Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுகிறது

Featured Replies

பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட இருப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைப் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.. ஓகஸ்ட் 17ல் பாராளுமன்றத் தேர்தல்:-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றை கலைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்னதாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைப்பது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு அச்சிடப்பட உள்ளது.

அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் இதனை உறுதி செய்துள்ளது.

20ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தியதன் பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

எனினும் 20ம் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத காரணத்தினால் ஜனாதிபதி இவ்வாறு பாராளுமன்றைக் கலைத்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் ஓகஸ்ட் 17ம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன.

அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்ட வேண்டும் எனக் கூறப்படுகிறது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121343/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிதான் இருக்கு வட்டுகோட்டை தீர்மானத்தின் மீதானா விவாதம். 

தம்பி எடுடா அந்த புரட்சி பாடல் CD ஐ. ...மாவீரர் துயிலும் இல்லத்தில இருந்து , மாவீரன் ....தாயாரினால் முதலாவது பிரச்சார கூட்டம் தொடங்கும் . 25 தெரிவு செய்த போராளிகளுக்கு , ஆளுக்கு ஒரு மலிபன் பிஸ்கட் பக்கட்டும் , ஒரு கிலோ சம்பா அரிசியும் , கடும் கோடை வெய்யிலில் இருந்து அவர்களை காக்க இளம் வடலி ஓலையில் செய்த கைவிசிறியும் வழங்கபடும் . 

இறுதியில் இசை நிகழ்ச்சியும் உண்டு . 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ...தமிழரின் நிலையான உறுதியான தீர்வுக்கு..போடுங்கள் உங்கள் வாக்கை அண்ணன் சுப்பிரமணியத்திர்ற்கு அண்ணன் சம்பந்தரின்  தலைமையில். 

நாடாளுமன்றம் கலைப்பு – ஆகஸ்ட் 17 தேர்தல்

parliment_srilanka.pngசிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும்.

அரசாங்கம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி பொதுத் தேர்தல நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  http://www.pathivu.com/news/41144/57/17/d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இனிதான் இருக்கு வட்டுகோட்டை தீர்மானத்தின் மீதானா விவாதம். 

தம்பி எடுடா அந்த புரட்சி பாடல் CD ஐ. ...மாவீரர் துயிலும் இல்லத்தில இருந்து , மாவீரன் ....தாயாரினால் முதலாவது பிரச்சார கூட்டம் தொடங்கும் . 25 தெரிவு செய்த போராளிகளுக்கு , ஆளுக்கு ஒரு மலிபன் பிஸ்கட் பக்கட்டும் , ஒரு கிலோ சம்பா அரிசியும் , கடும் கோடை வெய்யிலில் இருந்து அவர்களை காக்க இளம் வடலி ஓலையில் செய்த கைவிசிறியும் வழங்கபடும் . 

இறுதியில் இசை நிகழ்ச்சியும் உண்டு . 

என்று தணியும் இந்த சுதந்திர தாகம் ...தமிழரின் நிலையான உறுதியான தீர்வுக்கு..போடுங்கள் உங்கள் வாக்கை அண்ணன் சுப்பிரமணியத்திர்ற்கு அண்ணன் சம்பந்தரின்  தலைமையில். 

வரட்டும்.........

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டும்.........

வந்தால் .....தமிழர்களுக்கிடையில் கூட்டமைப்பிற்கு எதிரானதாக ஒரு வலுவான கட்டமைப்பு உருவாக்கப்படும் நேரம் இது.

சிங்கள அரசிற்கு ஊதுகுழலாக இயங்கும் அனைவரும் புறக்கணிக்கப்படவேண்டும்.

சிங்களவன் புத்திசாலி!

1) தமிழனை பிரித்தான்

2) தமிழனையே தமிழனை காட்டிக் கொடுக்கச் செய்தான்

3) தமிழனையே தமிழனை போட்டுத்தள்ளச் செய்தான்

4) உலக ஓட்டத்தின் இராஜதந்திரமாக இணைந்தான்

5) எதிரிக்கு எதிரியாகிய நாடுகளையே தனக்கு நண்பனாக்கினான்

6) தமிழரின் ஆயுத பலத்தை உலகோடு சேர்த்தழித்தான்

7) உலகில் நீதி கேட்ட தமிழினம் இன்று மீண்டும் நடுத்தெருவில்

"தேர்தல் > அரசு மாறல் > அரசியல் நெருக்கடி > மீண்டும் தேர்தல்" , எனும் நாடகத்தில் உலகுடன் இணைந்து காணாமல் போனவர்களின் குரல்களும் முடக்கப்பட்டு விட்டன, யுத்த குற்ரவாளிகளும் தப்பி விடுவார்கள், யுத்தக்குற்றங்களும் காற்றில்!

ஜெனீவாவோ? செப்ரம்பரில் வருகுதோ? உள்ளக பொறிமுறையோ? >>> பறக்குது >>

நாமோ உலக நாட்டாமை, பக்கத்து நாட்டு நாட்டாமை, ரணில், மைத்திரி, மகிந்த போடும் நாடகத்தில் பங்கேற்க சொல்லி சம்பந்த சுமந்திரர்கள் அழைக்கிறார்கள்! எமக்கிடையே பிரிவினை வேண்டாமாம்! உரிமையை மீட்டுத்தருவோமாம்! சந்திக்கு சந்தி நின்று வீரத்தமிழனின் புகழ் பேசி வரப்போகிறார்கள் >>> வாக்களிப்போம் மீண்டும்

Edited by no fire zone

புலம் பெயர்ந்தவர்கள் வாழும் கனவிலகில் இல்லை நாட்டில் வாழுபவர்கள் .நீங்கள் இப்போதும் ஓடி வரும் போது நாடு இருந்த நிலையிலேயே இருக்கின்றீர்கள் .அவர்கள் உலக ஒழுங்குடன் தாங்களும் மாறிக்கொண்டு இருகின்றார்கள் .

அதில் பெரும் பகிடி - புலம் பெயர்ந்தும்  நாட்டில் உள்ள எம்மவர்கள் போலும் அல்லாதும்  புலம்பெயர்ந்த தேசத்தில் இருக்கும் அந்த நாட்டுமக்கள் போலல்லாதும் இரண்டும் கெட்டான் தான் பலர் நிலை .

அனுதாபப்படுவதை தவிர வழியில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

ஏப்ரலில் கலைக்கிற புராணம் பாடத்தொடங்கி காலத்தை ஒவ்வொரு சட்டமூலத்தை காட்டி இழுத்தடிச்சு.. இப்ப கலைச்சு.. ஆகஸ்டில் தேர்தல். செப்டம்பரில் ஐநா அறிக்கை. எல்லாம் கணக்குப் பார்த்துத்தான் நடக்குது. சிங்களவன் தன் இனத்தை காப்பாற்றிறதில அரசியல் வேறுபாட்டுக்கு அப்பால் செயற்படுகிறான். எங்கடையள்.. சோர அரசியலைக் காப்பாற்ற இனத்தைக் கருவறுக்குதுகள். அதுதான் வித்தியாசம்.

எனி புதிய அரசுக்கு அவகாசம் கொடுத்து.. செப்டம்பரில் வர இருக்கும் அறிக்கைக்கு என்ன குஞ்சம் கட்டிறதோ யார் அறிவார். இப்பவா சம் சும் கும்பல்.. அறிக்கையில தான் குறியா இருக்கினம். அது தமிழருக்கு நல்லதல்ல. :o:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வரட்டும்.........

அட அப்பாவிகளா,

பாரிசில் குடும்பம் குட்டிகளோட செட்டிலாகீட்டு. இப்ப வரட்டும் என்றா? 

என்ன பிரெஞ்சு தேர்தலிலா கூட்டமைபு போட்டி போடுது :)

வாத்தியார் உட்பட்ட தமிழ் புலவாழிகளுக்கு,

நீங்கள் உங்கள் கொள்கையின் செல்வாக்கை நிரூபிக்க ஓர் அரிய சந்தர்பம் இது.

1)கூட்டமைப்பு க்கு எதிராக உங்கள் கொள்கையோடு ஒத்து போகும் கஜன் கம்பேனியை களமிறக்கி பெரும்பான்மை தமிழ் ஆசனங்களை வெல்லுங்கள்.

2) அதுக்கு வக்கில்லாவிடின் - குறைந்த பட்சம் தமிழரசு வேட்பாளர்கள் அத்தனை பேரையும் தோற்கடியுங்கள்.

3) அதுவும் முடியாவிடின் அட்லீஸ் சம்பந்தரை மட்டுமாவது உங்கள் தலை நகரில் ( :) ) தோற்கடியுங்கள் பார்க்கலாம்.

நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என்ற வினா அண்மைக்காலமாக அரசியல் களத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த வினாவுக்கு விடை தருவதாக நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு கலைக்கப்பட்டது. நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் கூடிய உத்தரவைத் தாங்கிய வர்த்தமானி நேற்றிரவு வெளியாகியுள்ளது.

இதற்கமைய புதிய நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு ஜுலை 6ஆம் திகதி முதல் ஜுலை 13ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. புதிய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. புதிய நாடாளுமன்றம் செப்டெம்பர் முதலாம் திகதி கூடும்.

பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவுள்ளார். இந்நிலையில் மற்றுமொரு பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குவார் என்ற வினாவுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இந்த விவகாரம் இன்று முதல் அரசியல் களத்தில் சூடுபிடிக்கவுள்ளது. இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷவுக்கு சுதந்திரக்கட்சி வேட்புமனு வழங்க மறுத்துள்ளதால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டாக உடைந்து பொதுத் தேர்தலில் மஹிந்த தலைமையில் மூன்றாம் கூட்டணியயான்று களமிறங்கும் எனக் கூறப்படுகின்றது.

பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீடு சின்னத்திலும், ஜே.வி.பி. மணி சின்னத்திலும் போட்டியிடவுள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி ஆகிய சிறுபான்மையினக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியின் பட்டியலின் கீழ் களமிறங்கவுள்ளன.

2010 ஆம் ஆண்டு நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 144 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களையும், இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும், ஜே.வி.பி. 7 ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தன. அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் 5 வருடங்களாக இருக்கும் என்பதுடன், சபையை ஜனாதிபதி நான்கரை வருடங்களுக்குப் பின்னரே கலைக்கமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக நாடாளுமன்றத்தை ஒரு வருடத்துக்குப் பின்னர் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிபடத் தெரிவித்துவந்தார். நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்னவும் மேற்படி விடயத்தையே இடித்துரைத்திருந்தார்.

இந்நிலையில், '20' நிறைவேறுவதற்கு முன்னரே சபை ஏன் கலைக்கப்பட்டது என்ற வினா எழுகின்றது. அதாவது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, மத்திய வங்கி ஆளுநர் தொடர்பான கோப் விசாரணை அறிக்கை, '20' இற்கு சிறு மற்றும் சிறுபான்மைக் கட்சிகளின் எதிர்ப்பு உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில்கொண்டே '20' ஐ நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான உத்தரவை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது! வர்த்தமானி வெளியானது!! ஓகஸ்ட் 17 இல் தேர்தல்!!!

http://malarum.com/article/tam/2015/06/26/10727/இன்று-நள்ளிரவுடன்-கலைகிறது-நாடாளுமன்றம்-ஓகஸ்ட-17-இல்-பொதுத்-தேர்தல்-.html#sthash.ahrBzFPL.dpu

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கோசான் ஸார் கேட்டது ஒன்றுமே நடக்கப்போவதில்லை! சும்மா வெறும்வாயை மெல்லுவானேன்? ^_^:lol:

  • கருத்துக்கள உறவுகள்

 கஜேந்திரன் குழு வராமல் சம்பந்தர், சுமந்திரன் வந்தால்  தமிழ் ஈழமே தீர்வு எனும் இறுக்கமான  நிலையில் இருந்து  மாறி தாயக மக்களின் குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை புலத்தில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படுமா?

(ஏற்கனவே வேலையில மண்டை கிறு கிறுத்துப் போய் இருக்கிறதால, "ஆம்" அல்லது "இல்லை" என்று மட்டும் பதில் தரவும்!:lol:)

Edited by Justin
தவறுதலாக quote செய்யப் பட்டது திருத்தப் பட்டது

 கஜேந்திரன் குழு வராமல் சம்பந்தர், சுமந்திரன் வந்தால்  தமிழ் ஈழமே தீர்வு எனும் இறுக்கமான  நிலையில் இருந்து  மாறி தாயக மக்களின் குரலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நிலை புலத்தில் உள்ள தமிழர்களுக்கு ஏற்படுமா?

(ஏற்கனவே வேலையில மண்டை கிறு கிறுத்துப் போய் இருக்கிறதால, "ஆம்" அல்லது "இல்லை" என்று மட்டும் பதில் தரவும்!:lol:)

தாயக மக்களின் குரலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் நிலை என்றோ  ஏற்பட்டு விட்டது. பெரும்பாலான புலம் பெயர் தமிழ் மக்களும் அதற்கு செவி மடுக்கின்றனர். ஆனால் அவ்வாறு கொடுப்பது  தமிழ் தேசிய அரசியலை வைத்து  புலத்தில்  பிழைப்பை ஓட்டுகின்றவர்களது தேவைகளுடன்  ஒரே நேர்கோட்டில் பயணிக்கவில்லை என்பதால் அவர்கள் மட்டும் காது கேக்காத மாதிரி நடிக்கின்றனர்.

எனவே அங்கு முடிவுகள் த.தே.க  விற்கு சாதகமாக வரினும் (பெரும் எண்ணிக்கையில் வரும் என்பதே என் கணிப்பு) இவர்கள் காது கேக்காத மாதிரியே தொடர்ந்தும் இருப்பார்.

Edited by நிழலி
எழுத்து பிழைகள்

இதை அறுதியாக முரமுடியாது, இருந்தாலும் குழப்பங்காசிகளினால் தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி தோன்றியுள்ளது. 

சிங்களம் சொலும் இறைமையும் தமிழர் சொல்லும் தேசியமும் போட்டியிடும் காலம்.

இங்கே புலம் என்று சொல்லும் போது பலரும் பலரை நோக்கி கை நீட்டுகிறார்கள். அது ஏதேனும் தேவைக்காக இருக்கலாம் அல்லது திட்டி தீர்ப்பதற்காக இருக்கலாம். ஆனால் இலங்கை அரசோ அரசாங்கமோ தமிழர்களை நோக்கி நீட்டும் கரங்கள் எத்தனை சுத்தமானவை என்று இங்கு யாரும் யாருக்கும் சொல்ல தேவையில்லை என நினைக்கிறன். 

இந்த புலம் பெயர்ந்தவர்களுக்கும், தாயகத்தில் இருப்பவர்களுக்குமான உரசல் -நெரிசல் என்பது தனியே எங்களுக்கு மட்டும் உரியதென்று. என்னுடன் வேலை செய்கிற ஒரு கேரளா நண்பர் சொன்னார் , நாங்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள் தங்களுக்கும் இருக்கென்று. அது போடுகிற உடுப்பாக இருக்கட்டும் , படித்த படிப்பாக இருக்கட்டும் , குடும்ப உறவு நிலையாக இருக்கட்டும் , நாட்டு நடப்பாக இருக்கட்டும் உரசல் ஒன்று இருக்கவே செய்கிறது.

ஆனால் அதையும் தாண்டி ஒரு உறவு நிலை இருக்கிறது, பொருளாத பிணைப்பு இருக்கிறது , அறிவுசால் உறவுகள் இருக்கிறது . அது எங்களுடன் ஒப்பிடும் போது சிங்களவருக்கு குறைவு . அதை தொடராமல் செய்வதற்காக பல காரியம் செய்கிறார்கள் அதில் ஒன்றுதான் இந்த அரசில் ரீதியாக வேறுபாடு என்று காட்ட முனைவது .

தமிழர் உடைய அரசியல் இலங்கையில் இருப்பது , 100 வீதம் சரணாகதி . அவர்களால் எதுவும் செய்ய முடியாது. அங்கே அவர்கள் செய்வது - இலங்கை அரசு எல்லாம் 10-15 பேரை MP மார் ஆக்கி போட்டு அவர்களுக்கு சம்பளமும் சலுகைகளும் கொடுப்பது. அது மாகாண அரசாங்கம் ஆக இருக்கட்டும் இலங்கை அரசாங்கத்தில் ஆக இருக்கட்டும் . 

அதுதான் அவர்களால் முடியும் . அது கூட்டமைப்புக்கும் தெரியும் அரசாங்கதிற்கும் தெரியும். ஆனால் கூட்டமைப்பு அதை வெளியே சொல்ல முடியாது அப்படி சொன்னால் அவர்களால் , இத்தனை அழிவுகளை சந்தித்த மக்களை நோக்கி வாக்கு போட சொல்ல முடியாது . அதனாலேயே வடக்கே ஒரு வேசமும் அதை தாண்டினால் ஒரு வேசமும் போடுகிறார்கள். 

இதில் , கொள்கை ரீதியாக தன்னும் வேறுபடுகிற /முரண்படுகிற இப்போது இருக்கிறவர்களில் , ஓரளவிற்கு தன்னும் நம்ப கூடிய கஜேந்திர குமார் அணியினர் /கோஷ்டியினர் ஒரு தீர்வா என நாங்கள் யோசிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் . 

அப்படி சொல்லுபவர்களையும் / நினைப்பவர்களையும் கூட புலிவால் எலிவால் என்று சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது . 

மற்றைய சந்தர்பங்கள் போல் அல்லாமல் , ஆளும் கட்சியின் நேரடி செல்வாக்கு இல்லாமல் தமிழ் பகுதியில் தேர்தல் நடக்க இருக்கிறதால், அகக்குரைந்து , ஆளும் தரப்பின் செல்வாக்கால் தெரிவாகும் , அவர்களுக்கு சார்பானவர்களுக்கு போகும் வாக்கை வைத்தாவது , கயேந்திரகுமார் தரப்பில் இருந்து ஒருவர் இருவரை தெரிவு செய்யலாம்.

அதற்கும் அதிகளவு தூரம் செல்ல வேண்டும் . இலகுவானது அல்ல ஆனால் முடியாததும் அல்ல . மாவையின் பத்திரியாளர் மாநாடு நடுக்கமே அவர்களும் இதை இலகுவாக எடுக்கவில்லை என்பதர்ற்கு சான்றாகும்.

ஏன் மாற்றத்தை விரும்புகிறேன் என்று என்னை கேட்டால் ..முதலாவது ஒன்றிலும் வெளிப்படை இல்லை . இரண்டாவது பல சந்தர்பங்களில் புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பாக ஒரு தெளிந்த பார்வை இல்லை . மூன்றாவது விடுதலை புலிகள் தொடர்பாக ஒரு வெளிப்படையான போக்கு இல்லை . மற்றவை வினைத்திறன் அற்ற ஊழல் பேர்வழிகள் பலர்,  இன்னும் பல :(

  • கருத்துக்கள உறவுகள்

இதை அறுதியாக முரமுடியாது, இருந்தாலும் குழப்பங்காசிகளினால் தாயகத்துக்கும் புலத்துக்கும் இடையில் ஒரு இடைவெளி தோன்றியுள்ளது. 

சிங்களம் சொலும் இறைமையும் தமிழர் சொல்லும் தேசியமும் போட்டியிடும் காலம்.

இதற்கான‌ பதிலை சம்பத்தன் கொடுத்துள்ளார்........இவர்கள் தொடர்பில் நான் அலட்டிகொள்ளவில்லை. ஆனால், நாட்டில் பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என்று கூறிக்கொள்கிறேன். இந்நாட்டில் வாழும் சகலருக்கும் சமத்துவம் இருக்க வேண்டும். அப்படி இல்லாதுவிடின் இறைமைபற்றி பேசுவதற்கு எவருக்கும் அருகதை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.....சம்பந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

தாயக மக்களின் குரலுக்கு  முக்கியத்துவம் கொடுக்கும் நிலை என்றோ  ஏற்பட்டு விட்டது. பெரும்பாலான புலம் பெயர் தமிழ் மக்களும் அதற்கு செவி மடுக்கின்றனர். ஆனால் அவ்வாறு கொடுப்பது  தமிழ் தேசிய அரசியலை வைத்து  புலத்தில்  பிழைப்பை ஓட்டுகின்றவர்களது தேவைகளுடன்  ஒரே நேர்கோட்டில் பயணிக்கவில்லை என்பதால் அவர்கள் மட்டும் காது கேக்காத மாதிரி நடிக்கின்றனர்.

எனவே அங்கு முடிவுகள் த.தே.க  விற்கு சாதகமாக வரினும் (பெரும் எண்ணிக்கையில் வரும் என்பதே என் கணிப்பு) இவர்கள் காது கேக்காத மாதிரியே தொடர்ந்தும் இருப்பார்.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குத்தான் வாக்களிக்கணும் என்பது எல்லோரது விருப்பமும்

இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது

காரணம் தமிழருக்கு வேறு தெரிவில்லை..

ஆனால் வரட்டும் என்று நான் சொன்னது

தமிழர்களை முதுகில் குத்தும் இரட்டை வேடத்தைச்சுமந்து என்பதற்கு மட்டுமே..

அதில் உங்களுக்கு உடன்பாடிருந்தால் எழுதலாம்

கோசான் சே கூட்டமைப்பு இரட்டை வேடம் போடுகிறது என்பத ஏற்கனவே இங்கு ஒப்புக்கொண்டிருந்தார்

அதைக்கண்ணை மூடிக்கொண்டு புலத்தவர் ஆதரிக்கணும்

மறுத்து கருத்து வைத்தால்

தாயக தமிழரின் மன உளைச்சல்களை எழுதினால்

இவர்கள் பிழைப்புக்காக செய்கிறார்கள்  என்பது போன்ற

 எழுத்துக்கள் கருத்து வறுமையின் வெளிப்பாடு மட்டுமே..

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் உண்மையான பதிவு நிழலி.

கூட்டமைப்பு வகுத்த பாதை தேர்தலில் வென்றாலும் இவர்களுக்கு செவிப்பறையில் ஒரு சின்ன மாற்றமும் வராது என்பதுக்கு மேலுள்ள பதிவுகளே சாட்சி.

இப்போதே இவர்கள் பதில் என்னவாயிருக்கும் என்று கூறிவிடுகிறேன்.

கூட்டமைப்பு வெண்டதுக்கு காரணம் மக்கள் கூட்டமைப்பின் சம்சும் இன் அரசியல் தெரிவை ஆதரிப்பதால் அல்ல, கூட்டமைப்பு தேத வால் உருவாக்கப் பட்டது என்ற ஒரே காரணுக்காக!

எந்த பெரிய துரோகத்தை சம்சும் செய்தாலும் அவர்கள் வழிநடத்தும் கூட்டமைப்புக்கு மக்கள் வாக்குப் போடுவார்களாம், தேத உருவாக்கிய கட்சி என்பதால்.

இந்த செவிப்பறைகள் எல்லாம் - அணுகுண்டு வெடிச்சாலே, யாரப்பா பலமா தும்மினது எனக் கேட்ப்பார்கள் :)

இதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது

காரணம் தமிழருக்கு வேறு தெரிவில்லை..

தமிழர்களை முதுகில் குத்தும் இரட்டை வேடத்தைச்சுமந்து என்பதற்கு மட்டுமே..

தாயக தமிழரின் மன உளைச்சல்களை எழுதினால்

தமிழ்தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கவேண்டும் என்பது எல்லோரது விருப்பமும் இதில் மாற்றுக்கருத்து இல்லை, பின்னர் வேறு தெரிவு இல்லை என்று சொல்லுகிறீர்கள். வேறு தெரிவு இல்லாமல்தான் வாககளிக்கவேண்டும் என்று சொல்வது தவறு.

கூட்டமைப்புக்கு போட்டியாக கஜேந்திரன் அணி இருக்கிறதே வேறு தெரிவு இல்லையாயின் கஜேந்திரன் அணியை நீங்கள் ஒரு தெரிவாக கொள்ளவில்லை என்பதுதானே பொருள். 

அந்த இரட்டைவேடம் எந்த அடிப்படையில் இருக்கு? அல்லது என்ன இரட்டை வேடம்? 

தாயக தமிழரின் மனவுளைச்சல் என்று சொல்கிறீர்கள், அனால் வர்களின் தெரிவே இதுவரை சம்பந்தர் அணிதானே. 

தயகமக்களுக்கு தெரிவில்லை என நீங்கள் நினைப்பது தவறு. அவர்கள் தெளிவாக தெரிவுசெய்தே வாக்களித்தார்கள் வாக்களிப்பார்கள் அவர்களின் தெரிவை நீங்கள் மதிக்கவிரும்பினால் மதியுங்கள் அதுதான் தாயகத்தோடு ஒன்றித்து பயணிக்க வழிசெய்யும். 

ஐயா

விசுகு என்றால் அதிதீவிரவாதி என்ற எடுகோளுடன் எழுதாதீர்கள்..

தமிழ்த்தேசிய முன்னணியை நான் ஆதரித்து எழுதியதில்லை என்பதை நீங்கள் கவனிக்கவே இல்லை.

காரணம் இன்று அவர்கள் மௌனமாக ஆனால் இருக்கவேண்டியநிலை..

கூட்டமைப்பு மட்டுமே மக்கள் முன் உள்ள தெரிவு

இதை தமிழர்களைவிட கூட்டமைப்பு புரிந்து வைத்துள்ளதே அதன் இரட்டை வேடங்களுக்கு காரணம்..

அதைத்தான் நான் குறிப்பிட்டேன்.

மற்றும்படி

கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே அதற்கு சார்பாக எழுதுபவன்.

அதற்காக எல்லாவற்றிற்கும் மேலும் கீழும் தலையாட்டணுமா என்ன??

நீங்கள் உட்பட யாரும் தலையாட்டவேண்டும் என்றில்லை, யாரும் கேள்வி கேட்கலாம் விமர்சிக்கலாம். விமர்சனம் விரும்பாதவர்கள் பொதுவாழ்வில் இருந்து விழவேண்டியதுதான். 

அந்த இரட்டைவேடம் தான் என்ன அதை சொல்லமாட்டீர்களா? 

சிங்களத்திடம் கொழும்பில் புலிகள் பயங்கரவாதிகள்

தமிழரிடத்தில் அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்...

சிங்களத்திடம் கொழும்பில் புலிகள் பயங்கரவாதிகள்

தமிழரிடத்தில் அவர்கள் வணக்கத்துக்குரியவர்கள்...

சிங்களத்திடம் புலிகள் பயங்கரவாதிகள் என்று எந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பியாது சொன்னாரா? யார்?

எனக்கு தெரிய கூட்டமைப்பு தனது பாதையை தெளிவாகவே வெளிப்படுத்தி வருகிறதே. சம்பந்த சிங்கக்கொடியை தூக்கி ஆட்டியும் கட்டிப்போட்டார்.

தமது பாதை புலிகளின் பாதை இல்லை என்றும் சொல்லியாச்சே அனாலும் போராளிகளின் தியாகமும் மாவீரர்களும் வணக்கத்துக்கு உரியவர்கள் இல்லை என்று எங்காவது ஒரு கூட்டமைப்பு உறுப்பினர் சொல்லியிருந்தால் காட்டுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

நீங்கள் சம்பந்தர் ஐயாவின் பேச்சுக்களை கேட்டதில்லை  என்பதை நான் நம்பமாட்டேன்

சிங்கக்கொடி பிடித்தல்

சுதந்திரதினத்தில் பங்குபெறல்...

மக்களிடம் அல்லது கூட்டமைப்பிடம் விடப்பட்டு எடுக்கப்பட்ட முடிவுகளா??

இவ்வாறான முடிவுகள் சார்ந்து

தமிழ் மக்களுக்கு மாற்றுக்கருத்து இருக்குமாயின் 

அவர்கள் கூட்டமைப்பை புறந்தள்ளும் நிலை தாயகத்திலுண்டா??

புலிகள் பயங்கரவாதிகள் என்றால்

அவர்கள் எவ்வாறு  தியாகிகளாகமுடியும்???:(:( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.