Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் கழற்றிவிடப்பட்ட கருணா.. 'நோ' சீட்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் "கருணா"வுக்கு சீட் வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மறுத்துவிட்டது. நியமன எம்.பி.யாகவும் கருணாவை அந்த கூட்டமைப்பு நியமிக்கவில்லை. இதனால் இலங்கை அரசியலில் இருந்து கருணா முழுவதுமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா. திடீரென விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி இலங்கை அரசாங்கம் பக்கம் போனார். அவருக்கு ராஜபக்சே ஆட்சிக் காலத்தில் துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியின் துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான இறுதிப் போரில் இலங்கை ராணுவத்துக்கு உடந்தையாக இருந்தவர் கருணா. கிழக்கு மாகாணத்தில் 1990ஆம் ஆண்டு 600 சிங்கள போலீசார் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கருணா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபரின் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தில் தமக்கு போட்டியிட வாய்ப்பளிக்குமாறு கருணா, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் கோரிக்கை வைத்திருந்தார். அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் தமக்கு நியமன எம்.பி. பதவியாவது கிடைக்கும் எனவும் கருணா எதிர்பார்த்திருந்தார். ஆனால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள நியமன எம்.பி.க்கள் பட்டியலில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் அவர் கடும் ஏம்மாற்றமடைந்துள்ளார். தற்போதைய நிலையில் இலங்கை அரசியலில் இருந்து கருணா முற்று முழுதாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார்.

http://tamil.oneindia.com/news/srilanka/no-nominations-karuna-231022.html

கொலைகாரர்கள் யாராயினும் இவர்கள் எல்லோருமே அரசியலில் இருந்து தூக்கி எறியப்படவேண்டியவர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உந்த விதி இன்னும் வவுனியாவில் சித்திரவதை முகாம் நடத்தும் சித்தார்த்தனின் புளொட் கும்பலுக்கும்.. யாழ்ப்பாணத்தில் ஆயுத அரசியல் செய்யும்..ஈபிடிபி கும்பலுக்கும்.. சரிவருமோன்னு அண்ணாச்சி சொன்னா நல்லா இருக்கும். :grin::shocked:

  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் நியமன உறுப்பினராகப் பாராளுமன்றம் செல்ல இலங்கைத் தேர்தல் சட்டத்தில்  வாய்ப்பு இருக்கின்றது.

கொலைகாரர்கள் யாராயினும் என்றால் அவர்களும் அடக்கம் தான் .அவர்கள் பற்றி எப்போதோ எழுதிவிட்டேன் ஆனால்  சிலர் இப்போதும் கொலைகாரர்களின் புகழ் பாடத்தான் அவர்களும் கொலைகாரர்களே என்று வலியுறுத்தவேண்டிய தேவை வருகின்றது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசியப்பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் நியமன உறுப்பினராகப் பாராளுமன்றம் செல்ல இலங்கைத் தேர்தல் சட்டத்தில்  வாய்ப்பு இருக்கின்றது.

அங்கினயும் லிஸ்ட்ல பெயர் இல்லையாம்.

பெயர் இல்லாட்டி அடுத்த தேர்தல் வரும் வரை உள்ள போக ஏலாது.

மனோ கணேசன், தம்பியாரை நம்பி ஏமாந்த கதை தெரியும் தானே.

பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் கட்சித் தலைவர்கள் தமக்கு விரும்பியவரை தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியும். அண்மையில் கூட அமீர் அலி இவ்வாறு மகிந்த றாஜபக்சவால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குள் அவர் கட்சி மாறி சாதனை படைத்தார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்டியலில் பெயர் இல்லாவிட்டாலும் கட்சித் தலைவர்கள் தமக்கு விரும்பியவரை தேசியப் பட்டியில் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியும். அண்மையில் கூட அமீர் அலி இவ்வாறு மகிந்த றாஜபக்சவால் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஆனால் சில நாட்களுக்குள் அவர் கட்சி மாறி சாதனை படைத்தார்

இல்லை.

தேசிய பட்டியலில் பெயர் முதலிலேயே இருந்தால் மட்டுமே, அவர்கள் பாராளுமன்றம் போகலாம்.

மகிந்தர் பெயர் இல்லாத படியால் தான் இந்த தேர்தலே நடக்குது. இருந்து இருந்தால், அவர் உள்ள புகுந்து பெரும் குடைச்சல் கொடுத்து இருந்திருப்பாரே . ஜனாதிபதியாக இருந்ததால் தேவைப்பட வில்லை.

ஆமீர் அலி பெயர் இருந்தது. வேறு ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து தான் அவரை மகிந்தர் கொண்டு வந்தார்

முள்ளி வாய்க்கால் படுகொலை மற்றும் கொழும்பு மட்டக்களப்பு படு கொலைகளில் கருணாவும் ஒரு குற்றவாளி.போற்குற்ற விசாரணையில் கருணாவுக்கு எதிராக சாட்சியம் உண்டு.ஆதலால் என்னவோ இப்போதே ஒதுக்கிவிட்டார்கள் போல.....

  • கருத்துக்கள உறவுகள்

கொலைகாரர்கள் யாராயினும் என்றால் அவர்களும் அடக்கம் தான் .அவர்கள் பற்றி எப்போதோ எழுதிவிட்டேன் ஆனால்  சிலர் இப்போதும் கொலைகாரர்களின் புகழ் பாடத்தான் அவர்களும் கொலைகாரர்களே என்று வலியுறுத்தவேண்டிய தேவை வருகின்றது .

அப்படியாயின் அந்தக் கொலைகார அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் நீங்களும் ஒரு கொலைகாரன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..!! அல்லது நீங்கள் வேறை என்றுவியளா..?! :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்படியாயின் அந்தக் கொலைகார அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என்ற வகையில் நீங்களும் ஒரு கொலைகாரன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா..!! அல்லது நீங்கள் வேறை என்றுவியளா..?! :grin:

ஐயோ அண்ணையின்ரை கையும் சுத்தம் மனமும் சுத்தம் நடத்தையும் சுத்தம்.....அவரை பகிடி பண்ணாதேங்கோ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவானுக்கு அர்ஜுன் பதில் கொடுப்பார் அதில் சந்தேகம் இல்லை.
எனக்கு ஒரு கேள்வி உண்டு உங்களிடத்தில்...
உங்கள் லாஜிக்கில் பார்க்கப்போனால் ..
கருணா விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போதுதான் பாரிய கொலைகள் புரிந்தார்...அப்படியாயின் அந்த இயக்கத்தை கட்டிக்காத்த தலைவர்கள், தளபதிகள், போராளிகள், (வாழ்நாள் உறுப்பினர்) இவர்களையும் நீங்கள் அப்படிதான் பார்ப்பீர்களோ...அதாவது அவர்கள் எல்லோரும் கூட கொலைகாரர்களே...

அப்படியா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா என்ற முரளிதரன் புலிகள் அமைப்பில் இருந்த போது செய்த கொலைகளை விட சிறீலங்கா சிங்கள அரச ஒட்டுக்குழுவாகி முள்ளிவாய்க்கால் வரை செய்த படுகொலைகள் மிக அதிகம் எனலாம்.

உங்கள் கேள்விக்கான பதில்.. புலிகள் மட்டுமல்ல.. சிரியாவில்... ஈராக்கில் குண்டு போட்டுக்கொண்டிருப்பவர்களும்.. அதற்கு நோபல் பரிசு வாங்கியவர்களும் கொலைகாரர்கள் தான். வேடிக்கை என்னவென்றால்.. கொடிய கொலைகாரர்கள் சிறிய கொலைகாரர்களை பார்த்துப் பயங்கரவாதி என்பதும்.. அர்ஜூன் அண்ணன் போல தான் கொலைகாரனே அல்ல என்ற உணர்வில் பேசி உலகை ஏமாற்றி வருவதுதான்.

முரளிதரன் தண்டிக்கப்பட வேண்டிய ஒரு இனப்படுகொலை கொலைஞன். அவருக்கு ஈடானவர் தான் சித்தார்த்தன்... டக்கிளஸ். சொந்த அப்பாவி மக்களை போர்க்களத்துக்கு வெளியில் கூட கொன்று குவித்தவர்கள் இவர்கள். புலிகளை போர்த்தரப்பு என்ற வகையில்.. கொலைஞர்கள் ஆக்கின்.. இவர்களை மகா கொடுமையான கொலைஞர்கள் என்று தான் வரையறுக்க வேண்டும்.  இந்த மகா கொலைஞர்கள் எப்படி தேர்தலில் நிற்க முடிகிறது. மக்களிடம்.. அவர்களுக்கு வாக்குக் கேட்க முடிகிறது..???! :grin:

Edited by nedukkalapoovan

ஆயுத போரட்டத்திற்கு சென்ற அனைத்து போராளிகளுக்கும் போர் என்றால் தாம் உயிர்களை பலி எடுக்கவேண்டிவரும் என்று நிட்சயம் தெரியும் .அந்த உயிர்  எதிரியினதோ அல்லது  துரோகியினது ஆக இருக்கலாம்  என்றும் தெரியும் .

பிறகு இயக்கத்தில் இருந்த ஒரு சிலரை மட்டும் கொலைகாரர்கள் என்பது என்ன நியாயம் ?

அனைத்து இயக்கங்களிலும் எதிரி ,துரோகி என்போரையும்  தாண்டி பல வேண்டாத கொலைகள் நடந்தன .தலைமை ,தலைமையையும் தாண்டி பொறுப்பில் இருந்தவர்கள் ,கீழ் மட்ட போராளிகள் வரை இந்த கொலை செய்யும் உரிமையை  கையில் எடுத்தார்கள் .

இவர்கள் தான் கொலைகார்கள் என்று அனைவராலும் (அவர் சார்ந்த அமைப்பு ,மாற்று அமைப்பு ,பொதுமக்கள் )  என்று எல்லோராலும் குற்றம் சாட்டப்பட்டார்கள் .போராட போன அனைவரும் இந்த குற்றசாட்டுக்கு ஆளாகவில்லை .

ஆனால் ஒரு அமைப்பை சார்ந்தவர் அவர் வெளிநாட்டில் கூட இருந்திருக்கலாம் அந்த அமைப்பு நாட்டில் கொலை செய்தது என்றால் அவருக்கு அந்த கொலையில் பங்கு இல்லாவிட்டாலும்  உடந்தையாக இருந்தார் என்ற பங்கு இருக்கத்தான் செய்யும் .

வாசுதேவா ஒரு முறை பேசும் போது புளொட் கொலைகார கும்பல் என்று எங்களில் இருக்கும் சிலரே பேசித்திரிகின்றார்கள் .ஒரு விரல் எங்களை நோக்கி நீட்டினால் மிச்ச நாலு விரல்கள் அவர்களை நோக்கி நீட்டப்படுகின்றது என்றார் .

எதுவித கொலையிலும் பங்கு பற்றாத ,அதில் எதுவித சம்பந்தமும் இல்லாத ,அதை விரும்பாத முக்கால்வாசி போராளிகளை உங்களுடன் சேர்ந்த ஒரே காரணத்திற்காக  அவர்களையும் உங்கள் பட்டியலில் இணைத்து இலகுவாக நழுவபார்க்க வேண்டாம் -  இதை  பல போராளிகள் மத்தியில் சொன்னது சாட்சாத் இந்த அர்ஜுன் தான் .அதுதான் பல போராளிகளின்  உண்மை நிலை கூட .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இறுதியா அண்ணன் என்ன சொல்லவாறார். இத்தலைப்பில் கொலைகாரர்கள் என்ற பதத்தை எழுதினது அண்ணன் தானே. அப்ப சித்தார்த்தனும் கொலைகாரன் தானே. கருணா கொலைகாரன் அரசியலில் இருந்து தூக்கி எறியப்படனும்.. வாஸ்தவம் தான். அப்ப சித்தார்த்தன் மட்டும் எப்படி எம்பி ஆகலாம்..??! அண்ணன் அதுக்கு பதில் சொல்லேல்ல. சடைஞ்சிட்டு பேசிட்டே போறாரே...??! அண்ணன் கொலைகாரக் கும்பலின் முன்னாள் அங்கத்தவர். அந்தக் கொலைகாரக்கும்பல் கொலை செய்யும் போதும் அதில் இருந்தவர். அப்ப அண்ணனுக்கும் கொலையில் பங்கிருக்கு தானே. அப்ப அண்ணனும் கொலைகாரன் தானே. இல்லை.. பல போராளிகள் சும்மா அந்த அமைப்பில் சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தவை என்றது.. புலிகள் அமைப்புக்கும் பொருந்தலாம் தானே. அது ஏன் முடியாது..??!

என்னமோ.. தனக்கு தனக்கு என்றால் சுளகு படக்கு படக்கு என்றுமாம். :grin:

இல்லை.

தேசிய பட்டியலில் பெயர் முதலிலேயே இருந்தால் மட்டுமே, அவர்கள் பாராளுமன்றம் போகலாம்.

மகிந்தர் பெயர் இல்லாத படியால் தான் இந்த தேர்தலே நடக்குது. இருந்து இருந்தால், அவர் உள்ள புகுந்து பெரும் குடைச்சல் கொடுத்து இருந்திருப்பாரே . ஜனாதிபதியாக இருந்ததால் தேவைப்பட வில்லை.

ஆமீர் அலி பெயர் இருந்தது. வேறு ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து தான் அவரை மகிந்தர் கொண்டு வந்தார்

நான் அப்படி நினைக்கவில்லை. இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம்

முதலாவது இன்றைய தினம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு உரையை ஆற்றிய மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை  சொன்னார் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் குறிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் பதவி விலகி அந்த இடத்திற்கு மகிந்தவை பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரை பிரதமராக்கும் இரகசியத் திட்டம் குறித்து தான் அறிந்து கொண்டதனால் தான் பாராளுமன்றத்தை கலைத்ததாக. மகிந்த றாஜபக்ச தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டவர் அல்ல.

அடுத்ததாக கருணா 2008 ஒக்டோபர் 7ம் திகதி வசந்த சமரசிங்கவிற்குப் பதிலாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஆனால 2004ம் ஆண்டுத் தேர்தலின் போது அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை. 

இன்னொரு உதாரணம் 1989ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எங்கடை 'தமிழீழம் புகழ்' அமிர்தலிங்கம் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குச் சென்றார். அவர் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற வகையில் தேர்தலின் முன்னர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியலில் அவர் பெயர் இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்கட மாமனிதர் ஜோஸப் பரராஜசிங்கமும் தேசியப்பட்டியலில் இருக்கவில்லை மட்டு மாவட்டத்தில் தோல்வியுற்றபோதும், புலிவால்களின் வார்த்தையில் சொல்லப்போனால் பின்கதவால் பாராளுமன்றம் சென்றவர்!

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் நிற்காமல் பின்கதவால் சிங்களப் பாராளுமன்றம் போறவையை.. போனவையை சிலர் மாமனிதர் பரராஜசிங்கம் போன்ற தேர்தலில் பலமுறை நின்று மக்களின் குரலாக சிங்களப் பாராளுமன்றில் ஒலித்தவர்களை ஒப்பிடுவது.. இவர்களின் கருத்தியல் வறட்சியை காட்டுக்கிறது.

பரராஜசிங்கம்.. தேர்தலில் சிங்கள.. முஸ்லீம் மற்றும் ஒட்டுக்குழு.. அரச கூலிகளின் சதியால் தோற்கடிக்கப்பட்ட போது அவரின் மக்கள் குரலை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்க அவர் தேசிய பட்டியல் மூலம் அனுப்பப்பட்டார். அவரை சம் சும் கும்பலின் சுயநல அரைவேக்காட்டு அரசியல் நகர்வுகளோடு சிலர் ஒப்பிடுவது கேவலமான அரசியல் வக்குரோத்தில் அவர்கள் இருப்பதை இனங்காட்டுகிறது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

புலியாக இருந்த கருணா அம்மானுக்கு நிறையத் திறமைகள் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அவர் தனது திறமைகளைப் பாவித்து இலங்கை அரசியலில் சுழியோடுவார்.

ஆயுத போரட்டத்திற்கு சென்ற அனைத்து போராளிகளுக்கும் போர் என்றால் தாம் உயிர்களை பலி எடுக்கவேண்டிவரும் என்று நிட்சயம் தெரியும் .அந்த உயிர்  எதிரியினதோ அல்லது  துரோகியினது ஆக இருக்கலாம்  என்றும் தெரியும் .

பிறகு இயக்கத்தில் இருந்த ஒரு சிலரை மட்டும் கொலைகாரர்கள் என்பது என்ன நியாயம் ?

அனைத்து இயக்கங்களிலும் எதிரி ,துரோகி என்போரையும்  தாண்டி பல வேண்டாத கொலைகள் நடந்தன .தலைமை ,தலைமையையும் தாண்டி பொறுப்பில் இருந்தவர்கள் ,கீழ் மட்ட போராளிகள் வரை இந்த கொலை செய்யும் உரிமையை  கையில் எடுத்தார்கள் .

இவர்கள் தான் கொலைகார்கள் என்று அனைவராலும் (அவர் சார்ந்த அமைப்பு ,மாற்று அமைப்பு ,பொதுமக்கள் )  என்று எல்லோராலும் குற்றம் சாட்டப்பட்டார்கள் .போராட போன அனைவரும் இந்த குற்றசாட்டுக்கு ஆளாகவில்லை .

ஆனால் ஒரு அமைப்பை சார்ந்தவர் அவர் வெளிநாட்டில் கூட இருந்திருக்கலாம் அந்த அமைப்பு நாட்டில் கொலை செய்தது என்றால் அவருக்கு அந்த கொலையில் பங்கு இல்லாவிட்டாலும்  உடந்தையாக இருந்தார் என்ற பங்கு இருக்கத்தான் செய்யும் .

வாசுதேவா ஒரு முறை பேசும் போது புளொட் கொலைகார கும்பல் என்று எங்களில் இருக்கும் சிலரே பேசித்திரிகின்றார்கள் .ஒரு விரல் எங்களை நோக்கி நீட்டினால் மிச்ச நாலு விரல்கள் அவர்களை நோக்கி நீட்டப்படுகின்றது என்றார் .

எதுவித கொலையிலும் பங்கு பற்றாத ,அதில் எதுவித சம்பந்தமும் இல்லாத ,அதை விரும்பாத முக்கால்வாசி போராளிகளை உங்களுடன் சேர்ந்த ஒரே காரணத்திற்காக  அவர்களையும் உங்கள் பட்டியலில் இணைத்து இலகுவாக நழுவபார்க்க வேண்டாம் -  இதை  பல போராளிகள் மத்தியில் சொன்னது சாட்சாத் இந்த அர்ஜுன் தான் .அதுதான் பல போராளிகளின்  உண்மை நிலை கூட .

அண்ணன் பல திரிகளிலும் மறுதலித்த விடயத்தை தானே அழகாக ஒப்புக்கொண்டுள்ளார் 

நெடுக்ஸ் அண்ணாவின் கேள்விக்கு இப்படி பலன் கிடைக்கும் என்று எதிர்பார்கவில்லை 

எல்லாம் அவனவனுக்கு வரும்போதுதான் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

புலியாக இருந்த கருணா அம்மானுக்கு நிறையத் திறமைகள் உள்ளதை யாரும் மறுக்கமுடியாது. அவர் தனது திறமைகளைப் பாவித்து இலங்கை அரசியலில் சுழியோடுவார்.

கருணா தேசியத் தலைவரின் பாசறையில் இருக்கும் வரை தான் பெயரும் புகழுமாக இருந்தார்.

பூவோடு சேரும் போது தான் நாரும் புகழடைகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்படி நினைக்கவில்லை. இதற்கு இரண்டு உதாரணங்களை சொல்லலாம்

முதலாவது இன்றைய தினம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்த ஒரு உரையை ஆற்றிய மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை  சொன்னார் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாள் குறிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்  தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் பதவி விலகி அந்த இடத்திற்கு மகிந்தவை பாராளுமன்ற உறுப்பினராக்கி அவரை பிரதமராக்கும் இரகசியத் திட்டம் குறித்து தான் அறிந்து கொண்டதனால் தான் பாராளுமன்றத்தை கலைத்ததாக. மகிந்த றாஜபக்ச தேசியப் பட்டியலில் பெயரிடப்பட்டவர் அல்ல.

அடுத்ததாக கருணா 2008 ஒக்டோபர் 7ம் திகதி வசந்த சமரசிங்கவிற்குப் பதிலாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஆனால 2004ம் ஆண்டுத் தேர்தலின் போது அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை. 

இன்னொரு உதாரணம் 1989ம் ஆண்டுத் தேர்தலில் மட்டக்களப்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த எங்கடை 'தமிழீழம் புகழ்' அமிர்தலிங்கம் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்துக்குச் சென்றார். அவர் தேர்தலில் போட்டியிட்டவர் என்ற வகையில் தேர்தலின் முன்னர் தேர்தல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியலில் அவர் பெயர் இருக்கவில்லை.

How the National List works:
Political parties receive their National list allocation based on the proportion of votes received throughout the nation, not just in one district (hence the term “National List”). A Political party must announce its National list candidate prior to an election, and is expected to make its appointments from it. Unlike in the case of a district MPs, where the voter indicates their top three preferences, there is no opportunity to indicate a preference for National List MPs. That is why they are considered INDIRECTLY elected, through the vote for the party.

தேசியப் பட்டியலில் ஒரு கட்சி ஒருவரையும் போடலாம். மொத்தமான தேசிய பட்டியல் 29 க்கான பெயர்களையும் கொடுக்கலாம்.

ஆனால் விழுந்த வாக்குகளின் விகிதப் படியே அவர்களுக்கு வழங்கப் படும் மேலதிக உறுப்பினர்கள் பெயர்கள் அந்த சமர்பிக்கப் பட்ட  பட்டியலில் இருந்தே 'சட்ட ரீதியாக' அறிவிக்கப் படும். இந்த வகையில் 2010 தேர்தலில் 17 பேருக்கு மகிந்த கட்சிக்கு கிடைத்தது.
 
எனினும் ஒரு கட்சி பெரிதாக நம்பிக்கை இல்லாமல் 15 பெயர்களை மட்டும் கொடுத்து, 17 உறுப்பினர்கள் கிடைக்கப் பெறின் , மேலதிக 2 பெயர்களை பின்னர் கொடுக்கலாம். 

உதாரணமாக தமிழ் கூட்டமைப்பு 25 பெயர்களுடன் சமர்பித்தால், அது காமடி தானே? ஆனால் ஒன்றை மட்டும் கொடுத்து, இரண்டு அல்லது மூன்று கிடைத்தால், சம்பந்தர் விரும்பின ஒருத்தர்  MP ஆகலாம்.

அமிர்தலிங்கம் உறுப்பினர் ஆகியதன் காரணம், தேசிய பட்டியலில் கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் பட்டியலில் ஒன்றுக்கு மேல் போடவில்லை. எனினும் மேலதிகமாக ஒன்று கிடைத்த போது , அமிர் அதை எடுத்துக் கொண்டார். 

அடுத்ததாக கருணா 2008 ஒக்டோபர் 7ம் திகதி வசந்த சமரசிங்கவிற்குப் பதிலாக தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார் ஆனால 2004ம் ஆண்டுத் தேர்தலின் போது அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றிருக்கவில்லை.

அதே கணக்கு தான்.

லிஸ்டில் கொடுத்ததிலும் கூடுதலாக கிடைத்தது. மேலதிகமாக கிடைத்தது பங்காளிக் கட்சிக்கு கொடுக்கப் பட்டது.. அவர் ராஜினாமா செய்ய, கருணா பெயர் கொடுக்கப் பட்டது.

அதேபோல் தான் மகிந்த கதையும். மகிந்தவுக்காக பலர் சமர்பிக்கப் பட்ட தேசியப் பட்டியலில் இருந்து ராஜினாமா செய்தால், புதிய உறுப்பினர்கள் பெயர் சமர்பிக்கப் பட வேண்டிய நிலையில் மகிந்த பூந்திருப்பார் என்பதே மைத்திரி சொன்னது. மைத்திரி கட்சி தலைவராயினும், பங்காளிக் கட்சி தலைமை மூலம் வரும் திட்டம் இருந்திருக்கலாம்.   

Edited by Nathamuni

தேர்தலில் நிற்காமல் பின்கதவால் சிங்களப் பாராளுமன்றம் போறவையை.. போனவையை சிலர் மாமனிதர் பரராஜசிங்கம் போன்ற தேர்தலில் பலமுறை நின்று மக்களின் குரலாக சிங்களப் பாராளுமன்றில் ஒலித்தவர்களை ஒப்பிடுவது.. இவர்களின் கருத்தியல் வறட்சியை காட்டுக்கிறது.

பரராஜசிங்கம்.. தேர்தலில் சிங்கள.. முஸ்லீம் மற்றும் ஒட்டுக்குழு.. அரச கூலிகளின் சதியால் தோற்கடிக்கப்பட்ட போது அவரின் மக்கள் குரலை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்க அவர் தேசிய பட்டியல் மூலம் அனுப்பப்பட்டார். அவரை சம் சும் கும்பலின் சுயநல அரைவேக்காட்டு அரசியல் நகர்வுகளோடு சிலர் ஒப்பிடுவது கேவலமான அரசியல் வக்குரோத்தில் அவர்கள் இருப்பதை இனங்காட்டுகிறது. :grin:

பல முறை வென்றாலும்  ஒரு முறை தோற்றது தோற்றதுதான் .இது வேறு பலருக்கும்  பொருந்தும் அமிர் உட்பட .

அவர் மாமனிதர் ஆனபடியால்  விதிவிலக்கு என்பது வெறும் மொக்கை பார்வை .

ஏற்கனவே அனுப்பி வைத்த பட்டியலில் இருந்து தெரிவு செய்வது எதிர்பார்க்கப்படுகிறது என்ற சொற்பதமே பயன்படுத்தப்படுகிறது. கட்டாயம் அல்ல. 

ஜேவிபி கருணாவின் நியமனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்தமைக்கு காரணம் வேறு, அந்த பொதுத் தேர்தலில் ஜேவிபி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் ,இணைந்தே தேர்தலில் போட்டியிட்டனர். அதன்படி இருகட்சிகளும் இணைந்தே தேசியப் பட்டியலைச் சமர்பித்திருந்தனர். அவ்வாறு ஜேவிபியின் பாராளுமன்ற உறுப்பினரான வசந்த சமரசிங்க மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக பதவி விலகிய போது அந்த இடத்திற்கு ஜெவிபியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்காமல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினைச் சேர்ந்த (சேர்த்துக் கொள்ளப்பட்ட) கருணாவை மகிந்தர் நியமித்தார். இந்த ஆசனம் ஜெவிபியைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜெவிபியின் கோரிக்கையாக இருந்தது.

தேசியப் பட்டியலில் ஒருவரை மட்டும் பெயர் குறிப்பிட முடியுமா என்பது சரியாகத் தெரியவில்லை. அப்படி ஒரு இடமிரு;நதால் கட்சிகள் அவசரப்பட்டு 29 உறுப்பினர்களைக் கொண்ட பட்டியலைச் சமர்பிக்காது. மாறாக ஒருவரை அறிவித்து விட்டு பிறகு தமது விருப்பப்டி உறுப்பினர்களை நியமித்துக் கொள்ளலாம் அல்லவா?

ஜோசப் பரராஜசிங்கத்தின் நியமனத்தின் போதும் அவர் தமீழ் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் இருந்து நியமிக்கப்பட்டார். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.