Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் பிரிவை தேனீர் வாங்கி குடுத்து பின்னர் சுட்டதாக நேரடிப் பேட்டி...

Featured Replies

 இவரை வைத்து வல்லாதிக்கம் நாடகம் நடத்தியிருக்கிறது.அல்லது இவருக்கும் சூழ்ச்சி வலைப்பின்னலில் தொடர்பிருக்கலாம்.

யார் இந்த ரொஹான்? இவர் இதில் எப்படி சம்பந்தப்பட்டார்? 
இந்த உரையாடலின் முழு காணொளியையும் பதிவிட முடியுமா?

மகிந்த   பட்டாளங்களை மாட்டிவிடும் ஏற்பாடு மாதிரி  இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சரணடையச் சொல்லிட்டு  குரஸ் பயர் என்று சொல்லிச் சுடுவது இந்திய இராணுவம் ஈழத்தில் செய்தது தான். அதைத் தான் பசில் செய்து முடித்துள்ளார்.

 

இறுதி யுத்தத்தில்.. யுத்த களத்தில் இந்திய இராணுவத்தோடு நேரடியாகச் சண்டையிட்ட போராளிகள் இப்பவும் தப்பி வந்திருக்கிறார்கள். பலர் ஊரில் உள்ள உறவுகளை எண்ணி சாட்சியமளிக்கத் தயங்குகின்றனர்.

 

இது தான் சமன்பாடு....

 

 

சிங்களம் + ஹிந்தியம் + சர்வதேசம் + ஒட்டுக்குழுக்கள் + தமிழ் அரசியல் மெளனிகள் = தமிழீழ விடுதலை ஆயுதப் போராட்ட அழிப்பு.

 

இங்கு யாழ் களத்தில்.. இப்பவும் அது தமிழீழம் என்ற சொல்லழிப்பு அல்லது கொள்கை அழிப்பு.. வரை தொடர்வதை பல பரிமானங்களில் காண்கிறோம்.

Edited by nedukkalapoovan

23th May 2015 பகுதி 01

https://www.youtube.com/watch?v=USWgPqN3cKY

 

 

23th May 2015 பகுதி 02

https://www.youtube.com/watch?v=tWC3pXMuOGI

 

 

24th May 2015 பகுதி 01

https://www.youtube.com/watch?v=lxyOv6-e5Ow

 

 

24th May 2015 பகுதி 02

https://www.youtube.com/watch?v=lk10HEHD3wU

 

 

24th May 2015 பகுதி 03

https://www.youtube.com/watch?v=TaSqb6ZXGcE

 

24th May 2015 பகுதி 04

https://www.youtube.com/watch?v=6kB7hFwc4ZY

 

இதையும் ஊறுகாயைப்போல இதில் சேர்த்துக்குங்க

 

10406642_824829774231810_398573091206349

மிக ஆச்சரியமாக இருக்கிறது. நிகழ்ச்சியை நடாத்துபவர் திரும்பத் திரும்ப சர்வதேசியம் புலிகளை காப்பாற்ற தவறிவிட்டது என சொல்கிறார். இதை இலங்கையில் இருந்து ஒளி பரப்புகிறார்கள். ஆனால் அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்கிறார்கள். பின்லாடனை காப்பாற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது என அமெரிக்க ஊடகம் தெரிவித்தால் என்ன நடக்கும் என கற்பனை பண்ணி பார்த்தேன். சிங்களவர்கள் முட்டாள்கள் என்பது சரிதான்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக ஆச்சரியமாக இருக்கிறது. நிகழ்ச்சியை நடாத்துபவர் திரும்பத் திரும்ப சர்வதேசியம் புலிகளை காப்பாற்ற தவறிவிட்டது என சொல்கிறார். இதை இலங்கையில் இருந்து ஒளி பரப்புகிறார்கள். ஆனால் அங்கு ஊடக சுதந்திரம் இல்லை என்கிறார்கள். பின்லாடனை காப்பாற்ற பாகிஸ்தான் தவறிவிட்டது என அமெரிக்க ஊடகம் தெரிவித்தால் என்ன நடக்கும் என கற்பனை பண்ணி பார்த்தேன். சிங்களவர்கள் முட்டாள்கள் என்பது சரிதான்.

சிங்களவர்கள் முட்டாள்களாக இருந்தபடியால்தான் விடுதலைப்புலிகளின் தலைமைப்பீடத்தை முழுமையாக அழித்தார்கள். கொஞ்சம் மூளை இருந்திருந்தால் மக்கள் அழிவுகளின் பின்விளைவுகளை யோசித்து இந்தியாவினதும் மேற்குநாடுகளினதும் திட்டப்படி பேரழிவுகளைக் குறைத்திருப்பார்கள். மகிந்த இலங்கைத்தீவின் அனைத்து மக்களாலும் விரும்பப்படும் தலைவராக விளங்கியிருப்பார். <_<

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் ரங்காவின் நீண்ட கலந்துரையாடலைக் பார்க்க நேரம் இல்லாதவர்கள் சோழியன் அண்ணா இணைத்த காணொளிகளில் கடைசி இரண்டையும் பார்த்தால் போர் இறுதிக் கணங்களில் என்ன நடந்தது என்பதை அறியலாம்.

24th May 2015 பகுதி 03 & 24th May 2015 பகுதி 04.

சி.கு. மின்னல் ரங்கா அரசியல் கலந்துரையாடல் பற்றிய பயிற்சிக்குப் போவது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

மருதங்கேணி அல்லது நெடுக்கு (இருவரில் ஒருவர்)

2ம் ஈழப்போரின் ஆரம்பம் பற்றி நான் முன்பு ஒரு விடயத்தை சொல்ல, இல்லை என மறுத்து ஆதாரம் கேட்டீர்கள்.

மேலே நீலப்பறவை இணைத்துள்ள சாட்சியை பார்க்கவும்.

நீ.ப,

இதை எங்கே இருந்து எடுத்தீர்கள்?

அடேலின் "வில் டு பிரீடம் ஆ"?

 
 
தேநீர் கொடுத்து சுட்டுக் கொன்றார்கள்! 2 லட்சம் ஈழத்தமிழர்களின் கதி என்ன?
[ சனிக்கிழமை, 30 மே 2015, 02:32.20 AM GMT ] [ விகடன் ]
vikatan-30.jpg
இலங்கை பேரினவாத அரசால் கொடூரமாக அரங்கேற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலை ஐந்தாண்டுகளைக் கடந்திருக்கிறது. இறுதிக்கட்ட போரின் போது காணாமல் போனவர்கள் மற்றும் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை குறித்த மர்மம் இன்னும் விலகவில்லை.

இந்த நிலையில், அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்ற கேள்வியை சிறிசேன அரசுக்கு எதிராக உரக்க எழுப்ப ஆரம்பித்துள்ளனர் ஈழத்தமிழர்கள்.

மே 19 2009. இலங்கை மண்ணி​லிருந்த விடுதலைப் புலிகள் அழிக்கப்​பட்டார்கள் என்று வெற்றியை இலங்கை இராணுவம் கொண்டாடிய தினம். மனித உரிமைகளைக் காற்றில் பறக்கவிட்டு காட்டுமிராண்டித் தாக்குதலை ‘போர்’ என்ற பெயரில் ஈழத்தமிழர்கள் மீது தொடுத்தது இலங்கை இராணுவம்.

அதில், இறந்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 70 ஆயிரம் பேர். துப்பாக்கித் தோட்டாக்கள் துளைத்து முடமாக்கப்பட்டவர்கள், குடும்பத்தை இழந்து நிர்க்கதியானவர்கள், கணவரை இழந்து விதவையானவர்கள் எண்ணிக்கையும் இதில் அதிகம்.

வன்னி பகுதியைச் சேர்ந்த 1,46,679 பேர் இதுநாள் வரை காணாமல் போனவர்கள் பட்டியலில் வைத்திருக்கிறது இலங்கை அரசு.

vikatan30-01.jpg

ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் குழுவின் 28-வது கூட்டத் தொடரில், ‘2010-ல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பெயரால் 11,000 பேரை இலங்கை அரசு சிறைப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளது.

அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளனர், என்ன நிலையில் உள்ளனர் என்ற விவரங்களை வெளியிட அரசு மறுக்கிறது. இது அவர்களின் குடும்பங்களைக் கடும் மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனவே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பற்றிய விவரங்களை வெளியிட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை ஐ.நா அதிகாரிகள் மத்தியில் முன்வைக்கப்பட்டிருந்தது.

vikatan30-02.jpg

இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்ததாவது,

என் கணவர் எழிலன் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்தார். போர் உச்சக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது என் கணவர், நான் மற்றும் என்னுடைய மூன்று குழந்தைகளும் 17-ம் தேதி முல்லைத்தீவில் இருந்தோம். குடிக்க தண்ணீர்கூட கிடையாது. நாலாபுறமும் தீக்கிரையாக்கப்பட்ட வீடுகளும் குண்டு பொழியும் சத்தங்களும் கேட்டுக்கொண்டே இருந்தது.

அதற்கு மறுதினம், வட்டுவாகல் என்ற இடத்தில் பாதர் பிரான்ஸிஸ் என்பவரின் தலைமையில் என் கணவரும் 1,000-க்கும் மேற்பட்ட போராளிகளும் வெள்ளைக் கொடியேந்தி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.

அதில், யோகரத்தினம் யோகி, லாரன்ஸ் திலகர், அரசியல் துறை துணைப் பொறுப்பாளர் தங்கன், முன்னாள் யாழ்ப்பாண அரசியல் துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி, நிர்வாகச் சேவைப் பொறுப்பாளர் பூவண்ணன், பிரியன், தீபன், விளையாட்டுத் துறை ராஜா மற்றும் அவரது மூன்று பிள்ளைகள், வில்வன், இன்பன், மஜீத், ஹோல்சர் பாபு, கவிஞர் புதுவை இரத்தினதுரை, வே.பாலகுமார், மட்டக்களப்பு அரசியல் துறைப் பொறுப்பாளர் கரிகாலன் மற்றும் தமிழீழக் கல்விக் கழகப் பொறுப்பாளர் இளங்குமரன் ஆகியோரும் இருந்ததை நான் நேரில் பார்த்தேன்.

அவர்கள் சரணடைந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளை கடந்துவிட்டன. அவர்கள் உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இதுநாள் வரை இலங்கை அரசாங்கம் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது என்றார்.

vikatan30-03.jpg

இலங்கையில் 2 லட்சம் தமிழ் மக்கள் காணாமல் போயிருக்கிறார்கள். உயிரோடுதான் இருக்கிறார்களா என்பதை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டும் என்று சொன்ன பிரித்தானிய தமிழர் பேரவையின் ஊடகப் பொறுப்பாளர் சுதா, அதற்கான ஆதாரப் புகைப்படத்தையும் நம்மிடம் கொடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி சந்திரநேரு சந்திரகாந்தன் பகிர்ந்து  கொண்ட  அதிர்ச்சித் தகவல்கள்!

அந்த சமயத்தில் பசில் ராஜபக்‌ச மூலம் இலங்கை இராணுவத்தைத் தொடர்பு கொண்டோம். விடுதலைப் புலிகள் சரணடைய தேவையான அனைத்து விடயங்களையும் செய்வதாக உறுதி தந்தார்கள்.

நான் உடனே நடேசன் அண்ணனைத் தொடர்புகொண்டு விபரத்தைச் சொன்னேன். அவர் என்னையும் வருமாறு அழைத்திருந்தார். ஆனால், முள்ளிவாய்க்கால் பகுதியில் என்னை இராணுவம் அனுமதிக்காததால் நான் செல்லவில்லை.

மறுநாள் அதிகாலையில், மகிந்த ராஜபக்‌ச என்னைத் தொடர்புகொண்டு, ‘அவர்களுடைய சரண் அடைதலை நான் முழுமையாக வரவேற்கிறேன். இதை நீங்கள் கட்டாயம் அவர்களிடம் சொல்ல வேண்டும். எத்தனை பேர் சரணடைய போகிறார்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு நான், ‘3000 போராளிகளும், 22,000 ஜனங்களும்’ என்று சொன்னேன். விஷயத்தை நடேசனிடம் சொன்னேன். போராளிகள் வெள்ளைக் கொடியை ஏந்தி வருவார்கள். அவர்களைச் சுட்டுவிடாதீர்கள் என்று எல்லா முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

சரணடைய வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்து உபசரித்துள்ளனர். அந்த தேநீரின் சுவை நாக்கில் இருந்து போவதற்குள் அவர்களைச் சுட்டுக் கொன்றுவிட்டனர் என்று வெடித்திருக்கிறார்.

vikatan30-04.jpg

போரில் காயப்பட்டவர்களுக்கு, தன் உயிரைப் பற்றி கவலைப்படாமல் இறுதிவரை சிகிச்சை அளித்து வந்தவரும், தற்போது   அமெரிக்காவில் வசித்து வருபவருமான மருத்துவர் வரதராஜா கூறியதாவது,

போர், இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அதை போர் என்றே சொல்ல முடியாது. கண்மூடித்தனமான தாக்குதலை இலங்கை இராணுவம் மேற்கொண்டிருந்தது.

அப்போது நான் பணி செய்த அனைத்து மருத்துவமனையிலும் இலங்கை இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது. யூனிசெப் சொன்ன பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் தாக்குதல்கள் நடந்தன.

ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மாண்டு விழுந்தார்கள். அடிப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கக் கூடாது என்பதில் இலங்கை இராணுவம் மிகத் தெளிவாக செயல்பட்டது.

நான் இருந்த பகுதியும் கடைசியில் இராணுவத்தின் பிடியில் வந்தது. மே 15-ம் தேதி நடந்தப்பட்ட தாக்குதலில் காயம் அடைந்தேன். கைதுசெய்து மூன்றரை மாதங்கள் சிறை வைத்தனர்.

பின், சர்வதேச மருத்துவர்கள் அமைப்பின் அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டேன் என்கிறார் அவர். 
காணாமல் போல லட்சக்கணக்கானோர் பற்றி விரைவில் உண்மை வெளிவர வேண்டும்.

http://www.tamilwin.com/show-RUmtyFQUSUgp7A.html

 

  • கருத்துக்கள உறவுகள்

இவரை யாருக்காவது தெரிகிறதா?

 

ranga_5.jpg
 
ranga_6.jpg
 
ranga_7.jpg
 
Sri_Ranga.jpg
 
Sri_ranga.jpg
 
Sri_ranga_2.jpg
 
Sri_ranga_3.jpg
 
Sri_ranga_4.jpg
 
Wimal_Namal_Ranga_Mahindananda_Jonston.j

இனவழிப்பு நடந்துகொண்டிருக்கும்போது அரசாங்கத்தின் , குறிப்பாக மகிந்தவின் ஆலோசகராகவும், நாமலின் நெருங்கிய நண்பராகவும் இருந்துவிட்டு, இப்போது எதுவுமே தெரியாதவர்போல அவர் கேட்கும் கேள்விகளையும், போடும் நாடகத்தையும் பார்க்கச் சகிக்கவில்லை !

  • கருத்துக்கள உறவுகள்

ரங்கா நாமல் ஊடாக மகிந்தவிடம் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அத்தோடு கருணா அம்மான் டக்கிளஸ் அங்கிள் போன்றவர்களுடன் நெருக்கமும் அவருக்கு இருந்தது. இப்போது எலக்சன் காலம் மக்களை ஏய்க்க ரங்காவும் கூட்டமைப்பின் சந்திரகாந்தனும் அம்புலிமாமா காட்டுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

&nbsp;

ரங்கா நாமல் ஊடாக மகிந்தவிடம் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அத்தோடு கருணா அம்மான் டக்கிளஸ் அங்கிள் போன்றவர்களுடன் நெருக்கமும் அவருக்கு இருந்தது. இப்போது எலக்சன் காலம் மக்களை ஏய்க்க ரங்காவும் கூட்டமைப்பின் சந்திரகாந்தனும் அம்புலிமாமா காட்டுகிறார்கள்.

&nbsp;

நன்றி வாலி நான் எழுத நினைத்ததை அப்படியே நீங்கள் எழுதி விட்டீர்கள். இதுதான் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.