Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் துடுப்பாட்டத்தின்போது பந்து தாக்கியதில் தமிழ் வீரர் மரணம்

Featured Replies

Bavalan

லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார்.

மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

பந்தினால் தாக்கப்பட்டதும் நிலைகுலைந்துபோன பாவலனைக் காப்பாற்ற விசேட அம்புலன்ஸ் வண்டிகளிலும், உலங்குவானூர்தியிலும் மைதானத்துக்கு விரைந்த வைத்தியர்கள் கடுமையாகப் போராடியபோதும், முயற்சிகள் பயனளிக்கவில்லை என சக வீரர்கள் கொழும்பு மிரரிடம் தெரிவித்தார்கள்.

சிறப்பான சகலதுறை ஆட்டக்காரரான பாவலன் யாழ்ப்பாணம் ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார்.

கோடைக் கால வார இறுதிநாட்களில் லண்டனின் பல்வேறு பாகங்களிலும் சுமார் நாற்பதுக்கும் அதிகமான கழகங்களுக்கிடையே, ஐந்து பிரிவுகளில், பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தினரால் நடாத்தப்பட்டுவரும் போட்டித்தொடர்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்.

அண்மையில் காலமாகிய பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் வல்லிபுரநாதன் தீபராஜின் மறைவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னரேயே நேற்றைய போட்டிகளில் பாவலன் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் கலந்துகொண்டிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

http://www.colombomirror.com/tamil/?p=5168

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள். கிரிக்கெட் பந்து எமனாகி வருவது தொடர்பில்.. பந்து வடிவமைப்பில் பாவனையில் மற்றும் தற்காப்பில் விதிமுறைகளில் மீள் சிந்தனையும் புதிய நடைமுறைகளும் அவசியம்.

Edited by nedukkalapoovan
பதப் பாவனை மாற்றம்.

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட், மரண விளையாட்டாக போய் விட்டது.
பத்மநாதன் பாவலனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாதன் பாவலனுக்கு, ஆழ்ந்த இரங்கல்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்...!

பௌலர்களின் சில பௌன்சர்கள் பாட்ஸ்மன்களை படு காயமாக்குகின்றன,சில  சுடு காட்டுக்கும் அனுப்பி விடுகின்றன...!

  • கருத்துக்கள உறவுகள்

பாவலனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிபிசி ஆங்கிலமும் இச்செய்தியை பரிவோடு பிரசுரித்துள்ளது.

Bavalan Pathmanathan dies after being struck in chest by ball

A cricketer has died after being struck on the chest by a ball during a local league match in Surrey.

Bavalan Pathmanathan, 24, was batting for Manipay Parish Sports Club in the British Tamil League on Sunday at Long Ditton recreation grounds.

An air ambulance was called but he later died of his injuries.

http://www.bbc.co.uk/sport/0/cricket/33425867

  • கருத்துக்கள உறவுகள்

பாவலனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.