்ன மனுசன் இவர்...! நாட்டின் இவ்வளவு அவலத்துக் குள்ளயும் இவரைக் காப்பாற்ற என்ன பாடு பட்டிருப்பினம்...!

காதலிக்காக தற்கொலை செய்ய வேணுமென்டால் நாங்கள் எல்லாம் நாலைந்து தடவை செய்திருக்க வேண்டும். இருக்கிறது ஒரு உயிர், அதையும் ஒருத்திக்காக விட்டு விட்டால் மற்ற மூன்டு நாலுக்காகவும் விட வேறு உயிர் இல்லை. எவ்வளவு மன வலியுடனும் தியாக உள்ளத்தோடும் நாம் வாழ்ந்து கொன்டிருக்கின்றோம்...!இவருக்கொரு  இரங்கல்தான் குறைச்சல்...! ஆதங்கமாய்க் கிடக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்து சுவி அண்ணா.. இரத்தம் சூடாக இருக்கும் போது நிதானம் கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும்.. ஒரு நொடிப்பொழுது தாண்டியிருந்தாலும் அவர் முடிவை மாற்றியிருக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கலாம்.. நாங்களும் எப்பவாவது அப்பிடி ஒருகணம் யோசிச்சிருப்பம்தானே.. :unsure::D

  • கருத்துக்கள உறவுகள்

கடந்து போன பஸ்க்கு கைகாட்டி பிரயோசனமில்லை,அடுத்த பஸ்ஸில இவர் ஏற முயற்சி செய்திருக்கவேணும்.

Edited by நந்தன்

  • கருத்துக்கள உறவுகள்

தவறான முடிவுதான் எனினும் கோபம் ஏமாற்றம் என்பன நிமிட நேரத்தில் கண்ணை மறைத்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓஓ....வட் ஏ செம்...(what a shame)..காதலன் தன்னுடைய காதலிக்கா காப்புறுதி எதாவது எடுத்து வைச்சிட்டு தற்கொலை செய்தவரோ?

ஒரு செக்கன்ட் தன்னுடைய தாய் தந்தையரை நினைச்சுப் பார்க்கவில்லையே.... பிறகென்ன மனுசன் இவர்...! நாட்டின் இவ்வளவு அவலத்துக் குள்ளயும் இவரைக் காப்பாற்ற என்ன பாடு பட்டிருப்பினம்...!

காதலிக்காக தற்கொலை செய்ய வேணுமென்டால் நாங்கள் எல்லாம் நாலைந்து தடவை செய்திருக்க வேண்டும். இருக்கிறது ஒரு உயிர், அதையும் ஒருத்திக்காக விட்டு விட்டால் மற்ற மூன்டு நாலுக்காகவும் விட வேறு உயிர் இல்லை. எவ்வளவு மன வலியுடனும் தியாக உள்ளத்தோடும் நாம் வாழ்ந்து கொன்டிருக்கின்றோம்...!இவருக்கொரு இரங்கல்தான் குறைச்சல்...! ஆதங்கமாய்க் கிடக்கு...!!

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பட்டதாரிப்படிப்பு வேற... :(  :(  :(

இதுக்கு பட்டதாரிப்படிப்பு வேற... :(  :(  :(

பட்டம் பெற்றவர்கள் எல்லாம் புத்திசாலியாக இருக்கவேண்டும் என்பதில்லை. 

இதில பட்டதாரி என்பது வேறு கதை் தற்கொலை முடிவு யாருக்கும் எவ்வேளையிலும்வரலாம்

. விரக்தி , தனிமை , யாருமே எங்களுக்கு இல்லை போன்ற உணர்வு , கோபம் பழி வாங்கும் உணர்வு இவை எல்லாம் ஒன்றாக சேர்ந்து திடீரென்று முடிவு எடுத்து விடுவார்கள். ஆனால் இறக்கும் தறுவாயில் அந்த முடிவுக்காக வருந்துவார்கள். யாராவது தம்மை காப்பாற்ற வர மாட்டார்களா என ஏங்குவார்கள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

பட்டதாரி என்பது வேறை விடயம். அந்தப் பையனும் ஒரு உணர்வுள்ள உயிர் தானே, நாம் எதனையும் சொல்லலாம். எல்லோராலும் எல்லா இழப்பையும் தாங்கிக் கொள்ள முடியாது தானே. அவனது காதல் தூயதாய் இருந்திருக்கு அதாலை அவள் ஏமாற்றும் போது அதை தாங்க முடியாமல் அப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். எல்லோருடைய இதயமும் ஒரு மாதிரி அல்ல. எனக்குப் பழகாமன ஒரு பெண்ணும் இப்படித் தற்கொலை செய்து கொண்டார் 3/4 வருடங்களுக்கு முன். :(

ஏமாற்றுபவர்களும் ஒரு விதத்தில் சமூக விரோதிகள் தான். அவர்களுக்கு உரிய தண்டனை கடவுளால் ஒரு நாள் வழங்கப்படும்!!

எது எப்படியாயினும் தற்கொலை ஒரு முடிவல்ல, "எங்கிருந்தாலும் வாழ்க" என்று வாழ்த்தி விட வேண்டியது தான். 

வெளி நாடுகளில் psychologist போய்  அறிவுரைகள் எடுக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கு, எம் மண்ணில் அப்படியான வசதிகளை ஏற்படுத்தினால் இப்படியான முடிவுகளை இயன்றவரை தடுக்கலாம் என்று நினைக்கிறேன். 

பச்சை முடிந்து விட்டது மீனா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு UK இல் SAMARITANS என்ற அமைப்பு உள்ளது. யாருக்காவது தற்கொலை எண்ணம் உருவானால் இவர்களுடன் கதைக்கலாம்.

Talk to us any time you like, in your own way, and off the record – about whatever’s getting to you. You don’t have to be suicidal.

http://www.samaritans.org/how-we-can-help-you?gclid=CMbDs-Pm-sQCFSrpwgodSA4AMw

முன்னர் எனக்கு தேவைப்பட்டது. இப்ப இல்லை.
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் சீரியஸ் ஆகாமல் வடிவேலு மாதிரி ஆக்களை பக்கத்தில வச்சுக்கொள்ளுங்க.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இசை என்னோட வந்து இருக்கிறீங்களா

  • கருத்துக்கள உறவுகள்

எனி வெளிநாட்டுக்கு வந்திட்டு.. வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ராரா காட்ட சூப்பரா இருக்கும்.

பெட்டையள சரியாக் கையாள வேண்டும். இன்றேல்.. வெறும் ஏமாற்றங்களே  மிஞ்சும். அது காதலி என்றால்.. என்ன.. மனைவி என்றால் என்ன.. நண்பி என்றால் என்ன..!

கொஞ்சம் எட்டத்தில.. வைக்கிறது நல்லம்.

மேலும்.. காதல்.. கல்யாணம் மட்டுமல்ல வாழ்கை. அப்படி பார்த்தா... உலகில் மனிதனை தவிர (அதிலும் கீழத்தேய வெங்காயங்கள் தான்.. காதலுக்கு உயிரை அதிகம் விடுறது. அதுக்கு சினிமாக்களும் ஒரு காரணம். சினிமாக் காதல்.) ஜீவராசிகள் இப்பூமியில் உயிர் வாழவே முடியாது.

குறித்த இளைஞனை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :(:icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

காதலிக்கப்பட்டவளாலை ஏமாந்தால்தான் தெரியும் அந்த வலி. ஒரு கணம் எல்லாமே வெறுமையாகிவிடும். அந்த அளவுக்கு அவனின் உயிரில் அவளை கலந்துவிட்டிருப்பான். பாவம் இந்தப் பெடியன். சவலாக வாழ்ந்துகாட்டியிருக்கலாம். ஒருத்திதான் உலகம் எண்டு வாழ்ந்தால் அந்த ஒருத்தி ஏமாற்றி விட்டுத்தான் போவாள். காதல் மன்னனாக இருந்தால் பலபேர் போட்டி போட்டுக்கொண்டு நிப்பாளுகள். என்ன செய்யிறது பெடியனுக்கு வாழக் குடுத்து வக்கேல்லை.ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.  :( 

இதுக்கு  பின்னாடி  அரசியல் சதி  ஒன்றும்  இல்லையா ....

ஆழ்த்த இரங்கல்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

கண்மூடித் தனமான ' எதிர்ப்பாலுடன் ஏற்படும் ஒரு கவர்ச்சிக்குப்' பெயர் தான் காதல் என நினைக்கிறேன்!

வெறும் பொருளாதார எதிர்பார்ப்பு ஒன்றே அதைத் தகர்த்து விடும் எனில்... இது நிச்சயம் ஒரு விதமான ஒரு தலைக்காதலே! :D

பாவம் பெடியன்... வீணாகத் தனது உயிரை மாய்த்துக்கொண்டான்!

இனிமேலாவது இப்படியான துயர சம்பவங்கள் நடக்காதிருக்கட்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வாலிபனின் மனக்கவலை எனக்கு விளங்குது. அதற்கு தற்கொலை முடிவல்ல.
பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.