Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!

Featured Replies

கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
[ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:00.29 PM GMT ]
un_sadsikal.jpg
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.

இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.

இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது.

அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் இன்று சுவிஸ் நாட்டின் நேரப்படி 5.30 மணியளவில் இவ்விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

இலங்கையின் இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.

எனினும், தற்பொழுது நேரடிச்சாட்சியங்கள் பலர் ஐக்கிய நாடுகள் சபையோடு நேரடியான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதனால் வரவிருக்கும் செப்டெம்பர் மாத அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் கண்டமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

ஏற்கனவே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை இராணுவத்தினரும் அரசாங்கமும் சந்தித்திருந்தன.

துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் மக்கள் மீது நடத்தப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்பொழுது அதன் தாக்கம் இன்னும் வீரியம் பெறும் நிலை உருவாகியுள்ளது. நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளாக மாறும் பொழுது அழுத்தங்கள் பலமடங்காக அதிகரிக்கும்.

இந்நிலையில் செப்டெம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும் அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என்கின்றார்கள் அரசியல் அவதானிகள்.

இதேவேளை இலங்கையின் இனவழிப்பு நடவடிக்கையை சுயாதீனமான விசாரணையை சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படுத்தி இனவழிப்பில் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெறுமதியான தீர்வினையும், போர்க்குற்ற விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனிவுரிமை ஆர்வலர்கள்  கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.

இக் கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

un_24_01.jpg

un_24_00.JPG

un_24_02.JPG

un_24_03.JPG

un_24_04.JPG

un_24_05.JPG

un_24_06.JPG

un_24_07.JPG

un_24_08.JPG

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி மெய் வருந்த கூலி தரும்.
 
இதைவிட என்ன இருக்கிறது நாட்டுக்காக தருவதற்கு? 
 
இதற்க்கு பிறகும் இவர்கள் ஏன் குப்பி கடிக்கவில்லை என்று விண்ணாணம் கேட்காமல்,...ஒன்றுபட்டு செயல்படுவோம். 
 
ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை
  • கருத்துக்கள உறவுகள்

சதாப்தங்களாக அநீதியையும், துன்பத்தையும் சந்தித்த இனத்திற்கு இனியாவது நீதி கிட்டினால் நன்று..

நடந்த கொடூரங்களை காண்கையில் தெய்வ நம்பிக்கையே போச்சுது...

  • கருத்துக்கள உறவுகள்

இதில மகா கொடுமை என்னவென்றால்.. சிங்களவனுக்கு வலிக்குமாம் என்று சொல்லி சம் சும் கும்பல் முன்னெடுக்கும் சோர அரசியல் தான்.

அதையும் தாண்டி தர்மம் நீதி என்ற ஒன்று இந்த அநியாயங்களுக்குள் சிக்கி சீரழிந்த மக்களின் தலைகாக்கும். இன்றேல்.. இந்தக் குரல்களையும் அடக்கி ஒடுக்கி இருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Okஎப்படித்தான் மூடி மறுத்தாலும் உண்மை ஒருநாள் வெளிவரும். புலிகள். ஏன் குப்பி கடிக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு ஒரு உண்மை விளங்கும்.குப்பி கடித்திருந்தால் பயங்கரவாதிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உலகம் அனைத்து மனித உரிமை மீறல்களையும் கண்டு கொள்ளாது விட்டிருக்கும்.அவர்கள் உலகைச்சாட்சியாக வைத்து சரண் அடைந்ததின் மூலம் சிறிலங்காவின் முகத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.தாங்கள் ஏன் ஆயுதம் ஏந்தினார்கள் என்பதையும் ஆயுதங்களக் கீழே போட்டால் என்ன நடக்கும் என்பதையும் நடைமுறையில் காட்டி இருக்கிறார்கள்.ஐநாவின் கையாலாகத்தனத்தையும் சர்வதேசத்தினதும் குறிப்பாக இந்தியாவின் துரோகத்தையும் உலகுக்கு உணர்தியிருக்கிறார்கள்.ஆயுதங்களைக் கீழே போடச்  சொன்ன உலக நாடுகளே புலிகள் ஆயுதம்  தூக்கியது சிறிலங்கா அரச பயங்கரவாத்த்திற்கு எதிராகவேதான் என்பதை இப்போது புரிந்திருப்பார்கள்.எங்கள் முன் ஐநாவும் தலை குனிந்து நிற்கிறது சர்வதேசமே எங்களுக்கு நீதி சொல்லும் காலம் வந்துவிட்டது.புலிகள் ஆயுதங்களை மெளனித்து விட்டார்கள் நீங்கள் உங்கள் மெளனத்தைக் கலையுயுங்கள்.

 

 

 

பாவங்களாக இருக்கு இருந்தாலும் வடிவேலுவின் இரத்தம் தக்காளி பகிடியும் நினைவு வருகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அர்ஜுன்,
நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?
உறவுகளை கண்முன்னே பறிகொடுத்து முற்றும் இழந்தவர்களின் சோகங்களை 
பரிகாசிப்பதும், அதனை பழைய சம்பவங்களுடன் ஒப்பீட்டு விமர்சிப்பதும் முறையள்ள.
இது ஒன்றும் நீங்கள் அறியாதது கிடையாது.

சசி ஒரு பொதுமகன் வந்து சாட்சி சொல்வதற்கும் இவர்கள் சொல்வதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் முக்கியம் .

மங்கையர்க்கரசி கனடாவில் முதன் முறை சந்திக்கும் போது அவர் அழுத அழுகை இன்னமும் கண்ணிற்குள் நிற்கின்றது .

சசி ஒரு பொதுமகன் வந்து சாட்சி சொல்வதற்கும் இவர்கள் சொல்வதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான் முக்கியம் .

மங்கையர்க்கரசி கனடாவில் முதன் முறை சந்திக்கும் போது அவர் அழுத அழுகை இன்னமும் கண்ணிற்குள் நிற்கின்றது .

அதுக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

அமிர்தலிங்கம் ஒரு இனத்துரோகி. அவரின் பொண்டாட்டியின் அழுகைக்கும் இவர்களின் அழுகைக்கும் வித்தியாசம் உள்ளது. இது எமது இனத்தை கருவருக்க நிற்கும் இன்னொரு மனித குழுமத்தை எதிர்த்து நடந்த யுத்தத்தில் அநியாயமாக உலகத்தாரால் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டால் அழிக்கப்பட்டவர்களின் கண்ணீர். ஓர் இனத்தின் கண்ணீர்.

 

மங்கையர்கரசிக்கு உருகி வழிபவர்கள் புளொட்டால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டிருந்தாலும் உருகி வடித்திருப்பார்களோ..??! :rolleyes:

அமிர்தலிங்கம் ஒரு இனத்துரோகி. அவரின் பொண்டாட்டியின் அழுகைக்கும் இவர்களின் அழுகைக்கும் வித்தியாசம் உள்ளது. இது எமது இனத்தை கருவருக்க நிற்கும் இன்னொரு மனித குழுமத்தை எதிர்த்து நடந்த யுத்தத்தில் அநியாயமாக உலகத்தாரால் ஒருதலைப்பட்ச நிலைப்பாட்டால் அழிக்கப்பட்டவர்களின் கண்ணீர். ஓர் இனத்தின் கண்ணீர்.

 

மங்கையர்கரசிக்கு உருகி வழிபவர்கள் புளொட்டால் அமிர்தலிங்கம் கொல்லப்பட்டிருந்தாலும் உருகி வடித்திருப்பார்களோ..??! :rolleyes:

இப்படியான மனநிலையில் தான் இன்றும் புலிவாலுகள் உலகம் முழுக்க இருக்கின்றார்கள் .இவர்கள் சிந்தனையில் மாற்றம் வந்திருந்தால் நாங்கள் எப்போதோ மாறியிருப்போம் .மற்றவர்கள் கொலையில் இவர்கள் நியாயம் சொல்லும் வரை  நாங்களும் மாறத்தேவையில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் மாறவே தேவையில்லை. அதை யாரும் எதிர்பார்க்கவும் இல்லை. காலம் உங்களை அழிக்கும்.. அந்த நிமிடத்தில் மாறினால் அதையும் உலகம் கண்டுகொள்ளாது.

அமிர்தலிங்கம் தண்டிக்கப்பட வேண்டிய கொடியவர். பருத்தித்துறையில்.. வீட்டுக்குள் வைத்து உறவுகளை கூண்டோடு எரித்த இந்தியப் படைகளை ரப்பர் செல் அடிக்குது என்று ஆராதித்த ஒருவர். மங்கையர்கரசி அந்த மக்களுக்காக அழுதாரா. கொழும்பிலும் சென்னையிலும் இப்போ கனடாவிலும் சுகபோகம் அனுபவிக்கும் அவர்களை விட.. இனத்துக்காக குடும்பத்தையே இழந்த இவர்கள் அவர்களோடு ஒப்பிடப்பட முடியாதவர்கள்.

இவர்களின் குரலில் ஒரு உண்மை ஒலிக்கிறது. இராணுவத்தோடு ஒட்டுக்குழுக்களும் (புளொட் ) உட்பட நின்று தான் இத்தனை கொடூரங்களையும் நடாத்தினார்கள். அந்த தமிழ் பேசிய  இராணுவ சீருடை... மற்றும் சீருடை அணியாதோர் யார்..???!

வவுனியாவில் வடிகட்டலுக்கு அதாவது காட்டிக்கொடுப்பு.. சிங்களவனுக்கு உதவியவர்கள் யார். அவர்களும் தான் இன்று கனடா.. லண்டன்.. பாரீஸ்.. மென்பேர்ன் என்று உல்லாசமாக வாழ்கிறார்கள். இவர்களால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு மங்கையற்கரசி அழுகிறாவா. தனது கணவரின் தவறான அரசியல் அணுகுமுறைகளால்... உயிரிழந்த மக்களுக்கு இளைஞர்களுக்காக மங்கையற்கரசி அழுகிறாவா..??!

மக்களின் கொடுமையில்.. அழிவில்..அரசியல் செய்து வயிறு வளர்த்தவர் தான் மங்கையற்கரசி. அவருக்கு ஒரு கூட்டம் உருகி வழியுது. அதுவும் கொலைக்காரக் கூட்டம். அதுதான் வேடிக்கை. :rolleyes:

Edited by nedukkalapoovan

உதரணத்திற்கு மங்கையர்க்கரசியை சொன்னேன் ,அவரை போல் ஓராயிரம் தாய்மார்கள் மனைவியரின் சாபமும் தான் காரணம் .பட்டியல் போட பக்கங்கங்கள் போதாது .

அட பாவம் அந்த அப்பாவி செல்வியை கொன்றதையாவது யாரவது வந்து பிழை என்று சொல்லியிருக்கலாம் .

யாழில் யாரவது ஒருவர் வந்து புலிகளால் செய்த அநியாய கொலைகளை கண்டித்ததாக எனக்கு தெரியவில்லை.தன்ரை தன்ரை என்று மட்டும் சிந்தித்து மற்றவர்களை பற்றி எள்ளளவும் சிந்திக்காதவர்கள்  உலா வரும் இடம் இது .

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் 

நடேசன் ஐயா அவர்களின் மகன், மற்றும் பல போராளிகளின் மனைவிமார்கள் இங்கு வந்து (போரில் சரணடைந்த ) தங்கள் சொந்த அனுபவங்களை, நேரில் பார்த்தவற்றை மிகவும் முக்கியமான ஒரு தளத்தில், நேரத்தில் சொல்கிறார்கள். தவறு செய்தவர்களை நீதியின் முன் நிறுத்த கிடைத்திருக்கும் ஒரு ஒரு சிறிய துரும்பு மட்டுமே. அது நடக்காமல் கூட போகலாம்.

இவர்களை எல்லாம் பொது மக்களாக உங்களால் இனம் காண முடியவில்லையா?
அப்படியாயின் இவர்கள் எல்லாம் யார்? 

மங்கையர்க்கரசி முதன் முறை சந்திக்கும் போது அவர் அழுத அழுகை இன்னமும் உங்கள் கண்ணிற்குள் நிற்கின்றது .
அனால் இவர்களின் அழுகையோ .... "வடிவேலுவின் காமெடியை" உங்களுக்கு  நினைவுக்கு கொண்டு வருவது வருத்தத்திற்குரியது.

~ அமிர்தலிங்கம் துரோகி என்று கூறும் அளவுக்கு அரசியல் அறிவோ, யோக்கியதையோ எனக்கு கிடையாது.
அவரின் இழப்பும் பெரும் இழப்புதான்....

யாரையோ சாடி அவர்களுக்காக கருத்து எழுதும் நீங்கள் ...
இழந்தவர் வாழ்க்கையையும் ஒரு முறை சீர் தூக்கிப் பாருங்கள் அர்ஜுன்.
நன்றி.

 

 

Edited by Sasi_varnam

ஐநாவில் நீதி கேட்டு அவர்கள் போராடுவதில் தவறு ஏதுமில்லை .தமிழர்களுக்கு நடந்த அநியாயத்திற்கு ஒரு சிறு துரும்பை அசைத்தாலும் அரசியல் ரீதியாக அது பெரிய விடயம் தான் ,

ஆனால் ஆனந்தியோ அல்லது இவர்களோ தமது கணவன்மார்கள் இவ்வளவு கொலைகள் செய்யும் போது அவர்களுடன் இருந்தவர்கள் தான் .விடுதலை என்ற பெயரில் எதை செய்தாலும் அது நியாயமாகிவிடாது .எனவே இப்படியானவர்கள் பலர் எமது போரட்டத்தில் இறந்த போது முற்பகல் செய்யின் என்ற பழமொழி தான் நினவு வரும் .அது உமா ,மாணிக்கம் ,கந்தசாமி ,பிரபா ,மாத்தையா ,கிட்டு போன்றவர்களும் அடக்கம் 

இழந்தவர்கள் வாழ்க்கையை சீர் தூக்கிபார்ப்பதென்றால் இவர்களால் வாழ்க்கை இழந்தவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் .

இறப்பு என்பது மிக கொடியது ஆனால் சட்டம் கூட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை கொடுக்கின்றது .அவர்கள் செய்த குற்றம் அதை விட கொடியது என்றபடியால்தான் .

இன்று மிருசிவிலில் ஏழு பேரை கொலை செய்த ஆர்மிக்கு மரணதண்டனையும்  போஸ்டனில் குண்டுவைத்தவருக்கு 21 Tsarnaev இற்கு மரணதண்டனையும்  கொடுத்திருக்கின்றார்கள் .

போஸ்டன் குண்டு வழக்கில் தீர்ப்பை வழங்கிய நீதிபதி சொன்னது இது .

"What will be remembered is that you murdered and maimed innocent people and that you did it willfully and intentionally . You did it on purpose" 

 

இவர்களின் குரலில் ஒரு உண்மை ஒலிக்கிறது. இராணுவத்தோடு ஒட்டுக்குழுக்களும் (புளொட் ) உட்பட நின்று தான் இத்தனை கொடூரங்களையும் நடாத்தினார்கள். அந்த தமிழ் பேசிய  இராணுவ சீருடை... மற்றும் சீருடை அணியாதோர் யார்..???!

 

அப்ப தேதா வளர்த்த குலமகன் கருணாவின் கோஷ்டி. இலவச இணைப்பா?

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக இவர்களின் கண்ணீருக்கு நியாயம் சொல்லப்படவேண்டும். அத்துடன் இறுதிப்போரில் பிடிகப்பட்டு கட்டாயமாக போர்முனைக்கு அனுப்பப்பட்டு காணாமல் போனோரின் உறவினர்களையும் இராணுவம் அல்லோதாரால் சுடப்பட்டவர்களையும் இந்த அமர்வு புறக்கணித்ததேன். அவர்கள் கண்ணீர் என்ன தண்ணீரா?

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தவர்களை கொண்ட சிங்களப் படைகள் காடுமிராண்டிகள்.

தன் கையில் ஆயுதம் இருக்கு என்பதற்க்காக சரணடைந்தோரை கொல்லுமாறு உத்தரவிட்ட கோத்த அபய ஒரு கோழை. தலைமைப் பண்பு அற்ற கொலைவெறி பீடித்த மனநோயாளி.

 

ஆனாலும்,

1) சரணடையும் போது என்னை கொல்லாதே, தம்பி அப்படிச் சொல்லியிருக்க மாட்டான் என்று கிட்டுவிடம் கெஞ்சிய சிறீ,

2) செஞோன்ஸ் கல்லூரி அதிபர் ஆனந்தராஜா,

3) நீதிபதி ராமச்சந்திரன்

4) காங்கேசந்த்ஹுறை ஆலையின் ரெண்டு சிங்களப் பொறியாளர்கள்

5) 87 ஆக்டோபரில் கொல்லப் பட்ட சரணடைந்த 6 ஆமிக்காரர்

6) 90இல் சரணடைந்து கொல்லப் பட்ட 600 பொலீசார் - 

இப்படி ஓர் நீண்ட முடிவுறாப் பட்டியல் மனதுக்குள் வந்துதான் போகிறது.

புலிகளால் அநியாயமாய் கொல்லப் பட்ட அதிபர் ஆனந்த ராஜாவின் மகனும் இப்படித்தான் அழுகிறார். கீழே பாருங்கள்.

https://www.colombotelegraph.com/index.php/remembering-former-principal-st-johns-college-jaffna-reflections-of-a-son/

ஒரு வேளை நம் அழிவுகளுக்குத் துணை போன ஐ நா வும் ,மற்றைய வல்லாதிக்க சக்திகளுமே கூட  ,இந்தக்கண்ணீர் கண்டு மனம் இரங்கி, நீதிக்கு வழி வகுத்தாலும்  அவர்களின் பின் புறத்திலும், இல்லாத புலி வாலைக்காட்டி பரிகசிக்க ஒரு கூட்டம் நம் மத்தியிலேயே இருப்பதுதான் வேதனையிலும் வேதனை .   

  • கருத்துக்கள உறவுகள்

அமிரை கொண்டதுக்கு நீங்கள் சொல்லும் காரணம் - அவர் ஒரு துரோகி விட்டு வைத்திருந்தால் தமிழ் இனத்துக்கு ஆகாது.

நடேசனை கொண்டதுக்கு அவர்கள் சொல்லும் நியாயம் - அவர் ஒரு பயங்கரவாதி, பிரிவினைவாதி விட்டு வைத்தால் நாட்டுக்கு, சிங்கள இனத்துக்கு ஆகாது.

நம் இனத்துக்காக புலி செய்த கொலை எல்லாம் விடுதலைப் போராட்டம். தம் இனத்துக்காக அவர்கள் செய்தது மட்டும் யுத்த குற்றம் என்பதை என்ன சொல்வது?

செப்ரெம்பரில் அறிக்கை வரும் - குறித்து வையுங்கள் அரசுக்கு நிகராக புலிகளையும் யுத்த குற்றம் செய்தார்கள் என்று அந்த அறிக்கை சாடும்.

 

அப்போ யோசிப்பீர்கள், இந்த அறிக்கை வராமலே விட்டிருக்கலாம் என.

ஆனாலும் நீங்களே சொல்வது போல் உண்மை ஒருநாள் வெளிவந்தே ஆகும்.

அப்பாடா அமீரைக் கொண்டது புலிகள்தான் என்று ஏற்ற வரையில் திருப்தி. இன்னும் எத்தனை ஆயிரங்கள். இவர்கள் மனைவி மக்கள் கண்ணீரை எங்குதான் கொட்டுவது.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்கள் சிலர் அல்பிரட் துரையப்பாவுக்கும்.. கதிர்காமருக்கும்.. அமிர்தலிங்கத்துக்கும்.. ஆனந்தராஜாவுக்கும் அழுவதை நீதி நியாயம் என்று காட்டுகின்றனர். இதே அண்ணன்கள்.. புலிகள் அல்லாதோர் வகைதொகை இன்றி சொந்த மக்களை சொந்தப் போராளிகளை போட்டுத்தள்ளியதற்கும்.. இந்தக் கொலை கலாசாரத்தை தமிழ் மக்கள் மத்தியில் அடக்குமுறை வடிவில் திணித்த சிங்களவன் மீது பட்சாதாபம் காட்டுவதில் இருந்தும்.. அதற்கு சமன்பாடு எழுதுவதில் இருந்தும்.. தெரிகிறது இவர்களின் வக்கிர மனநிலை.

ஏன் அண்ணன்களா.. இதை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்த 1952 இல் இருந்து பட்டியலிட்டுப் பாருங்களேன். யார் அதிகம் பழிவாங்கப்பட்டிருக்கனும் என்ற ஒரு இலாப நட்டக் கணக்கு வந்து சேரும். அதில் இன்னும் சிங்களவன் தண்டனையே பெறவில்லை அதற்கிடையில்.. நீங்கள் தமிழர்களை தமிழர்கள் சுட்டுவிரல் காட்டி அழிச்சது மட்டும் தேறும். அதில் துரோகிகள் அழிப்பும்.. அடங்கும். துரோகிகளால் எம் இனம் அழிந்ததே அதிகம்.. எதிரியை விட. துரோகிகள் தாங்களாகவும்.. எதிரியோடும் சேர்ந்து இனத்தை அழித்தார்கள். இன்று யாழ் களத்தில் கொட்டும் விசத்தோடு தேனீயாகப் பறக்கிறார்கள் அவ்வளவே. :o:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு அரிவரி தெரியாமல் தான் இவ்வளவு காலமும் அரசியல் கதைக்கிறார்கள் போலும்.:rolleyes:

ஏன் அண்ணன்களா.. இதை தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையை ஆரம்பித்த 1952 இல் இருந்து பட்டியலிட்டுப் பாருங்களேன். யார் அதிகம் பழிவாங்கப்பட்டிருக்கனும் என்ற ஒரு இலாப நட்டக் கணக்கு வந்து சேரும். அதில் இன்னும் சிங்களவன் தண்டனையே பெறவில்லை அதற்கிடையில்.. நீங்கள் தமிழர்களை தமிழர்கள் சுட்டுவிரல் காட்டி அழிச்சது மட்டும் தேறும். அதில் துரோகிகள் அழிப்பும்.. அடங்கும். துரோகிகளால் எம் இனம் அழிந்ததே அதிகம்.. எதிரியை விட. துரோகிகள் தாங்களாகவும்.. எதிரியோடும் சேர்ந்து இனத்தை அழித்தார்கள். இன்று யாழ் களத்தில் கொட்டும் விசத்தோடு தேனீயாகப் பறக்கிறார்கள் அவ்வளவே. :o:unsure:

அண்ணை

யார் துரோகி?
யார் ஒட்டுக்குழு?

இனத்துரோகிகள் தமது கருத்துடன் ஒத்துப் போகாதவர்களை இப்படித்தான் அழைத்தார்கள். ரயர் போட்டும் எரித்துப் பார்த்தார்கள். முடியல்லை. இதுதான் தேத்தாவின் சித்தாந்தம். 

இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களது எண்ணிக்கையா அல்லது தேதாவினால் கொல்லப்பட்ட தமிழர்களது எண்ணிக்கையா அதிகம் என்பது மனிதரால் கேட்கப்பட வேண்டிய கேள்வி. இக்கேள்வியும் மனிதருக்கு மட்டுமே புரியும், நாலு கால் மிருகங்களிற்கு இல்லை.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியின் கருத்தாடல்களை பார்க்கும் போது அவரவர் ஆசனவாயிலை தொட்டு தாங்களே முகர்ந்து கொள்கிறார்கள் என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது. :(

எமது போராட்டங்கள் கிட்டத்தட்ட 60 வருடங்களாக நீடிக்கின்றது. அதில் சரி பிழை பிடிப்பவர்களுக்கு இன்னும் 600 வருடங்கள் தேவைப்படும். :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.