Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எனக்கெதிராக மூன்று மாறுபட்ட அரசியல்சக்திகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டன – வி.ரி.தமிழ்மாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்குடுதீவு மாணவி படுகொலைச் சந்தேகநபரை தப்பிக்க உதவியதாக, கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்தும் அதன் பின்னணிகளை விபரித்தும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட விரிவுரையாளர் கலாநிதி வி.ரி.தமிழ்மாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், பொலிஸ் விசாரணையிலும் நீதிமன்றத்தின் முன்னால் உள்ள விடயத்திலும் எங்ஙனம் குறுக்கிடாது எனது கருத்தைத் தெரிவிக்க வேண்டுமோ அத்தகைய பொறுப்புணர்வுடனேயே பின்வரும் விடயங்களை மக்கள் முன் வைக்க விரும்புகின்றேன்.

என்னுடைய பொதுவாழ்வின் எதிர்காலத்தையும் தமிழ்மக்கள் மத்தியில் எனக்கு இருந்துவரும் அரசியல் அங்கீகாரத்தையும் சட்டவாளர் என்றளவில் எனக்கு இருக்கக் கூடிய கௌரவத்தையும் ஒரேநாளில் பூச்சிய நிலைப்படுத்தும் நோக்கில் மாதக்கணக்கில் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட ஒருநாடகத்தின் காட்சிகளையே கடந்த சிலநாட்களாக மக்கள் தரிசித்துக் கொண்டிருக்கின்றனர்.

முற்றிலும் எதிர்பார்த்திராததும் அனுபவமற்ற விதத்திலும் என்னை எதிர்கொள்ளவைத்த இந்த சத்திய சோதனைத் தீயிலிருந்து நான் மீள்வதற்கான முயற்சி இலேசுப்பட்டதாக இருக்கவில்லை.

எவையெவை என்னுடைய பலமோ அவற்றை இலக்குவைத்துத் தொடுக்கப்பட்ட களைகளின் நச்சுத்தன்மை பற்றி சாதாரணமக்கள் மட்டுமன்றி விடயமறிந்தவர்கள் கூடச் சற்றுத் தடுமாறித்தான் போய்விட்டார்கள்.

35 வருட என்னுடைய சட்டத்துறையறிவையும் மனிதஉரிமைகள், பெண் உரிமைகள் பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அறிவூட்டலில் நான் ஆற்றியிருக்கும் பங்கினை எள்ளளவேனும் அறிந்திராத மிலேச்சர்களால் பின்னப்பட்ட சதிவலையில் அப்பாவிப் பொதுமக்கள் இழுத்து வீழ்த்தப்பட்டு உள்ளார்கள்.

இது மட்டுமே எனக்கு நெஞ்சு பொறுக்காத விடயமாகக் காணப்படுகின்றது.

இத்தனைவருட காலசேவையின் பின்னும் வாடகை வீட்டில் குடியிருந்து மாதச் சம்பளம் கொண்டு வாழ்க்கை நடாத்தும் நான் 40 இலட்சமென்ன 40 கோடி கொடுத்தும் விலை பேசப்பட முடியாத அரசியல் தளத்தில் தடம் பதித்தவன என்பதை நன்கு தெரிந்தவர்கள் தமது அரசியல் எதிர்காலத்தின் இருப்புக்கு என்னால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தலால் உந்தப்பட்டு எனது உயிருக்கும் அதனிலும் மேலான எனது நேர்மைத் திறனுக்கும் வேட்டுவைக்க முயற்சித்துள்ளார்கள்.

தத்தமது ஊன்றிய நலன்களால் உந்தப்பட்ட, ஆனால் அதேவேளை தமக்குள்ளே அரசியலால் மாறுபட்ட மூன்று முக்கிய சக்திகள் சம்பவதினத்தன்று ஒன்று பட்டுச் செயற்பட்ட விதமே என் மீது அபாண்டமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மையை உணர வைப்பதற்குப் போதுமானது.

ஆர்ப்பாட்டங்களை முன்னின்று நடாத்தியவர்களும் அவை நடாத்தப்பட்ட இடங்களும் வித்தியாவுக்கு நடந்த கொடூரத்துக்கான கோபக்கனலை வெளிப்படுத்துவதை விட எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதையே இலக்காகக் கொண்டிருந்தமையை வெளிப்படுத்தியது.

நான் ஒருகுற்றவியல் சட்டத்தரணி அல்ல. மேலும், முழு நேர பல்கலைக்கழக ஊழியர் என்றளவில் நான் நீதிமன்றில் ஆஜராகவும் முடியாது. அப்படிச் செய்வதானால் அதற்கான விசேட அனுமதி பெறப்பட வேண்டும்.

என்னால் செய்யக் கூடியதெல்லாம் உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உண்மையான குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவும் நீதியான விசாரணை நடைபெறவும் தீவிரமாக முயற்சிப்பதுதான்.அதனையேநான் செய்தேன்.

அது சிலசக்திகளுக்குப் பொறுக்கவில்லை. குறிப்பாகச் சட்டம் ஒழுங்கு தீவகத்தில் நிலைநாட்டப்படுவது யாருக்கோ எங்கோ உதைக்கின்றது. கருத்தை கருத்தால் மோத முடியாதவர்கள் ஒருவனின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதன் மூலம் வெற்றி காண முடியுமாயின்; அத்தகைய விமர்சனத்திலிருந்து எவரொருவரேனும் தப்பிக்க முடியுமா என்பதையும் அறிவுடையவர்களின் தீர்மானத்துக்கு விட்டு விடுகின்றேன்.

எனது கண் முன்னால் யாழ் பொலிஸ் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகள் இருவரால் ஒப்படைக்கப்பட்ட சந்தேகநபர் எப்படித் தப்பிச் சென்றார் என்பதற்கு என்னிடம் விடையில்லை. இதற்கு விடையளிக்க வேண்டியவர்கள் காவல் துறையினரே.

இதே சந்தேகநபர் முதல்நாள் இரவும் மரத்தில் கட்டிவைத்து அடிக்கப்பட்டதன் பின்னர் தப்பித்துள்ளார். அது எப்படி நடந்தது என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம். யார் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள் என்பதை ஊகிக்க ரொக்கட் விஞ்ஞானம் தேவைப்படாது.

இதில் பொறுப்புணர்வுடன் செயற்பட்ட ஊடகங்களைப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். மண்ணை நேசிக்கும் மனட்சாட்சியுள்ள மக்களின் மனக் குமுறல் தற்போது படிப்படியாக என்னை எட்டுவது மிகப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

உண்மை எந்தளவுக்கு விரைவாக வெளிவர வேண்டுமோ அந்தளவுக்கு வெளிவரத் தொடங்கியுள்ளது. நான் கற்றதும் கற்பித்ததும் ஒருபோதும் வீண்போகாது என்ற நம்பிக்கை எனக்குஎன்றும் உண்டு. – என்றுள்ளது.

www.puthinappalakai.com

Edited by colomban

அடப்பாவிங்களா இராமனையே சந்தேகப்பட்டுட்டிங்களே?

இராமனே ஒரு சந்தேகப்பிறவி. நாங்கள் மட்டும் இராமனிலே சந்தேகப்படாதாக்கும்.  :D  :D

சம்பவம் நடந்து இவ்வளவு நாட்களுக்கு பிறகாவது அறிக்கைவிடவேண்டும் என்று எண்ணியமைக்கு நன்றிகள் முதலில்.

உங்கள் சட்ட சாமர்த்தியத்தை தமிழுடன் கலந்து விட்ட இந்த அறிக்கை எதையும் புதிதாக கூறுவதாக தெரியவில்லை. பதிலாக சம்பவத்துக்கு அடுத்த நாளே இது என்னுடைய கையை மீறிய சம்பவம் என்று ஒற்றை வரியில் ஒரு மறுப்பறிக்கையே போதுமானது.

நிலுவையில் உள்ள நீதிமன்ற விசாரணைக்காக, நீங்கள் ஒப்படைத்த கைதி எப்படி உங்களை அறியாமல் தப்பினார் என்று வெளியில் சொல்லமுடியாது மறைபதிலேயே தெரிகிறது நீங்கள் ஒரு நல்ல சட்ட ஆசான் என்பது.

ஏற்கனவே நிழலி ஒரு திரியில் கூறியது போல நீங்கள் அரசியலுக்கு லாயக்கற்றவர் என்பதை மீண்டும் மீண்டும் நிருபிக்கிறீர்கள் கலாநிதி தமிழ்மாறன் அவர்களே.

உங்களை நம்பி இனியும் மக்கள் வாக்கு போடுவார்கள் என்று எண்ணி நீங்கள் இந்த அறிக்கையை விட்டது உங்களது மட்டுமல்ல நீங்கள் சார்ந்த கட்சியின் அரசியல் அறிவை தெள்ளத்தெளிவாக காட்டுகிறது.

உங்களை போன்ற அரசியல்வாதிகள் இருக்கும் வரை தமிழரை கடவுளால் மட்டுமல்ல கடவுளின் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

உங்கள் மாணவர்கள் உங்களை மன்னிப்பார்களாக...

உங்களை ஈன்ற அந்த மண் உங்களை மன்னிப்பதாக...

  • கருத்துக்கள உறவுகள்

விரிவி,

1) இவ்வளவு நாளும் வாடை வீட்டில் இருந்து ஒன்றும் சேர்த்துவைக்காத படியால் - கடைசிகாலத்தில் வந்த 40 லட்சத்துக்கு நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்றும் எடுக்கலாம் தானே?

2) இவ்வளவு கஸ்ட ஜீவனத்தில் வாழும் நீங்கள் எப்படி மகளை லண்டனுக்கு சட்டம் படிக்க அனுப்பினீர்கள்?

3) இன்னும் ஏன் நீங்கள் எப்போது, யார் பொறுப்பில் குமாரை பொலீசில் கொடுத்தீர்கள் எனச் சொல்ல முன்வருகிறீர்கள் இல்லை?

4) இவ்வாறு குமாரை லஞ்சம் வாங்கி விடுவித்தோர் மீது நீங்கள் ஏன் லஞ்ச ஒழிப்புத்துறையில் கம்பிளைண்ட் கொடுக்கவில்லை?

5) இவ்வளவு அநியாயம் உங்களுக்கு நடந்தும், ஏன் எல்லோரும் சொல்லச் சொல்ல இந்த்தனை நாள் மெளனமாய் இருந்தீர்கள்?

6) இந்த அறிக்கையில் காவல் துறைதான் பதில் சொல்லவேண்டும் என்று நழுவும் நீங்கள், அந்த பதிலை உங்கள் நண்பரான வடக்கு அத்தியட்சகரிடம் கேட்டீர்களா?

7) இந்த மூன்று சக்திகளை நீங்கள் ஏன் பூடகமாய் சொல்லுகிறீர்கள். உங்களை சிக்கலில் மாட்டி விட்டோர் மீது உங்களுக்கு அப்படி என்ன அக்கறை? வெளிப்படையாக சொல்லலாமே? ஆதாரம் இல்லையா? அப்போ இது உங்கள் தப்பி மறைக்க நீங்கள் கட்டிய கட்டுக்கதையா?

8) வருடக்கணக்கில், ஈபிடிபி, சரவணபவன், விஜயகலா சேர்ந்து திட்டமிட்டு உங்களை சிக்கலில் மாட்டி விட, நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பா டக்கரா?

9) வித்தியாவை வல்லுறவு செய்து கொலை செய்ததே உங்களை மாட்டி விடத்தான், அப்படியா?

உங்களின் அறிக்கை நீங்கள் ஏனையோரை முட்டாள்கள் என நினப்பதை காட்டுகிறது.

நீங்கள் ஒரு குற்றவியல் வக்கீல் இல்லை என்றீர்கள். உண்மைதான் ஒரு தன்னிலை விளக்கத்தில், தேனிக்கூடு போல இத்தனை ஓட்டைகளா இருக்கும்?

நீங்கள் ஒரு நல்ல அரசியல்வாதியும் இல்லை, நல்ல வக்கீலும் இல்லை, நியாயமான மனிதனும் இல்லை என்பதையே வஞ்சம் நிறைந்த உங்கள் வார்த்தைகள் சுட்டுகிறன.

இறுதியாக சகோதரி வித்யா சார்பாக ......

தூ...........

நன்றி கோசான்
 
வார்த்தைகள் காரமாக இருந்தாலும் பலர் மனதில் உள்ள கேள்விகள்தான் இவை. இங்கு கிருபனின் பதிவிலிருந்து ஒரு பகுதியையும் இணைப்பது சிறந்தது என்பது எனது கருத்து.
 
"ஆனால் தமிழ்மாறன் மக்கள் நம்பிக்கையை இந்த நிகழ்வோடு இழந்திருப்பதால், அவரது அரசியல் பிரவேசம் வயிற்றுக்குள்ளேயே இறந்த சிசு போன்றாகிவிட்டது." -  கிருபன்

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

1) இவ்வளவு நாளும் வாடை வீட்டில் இருந்து ஒன்றும் சேர்த்துவைக்காத படியால் - கடைசிகாலத்தில் வந்த 40 லட்சத்துக்கு நீங்கள் ஆசைப்பட்டீர்கள் என்றும் எடுக்கலாம் தானே?

2) இவ்வளவு கஸ்ட ஜீவனத்தில் வாழும் நீங்கள் எப்படி மகளை லண்டனுக்கு சட்டம் படிக்க அனுப்பினீர்கள்?

 

 

கேள்வி 1 ஊகத்தின் அடிப்படையில் இருப்பதால் தேவையற்றது.

கேள்வி 2 தனிப்பட்ட விடையம். பல வழிகளில் நிதி வசதி  அற்றவர்களும் மேல் நாடுகளில் படிக்கலாம்.

மற்றைய அனைத்துக்கேள்விகளும் ஒரு சாதாரண  மனிதன் கேட்க நினைக்கும் கேள்விகள். அதற்கான பதில்கள் அவரிடம் இருந்தால் அவற்றையும் அவர் ஏற்கனவே தந்திருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்,

1ம் 2ம் கேள்விகளை நான் முன்பு எழுப்பியதில்லை. ஆனால் - அவரே தன் அறிக்கையில் வாடை வீட்டில் இருக்கிறேன் என்று சொன்ன பின், அதன் பின்னால் உள்ள திசை திருப்பும் அரசியலை சுட்ட வேண்டியதாகிறது.

2ம் கேள்வி - மகளின் கல்விக்காக யாருக்கும் பட்ட நன்றிக்கடனுக்காக இவர் சுவிஸ் குமார் விடயத்தில் நடந்து கொண்டாரா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலானது.

சொந்த வீடு வாங்கியவன் எல்லாம் அயோக்கியனும் இல்லை, வாடை வீட்டில் இருப்பவன் எல்லாம் யோக்கியனும் இல்லை.

முன்பு இவர் அரசியலுக்கு வாறார் என்ற திரியிலும், பின்னர் வித்தியா விவகாரத்திலும் கூட, ஆரம்பத்தில் இவர் ஊழல் வாதியாக அறியப்படவில்லை என்றே நான் எழுதி வந்தேன். ஆனால் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், எல்லாவற்றிற்கும் மேலாக, நீண்ட மெளனத்தின் பின்னான இந்த அறிக்கை - இவரின் நம்பகத்தன்மையை சிதறடிச்சு விட்டன.

பணமோ, உறவோ, வேறு எதோ ஒரு நிர்பந்தமோ இவரை இப்படி நடக்க வைத்திருக்கிறது என்பதையே சந்த்ர்ப சாட்சியங்கள் சுட்டி நிக்கிறன.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சந்தேக நபரை அல்லது சந்தேக நபரைத் தப்ப விட்டவரைக் காப்பாற்றுகிறார்! எந்த வழியில் பார்த்தாலும் நீதிக்குக் குறுக்கே நிற்கிறார்! இதை வைத்து பீடாதிபதி பதவியையும் இலங்கை Bar association உறுப்புரிமையையும் பறிக்க இயலாதா? கோசான் தான் சொல்ல வேணும்!

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிக்கையை விட இவ்வளவு தாமதம் ஏன்?அந்த 3 சக்திகளையும் ஏன் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை?கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களிலிலும்செய்திகள் வந்திருந்த நிலையில் அந்த 3 சக்திகளை மட்டும் குற்றஞ் சாட்டுவது ஏன? இவ்வளவு காலமும் ஒரு மதிப்பு வைத்திருந்தேன்.

தங்களால் குறிப்பிடப்படும் இந்த 3தரப்பும் மக்களால் நிராகரிகரிக்கப்பட்ட தரப்புகள். அப்படியிருக்க அவர்களுக்கு அஞ்சுவது ஏன்?

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்க எகாதியபத்திய சக்தி,சீன வல்லாதிக்கசக்தி,இந்திய பிராந்திய சக்தி இந்த மூன்று சக்திகளுமா இருக்குமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தனது ஊரவர்

தனது அண்ணன் தம்பிகள்

தனது குடும்பத்தவர் 

எவர் முன்னும் 

ஒரு வார்த்தை சொல்ல முடியாமல் விழுங்கியவர்

அரசியல் பக்கம் என்ன

எமக்கு முன்னுக்கே இனி வரவேண்டாம்

தூரப்போய்விட்டார்...

 

கோசான் சே சொன்னது போல் நித்தியாவின் சார்பாக தூ..............

தமிழர் விடுதலைக்கூட்டணியிலோ தமிழரசுக்கட்சியிலோ களத்தில் குதிப்பவர்கள் அனைவரும் இம்முறை தண்னீரில் தத்தளிக்க வேண்டியது தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.