Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்த சர்ச்சைகளும் எனக்குத் தெரிந்தவைகளும்: நடராஜா குருபரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி. கனிமெதழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்...

இதனை கனிமொழி முழுமையாக மறத்துள்ளார்.. கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்...

இங்கே எனகு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பங்கள் குறித்த மௌத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்... இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்த்தர்கள் - அல்லது அவர்களோடு நெருங்கியிருந்தவர்கள் கூட தமக்கு தெரிந்தவற்றை முன்வைக்கலம்....

2002ல் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதல் இறுதியாக ஜெனிவாவில் பேச்சுவார்த்தை முறிந்தது வரை யப்பான் கொக்னேயில் இடம்பெற்ற நிதிவழங்கும் நாடுகளின் கூட்டம் வரை அனைத்திற்கும் சென்றிருந்தேன்...

அதனால் முள்ளிவாய்க்கால் மே 19 வரையிலும் அதன் பின்னும் இணைத்தலைமை நாடுகளின் ராஜதந்திரிகள் சிலர் என்னுடன் உறவில் இருந்தனர்...

நான் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் யுத்தம் குறித்த விடயங்களை தகவல்களை அங்கு நடக்கும் அழிவுகளைப் பற்றி உரையாடுவர்... இப்படி பல விடயங்களை உரையாடும் போது கிளிநொச்சி புலிகளிடம் இருந்து வீழ்ந்த பின் இணைத்தலைமை நாடுகள் ஒரு முக்கிய நகர்வை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதற்கு காரணம் அவர்களின் கணிப்பில் கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் விடுதலைப் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதும் அரசாங்கத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதும் உறுதியானது....

அந்த வகையில் இணைத் தலமை நாடுகளால் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியில் ஒன்று புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைதல்..

விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு ஐக்கியநாடுகள் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இணைத்தலைமை நாடுகளின் ஒத்துழைப்புடன், பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் பாதுகாப்பு வலையம் அமைத்து அவர்களை பாதுகாத்தல்...

.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்களை அரசாங்க கட்டப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தல்...

அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்...

இது குறித்து இணைத்தலைமை நாடுகளில் ஒன்றுடன் தொடர்பில் இருந்த புலிகளிடம் உரையாடப்பட்டதுடன் திட்டமும் முன்வைக்கப்பட்டது...

ஆனால் புலிகள் தமது போராட்டம் இறுதிவரை தொடரும் என்றும் ஆயுதங்களை கீளே போடுதல், சரணடைதல் என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை எனவும் உறுதியாக நின்றதனால் இந்தத்திட்டம் கைவிடப்பட்டதாக, கவலையுடன் அந்த ராஜதந்திரி சொன்னார்....

இதே வேளை இணைத் தலமை நாடுகளின் கோரிக்கையை புலிகள் நிராகரிக்க காரணமாக இருந்தது இந்தியாவின் தமிழ்நாட்டு தலைவர்கள் - முக்கயிஸ்த்தர்கள் கொடுத்த நம்பிக்கையும், புலம்பெயர் நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகளின் சில முக்கியஸ்த்தர்கள் கொடுத்த நம்பிக்கையுமே காரணம் என பின்னாளில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமுடைய ஒருவர் கூறியிருந்தார்...

ஆனால் புலிகள் தரப்பில் இது குறித்த தகவல்களை என்னால் பெற முடியவோ உறுதிப்படுத்தவோ முடியவில்லை... இது பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம்...

இணைத் தலமை நாடுகள் உண்மையில் இந்த திட்டத்தை முன்வைத்து புலிகள் அதனை நிராகரித்து இருந்தமை உண்மையானால் அந்த முடிவு சரியானாதா?

கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்பும் தாக்குப் பிடிக்கலாம் என நினைத்திருந்தால், புலிகள் தமது பலம் தொடர்பில் சரியான கணிப்பீட்டை கொண்டிருந்தனரா?

2007ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒரு ராஜதந்திரி புலிகளின் பலம் இப்போ  எப்படி என்று கேட்டார்.. அதற்கு நான் சொன்னேன் அவர்கள் மிகப் பலமாக இருக்கிறார்கள்... முன்னேறும் படையினரை முன்னைய சமர்கள் போல் எதிர் கொள்வார்கள் என கூறிய போது அவர் சிரித்தார்....

ஏன் என்று கேட்டதற்கு தமக்கு கிடைத்த சரியான தகவல்களின்படி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுரிவித் தாக்கும் அணிகள் பல புலிகளின் இதயம் என்று சொல்லப்படும் முல்லைத் தீவில் கூட நிற்கிறார்கள்... என்றார்.... புலிகளின் உடையிலேயே புலிகளாக நிற்கும் அவர்களை புலிகள் கூட அடையாளம் காணாமல் தமது நகர்வுகளை முன்னெடுக்கிறார்கள்... என்றார்....

இது குறித்து 2008ன் ஆரம்பம் என நினைக்கிறேன்... சர்வதேச சூழல் எப்படி இருக்கிறது என கேட்பதற்கு சமாதான காலத்தில் சந்தித்த ஒரு புலிகளின் முக்கியஸ்த்தர் எனது தொலைபேசியை எங்கிருந்தோ பெற்று கதைத்த போது இதனை சொன்னேன்... அவர் முழுதாக மறுத்து உவங்கள் விசரங்கள் உப்பிடித்தான் சொல்வாங்கள்... நாம் பலமாகவே உள்ளோம் என்றார்....

உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் தமது மௌனத்தை கலைக்கும் வரை இவை கதைகளாகவே தொடரும்.....

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120654/language/ta-IN/article.aspx

உண்மையிலேயே புலிகள் ஒன்றுமே தெரியாத முட்டாள்கள் போன்று நடந்து முற்றாக அழிந்து விட்டது போன்ற
ஒரு  தோற்றத்தை  உருவாகினார்கள். அதைதான்  GAME THEORY என்று சொல்வார்கள்.  :D

உண்மையிலேயே எதிரி என்ன செய்ய வேண்டும் என்பதையும் புலிகளே தீர்மானித்தார்கள்.  :D

அப்ப புலிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியா தீர்மானித்தான் டண்டணக்கா? :D

அரசு அடித்த இரண்டு பெட்டிகளுள்  ஒழித்து  அதுவும் முடியாமல் வெள்ளை கொடி .

பாவம் பொதுமக்கள்  நாலு பேர்கள் தப்ப நாற்பதியாரத்தை பலி கொடுத்தார்கள் .

பெட்டி அடித்தது ,மக்களை கொன்றது தங்களை தாமே சுட்டது இது எல்லாம் பெரிய ராஜதந்திரம் .இப்படி சொன்னவரை கன காலம் காணவில்லை .

எரித்தியாவிற்கு போய் விட்டாரோ தெரியாது .

  • கருத்துக்கள உறவுகள்

புலி பெட்டி அடிக்காமலே ஒரு துண்டு துணியும் இல்லாமல் சிங்களத்தின் காலில் விழுந்தது ஒட்டுக் குழுவானது

நாம் அழிவது வேறு அதை விட்டு நாம் தப்ப நாற்பதியாயிரம் அப்பாவி மக்களை பலி கொடுப்பது வேறு .

வெள்ளை கொடி பிடிப்பது என்றால் ஆயுத போரட்டமே ஆரம்பித்து இருக்க கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சித்தர் வ்வுனியாவில் அப்பாவி மக்களை பலி எடுத்தது வேறா

ம்ம் ... அரசியல் நல்ல பொழுது போக்கு  :D 

அட அங்கு போய் சண்டை செய்திருந்தீர்கள் எண்டா 1 அடி நிலமாவது இருந்திருக்குமே :D 

(இணையப் போராட்டத்தை விட்டிட்டு) :D 

நட்பு வட்டார சிங்களவன் கூட வெள்ளை கொடி பற்றி சிரிக்கின்றான் .தாங்க முடியவில்லை .

அப்ப புலிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை எதிரியா தீர்மானித்தான் டண்டணக்கா? :D

அப்படித்தான் எதிரி நினைச்சு கொண்டிருந்தான் வாலி ஐயா. அதுகெற்ற மாதிரிதான் புலிகள் நடந்து கொண்டார்கள்.  :D

நட்பு வட்டார சிங்களவன் கூட வெள்ளை கொடி பற்றி சிரிக்கின்றான் .தாங்க முடியவில்லை .

20 நாடுகளுக்கு எதிராக கிட்ட தட்ட 3 வருடம் போராடி பெரிய இழப்புகளை ராணுவத்திக்கு கொடுத்துவிட்டு தான் வெள்ளை கொடி பிடித்தார்கள் அதுவும் காயப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்குமாக ...
 
இதனை போய் விளங்க முடியாத உங்களை எல்லாம் ,.... வேண்டாம் .... அப்புறம் தப்பாகிடும் ...
ஒட்டுண்ணி புளொட் குழு  புலிகளின் , மக்களின் .....அதனை கூட தொட தகுதி இல்லாதவர்கள் ....
 
முடிவு தெரிந்தாலும் போராடினார்கள் ... பச்சோந்திகள் இல்லை.   

Edited by பிரபாதாசன்

நட்பு வட்டார சிங்களவன் கூட வெள்ளை கொடி பற்றி சிரிக்கின்றான் .தாங்க முடியவில்லை .

என்னது சிங்களவன் சிரிகிரனா .... சொந்தமாக் போராட தெரிய பன்னிகள் ... வல்லரசு நாடுகளை உதவிக்கு சேர்த்து கொத்து குண்டு போட்டு செய்தது போர்  அல்ல ... அதுக்கு வேற பெயர் ... 
 
அட அண்ணாச்சிக்கு இதனை தான் தாங்க முடியவில்லையோ ... நீங்கள் ஆயுதத்தை இராணுவத்திக்கு எதிராக இல்லாமல் சொந்த சகாக்களை சுட்டவர்கள் தானே ... எப்படி உங்களுக்கு வீரத்தை பற்றி தெரியும் .....

ம்ம் ... அரசியல் நல்ல பொழுது போக்கு  :D 

அட அங்கு போய் சண்டை செய்திருந்தீர்கள் எண்டா 1 அடி நிலமாவது இருந்திருக்குமே :D 

(இணையப் போராட்டத்தை விட்டிட்டு) :D 

அதுக்கு துப்பாக்கி சுட தெரிஞ்சிருக்கு வேணும்  :D
தோசை அப்பளம்  வடை சுட்டவன் எல்லாம் முந்தி இயக்கத்திலை 
இருந்தனான் எண்டு பிலிம் காட்டினால் ஒரு அடி நிலமும் எப்படி மிஞ்சும்  :lol:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 கிளிநொச்சி புலிகளிடம் இருந்து வீழ்ந்த பின் இணைத்தலைமை நாடுகள் ஒரு முக்கிய நகர்வை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்டார்.

இதற்கு காரணம் அவர்களின் கணிப்பில் கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் விடுதலைப் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதும் அரசாங்கத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதும் உறுதியானது....

அந்த வகையில் இணைத் தலமை நாடுகளால் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியில் ஒன்று புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைதல்..

விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு ஐக்கியநாடுகள் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இணைத்தலைமை நாடுகளின் ஒத்துழைப்புடன், பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் பாதுகாப்பு வலையம் அமைத்து அவர்களை பாதுகாத்தல்...

.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்களை அரசாங்க கட்டப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தல்...

அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்...

இது குறித்து இணைத்தலைமை நாடுகளில் ஒன்றுடன் தொடர்பில் இருந்த புலிகளிடம் உரையாடப்பட்டதுடன் திட்டமும் முன்வைக்கப்பட்டது...

ஆனால் புலிகள் தமது போராட்டம் இறுதிவரை தொடரும் என்றும் ஆயுதங்களை கீளே போடுதல், சரணடைதல் என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை எனவும் உறுதியாக நின்றதனால் இந்தத்திட்டம் கைவிடப்பட்டதாக, கவலையுடன் அந்த ராஜதந்திரி சொன்னார்....

இதே வேளை இணைத் தலமை நாடுகளின் கோரிக்கையை புலிகள் நிராகரிக்க காரணமாக இருந்தது இந்தியாவின் தமிழ்நாட்டு தலைவர்கள் - முக்கயிஸ்த்தர்கள் கொடுத்த நம்பிக்கையும், புலம்பெயர் நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகளின் சில முக்கியஸ்த்தர்கள் கொடுத்த நம்பிக்கையுமே காரணம் என பின்னாளில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமுடைய ஒருவர் கூறியிருந்தார்...

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/120654/language/ta-IN/article.aspx

இது கிட்டதட்ட உண்மை தான், பல ஆயிரக்கணக்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக பாரளுமன்று உள்ளே சென்ற போது கூறப்பட்டது. ஆனால், புலம்பெயர் பந்தயக்காரர்கள், அது பற்றி யோசிக்க கூட மாட்டோம் என்று மறுத்து விட்டார்கள். ஒரு வேளை புலிகள் சம்மதம் தெருவித்திருந்தாலும் பந்தயக்காரர்கள் தயாரில்லை. 

Edited by suban11

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள்  சிங்கள ராணுவத்தை, எதிர்த்து முழு மூச்சாக போராடிக் கொண்டிருந்த வேளை....
தமீழத்தை, தங்களது... இயக்கப் பெயராக வைத்துக் கொண்டு.... புலிகளுக்கு எதிராகவும், சிங்களத்துக்கு காட்டிக் கொடுப்பு வேலைகளை செய்து கொண்டிருந்த ஒட்டுக்குழுக்களையும் சமாளிக்க... தங்களின் ஆற்றலையும், நேரத்தையும்... செலவழிக்க வேண்டி வந்தது.
 
போராடுபவனின் ஆற்றலை.... திசை திருப்பிய ஒட்டுக் குழுக்கள், இப்போ இங்கு வந்து... நக்கலும், நையாண்டியும் செய்வது...
தமிழினத்தை தவிர, உலகில் வேறு எந்த இனமும் செய்ய மாட்டாத இழி செயல்.
 
தாங்கள் செய்த கூத்துக்களை மறைக்க.. இங்கு வந்து நாடகமாடுவதைப் பார்க்க... அருவருப்பாக உள்ளது.
இவர்களுக்கு... புலிகளைப் பற்றிக் கதைக்க.. எந்த அருகதையும் இல்லை என்பதை... சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
 
இவர்கள்... "தானும் செய்ய மாட்டான், தள்ளியும் படுக்கமாட்டான்" என்ற ரகத்தை சேர்ந்தவர்கள்.

Edited by தமிழ் சிறி

போரில் தோற்றாலும் புலிகள் உண்மையான வீரர்கள் ....இதனை உங்களை போன்ற பச்சோந்திகள் சொல்ல தேவையில்லை ..அதனை உலக வல்லரசுகளே ஒத்து கொண்டு விட்டார்கள் ... அதனால் தான் ஒன்று சேர்ந்து வந்தார்கள் அழிக்க ...
 
20 நாடுகளுக்கு எதிராக கிட்ட தட்ட 3 வருடம் போராடி பெரிய இழப்புகளை ராணுவத்திக்கு கொடுத்துவிட்டு தான் வெள்ளை கொடி பிடித்தார்கள் அதுவும் காயப்பட்ட போராளிகளுக்கும் மக்களுக்குமாக ...
 
இதனை போய் விளங்க முடியாத உங்களை எல்லாம் ,.... வேண்டாம் .... அப்புறம் தப்பாகிடும் ...
ஒட்டுண்ணி புளொட் குழு  புலிகளின் , மக்களின் .....அதனை கூட தொட தகுதி இல்லாதவர்கள் ....
 
முடிவு தெரிந்தாலும் போராடினார்கள் ... பச்சோந்திகள் இல்லை.   

Excellent யதார்த்தமான வார்த்தைகள்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நினைப்பது போல குப்பி கட்டியவர்கள் எல்லாம் சரண் அடைய கூடாது என்பதல்ல. ஒரு போராளி சரண் அடைவதால் போராட்டத்துக்கு பாதிப்பு வரும் என்றால் மட்டும் தான் குப்பி பாவிக்கபடும். இந்த திரியை நிப்பாட்டுவது நல்லது என நினைக்கிறேன். விடுதலை போராட்டம் தொடங்கியபோது போராட புறப்பட்ட போராளிகளின் மனதில் இருந்த சிந்தனைகளுக்கும் இப்ப உள்ள சனத்தின் சிந்தனையும் முற்றிலும் வேறுபாடானது. ஒரு போராளி தன் நலனை விட தன் இனத்தின் நலன் பெரிதென நினைத்துதான் போராட போகிறான். அந்த பெரு மக்களை பற்றி கதைக்க இங்கு யாருக்கும் அருகதை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே சுபன் சொல்லி இருப்பது 100% உண்மை.

புலிகள் அழிந்து யுத்தம் முடிவிற்கு வந்திராவிட்டால் கடந்த ஆறு வருடங்களையும் நினைத்து பார்க்கவே மனம் பதைக்கின்றது.எத்தனை உயிர்கள் இரு தரப்பிலும் பலியாகியிருக்கும் .

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த எந்த தரப்பிற்கும் எவருக்கும் நாம் என்றும் நன்றியே செலுத்தவேண்டும் .

என்ன, புலிகளை அழிக்கின்றோம் என்று மக்களை கொத்து குண்டு போட்டு கொன்றுவிட்டது உங்களுக்கு நல்ல செயல் ... இதனை விட ஒரு கேவலம் இருக்க முடியாது ... 
 
புலிகளும் இறந்தும் இன்று போரடிக்கொன்று தான் இருக்கின்றார்கள் ஆனால் பச்சோந்திகள் மட்டும் பொறாமையில் வெடித்து கொன்று இருக்கின்றார்கள் ...கவனம் இரத்த அழுத்தம் வரப்போகின்றது ....
 
எதிர் விமர்சனம் வர வர தான் அந்த உன்னத தலைவனும் போராளிகளும் உயர்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ...
என்ன சிரிப்பு என்றால் , உங்கள் கொஞ்ச பேரால் நினைப்பதை கூட எங்கள் தலைவரால் நினைக்க முடியவில்லையாம் என்ற இவர்களின் அலட்டல்கள் தான் .. என்ன காமெடி ...
 
எத்தனை எதிர்களை 35 வருடங்களுக்கு மேலாக எதிர்த்து நின்ற தலைவனுக்கு தெரியாதா ...
புலிகள் இறந்தும் இன்னும் வென்று கொண்டு தான் இருக்கின்றார்கள் ... இதன் முடிவு உங்களால் இப்ப உணர முடியாது.... 
 
கொஞ்சம் அடக்கி வாசித்தால் நல்லம் ....
  • கருத்துக்கள உறவுகள்

செயற்திறன் அற்ற வாய்ச்சவாடல்கள். சிங்களவன் அடிக்கும்போது, வெட்டும்போது மனித நேயம், அழிவு தெரியேலை. அடித்தவனை தடுத்தால், எதிர்த்தால் மனிதநேயம், அழிவு என்று முகாரி பாடிக்கொண்டு வருவினம். அவையை சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் வளர்ந்த, வாழ்ந்த விதம் அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அழிந்து யுத்தம் முடிவிற்கு வந்திராவிட்டால் கடந்த ஆறு வருடங்களையும் நினைத்து பார்க்கவே மனம் பதைக்கின்றது.எத்தனை உயிர்கள் இரு தரப்பிலும் பலியாகியிருக்கும் .

யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த எந்த தரப்பிற்கும் எவருக்கும் நாம் என்றும் நன்றியே செலுத்தவேண்டும் .

யுத்தத்துக்கு உயிர்களைக்கொடுப்பது நிறுத்தப்படணும்

அதற்காக பலியாகும் கடைசி உயிர் தனதாக இருக்கணும் என்பது தான் ஒவ்வொரு புலிகளதும் கோரிக்கையாகவும் கனவாகவும்  இருந்தது. அதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. உங்களுடைய கருத்துடன் உடன்படுகின்றேன்

ஆனால் அதற்கு புலிகள் பலியாகியிருக்கணும்

புலிகள் பலிக்கடாவாக்கப்பட்டிருப்பது சரியே என்ற தங்களது கருத்து பழி வாங்கும் தீராத பகையின் வெளிப்பாடு மட்டுமே....

அங்க தான் நாங்கள் முரண்படுகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் நீங்கள் போராட்டத்தை நிறுத்தியவர்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றால் உங்கள் எதிரியான புலிகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அப்படி என்றால் இந்தப்பொதுக்களத்தில் உங்கள் நன்றியை செலுத்துங்கள் பார்க்கலாம்.

அர்ஜுன் நீங்கள் போராட்டத்தை நிறுத்தியவர்களுக்கு நன்றி கூறவேண்டுமென்றால் உங்கள் எதிரியான புலிகளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். அப்படி என்றால் இந்தப்பொதுக்களத்தில் உங்கள் நன்றியை செலுத்துங்கள் பார்க்கலாம்.

மேலே சுபன் சொல்லி இருப்பது 100% உண்மை.

இன்றுகூட அவர்கள் விட்டபாடில்லை, அன்று புலிகளின் தலைமைக்கு என்ன கயிறு கொடுத்து சிக்கலில் மாட்டினார்களோ அதே தூக்கு கயிற்றுடன் தான் இன்றும் பிரச்சனைகளை கிளப்புகிறார்கள்.

இதுவரைக்கும் நாட்டில் வாழும் மக்கள் சரியாகவே தமது அரசியல் தலைவர்களை தேர்ந்து எடுத்துள்ளார்கள்.

ஆனாலும் இந்த குழப்ங்காசிகள் விட்டபாடில்லை 

எதுக்கும் நானும் ஏன் கருத்தை ஐடியாவாக நினைத்து இந்த சிமைலியை போடுவம்  :icon_idea:  :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.