Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனை காவல் தெய்வமாக வழிப்படும் மக்கள்! PHOTO

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தங்கள் விருப்பம் சார்ந்து பிடித்த ஒரு தலைவனுக்கு கௌரவம் கொடுக்கிறார்கள். இக்கிராம மக்கள் தங்கள் ஊரைக் காக்கும் சாமியாக (போலி அரசியல் வாதிகளிடம் இருந்தும்) எம் தலைவனை நினைக்கிறார்கள். பெருமையாக இருக்கின்றது. ஒரு உன்னத தலைவனின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லலாம்.

இங்கு மாற்று இனத்தவன் வீட்டுக்கு வருகிறான் என்றால் சுவரில் தொங்கும் தலைவரின் படம் அலுமாரிக்கு பின்னால் ஒழிக்கப் பட்டு விடும், ஆனால் அவர்கள் தடை செய்த ஒரு நாட்டில் வாழ்ந்து முருகனுக்கு ஒரு தம்பியை உருவாக்கி நிமிர்ந்து நிக்கிறார்கள். வரலாறு நகர்கிறது.

ஒரு ஈழ தமிழனுக்கு கிடைத்த அதி உயர் கெளரவம்.வாழ்த்துக்கள் .

இதற்கு முதலும் தமிழ் நாட்டில் இப்படி இருவருக்கு கோயில் கட்டினார்கள் .

காலா காலத்திற்கு  இப்படியே இருக்க வேண்டுகின்றேன்  தமிழ் நாட்டு உறவுகளே .

 

அது சரி அந்த தெய்வங்கள் சிலுக்கும் குஸ்புவும்தானே
 
அப்ப நம்ம தலைவரையும் அந்த நிலைக்கு உயர்த்தீட்டாங்களா?
என்ன தமிழ் உணர்வு புல்லரிக்குது 
இண்டைக்கு வெள்ளிக்கிழமைதான் இருந்தாலும் fullஅரிக்க விடும் யோசனை இல்லை.

 

மீனா 1994 ஜனவரி மாதம் வரையிலாவது ஈழத்தில் இருந்த ஆள். கேள்வி கேட்பவர்கள் ..... :icon_idea:  :icon_idea: 

மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக மாட்டான். 

 

முதலில் இதைச் செய்து முடியுங்கோ விசுகு 

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/154777-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/page-17

:lol:  :lol:

இதுவே சிறந்த உதாரணம் உங்களுக்கு  :icon_idea: 

நன்றி, வணக்கம்!!

:D

 

மீனா
 
தயவு செய்து ஒரு தனி மனிதனைப் பற்றி விமர்சிக்க வேண்டாம். வெறுமனே செய்தியை பார்த்தமா வீரவணக்கங்கள் செலுத்தினமா என்று போகாமல் ஏதாவது செய்ய முயன்றது விசுகு. தனிப்பட உதவிகளை செய்வது இலகு. ஆனால் பலரது உதவிகளை ஒருங்கிணைத்து செய்வது கடினம். அவருக்குரிய பணியை சரிவர செய்ததாகவே எனக்கு தெரிகின்றது - இப்போது செய்து முடிக்க வேண்டியது நேசக்கரம்.
 
கருத்துக்ளை கருத்துக்களால் எதிருங்கள் தனிமனிதனை இதற்குள் இழுக்க வேண்டாம்.
 
நன்றி.
 
பிகு: எம் ஆர் ராதாவின் ஒரு பொன்மொழி.
 
டேய் டேய் டேய் சொல்றவன் சொந்த வாழ்கையைப் பற்றியெல்லாம் கிளறிப் பாக்காதே. அவன் சொல்றது அறிவுக்கு பொருத்தமா நடங்க இல்லாட்டி போங்கடா.
  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஐடியா நமக்குத் தோணாமப் போச்சே - புலயாவாரிகள்.

நியாயமான ஆதங்கம்தான். இன்னும் டைம் போகேல்லை. நல்லூர் முருகன், கதிர்காமம் முருகன், சந்நிதி முருகன், சிட்னி முருகன் எண்டெல்லாம் முருகனுக்கு பிராஞ்ச் இருக்குத்தானே! :D

நியாயமான ஆதங்கம்தான். இன்னும் டைம் போகேல்லை. நல்லூர் முருகன், கதிர்காமம் முருகன், சந்நிதி முருகன், சிட்னி முருகன் எண்டெல்லாம் முருகனுக்கு பிராஞ்ச் இருக்குத்தானே! :D

 

யோவ் வாலி சும்மா ஓசில ஐடியா குடுக்காதையும். அப்புறம் நாட்டுக்கொரு பிராஞ்ச் என்று தொடங்கி வீதிக்கொண்டு தேவை என்டு உம்மடை வீட்டுக் கதவையே உண்டியலுடன் தட்டுவாங்கள்.
 
முருகனுக்கே இணையானவன் அவன். அவனுக்கில்லாத பிராஞ்சா 
  • கருத்துக்கள உறவுகள்

சிலை அகற்றப்பட்டு விட்டது.சந்தோசமா மீனா

  • கருத்துக்கள உறவுகள்

சிலை அகற்றப்பட்டு விட்டது.சந்தோசமா மீனா

 

 

 

அவரை நினைவு படுத்த

காலம் காலமாக அவர் பெயர் வாழ...

ஒரு சிறு ஆறுதல் கிடைத்தது

 

விடுவமா??

தமிழேண்டா... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

சிலை அகற்றப்பட்டு விட்டது.சந்தோசமா மீனா

அகற்றப்பட்டதற்கு காரணம் எங்கட ஊடகங்கள். எங்கே அவல் கிடைக்கும் மெல்லுவதற்கு என்றிருக்கும் கயவர்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா தமிழக முதல்வர் யார் இப்போ? ராகுல் காந்திதானே. அதுதான்.

நம்ம ஈழத்தாய் ஆட்சியில் இப்படி நடந்திருக்குமா?

இந்த செய்தி விகடனில் வந்த பொழுது அதுக்கு கீழே கருத்தெழுதிய இந்திய தமிழர்களின் கருத்துக்களை இங்கிருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் வாசிக்கவில்லை போலுள்ளது. யாழில் ராஜிவ் சிலை வைப்பது போல் தான் இந்தியாவில் பிரபாகரன் சிலை வைப்பதும். இரண்டுக்குமே மக்கள் ஆதரவு கிடைக்காது.  8 கோடியில் ஒரு பத்தாயிரம் ஆதரிப்பதால் தமிழ் நாடே ஆதரிப்பதாக கருதினால் அது எங்கள் தவறு. கொண்ட லட்சியத்திற்காக இறுதி வரை போராடி மடிந்த ஒருவருக்கு முடிந்தால் முதலில் ஒரு அஞ்சலி செலுத்துங்கள். பிறகு கோவில் கட்டி காமடி பண்ணலாம்.
 

தலைவருக்கு அஞ்சலி செய்யாயினம், தலைவர் இருக்கிறார் அடுத்த கட்டப் போர் வெடிக்கும் எண்டால் தானே .......... :D 

 

 

இப்படிக் கேட்டால் தேசியவாதிகள் கேட்பவரைத் துரோகி ஆக்கிவிடுவினம். 2009 மே இறுதி வரை போராட்டிய போராளிகள் உண்மையை ஒத்துக் கொள்வார்கள் :) ஆனால் இணையப் போராளிகள்.... :lol:  

 


இங்கு எழுதுவது நேர வீரயம் அவ்வளவும் தான் :D 

  • கருத்துக்கள உறவுகள்

மீனா தெனாலி தலைவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என யாராவது உங்களை கட்டாயப்படுத்தினார்களா. நீங்கள் விரும்பினால் தாராளமாக அஞ்சலி செலுத்துங்கள்.

மீனா நீங்கள் குறிப்பிடுகின்ற போராளிகளில் ஒருவரை பகிரங்கமாக இதுதான் நடந்தது என கூறச்சொல்லுங்கள் பார்க்கலாம்.

நானும் பலரை சந்தித்திருக்கிறேன் யாருமே இதுதான் நடந்தது என திட்டவட்டமாக கூறுகிறார்கள் இல்லை.

உங்களுக்காக போராடியவர் என்று நீங்கள் சொல்லும் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா? சிங்களவன் செய்வதை விட கேவலம் புலத்திலிருந்து நீங்கள் போடும் "அவர் இருக்கிறார்" நாடகம்.
 
  • கருத்துக்கள உறவுகள்

 

உங்களுக்காக போராடியவர் என்று நீங்கள் சொல்லும் ஒருவருக்கு குறைந்த பட்சம் ஒரு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம் கூட உங்களுக்கு இல்லையா? சிங்களவன் செய்வதை விட கேவலம் புலத்திலிருந்து நீங்கள் போடும் "அவர் இருக்கிறார்" நாடகம்.

 

 

தலைவர் இருக்கிறார் என சிலர் இன்னும் வன்னியில் இருக்கிறார்கள். அவர்களை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
 
மனிதன் ஒரு போதும் கடவுள் ஆக மாட்டான்.

 

 

 

சாயிபாபா யாருங்கோ? கடவுள் ஆக்கேல்லையோ நீங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

வீர புரான் அப்பு என்பவனும் சிங்களவர்களுக்காக போராடினான். சிங்களவர்கள் இவரை ஒர் ஹீரோவாகாவே பார்க்கிறார்களே தவிர கடவுளாக வழிபடவில்லை.

சாயிபாபா யாருங்கோ? கடவுள் ஆக்கேல்லையோ நீங்கள்?

 

 

கல்யானி அக்கா
 
தேத கடவுள்தான் என்பதில் எனக்கும் கொஞ்சம் உடன்பாடிருக்கு.
 
ஆனால் கடவுள் இறந்த பிறகுதான் ஆடு கோழி எண்டு பலி கொடுப்பாங்கள். ஆனா எங்கட இந்தக்கடவுள் மட்டும் ஏனக்கா இருக்கும் போதே இலட்சக் கணக்கில் மனுசரை பலி எடுத்தார். புரியவில்லை.
 
இது எனது அறிவுக்கு அப்பாற்பட்டது - ஆனாலும் எங்கள் முருகனுக்கே இணையானவன் நிச்சயமா கடவுள்தான்.

கோயில் காட்டினால் தான் தலைவரின் நினைப்பு வரும் . மாவீரர் தினத்தில் கொத்து றொட்டி  நினைப்பாய் தானே இருக்கும் :lol:  :icon_idea: 

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ அம்மையாருக்கு தலைவரைப் பிடிக்காது. ஆனால் எம் ஜி ஆருக்குப் பிடிக்கும். அம்மையார் சந்தர்ப்பவதத்தால்.. அரசியலில் இருக்கிறவர். கொஞ்சம் சிந்தித்து நடந்தால்.. எதிர்கால வரலாறு இவரை நல்ல விதமாக நினைவு கூறும். இல்ல தூற்றும். அவ்வளவும் தான். தேசிய தலைவரின் சிலையை அகற்றுவதன் மூலம்.. அவர் பற்றிய எண்ணங்களை மக்களிடம்.. பலப்படுத்தியதற்கு நன்றி. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்
 மனிதன் மிருகமாகலாம், அவன் மனிதனாகலாம், அந்த மனிதன் இறைவனாகலாம்.
செருக்கு சிந்தை ஏறும்போது மிருகமாகிறான், செருக்கை வென்று வாழும்போது மனிதனாகிறான், சேவை செய்து உயரும்போது  இறைவனாகிறான். 
சிலரை பார்த்து 'தெய்வம் போல வந்து உதவிநீங்கள்' என்று  கூறுகிறோம். அவர்கள் வடிவில் வந்தவர் உண்மையாகவே கடவுள்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.