Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாழ்த்துக்கள். - வ,ஐ,ச,ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ADVANCED GREETINGS FOR TNA

தமிழர் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாழ்த்துக்கள்.

-    வ,ஐ,ச,ஜெயபாலன்

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா என்கிற தலைப்பில் நிலாந்தன் முக்கியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

போர்த் தோல்வியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவை தோற்கடித்த வரைக்கும் வாக்களிப்பு அலை என இனம் காட்டக்கூடிய எந்த பேரசைவுமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈழத் தமிழர்களும் வெற்றிகரமாக இணைந்து செயல் பட்டிருக்கின்றனர். கூட்டமைப்பைப் பொறுத்து தேர்தல் கழநிலமை இன்றும் அவ்வண்ணமே தொடர்கிறது. ஏனைய கட்ச்சிகளைப் பொறுத்து வாக்களிப்பு அலை இல்லை என்பது மேற்ப்படி கட்ச்சிகளின்   பரப்புரைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

இனக்கொலைக்குப் பின்னான தேர்தல் வரலாற்றில் ஆர்பாட்டங்கள் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் நேரடியாக முதல் எதிரி மகிந்த ராசபக்சவை தோற்கடித்தல் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்கில் தமிழர் பிரதி நிதிதுவத்தை உச்சப்படுத்துவதல் என்பவையே இன்றுவரை சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் உத்தியாக தொடர்கிறது...

மக்கள் "நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள் எனைய எல்லா தேர்தல்களையும் பகிஸ்கரியுங்கள்' என்கிற கஜேந்தரகுமார் அணியின் கோரிக்கையை நிராகரித்தமை நாளாளுமன்றிலும் சர்வதேச அரங்கிலும் தமிழர்கள் ஓரளவேனும் பலப்பட உதவியது. கஜேந்திரனின் பகிஸ்க்கரிப்புக் கோரிக்கை வென்றிருப்பின் மகிந்தவின் வெற்றி உறுதிப்பட்டிருக்கும். மகிந்தவை வெற்றிபெற வைத்து மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கலை அரசியல்ரீதியாகச் சந்தித்து மீழக்கூடிய நிலையில் கழத்தில் நொந்து நூலாகிப்போன எமது மக்கள் இல்லை;

இனக்கொலையின்பின்னர் கடந்த ஆறுவருடங்களாக நிகழ்ந்த  தேர்தல்கள் யாவற்றையும் தமிழ் மக்கள் தமது பொது எதிரிகளில் முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்க்கான ஆயுதமாகவே வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள், இப்பவும் அதே நிலமைதான் தொடர்கிறது,

 மேலும் கடந்த தேர்தல்களில் “இணைந்த வடகிழக்கில் சரணாகதியற்ற அரசியல் தீர்வு” என்கிற நிலைபாட்டில் வட கிழக்கு தமிழ் மக்கள் சம்பந்தர் தலைமையில் உறுதியாக இருப்பதை சர்வதேச சமூகத்துக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர்.  

கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மண்கவ்வ வைத்தமை சர்வதேச சமூகத்தின் சமிக்ஞைகளை சரியாக புரிந்துகொண்டு முதல் எதிரி அடிப்படையில்  சம்பந்தர் எடுத்த நிலைபாட்டுக்கும், அதனை ஆதரித்த மக்களுக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும். இந்த வெற்றியை அமைப்பு ரீதியாக நெறிப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

2

இனக்கொலைக்குப் பிந்திய காலக் கட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க முடிவெடுத்த மக்கள் மக்கள் பொது கூட்டம் பிரசாரமென ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டு தேர்தல் ஆதரவு பேரலை எதையும் உருவாக்கவில்லை. அதேசமயம் தேர்தல் நாட்க்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைய  வாக்களித்தார்கள்.

இனக்கொலைக்கு பின்னர் நிகந்த முதலாவது தேர்தலின்போது தமிழ் மக்கள் மோசமான ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலேயே வாக்களித்தார்கள். அன்று தேர்தல் பகிஸ்கரிப்பா அல்லது முதல் எதிரிக்கு எதிரான வாக்களிப்பா என்கிற கேழ்விதான் மக்கள் முன் இருந்தது. 2005 தேர்தல் அனுபவங்கள் ஊடாக தேர்தல் பகிஸ்கரிப்பு முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவையே பலப்படுத்தும் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர்.  அதனால்தான் மக்கள் தேர்தல் பகிஸ்கரிப்புக் கோரிக்கையையும் அதை வலியுறுத்திய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தையும் ஒருசேர நிராகரித்தனர். அந்த நிலமையே மாறாமல் இன்னும் தொடர்கிறது.   

3

மகிந்த ராசபக்ச, சரத்பொன்சேகா ரணில் மூவரும் ஈழத் தமிழர்களின் பொது எதிரிகள். ஆனால் குறித்த தேர்தலில் மகிந்த ராசபக்சதான் முதல் எதிரி என்கிற சரியான முடிவை தமிழர் தேசியக் கூட்டமைப்பும் மக்களும் எடுத்தார்கள். இந்த முடிவே மகிந்தவின் தோல்விக்கு வழி வகுத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு மன்றத் தேர்தலில் பாரம்பரிய தாயகக் கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அதிக பிரதிநிதிகளை வென்றெடுக்கப் போராடியது. பாரம்பரிய தாயகத்தின் பங்காளிகளான முஸ்லிம் தலைமைகளோடும் தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்பேசும் மக்களை ஒருங்கினைக்கும் மேற்படி முயற்ச்சி வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் வடகிழக்கில் அதிகபட்ச்ச பாராளுமன்ர பிரதிநிதிகளை வென்றெடுத்தல் என்கிற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டது. ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை ஆதரித்தனர்.

திருகோணமலையில் தமிழர் வாக்கை உடைத்து சம்பந்தரைத் தோற்க்கடிக்கும் நோக்கோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு வேட்பாளரை நிறுத்தினார். இது திருகோணமலை தமிழர் கையைவிட்டு நழுவிப் போய்விடக்கூடும் என்கிற நிலையை உருவாக்கியது. இது பரவலாக தமிழ் மண்ணில் சிங்கள வேட்பாளர்களின் கையையே பலப்படுத்தியது. நல்ல வேழையாக சம்பந்தர் வெற்றி பெற்றார். எனினும் திருகோணமலை தமிழர்களுக்கான இரண்டு வெற்றி வாய்ப்புகளில் ஒன்றைச்  சிங்களவரிடம் பறிகொடுத்தது.

3

இனக்கொலைக்குப் பிந்திய தேர்தல்கள் எதிலும் மாபெரும் கூட்டங்கள் கூட்டுவது மாபெரும் ஆர்பாட்டங்களும் பரப்புரையும் செய்வது. மாபெரும் தேர்தல் ஆதரவு அலையை உருவாக்குவது என 1970 பதுகளுக்கு முந்திய தேர்தல் கழ சூழல் உருவாகவில்லை. இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் உத்தியாகவும் செயல்பட்டது..

தேர்தல் நாளன்று சகல அச்சுறுத்தல்களையும் மீறி சென்று வாக்களிப்பது என்கிற மக்களின் மன உறுதிதான் தமிழர் கூட்டமைப்பின் வெற்றிகளை உறுதிப் படுத்தியது.

மக்கள் பதிரிகை வானொலி இணையங்களூடாகவே கூட்டமைப்பினரோடு தொடர்பாடல்களைப் பராமரித்தனர். இப்பவும் அதுதான் நிகழ்கிறது. தேர்தல் அலையை உருவாக்கினால் மட்டுமே வெற்றியை உறுதிப்படுத்தலாம் என்கிறநிலை ஏனைய கட்சிகளுக்கு உள்ளது.

வடகிழக்கில் தேர்தல் அலை உருவாகாத சூழல் நிலவுவதை நிலாந்தன் பதிவு செய்துள்ளார்.  ஆனால் கடந்த ஆறு வருடங்களாக இதுதானே வட கிழக்கின் வழமை,  வழமைபோல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையே கழத்தில் நிலவும் மெளனம் உணர்த்துகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்கூட்டியே வெற்றி வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் மக்கள் ஆணை எதுவாக இருந்தாலும் அதனை  புலம்பெர்ந்த தமிழ் அமைப்புகள் அங்கீகரிக்க வேண்டும். தமிழர் கூட்டமைப்புக்கும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கும் இடையில் ஆரோக்கியமான விமர்சன ரீதியான நல்லுறவு உருவாகவேண்டும். அதன்மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றி வாய்ப்புகளைப் பலப்படுத்தி முன்நகர முடியும். இனியேனும் இரு தரப்பும் ஒற்றுமைப்பட்டுச் செயல்பட வேண்டுமென  பிரார்திக்கிறேன்.    . 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

vote.jpg

கஜேந்திரகுமாரின்.... தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வட பகுதியில் போட்டியிடும் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி....  
வெற்றி பெற.... முற்கூட்டிய வாழ்த்துக்கள்.
நாளை காலையிலேயே... வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப மிச்சம் 693 சீட்டும் வேண்டாமா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெருவெற்றி பெறுவதோடு 

கூட்டணியில் இருக்கும் பெரும்பான்மையானேர் இனி வரும் காலம்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் சேருவார்கள்.

உங்கள் பொன்னான வாக்குகளை சைக்கிள் சின்னத்திற்கு நேராக போட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பெரு வெற்றியடையச் செய்யுங்கள்.

WE NEED CHANGE

  • கருத்துக்கள உறவுகள்

திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது தலைமையிலான "தமிழ்த்தேசிய மக்கள் முண்ணணி" உலகின்வாழும் அனைத்துத் தமிழர்கள் உணர்வினைப் பிரதிபலிக்கும்வண்ணம் நியாயமான வெற்றிகளைப்பெற எனது வாழ்த்துக்கள். திரு கஜேந்திரகுமமார் பொன்னம்பலம் தலைமையிலான மக்கள் முண்ணணியின் வெற்றியே புலத்தினதும் புலம்பெயர் மக்களதுமிடையில் தற்போது ஏற்ப்ட்டுள்ள இடைவெளியினை குறைக்கும்.

எல்லாம் வல்ல இறைவனே............, யார் வெற்றி பெற்றால்  தமிழருக்கு நண்மை கிடைக்குமோ அவர்கள் வெற்றி பெற வேண்டும், தமிழர் தம் துயர் நீங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட கூட்டமைப்பு சொல்லி சொல்லி அடிக்குது. புலிவால்கள் எல்லோரும் காதில 2 பூ வைக்க ரெடியா இருக்கோணும். அடுத்த தலைமுறை தமிழர் தலைவர் சுமந்திரன்  யாழில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுவார். விசில் குஞ்சுகளா ஆளாளுக்கு எள்ளு பக்கட் கொள்ளு பக்கட் வாங்கி வைங்க அப்பதான் உங்க முகத்துல வெடிக்கிற எள்ளும் கொள்ளுக்கும் எக்ஸ்ட்ராவா இன்னும் கொஞ்சம் கூட போடலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பும் முன்னணியும்  உறுப்பினர்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை இனி வருங்காலங்களில் சேர்ந்து முன்னெடுக்க வாழ்த்துகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட கூட்டமைப்பு சொல்லி சொல்லி அடிக்குது. புலிவால்கள் எல்லோரும் காதில 2 பூ வைக்க ரெடியா இருக்கோணும். அடுத்த தலைமுறை தமிழர் தலைவர் சுமந்திரன்  யாழில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுவார். விசில் குஞ்சுகளா ஆளாளுக்கு எள்ளு பக்கட் கொள்ளு பக்கட் வாங்கி வைங்க அப்பதான் உங்க முகத்துல வெடிக்கிற எள்ளும் கொள்ளுக்கும் எக்ஸ்ட்ராவா இன்னும் கொஞ்சம் கூட போடலாம்!

உடையார்ரை திருவிழாவிலை வெடி கொழுத்தினானாம் சுப்பன். :grin:....:grin:

  • கருத்துக்கள உறவுகள்

2002 க்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தட்டுத்தடுமாறி.. எதிர்க்கருத்தியலை சந்திக்க முடியாமல்.. திணறி சந்திக்கும் தேர்தல் இது. இவ்வளவு காலமும் அமைஞ்சது போல.. இது அவ்வளவு இலகுவாக அமையவில்லை. எனியும் அமையாது கொள்கைகளை பச்சோந்தி மாதிரி மாற்றிக் கொண்டே போனால் என்ற செய்தி நல்லவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. சம் சும் கும்பல் கடைசி நேரத்தில்.. கிளிநொச்சியில் வைத்து தேசிய தலைவரின் தீர்க்கதரிசனத்தின் வடிவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று சொல்லி வாக்குக் கேட்கும் நிலை மீண்டிருக்கிறது. இவை சும்மா நிகழல்ல.. உண்மைகளை மக்களும் இதர தமிழ் தேசிய தமிழ் மக்கள் உரிமை விரும்பும் தரப்புக்களும் அடித்து இடித்துச் சொன்னதன் விளைவு. 

மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் அது சம் சும் கும்பல் காட்டும் மாற்றமல்ல என்பதையும் சொல்லி இருக்கிறார்கள். சம் சும் கும்பல் தான் நினைச்சப்படி ஆட எனி களம் அவ்வளவு வசதியாக இருக்காது என்ற செய்தியும் சொல்லப்பட்டிருப்பது தமிழ் மக்களுக்கு பலம்.  :):unsure:

  • கருத்துக்கள உறவுகள்

ADVANCED GREETINGS FOR TNA

தமிழர் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாழ்த்துக்கள்.

-    வ,ஐ,ச,ஜெயபாலன்

வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா என்கிற தலைப்பில் நிலாந்தன் முக்கியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார்.

போர்த் தோல்வியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவை தோற்கடித்த வரைக்கும் வாக்களிப்பு அலை என இனம் காட்டக்கூடிய எந்த பேரசைவுமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈழத் தமிழர்களும் வெற்றிகரமாக இணைந்து செயல் பட்டிருக்கின்றனர். கூட்டமைப்பைப் பொறுத்து தேர்தல் கழநிலமை இன்றும் அவ்வண்ணமே தொடர்கிறது. ஏனைய கட்ச்சிகளைப் பொறுத்து வாக்களிப்பு அலை இல்லை என்பது மேற்ப்படி கட்ச்சிகளின்   பரப்புரைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது.

இனக்கொலைக்குப் பின்னான தேர்தல் வரலாற்றில் ஆர்பாட்டங்கள் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலில் நேரடியாக முதல் எதிரி மகிந்த ராசபக்சவை தோற்கடித்தல் பாராளுமன்றத் தேர்தலில் வடகிழக்கில் தமிழர் பிரதி நிதிதுவத்தை உச்சப்படுத்துவதல் என்பவையே இன்றுவரை சம்பந்தர் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் உத்தியாக தொடர்கிறது...

மக்கள் "நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு வாக்களியுங்கள் எனைய எல்லா தேர்தல்களையும் பகிஸ்கரியுங்கள்' என்கிற கஜேந்தரகுமார் அணியின் கோரிக்கையை நிராகரித்தமை நாளாளுமன்றிலும் சர்வதேச அரங்கிலும் தமிழர்கள் ஓரளவேனும் பலப்பட உதவியது. கஜேந்திரனின் பகிஸ்க்கரிப்புக் கோரிக்கை வென்றிருப்பின் மகிந்தவின் வெற்றி உறுதிப்பட்டிருக்கும். மகிந்தவை வெற்றிபெற வைத்து மீண்டும் ஒருமுறை முள்ளிவாய்க்கலை அரசியல்ரீதியாகச் சந்தித்து மீழக்கூடிய நிலையில் கழத்தில் நொந்து நூலாகிப்போன எமது மக்கள் இல்லை;

இனக்கொலையின்பின்னர் கடந்த ஆறுவருடங்களாக நிகழ்ந்த  தேர்தல்கள் யாவற்றையும் தமிழ் மக்கள் தமது பொது எதிரிகளில் முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்க்கான ஆயுதமாகவே வெற்றிகரமாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள், இப்பவும் அதே நிலமைதான் தொடர்கிறது,

 மேலும் கடந்த தேர்தல்களில் “இணைந்த வடகிழக்கில் சரணாகதியற்ற அரசியல் தீர்வு” என்கிற நிலைபாட்டில் வட கிழக்கு தமிழ் மக்கள் சம்பந்தர் தலைமையில் உறுதியாக இருப்பதை சர்வதேச சமூகத்துக்கு மக்கள் உணர்த்தியுள்ளனர்.  

கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மண்கவ்வ வைத்தமை சர்வதேச சமூகத்தின் சமிக்ஞைகளை சரியாக புரிந்துகொண்டு முதல் எதிரி அடிப்படையில்  சம்பந்தர் எடுத்த நிலைபாட்டுக்கும், அதனை ஆதரித்த மக்களுக்கும் கிடைத்த பெரு வெற்றியாகும். இந்த வெற்றியை அமைப்பு ரீதியாக நெறிப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

2

இனக்கொலைக்குப் பிந்திய காலக் கட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்க முடிவெடுத்த மக்கள் மக்கள் பொது கூட்டம் பிரசாரமென ஆர்ப்பாடங்களில் ஈடுபட்டு தேர்தல் ஆதரவு பேரலை எதையும் உருவாக்கவில்லை. அதேசமயம் தேர்தல் நாட்க்களில் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கு அமைய  வாக்களித்தார்கள்.

இனக்கொலைக்கு பின்னர் நிகந்த முதலாவது தேர்தலின்போது தமிழ் மக்கள் மோசமான ஒடுக்குதலுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியிலேயே வாக்களித்தார்கள். அன்று தேர்தல் பகிஸ்கரிப்பா அல்லது முதல் எதிரிக்கு எதிரான வாக்களிப்பா என்கிற கேழ்விதான் மக்கள் முன் இருந்தது. 2005 தேர்தல் அனுபவங்கள் ஊடாக தேர்தல் பகிஸ்கரிப்பு முதல் எதிரியான மகிந்த ராஜபக்சவையே பலப்படுத்தும் என்பதை மக்கள் உணர்ந்திருந்தனர்.  அதனால்தான் மக்கள் தேர்தல் பகிஸ்கரிப்புக் கோரிக்கையையும் அதை வலியுறுத்திய கஜேந்திர குமார் பொன்னம்பலத்தையும் ஒருசேர நிராகரித்தனர். அந்த நிலமையே மாறாமல் இன்னும் தொடர்கிறது.   

3

மகிந்த ராசபக்ச, சரத்பொன்சேகா ரணில் மூவரும் ஈழத் தமிழர்களின் பொது எதிரிகள். ஆனால் குறித்த தேர்தலில் மகிந்த ராசபக்சதான் முதல் எதிரி என்கிற சரியான முடிவை தமிழர் தேசியக் கூட்டமைப்பும் மக்களும் எடுத்தார்கள். இந்த முடிவே மகிந்தவின் தோல்விக்கு வழி வகுத்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளு மன்றத் தேர்தலில் பாரம்பரிய தாயகக் கொள்கைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அதிக பிரதிநிதிகளை வென்றெடுக்கப் போராடியது. பாரம்பரிய தாயகத்தின் பங்காளிகளான முஸ்லிம் தலைமைகளோடும் தமிழர் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. தமிழ்பேசும் மக்களை ஒருங்கினைக்கும் மேற்படி முயற்ச்சி வெற்றிபெறவில்லை. அதன்பின்னர் வடகிழக்கில் அதிகபட்ச்ச பாராளுமன்ர பிரதிநிதிகளை வென்றெடுத்தல் என்கிற அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செயல்பட்டது. ஈழ தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முடிவுகளை ஆதரித்தனர்.

திருகோணமலையில் தமிழர் வாக்கை உடைத்து சம்பந்தரைத் தோற்க்கடிக்கும் நோக்கோடு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஒரு வேட்பாளரை நிறுத்தினார். இது திருகோணமலை தமிழர் கையைவிட்டு நழுவிப் போய்விடக்கூடும் என்கிற நிலையை உருவாக்கியது. இது பரவலாக தமிழ் மண்ணில் சிங்கள வேட்பாளர்களின் கையையே பலப்படுத்தியது. நல்ல வேழையாக சம்பந்தர் வெற்றி பெற்றார். எனினும் திருகோணமலை தமிழர்களுக்கான இரண்டு வெற்றி வாய்ப்புகளில் ஒன்றைச்  சிங்களவரிடம் பறிகொடுத்தது.

3

இனக்கொலைக்குப் பிந்திய தேர்தல்கள் எதிலும் மாபெரும் கூட்டங்கள் கூட்டுவது மாபெரும் ஆர்பாட்டங்களும் பரப்புரையும் செய்வது. மாபெரும் தேர்தல் ஆதரவு அலையை உருவாக்குவது என 1970 பதுகளுக்கு முந்திய தேர்தல் கழ சூழல் உருவாகவில்லை. இதுவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் உத்தியாகவும் செயல்பட்டது..

தேர்தல் நாளன்று சகல அச்சுறுத்தல்களையும் மீறி சென்று வாக்களிப்பது என்கிற மக்களின் மன உறுதிதான் தமிழர் கூட்டமைப்பின் வெற்றிகளை உறுதிப் படுத்தியது.

மக்கள் பதிரிகை வானொலி இணையங்களூடாகவே கூட்டமைப்பினரோடு தொடர்பாடல்களைப் பராமரித்தனர். இப்பவும் அதுதான் நிகழ்கிறது. தேர்தல் அலையை உருவாக்கினால் மட்டுமே வெற்றியை உறுதிப்படுத்தலாம் என்கிறநிலை ஏனைய கட்சிகளுக்கு உள்ளது.

வடகிழக்கில் தேர்தல் அலை உருவாகாத சூழல் நிலவுவதை நிலாந்தன் பதிவு செய்துள்ளார்.  ஆனால் கடந்த ஆறு வருடங்களாக இதுதானே வட கிழக்கின் வழமை,  வழமைபோல தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதையே கழத்தில் நிலவும் மெளனம் உணர்த்துகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு முன்கூட்டியே வெற்றி வாழ்த்துக்களை அனுப்ப விரும்புகிறேன்.

இந்த தேர்தலில் மக்கள் ஆணை எதுவாக இருந்தாலும் அதனை  புலம்பெர்ந்த தமிழ் அமைப்புகள் அங்கீகரிக்க வேண்டும். தமிழர் கூட்டமைப்புக்கும் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளுக்கும் இடையில் ஆரோக்கியமான விமர்சன ரீதியான நல்லுறவு உருவாகவேண்டும். அதன்மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றி வாய்ப்புகளைப் பலப்படுத்தி முன்நகர முடியும். இனியேனும் இரு தரப்பும் ஒற்றுமைப்பட்டுச் செயல்பட வேண்டுமென  பிரார்திக்கிறேன்.    . 

உங்களது கருத்துடன் முழுமையாக  உடன்பட முடியவில்லை

காரணம் கூட்டமைப்பின் ஒரு பக்கத்தை மட்டுமே மேய்ந்திருக்கின்றீர்கள்..

அதேநேரம் மற்றய கட்சிகள் சார்ந்து ஆளமாக ஆராய்ந்துளளீர்கள்

எனவே இது ஒரு பக்கசார்பான அறிக்கையாகும்.

மற்றும்படி உங்களது தெளிவான நேரடியான ஆதரவைத்தெரிவித்தமைக்கு நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாகரீகமான விவாதமாக என் கருத்தை வளர்த்துச் சென்றமைக்காக யாழ்கழ நண்பர்கள் தமிழ்சிறி, சோசான்,,சே, ஈழபிரியன் எழுஞயிறு. ஆதவன் சிஎஹ், எவாலி, வாத்த்யார், குமாரசாமி, நெடுக்காலபோவான், விசுக்கு அனைவருக்கும் என் அன்பும் நன்றிகளும். 

நமது ஒட்டு மொத்தக் கருத்துக்களில் பல்வேறு உண்மை தொக்கி நிற்க்கிறது. விசுக்கு சொல்வதுபோ;ல கூட்டமைப்பு பற்றிய விமர்சனங்கள் இல்லை   என்பதை ஒப்புக்கொள்கிறேன்.  சில விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை. விசுக்கு கேட்டதுபோல  கூட்டமைப்புபற்றி விமர்சனங்களையும் சேர்த்து விரிவாக பின்னர்ப் எழுதுவேன்.

விமர்சனத்திற்கு அப்பால் எவருமில்லை .

கூட்டமைப்பில்  குளறுபடிகள் இல்லாமல் இல்லை ஆனால் யுத்தம் முடிந்த பின் மகிந்த அரசு ஆடிய ஆட்டம் உலகம் அறியும் .யாரும் எதிர்பாராத மைத்திரி வருகையும் ஆட்சி மாற்றம் தேவை என்ற மக்களின் நிலைபாடும் சர்வதேசம் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கூட்டமைப்பை பெரும்பான்மையாக வெற்றி பெற செய்து பாராளுமன்றம் அனுப்ப வேண்டியது தான் இன்றைய எமது தேவை .

டக்கியும் விஜயகலாவும் எப்போதுமே மாற்றுக்கட்சிதான் ஆனால் இம்முறை கஜேந்திரன் கோஸ்டி புது கோஷத்துடன் புலம்பெயர் புலி ஆதரவாளர்களால் கூட்டமைப்பை உடைக்க களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளார்கள் .

இந்த புலம் பெயர் புலி ஆதரவாளர்கள் கடந்த காலங்களில் கூட்டமைப்பத்தான் ஆதரவளித்து வந்தார்கள் ஆனால் சம் சும் இன் புலிகளின் மீதான விமர்சனங்களும் தங்கள் சொல்லுக்கு அவர்கள் ஆடாததும் அவர்களை கடுப்பேத்தியதன் விளைவுதான் அவர்கள் கஜேந்திரன் கோஷ்டிக்கு ஆதரவு வழங்கமுற்படவைத்ததே ஒழிய கஜேந்திரன் கோஸ்டியின் கொள்கைகளோ அல்லது அவர்கள் நேர்மையானவர்கள் என்றோ இல்லை .

புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் புலி ஆதரவாளர்கள் தான் இந்த தேர்தலில் கஜன் கோஸ்டி இவ்வளவு முக்கியத்துவம் பெற ஒரே காரணம் அதுவும் குறிப்பாக அவர்களிடம் இருக்கும் பணம் ,ஊடகபலம் .

தேர்தல் முடிவுகள் தான் நாட்டில் இருக்கும் மக்களின் நிலைப்பாட்டை எடுத்துசொல்ல போகும் ஒரே ஆயுதம் .முடிவை பொறுத்திருந்து பார்ப்போம்.

குறிப்பு -கூட்டமைப்பை இல்லாது பொல்லாதுகள் சொல்லி செறடிப்பது  ,உடைக்க முயல்வது ,முடிந்த வரை தோற்க வைக்க முயற்சித்துவிட்டு கூட்டமைப்பு வென்றால் தம்மை தாமே நியாயப்படுத்த 

"கூட்டமைப்பு தலைவரால் உருவாக்கப்பட்டது ,தலைவர் பேரை சொல்லி வாக்கு கேட்டது " என்ற ஒரு கள்ளசாட்டை அவ்வப்போ எடுத்தும் விடுகின்றார்கள் .இப்படியானவர்கள் யார் தேர்தலில் வென்றாலும் புலிகளால் தான் வென்றார்கள் என்று காலம் காலமாக கூவிக்கொண்டிப்பவர்கள் .இவர்கள் தமிழ் நாடு ,இந்திய தேர்தல்களை கூட புலிகள் தான் நிர்ணயிகின்றார்கள் என்ற உலகில் வாழ்பவர்கள் .கோமாவில் வாழும் இவர்களை மக்கள்  கணக்கில் எடுக்காமல் விட்டு கனகாலம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள்.

புலம்பெயர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கழ நிலமையை புரிந்துகொண்டு விமர்சனரீதியாக கூட்டமைப்பை அங்கீகரித்து செயல்படவேணடும் என பணிவன்புடன் வேண்டுகிறேன். குறிப்பாக சர்வெதேச அரங்கில் புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புகல் யும் சம்பந்தரையும் பலப்படுத்த வேண்டும். கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழரின் பலத்தை திரட்டி புலம்பெயர்ந்த தமிழர் துணையுடன் சர்வதேச அரங்கில் வெற்றிகளைப் பெறவேண்டும். இதுவே நமக்குமுன் உள்ள ஒரே பாதை

இதுதான் காலத்தின் தேவை அனைவரும் புரிந்துநடக்கவேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.