Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை சரியான பாதையில் பயணிக்கிறது: அப்துல் கலாம்

Featured Replies

abdul%20kalam_1.jpg

இளைஞர் சமு­தா­யத்தின் தெளி­வான சிந்­த­னையும் ஆற்­ற­லுமே நாட்டை சரி­யான பாதையில் கொண்டுசெல்லும். இலங்­கையில் இளைஞர் சமூகம் மிகச்­ச­ரி­யான தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க வேண் டும் என்று இந்­தி­யாவின் முன்னாள் ஜனாதி­பதி கலா­நிதி அப்துல் கலாம் தெரி­வித்தார்.

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. அதே போல் பசு­மை­யான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

“அறிவுப் பொரு­ளா­தா­ரத்தில் சக்தி சவா ல்கள்” எனும் தலைப்பிலான மாநாட்டில் கலந்துகொள்­வ­தற்­காக இலங்கை வந்­தி­ருக்கும் இந்­தி­யாவின் முன்னாள் ஜனா­தி­பதி அப்துல் கலாம் நேற்று பாட­சாலை மாண­வர்­களை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சந்தித்தார்.

இந் நிகழ்வில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

இளைஞர் சமூகம் சரி­யான தலை­மைத்­து­வத்தை கையில் எடுக்க வேண்டும். எமது வாழ்க்­கையில் மனி­த­னது தன்­மைகள் நான்கு வகை­க­ளாக பகுக்கப்படு­கின்­றது. அதில் சிறுவர் பராயம், இளம் பராயம், வளர்ந்தோர் பரா யம், தலை­மைத்­துவ பராயம் என்பனவே அவையாகும்.

இந்த நான்கு தன்­மையில் முன்னைய மூன்று நிலை­யிலும் ஒருவர் தனக்­கான உரி­மை­க­ளையும் சலு­கை­க­ளையும் கேட்­ப­வ­ராக மட்­டுமே வாழ்­கின்றார். சிறுவர் பராயம் தனக்­கா­னதை தா என்று கேட்­கின்­றது. இளம் பராயம் தன்னை அனைத்து கட்­டுப்­பாட்டில் இருந்தும் விடு­விக்கக் கேட்­கின்­றது. வளர்ந்தோர் பரா­யத்­தினர் தமது சுய­நல மற்றும் தனிப்­பட்ட நோக்­கங்­களை எதிர்­பார்க்­கின்­றனர்.

ஆனால் அடுத்­தது நான் என்ன செய்ய வேண்டும் என்­ப­தையே சிறந்த தலை­மைத்­துவம் கேட்­கின்­றது. ஆகவே அனை­வரும் தமது இளம் பரா­யத்தை சிறந்த கல்­வி­யி­னூ­டாக வளப்­ப­டுத்தி இந்த சமூ­கத்­துக்கு என்ன செய்­ய­வேண்டும், என்னால் இந்த சமூ­கத்­துக்கு எவற்றை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு வர­வேண்டும்.

நான் என்ற சுய­நலம் மிகவும் ஆபத்­தா­னது. நான் எவற்றை எடுக்க வேண்டும் என்­பதை விடவும் என்னால் இந்த சமூ­கத்­துக்கு எவற்றை வழங்­க­ முடியும் என்­பது மிக முக்­கி­ய­மான தலை­மைத்­துவ பண்­பாகும். அதை ஒவ்­வொரு மாண­வரும் ஆரம்பக் கல்­வியில் இருந்தே வளர்த்­துக்­கொள்ள வேண்டும்.

”பிணி­யின்மை செல்வம் விளை­வின்பம் ஏமம்அணி­பென்ப நாட்டில் வைந்து “ என்று திருக்­கு­றளில் ஒரு குறள் உள்­ளது. இந்தக் குறளா­னது ஒரு நாட்டின் நிலை­மை­யி­னையும் மக்­களின் நிலை­மை­யையும் மிகத் தெளி­வாக எடுத்துக் காட்­டு­கின்­றது. மக்­க­ளுக்­கான உயர் பொரு­ளா­தார வளர்ச்சி, வளங்­களின் பாது­காப்பு, தூய்­மை­யான சுகா­தார பாது­காப்பு ஆகி­யவை ஒரு நாட்டில் மிகவும் அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­வை­யாகும். ஒவ்­வொரு நாடும் இந்தப் பண்பில் இருந்து விடு­படக் கூடாது. ஒவ்­வொரு நாட்­டுக்கும் இந்தக் குறள் பொருந்தும்.
அதேபோல் எமது வாழ்வில் சரி­யான வழி­ந­டத்தல் அமைய வேண்டும். எமது சிறந்த வழி­காட்­டி­யாக முக்­கி­ய­மான மூவர் உள்­ளனர். எமது தாய், தந்தை, ஆரம்பக் கல்வி ஆசி­ரியர். இவர்கள் மூவ­ருமே எமது சிறந்த வழி­காட்­டி­யாவர்.

அதேபோல் இளைஞர் சமு­தாயம் அறிவான வழி­காட்­டலில் வளர வேண்டும். ஒரு நாட்டின் இளம் சமு­தா­யத்­தினால் தான் நாட்டை சரி­யான முறையில் கட்­டி­யெ­ழுப்ப முடியும். இளம் சமூகத்தின் சிந்­த­னையும் அவர்­க­ளது கடு­மை­யான உழைப்­புமே இந்த உல­கத்தில் பல சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இலங்­கையின் இளைய சமு­தா­யமும் இந்தப் பட்­டி­யலில் தம்மை இணைத்­துக்­கொள்ள வேண்டும்.

சூரிய கலம் நூறு வீத பாது­காப்பானது. நவீன கால கட்­டத்­துக்கு இது மிகவும் முக்­கி­ய­மா­னது. சூரிய சக்தி மூல­மான வளங்­களில் பகிர்வே எதிர்­கால நாட்டின் பாது­காப்­புக்கு மிகச்­சி­றந்த தீர்வு என நன் நம்­பு­கின்றேன்.

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீள் சுழற்சி வலப் பாவனை பற்றி அர­சாங்கம் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளது. பசு­மை­யான நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும். ஆகவே அனை­வரும் சூரிய கல வள­பா­வ­னை­யினை பயன்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் ஒவ்­வொரு கூரைக்கும் ஒரு சூரிய கலம் என்ற ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டால் பசு­மை­யான இலங்­கையை நிச்­ச­ய­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

அதே­போல்­இ­லங்­கையின் போக்கு வரத்து முறை­மையில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும். இன்று எரி­பொருள் பாவனை அதி­க­ரித்­துள்­ளது. இந்த நிலை­மை­யினை கட்­டுப்­ப­டுத்தி அடுத்த 10ஆண்டு கால இடை­வெ­ளியில் உலகில் பெட்ரோல், டீசல் எண்ணெய் இல்லாது சூரிய கலம், உயிரியல் எரிவாயு, மின் சக்தியால் இயங்கக்கூடிய வாகனப் பாவனை வந்துவிடும் . ஆகவே உலகம் அவ்வாறானதொரு தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. அதுவே இயற்கைப் பாதுகாப்புக்கும் சிறந்த தீர்வாகும். அதேபோல் மீள் சுழற்சி மிக முக்கிய செயற்பாடாகும். இயற்கை வளங்களை பாதுகாப்பதில் இது மிகவும் நல்லதொரு தீர்வாக்கும்.

http://www.virakesari.lk/articles/2015/06/27/இலங்கை-சரியான-பாதையில்-பயணிக்கிறது-அப்துல்-கலாம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது.

இன வெறியர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் தமிழின அழிப்பைத் தொடர்ந்துவரும் அருகேயுள்ள இலங்கை அரசைப் புரிந்துகொள்ள முடியாத அப்துல்கலாம்.... கிணற்றுத் தவளையா???. அறப்படித்த பல்லி கூழ்ப்பானைக்குள் விழும் கதையா????.  

இறைமை இழந்த சிறிலங்கா, இந்தியாவின் நிழல் ஆட்சி 

இன வெறியர்களுக்கு ஆதரவாகத் தொடர்ந்தும் தமிழின அழிப்பைத் தொடர்ந்துவரும் அருகேயுள்ள இலங்கை அரசைப் புரிந்துகொள்ள முடியாத அப்துல்கலாம்.... கிணற்றுத் தவளையா???. அறப்படித்த பல்லி கூழ்ப்பானைக்குள் விழும் கதையா????.  

இல்லை, அவருக்கு தெரியாமல் இல்லை, என்ன விலை கொடுத்தாலும் இந்தியா வல்லரசகவேண்டும் அதுவே அவரின் கனவு.

இறுதி அவலத்தை பற்றி இன்னும் அவர் தனது நிலைபாட்டை தெரிவிக்கவில்லை இதில் இருந்தே தெரியாதா? 

இவர் எல்லாம் தமிழ் என்று சொல்லிக் கொள்வதில் வெட்கம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்துல் கலாமின் மீது இருந்த மதிப்பே போய் விட்டது.
முன்னாள் ஜனாதிபதியாக இருந்தாலும், விஞ்ஞானியாக இருந்தாலும்,  
பென்சன் எடுத்தால்... வாயை பொத்திக் கொண்டிப்பதே மேல்.
அறளை பெயர்ந்த, கருத்துக்களை வெளியிடப் படாது.
கருணாநிதிக்கும்... இது பொருந்தும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளைஞர் சமு­தா­யத்தின் தெளி­வான சிந்­த­னையும் ஆற்­ற­லுமே நாட்டை சரி­யான பாதையில் கொண்டுசெல்லும். இலங்­கையில் இளைஞர் சமூகம் மிகச்­ச­ரி­யான தலை­மைத்­து­வத்தை உரு­வாக்க வேண் டும் என்று இந்­தி­யாவின் முன்னாள் ஜனாதி­பதி கலா­நிதி அப்துல் கலாம் தெரி­வித்தார்.

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. அதே போல் பசு­மை­யான நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீள் சுழற்சி வலப் பாவனை பற்றி அர­சாங்கம் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளது. பசு­மை­யான நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும். ஆகவே அனை­வரும் சூரிய கல வள­பா­வ­னை­யினை பயன்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் ஒவ்­வொரு கூரைக்கும் ஒரு சூரிய கலம் என்ற ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டால் பசு­மை­யான இலங்­கையை நிச்­ச­ய­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும்..

http://www.virakesari.lk/articles/2015/06/27/இலங்கை-சரியான-பாதையில்-பயணிக்கிறது-அப்துல்-கலாம்

அவர் சொல்லுகிற சரியான பாதை என்பது இதுதான் ... பாவம் வாயில்லா பூச்சி :)  இந்த பேப்பர் காரங்களுக்குத்தான் வேற வேலை இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே அனை­வரும் சூரிய கல வள­பா­வ­னை­யினை பயன்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் ஒவ்­வொரு கூரைக்கும் ஒரு சூரிய கலம் என்ற ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டால் பசு­மை­யான இலங்­கையை நிச்­ச­ய­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும்..

அர‌சியல் ஒளியை கொடுத்த இந்தியா சூரிய கல ஒளியையும் வெகு விரைவில் கொடுக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அர‌சியல் ஒளியை கொடுத்த இந்தியா சூரிய கல ஒளியையும் வெகு விரைவில் கொடுக்கும்

இன்டியா?
இன்னும்.... ஒரு மில்லயன் ஆண்டு கழிந்தாலும், திருந்தப் போகாத நாடு.

அவர் சொல்லுவதை விளங்க ஒரு பக்குவம் வேண்டும் .

ஆளை ஆள் போடும் போது விசில் அடித்தவர்களிடம் அதை அவர் எதிர்பார்க்கவில்லை. நாட்டில் இருக்கும் அடுத்த தலைமுறைக்குத்தான் அவர் சொல்லுகின்றார் . 

  • கருத்துக்கள உறவுகள்

அவர், சொல்லும் பக்குவம்....
சிங்களவனுக்கும், இந்தியனுக்கும்.....

நிச்சயமாக, நொந்து போன தமிழனுக்கு அல்ல.
இதைக் கூட... புரியாத தமிழர், கனடாவில் வசிப்பது தான்... ஆச்சரியம்.

பிற்குறிப்பு: இதில்...... மாலை தீவு, சோத்துப் பார்சல்..... போன்ற வசனங்களை என்னால், பிரயோக்கிக்க முடியும். ஆனால்... கருத்து நாகரிகம் கருதி, அதனை தவிர்த்துள்ளேன்.

Edited by தமிழ் சிறி
வசனங்களில்... உறைக்கும் படி , இடைவெளி விடுவதற்காக.... திருத்தப் பட்டது.

முதலில் அவர் என்ன பேசியிருக்கின்றார் என்பதையாவது விளங்கி கொள்ள முயற்சியுங்கள் .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்து கலியாணம் குழந்தை குட்டி சுக போக வாழ்வு வாழ்ந்துகொண்டு மனித அழிவுகளை பற்றிய எதுவித அக்கறையும் இல்லாத ஈன பிறப்புகளுக்கு அப்துல் காலாம் பேசவில்லை .

போராட்டத்தில் பிள்ளைகளை பறி கொடுத்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை  அல்லது போராட போனவனுக்கு தெரியும் அதன் கோரம் ஓடிவந்தவனுக்கு என்ன தெரியும் .

இவர்கள் எல்லோருக்கும் சேர்ந்துதான் இப்போ பாடம் நடக்கின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவுக்கு சிறீலங்காவிலிருந்து நடந்தும் போகலாமா? ஓடிப்போகத் தேவையில்லையா? அடடா எத்தனைபேர் விபரம் தெரியாது ஓடிக்களைத்துச் சிரமப்பட்டார்களோ. :o

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், போராடப் போய்....
புளட்இயக்கத்தில் சேர்ந்த,  ஆறாயிரம் தமிழ் இளைஞர்ககளை... கொன்று குவித்ததை தவிர,ஏதாவது... சாதனை உள்ளதா? 
வந்திட்டார்...  அப்துல் கலாமுக்கு, வகுப்பு எடுக்க. :rolleyes:

விடுதலை போரட்டம்  பயங்கரவாதமாக மாறிய பின்னர் எம் போன்றவர்களுக்கு அங்கு அலுவல் இருக்கவில்லை .பயங்கரவாதம் அழிந்துவிட்டது இனி திரும்ப அந்த தேவை வரலாம் .

எத்தனை தரம் திரும்ப திரும்ப எழுதுவது ,

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள்... திரும்ப,  திரும்ப .....
"புலிப் பாடலையே...." விரும்பிக், கேட்டுக் கொண்டுக் இருக்க, விரும்புகின்ற  படியால்.
எமக்கும்.... அதனை, மீண்டும்... மீண்டும்.... ஒலி பரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

    ....

சூரிய கலம் நூறு வீத பாது­காப்பானது. நவீன கால கட்­டத்­துக்கு இது மிகவும் முக்­கி­ய­மா­னது. சூரிய சக்தி மூல­மான வளங்­களில் பகிர்வே எதிர்­கால நாட்டின் பாது­காப்­புக்கு மிகச்­சி­றந்த தீர்வு என நன் நம்­பு­கின்றேன்.

இலங்கை இன்று சரி­யா­ன­தொரு பாதையில் பய­ணிக்க ஆரம்­பித்­துள்­ளது. மீள் சுழற்சி வலப் பாவனை பற்றி அர­சாங்கம் சிந்­திக்க ஆரம்­பித்­துள்­ளது. பசு­மை­யான நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மாயின் மீள் சுழற்சி வளங்கள் பாவனை பற்றி சிந்­திக்க வேண்டும். ஆகவே அனை­வரும் சூரிய கல வள­பா­வ­னை­யினை பயன்­ப­டுத்த வேண்டும். இலங்­கையில் ஒவ்­வொரு கூரைக்கும் ஒரு சூரிய கலம் என்ற ரீதியில் பயன்­ப­டுத்­தப்­பட்டால் பசு­மை­யான இலங்­கையை நிச்­ச­ய­மாக கட்­டி­யெ­ழுப்ப முடியும்.

..

http://www.virakesari.lk/articles/2015/06/27/இலங்கை-சரியான-பாதையில்-பயணிக்கிறது-அப்துல்-கலாம்

இந்த 'சொம்பு மேதாவி', முதலில் தன் நாட்டில் இவற்றை சொல்லி நிலைநாட்டட்டும், ஆட்சிலிருப்போரை குளிர்விக்க தாளம் போட்ட இவர், அழிவைத்தரும் அதரப்பழசான தொழிற்நுட்பத்தைக் கொண்ட கூடங்குள அணுசக்தி உறபத்தி நிலையத்தில், இரவு 1.30க்கு நுழைந்து அதிகாலை 4 க்குள் எல்லா ஆய்வுகளையும் நடத்திவிட்டு, ‘கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது’ என வருவதற்கு முன்பே எழுதி வைத்து கொண்டு வந்த 40 பக்க அறிக்கையை வாசித்த மேதாவி.

இவர் இதுவரை அணுசக்தி உற்பத்தியின் பாதுகாப்பு பொறிமுறையை பற்றியோ இல்லை, அணுக்கழிவை எங்கே எப்படி அமிழ்த்தப்போகிறார்கள் என்பது பற்றியோ இந்த முதுகெலும்பில்லா கூடங்குள தரகர் வாய் திறக்கவில்லை..ஆனால் பக்கத்து நாட்டுக்கு பசுமை சக்தி, மீள் சுழற்சி வளப்பாவனை பற்றி வாய் கிழிய உபதேசம்..!

இப்படியும் ஒரு பிழைப்பு, விளங்குமடா சாமி !!  :(

தன் இனத்தின் சாவைப்பற்றி  பேசாத நாக்கு சவத்துக்கு சமன்...:(:(

விடுங்க ராசா..

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய முன்னாள் இன்னாள் தலைவர்கள் பலரிடம்... மனிதாபிமானம் என்பது செத்துப் பலகாலமாச்சுது. மனிதாபிமான உணர்வுக்கும் படிப்புக்கும் சம்பந்தமில்லை. :(

இங்கின ஒரு அண்ணன்.. ஒரு கற்பனையில் இருக்கிறார்.. தான் போராடேக்க உலகம் அவற்ற போராட்டத்தை விடுதலைப் போராட்டமாகக் கருதியதாம். அது எந்த உலகம்... அண்ணன் செவ்வாய்க்கிரகத்தில் இருந்து போராடினோரோ..?!

தமிழர்களின் போராட்டம்.. அன்று தொட்டு இன்று வரை பயங்கரவாதம் தான். பூண்டோடு ஒழிக்க ஆரம்பித்த..ஜே ஆர் தொடங்கி.. ரொனால் ரேகன் தொடங்கி.. மொசொட் தொடங்கி.. ரோ வரை அப்படித்தான் பார்த்து வந்தது. ஆனால் அண்ணனை மட்டும்.. விடுதலைப் போராளியா அங்கீகரிச்சதாம் உலகம். ச்சே எல்லாத்தையும் அண்ணன்.. மாலைதீவு பிடிக்கப் போய் நாசமாக்கிட்டரே..! :o:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் என்ன செய்யமுடியும்??

பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும்..

40 வருடமா இதே பல்லவி தான்...

உண்மைகள் கசக்கத்தான் செய்யும் .பயங்கரவாதத்தை அழித்தது எந்த பெரிய வெற்றி அதற்காக நானுறு  வருடங்கள் குரல் கொடுத்தாலும் தகும் .

இன்று நாட்டில் இருக்கும் நிலை கூட  வெற்றியின் ஒரு படிதான் எனக்கு .

மாறி மாறி பல்லவி பாட பச்சோந்தி இல்லை நான் .

  • கருத்துக்கள உறவுகள்

"நாய்.... வாலை நிமிர்த்த முடியாது "
"ஓணான்.... கலரையும், மாத்த  முடியாது" 
என்று... சும்மாவா, சொன்னார்கள்... எமது  முன்னோர்கள்..:rolleyes::lol:

  • கருத்துக்கள உறவுகள்

சுயநிலை அறியாதவர். எமது போராட்டத்தை யாரும் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கவில்லை. ஆனாலும்.. உலக அரங்கில் தமிழர்களின் போராட்டத்தை பிராந்திய அச்சுறுத்தலுக்கு உரிய ஒன்றென்று காட்டி அதை அழிக்க.. புளொட்டின் ரோ எடுபிடி மாலைதீவு படையெடுப்பு முக்கியமான ஒன்றாக மாறியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திருக்க முடியாது.

புலிகள் இறுதிவரை மேற்குலகோடு மோதும் போக்கைக் கொண்டிருக்கவில்லை. ஆனால்.. அலன் தம்பதிகள் கடத்தல் முதல் மேற்குலகோடு நேரடியாக பகைக்கும் பாங்கை ரோவுக்கு சார்பாக முன்னெடுத்ததில்.. ஒட்டுக்குழுக்கள் முதன்மையாக இருந்துள்ளன. இவை தாம் எமது போராட்டம் மீதான விடுலை அங்கீகாரத்துக்குப் பதில் சிங்களத்தின் பயங்கரவாத முத்திரையைப் பலப்படுத்தியது. தங்களின் சுயம் அறியாமல் சிலர் அலட்டித் திரிகிறார்கள். எல்லாம் புலிகளால் என்று கூறிவிட்டால் தங்களின் தப்புக்களை மறைத்து தாங்கள் சூராதிசூரர் என்று வலம்வரலாம் என்று கற்பனை செய்து கொள்கின்றனர். அவ்வளவே. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இன்டியா?
இன்னும்.... ஒரு மில்லயன் ஆண்டு கழிந்தாலும், திருந்தப் போகாத நாடு.

தப்பே செய்யவில்லை என்று இங்கே நிலைப்பாடு இருக்கையில் எப்படி திருந்துவதாம்..? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

 தெரியாத ஊருக்கு வழி சொல்பவர்தான் அர்யுன். நாட்டில் என்ன நடந்தது, போராட்டம் எங்கிருந்து ஆரம்பித்தது எல்லாமே கேள்விக்குறி. ஏதோ தமிழர் செத்தது புலியளாலை. ஓயாமல் அழுது புலம்புகிறார்.  இழப்பு, வலி அனுபவித்திருந்தால் இப்படி பேச மாட்டார். தன் ஒவ்வாமையை இங்கு கக்குகிறார். கழுதைக்கு உபதேசம் காதில விழுந்தாலும் அபயக் குரலேயன்றி வேறங்கொன்றுமிலை.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.