Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் போராளிகள் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

  • 10 நிமிடங்களுக்கு முன்னர்
பகிர்க

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

nullமுன்னாள் போராளிகள் மற்றும் கூட்டமைப்பினர் இடையேயான பேச்சுவார்த்தை

ஜனநாயகப் போராளிகள் என்ற புதிய கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பு வெற்றியளிக்கவில்லை என அந்தப் புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராகிய நடேசபிள்ளை வித்தியாதரன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்தச் சந்திப்பு இன்று வவுனியாவில் நடைபெற்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் விருப்பம் தெரிவித்து, அதனைத் தமது கோரிக்கைகளாக இந்தச் சந்திப்பின்போது முன்வைத்ததாக வித்தியாதரன் தெரிவித்தார்.

எனினும் இப்போதைய அரசியல் சூழலில் முன்னாள் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்படுவது தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக அமையும் என கூறி தமது கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் வித்யாதரன் கூறுகிறார்.

முன்னாள் போராளிகள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து அரசியலில் ஈடுபடுவதற்கு கூட்டமைப்பு இணங்கவில்லை என்பது தமக்கு வேதனையும் மனவருத்தமும் அளிக்கிறது கூட்டத்தில் பங்குபெற்ற முன்னாள் புலி உறுப்பினர் துளசி கூறுகிறார்.

அடுத்த கட்டமாக தங்களுக்குள் பேச்சுக்கள் நடத்தி முடிவெடுக்கப் போவதாகவும், இந்தப் பொதுத் தேர்தலில் தாங்கள் போட்டியிடுவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவதாகவும் துளசியும் வித்தியாதரனும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

bbctamil

  • Replies 52
  • Views 2.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் கட்சியினை வடகிழக்கில் விஸ்தரித்து, மக்களுக்கான அரிசியல் வெற்றிடங்களை நிரப்பிக்கொண்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு கட்சியினைப்பலப்படுத்தி தேர்தலில் குதித்தால் வெற்றி நிச்சயம் தமிழ் மக்களுக்கான அரசியல் வெற்றிடம் இவர்களால் நிரப்பப்படுமாயின் சம்சும் கோஷ்டி நிச்சயம் மண்டியிடும்!

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கு படிப்பும் கொஞ்சம் தேவை!

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சார் உங்க மாதிரி அறிவாளியா இல்லாட்டியும் தலைவர் தன்னால் இயன்றளவு தனது போராளிகளை அந்தந்த துறையில் வளர்த்துவிட்டவர்தான்! மெத்தப் படிச்ச சம்சும் கோஷ்டிய விடவா?

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் துறையில் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வனை வளர்த்துவிட்டது மாதிரியா? :D  வாலி அறிவாளின்னு யாரு சொன்னா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சம்பந்தர் சுமந்திரனைப் போல இருக்கனும் என்கிறீன்களா?

ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும். 

கருணாவும் போராட்டத்தை கைவிட்டு அரசியலுக்கு வந்தவர். அனாலும் அது யுத்தத்துக்கு முன்னர் இது பின்னர்.

 

 

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் சுமந்திரன் அறிவாளி மட்டுமல்ல நிதானமான அரசியல்வாதி. அப்பிடித் தான் இருக்கவேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

அறிவாளியா??????????????? அததான் தினமும் பார்க்கின்றோம்! சுத்தம்!!

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்குச் சுத்தம் எண்டு காலம் விரைவில் பதில் தரும்

  • கருத்துக்கள உறவுகள்

ஒ... காலம் தெளிவான பதில்தரும் காத்திருங்கோ...

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓர் அவசியமான சந்திப்பு. சம்பந்தன் மன்னிப்புச்சபை பகிரங்கமாக குற்றம்சாட்டிய புளொட் போன்ற ஒட்டுக்குழு தலைமைகளையும் பக்கத்தில வைச்சுக் கொண்டு முன்னாள் போராளிகளோடு பேச்சுக்கு வந்துள்ளார். இதே சம்பந்தன் முன்னர் இருந்த இடம் இப்படி...

http://nadunadapu.com/wp-content/uploads/2013/01/tna-bala_tna_meeting_05.jpg

praba-sambanthan-600x398.jpg

இன்று அவரிடம் தலைமைப் பதவி போனதும் அவர் இருக்குமிடம் இது.

காலம் மாறும் மிஸ்டர் சம்பந்தன் அன்ட் மாவை அன்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி, படிப்பு, சான்றிதழ் , பட்டம் பற்றியெல்லாம் யாழில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உரையாடியிருக்கிறோம். அந்த நேரமெல்லாம் anti-elite ஆக உங்களைக் காட்டிக் கொண்டு விட்டு இப்ப புலிகள் என்றதும் சான்றிதழ் வேணுமென்கிற கோரிக்கை உங்களைக் காட்டிக் கொடுத்து விட்டது (நீங்கள் அறிவாளி இல்லை என்பது சரி தான்!) 

அதை விடுங்கள். இந்த முன்னாள் போராளிகளுக்கு படிப்பு இல்லையென்று எப்படி கண்டு பிடித்தீர்கள்? உயர் தரத்தில் சித்தியெய்தி மருத்துவம், பொறியியல் படிக்க கிடைத்தும் புலிகளில் இணைந்த போராளிகள் படிக்காதவர்களா? இணைந்த பின்னும் தங்கள் அறிவை ஜெர்மனியர்கள் செய்வது போல ஒரு தனித் துறையில் கூர்மைப் படுத்தி இராணுவ வல்லமைக்கு உதவியவர்கள் உங்களை விடப் படிக்காதவர்களாகத் தான் இருக்க வேணும்!  

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் தேசிய தலைவருக்கும்.. சம்பந்தன் போன்ற கோடரிக்காம்புகளுக்கும் உள்ள வித்தியாசம்.

முன்னாள் போராளிகளுக்கு கூட்டமைப்புக்குள் இடமில்லை: சம்பந்தன்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்று வவுனியாவில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உறுப்பினர்களுக்குமிடையில் வவுனியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போதே சம்பந்தன் மேற்படி கூறியுள்ளார்.

 

இச்சந்திப்பு தொடர்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரர் என்.வித்தியாதரன் கருத்துத் தெரிவிக்கையில்,

“முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொள்வதால் கட்சிக்கு பாரிய சிக்கல் நிலை உருவாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை சர்வதேச ரீதியில் ராஜதந்திர மட்டத்தில் பேசிவரும் இச்சூழலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கூட்டமைப்புக்குள் இணைந்துக்கொள்வது உசிதமானதல்ல. ஆகையினால் இந்த முடிவினை கூட்டமைப்பு ஒருபோதும் எடுக்காது என சம்பந்தன் ஐயா எங்களிடம் தெரிவித்தார்.

 

அத்தோடு, கே.பி., கருணா, பிள்ளையான் போன்றவர்கள் அரசுடன் இணைந்து உளவு வேலைகளில் ஈடுபடுவதுபோல் நீங்களும் ஈடுபடப்போவதாக கூறுகிறார்கள். ஆனால், அதனை நாங்கள் நம்பவில்லை என்றும் சம்பந்த ஐயா எங்களிடம் தெரிவித்தார். அதற்கு, பியசேன போன்றவர்களும் உங்களின் கட்சியில்தான் இருக்கிறார்கள். அதேபோல் சுயநலத்துக்காகவும் பணத்துக்காகவும் தமிழ்த் தேசியத்தை விலைபேசும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்படுவதாக கூறுகிறார்கள். ஆனால், அதனை நாங்களும் நம்பவில்லை என பதில் கொடுத்தோம்” என்று வித்தியாதரன் மேலும் குறிப்பிட்டார்.

- See more at: http://www.tamilmirror.lk/149791#sthash.62KLdQqz.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை விட சர்வதேசம் புலிகளோடு பேசியது அதிகம்.. தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில்.

தமிழ் மக்களுக்காக மண்ணுக்காகப் போராடிய போராளிகளுக்கு மக்களின் முன் வர இடமில்லை.. மக்களுக்காக அரசியல் செய்கிறம் என்ற போர்வையில் தங்கள் குடும்பம் குட்டிகளை வெளிநாட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைத்துவிட்டு சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு.. சிங்கள சுதந்திர தினத்தில் குந்தி இருந்து கொட்டாவி விடும் சம்பந்தனின் அரசியல் இராசதந்திரத்துக்கு முன்னாள் போராளிகள்.. ஆபத்தாகிவிடுவார்கள் என்று சம்பந்தன் கொடும் கொலைகாரன் சித்தார்த்தனை பக்கத்தில் வைச்சுக் கொண்டு பயப்படுவது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. அவருக்கு.. சும் போன்ற சிங்கள செல்லப் பிள்ளைகள் தான் சரிவருவார்கள் என்று நினைக்கிறார் போலும்.

50,000 மாவீரர்களின் தியாகங்கள்.. பல இலட்சம் மக்களின் தியாகங்களை தூசென மிதிக்கும் சம்பந்தன் கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமிழரசுக் கட்சியில் தனித்து போட்டி இட்டு மக்கள் ஆணையைப் பெறட்டும். புலிகள் இனங்காட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் வரை அவரை சர்வதேசமும் சிங்கள மக்களும் புலிக் கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள். அதற்கு மட்டும் ஏன் தயங்குகிறார்.. சாணிக்கியர் சம்பந்தர்.

சம்பந்தன் வடிகட்டிய முட்டாள் அரசியல்வாதி. இவரால் தமிழ் மக்கள் அடைந்த அரசியல் ஆதாயம் என்பது கடந்த 40 ஆண்டுகளில் பூச்சியம். இப்ப சம்பூர் விடுவிப்பு மாதிரித்தான்.. எல்லாம்.

இவர்களின் சாணக்கிய சதுராட்டத்திற்கு தமிழ் மக்கள் தான் சரியான முடிவெழுத வேண்டும். இந்தத் தேர்தலோடு.

Edited by nedukkalapoovan

எல்லாம் அனுபவங்கள் தந்த பாடம் தான் .உண்ட வீட்டுக்குள் விஷம் கலந்தவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் வழமை போல தொடர்பில்லாமல் கன்னா பின்னா என உளறுவார்கள். இனியும் உளறுவார்கள். அவர்கள் இருக்கட்டும். 

ஜஸ்டின் அண்ணாவுக்கு, நான் anti-elite ஆகவோ pro-elite ஆகவோ இருந்து விட்டுப் போகின்றேன். ஆனால் அது புலியாகட்டும் அல்லது பூனையாகட்டும் படித்தவனின் சிறப்பு மேலானது. நான் படிக்கவும் இல்லை பல்கலைக்கழகம் புகவும் இல்லை. அதனால் தான் படித்தவர்கள் மேல் மரியாதை (கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பது வேறு கதை. அதை விட மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பட்டங்களைச் சும்மா விற்கிறார்களாம்). புலிகளுக்கு மற்றத் துறைகளில் அறிவு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம் ஆனால் அரசியல் அறிவு என்பது பூச்சியம் அல்லது சுத்தம்.  அரசியல் படுகொலைகளில் இருந்து, உலக நடப்பு நிலவரங்களில் இருந்து, பிராந்திய அரசியலை விளெங்கிக்கொள்வதிலிருந்து பாடங்களை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொண்டது இல்லை.  இந்தப் பின்னணியில் இருந்துவரும் முன்னாள் போராளிகளிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கலா?

அதைவிட கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் புலம்பெயர் புலிவால்களின் எடுபிடியாகவே இவர்கள் இருப்பார்கள். கூட்டமைப்பை சிதைக்க முயற்சிசெய்யும் எவரும் முட்டாள்களே என்பது எனது துணிபு!

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் வழமை போல தொடர்பில்லாமல் கன்னா பின்னா என உளறுவார்கள். இனியும் உளறுவார்கள். அவர்கள் இருக்கட்டும். 

ஜஸ்டின் அண்ணாவுக்கு, நான் anti-elite ஆகவோ pro-elite ஆகவோ இருந்து விட்டுப் போகின்றேன். ஆனால் அது புலியாகட்டும் அல்லது பூனையாகட்டும் படித்தவனின் சிறப்பு மேலானது. நான் படிக்கவும் இல்லை பல்கலைக்கழகம் புகவும் இல்லை. அதனால் தான் படித்தவர்கள் மேல் மரியாதை (கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்பது வேறு கதை. அதை விட மொரட்டுவ பல்கலைக் கழகத்தில் பட்டங்களைச் சும்மா விற்கிறார்களாம்). புலிகளுக்கு மற்றத் துறைகளில் அறிவு இருந்திருக்கலாம் அல்லது இல்லாமலிருக்கலாம் ஆனால் அரசியல் அறிவு என்பது பூச்சியம் அல்லது சுத்தம்.  அரசியல் படுகொலைகளில் இருந்து, உலக நடப்பு நிலவரங்களில் இருந்து, பிராந்திய அரசியலை விளெங்கிக்கொள்வதிலிருந்து பாடங்களை அவர்கள் ஒருபோதும் கற்றுக்கொண்டது இல்லை.  இந்தப் பின்னணியில் இருந்துவரும் முன்னாள் போராளிகளிடம் இருந்து வேறு எதை எதிர்பார்க்கலா?

அதைவிட கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் புலம்பெயர் புலிவால்களின் எடுபிடியாகவே இவர்கள் இருப்பார்கள். கூட்டமைப்பை சிதைக்க முயற்சிசெய்யும் எவரும் முட்டாள்களே என்பது எனது துணிபு!

இந்தப் போராளிகள் எந்த மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியுமா? முடிவுகளை எடுத்த இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைமைகளை எதிர்க்க முடியாத கீழ் மட்ட உறுப்பினர்களாக இருந்திருந்தால் இவர்களை தலைமையின் தவறுகளுக்காக அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது நியாயமானதல்ல! புலிகள் சிறி லங்காவின் தேர்தல்களில் தமது நலனை வேண்டி மூக்கை நுழைத்தார்கள் என்று கூறும் நாங்கள், இப்போது ஒரு கட்சி நலனுக்காக ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்க முயற்சிக்கிறோம்! அப்ப ஜனநாயகம் பன்முகத் தன்மை இதெல்லாம் என்ன புலிகளை மட்டும் சாத்தப் பயன் படும் சாட்டைகள் மட்டும் தானா?  

எல்லாம் அனுபவங்கள் தந்த பாடம் தான் .உண்ட வீட்டுக்குள் விஷம் கலந்தவர்கள் .

 இது சம்பந்தன் குறூப்புக்கெல்லோ இந்த நிலைமையில் பொருத்தமா இருக்குது? சேம் சைட் கோல்!?

  • கருத்துக்கள உறவுகள்

ஒ... காலம் தெளிவான பதில்தரும் காத்திருங்கோ...

ஐயா  நித்திரை செய்வது போல் நடிப்பவர்களையும்

இடையிலுள்ளவர்களையும் ஒன்றுமே செய்யமுடியாது

அவர்களாக திருந்தினால் மட்டுமே உண்டு..

புலம் பெயர் மக்கள் சொன்னால்

தாயக மக்கள் சொல்லட்டும  என்பார்கள்

நீங்கள் தாயகத்திலிருந்து சொன்னால்.....??

இப்ப விழுங்குதா??

எங்க இருக்குது விக்கல் என்று......

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

வேட்புமனுத் தாக்கல் செய்யும் காலம் நெருங்கிய நிலையில் ஜனநாயகப் போராளிகளின் கோரிக்கை சாத்தியமற்றது:-

பாராளுமன்ற தேர்தலுக்கான இறுதி நேரத்தில் மாவட்டம் தோறும் 2 வேட்பு மனுக்களை கோரியமையானது நடைமுறைச் சாத்தியம் அற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அவ்மைப்பின் போராளிகளிடம் தெளிவுபடுத்தியதாக கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்...


இன்று வவுனியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கருத்து வெயியிட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இறுதி நேரத்தில் இந்த விடயம் குறித்து பேசப்படுவதை தெரிவித்ததோடு, இந்த செயற்பாட்டின் பின்னால், இதனை இயக்குபவர்கள் இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், அதனால் திடிரென முடிவுகளை எடுத்து வேட்பு மனுக்களை தருவது கடினம் எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்...


இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, “தம்பிகளா நான் உங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஆரம்பத்தில் அரசியல் வேலைகளில் ஈடுபட்டவன்... நீங்கள் வருவதில் எங்களுக்கு பிரச்சனைகள் இல்லை... ஆனால் இது குறித்து உங்களை இயக்குபவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் பேசி இருக்க வேண்டும்.. ஆனால் இறுதி நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய சில தினங்களே உள்ள நிலையில் எம்முடன் பேசவந்தால் அது எவ்வகையில் சாத்தியமாகும், நாம் முதலில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேசி ஆராய்ந்திருக்க வேண்டும”; எனக் கூறியுள்ளதுடன் இந்த நடவடிக்கைகள் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீளேயே இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டு உள்ளார்...  
இன்றைய சந்திப்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் “நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்... தம்பியுடன் வேலை செய்திருக்கிறேன்... பிற்காலத்தில்  புளொட் அமைப்பில் போராட்டத்தை தொடர்ந்த நானும் ஏனைய இயக்கங்களான ஈபிஆர்எல்எவ், ரெலோ ஆகியவற்றின் தலைவர்களும் போராட்டங்களில் இருந்தே ஜனநாயக வழிக்கு திரும்பி மாகாண சபை, பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறோம்... அதனால் நீங்களும் ஜனநாயக வழிக்கு திரும்பி தேர்தலில் போட்டியிடுவது குறித்து எமக்கு ஆட்சேபனை இல்லை...


6 மாதத்திற்கு முன்பே இந்த அமைப்பின் வேலைகளை தொடங்கிய உங்கள் இணைப்பாளர், எம்முடன் ஆரம்பத்திலேயே உங்கள் விருப்பங்களை பேசி இருந்தால் அதுபற்றி கூட்டமைப்பில் ஆராய்ந்து நல்ல முடிவை எடுத்திருக்கிலாம்... இப்போ காலம் பிந்திவிட்டது... அதனால் இம்முறை சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்...


இதேபோன்றே, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், மற்றும் ஈபிஆர்எல்எவ் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கருத்துகளை முன்வைத்ததோடு, இறுதி நேர முயற்சி பற்றியும், கால அவகாசம் இன்மை பற்றியும் விளக்கியுள்ளனர்....


இதேவேளை இவ்விடயங்கள் ஊடகங்களில் முழுமையாக வெளிவரவில்லை எனக் குறிப்பிட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர்கள், பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகவும், கூட்டமைப்பு மறுத்துள்ளதாகவும் மட்டுமே தகவல்கள் வெளியாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்...
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121708/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 இது சம்பந்தன் குறூப்புக்கெல்லோ இந்த நிலைமையில் பொருத்தமா இருக்குது? சேம் சைட் கோல்!?

எல்லாம் இப்ப தலைகிழாக இருக்கு ....

இந்த பிரச்சனையில் சம்பந்தரை " ஏற்றுக்கொள்ளத்தான் " வேண்டும் .
அவர்கள் ஏற்கனவே அனந்திக்கு இடம் தரமாட்டோம் என்று சொன்னதிற்கு பிறகு வித்தி, என்ன நம்பிக்கையில் அவர்களோடு பேச போனவர் ? ( பின் கதவால் பேசிப்போட்டு சும்மா ஒப்புக்கு கதைத்திருக்கலாம் அது வேறு விடயம்) ...அவர்களை தமிழ் அரசு கட்சியில் இல் சேர்க்க பண்ணிபோட்டு அவர்களின் கோல் - மால்களுக்குள் இடையில் இடம் கேப்பது வேறு விடயம் ஆனால் இது கொஞ்சம் சிக்கல்தான்.

இங்கேயும் ஒரு சிக்கல் இருக்கு,  நேற்று சொல்லுகிறார் இவர்கள் அரசியலுக்கு வருவது நன்று என்று -இந்து பத்திரிகைக்கு, அனால் இன்று அவர்களின் கட்சியிலேயே , அவர்கள் உருவாக்கிய கூட்டமைப்பிலேயே , தத்து எடுத்து வளர்த்தவர்கள் தங்களது பெற்றோரை திரத்துவது போல இடம் இல்லை என திறத்தி விட்டார் ....:(

  • கருத்துக்கள உறவுகள்

 


இன்று வவுனியாவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கருத்து வெயியிட்டுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இறுதி நேரத்தில் இந்த விடயம் குறித்து பேசப்படுவதை தெரிவித்ததோடு, இந்த செயற்பாட்டின் பின்னால், இதனை இயக்குபவர்கள் இலங்கைப் புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலில் செயற்படுவதாகவும், அதனால் திடிரென முடிவுகளை எடுத்து வேட்பு மனுக்களை தருவது கடினம் எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்...


 “தம்பிகளா நான் உங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் ஆரம்பத்தில் அரசியல் வேலைகளில் ஈடுபட்டவன்... நீங்கள் வருவதில் எங்களுக்கு பிரச்சனைகள் இல்லை... ஆனால் இது குறித்து உங்களை இயக்குபவர்கள் ஆரம்பத்திலேயே எம்முடன் பேசி இருக்க வேண்டும்..

 

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் போராளிகள் எந்த மட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியுமா? முடிவுகளை எடுத்த இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைமைகளை எதிர்க்க முடியாத கீழ் மட்ட உறுப்பினர்களாக இருந்திருந்தால் இவர்களை தலைமையின் தவறுகளுக்காக அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பது நியாயமானதல்ல! புலிகள் சிறி லங்காவின் தேர்தல்களில் தமது நலனை வேண்டி மூக்கை நுழைத்தார்கள் என்று கூறும் நாங்கள், இப்போது ஒரு கட்சி நலனுக்காக ஒரு தரப்பினரை ஒதுக்கி வைக்க முயற்சிக்கிறோம்! அப்ப ஜனநாயகம் பன்முகத் தன்மை இதெல்லாம் என்ன புலிகளை மட்டும் சாத்தப் பயன் படும் சாட்டைகள் மட்டும் தானா?  

ஜனநாயகப் பன்முகத் தன்மைக்கும் முன்னாள் புலிகளுக்கும் தொடர்பே கிடையாது! போராட்டத்தில் கூட தாங்கள் மட்டுமே செயற்பட வேண்டும் என கருதி சும்மா சாக்குப்போக்குச் சொல்லி சகோதர இயக்கங்களை தடை செய்ததுதான் ஜனநாயகப் பன்முகத் தன்மையின் உச்சக்கட்டம். (மற்ற இயக்கங்களைத் தடைசெய்தபோது கூறிய காரணங்களைவிட பெரிய தவறுகளை பின்னர் புலிகள் இழைத்தனர். 

இலங்கைத் தேர்தலொன்றின் மக்களின் வாக்களிப்பைத் தடுத்ததன் மூலம் வேறு திசையில் சென்றிருக்கக் கூடிய தமிழர் தலைவிதியை முள்ளிவாய்காலில் தீர்மானித்தனர்.  

அது போக, இலங்கையில் அல்லது இலங்கைச் சனநாயக் சோசலிசக் குடியரசின் பாராளுமன்றில் பன்முக ஜனநாயகத் தன்மை இருக்கும் என எவ்வாறு இவர்கள் எதிர்பார்கின்றனர்? நிராயுதபாணிகளான தமிழ்ப் பாராளுமன்ற மற்றும் மாநகர சபை உறுப்பினர்களை தேடித்தேடி அற்ப காரியங்களுக்காக வேட்டையாடி விட்டு,( கூறிய காரணங்களை அல்லது அதைவிட பெரிய தவறுகளை அவ்வப்போது அவர்கள் ஒரு போதும் செய்யவில்லை) இப்போது வலுக்கட்டாயமாக ஆயுதங்கள் இழந்துவிட்டு ஜனநாயகப் பன்முகம் பேசுவது அபத்தமானதும் கேலிக்குரியதும் ஆகும். 

இறுதியாக அவர்களில் எவரும் உடனடியாக முதலாம் இரண்டாம் மூன்றாம் கட்ட போராளிகளாக வருவதில்லை. உதாரணமாக 87 களின் சுப்பையா பரமு தமிழ்ச்செல்வன், தமிழன்பன் என்கிற ஜவான் போன்றவர்கள் இந்திய இராணுவம் இருந்தபோது மண்டையில போடும் குழுவில் இருந்தனர். அதில் திறமையாகச் செயற்ப்டவே அடுத்தடுத்த பதவிகள் (வால்பிடிப்புக்கள் மூலம்) கொடுக்கப்பட்டு ஒருவர் அரசியல் துறைப்பொறுப்பாளரானதும் மற்றவர் புலிகளின் குரல் பொறுப்பாளரானதும் வரலாறு.  ஆகவே இன்றைய கீழ்மட்டம் என்பது நாளைய மேல்மட்டம். சும்மா எவரும் மேல்மட்டத்தினை மட்டும் காட்டித் தப்பிவிடமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு என்பதும் படிப்பில்லை என்பதுமாக நாம்தான் ஆளாளுக்கு அடிபட்டுக் கொண்டிருக்கிறோம் அனுபவவே சிறந்த ஆசான். காலம் அறிந்து எவரொருவர் சரியாகப்பயணிக்கிறாரோ அவரே சிறந்தபுத்திமான். அதைவிடுத்து ஏட்டுக்கல்வியால்தான் எல்லாம் என்று எண்ணிவிடலாகாது. அறிவும் துணிவும் கலந்து நடந்தால் வெற்றி நிச்சயம். அறிவு தனித்தும், துணிவு தனித்தும் எதனையும் சாதிக்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.