Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும்

Featured Replies

புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது.

இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை.

எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இவை எல்லாவற்றிக்கும் பழி தீர்க்கவே நான் அரசாங்கத்துடன் இணைந்து புலிகளை ஒழிக்கப்பாடுபட்டேன். எனது முக்கிய குறிக்கோள் புலிகளின் தலைமையை மட்டும் அழிப்பதே. ஆனால் அத் தலைமையை அழிக்க முயலும் போது பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளையும் தன்னுடன் சேர்த்து அந்தத் தலைமை அழித்துவிட்டது.

சரணடைந்த போராளிகளைக் கொல்ல வேண்டாமென்றும் அவர்கள் அப்பாவிகள் என்றும் நான் மகிந்தவிடமும் கோத்தாவிடமும் கெஞ்சியிருந்தேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிடிபட்ட புலித்தலைமையை அழித்தது பெரிதல்ல. ஆனால் பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் நடந்த சம்பவம்தான் எனக்குப் பொறுக்க முடியாது இருந்தது. பிரபாகரினின் இளைய மகனைக் கொல்ல வேண்டாம் என்று நான் கூறிய போதும் அவனும் கொல்லப்பட்டுவிட்டான்.

அரசாங்கம் புலிகளுடன் செய்த யுத்தத்தில் அரசாங்கம் வெல்வதற்கு முக்கிய காரணமாக நானே இருந்தேன். யுத்தம் முடிந்து சில வாரங்களில் கோத்தபாய எனக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். ‘உமக்கு சிங்கள மக்கள் கடன் பட்டிருக்கின்றார்கள்‘ எனவும் தெரிவித்தார்.

ஆனால் இன்று என்னை சப்பித் துப்பிவிட்டார்கள். பொதுசனஐக்கிய முன்னணியில் எனக்கு இடம் தரவில்லை. கொலைகாரர்களுக்கு இடம் கொடுத்துள்ளார்கள். மட்டக்களப்பில் அக் கட்சிசார்பில் போட்டியிடுபவர்கள் பொதுமக்களைக் கொன்ற கொலைகாரர்கள். இதற்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும்‘ இவ்வாறு கருனா தெரிவித்துள்ளார்.

கருனாவுடன் நட்பாக இருந்த முன்னாள் சிங்கள அமைச்சருக்கு கருனா இவ்வாறு கவலையுடன் தெரிவித்ததாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
karuna-praba-and-karuna-mara

- See more at: http://www.canadamirror.com/canada/46347.html#sthash.7ZV1DAzM.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் எதுவித உயிராபத்துமின்றி இருக்கின்றார் போலிருக்கு.  மகிந்த, கோத்தபாய போன்றோர் இனிமேல் அதிகாரம் மிக்கவர்களாக இலங்கையில் வரமுடியாது என்பதை அம்மான் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளார் என்பதால் மறைமுகமாக சவால் விடுகின்றார்.

உண்மைகளைச் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி தனது இருப்பை பேணவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார். இந்த ரிஸ்க் எப்படி முடியுமோ தெரியவில்லை.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படியோ பல பதுக்கி வைத்த உண்மைகள் வெளிவரும் என நம்பலாம்.  அவை புலம்பெயர் வாசிகளுக்கு மகிழ்ச்சி தரப்போவதில்லை.  பல பாரிய பிம்பங்கள் உடையலாம். கருணா அம்மான் பிள்ளையானை சொல்ல பிள்ளையான் அம்மானைச் சொல்ல அம்மான் கோத்தா மகிந்தவைச் சொல்ல மகிந்த கோத்தா அம்மானைச் சொல்ல ஒட்டு மொத்தமா பதுங்கி இருந்த முயல் குட்டிகள் மெல்ல மெல்ல வெளில குதிக்கும். கடைசியில் யார் யாரெல்லாம் சரணடைந்தார்கள் என வெளிவரும் காலம் தொலைவில் இல்லை!

  • தொடங்கியவர்

கருணா அம்மான் எதுவித உயிராபத்துமின்றி இருக்கின்றார் போலிருக்கு.  மகிந்த, கோத்தபாய போன்றோர் இனிமேல் அதிகாரம் மிக்கவர்களாக இலங்கையில் வரமுடியாது என்பதை அம்மான் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளார் என்பதால் மறைமுகமாக சவால் விடுகின்றார்.

உண்மைகளைச் சொல்லிவிடுவேன் என்று மிரட்டி தனது இருப்பை பேணவேண்டிய நிலைக்கு வந்துவிட்டார். இந்த ரிஸ்க் எப்படி முடியுமோ தெரியவில்லை.

 

 

எல்லாம் மேற்குலக தூதரகங்களின் ஆசை வார்த்தைகளால் தான்.........................

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரின் மனைவி மகள் பற்றி கருணா கும்மானுக்கு ஒரு மண்ணாங்கட்டியும் தெரியாது.

இவர் படைநடத்தி தான் கோத்தா வென்றானாம். அப்படி என்றால் எதற்கு 7 நாட்டு படைத்தலைமைகள் வன்னிக்கு வந்து வழிகாட்ட வேண்டும். இவர் பெரிய படை விற்பன்னர் என்றால் புலிகளை வெருகலில் வைச்சே விரட்டி அடிச்சிருக்கலாமே. ஏன் கொழும்புக்கு ஓடி வெளிநாட்டுக்கு ஓடினவர்.

பிரபாகரன் இதுகளைப் போன்றதுகளை வளர்த்ததை தவிர வேறெந்த பயங்கரத்தையும் செய்யவில்லை. போராளிகள் பெருமளவில் சண்டையிடாமலே சரணடைந்து விட்டார்கள். பல பெண் போராளிகள் அன்று குடும்பங்களோடு மீளணைக்கப்பட்டார்கள்.

இவர் தான் பின்னர் சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பின் பின்.. முன்னாள் போராளிகளை சிங்கள இராணுவத்துக்கும் சிங்கள அமைச்சர்களுக்கும் விபச்சாரிகள் ஆக்கினவர். இவர் இப்ப திறம் என்று கதைக்கிறார்.

போர் முடிந்த உடனல்ல. சில வாரம் கழித்து கோத்தா போன் போட்டு சொன்னாரம். சிங்கள மக்கள் உனக்கு கடன்பட்டிருக்கினம் என்று.

இப்ப அந்தக் கடனுக்கான நன்றிக்கடனை அடைச்சிட்டினம்.. திருப்தி தானே கும்மான். குரைக்கிறதை விட்டிட்டு பதுங்கிற இடத்தை தேடுறது நல்லது. எனி இவரை கடவுளும் காப்பாற்ற முடியாது போலவே தெரிகிறது. அந்த அச்சத்தில் வெருட்டி பார்க்கிறார்.. எந்த விபத்தில் மேல போய் சேருராரோ..??! :innocent::grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது எப்படியோ பல பதுக்கி வைத்த உண்மைகள் வெளிவரும் என நம்பலாம்.  அவை புலம்பெயர் வாசிகளுக்கு மகிழ்ச்சி தரப்போவதில்லை.  பல பாரிய பிம்பங்கள் உடையலாம். கருணா அம்மான் பிள்ளையானை சொல்ல பிள்ளையான் அம்மானைச் சொல்ல அம்மான் கோத்தா மகிந்தவைச் சொல்ல மகிந்த கோத்தா அம்மானைச் சொல்ல ஒட்டு மொத்தமா பதுங்கி இருந்த முயல் குட்டிகள் மெல்ல மெல்ல வெளில குதிக்கும். கடைசியில் யார் யாரெல்லாம் சரணடைந்தார்கள் என வெளிவரும் காலம் தொலைவில் இல்லை!

இதுக்கை ஏனப்பா புலம்பெயர்தமிழர்களை இழுக்கிறீங்கள்?

இப்போதல்ல என்றும் எந்த உண்மைகள் உத்தியோகபூர்வமாக வெளிவந்தாலும்......

உண்மையாக என்னநடந்தது என்பது புலம்பெயர்ந்த அனைவருக்கும் தெரியும். 
புலிக்காய்ச்சல் கண்ணை மறைத்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுறத எல்லாம் ஜ.நா விடம் சொல்லுங்கம்மான். போற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கும்.

எதிரிகளை மன்னிக்கும் எம் மக்கள் சரத்துக்கும் வாக்களித்தார்கள். துரோகிகளை மன்னித்து வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்து தானே தேசியப் பட்டியல் ஜடியா வந்தது. பிறகென்ன புலம்பல்.

ஜ.நா அறிக்கையுடன், மகிந்தா, கோத்தா எல்லோரும் பெரும் சிக்கலில் மாட்டலாம். அது தெரிந்தே, பாதுகாப்புக்காக ஒருவர் பராளுமன்றினுள் போக நிக்கிறார்.

அவையளே இந்தப் பாடு, அதுக்கிள, எனக்கு அது தர இல்லை, இது தர இல்ல எண்டால்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்


karuna-praba-and-karuna-mara

ஒரு சில தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு இனத்தையே அழிக்க உதவி செய்திருக்கின்றாயே?
இன்று உன் வயிறு தன்னிறைவு அடையாமல் கலங்குகின்றாய்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

 நீ விட்டெறிஞ்ச பந்து பட்டுத்தெறிச்சு திரும்பி உன்னட்டையே திரும்பிடிச்சு. இப்ப பல கதை விட்டு மக்களை உசுப்பேத்துறத்தை விட்டிட்டு தப்புற வழியப்பாரு. உன்ர துரோகத்துக்கு எத்தனை காரணம் மாறி மாறி சொல்லுறாய்? "மா புளிக்கிறது எப்பவுமே அப்பத்துக்கு நல்லது."

ஒரு புடலங்காயும் இந்த நரிக்கு தெரியாது ..சும்மா ஒரு பில்ட் அப் அவ்வளுவுதான் .....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ப்ளீஸ் டெல் மீ டெல் மீ , அடுத்த தேர்தல் வரும் மட்டும் காக்க வைக்க வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் மனைவிக்கும் மகளுக்கும் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும்

 

தெரியும் என்கிறார்

ஆனால் எதுவுமே சொல்லவில்லை...

வேறு ஆட்களுக்குத்தெரிந்தால் சொல்லலாம்....

அதைவிடுத்து வெளிவரும் வெளிவரும் என சந்தை தயாராக்க இது என்ன கத்திரிக்காயா??

அல்லது சிங்கள  மூளையிலிருந்து  இன்னும் ஆங்கிலத்தில் கிடைக்கவில்லையோ....?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை இழிவுபடுத்தவென்று சிங்களப் பேரினவாதமும், துரோகிகளும் விரும்புகிறார்கள் என்றால், இந்தப் படித்த மேதைகளுக்கு என்னானது ?

 

புலிக் காய்ச்சல் என்பது தனது இனத்தையே இழிவுபடுத்துமளவிற்கு இவர்களின் கண்ணை மறைத்துவிட்டது பரிதாபம். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை இழிவுபடுத்தவென்று சிங்களப் பேரினவாதமும், துரோகிகளும் விரும்புகிறார்கள் என்றால், இந்தப் படித்த மேதைகளுக்கு என்னானது ?

 

புலிக் காய்ச்சல் என்பது தனது இனத்தையே இழிவுபடுத்துமளவிற்கு இவர்களின் கண்ணை மறைத்துவிட்டது பரிதாபம். 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பிரபாகரனை உயிருடன் பிடித்தோம், அல்லது மனவியையும், மகளையும் உயிருடன் பிடித்தோம், அடித்தே கொன்றோம், அல்லது கூட்டாகக் கற்பழித்துக் கொன்றோம், பெரிய தளபதிகள் எல்லாம் பூனைக் குட்டிகள் போல் காலில் விழுந்து உயிருக்காகக் கெஞ்சினார்கள் என்பவற்றால் அடையாளப் படுத்தப்படுவது வெறுமனே தனிப்பட்ட மனிதர்களுக்கு நடந்த சம்பவங்கள் அல்ல. மாறாக ஒரு இனத்தினை இன்னொரு இனம் அகம்பாவத்துடன் வெற்றி கொண்டதை பறை சாற்றும் எக்காளாங்கள். 

 

இதை ஆக்கிரமிப்பு இனம் சொல்வது ஒன்று, பாதிக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே நக்கலடிப்பது வேறொன்று. புலிகளை மிகவும் கீழ்த்தரமாக அழித்தோம் என்று சிங்களப் பேரினவாதம் எக்காளமிடும்போது, அதற்கு தமிழர்களைப் புலி அபிமானிகள், புலியெதிர்ப்புவாதிகள் என்று பிரித்துப் பார்க்கவில்லை.  எல்லாத் தமிழர்களையுமே அது புலிகளாகப் பார்த்துத்தான் எக்காளமிடுகிறது. ஆனால், அதை நாம்தான் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எமதினத்தையே எள்ளி நகையாடுகிறோம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழினத்தை இழிவுபடுத்தவென்று சிங்களப் பேரினவாதமும், துரோகிகளும் விரும்புகிறார்கள் என்றால், இந்தப் படித்த மேதைகளுக்கு என்னானது ?

புலிக் காய்ச்சல் என்பது தனது இனத்தையே இழிவுபடுத்துமளவிற்கு இவர்களின் கண்ணை மறைத்துவிட்டது பரிதாபம். 

அறப்படித்த  மேதைகளின் மண்டைக்குள் இலக்கிய சிந்தனைகள் மட்டும் பொங்கி வழிகின்றது. பொதுச்சிந்தனைகள் எள்ளளவுமில்லை.

 

 

அடடா என்ன ஞானோதயம் .

இலங்கை வர்தகமானியிலேயே  சிங்களஅரசால் மிகவும்  வேண்டப்பட்ட நபராக அறிவிக்கபட்டிருந்த ஒபரே தேவன் கொலை செய்யப்பட்டபோது புலிகளுக்கு நன்றியும் சொல்லி எங்களுக்கு வேலை இராது அவர்களே தங்களுக்குள் சுடுபட்டு அழிந்துவிடுவார்கள் என்று ஜே ஆர் சொன்னார் .சுந்தரம் சிறி நாபா அமிர் என்று ஓவ்வொருவராக புலிகள் போடும்போது அது ஒட்டுமொத்த தமிழரின் போராட்டத்தையும் பாதிக்குது என்று உங்களுக்கு விளங்கவிலையா ? அது டெலோ ,ஈபி ,புளொட் ,டெலோ ,கூட்டணியாகத்தான் உங்கள் கண்ணுக்கு தெரிந்தது .

இப்ப புலிகளை அழிக்கும்போது மட்டும் அது தமிழர்களின் தோல்வியாக தெரியுது .நாங்கள் எவருமே இதை தமிழர்களின் தோல்வியாக பார்க்கவில்லை அடுத்த கட்ட அரசியலுக்கு தடையாக இருந்த பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தோம் .

அவர்கள் ஆடிய ஆட்டத்திற்கும் செய்த கொலைகளுக்கும் கொள்ளைகளுக்கும் இப்படி ஒரு முடிவு தேவைதான் அப்பவும் கூட பொதுமக்களை பலி கொடுத்து தாம் தப்ப நினைத்தவர்கள் அவர்கள் .

பலவந்தமாக பிடிக்கப்பட்ட அப்பாவி போராளிகளுக்கும் பொதுமக்களுக்கும் தான் எமது அஞ்சலிகள் கடைசிவரை கொலை வெறி பிடித்து அலைந்தவர்களுக்கு அல்ல . 

 

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் இப்பவே கவர் எடுக்கினம். அம்மான் சும்மா கதை சொன்னதுக்கே இப்பிடி பயப்பிடுகினை, சாலியபுர இராணுவ முகாமில் பிடிக்கப்பட்ட வீடியோவைப் பார்த்தால், நான் நினைக்கிறன் இவைக்கு பேச்சு மூச்செல்லாம் அடங்கிப் போயிடும் எண்டு. (தேவையில்லாமல் அப்பிடி இப்பிடி கற்பனை பண்ணி மனசை விட்டிராதேயுங்கோ)

டெலோ சிறி தனது இறுதி கணங்களில் ஒருக்கா பிரபாவுடன் கதைக்கவேண்டும் என்று கிட்டுவின் காலை பிடித்து கெஞ்ச கிட்டு நாலு வேட்டுகள் நெற்றியில் வைத்தார் என்று புளகாகிதம் அடைந்த வாலுகள் ,

மாற்று இயக்கம் எல்லாம் கோழைகள் ஏதோ தாங்கள் மட்டும் தான் அதி உன்னத வீரர்கள் என்றும் புலிகள் பசித்தாலும் புல்லை தின்னாது என்பவர்களுக்காக எப்போ வீடியோ வரும் என்று எதிர்பார்த்து காத்திருகின்றோம் .

அட ட அடடா ... ஆடு நனைகிறதாம் ஓநாய்கள் ஓவென்று ..!

இறைகுமாரன், உமைகுமாரன் தொடக்கம் சுளிபுரம் ஈறாக வல்லிபுரக்கோயிலுக்கு பக்கத்தில் உள்ள சவுக்கம்காட்டில் மக்கள் புரட்சிக்கு போன பெண் பிள்ளைகளை புணர்ந்து விட்டு மணலுக்குள் தாட்டவைகளும், தமிழக பயிற்சி முகாம்களில் கேட்பாரற்று புதைக்கப்பட்டவர்களும், எத்தனை பேர் என்றாவது தெரியுமா? ... எல்லாம் மறக்கச்சொல்லுது! அந்த கொலைக்களங்கள் கண்ணுக்கு தெரியவில்லை? ... சேர்ந்து கூத்தாடினீர்கள்! .. தலைவனையே சிங்கள தலைநகரில் உள்ள கடற்கரையில் போட்டு தள்ளும்போதாவது படுகொலைகள் என்ன என்பது தெரியவில்லையா? சரி, பின்னாளில் வவுனியாவில் சித்தர்/மாணிக்ஸ் ஆடிய கூத்துக்கள் தெரியுமா? மாற்றான் மனைவிகளையே கவர்ந்து வந்து வைத்திருந்த கொடூரங்களை மறக்க முடியுமா?? எழுத பக்கங்கள் போதாது!

ஆமா, யார் யாரை அழித்தது? ..

சாதனைகள் படைத்த தாஸ் குறூப்பை போட்டு தள்ளும் போது உங்களுக்கு ரெலோ படுகொலைகள் கண்ணுக்கு தெரியவில்லை?

IPKF காலங்களில் நாபா/வரதர் ஆடிய கொலைக்களங்கள் உங்களுக்கு தெரியவில்லை?

எவ்வளவு ஆதாரங்கள் வேண்டும் ... ஒட்டுக்குழுக்களே, உங்கலையே நீங்கள் அழித்ததற்கு?

இன்று????

***

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

அட இந்தக்  ஒட்டுக்குழுவுக்க ஓர் ஒட்டாத குழுவாகவே அவர்களும்.... இருக்கினம். அப்படியெண்டால் பரவாயில்லை.

செல்லக்கிளி அம்மான்..

லெப். கார்ணல் விக்டர்...

லெப். கார்ணல் ராதா..

லெப். கார்ணல் பொன்னம்மான் .. இப்பிடி தொடருதாக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

1654219_10152069002026840_1414294288_n.j

 

இந்தப்படத்தை எவ்வளவு வேதனையோடு நீங்கள் இணைத்திருப்பீர்கள் என புரியமுடிகிறது

அந்த புரிதல்  வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு...

ஆனால்.......??

  • கருத்துக்கள உறவுகள்

che_10.jpg

செகுவாரவுக்கும் இதே கதிதான் நடந்தது...ஆனால் அவரை தங்களது நாயகனாக  பலர் ஏற்றுக்கொள்கிறார்கள்......அன்று போலிவியா இராணுவமும் அமெரிக்காவும்.......இன்று இந்தியாவும் சிறிலங்கா இராணுவமும்.....

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

che_10.jpg

புத்தனின் படம் ஆயிரம் சொற்கள் சொல்லும் கருத்துகளை சொல்லுகிறது...

 

 

 

 

புத்தனின் படம் ஆயிரம் சொற்கள் சொல்லும் கருத்துகளை சொல்லுகிறது...

 

 

 

இது ஒரு சிக்கலான விடயம். என்னவாக இருப்பினும், உண்மைகள் வெளியே வருவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அது முக்கியமான நேரங்களில் மக்களை சோர்வடைய செய்வதற்க்க கருணா போன்ற பச்சோந்திகள் "எனக்கு என்ன நடந்தது என்று தெரியும் , 

இது ஒரு சிக்கலான விடயம். என்னவாக இருப்பினும், உண்மைகள் வெளியே வருவது நல்லது என்பது எனது தனிப்பட்ட கருத்து. அது முக்கியமான நேரங்களில் மக்களை சோர்வடைய செய்வதற்க்க கருணா போன்ற பச்சோந்திகள் "எனக்கு என்ன நடந்தது என்று தெரியும் , அதை சொல்லவா?விடட்டா?" என்று மக்களை ஏய்ப்பதை தவிக்க உதவும். 

ஆனால் இவர்கள் அதை சொல்லபோதில்லை என்பதே எனது கருத்து . அவர்களுக்கு பிரபாகரன் இன்னும் இருப்பதாகவும், இறந்ததாகவும் சொல்லுவது தனியே அவர் இறந்துவிட்டார் அல்லது தப்பிவிட்டார் என்பதால் வரும் இலாபங்களை கூட. 

 

 

செகுவாரவுக்கும் இதே கதிதான் நடந்தது...ஆனால் அவரை தங்களது நாயகனாக  பலர் ஏற்றுக்கொள்கிறார்கள்......அன்று போலிவியா இராணுவமும் அமெரிக்காவும்.......இன்று இந்தியாவும் சிறிலங்கா இராணுவமும்.....

புத்தனின் படம் ஆயிரம் சொற்கள் சொல்லும் கருத்துகளை சொல்லுகிறது...

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.