Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஜேந்திரன் இந்திய உளவு அமைப்புக்களது கொலை முயற்சியிலிருந்தே தப்பித்தாரா?

Featured Replies

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இந்திய உளவு கட்டமைப்பின் கொலை முயற்சியிலிருந்து தப்பித்து உள்ளமை உறுதியாகியுள்ளது.யாழ்ப்பாணம்- கொழும்பு இந்திய தூதரகங்களினால் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இரகசிய நடவடிக்கையினிலேயே கஜேந்திரனை கொலை செய்ய முயற்சிகள் இடம்பெற்றுள்ளமை அம்பலமாகியுள்ளது.பதிவு இணைய செய்தி

kajan1.JPG

இந்திய ரயில்வே பாதை அமைப்பொன்றிற்கு சொந்தமான கனரக வாகனமொன்றை பயன்படுத்தி இக்கொலை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.கஜேந்திரனின் நடமாட்டங்கள் துல்லியமாக அவதானிக்கப்பட்டு குறித்த கனரக வாகனத்தை செலுத்தி வந்த சாரதியின் கைத்தொலைபேசிக்கு வழங்கப்பட்ட கடைசி உத்தரவு மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.எனினும் கொழும்பு உயர்மட்ட பணிப்பினையடுத்து விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளதுடன் சாரதியும் விடுவிக்கப்பட்டுள்ளார்.பதிவு இணைய செய்தி

எனினும் யாழப்பாணத்திலுள்ள தூதரக அதிகாரி மூர்த்தி யாழ்.போதனாவைத்தியசாலையினில் கஜேந்திரனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.அத்துடன் தேர்தல் அண்மிக்கும் நேரம் நடந்த விபத்திற்கு கவலை வெளியிட்டுள்ளார்.

kajan2.JPG

முதலில் வாகனத்தின் முன்னிணைப்பே தன்னை தாக்கியதாக கூறும் கஜேந்திரன் சாரதி இயந்திரத்தை அணைப்பதற்கான நேரமிருந்ததாக கூறுகின்றார்.தூக்கி வீதியோரம் அவர் எறியப்பட்டபோதும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது கனரக வாகனம் ஏறி அதை முற்றாக தரையுடன் சிதைத்துள்ளது.அவ்வாறாயின் கஜேந்திரன் நிலை அதனுள் அகப்பட்டிருந்தால் என்னவாகுமென கேள்வி எழுப்பப்படுகின்றது.

முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினையும் தமது கைகளுள் கொண்டு வர  இந்திய உளவு கட்டமைப்பு பலத்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.அது வெற்றி பெற்றிருக்காத நிலையினில் ஆட்களை களைய முற்பட்டுள்ளதாக சந்தேக்கிக்கப்படுகின்றது.பதிவு இணைய செய்தி

kajan3.JPG

அண்மைக்காலமாக முன்னணியின் நிலைப்பாடு தொடர்பினில் இளம் சமூகத்திடையேயும் புத்திஜீவிகளிடையேயும் வரவேற்பினை பெற்றிருக்கின்றது.அத்துடன் கிழக்கிலும் வேகமாக கட்சி வளர்ச்சி கண்டுள்ளது.திருமலையினில் கூட்டமைப்பின் எதிர்காலத்தையும் அது கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் முன்னணிக்கு தடை விதிக்கப்பட்ட போதும் கூட்டமைப்பு தொடர்பினில் கண்டு கொள்ளப்படாததுடன் தடை விதிக்கப்படாது இந்திய தூதுவராலயம் நடவடிக்கை எடுத்திருந்ததாக வடமாகாண அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

இத்தகைய பின்னணியிலேயே முன்னணியின் முன்னணி செயற்பாட்டளார் கஜேந்திரனை கொலை செய்ய முயற்சிகள் நடந்து தோல்வியினில் அது முடிந்துள்ளதாக நம்பப்படுகின்றது.  http://www.pathivu.com/news/40485/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் கூட பரராஜசிங்கம், ரவிராஜ் என பல செயல்திறன் மிக்க எம் பி களை போட்ட இலங்கை புலனாய்வுதுறை, கஜனை சீந்தவே இல்லை.

இவரை சுட்டு ஒரு தோட்டாவை ஏன் வீணாக்குவான் என்று.

அந்தளவுக்கு ஒரு வெங்காயம் இந்தாள்.

இதுக்க சாறத்தை தூக்கி விட்டு போஸ் கொடுக்கிறார்.

வாக்குப் பொறுக்கி அரசியல்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் கூட பரராஜசிங்கம், ரவிராஜ் என பல செயல்திறன் மிக்க எம் பி களை போட்ட இலங்கை புலனாய்வுதுறை, கஜனை சீந்தவே இல்லை.

இவரை சுட்டு ஒரு தோட்டாவை ஏன் வீணாக்குவான் என்று.

அந்தளவுக்கு ஒரு வெங்காயம் இந்தாள்.

இதுக்க சாறத்தை தூக்கி விட்டு போஸ் கொடுக்கிறார்.

வாக்குப் பொறுக்கி அரசியல்.

புங்குடுதீவில் அடிவாங்கியவர்கள் சாரத்தை தூக்கி காட்டும் போது எங்கையிருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான விபத்து அரசியல் கொலைகள் தெற்காசிய ஹிந்திய சன நாய் அக பாரம்பரிய நாடுகளில் சகஜம் தானே. :icon_idea:

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிலில் படுத்திருக்கும் நோயாளி....
காத்துப் பிடிக்க... சாரத்தை உயர்த்தி வைத்திருந்தாலும்,
சில ஒட்டுக்குழுக்களுக்கு... வாக்குப் பொறுக்கும் அரசியலாக தெரிகின்றது.
சம் சும் கோஸ்டி சம்பூரில், செய்யும் வாக்குப் பொறுக்கி அரசியல்....  இவர்கள் கண்ணுக்கு தெரியாது.
அந்தளவுக்கு.... நக்கிப் பிழைக்கும்... அரசியல் விசுவாசம் மேலோங்கி இருக்கும். :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ததமிழர்விரோதசம் இந்தியாவினதும் அதனது கைக்கூலிகளினதும் அவர்களுக்குத் துதிபாடுபவர்களதும் (அளவானவர்கள் தொப்பியைப் போட்டுக்கொள்ளவும்) வேலைத்திட்டத்தினை அடியொற்றிய இந்தியப்புலனாய்வுத்துறையினது திட்டமிட்ட வேலையாக இது இருக்கலாம்.

 

இச்செயலின் இலக்கு வெறும் கஜேந்திரன் மட்டுமல்ல. இது ஒரு சிறிய சம்பவமே, இதற்குப்பின்னால் யாரோ ஒரு சிலருக்கு இவர்கள் ஒரு செய்தியைச் சொல்லமுனைகிறார்கள் அதாவது இந்தியாவினது நிகழ்ச்சித்திட்டங்களுக்குப் பணிந்துவராத அனைவரும் எதிர்காலத்தில் இவற்றினை எதிர்நோக்கவேண்டுமென்பதே அச்செய்தி.

 

ரவிராஜ், பரராஜசிங்கம் போன்றோரைப் போட்டுத்தள்ளியபோதே கொசுறாக, கஜனையும் போட்டுத்தள்ளாம விட்டிட்டினம் எனும் ஆதங்கமாகவும் கோசன் சே அவர்களது கருத்தை எடுத்துக்கொள்ளலாம்.

CIA யும் FBI யும் இந்த operation ஐ RAW வுடன் இணைந்து திட்டமிட்டதாக புனைந்திருந்தால் என்னும் கதை சுவாரசியமாக இருந்திருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

தனது வல்லதிக்கத்து மிகப்பெரிய சவாலாக அண்ணன் வருவார் என்பதை துல்லியமாக கணித்த அமேரிக்கா, CIA, RAW, ISI, MI6 ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அண்ணன் மீது நடாத்திய கொலை வெறித்தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவு அமைப்புக்களது கொலை முயற்சி என்பது நம்பமுடியாத்து.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக - அண்ணரின் லெவலுக்கு இந்தியா மட்டும் இதில் ஈடுபட்டிருக்க முடியாது. எனது சந்தேகம் எல்லாம் CIA KGB MI6 மேலேதான்.

ISIS சக கூட இருக்கலாம், இல்லாட்டி அரசியல் போட்டி காரணமாக மாவை சம்பந்தர் கூட்டு கூட காரணமாக இருந்திருக்கலாம்  :)

 

பதிவு தளம் இவரை ஒருமாயாவி ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டுதாக்கும்.

 

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இலங்கையில எத்தினை வாகன விபத்து நடக்குது என்றாவது இந்த பீலா பத்திரிக்கை சிந்தித்திருக்குமா? 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

யுத்த காலத்தில் கூட பரராஜசிங்கம், ரவிராஜ் என பல செயல்திறன் மிக்க எம் பி களை போட்ட இலங்கை புலனாய்வுதுறை, கஜனை சீந்தவே இல்லை.

இவரை சுட்டு ஒரு தோட்டாவை ஏன் வீணாக்குவான் என்று.

அந்தளவுக்கு ஒரு வெங்காயம் இந்தாள்.

இதுக்க சாறத்தை தூக்கி விட்டு போஸ் கொடுக்கிறார்.

வாக்குப் பொறுக்கி அரசியல்.

 

விபத்தில் அடிபட்டு பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது கரிசனை உள்ள ஒருவர் பற்றிய இப்படியான விமரிசனம் தவறானதும் தவிர்க்க பட வேண்டிய ஒன்றுமாகும்.

 

இந்திய இரகசிய துறை எவ்வளவோ கொலைகளுக்கு பொறுப்பாக இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த விபத்து அவ்வாறானது அல்ல என்று ஆதாரம் இன்றி நிராகரிக்க முடியாது,

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு விபத்தா.. சதியா என்பது குறித்த நீதியான விசாரணைகளை சிங்கள காவல்துறையிடம் எதிர்பார்க்க முடியாது. எனவே மக்கள் இதயம் வென்ற தமிழ் அரசியல்வாதிகள் சுய விழிப்புணர்வோடு செயற்படுவது நல்லது. நக்கல் அடிக்கிற கூட்டம் உல்லாசமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு பியரும் பாப் கோனும் கையுமா அடிக்குங்கள். அதுகளுக்கு தெரிந்த அரசியல்.. பொழுதுபோக்கு எல்லாமே.. அதுதான். அதையிட்டு எவரும் கிஞ்சிதமும் அக்கறை கொள்ளத் தேவையில்லை. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் இதயம் வென்ற -

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 30 வருசமா மக்கள் வாக்குப் போட்டால் என்ன போடாட்டி என்ன.. பாராளுமன்றம் போகும் டக்கி.. இங்கு ஒருவருக்கு மக்கள் தலைவன்.

 

கடந்த தேர்தல்களில் படுதோல்வி கண்டு மன்னிப்புச் சபை உட்பட குற்றவாளியாகக் கண்ட சித்தார்த்தனை.. மக்கள் முன்.. வேட்பாளராக்கி தெரிவுக்கு வழி இன்றி.. வாக்குப் போடச் செய்த சம் சும் கும்பலின் செயலின் சித்தார்த்த.. மக்கள் தலைவர்.

 

ஏன் சங்கரியையும் சொல்லி இருப்பியள்.. கிளி மக்கள் கிழிச்சு போட்டுவிட்டார்கள். சம் சும் கும்பலையும் தாண்டி.

 

சம் சும் கும்பலின் சதியால்.. தோற்க நேர்ந்தாலும் மக்களின் மீது உண்மையான அக்கறையோடு அரசியல் கடந்து செயற்படும் கஜேந்திரன் எங்க.. சம்பூரை விடுவிச்சம் என்று விழா எடுத்திட்டு.. இப்ப பதுங்கிற சம் சும் கும்பலின் வாலுகள் எங்க. அதுங்க டக்கி.. சித்துக்கும் குடை பிடிக்குங்கள் அவசியம் என்றால். :lol::D

உதாரணமாக...................

 

 

கறுப்பினத்தவரைக் கொன்ற அமெரிக்கப் பொலிஸார். (இது தலைப்பு)

 

 

உயிரிழந்தவர் 36 வயதான கெவின் அலன் என அடையாளம் காணப்பட்டார். கெவின், கையில் கத்தியுடன் பொலிஸாரைத் தாக்க நெருங்கியபோதே சுடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  (இது செய்தி)

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் அறிவு பூர்வமாய் இதை அணுகுவோம்,

1) கடந்த 2010 தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் ஓரளவுக்கு நியாயமாய் நடந்தது.

2) டக்கி யாழில் 8-9 வீதம் வாக்கை தக்க வைத்தார்.

3) சீவி, அனந்தி பெருவாரியாய் வெண்ட அதே தேர்தலில் சித்தர் 40,000 எடுத்தார்.

4) இந்த இரண்டு தேர்தல்களும் விருப்பு வாக்கு அடிப்படையில் நிகழ்ந்தன. சம் சும் சதி செய்து பட்டியலில் பேர் வரச் செய்யலாமே தவிர, வாக்குப் பெறச் செய்யவியலாது.

5) டக்கியும் சந்திர குமாரும் ஈபிடிபி பட்டியலில் வென்றவர்கள். கூட்டமைப்புப் பட்டியலில் அல்ல. ஆக இவர்களை சம் சும் வெல்ல வைக்க முடியாது.

6) பட்டியலில் பெயர் இருந்தாலும், மக்கள் ஒருவரை தூக்கி எறியலாம் என்பதுக்கு ஆனந்த சங்கரியே சாட்சி.

7) அப்போ சங்கரிக்கு நடந்தது, ஏன் சித்தருக்கு நடக்கவில்லை?

8) டக்கி, சந்திரகுமார், விஜயகலா போன்ற போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டோருக்கு உள்ள மக்கள் செல்வாக்கு கூட ஏன் கஜன்&கஜனிற்கு இல்லை?

மக்கள்தான் முட்டாள்களோ

மக்கள்தான் முட்டாள்களோ

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் முட்டாள்கள் அல்ல. கூட்டமைப்பு என்ற தேசிய தலைவரின் அடையாளத்தைக் காட்டி.. மக்களை முட்டாளாக்கியது சம் சும் கும்பல்.

 

டக்கிளஸ் பரிவாரம் என்ன வகையில் வென்று வந்தது என்பதற்கு நெடுந்தீவு மக்கள் சாட்சி. கள்ள வாக்குகளை நிரப்பி டக்கிளஸ் நடத்திய அராஜக அரசியல் பற்றி தீவுப்பகுதி மக்களைத் தவிர வேறு யாரும் அதிகம் தெரிந்திருக்க முடியாது. இறுதியில் அதே தீவகத்தில் அவர்கள் கடந்த இரண்டு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். எனி அந்த வரலாறு தொடரும்..

 

சித்தார்த்தனின் சித்து விளையாட்டுக்களை வவுனியா அறியும். அங்கிருந்து மாணிக்கதாசனின் அராஜக அரசியல் மூலம்..ஒரு காலத்தில் நாடாளுமன்றம் போன சித்தார்த்தன்..இப்போது அங்கிருந்து ஒடி ஒளித்து.. கூட்டமைப்பு நிழலில் சம் சும் கும்பலிடம் சரணடைந்து.. யாழ்ப்பாணத்தில்.. தேசிய தலைவரைப் புகழ்ந்து பாடி.. எடுத்த வாக்குகள் தாம் அவை. அதிலும் சித்தார்த்தனுக்கு கிடைத்த வாக்கிலும் கூட்டமைப்பு உறுப்பினர் என்று மக்கள் போட்ட வாக்குகள் தான் 90%. முடிந்தால் சித்தார்த்தன் சுயேட்சையாக அல்லது புளொட்டில் நின்று எனி ஒரு தேர்தலில் வென்று காட்டட்டும் பார்க்கலாம். மக்கள் அப்ப தாம் முட்டாளா இல்லையா என்பதைக் காட்டுவார்கள். சம் சும் கும்பலின் நரித்தனத்தில் தப்பிப் பிழைத்தவர் தான் சித்தார்த்தன்.

 

ரெலோ சிவாஜிலிங்கம்.. சுயேட்சையாக நின்று வாங்கிக் கட்டினவர். கூட்டமைப்பில் நின்று வெற்றி. இப்ப புரியனும் மக்கள் எதுக்கு வாக்குப் போடினம் என்று. இதனையே சம் சும் கும்பல் பயன்படுத்தி வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நேர்மையான அரசியல்வாதிகளில் கஜேந்திரனும் ஒருவர். மக்கள் நிச்சயம்.. சம் சும் கும்பலின் திருகுதாளங்களை உணர்ந்து வாக்களிக்கும் நிலை வரும்.. போது.. உண்மையான கூட்டமைப்பு.. மற்றும்.. த.தே.ம.கூ மக்கள் வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யும் நிலை வரும். மக்கள் தேசிய தலைவர் இனங்காட்டிய அரசியல் ஒற்றுமையின் வடிவமாகக் கூட்டமைப்பைக் காண்பதால்.. அதற்கு வாக்களித்து வருகிறார்கள். சம் சும் கும்பல்.. அதில் குளிர்காய்கிறது.

 

சம் சும் கும்பலின் நரித்தனத்தை அறிந்து.. கிளி மக்கள் சங்கரியை பீஸ் பீஸ் ஆக்கினதும்.. நடந்திருக்கிறது. அந்தளவுக்கு யாழ் மாவட்ட வாக்களர்கள் சித்தார்த்தனின் கொடூரத்துக்கு முக்கியம் கொடுக்காமல்.. வாக்களித்தது.. அரசியல் ஒற்றுமையை நிலைநாட்டத்..திருந்த ஒரு சந்தர்ப்பமாகக் கூடக் கருதலாம்.

 

டக்கி செய்தது செய்வது நியாய அரசியலே இல்லை. அவர் செய்வது போல எடுபிடி.. எலும்பு பொறுக்கி அரசியல் செய்தால்.. இனத்தை விற்று.. தேசத்தைக் காட்டிக்கொடுத்து... எவனும் பிழைச்சுக் கொள்ளலாம். அதனை இட்டு நாம் இங்கு பேசுவதில்லை. சிலர் தாம் சொகுசாக வெளிநாடுகளில் அகதி என்று குடியேற டக்கி செய்யும் அதே சித்து விளையாட்டை தான் செய்தனர். அதனால்.. அந்த பாசிசவாதிகளின் ஆயுத அரசியலுக்கு ஒரு குடை பிடிக்கவே செய்வார்கள். :icon_idea::rolleyes::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சரத்துக்கும் வாக்களிச்சவை.  :)

மக்கள் முட்டாள்கள் அல்ல.

கூட்டமைப்பு என்ற தேசிய தலைவரின் அடையாளத்தைக் காட்டி.. மக்களை முட்டாளாக்கியது சம் சும் கும்பல்.

 

 

 

மக்கள் முட்டாள்கள் இல்லை என்கிறீர்கள் முதல்வரியில்.
 
அப்படியே மக்களை கூட்டமைப்பு முட்டாளாக்கியது என்கிறீர்கள் அடுத்த வரியில்.
 
ஒண்ணுமே புரியல்ல. மக்கள் முட்டாள்களா இல்லையா?
 
ஒவ்வொரு தனிமனிதனுக்கும் வாக்கை யாருக்கு செலுத்த வேண்டும் என்பதில் முழுமையான சுதந்திரம் இருக்கு. அதை அவன் எப்படி வேண்டுமானாலும் பிரயோகிக்கலாம். இங்கு மற்றவர்கள் மக்களை முட்டாளாக்குகிறார்கள் என்பது வெறும் காழ்ப்புணர்ச்சி, பொறாமை. மக்கள் என்பவர்கள் உங்கள் கருத்தியலுடன் உடன்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்று எந்த கடப்பாடும் இல்லை.அவர்கள் கருத்துக்கள் உங்கள் கருத்தியலுடன் வேறுபடும் போது அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் அல்லது முட்டாளாக்கப்பட்டு விட்டார்கள் என்று கருத்திடுவது வெறும் கருணாநிதி ஜெயலலிதா போன்றோர்களின் சிறு பிள்ளை விளையாட்டு.
 
ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் உங்களிடமிருந்து ஆக்கபூர்வமான யதார்த்தமான ஜனநாயகமான கருத்துக்களை எதிர் பார்க்கின்றேன்.
 
தாயக மக்கள்தான் தமது தீர்வை முடிவு செய்ய வேண்டும். புலம் பெயர்ந்த நாம் அத்தீர்வை அடைய உதவலாமே தவிர எமது கருத்தியல் தீர்வை அவர்கள் மீது திணிக்கக் கூடாது.
 
எனது மக்கள் சுயமாக முடிவெடுப்பது முட்டாள்தனமாயின் - எனது மக்கள் முட்டாள்களாகவே இருக்கட்டும்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

 

 
 
 
எனது மக்கள் சுயமாக முடிவெடுப்பது முட்டாள்தனமாயின் - எனது மக்கள் முட்டாள்களாகவே இருக்கட்டும்.

 

 

தெளிவான நிலையில் இருக்கும் மக்களையும் முட்டாள்களாக்கித் தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரிக்கும் கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கும் காலம் விரைவில் வரும்  :D

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் என்பது அவர்களுக்கும் "சுத்தம்" அவர்களின் வால்களுக்கும் "சுத்தம். அந்தச் "சுத்தம்" முள்ளிவாய்க்காலில் வந்து மண்டியிடும் வரை தொடர்ந்து மக்களை பெருந்திரளாகப் பலிகொடுத்தது வீர வரலாறு. இன்னும் அந்தச் "சுத்தத்தை" தொடர நினைத்தால் மக்கள் விரட்டி அடிப்பார்கள்!

தெளிவான நிலையில் இருக்கும் மக்களையும் முட்டாள்களாக்கித் தேர்தல் காலத்தில் வாக்குச் சேகரிக்கும் கூட்டமைப்பை மக்கள் ஒதுக்கும் காலம் விரைவில் வரும்  :D

 

 

வரட்டுமே வாத்தியார்
 
எனது மக்களின் அபிலாசை இதுதான் என்று மனதார ஏற்றுக் கொள்வேன். இங்கு யாரோ gapஇல கடாய் வெட்டிட்டாங்க என்று குத்தி முறியமாட்டேன். 
  • கருத்துக்கள உறவுகள்

சரத்த ஆதரிச்ச காரணம் - மகிந்தவை தோற்கடிக்க. மைத்திரியை ஆதரிச்ச மாரி. அதைப் போய் நாடாளுமன்ற, மாகாணசபை தேர்தலோடு ஒப்பிட்ட முடியாது.

சிவாஜிலிங்கம் கூட்டமைப்பை விட்டுப் போய் தோத்ததும் திரும்பி வந்து வெண்டதும் சரிதான்.

ஆனால் என்னுடைய கேள்வி,

1) டக், சந்திரகாந்தன், தவராசா, விஜயகலா எல்லோரும் தே.த வை வாழ்நாள் பூரா எதிர்த்தவர்கள். அப்போ அவர்களுக்கு தொடர்சியா வாக்குப் போடும் மக்கள் (10%) எல்லோரும் முட்டாள்களா?

2) சரி அந்த 10% ஐ முட்டாள்கள் என்றே வைப்போம். மீதி 90% வாக்காளரில் பலரும் ஏன் த தே கை காட்டாத விக்கி, சித்தர், ஐங்கரநேசன் போன்றோருக்கு வாக்குப் போடீனம்?

3) நீங்களே சொல்கிறீர்கள் கூட்டமைப்பு தே த வின் கொள்கையில் இருந்து மாறி வெகுநாளாச்சு. த தே கூ தான் அவரின் கொள்கையை அச்சொட்ட பின் பற்றுகிறது என. அப்போ ஏன் மக்கள் தொடர்ந்தும் த தேகூ வை புறக்கணிகிறார்கள்?

மக்கள் தே த வின் கொள்கையை புறக்கணித்து விட்டனரா?

அல்லது த தே வழிகாட்டியது என்பதுக்காக, அவர் சொன்ன வழிக்கு 100 எதிராய் போகும் அமைப்பை ஏகோபித்து ஆதரிக்கும் அளவுக்கு மக்கள் முட்டாள்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.