Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழைய ஜனாதிபதிகளை போன்று அல்ல புதிய ஜனாதிபதி: சுமந்திரன்

Featured Replies

சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி உண்மையை பேசுவார்: சம்பந்தன்

article_1431238566-unnamed.jpg

சரித்திர ரீதியாக தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில், தமிழ் மக்களுக்குப் போதிய சுயாட்சி வேண்டும் என்ற உண்மையான கருத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறுமூலை நீர்முகப் பிள்ளையார் ஆலய முன்றலில்  கிழக்கு மாகாண அமைச்சர் கே. துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (09) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிங்கள மக்கள் மத்தியில் சென்று உண்மையைப் பேசுவார் என்று எனக்குத் திடமான  நம்பிக்கை இருக்கின்றது.
தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வைப் பெற்று அவர்கள் சம அந்தஸ்துடன் வாழ வேண்டும். அதை வலியுறுத்தி உலகறியச் செய்வதற்கு உங்களது கையில் இருக்கும் வாக்குரிமை என்ற பலத்தை நீங்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இதுதான் இங்கு நான் விடுக்கும் பகிரங்கச் செய்தியும் எனது பணிவான வேண்டுகோளுமாகும்.
 
ஒரு நாட்டில் ஒரு பிரச்சினை சதாகாலமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. அது ஒரு தொடர் கதையாக இருக்கவும் முடியாது. ஏதோவொரு காலகட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும்.
சாத்வீகப் போராட்டம், அரசியல் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்று இப்பொழுது எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் முடிவுறாத பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.
 
தற்பொழுது இலங்கை அரசாங்கம் குற்றவாளிக் கூண்டில் நிற்கின்றது. மனித உரிமைச்  சட்டங்களையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களையும் மீறி நடந்தததன் காரணமாகவும் போர் நியமங்களைமீறியதன் காரணமாகவும் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
 
அந்த விடயம் தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணை நடைபெற்றிருக்கின்றது. அந்த விசாரணை அறிக்கை பங்குனி மாதம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் எழுத்து மூலமான வேண்டுகோளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கத்தின் சில வாக்குறுதிகளின் அடிப்படையில் அது பின்போடப்பட்டிருக்கின்றது. எவ்வாறாயினும் அந்த விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வெளியிடப்படவுள்ளது. அதற்கு முன்பதாக இலங்கையிலே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாக வேண்டும்.
 
தமிழ் மக்கள் அந்தப் பொதுத் தேர்தலிலே என்ன முடிவை எடுக்கப் போகின்றார்கள் என்பதை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றது. எமது மக்களின் உடனடித் தேவைகள், காணி விடயங்கள், தடுப்புக் காவலில் உள்ளவர்கள், காணாமல் போனவர்கள் அவற்றுக்கெல்லாம் மேலதிகமாக என்னவிதமான அரசியல் தீர்வை நாடி நிற்கப் போகின்றோம் என்பதை, அந்தத் தேர்தலின் மூலம் சர்வதேச சமூகத்திற்குச் சொல்லியாக வேண்டும்.
இந்த நாட்டில் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதாக இருந்தால், அரசியல் தீர்வின் அடிப்படையில் அது ஏற்படலாம் என்பதைப் பற்றியும் சர்வதேச சமூகத்திற்கு நாம் சொல்லியாக வேண்டும். தமிழ் மக்கள் தங்களின் வாக்களிப்பின் மூலமாக அவ்விதமான ஒரு அரசியல் தீர்வைத்தான் வேண்டி நிற்கின்றார்கள் என்று நாம் நிரூபித்தாக வேண்டும்.
 
நாங்கள் இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரணியிலுள்ளவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இதுதான் தமிழ் மக்களுடைய அபிலாஷை என்கின்ற ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்.
நீண்டகாலமாக பலவிதமான துயரங்களை எதிர்நோக்கும் தமிழ் மக்கள,; ஒன்றுபட்ட நாட்டிற்குள் இவ்விதமான ஒரு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்பதை நாம் உரத்துச் சொல்லியாக வேண்டும்.
எனவே, பொதுமக்களாகிய நீங்கள் உங்களது கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைப் பலப்படுத்த வேண்டிய கடமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
 
article_1431238579-01.jpg
 
www.tamilmirror.lk/145786#sthash.wMHq1nNk.dpuf

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

article_1431173024-IMG_0014.JPG

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சனிக்கிழமை (08) மட்டக்களப்புக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மட்டக்களப்பு, வந்தாறுமுலையில் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கத்தினை கௌரவிக்கும் நிகழ்வு வந்தாறுமூலை பொதுமக்களினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

வந்தாறுமுலை நீர்முகப்பிள்ளையார் ஆலய முன்றிலில் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. வந்தாறுமூலை பொதுச்சந்தையில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு கோலாகலமாக வரவேற்பளிக்கப்பட்டது. தமிழித் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கு,  மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான மாபெரும் வரவேற்பளிக்கப்படடமை இதுவே முதல்தடவையாகும். நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையினை தொடர்ந்து நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

article_1431173039-IMG_0043.JPG

article_1431173052-IMG_0053.JPG

article_1431173067-IMG_0085.JPG

article_1431173081-IMG_0077.JPG

http://www.tamilmirror.lk/145771#sthash.xEQ1WbtX.dpuf

ஐயா சம்பந்தரின் அதீத நம்பிக்கை தமிழருக்கு மீண்டும் சங்கூதப்போகுது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
சாத்வீகப் போராட்டம், அரசியல் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்று இப்பொழுது எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் முடிவுறாத பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது
எதோ எல்லாம் நல்லாய் நடந்தால் சுபம் இல்லாவிடில் சங்குப்போராட்டம் என்ற போராட்டத்தை ஐயா தொடக்கி வைப்பார் ......

2009 ம் ஆண்டு ஊதின சங்கை விட பெரிசா யாருலும் ஊதமுடியாது.

இப்படித்தான் 1996 செம்மணி சம்பவத்தின் பின்னரும் பேசினோம்

இப்ப செம்மணி போய் முள்ளிவாய்க்கால்......

பெரிசா ஊத நிறைய வாய்ப்புகள் உண்டு

  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் ஆண்டு ஊதின சங்கை விட பெரிசா யாருலும் ஊதமுடியாது.

எழுச்சிக்குதான் வீழ்ச்சி இருக்கும்

கிரேக்க பேரரசு

சோழ பேரரசு

ரோமராச்சியம்

என்று எழுந்து நின்றால்தான்

உலக வரலாறில் வீழ்ச்சி பற்றிய கதைகளும் இருக்கிறது.

2009இல் தமிழன் இருந்த உயர் நிலைக்கு

இந்த புல்லுருவிகளால் இனி எழ முடியாது.

தமிழன் எழுந்தால்தான்

எதிரி அடிப்பான் அல்லது அது பற்றி யோசிப்பான்.

அவனின் காலில் வீழ்ந்து நக்குபவர்களை

அப்ப அப்ப தட்டி கொடுக்கத்தானே வேண்டும் ???

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எதிரணியிலுள்ளவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இதுதான் தமிழ் மக்களுடைய அபிலாஷை என்கின்ற ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும். நீண்டகாலமாக பலவிதமான துயரங்களை எதிர்நோக்கும் தமிழ் மக்கள,; ஒன்றுபட்ட நாட்டிற்குள் இவ்விதமான ஒரு தீர்வைக் காண்பதற்கு தயாராக இருக்கின்றார்கள் என்பதை நாம் உரத்துச் சொல்லியாக வேண்டும். எனவே, பொதுமக்களாகிய நீங்கள் உங்களது கடமையைச் சிறப்பாக நிறைவேற்றி அதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைப் பலப்படுத்த வேண்டிய கடமை இருக்கின்றது என அவர் தெரிவித்தார் அதென்ன ஒன்று பட்ட இலங்கைகள்குள்' தீர்வு என்று சம்பந்தர் எதைப்பற்றிப் பேசினாலும் இந்த வரிகளையும் சேர்த்தே பேசுகிறார். யாரேனும்(இந்தியா) அழுத்தம் கொடுத்தார்களா?தமிழ்மக்கள் உலகிற்கு தங்களுக்கு என்ன தேவை என்று !977 ஆம் ஆண்டே சொல்லி விட்டார்கள். ஒன்று பட்ட இலங்கைக்குள் தீர்வு என்ற கோசத்தோடு வேண்டுமானால் தமிழரசுக்கட்சி சார்பில் தனியாகத் தேர்தலில் நில்லுங்கள். ததேகூட்டமைப்புக்குள் இந்தக் கோசததைக் கொண்டுவரவேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நம்ப நட நம்பி நடவாதே என்பதை சம்பந்தர் வரலாற்றில் இருந்து உணர வேண்டும். டி.எஸ்ஸில் இருந்து மகிந்தவரை பல தீர்வு பொதிகளை தமிழ் மக்கள் பார்த்துள்ளார்கள்.

எழுச்சிக்குதான் வீழ்ச்சி இருக்கும்

கிரேக்க பேரரசு

சோழ பேரரசு

ரோமராச்சியம்

என்று எழுந்து நின்றால்தான்

உலக வரலாறில் வீழ்ச்சி பற்றிய கதைகளும் இருக்கிறது.

2009இல் தமிழன் இருந்த உயர் நிலைக்கு

இந்த புல்லுருவிகளால் இனி எழ முடியாது.

தமிழன் எழுந்தால்தான்

எதிரி அடிப்பான் அல்லது அது பற்றி யோசிப்பான்.

அவனின் காலில் வீழ்ந்து நக்குபவர்களை

அப்ப அப்ப தட்டி கொடுக்கத்தானே வேண்டும் ???

இப்ப என்னதான்  சொல்ல வாரிங்க? திரும்பவும் எழும்பி நிக்கவேண்டுமா? இல்லையா? 

2009 ல தமிழன் உயர் நிலையில் இருந்தானா? அல்லது அடிமட்டத்தில் இருந்தானா? 

மிருகங்களை விட கேவலமான நிலையில் கூடுக்குளையும் முட்கம்பி வெளிக்குள்ளும் அடைபட்டு கிடந்தான்.

வெள்ளை கொடியோடு ஆமியின்ர காலில விழுந்தது அப்போதா? இப்போதா? 

அன்று காணமல் போனதுகளை இன்னும் தேடி முடியவில்லை ஆனாலும் அது உங்களுக்கு உயர் நிலையா? 

எடுப்பார் பிள்ளையும் இல்லாமலும் கட்டமைப்பு இல்லாமலும் இருந்த தாயக தமிழ் மக்களுக்கு தாயகத்தில் இருந்த ஒரே கட்டமைப்பு கூட்டமைப்பு ஒன்றுதான். புலிகள் நியமித்து தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களா கூட மகிந்தவின் முகவராகி காலை வாரும்போதும். கூட்டமைப்பையே தடை செய்யவேண்டும் என்றும் கைது செய்யவேண்டும் என்று இனவாதிகள் கூச்சலிடும் போதும் எங்கே போனது இந்த பரிவாரங்கள்?

மக்களை நடுத்தெருவில் இருந்து மீட்டு, மானசபை நகரசபை உள்லூரட்சி சபை என்கிற கட்டமைப்பை கொடுத்து தமிழர்களை மீளவும் கட்டமைத்தது கூட்டமைப்புத்தான்.

புலிகளின் களத்தின் பின்னர் சர்வதேச சமூகம் யாழ் வரை சென்று தமிழ் தரப்பை சந்தித்தது ஒரு வெற்றி இல்லையா? தாயகத்து அரசியல் இல்லது தனியா புலத்தில் இருந்து புன்னாக்குத்தான் விக்கலாம். வேணுமெண்டால் அந்ததந்த நாடுகளில் இருக்கும் தமிழ் வாக்குகளை கவருவதற்காக கூட இருக்கலாம். அனால் அது ஓரளவுக்கு மேல் தாயகத்தில் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

தமிழ் தலை நிமிர்ந்து நிச்சயம் நிப்பான், அதுக்காக காலிலே போய் விழவேண்டும் என்பதில்லை.

2009 ஆம் ஆண்டு தமிழர்களால் செய்ய முடியாத பல விடயங்களை இப்போது செய்ய மூடியமாதிரி கிடக்கு.

Edited by Sooravali

  • தொடங்கியவர்

த.தே.கூ. தலைவர் சித்தாண்டிக்கு விஜயம்

article_1431260420-a.jpg

மட்டக்களப்புக்கு ஞாயிற்றுக்கிழமை (10) விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், சித்தாண்டி முருகன் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் பொதுமக்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்.
 
வந்தாறுமூலை மக்களின் அழைப்பினை ஏற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சித்தாண்டி மக்களின் அழைப்பையும் ஏற்று அங்கு சென்றிருந்தார்.
இந்த விஜயத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாகாண சபை உறுப்பினர்களான இரா.துரைரெட்ணம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கி.சேயோன் உட்பட கட்சியின் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 
இதன்போது, சித்தாண்டி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை, சித்தாண்டியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது அழைப்பை ஏற்று தமது பிரதேசத்துக்கு வருகை தந்தமைக்கு மக்களால் இதன்போது நன்றி தெரிவிக்கப்பட்டது.
 
article_1431260427-b.jpg
 
  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மக்கள் மத்தியில் ஜனாதிபதி உண்மையை பேசுவார்: சம்பந்தன்

உண்மை

இது தான் நடக்கணும்

இது நடக்கும்  போதே எமக்கான தீர்வைப்பெற்றுக்கொள்ளமுடியும்....

நல்லதை எதிர்பார்ப்போம்

நல்லது நடந்தால் வரவேற்போம்

வாழ்த்துவோம்..

  • தொடங்கியவர்

பழைய ஜனாதிபதிகளை போன்று அல்ல புதிய ஜனாதிபதி: சுமந்திரன்

sumanthiran-maithripala.jpg

நாட்டில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் தெரிவான ஜனாதிபதிகள் வாக்குறுதிகளை மாத்திரம் கொடுத்து, நாடாளுமன்றப் பெரும்பான்மையோடு அவர்கள் ஆட்சி செய்தபோதும், இறுதியில் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட வரலாறுகளை புதிய ஜனாதிபதி மாற்றியமைத்திருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத்  தெரிவித்தார்.
 
நிறைவேற்று அதிகாரத்தை குறைப்பேன் என்று தேர்தலுக்கு முன்னர் கூறிய வாக்குறுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்றியிருக்கின்றார். 
 
நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாத மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஒரு விசித்திரமான முறையிலே நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கின்றது. 
 
இதற்கு முன்வந்தவர்கள்  வாக்குறுதி கொடுத்து வென்றார்கள். இவர் வாக்குறுதி கொடுத்து வென்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றியும் காட்டியிருப்பதால் அவர் மீது நம்பிக்கை இருக்கின்றது என்று கூறுகின்றோம். 
 
நாட்டிலே சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயகமும் வீழ்;ச்சியடையுமாக இருந்தால், முதலிலே மிக மோசமாகப் பாதிப்படைகின்றவர்கள் தமிழ் மக்கள் தான். இது நாம் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மை. 
 
அடக்கு முறைகளிலிருந்து மீள் எழுவதற்காக நாங்கள் பல்வேறு விதங்களிலே எங்களுடைய போராட்டங்களை முன்னெடுத்து, அவற்றிலே தோல்வியடைந்தோம். 
சர்வதேசத்தின் துணையோடாவது மீண்டும் எமது சொந்த மண்ணிலே எழுந்து நிற்போம் என்று கடந்த ஐந்தாண்டுகளாக மஹிந்த அரசோடு சமர் புரிந்து, விட்டுக்கொடுக்காமல் எங்களுடைய நகர்வுகளை மேற்கொண்டோம். அதேவேளை, மஹிந்த தமிழ் மக்களுக்கு மட்டும் அநியாயம் செய்ததோடு நின்று விடவில்லை. 
 
முஸ்லிம் மக்களுடைய உரிமைகளையும் பறித்து அவர்களையும் பகைத்துக் கொண்டு, தன்னுடைய சொந்த சிங்கள மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பறித்துக் கொண்டு கோலோச்சினார். 
 
அதனால் தான் நாட்டிலே இந்த புதிய நல்லாட்சிக்கான மாற்றம் ஏற்பட்டது. சரிந்து கிடந்த ஜனநாயகத்தை நிமிர்த்தி விடுவதிலே தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பங்கெடுத்தோம். ஜனநாயக வழியிலே போராட எங்களுக்குச் சந்தர்ப்பம் கிட்டியிருக்கின்றது. நாட்டில் ஜனநாயகமே இல்லையென்றிருந்த சூழலிலே, எங்களுடைய போராட்டங்கள் எதனையும் முன்னெடுக்க முடியாது. 
 
அதனால்தான் ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவேன் என்று மைத்திரிபால சிறிசேன முன்வந்தபோது, வேறெந்த நிபந்தனைகளுமில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பு அவருக்கு ஆதரவளித்தது. பகிரங்கமாகக் கொடுத்த வாக்குறுதிகளிலே பலவற்றை அவர் நிறைவேற்றியிருக்கின்றார். 
 
இப்ப என்னதான்  சொல்ல வாரிங்க? திரும்பவும் எழும்பி நிக்கவேண்டுமா? இல்லையா? 

2009 ல தமிழன் உயர் நிலையில் இருந்தானா? அல்லது அடிமட்டத்தில் இருந்தானா? 

மிருகங்களை விட கேவலமான நிலையில் கூடுக்குளையும் முட்கம்பி வெளிக்குள்ளும் அடைபட்டு கிடந்தான்.

வெள்ளை கொடியோடு ஆமியின்ர காலில விழுந்தது அப்போதா? இப்போதா? 

அன்று காணமல் போனதுகளை இன்னும் தேடி முடியவில்லை ஆனாலும் அது உங்களுக்கு உயர் நிலையா? 

எடுப்பார் பிள்ளையும் இல்லாமலும் கட்டமைப்பு இல்லாமலும் இருந்த தாயக தமிழ் மக்களுக்கு தாயகத்தில் இருந்த ஒரே கட்டமைப்பு கூட்டமைப்பு ஒன்றுதான். புலிகள் நியமித்து தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களா கூட மகிந்தவின் முகவராகி காலை வாரும்போதும். கூட்டமைப்பையே தடை செய்யவேண்டும் என்றும் கைது செய்யவேண்டும் என்று இனவாதிகள் கூச்சலிடும் போதும் எங்கே போனது இந்த பரிவாரங்கள்?

மக்களை நடுத்தெருவில் இருந்து மீட்டு, மானசபை நகரசபை உள்லூரட்சி சபை என்கிற கட்டமைப்பை கொடுத்து தமிழர்களை மீளவும் கட்டமைத்தது கூட்டமைப்புத்தான்.

புலிகளின் களத்தின் பின்னர் சர்வதேச சமூகம் யாழ் வரை சென்று தமிழ் தரப்பை சந்தித்தது ஒரு வெற்றி இல்லையா? தாயகத்து அரசியல் இல்லது தனியா புலத்தில் இருந்து புன்னாக்குத்தான் விக்கலாம். வேணுமெண்டால் அந்ததந்த நாடுகளில் இருக்கும் தமிழ் வாக்குகளை கவருவதற்காக கூட இருக்கலாம். அனால் அது ஓரளவுக்கு மேல் தாயகத்தில் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

தமிழ் தலை நிமிர்ந்து நிச்சயம் நிப்பான், அதுக்காக காலிலே போய் விழவேண்டும் என்பதில்லை.

2009 ஆம் ஆண்டு தமிழர்களால் செய்ய முடியாத பல விடயங்களை இப்போது செய்ய மூடியமாதிரி கிடக்கு.

முடிவாய் என்ன சொல்கின்றீர்கள் , சம்பந்தன் போல சிங்களவனை காலில் விழ  சொல்கின்றீர்களா ...
போரில் புலிகள் தோற்கவில்லை , வல்லரசுகளால் தோற்கடிக்கப்பட்டார்கள் ....
 
ஏதோ சிங்களவன் போரில் வென்ற மாதிரி உங்களின் கருத்து....
 
மாகாண சபை உள்ளிட்ட கட்டமைப்புகள் ... என்ன கூடமைப்பின் செயலோ ....
புலிகளை உலக நாடுகள் அழித்துவிட்டு எங்களை மேலும் காக்கா பிடிக்க வைத்துவிட்டான் ....
 
வெட்கம் கெட்ட நிலையில் இருந்து கொண்டு புகழ்ச்சியோ ?   

Edited by பிரபாதாசன்

  • கருத்துக்கள உறவுகள்
ஒரு நாட்டில் ஒரு பிரச்சினை சதாகாலமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. அது ஒரு தொடர் கதையாக இருக்கவும் முடியாது. ஏதோவொரு காலகட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும்.
சாத்வீகப் போராட்டம், அரசியல் போராட்டம், ஜனநாயகப் போராட்டம், ஆயுதப் போராட்டம், இராஜதந்திரப் போராட்டம் என்று இப்பொழுது எம்மைப் பொறுத்தவரை தமிழ் மக்களின் முடிவுறாத பிரச்சினைக்கு முடிவு வர வேண்டிய காலகட்டம் வந்து விட்டது.
சம்பந்தர்.
 
அடுத்த கட்டமாக கூட்டமைப்புச்  சிங்கள அரசின்  காலில் வீழ்ந்து கிடக்கும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. :D
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை.. மகிந்தவின் பாதுகாப்பு மந்திரி.. ஜனாதிபதி ஆனதும்..புனிதப்பட்டு விட்டார் - சுமந்திரன் மைத்திரிக்கு வழங்கிய புனிதர் பட்டம்.

இன்னும் என்னென்ன கேட்க வேண்டி இருக்குமோ..?! :rolleyes::o

  • கருத்துக்கள உறவுகள்

பழைய ஜனாதிபதிகளை போன்று அல்ல புதிய ஜனாதிபதி: சுமந்திரன்

அவசரப்பட்டு

ஆளாளுக்கு

நாமே போட்டி போட்டு தலையில தூக்கி பட்டம் கொடுப்பதைவிடுத்து

செயலைப்பார்த்து வாழ்த்துவதே இன்றைய தேவை...

சந்திரிக்கா மாமி வந்ததும்...சமாதனம் எண்டு சொன்னதும்...பிறகு அவ செஞ்சதும்.... :icon_idea:

எல்லாம் கண்முன்னே பார்த்தது தான் :icon_mrgreen:
 
மிஞ்சிய உணவை நாய்க்கு போட நாய் வாலை ஆட்டுவதை போல்,  6அறிவு உள்ள மனிதனும் ஆட்டினால் கதை பழையபடி கந்தலாகிவிடும் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம்: 

தேசிய நீரோட்டத்தில் கலந்து, அமையவிருக்கும் தேசிய அரசாங்கத்தில்
 தேசிய அளவில் மந்திரி பதவி கிடைத்தால் மட்டுமே நாங்கள் 

உங்கள்   காலில் வீழ்ந்து கிடக்கும் போராட்டத்தைக் கைவிடுவோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப என்னதான்  சொல்ல வாரிங்க? திரும்பவும் எழும்பி நிக்கவேண்டுமா? இல்லையா? 

2009 ல தமிழன் உயர் நிலையில் இருந்தானா? அல்லது அடிமட்டத்தில் இருந்தானா? 

மிருகங்களை விட கேவலமான நிலையில் கூடுக்குளையும் முட்கம்பி வெளிக்குள்ளும் அடைபட்டு கிடந்தான்.

வெள்ளை கொடியோடு ஆமியின்ர காலில விழுந்தது அப்போதா? இப்போதா? 

அன்று காணமல் போனதுகளை இன்னும் தேடி முடியவில்லை ஆனாலும் அது உங்களுக்கு உயர் நிலையா? 

எடுப்பார் பிள்ளையும் இல்லாமலும் கட்டமைப்பு இல்லாமலும் இருந்த தாயக தமிழ் மக்களுக்கு தாயகத்தில் இருந்த ஒரே கட்டமைப்பு கூட்டமைப்பு ஒன்றுதான். புலிகள் நியமித்து தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களா கூட மகிந்தவின் முகவராகி காலை வாரும்போதும். கூட்டமைப்பையே தடை செய்யவேண்டும் என்றும் கைது செய்யவேண்டும் என்று இனவாதிகள் கூச்சலிடும் போதும் எங்கே போனது இந்த பரிவாரங்கள்?

மக்களை நடுத்தெருவில் இருந்து மீட்டு, மானசபை நகரசபை உள்லூரட்சி சபை என்கிற கட்டமைப்பை கொடுத்து தமிழர்களை மீளவும் கட்டமைத்தது கூட்டமைப்புத்தான்.

புலிகளின் களத்தின் பின்னர் சர்வதேச சமூகம் யாழ் வரை சென்று தமிழ் தரப்பை சந்தித்தது ஒரு வெற்றி இல்லையா? தாயகத்து அரசியல் இல்லது தனியா புலத்தில் இருந்து புன்னாக்குத்தான் விக்கலாம். வேணுமெண்டால் அந்ததந்த நாடுகளில் இருக்கும் தமிழ் வாக்குகளை கவருவதற்காக கூட இருக்கலாம். அனால் அது ஓரளவுக்கு மேல் தாயகத்தில் எந்த தாக்கத்தையும் செய்ய முடியாது.

தமிழ் தலை நிமிர்ந்து நிச்சயம் நிப்பான், அதுக்காக காலிலே போய் விழவேண்டும் என்பதில்லை.

2009 ஆம் ஆண்டு தமிழர்களால் செய்ய முடியாத பல விடயங்களை இப்போது செய்ய மூடியமாதிரி கிடக்கு.

பரோட்டா !
நல்லாய் இருக்கு 
என்றாலும் இன்னும் கொஞ்சம் கறியும் கறிவேப்பிலையும் போடலாம் மாதிரி இருக்கு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.