Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை; மாவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை; மாவை

தமிழரசுக் கட்சி மற்றும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு புறம்பாகவே செயற்பட்டு வரும் திருமதி அனந்தி சசிதரன் வேட்பாளராக தன்னை அனுமதிக்கவில்லை என  ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்ப்பினை மாவை சேனாதிராசா நிறுத்திவிட்டார் என்று கூறிவருகின்றார்.
 
இது குறித்து தமிழரசுக் கட்சியின்  தலைவர்  மாவை சேனாதிராசாவுடன் உதயன்  இணையத்தள செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத்  தெரிவித்தார்.
 
அவர் மேலும்  தெரிவிக்கையில்,
 
திருமதி . அனந்தி சசிதரன்  தன்னை தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுக் கட்சியிடம் இதுவரை கோரவில்லை.
 
கோரிக்கை கூட விடுக்காது தனக்கு இடம்தரவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். அத்துடன்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழரசுக் கட்சி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பிலும்  ஊடகங்களிலும் , வெளிநாடுகளிலும் அவமரியாதையாகவே பேசி வருகின்றார்.
 
அத்துடன்  எமது தீர்மானங்களுக்கு எதிர்மாறாகவே செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நாம் அவருக்கு ஒழுக்காற்று கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளோம். ஆனால் அவருக்கு இன்னும்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை.
 
அவ்வாறு நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால் வடக்கு மாகாண சபையின்  உறுப்பினர் பதவியும் இல்லாது போயிருக்கும். மனிதாபிமான எண்ணத்திலேயே நாம் இதுவரை பொறுமை காக்கின்றோம்.
 
இந்தநிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் சென்று வேட்பாளருக்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.  மாகாண சபைக்கான வேட்பாளருக்கான அனுமதியை அனந்திக்கு நான்தான் கொடுத்தேன்.
 
எனினும் அவர் எமது கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை. கடந்த காலத்தில் காணாமல் போனவர்களது போராட்டத்தில் கூட சுமந்திரனின்  உருவப்பொம்மையும்  அவரது வாகனத்தில் இருந்தே எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
 
அதனைவிட வெளிநாடுகளில் சென்று அங்குள்ளவர்களுடன் எம்மைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பிலும் ஆதாரம் எம்மிடம் உள்ளது.  
 
அனந்தியை விட நேர்மையிலும்  கட்டுப்பாடுடனும்  செயற்படக்கூடிய போரில் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில்  போட்டியிடுவதற்கு கோரியுள்ளனர் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

நான் நினைக்கிறேன் அனந்தி அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார் என. (எனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்).

இந்த நிலையில் தனக்கு பாராளுமன்றத் தேர்தலு;ககாக நியமனம் கிடைக்கும் என அனந்தி எதிர்பார்ப்பதும் சரியில்லை. இந்த நிலையில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு தனது நிலைப்பாட்டுடன் ஒத்து வராத நிலையில் அவர் தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி புதிய பாதையில் பயணிப்பதே சரியானது.

  • கருத்துக்கள உறவுகள்

மாவையர் சொல்வது உண்மை எனின் அனந்தி செய்தது தவறு.

  • கருத்துக்கள உறவுகள்

அனந்தி சசிதரன் தன்னை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசு கட்சியிடம் கோரவில்லை:-

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னை நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு இதுவரை தமிழரசு கட்சியிடம் கோரவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ். மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் புதன்கிழமை (08) ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு இதுவரை அவர் எம்மிடம் எழுத்து மூலம் கோரவில்லை. ஊடகங்கள் வாயிலாக தான் கேட்டு வருகின்றார்' என்றார்.

'வடமாகாண சபை உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கூடாது என ஒரு தீர்மானம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் எடுக்கப்பட்டு  இருந்தது. சித்தார்த்தன் ஒரு கட்சியின் தலைவர் என்ற ரீதியில் தான் அவர் போட்டியிட ஒரு விதி விலக்கு அளிக்கப்பட்டது.

அனந்தி சசிதரன் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட அனுமதிக்குமாறு எழுத்து மூலமாகவோ நேரடியாகவோ எம்மிடம் கோரவில்லை. அவர் தமிழரசு கட்சியை சேர்ந்தவர். எம்மிடம் வந்து கேட்டு இருக்கலாம். ஆனால், அதனை செய்யாது ஊடகங்களிடம் தமிழரசு கட்சி தமக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என கூறி வருகின்றார். அவர் வழமையாக ஊடகங்கள், இணையத்தளங்கள் வாயிலாகவே அனைத்து விடயங்களை அணுகி வருகின்றார்.

அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். அக் கட்சியின் சார்பில் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினர் ஆனவர். அப்படியானவர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்ததுடன் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்து வந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினராக சுமந்திரன் இருந்தவேளை அவரின் கொடும்பாவியை எரித்தமைக்காக சாட்சியங்கள் கூட எம்மிடம் இருக்கின்றன. இதன் காரணமாகவே அவர் மீது தமிழரசு கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. இதுவரை அவர் அதுக்கு பதில் அளிக்கவில்லை. அதனை வைத்தே நாம் அவரை கட்சியில் இருந்து நீக்கி இருக்கலாம். அவரை மாகாண சபை உறுப்பினர் பதவியையும் பறித்து இருக்கலாம். ஆனால் நாம் அதனை செய்யவில்லை.

அவர் தன்னை தேர்தலில் போட்டியிட நியமிக்குமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியிடம் கோரிக்கை விடுத்ததாக அறிகின்றோம். அவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தாலும் அது முறையற்றது. அத்துடன் அக் கட்சி தனக்கு சந்தர்ப்பம் தர இருந்ததை நாங்கள் தடுத்ததாக சொல்வதும் முறையற்றதாகும் என மேலும் தெரிவித்தார்.
 
http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121776/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மாவை ஸார் சும்மா ஜில்மாட் விடாதேயுங்கோ! அனந்தி கேட்டால் கட்டாயம் குடுத்துத்தான் இருப்பீங்கள்! எங்களுக்கு பட்டம் விட்டுக்காட்டாதேயிங்க. 

தமிழரசு கட்சி சீட் கொடுத்திருக்குமோ இல்லையோ அது வேறு விடயம் ஆனால் மாவை சொல்லும் விடயங்கள் உண்மையானால் ஆனந்தி கட்சிக்குள் பல சிக்கல்களை உருவாக்குவார் போலத்தான் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு கட்சி சீட் கொடுத்திருக்குமோ இல்லையோ அது வேறு விடயம் ஆனால் மாவை சொல்லும் விடயங்கள் உண்மையானால் ஆனந்தி கட்சிக்குள் பல சிக்கல்களை உருவாக்குவார் போலத்தான் இருக்கு .

மின்னல் நிகழ்வில் தான் கேட் டு 6 மாதம்

ஆனால் இதுவரை பதிலில்லை என்கிறாரே அனந்தி......

தமிழரசு கட்சி சீட் கொடுத்திருக்குமோ இல்லையோ அது வேறு விடயம் ஆனால் மாவை சொல்லும் விடயங்கள் உண்மையானால் ஆனந்தி கட்சிக்குள் பல சிக்கல்களை உருவாக்குவார் போலத்தான் இருக்கு .

ஒரு தடவை தேர்தலில் பங்கு பற்றி எடுத்த வாக்குகளை எண்ணும் போது மாவையருக்கு வயிற்றோட்டம் போல .ரொம்ப பயப்படுகின்றார் .

என்ன சம்பந்தனும் சுமந்திரனும் கூட்டமைப்பின் மற்ற கட்சிகளுடன் கலந்துரையாடாமல் எதுவும் செய்யலாம் ...
அவையளுக்கு என்றால் ரத்தம் அனந்திக்கு என்றால் மட்டும் தக்காளி சட்னியா ? 

இதுவா உங்களின் அரசியல் ஒழுக்கம் ...இதுக்குதான் சொல்வது சர்வாதிகாரம் ?

  • கருத்துக்கள உறவுகள்

திரு மாவை சேனாதிராஜா அவர்களிடம் ஒரு கேள்வி,

இக்கெள்வியை திரு மாவை சேனாதிராஜா சம்மந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோருடன் தொடர்பிலிருப்போர் அன்றேல் அவர்களுக்காக யாழ்இணையத்தில் எம்முடன் உறவாடுவோர் ஆகியோரில் யாரவது கேட்டு பதிலைத்தெரிந்துகொள்ளுங்கள்

ஒழுங்காற்று நடவடிக்கை எடுத்து உங்களது கோரிக்கைகளுக்குப் இதுவரை பதிலளிக்காத ஒருவருக்கு எதிராக மேலதிக நடவடிக்கை எதையும் எதற்காக இதுவரை எடுக்கவில்லை?

சுமந்திரனது உருவபொம்மை அவரது வாகனத்திலிருந்துதான் வெளிக்கொண்டுவரப்பட்டது எனில் எதற்காக இதுவரை அவரைக்கட்சியில் தொடர்ந்துவைத்திருக்கிறீர்கள்?

வெளிநாடுகளில் கூட்டமைப்பையும் அதனைச் சார்ந்தவர்களைபற்றியும் கண்டபடி ஆகாதன பேசியவரது நேரடி மற்றும் ஒலிப்பதிவு,  ஒளிப்பதுவு  செய்யப்பட்ட சாட்சியங்கள் உங்களிடம் இருக்கும்போது எதற்காக அவரைக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றாது இதுவரை வைத்திருக்கிறீர்கள்?

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாராவது நடப்பார்களேயானால் அது ஈபி ஆர் எல் எவ் கட்சியாகவிருக்கட்டும் ஈ கலைத்தான் கட்சியாக இருக்கட்டும் அவர்களை வெளியேற்றுவதுதானே தர்மம், நீங்கள் தமிழர்களது உரிமைக்காக சுயநலம்ற்றுப்போராடுவதற்காக பொதுவில் அரசியலில் ஈடுபடுவது உண்மையாகவிருந்தால் என்ன தயக்கம் அவரை வெளியேற்றுவதற்கு? 

நீங்கள் உண்மையானவர்களாகவிருந்தால் மக்கள் உங்கள்பக்கம்தானே நிற்பார்கள்.

அடிப்படையில் புலம்பெயர்தேசத்தில் வாழும், அடிக்கடி புலத்துக்கு வந்துபோகும் நான் உங்களது அரசியல் சித்துவிளையாட்டில் கொஞ்சம்கூட சமரசம் செய்துகொள்ளமுடியாது தங்களது நோக்கம் தமிழர் விரோததேசமாம் இந்தியாவினது தாளத்துக்கு ஆடுவது. தமிழர்களது அபிலாசைகளையும், இதுவரை அவர்களை விடுதலைக்காய் கொடுத்த விலையையும் முள்ளிவாய்க்கால்ப் பள்ளமளவிற்கான குழிதோண்டி எப்போதே புதைத்துவிட்டீர்கள் எனிலும் கூட்டமைப்பு எனும் அரசியல் மட்டுமே செய்யும் கட்சியில் புல்லுருவிகள் சேர்ந்து உங்களது நலன்களுக்கு இடையூறாக இருப்பார்களானால் அவர்களை வெளியேற்றுவதே சிறந்தவழி.

தவறு திருத்தியாச்சு ,தவறுக்கு மன்னிக்கவும்.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எழுஞாயிறு :

கேட்ட கேள்வி எல்லாம் சரி. ஆனால் EPDP , EPRLF மாற்றிவிட்டீர்கள் .... இப்ப சிலபேர் வந்து, அதை வைச்சு  பிச்சு புடுங்க போகினம்...அதுக்கு முதல் அதை மாற்றி விடுங்கோ 

சீட் கேட்டது ஈ பி டி பியில்  இல்லை ஈ பி ஆர் எல் எப்  -   எழுநாயிறு.

இதை பி பி சியில் சுரேஷ்  தான் அனந்திக்கு சீட் கொடுக்க தயாராக இருந்ததாகவும் ஆனால் மாவை கொடுக்கவேண்டாம் என்று சொன்னதாகவும் சொன்னார் .

அனந்திக்கு சீட் வேண்டுமென்றால் மின்னலில் பேட்டியா கொடுப்பது ?

மாகாண சபையில் வாக்கு அள்ளியிருந்தால் இப்ப தனித்து கேட்டிருக்கலாம் தானே ?

ஏற்கனவே மாகாணசபை அங்கத்தவர் ,இருப்பது தமிழரசு கட்சி ,சீட் கேட்டது ஈ பி ஆர் எல் எப் .

தெளிவு பிறக்க கனகாலம் இருக்கு. 

இதன் அர்த்தம் அனந்தி தமிழரசு கட்சியில் இருக்க விரும்ப வில்லை ... தான் தோன்றித்தனமாக செய்யும் கட்சி தான் அது ... அது இப்ப ஒரு ஜனநாயக கட்சி மாதிரியா நடக்கின்றது ?

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி அனந்தி அவர்கள் சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிட முடியுமா...? அல்லது அதற்கும் ஏதாவது தடைகள் உண்டா...?

  • கருத்துக்கள உறவுகள்

ஓம் அவ சுயேட்சையாக போட்டியிடத் தடை இல்லை. முந்தி மகேஸ்வரன் எம்பியை அவர்கள் செல்லமாக அழைத்து அன்பாக மிரட்டி யாழில் போட்டியிட விடாமல் கொழும்பில் போட்டியிட வைத்தது போல அல்ல இந்தச் சமாச்சாரம் (அவர் கொழும்பில் வெண்டது வேறகதை). இந்த பிபி அக்கா வெளில போனாலே காணும்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதும் பலருக்கு கனகாலம் எடுத்தாலும்  தெளிவு பிறக்காது.

வட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சர்கள் என்று பலர் இந்த பாராளமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளனர். 

கடந்த வடமாகாண சபைப் தேர்தலில், தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணித்தலைவர் புளட்டின் சீட்டை பயன்படுத்தியே வென்றார். 

எனவே மாகாணசபை உறுப்பினர் பாராளுமன்ற தேர்தலில் நிற்பதும் ஒரு கட்சி உறுப்பினர் இன்னொரு கட்சியின் சீட்டை பயன்படுத்தியதும் சிலருக்கு தெரியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் போட்டியிட அனுமதிக்குமாறு அனந்தி எம்மிடம் இதுவரை கோரவில்லை; மாவை

தமிழரசுக் கட்சி மற்றும்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களுக்கு புறம்பாகவே செயற்பட்டு வரும் திருமதி அனந்தி சசிதரன் வேட்பாளராக தன்னை அனுமதிக்கவில்லை என  ஊடகங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானவை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
 
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழரசுக் கட்சி தன்னை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றும் தன்னுடைய வாய்ப்பினை மாவை சேனாதிராசா நிறுத்திவிட்டார் என்று கூறிவருகின்றார்.
 
இது குறித்து தமிழரசுக் கட்சியின்  தலைவர்  மாவை சேனாதிராசாவுடன் உதயன்  இணையத்தள செய்திப்பிரிவு தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனைத்  தெரிவித்தார்.
 
அவர் மேலும்  தெரிவிக்கையில்,
 
திருமதி . அனந்தி சசிதரன்  தன்னை தேர்தலில் வேட்பாளராக நியமிக்குமாறு தமிழரசுக் கட்சியிடம் இதுவரை கோரவில்லை.
 
கோரிக்கை கூட விடுக்காது தனக்கு இடம்தரவில்லை என்று கூறுவது அப்பட்டமான பொய். அத்துடன்  தமிழ் தேசியக் கூட்டமைப்பு , தமிழரசுக் கட்சி மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர்கள்  தொடர்பிலும்  ஊடகங்களிலும் , வெளிநாடுகளிலும் அவமரியாதையாகவே பேசி வருகின்றார்.
 
அத்துடன்  எமது தீர்மானங்களுக்கு எதிர்மாறாகவே செயற்பட்டு வருகின்றார். இந்த நிலையில் நாம் அவருக்கு ஒழுக்காற்று கடிதத்தினை அனுப்பிவைத்துள்ளோம். ஆனால் அவருக்கு இன்னும்  ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லை.
 
அவ்வாறு நாங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தால் வடக்கு மாகாண சபையின்  உறுப்பினர் பதவியும் இல்லாது போயிருக்கும். மனிதாபிமான எண்ணத்திலேயே நாம் இதுவரை பொறுமை காக்கின்றோம்.
 
இந்தநிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியில் சென்று வேட்பாளருக்கு அனுமதிக்குமாறு கோரியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளமுடியாது.  மாகாண சபைக்கான வேட்பாளருக்கான அனுமதியை அனந்திக்கு நான்தான் கொடுத்தேன்.
 
எனினும் அவர் எமது கட்சிக்கு ஆதரவாக செயற்படவில்லை. கடந்த காலத்தில் காணாமல் போனவர்களது போராட்டத்தில் கூட சுமந்திரனின்  உருவப்பொம்மையும்  அவரது வாகனத்தில் இருந்தே எடுக்கப்பட்டு எரிக்கப்பட்டது.
 
அதனைவிட வெளிநாடுகளில் சென்று அங்குள்ளவர்களுடன் எம்மைப்பற்றி தெரிவிக்கும் கருத்துக்கள் தொடர்பிலும் ஆதாரம் எம்மிடம் உள்ளது.  
 
அனந்தியை விட நேர்மையிலும்  கட்டுப்பாடுடனும்  செயற்படக்கூடிய போரில் பாதிக்கப்பட்ட 17 பேருக்கு மேற்பட்ட பெண்கள் தேர்தலில்  போட்டியிடுவதற்கு கோரியுள்ளனர் என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.
- See more at: http://onlineuthayan.com

உந்த 17 பெண்களும் வடமாகாண சபை தேர்தலில் எங்கையிருந்தவை? 

பெரிய இதெண்டா.........சித்தர் வெல்லுவாரொ பாப்பம்..............................

சந்திரன் Vs ..... 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.