Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பூர் காணி விடுவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் விஷேட வர்ததமானி அறிவித்தல் மூலம் விடுவிக்கப்பட்ட காணிகள் மீது தொடரப்பட்ட வழக்கினை இலங்கை உயர்நீதிமன்றம் சட்டமாதிபரின் வாதத்தினை தொடர்ந்து இரத்துச் செய்துள்ளது. இதன் மூலம் மக்கள் மீண்டும் குடியேறலாம். - தகவல் sooriyanfm காலை செய்திகள்.

காலையில் மனம் நிறைந்த செய்திகள்!!

Edited by புலிக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தமது சொந்த இடங்களுக்கு எவ்விதத் தடையுமின்றி இனித் தமது நிலங்களில் குடியேற்க்கொள்ளலாம். இது சம்பந்தனுக்குக் கிடைத்த வெற்றி!  உயர்நீதிமன்றம் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளும் இந்நேரத்தில் வழங்கிய இத்தீர்ப்பு பலருக்கு உவப்பாக இருக்கப்போவதில்லை. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அய்யோ.............. முடியலசாமி உங்கள் சம்பந்தர் விசுவாசம்!!!! 

சம்பூர் மக்களுக்கு கிடைத்த வெற்றி!!!!! சம்பூர் வாழ் மக்களிடம் ஒருமுறை நேரில் வந்து சொல்லி பாருங்கள் சம்பந்தருக்கு கிடைத்த வெற்றி என்று அப்ப தெரியும் உங்களுக்கு...

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்களைப் பற்றி எங்களுக்கு நீங்கள் சொல்லித் தரவேண்டாம்! சம்பூர் பக்கம் போய் இருபீங்களோ தெரியாது. இது சம்பந்தனுக்குக் கிடைத்த வெற்றி தான்.

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் மக்களின் போராட்டத்துக்கும், புலம் பெயர் மக்களின் அழுத்தத்துக்கும்... கிடைத்த வெற்றி.
இதில்... சம்பந்தன், குளிர் காய நினைப்பது.. சுத்த முள்ளமாரித்தனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலிசார் உங்களின் சம்சுங் கோஸ்டிக்கு முக்கியமான பரப்புரையாளர் Gari அவர்களுக்கு நான் சொல்லியிருக்கின்றேன் தெளிவாக பழைய சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகளில். நான் இருப்பது திருமலையில் அதனால் உங்கள் அரசியல் அருவடி தலைகளின் தில்லனா கூத்துக்களை என்னால் தெளிவாக சொல்ல முடியும்!!

  • கருத்துக்கள உறவுகள்

தவறாகச் சொல்லிவிட்டாலும் அதனைச் சரியென்று வாதிக்க முயற்சி செய்பவன் சிறந்த அரசியல்வாதி ஆகிவிடுகிறான். :):lol:

ஆட்சியாளர்கள் தம்மால் அடக்கி ஒடுக்கப்படும் இனத்தின் பிரதிநிதிகளாக யார் வரவேண்டும் என விரும்புகிறார்களோ அவர்களுக்குச் சார்பாக தேர்தல் காலங்களில் மறைமுகமாகச் சில காய்நகர்த்தல்களில் ஈடுபடுவார்கள், இவர்களுக்கிடையிலிருக்கும் இந்த உறவுப் பொறிமுறை விளங்காத அப்பாவிகள் நாம்.

ஏனோ தெரியவில்லை வேட்புமனு தாக்கல் அன்று வெளிவந்த இந்த்த் தீர்ப்பு என்னுள் பல கேள்விகளை எழுப்பிச் செல்கிறது......

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களத்தில் எத்தனையோ தடவை எழுதியாச்சு சம்பூர் காணி விவகாரம் சம்பூர் மக்களின் வெற்றி. இங்கு வரைபடத்தில் சம்பூரை பார்த்தவர்கள் எல்லாம் கதை சொல்ல வெளிக்கிடினம். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் களத்தில் எத்தனையோ தடவை எழுதியாச்சு சம்பூர் காணி விவகாரம் சம்பூர் மக்களின் வெற்றி. இங்கு வரைபடத்தில் சம்பூரை பார்த்தவர்கள் எல்லாம் கதை சொல்ல வெளிக்கிடினம். 

நீங்க வேற....

சும்மாவே மெல்லுவம்

அவல் கிடைத்தால்...

அதுவும் தேர்தல் நேரத்தில்.....

அட விடுங்க சார் சம் சும் மோகத்தில் வாலி உளறிவிட்டார் ... அந்த மக்கள் தாங்களே போராடி விடுவித்த நிலம் அது ... இந்த கூத்தாடிகளின் தொல்லை தாங்க முடியல ... சம்பந்தனை குறட்டை விட சொல்லுங்கோ ....முள்ளமாரி 

மக்களை காலத்திறகு ஏற்றவகையில் ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெறுவது சம் பந்தனுக்கு கைவந்த கலை. 1977 ல் தனித்தமிழீழம் என்று இளைஞர்களின் இரத்தத்தில் பொட்டு வைத்து வெற்றி பெற்று பாராளுமன்ற கதிரையை சூடாக்கிய சம்பந்தன் இன்று இரத்த பொட்டு வெற்றியை தராது என்பதை தெரிந்து சந்தனம் பொட்டுடன் தமிழ் மக்களை ஏமாற்ற புறப்பட்டுள்ளார். பாடையில் போகும் வரை மக்களை ஏமாற்றுவது தமழரசு கிழடுகளின் கலை. 

  • கருத்துக்கள உறவுகள்
சொந்த மண்ணில் சம்பூர் மக்கள் உடனே மீளக்குடியமர முடியும் : தடை மனுவைத் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
news

சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வர்களது சொந்த மண்ணில் உடனடியாக மீளக்குடியமர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் ஆகியோரினால் சம்பூர் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

சம்ப+ரில் முதலீட்டுச் சபைக்கு வழங்கிய காணி இரத்துச் செய்து,ஜனாதிபதி மைத்திரிபாலவினால் வர்த்தமானிப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக தனியார் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து ஜனாதிபதியின் வரத்தமானி அறிவித்தல் சரியானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மகிந்த ஆட்சிக் காலத்தில் போர் காரணமாக 2006ஆம் ஆண்டு சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர்.

போர் முடிந்த பின்னரும்,ஆயிரத்து 55 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் மீள்குடியமர்வுக்காக அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.அதில் 237 ஏக்கரைக் கடற்படையினர் தமது பயிற்சி முகாமுக்காகக் கைப்பற்றி வைத்திருந்தனர்.எஞ்சிய 818 ஏக்கரும்,முதலீட்டுச் சபையினால் 2012ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மைத்திரிபால தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பின்னர்,சம்பூர் மக்களின் நிலம் விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமையக் கடற்படையினர் கைப்பற்றிய 237 ஏக்கர் நிலப் பரப்புக்கு பதிலாக அவர்களுக்கு வேறு இடத்தில் பயிற்சி முகாம் அமைக்க புதிய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதனையடுத்து குறித்த நிலப் பரப்பிலிருந்து கடற்படையினர் வெளியேறத் தொடங்கியிருந்தனர்.

818 ஏக்கர் காணி முதலீட்டுச் சபைக்கு வழங்கியதை இரத்துச் செய்து ஜனாதிபதி மைத்திரிபால கடந்த மே மாதம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து,சம்பூர் மக்கள் குறித்த காணிகளில் மீளக்குடியமர முயற்சித்திருந்தனர்.

திடீரென தனியார் நிறுவனம் ஒன்று முதலீட்டுச் சபையின் குறித்த காணியில் முதலீடு செய்துள்ளதாகவும்,எனவே ஜனாதிபதியின் வர்த்தமானி  அறிவித்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும்,மக்கள் மீள்குடியமர்வுக்கு அனுமதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

குறித்த வழக்கில் உடனடியாக இடைக்காலத் தடை வழங்கப்பட்டிருந்தது.பின்னர்,இடைக்காலத் தடை நீக்கப்பட்டிருந்தாலும் வழக்குத் தொடர்ந்து இடம்பெற்றது.

குறித்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்;கப்பட்டது.அதன் பிரகாரம் தனியார் நிறுவனத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன்மூலம் சம்பூர் மக்கள் குறித்த காணியில் குடியமர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுமந்திரன்  தெரிவித்தார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=568374140611373458#sthash.sm6NksdU.dpuf
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன துன்பம் அப்பா: கொஞ்ச காலத்துக்கு முன்பு சுமந்திரன் சொன்னார், சம்பூரில் இவ்வளவு ஏக்கர் விட்டதாக.. இப்ப செய்தி வருகின்றன, கோட் ஓடர் வந்திருக்கிறது சம்பூர் நிலத்தை விடச்சொல்லி என்று. 

சனம் அதுக்கும் சம்சுங் தான் இதுக்கும் சம்சுங் தான் என்றால் யாருடன்/எங்கே தலையை மோதுவது? 
  • கருத்துக்கள உறவுகள்

இது மக்களின் மேல் அக்கறை இருப்பதுபோன்று நடிப்பவர்களின் தோலுரித்துக் காட்டும் நேரம். மேலே புலி சாரைத் தவிர கருத்து எழுதியவர்களில் எவரும் அம்மக்கள் மீண்டும் குடியேற கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடையவில்லை.  இது இவர்களின் குள்ளநரித் தனத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. இது தான் எனக்கு வேண்டும். மகிழ்வதற்கு மாறாக அனைவரும் பதறிப் போனார்கள். எங்கே புகழ் சம்பந்தனுக்குப் போய்விடுமோ என்று. மீண்டும் சொல்கிறேன் இது சம்பந்தனுக்குக் கிடைத்த பெருவெற்றி. நுனிப் புல் மேய்பவர்கள் வடிவாகப் பார்க்கத் தவறி விட்டாத்கள் இது சம்பந்தனால் கிடைத்த வெற்றி என்று நான் எழுதவில்லை, மாறாக சம்பந்தனுக்குக் கிடைத்த வெற்றி என்றே எழுதினேன்.  இந்த தேர்தலில் சம்பந்தன் பெருவெற்றி அடைவார். போலி தேசியவாதிகள்தான் பாவம். வேடம் கலைந்து போச்சு

புலி சார் நான் திருமலையில் 3 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து இருக்கின்றேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாலி சார் திருமலை மாவட்டத்தில் 15 வருடங்களுக்கு மேலாக மூவின மக்களுடன் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுகின்றேன். ஆதலால் மக்களின் மனவோட்டங்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ்மக்களுக்கான வலுவான மாற்று அரசியல் தலைமை ஒன்று இருக்குமானால் சம்பந்தர் கோஷ்டி எப்பவோ காலி!! மக்களுக்கு வேறு வழி இல்லை ஆகவே சம்சும் கோஷ்டிக்குதான் வாக்களிப்பார்கள் ஏன் நான் கூட தமிழ்தேசிய கூட்டமைப்புக்குதான் வாக்களிப்பேன் ஆனால் மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு தாம் நினைத்ததை செய்வதுதான் மடமைத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குரல் சொல்வதுதான் உண்மையான அரசியல் நிலை.

மகிந்தர் சொன்னமாதிரி தெரியாத பிசாசைவிட தெரிந்த பேய் பரவாயில்லை என்ற நிலைதான் தமிழர்களுக்கு.

வாக்கு அரசியலுக்காக இரட்டைத்தனமாக நடக்காமல் கூட்டமைப்பு தமக்குள்ளேயே ஜனநாயக முறைப்படி வெளிப்படையாக விவாதித்து தமது நீண்டகால, குறுகிய கால அரசியல் நோக்கங்களை தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தினால் அவர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் நடக்கவுள்ளதோ நெல்லிக்காய் மூட்டையில் இருக்கும் ஒன்று இரண்டுபேர் இரகசியமாக தேர்தல் விஞ்ஞாபானத்தைத் தயாரிப்பார்கள். அதனை மற்றவர்கள் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்வார்கள். அதிருப்தியை வெளிப்படையாகக் காட்டினால் அவர்களுக்கும் பாராளுமன்றக் கதிரை கிடைக்காமல் போகலாம். சூத்திரக் கிணற்றை சுற்றும் நிலைதான் தொடர்ந்தும் நீடிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சார் திருமலை மாவட்டத்தில் 15 வருடங்களுக்கு மேலாக மூவின மக்களுடன் மனிதாபிமான பணிகளில் ஈடுபடுகின்றேன். ஆதலால் மக்களின் மனவோட்டங்கள் எனக்கு நன்கு தெரியும். தமிழ்மக்களுக்கான வலுவான மாற்று அரசியல் தலைமை ஒன்று இருக்குமானால் சம்பந்தர் கோஷ்டி எப்பவோ காலி!! மக்களுக்கு வேறு வழி இல்லை ஆகவே சம்சும் கோஷ்டிக்குதான் வாக்களிப்பார்கள் ஏன் நான் கூட தமிழ்தேசிய கூட்டமைப்புக்குதான் வாக்களிப்பேன் ஆனால் மக்கள் வாக்களிக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டு தாம் நினைத்ததை செய்வதுதான் மடமைத்தனம்.

சிறியதொரு பதிவாக இருந்தாலும் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி புலி சார். 

நான் ஒரு கூட்டமைப்பு ஆதரவாளனும் கிடையாது. எனக்கு தேர்தலில் யார் வந்தாலும் கவலையில்லை. எனது முக்கிய இலக்கு புலம்பெயர் புலிவால்களும் விசிலடிச்சான் குஞ்சுகளும்தான்.  முன்பு செய்த அதேவேலையைத் தான் இந்த கோஸ்டி செய்து கொண்டு இருக்குது. அவர்களுக்கு மக்களைப்பற்றிக் கவலை இல்லை. தங்கள் வருமானம், புகழ் இருப்புக்காக எதையும் செய்வார்கள். இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில நல்ல உள்ளங்களும் இல்லாமல் இல்லை. இன்னும் சிலர் தாங்கள் தான் புலிகள் அமைப்பையே கொண்டு நடத்தியதாக ரீல் விட்டுக்கொண்டு திரிகிறார்கள். இலங்கை இனப் பிரச்சினையைப் பொறுத்த மட்டில் புலிகள் இனி அந்தச் சமன்பாட்டில் இல்லை. எவனாவது புலி எண்டுவருவானாக இருந்தால் அவன் பிழைப்புவாதி என்பதுதான் எனது கருத்து. இங்கு புலம்பெயர் சாதாரண பொதுமக்களிடமிருந்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான பொருளாதார உதவிகள் கிடைக்கப் பெறுவதில் நந்திபோல செயற்படுபவர்கள் இந்தப் புலிவால்கள். புலிவால்கள் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பிரிவே தவிர முற்றுமுழு புலம்பெயர் தமிழ் சமூகமும் புலிவால்கள் அல்ல என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் புலிவால்களும் விசில் குஞ்சுகளும் அகற்றப்படும்வரை இடையூறுகள் வந்துகொண்டே இருக்கும். மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் இவர்கள்  தாங்களாகவே ஒதுங்கி இருப்பார்கள். தலைமை தாங்க வேண்டிய பல நல்ல அரசியல்வாதிகள் இவர்கள் வலையில் சிக்குப்பட்டு இன்று அரசியல் அகதிகளாக இருப்பதே இதற்கு சிறந்த உதாரணம்.  ஈழத்தில் பலப்படுத்தவேண்டிய ஒரே அமைப்பு கூட்டமைப்பே தவிர வேறொன்றில்லை. அதை விடுத்து புலத்தில் முன்னாள் புலிகளுக்கு பலர் தாம் உரிமை கோருவதைப்போன்ற நிலையை ஈழத்திலும் உருவாக்க முனைபவர்களை நாம் இனம் கண்டு ஒதுக்கவேண்டும். 

Edited by வாலி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது மக்களின் மேல் அக்கறை இருப்பதுபோன்று நடிப்பவர்களின் தோலுரித்துக் காட்டும் நேரம். மேலே புலி சாரைத் தவிர கருத்து எழுதியவர்களில் எவரும் அம்மக்கள் மீண்டும் குடியேற கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அடையவில்லை.  இது இவர்களின் குள்ளநரித் தனத்தை வெளிக்காட்டி நிற்கின்றது. இது தான் எனக்கு வேண்டும். மகிழ்வதற்கு மாறாக அனைவரும் பதறிப் போனார்கள். எங்கே புகழ் சம்பந்தனுக்குப் போய்விடுமோ என்று. மீண்டும் சொல்கிறேன் இது சம்பந்தனுக்குக் கிடைத்த பெருவெற்றி. நுனிப் புல் மேய்பவர்கள் வடிவாகப் பார்க்கத் தவறி விட்டாத்கள் இது சம்பந்தனால் கிடைத்த வெற்றி என்று நான் எழுதவில்லை, மாறாக சம்பந்தனுக்குக் கிடைத்த வெற்றி என்றே எழுதினேன்.  இந்த தேர்தலில் சம்பந்தன் பெருவெற்றி அடைவார். போலி தேசியவாதிகள்தான் பாவம். வேடம் கலைந்து போச்சு

Hidden Content

நீங்கள் இதை நினைத்து புளகாங்கிதம் அடைவது போல நான் இதில் பதறி போகவில்லை . இதை பற்றிய செய்திகளை, ஒரு 2 மாதத்திற்கு முன்பு வந்த செய்திகளைத்தன்னும் பார்த்தாலும் உங்களது செயற்பாடுகள் எவ்வளவு அற்பமானவை என்று விளங்கும் . அதற்கிடையில் நாங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு வந்துவிட்டார். வாலி சார், இவர்கள் இந்தமுறை தோற்பது காலத்தில் கடமை அதை காலம் செய்யும் . 

இன்றைக்கு சொல்லுவீர்கள் கோட் ஓர்டர் போட்டுவிட்டது என்று . நாளைக்கு சொல்லுவீர்கள் ஆர்மி விடுகிறான் இல்லை என்று...பிறகு திரும்ப கோட் ....ஒவ்வொருக்காலும் விசில் அடிக்க எங்களாலே ஏலாது அப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதை நினைத்து புளகாங்கிதம் அடைவது போல நான் இதில் பதறி போகவில்லை . இதை பற்றிய செய்திகளை, ஒரு 2 மாதத்திற்கு முன்பு வந்த செய்திகளைத்தன்னும் பார்த்தாலும் உங்களது செயற்பாடுகள் எவ்வளவு அற்பமானவை என்று விளங்கும் . அதற்கிடையில் நாங்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டு வந்துவிட்டார். வாலி சார், இவர்கள் இந்தமுறை தோற்பது காலத்தில் கடமை அதை காலம் செய்யும் . 

இன்றைக்கு சொல்லுவீர்கள் கோட் ஓர்டர் போட்டுவிட்டது என்று . நாளைக்கு சொல்லுவீர்கள் ஆர்மி விடுகிறான் இல்லை என்று...பிறகு திரும்ப கோட் ....ஒவ்வொருக்காலும் விசில் அடிக்க எங்களாலே ஏலாது அப்பா..

தவறாகச் சொல்லிவிட்டாலும் அதனைச் சரியென்று வாதிக்க முயற்சி செய்பவன் சிறந்த அரசியல்வாதி ஆகிவிடுகிறான். :):lol:

ஹி ஹி ஹி?

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தீர்ப்புக்காவது தடை கிடைக்காது பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த மக்கள் நிம்மதியாக சொந்த இடத்தில் போய் குடியேற அவசியமான கட்டமைப்புக்குள் நிறுவப்படுவது உடனடி தேவை ஆகும். அதுமட்டுமன்றி இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ள பிற சம்பூர் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் சம் சும் கும்பல் அரசியல் குளிர்காய வெளிக்கிட்டால்.. கேடு அவர்களுக்குத்தான். இதில்.. சம் சும் கும்பலை விட அதிக துயரை சம்பூர் மக்களும் அதிக போராட்டத்தை அதே மக்களுமே தான் மேற்கொண்டுள்ளனர். சம் சும் கும்பல் ஏசியில் இருந்து கொண்டு சிங்கள அரசின் காசில் சுகபோகம் கண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் சம்பூர் மக்கள் அப்படியல்ல.. இப்பவும் தகரக் கொட்டகைகளில் வேகுகிறார்கள். அந்த மக்கள் தீர்மானிப்பார்கள்.. யார் சம்பூர் ஒரு பகுதி நிலவிடுவிப்புக்கு காரணம் என்பதை.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யார் குத்தினாலும் அரிசியானால் சரி. தமது சொந்த நிலங்களில் குடியேறுவதுபோல் சந்தோசம் அவர்களுக்கு வேறு இருக்கப் போவதில்லை. ஆனால் மக்களின் உண்மையான போராட்டத்தை அரசியல்வாதிகள் தமது கணக்கில் எழுத நினைப்பது சுத்த முள்ளமாரித்தனம். எது எப்படி இருந்தாலும் நீதிமன்றத்தின் இந்த முடிவு நிலையாக இருந்தால் சரி. சிங்கள இனவாதிகள் எந்த நீதிமன்ற முடிவையும் தூக்கிக் கடாசக் கூடியவர்கள். இப்போது இருப்பதுகூட நல்லாட்சி முகமூடி போட்டிருக்கும் அதே சிங்கள இனவாதம்தான்.

sampur%20%2023_zpswkdh76qo.jpg

சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும்.

- இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன், சம்பூர் மக்கள் முன்னிலையில் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் மக்களின் மீள்குடியமர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த வழக்கு நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சம்பூரிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த மண்ணில் உடனடியாக மீளக்குடியமர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினால் சம்பூர் மக்கள் சார்பில் முன்னெடுக்கப்பட்ட வழக்கிலேயே நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பூரில் முதலீட்டுச் சபைக்கு வழங்கிய காணி இரத்துச் செய்து, ஜனாதிபதி மைத்திரிபாலவினால் வர்த்தமானிப் பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு எதிராக, தனியார் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது. தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து, ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தல் சரியானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் நேற்றுமுன்தினம் வழங்கிய தீர்ப்பை சம்பூர் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நேற்று சனிக்கிழமை சம்பூரில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டம் சம்பூர் காளி கோவில் முன்றிலில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி, கி.துரைராஜசிங்கம், கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதையொட்டி சம்பூர் காளி கோவிலில் காலை 10.30 மணியளவில் விசேட பூஜைகள் நடை பெற்றன. இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

அங்கு உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்ததாவது:-

சம்பூர் காணிப் பிரச்சினை தொடர்பாக உயர் நீதிமன்றம் நேற்று வழங்கிய தீர்ப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் வெற்றிக்கான முதல் மணியாகும்.

பத்து வருடங்களாக சம்பூர் மக்கள் அனுபவித்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முடிவு கிடைத்துள்ளது - என்றார்.

தேர்தல் வேட்புமனுவை தாக்கல் செய்த பின் திருகோணமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற முதலாவது கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது

sampur234_zpsx54ao07a.jpg

sampur5_zpsebtlwjh8.jpg

sampur6_zpshpy5ki8i.jpg

Edited by Gari
திருத்தப்பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட காணியை விட்டது எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்ன கண்டுபிடிப்பு 

திருமலையில் சில வருடங்கள் வாழ்ந்தவையிலும் பார்க்க, சம்பூரில் காணி உள்ளவைக்கு தான் விளங்கும். இது எங்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 

இனி நிதியே இல்லாத புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சினூடாக மீள்குடியேற்றம் செய்யலாம் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முறை நடக்கும் தேர்தலில் மகிந்த வென்று பிரதமானால்
மகிந்தவின் வெற்றிக்கும் கூட்டமைப்பு உரிமை கோரும்.
கூட்டமைப்பின் வெற்றியின் ரகசியம் எல்லோருக்கும் தெரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.