Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எங்கட ராஜதந்திரம் விளங்கல்ல..

மாவை போன மாசம் சம் சும் கூட இருந்து சொன்னது இதயத்தால நெருங்கிட்டம். அது சிங்கள மக்களை குளிர்விக்கச் சொன்னது.

சம் சும் சம்பூரில் சொன்னது விடுவிச்சாச்சு. வழக்கில எல்லாம் வெண்டிட்டம். இப்ப சம்பூர் இன்னும் விடுவிக்கல்ல.. கட்டாயம் விடுவிப்பம். அது போன மாசம் இது இந்த மாசம்.

சும் லண்டனில் சொல்வது சிங்களவன் இடிச்ச வீட்டை நாங்க தான் கட்டிக்கொடுக்கனும். அதுக்குத்தான் பேச்சு வார்த்தை. வீடு கட்டுறது பற்றிப் பேச.. சர்வதேச மத்தியஸ்தம்.. ரகசியம்.. இல்லாட்டி மகிந்த எல்லாத்தையும் குழப்பிடுவார்.. இப்படிப் பயங்காட்டியே காலத்தை ஓட்ட வேண்டும்.. அது சும்மின் ராஜதந்திரம்.

இப்ப தேர்தல் வரப்போகுது. வாக்குக்கு.. ஒரே வழிதான்.. ஒப்பாரி அரசியல்.

காலம் காலமா எங்களுக்கு தெரிஞ்சது சொந்த தமிழ் மக்களை ஏமாத்திறது மட்டும் தான். அதுக்கும் ஒரு ராஜந்திரம் வேணும் கண்டியளோ. :icon_idea::o:lol:

  • Replies 52
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கோசான்
 
நீங்கள் அடிக்கடி ஒரு சொற்றொடரை களத்தில் பாவிக்கின்றீர்கள் (இத்திரியில் இச்சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது)  மிகவும்  வக்கிரம் நிறைந்த இச்சொற்றொடர் ; கருத்துக்களோடோ, செய்திகளோடோ சற்றும் தொடர்பில்லாது, மற்றவர்களை மனம் நோகச் செய்வதற்கென்றே இங்கு உங்களால் பாவிக்கப்படுகிறது. 
 
நடந்தவற்றை திரும்பி போய் மாற்ற முடியாது , இனி நடப்பவற்றையாவது வெற்றிகரமாக மாற்றுவோம் என பல்வேறு மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு செயற்பட நினைப்பவர்களை , நீங்கள் உங்கள் வக்கிர வார்த்தைப் பிரயோகத்தால் சிதைக்கிறீர்கள். அதற்காக விடப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டக் கூடாது என்பதல்ல, ஆனால் அதனை நீங்கள் உங்களின் நக்கல் நையாண்டிகளுக்கு பயண்படுத்துகிறீர்கள். அதன் வெளிப்பாடுதான் இப்படியான வக்கிரம் நிறைந்த சொற்றொடர்.
 
இச் சொற்றொடர் மற்றவர்களை எப்படி காயப்படுத்தும் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை விரும்பிப் பாவிக்கிறீர்கள். இதன் மூலம் உங்கள் மன வக்கிரம் தெளிவாக வெளிப்படுகிறது .
 
உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்தே பலர் தங்களின் நேரத்தினை வீணடிப்பதாக நான் நினைப்பதுண்டு, ஆனால் இன்று அந்த லிஸ்டில் நானும் ............ என்ன செய்வது மிகவும் காயப்படுத்தும் உங்களை ஒவ்வொரு முறையும் மெளனமாக கடந்து செல்ல முடியவில்லை.
 
எனது பார்வையில்,
நிறைந்த பால்குடமான யாழ் இணையத்தில் நீங்களும் ,அர்ஜுனும் ,(சில சமயங்களில் வாலியும்) நச்சுத்துளிகள்.

நன்றி ஐயா

எவ்வளவு மன வருத்தத்தில்

எவ்வளவு பொறுப்போடு இதை எழுதியிருப்பீர்கள் என்பதை சம்பந்தப்படடவர்கள் உணர்வார்களாக....

யாழ் களத்தின் எதிர்காலம் மற்றும் களஉறவுகளிடையேயான சுமுகநிலை சார்ந்து சம்பந்தப்பட்டோர் சிந்திப்பார்களாக..

ஒரு சகோதரனாக எனது வேண்டுகோளும் இதுவே...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
ஜனாதிபதியும் பிரதமரும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது எம்மை ஏமாற்றி விட்டார்கள் : மாவை
அண்ணோய் 40 வருடத்திற்கு முதல் நீங்கள் இளைஞர் பேரவையில் சேர்வதற்கு முக்கிய காரணமே இதுதானே......மீண்டும் புத்தர் ஆட்சி பீடம் ஏறினாலும் தமிழனுக்கு ஏமாற்றம் தான்...
  • கருத்துக்கள உறவுகள்

ரகு,

நீங்கள் அப்படிச் சொல்லவில்லைத்தான் ஆனால் பிரபாகரனை அவரின் தோற்றுப் போன கொள்கையை மக்கள் பின்பற்ற வலியுறுத்துகிறீர்கள். எப்போதும் ஏமாந்தோம் இடையில் பிரபா வந்து புதிய பாதை காட்டினார் என்றீர்கள்.

வன்முறையை தவிர பிரபா என்ன புதிய பாதையை காட்டினார்? சொல்லப் போனால் செல்வா, அமிர் மாவை சம்-சும் எல்லோரையும் விட மிக மோசமாக சிங்களவர்களால் ஏமாளியாக்கப் பட்ட ஒரு தமிழ் தலைவர் என்றால் அது தேத வாய்தான் இருக்க முடியும்.

இதை நான் சொல்லும் முறை கடினமாய் இருக்கிறது.

ஏனெண்டால் நான் சொல்லும் விடயம் கடினமானது. தவிர பிரபா தவிர் மாவீரரை நான் விமர்சிப்பதில்லை.

ஆதவன்/விசுகு,

கோ எனும் அந்த வாக்கியத்தை நான் பாவிப்பது அந்த தலைமையின் தூர நோக்கற்ற, கொள்கை வங்குரோத்து தனத்தையும், அதையே இன்னும் உய்விற்கான வழியாக காட்டும் உங்களின் போக்கற்ற நிலையை சுட்டவுமே.

இதை விட மோசமாக மாற்று இயகத்தினை களை பிடுங்கினோம் என மார்தட்டும் பல "வீரர்கள்" இதே களத்தில் இருந்தாலும் அது உங்களை கிலேசமடய செய்யவில்லை.

ஆனால் நீங்கள் கேட்டதுக்காக - இனி நானாக முதலில் வலிந்து அந்த சொல்லை பாவிக்க மாட்டேன் என உறுதி கூறுகிறேன். ஆனால் விடமாட்டார்கள். நீங்களே இருந்து பாருங்கள் யார் அந்த உவமையை கையில் எடுக்கிறார்கள் என.

விசத்தை பால் என பருகுவோர்கு, விட முறிவு மருந்து விடமாய்தான் தெரியும்.

நானும் அர்ஜூனும் வாலியும் - நிறைந்த பஜனைக் கூட்டத்தில், அபஸ்ஸுவரங்கள்.

புலவர்,

இல்லை சம் ஓ சும் ஓ யாழ்பாண எம்பிகள் இல்லை.

யாழ் எம்பிகளுக்கு பணம் தந்ததாயே விக்கி சொன்னார்.

அது தான் மாவை நீட்டி முழக்கிறார்.

நீங்கள் கூறும் கருத்துகள் சரி என்ற மாதிரி சொல்ல வருகின்றீர்கள் ... ஒரு விடயம் , அமைதியாக போராட்டம் செய்த செல்வா , அமீர்  இவர்களுக்கு என்னத்த சிங்களம் செய்தது .... கடைசியில் ஏமாளியக்கபட்டத்தை தவிர வேறு என்ன கண்டார்கள் ... ஆனால் தந்தை செல்வா மட்டும் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறி விட்டு சென்றார் ... 
 
தார் உற்றி சிங்களம் தமிழனை கொளுத்தும் பொது கோசன் .... தமிழன் என்ன செய்வது தண்ணி உற்றுவதா ? சொல்லுங்கள் ...
 
தமிழனை வீடு புகுந்து காடையர்கள் வெட்டும் போது ... பகவத் கீதையை சொல்ல சொல்கின்றீர்களா ? . கிழக்கு மாகாண மக்களுக்கு இது தெரியும் ... பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் தான் ... அதில் நானும் ஒருவன் ...அப்போது புலிகளின் ஆரம்ப காலம் ...புலிகளால் மட்டுமே அதனை எதிர்க்க முடிந்தது ...இது எனது நேரடி அனுபவம் .
 
இப்படியான வெட்டு கொத்து மற்றும் குடியேற்ற கலாசாரத்தை தமிழரால் நிறுத்த முடியவில்லை ...அஹிம்சையால் இது முடியாதது ...இதுவே புலிகளின் ஆயுத கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது ...
 
தெளிவாக தெரிந்த இந்த உண்மையை நீங்கள் மட்டும் புலிகள் தான் ஆயுதம் தூக்கினார்கள் அதனை சிங்களம் எதிர்த்தது என்று மனச்சாட்சி இல்லாத உலகம் சொல்கின்ற மாதிரி சொல்கின்றீர்கள் ....பாதிக்கப்பட்டவனுக்கு புலிகள் காக்கும் கடவுளாக இருந்தார்கள் ... இதனை ஏற்றால் என்ன விட்டால் என்ன ...இது தான் உண்மை அதனை உங்களை போன்ற வர்கள் இல்லை என்பது ... காமெடிதான் ....
 
புலிகள் செய்த போராட்டம் தான் எங்களுக்கான திறவு கோல் எக்காலத்திலும் ....இதனை புலி எதிர்ப்பு வாதிகள் இல்லை என்பதால் ஒன்றும் ஆக போவதில்லை ....

அதுதானே?

எங்கே போய் தொலைந்தார்கள் இந்த பிரசாரகர்கள்?

ஒரு வேளை புலத்தில் சாய்மானக் கதிரைகளில் இருந்த படி மகிந்தவை, ரணிலை, மைத்திரியை ஒட்டுமொத்த சிங்கள இனத்தையே வெற்றி கொள்ளும் அசகாய திட்டம் எதையும் தம் தொன் கணக்கான அறிவை பாவித்து தீட்டுகிறார்களோ என்னமோ.

வணங்கா மண் புகழ் வீரர்கள் அல்லவா,

கட்டாயம் தென் காடான், வட கீடான் இன்னும் பல இல்லாத நாடுகளின் உதவியுடன் தமிழ் ஈழம் கண்டே தீருவார்கள்.

புலம்பல் என்று கூறுவது இதை தான். தான் வால்பிடிக்கும் பேர்வழிகளான சம்பந்தன், சுமந்திரனின்  தோஸ்து மைத்திரியை பற்றி தான் ஆதரிக்கும்  தமிழரசு கட்சி தலைவர் மாவையே குறை கூறியதை சகிக்கமுடியாமல் தலைப்புக்கு எந்த தொடர்பும் இல்லாமல்  நாய் எப்போது காலை தூக்குவது போல வழமையாக தான் திட்டி தீர்க்கும், திட்டி திட்டியே மகிழ்ச்சியடையும்  புலம்பெயர் மக்களை திட்டி தீர்த்துள்ளார் திருவாளர் கோசென்.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்சே யாழ்ப்பாண எம்பிக்கள்தான் காசு வங்கியதாகத்தான் விக்கி ஐயா கூறியதாகச் செய்திகள் இல்லை.த தே கூட்டமைப்பு எம்பிக்கள் வங்கியதாகத்தான் செய்தி.த தே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்தான் பதில் சொல்ல வேண்டும்.தமிழரசுக் கட்சித் தலைவர் ஏன் குத்தி முறிகிறார்?அப்ப தமிழரசுக்கட்சியின் கட்சி எம்பிமார்தான் காசு வாங்கானவையோ?.கூட்டமைப்பில் முடிவெடுக்கக் கூடியவர்களுக்குத்தான் சிங்களவன் காசு கொடுப்பான்.சில்லறைகளுக்கு கொடுத்து ஏமாறமாட்டான்.கூட்டமைப்பில் முடிவெடுக்கக்கூடியவர்கள்.சனாவும்சுனாவும்தான்.ஒருத்தருக்கும் தெரியாமல் இலன்டனில் கூட்டம் போட முடிவெடுத்த ஆட்கள்தானே.கருத்தை திசை திருப்பாமல் தலைப்புக்கு கருத்து எழுதுங்கள்.

கோசான்

நீங்கள் அடிக்கடி ஒரு சொற்றொடரை களத்தில் பாவிக்கின்றீர்கள் (இத்திரியில் இச்சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது) மிகவும் வக்கிரம் நிறைந்த இச்சொற்றொடர் ; கருத்துக்களோடோ, செய்திகளோடோ சற்றும் தொடர்பில்லாது, மற்றவர்களை மனம் நோகச் செய்வதற்கென்றே இங்கு உங்களால் பாவிக்கப்படுகிறது.

நடந்தவற்றை திரும்பி போய் மாற்ற முடியாது , இனி நடப்பவற்றையாவது வெற்றிகரமாக மாற்றுவோம் என பல்வேறு மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு செயற்பட நினைப்பவர்களை , நீங்கள் உங்கள் வக்கிர வார்த்தைப் பிரயோகத்தால் சிதைக்கிறீர்கள். அதற்காக விடப்பட்ட பிழைகளை சுட்டிக் காட்டக் கூடாது என்பதல்ல, ஆனால் அதனை நீங்கள் உங்களின் நக்கல் நையாண்டிகளுக்கு பயண்படுத்துகிறீர்கள். அதன் வெளிப்பாடுதான் இப்படியான வக்கிரம் நிறைந்த சொற்றொடர்.

இச் சொற்றொடர் மற்றவர்களை எப்படி காயப்படுத்தும் என்பது நிச்சயமாக உங்களுக்குத் தெரியும். ஆனால் நீங்கள் மீண்டும் மீண்டும் அதனை விரும்பிப் பாவிக்கிறீர்கள். இதன் மூலம் உங்கள் மன வக்கிரம் தெளிவாக வெளிப்படுகிறது .

உங்களைப் போன்றவர்களுடன் விவாதம் செய்தே பலர் தங்களின் நேரத்தினை வீணடிப்பதாக நான் நினைப்பதுண்டு, ஆனால் இன்று அந்த லிஸ்டில் நானும் ............ என்ன செய்வது மிகவும் காயப்படுத்தும் உங்களை ஒவ்வொரு முறையும் மெளனமாக கடந்து செல்ல முடியவில்லை.

எனது பார்வையில்,

நிறைந்த பால்குடமான யாழ் இணையத்தில் நீங்களும் ,அர்ஜுனும் ,(சில சமயங்களில் வாலியும்) நச்சுத்துளிகள்.

இவ்வளவு கொலைகள் கொள்ளைகள் தூள் கடத்தல் செய்பவர்களை நியாயப்படுத்த நிற்பவர்களுக்கு எமது எழுத்து விஷம் தான் .வெறும் வேஷம் போட்டு வயிறு வளர்பவர்களுக்கு உண்மை பேசுபவன் எதிரிதான் .

சற்றும் அரசியல் பார்வையற்ற **** கோஸ்டிகளுக்கு மத்தியில் நாம் படும் அவஸ்தை எமக்குத்தான் தெரியும் .

ஒரு ஆரோக்கியமான அரசியல் நாட்டில் வரவேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம் அதை இன்று குழப்பநிற்பவர்கள் புலம் பெயர்ந்த புலிவால்கள் தான் .அடித்த காசை வைத்து நாட்டு அரசியலை தீர்மானிக்கலாம் என்று பகல்கனவு காணுபவர்களை இனம் காட்டவேண்டியது எமது கடமை.

நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

நாட்டில் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தெரிவுசெய்துவிட்டார்கள் .இனி அவர்களை பலப்படுத்த வேண்டியதும் அவர்களுடாக எமக்கு ஒரு தீர்வு எடுப்பதும் தான் எமது இலக்காக இருக்கவேண்டுமே ஒழிய நீங்கள் கண்ட கனவு பலிக்காமல் போனதற்காக அவர்கள் செய்யும் அரசியலை குழப்பவே நீங்கள் நிற்கின்றீர்கள் .

புலிகளை முதன்மை படுத்தி அரசியல் செய்யாவிடில் உங்காளால் ஏற்றுக்கொள்ளமுடியாது ஆனால் அது எக்காலமும் நாட்டில் நடக்கக்கபோவதில்லை .உங்கள் கனவும் மெய்ப்படப்போவதில்லை .

அதைத்தான் நாங்களும் சொல்கின்றோம்

புலிகளை திட்டுவதைவிடுத்து அந்த மக்களுக்கு என்ன செய்யலாம் எழுதுங்கள்

செய்யுங்கள்

அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையிலே

போர்க்குற்றம் விசாரிக்கப்படணும் என்றும்

இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யணும் என்றும்

தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுதையும் கவனத்திலெடுங்கள்.

நியானி: மேற்கோள் ஒன்றும் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

சிங்களத்தின் ஆட்சிப்பீடத்தில் எவர் இருந்தாலும், நடப்பது ஒரு ஒழுங்கான முறையில் வடிவமைக்கப்பட்ட,  காலம் காலமாக மிகவும் திட்டமிட்ட ரீதியில் கட்டியெழுப்பப்பட்ட சிங்களப் பெளத்த ஆட்சிதான் என்பதை நாம் ஏனோ அவ்வப்போது மறந்துவிடுகிறோம். யார் ஆட்சிக்கு வந்தாலும், ஏற்கனவே வகுக்கப்பட்ட சிங்களப் பெளத்த பேரினவாதப் பாதையில் போவதைத்தவிர அவருக்கோ அல்லது அவவுக்கோ வேறு வழியில்லை.

சரி, இந்த நன்கு திட்டமிட்ட , காலம் காலமாக வகுக்கப்பட்ட பாதையில் போவதில் என்ன தவறு என்று கேட்கிறீர்களா? இலங்கையின் ஆட்சி மொழி சிங்களம், இலங்கையின் ஆட்சி மதம் பெளத்தம், இலங்கையின் முதலாம்தரக் குடிமக்கள் சிங்களப் பெளத்தர்கள், மற்றையோர் எல்லோரும் ஒன்றில் வந்தேறுகுடிகள், அல்லது பாரிய ஆலமரத்தைச் சுற்றிப் படரும் ஒட்டுண்ணிகள் அல்லது கொடிகள். இன்னொரு வழியில் சொல்வதானால், இரண்டாம்தரக் குடிமக்கள்.

அந்தவகையில், இப்போது நல்லாட்சி நடத்த வந்திருக்கும், மைத்திரியாகட்டும், ரணிலாகட்டும் இந்த நன்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட வழியில் நின்று ஒழுகுவதைத்தவிர வேறு வழியில்லை. அவர்கள் ஆட்சிக்கு வருவதற்காக இரண்டாம்தரக் குடிமக்களின், வந்தேறுகுடிகளின், ஒட்டுண்ணிகளின் தயவு தேவைப்பட்டது, ஆகவேதான் இந்த இரண்டாம்தரக் குடிமக்களின் ஏக பிரதிநிதிகள் நிபந்தனையேதுமற்ற ஆதரவை ரணிலுக்கும் மைத்திரிக்கும் வழங்கினார்கள். இப்போது ஆட்சிக்கு வந்தாயிற்று, இனிமேல், நிறுவனமயப்படுத்தப்பட்ட சிங்கள பெளத்த இயந்திரம் என்ன செய்யச் சொல்கிறதோ அதைத்தான் அவர்களால் செய்யமுடியுமே தவிர, இரண்டாம் தரக் குடிமக்களின் ஏக பிரதிநிதிகளின் சொல்லுக்கு ஏற்ப ஆட முடியாது. இது காலம் காலமாக இரண்டாம்தர குடிமக்களின் ஏக பிரதிகளாக இருந்த எல்லோருக்கும் சிங்களப் பெளத்தம் எடுத்துவரும் பாடம்தான். ஆனால் அதை உணர்ந்து கொள்ளும் பக்குவமோ, ஞானமோ இரண்டாம்தரக் குடிமக்களுக்கு எப்போதுமே இருந்ததில்லை, இனிமேலும் இருக்கப்போவதில்லை.இரண்டாம்தரக் குடிமக்களுக்கும், அவர்களை வழிநடத்தும் ஏக பிரதிநிதிகளுக்கும் தேவையானதெல்லாம், இப்போதிருக்கும் ஆட்சி மாற்றம் என்பதே எப்போதும் தேவையாக இருந்திருக்கிறது. ஆனால் தாம் அரியணையிலிருந்து இறக்கியவருக்கும், புதிதாக அரியணையில் ஏற்றியவருக்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் கண்டீர்கள் என்றால், "இப்போதுதானே ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள், ஏன் அவசரம்? விட்டுத்தான் பிடிப்போமே"? என்கிறார்கள். இந்த விட்டுப் பிடித்தல் கடந்த 65 வருடங்களாக நடந்துவருவதை இரண்டாம்தரக் குடிமக்கள் அவ்வப்போது மறந்துவிடுகிறார்கள். 

இடையில் ஒருத்தர் வந்தார், இந்த விட்டுபிடித்தல் எல்லாம் சரிவராது, சிங்களப் பெளத்த பேரினவாதம் இரண்டாம்தரக் குடிமக்களுக்கு எதையுமே தரப்போவதில்லை, ஆகவே ஆயுதம்தான் வழியென்று இளைஞர்களைக் கூட்டிக் கொண்டு போராடப் போனார். அவரையும், அவரது போராளிகளையும் நிறுவனமயப் படுத்தப்பட்ட சிங்களப் பெளத்த பேரினவாதமும், பக்கத்திலுள்ள இன்னொரு நிறுவனமயப்படுத்தப்பட்ட இந்துத்துவா பிராந்திய மேலாதிக்க வாதமும் சேர்ந்து அடித்து முடித்தன. 

ஆக மீண்டும், விட்டுப்பிடித்தலுக்கு வந்திருக்கிறார்கள் இரண்டாம்தரக் குடிமக்கள். இன்னொரு 65 வருடங்கள் விட்டுப் பிடிப்பதற்கான காய் நகர்த்தல்களை இரண்டாம்தரக் குடிமக்கள் சார்பில் அவர்களது ஏக பிரதிநிதிகள் ஆரம்பித்திருக்கிறார்கள். 

அதுசரி, இந்த இரண்டாம்தரக் குடிமக்களுக்கு இப்போதைக்கு இந்த விட்டுப் பிடித்தலைத்தவிர வேறு வழியிருக்கிறதா? சத்தியமாக எதுவுமேயில்லை !

உலகில் அடக்குமுறையாளர்கள் அடக்குகின்றார்கள் என்பதற்காக அதை எதிர்த்து பாதிக்கபட்டவர்கள் போராடாமல்  இல்லை அது இனவிடுதலையாகட்டும் நிறவெறிக்கு எதிராக ஆகட்டும் பெண் விடுதலையாகட்டும் எதிரி பலமானவன் என்று தெரிந்தாலும் விடாமல் தொடர்ந்த போராட்டங்கலாலேயே வெற்றி பெற்றார்கள் வெற்றி பெறாதவர்கள் இன்னமும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள் .இனவிடுதலை ,நிறவெறி ,பெண்விடுதலை போன்ற போராட்டங்கள் இன்றும் உலகெங்கும் தொடருது .

அடக்குமுறை இருக்கும் வரை அதை எதிர்த்து போராட்டமும் இருந்துகொண்டே இருக்கும் ஆனால் ,

ரகு என்ன சொல்லவருகின்றார் என்றால் 

சுதந்திரத்திற்கு பின் தமிழர்கள் நடாத்திய அனைத்து போராட்டங்களும் வேஸ்ட் இப்போ நடாத்தும் போராட்டங்களும் வேஸ்ட் இடையில் கடவுள் போல் ஒருவர் வந்தார் அவரையும் சூது செய்து அழித்துவிட்டார்கள் எனவே நீங்கள் இனி கால காலம் அடிமைகளாக இருங்கள் ஏனெனில் போராடியும் பிரயோசனம் இல்லை .

புலிகள் செய்த மிக பெரிய முளைச்சலவை இதுதான் .இதை இன்றும் நம்பி அவர்கள் வந்தால் ஒழிய இனி எதுவும் நடவாது என்ற ரீதியில் உலக போரட்டவரலாறுகள் எதையும் அறியாது எழுதுபவர்களை என்ன செய்வது .

எங்களால் முடியாவிட்டால் எவனாலும் முடியாது அடைந்தால் தமிழ் ஈழம் அல்லது சாம்பல் மேடு .இப்படியான மிக பிழையான எண்ண உருவாக்கத்தில் இருந்து பலர் இன்னமும் விடுபடவில்லை அதானால் தான் இனி எவர் நாட்டில் வந்து அரசியல் செய்தாலும் அதை இங்கிருந்து குழப்பவோ அல்லது நம்பிக்கையீனமான கருத்துகளை வைக்கவோ தான் முன் வருகின்றார்கள் .

காலம் எப்போதும் ஒரு மாதிரி ஓடுவதில்லை மாற்றங்கள் நாங்கள் எதிர்பாராத விதத்தில் எப்படியும் வரலாம் ஆனால் நாங்கள் எமது உரிமைகளுக்காக போராடுவதை விட்டுவிடமுடியாது .

புலிகளுக்கு, ராஜபக்சாக்ளுக்கு ,காங்கிரசுக்கு என்ன நடந்தது என்று தெரிந்தாலே அரைவாசி விளங்கிய மாதிரித்தான் .எதுவும் நிரந்தரமில்லை ஆனால் படுத்துக்கிடந்தால் எதுவும் சாத்தியமில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு கொலைகள் கொள்ளைகள் தூள் கடத்தல் செய்பவர்களை நியாயப்படுத்த நிற்பவர்களுக்கு எமது எழுத்து விஷம் தான் .வெறும் வேஷம் போட்டு வயிறு வளர்பவர்களுக்கு உண்மை பேசுபவன் எதிரிதான் .

சற்றும் அரசியல் பார்வையற்ற மொக்கு கோஸ்டிகளுக்கு மத்தியில் நாம் படும் அவஸ்தை எமக்குத்தான் தெரியும் .

ஒரு ஆரோக்கியமான அரசியல் நாட்டில் வரவேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம் அதை இன்று குழப்பநிற்பவர்கள் புலம் பெயர்ந்த புலிவால்கள் தான் .அடித்த காசை வைத்து நாட்டு அரசியலை தீர்மானிக்கலாம் என்று பகல்கனவு காணுபவர்களை இனம் காட்டவேண்டியது எமது கடமை.

கிட்டத்தட்ட 60வருட காலமாக நடந்த இனப்படுகொலைகளும் அரசியல் அடக்குமுறைகளும் கண்ணெதிரே நடந்தும் ஏன் சிந்திக்க மறுக்கின்றீர்கள். புலி என்ற கோணத்தை விட்டு தமிழினம் என்று சிந்தியுங்கள். :icon_idea:
 
பட்டும் தெளியாத சனம். :(

உதைத்தானே நான் திரும்ப திரும்ப எழுதுகின்றேன் .

தமிழ் இனத்தின் விடுதலை என்று புறப்பட்டு ஒரு தனிமனிதனின் புகழ் பாடி போராட்டத்தை வியாபாரம் ஆக மாற்றிய புலம் பெயர்ந்தவர்களும் தமிழ் நாட்டு வியாபாரிகளும் இன்றும் அதை தொடர்கின்றார்கள்  .தலைவனும் அதில் மயங்கியதில் தான் போராட்டம் வியாபாரமாக மாறியது .

எதற்கும் ரகுவிற்கு நான் எழுதிய பதிவை படிக்கவும் .

இனத்தின் விடுதலை பற்றி சிந்தித்தால் கூட்டமைப்பை பற்றி இவ்வளவு விமர்சனம் யாழில் வராது .

அண்ணை கருத்துக்கு கருத்து தான் முக்கியம். அங்கை போய் பார் இஞ்சை போய் படி எண்டெல்லாம் திசை காட்ட வேண்டாம்.

மற்றவன் புலியெண்டு கத்தினால் நீங்கள் ஏன் அவனோடை நிண்டு மாரடிக்கோணும்? நல்லது செய்ய நினைக்கிற உங்களை போலை ஆக்கள் ஏன் இன்னும் உங்கினேக்கை குளிருக்கை கிடந்து நடுக்குறியள்?

கூட்டமைப்பு:- ஈழத்தமிழினத்தின்ரை விஷங்கள் அதுக்கைதான் நிரம்பியிருக்கு அண்ணே...

நியானி: நீக்கப்பட்ட மேற்கோளுக்கான பதிலும் அகற்றப்பட்டுள்ளது.

Edited by நியானி

ஜீவன் இதில் கோபப்பட எதுவுமில்லை .நான்  பலரை இங்கு கணக்கில் எடுப்பதே இல்லை .இவர்களை விட எவ்வளவோ கேவலமானர்வளை எல்லாம் தாண்டி வந்துவிட்டோம் .

பலர்  ரசிப்பதால் அவர் தொடர்கின்றார் ..

வாவ்வ்வ்வ்வ்வ்வ் இந்த கருத்து இதயத்தை திருடி விட்டது என்று சொன்னால் சரியான வசனம் இல்லை என்றே படுகிறது, எப்படி சொல்லலாம் இதயத்தை கொள்ளை கொண்டு போய் விட்டது என்பதே சாலப்பொருந்தும். :icon_mrgreen:

அவுஸ்ரேலியாவில், டென்மார்க்கில், சுவீடனில், லண்டனில், ஏன் கனடாவில் கூட சோத்துப்பார்சல் கூட்டத்தின் பெரிய தலைகள் இருக்கிறார்கள். பெயர் விபரங்கள் தேவையாயின் தர முடியும், சொல்லுவார்கள் வாரக்கணக்கில் "எவ்வளவு உயர்வான மிருகங்களுடன் மன்னிக்கவும் கழக கண்மணிகளுடன் இருந்தோம் என்பதையும், கண்மணிகள் செய்த உயர் திருவிளையாடல்களையும்"! , தேவையா விபரங்கள்?

ஊர் வழியே கொஞ்சக்காலம் தீப்பொறிகள் என்று தெரிந்தார்கள், அவர்களது எழுத்துக்களையும் வாசிக்கவில்லையா? கன தீப்பொறிகளையும் போட்டும் முடித்தாச்சுத்தான்! அதுக்கு மேல் புதியதோர் உலகம்?

இப்ப எல்லாம் நம்ம மாற்றுக்குழு மாணிக்கங்கள் வெள்ளைத்துண்டைப்போட்டு தாண்டி வெள்ளை வேட்டி கட்டி சந்தனம் குங்குமம் போட்டு, தாம் நல்லவர்களாம்? நாம நம்பீட்டோம் :icon_mrgreen:

Edited by no fire zone

தேர்தல் நேரத்தில் ஏமாத்துறான் எண்டு கூச்சல் இடுவது, பின்பு ரணிலிடம் கூழைக் கும்பிடு போடுவது. இது புளிச்சுப் போன தமிழரசுக் கட்சி அரசியல்.

சம்-சுன்-விக் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாய் (எப்போதும் இல்லை) நடக்க முற்படுகிறார்கள்.

தமிழ் மக்கள் முன் உள்ள தலைமைகள் இவைதான்

1) சம்-சும்-விக்கி தலைமையில், அனந்தி, சிவாஜி போன்ற கோமாளிகளையும், சுரேஸ், சித்தர், சரவணபவன் போன்ற சுயநலமிகளையும் சேர்த்த கூட்டமைப்பு

2) கஜன் தலைமையில், கஜேந்திரன், பத்மினி, அப்புறம் வணங்காமண் கோமாளிகள் போன்ற புலத்து காமெடி பீசுகளையும் சேர்த்து, சுயநலமிகளான புலயாவாரிகள் நெடியவன், தலைமை செயலகம் போன்ற மாபியாக்கள் வழி நடத்தும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி.

ஒரு இலட்சிய (ஐடியல்) உலகில் கூட்டமைப்பு கஜனை எடுத்துக் கொண்டு சுரேஸ், சரா. அனந்தி, சிவாஜி, சித்தர் போன்றோரை அங்கால அனுப்பினால். கூட்டமைப்பு நல்ல தொரு அரசியல் அமைப்பாகவும், மறுபுறம் ஒரு சூப்பர் சர்கஸ் கம்பனியாகவும் மிளிரலாம்.

இப்படி நடக்க வாய்ப்பு குறைவாதலால் - கூட்டமைப்பும் கோமாளிகள் வசம் போகாமல் இருப்பது அவசியமாகிறது.

அந்த வகையில் சம்-சும்-விக் கூட்டை விட்டால் மக்களுக்கு வேறு தெரிவில்லை.

 "பின்வாசல்" சுமந்திரன், சிங்களத்தினால் தமிழ் மக்களுக்காக வளர்க்கப்படும் ஓர் தலைவர். அவ்வவுதான்!  மேல் நீங்கள் எழுதியதை கூட்டிக்கழித்துப் பாருங்கள் புரியும்.

கோசான்
 
எனது பார்வையில்,
நிறைந்த பால்குடமான யாழ் இணையத்தில் நீங்களும் ,அர்ஜுனும் ,(சில சமயங்களில் வாலியும்) நச்சுத்துளிகள்.

நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
 
சில சந்தர்ப்பங்களில் கோபத்தால் பதியப்படும் சில வார்த்தைகள் மற்றவர்களின் மனங்களினைப் புண்படுத்துமேயன்றி எமது கருத்துக்களை எடுத்துச் செல்ல உதவி புரிவதில்லை. எனது சொற்றாடல்களிற்காக இன்று இரு திரிகளில் மன்னிப்பு கேட்டிருந்தேன் - வெட்கப்படவில்லை. நானும் மறைமுகமாக நக்கலடிப்பதுண்டு. இங்கு யாரில் பிழை, யார் ஆரம்பித்தது என்பதிற்கு மாறாக கருத்துக்களில் கவனம் செலுத்துவோம்.
 
சும்மாயிருந்த உங்களையும் ஆதவனின் கருத்து சீண்டியிருப்பின் உங்களிடமும் ஒரு மன்னிப்பு கேட்கின்றேன்.
 
தயவு செய்து கருத்துக்களை கருத்துக்களால் எதிர்ப்போம். யாராவது தனிமனித தாக்குதல் செய்தால் சுட்டிக்காட்டுவோம்.

இந்தத் தனி நபர் தாக்குதலை எல்லோருமாக விட்டு விடுங்கள்.எல்லாருக்கும் நல்லது என நான் நினைக்கின்றேன்.சரி பிழைகளைத் தெரிவிக்கலாம். பிழை பிடிக்க முனைவது தப்புத்தான்.இங்கு ஒருவர் இருக்கிறார்.அவருடன் நான் நாட்டைப்பற்றியோ அரசியலோ கதைப்பதில்லை,காரணம் அவர் எப்படியாவது புலிகளைக்குற்றம் சுமத்தியே பேசுவார்.அப்போது தோழர் ஒருவர் புலிகள் செய்த நன்மையையாவது ஏற்றுக்கொள் என்றார்.அவர் அதற்கு அவர்கள் என் எதிரி ஆனபடியால் எதையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.இதே போலத்தான் இங்கு சிலர் நடந்து கொள்கிறீர்கள்.புலிவால் சோத்துபார்சல் போன்ற பாசைகளைத்தவிர்த்தால் நல்லது.

முடிந்தால் இவர்களுக்கு பிச்சை போடுங்கள்!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

நான் இங்கே ஒன்றை சொல்லி வைக்க விரும்புகிறேன். அண்மைகாலங்களில் உங்கள் வார்த்தைகளில் தரம் அநியாயத்துக்கு கீழ்த்தரமாய் போகிறது.

இன்னொரு திரியில் நல்லாகத் தான் எழுதிக் கொண்டு வந்தீர்கள். திடீரென என் அப்பா அது இது என்று கொச்சையாக எழுதினீர்கள். பலன்? அந்த கருத்தாடல் அப்படியே நின்று போனது.

யாரும் தம்மை கொச்சையாக திட்டுபவர் மீது தூசணத்தில் ஏசுபவரோடு பேச விரும்பாயினம்.

இதே திரியில் அர்ஜூனும் நானும் அப்படி எத்தனையோ பேரை சட்டை செய்யாமல் விட்டுள்ளோம். கவனித்திருப்பிர்கள்.

நாங்கள் பதில் போடாது விட்டால் அவர்களுக்கு குடி முழுகாதுதான்.

ஆனால் எதிர் கருத்தாளர்கள் பதிலே இடாமல் காத்துக்கு கத்தி வீசுவது ரொம்ப போரடிக்கும். பலருக்கு போர் அந்தளவுக்கு அடித்து இப்போ யாழ் பக்கம் வருவதே குறைவு.

அவர்கள் லிஸ்டில் நீங்களும் சேரக்கூடாது என்பதே என் தயவான விண்ணப்பம்.

கோசான் நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இந்த களத்தில் மற்றவர்களை படிக்காதவர்கள் தான் மட்டுமே அறிவாளி என்று எழுதியவர் அர்சுன். அதை நீங்கள் ஒருவருமே எதிர்க்கவில்லை. நிச்சயமாக அர்சுணோ அல்லது வேற யாரோ மற்றவர்களை படிக்காதவர்கள் என கருத்தெழுதினால் அவர்களுக்கு ஏற்றவாறு பதில் அளிக்கப்படும்.

மேலும் இப்போது நடைபெறும் விடயங்கள் கூட்டமைப்பு குறிப்பாக சம் சும் விடும் தவறுகள் பிழைகள் தொடர்பாக எழுதும் போது நீங்கள் 2009 க்கு முன்னர் நடந்ததையும் வேறு கட்சிகளாக இருந்தால் இந்த பிழைகள் பாரிய அளவாக இருக்கும் என்றும் வாதிடுவது தவறு.

நான் ஒருவரையும் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுங்கள் என சொல்லவில்லை அவர்களின் தவறை விமர்சித்து அவற்றை திருத்தி செல்லவேண்டும் என்றே கூறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பதிலுக்கு நன்றி மீரா. நான் இங்கே என் மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவே. தவிர அர்ஜூன் அண்ணா "மொக்கு கூட்டம்" என்று சொன்னதை "விளக்கம் இல்லாதவர்கள்" என்றே நான் புரிந்து கொண்டேன். இதை படிக்காதவர்கள் என நான் விளங்கி கொள்ளவில்லை.

நான் முன்பே சொன்னது போல படித்த, படிக்காத 48 க்கு பின்னான எல்லா தமிழ் தலைமைகளும் ஏமாளிகளாகவே இருந்துளனர்.

83 - 2009 முன்பான தமிழ் தலைமை வழிகொண்ட முறை முற்றிலும் தவறானது என்பது கருத்து.

அதை இப்போதும் கைகொண்டால் மக்கள் மேலும் பேரழிவை சந்திப்பது உறுதி என நம்புகிறேன். ஆகவே அந்த வழியில் மக்களை வழினடத்த எத்தனிப்போரை எதிர்கிறேன்.

இதுதான் என் அரசியல்.

கூட்டமைப்பும் இந்த வழியில் போனால் அதையும் எதிர்தே எழுதுவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கொலைகள் கொள்ளைகள் தூள் கடத்தல் செய்பவர்களை நியாயப்படுத்த நிற்பவர்களுக்கு எமது எழுத்து விஷம் தான் .வெறும் வேஷம் போட்டு வயிறு வளர்பவர்களுக்கு உண்மை பேசுபவன் எதிரிதான் .

சற்றும் அரசியல் பார்வையற்ற **** கோஸ்டிகளுக்கு மத்தியில் நாம் படும் அவஸ்தை எமக்குத்தான் தெரியும் .

ஒரு ஆரோக்கியமான அரசியல் நாட்டில் வரவேண்டும் என்பதுதான் எனது ஆதங்கம் அதை இன்று குழப்பநிற்பவர்கள் புலம் பெயர்ந்த புலிவால்கள் தான் .அடித்த காசை வைத்து நாட்டு அரசியலை தீர்மானிக்கலாம் என்று பகல்கனவு காணுபவர்களை இனம் காட்டவேண்டியது எமது கடமை.

நியானி: ஒரு சொல் நீக்கப்பட்டுள்ளது.

அந்த சொல்லை வெட்டினால் எல்லாம் முடிந்ததா?

பதிலுக்கு நன்றி மீரா. நான் இங்கே என் மனதில் பட்டதை சொன்னேன் அவ்வளவே. தவிர அர்ஜூன் அண்ணா "மொக்கு கூட்டம்" என்று சொன்னதை "விளக்கம் இல்லாதவர்கள்" என்றே நான் புரிந்து கொண்டேன். இதை படிக்காதவர்கள் என நான் விளங்கி கொள்ளவில்லை.

நான் முன்பே சொன்னது போல படித்த, படிக்காத 48 க்கு பின்னான எல்லா தமிழ் தலைமைகளும் ஏமாளிகளாகவே இருந்துளனர்.

83 - 2009 முன்பான தமிழ் தலைமை வழிகொண்ட முறை முற்றிலும் தவறானது என்பது கருத்து.

அதை இப்போதும் கைகொண்டால் மக்கள் மேலும் பேரழிவை சந்திப்பது உறுதி என நம்புகிறேன். ஆகவே அந்த வழியில் மக்களை வழினடத்த எத்தனிப்போரை எதிர்கிறேன்.

இதுதான் என் அரசியல்.

கூட்டமைப்பும் இந்த வழியில் போனால் அதையும் எதிர்தே எழுதுவேன்.

கோசான் இந்த வெள்ளை வேட்டிக்கார்ர்களே 1970களில்அப்பாவி இளைஞர்கள்களை உசுப்பேற்றி ஆயுத்த்தை திணித்தார்கள். இன்று தங்களால் இறந்தவர்கள் மீது ஏறி நின்று சுயநல அரசியல் செய்கின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

மீரா,

இத்தனைக்கும் காரணம் என்னையும், அர்ஜூனையும், வாலியையும் பாலில் கலந்த விடம் என ஆதவன் எழுதியதுதானே?

அதுதானே இந்த திரி திசை மாற தொடக்கப் புள்ளி. அதை ஏன் விமர்சிக்கவில்லை நீங்கள்.

புலியை எதிர்கிறார் என்பதால் அர்ஜூனை ரவுண்டு கட்டி அடிக்கலாம். ஆனால் புலி ஆதரவாளர் என்பதற்காய் பிரச்சினையை கிண்டியவரை கண்டுக்காமல் விடலாம். நல்லா இருக்கு நீதி.

  • கருத்துக்கள உறவுகள்

அதை நான் மறுப்பதில்லையே.

நீங்கள் சொல்லும் வரையறைக்குள் சம் வருகிறார் ஆனால் சும் விக்கி வரமாட்டார்கள்.

உண்மையாய் பார்த்தால் - சுமந்திரன் உசுப்பேத்தும் அரசியலே செய்வதில்லை. புலிகளை மாவீரர் என்றோ, பிரபாகரனை புகழ்ந்தோ, நினைவேந்தல் செய்து அதை படம் பிடித்து வெளியிடோ வாக்குப் பொறுக்குவதில்லை.

அட்லீஸ் புலியை தூக்கிபிடித்து அரசியல் செய்யாத இந்த நேர்மையாவது அவரிடம் இருக்கிறது.

கோசான் அவர் விபரமாக தனது கருத்தை எழுதியுள்ளார்.

இந்த கருத்திற்காக அர்சுன் மற்றவர்களை மொக்கு என வர்ணிக்க முடியாது.

அதை நான் மறுப்பதில்லையே.

நீங்கள் சொல்லும் வரையறைக்குள் சம் வருகிறார் ஆனால் சும் விக்கி வரமாட்டார்கள்.

உண்மையாய் பார்த்தால் - சுமந்திரன் உசுப்பேத்தும் அரசியலே செய்வதில்லை. புலிகளை மாவீரர் என்றோ, பிரபாகரனை புகழ்ந்தோ, நினைவேந்தல் செய்து அதை படம் பிடித்து வெளியிடோ வாக்குப் பொறுக்குவதில்லை.

அட்லீஸ் புலியை தூக்கிபிடித்து அரசியல் செய்யாத இந்த நேர்மையாவது அவரிடம் இருக்கிறது.

உங்களுக்கு சும்மின் விளையாட்டு தெரியவில்லை. தான் சிங்கள அரசியல்வாதிகளுடன் நல்ல பெயர் எடுப்பதற்காக உந்த வேலைகள் செய்வதில்லை. ஆனால் மற்றவர்களுக்கு எங்கு எப்படி மக்களை உசுப்பேத்தலாம் என்டு பின் கதவால சொல்லிக்கொடுப்பவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.