Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்! தீர்வுக்காக உழைப்போம்!- இரா.சம்பந்தன

Featured Replies

[ புதன்கிழமை, 19 ஓகஸ்ட் 2015, 12:38.54 AM GMT ]
sambanthan_001.jpg

வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 

தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்; 

வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம். 

வடக்கு கிழக்கில் போட்டியிட்ட மக்கள் செல்வாக்கற்ற சில கட்சிகளின் விஷமத்தனமான பிரசாரத்தினாலும் நடவடிக்கைளினாலும் நாம் அடையவிருந்த இன்னும் பெரிய பாரிய வெற்றி அக்கட்சிகளால் தடைப்பட்டுவிட்டது. 

நாம் அக்கட்சிகளை தமிழ் மக்களின் நன்மை கருதி தேர்தலில் இருந்து விலகுமாறு கோரினோம். அவர்கள் அதை செய்யவில்லை. இன்று அவர்கள் எமது மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறந்த வெற்றியைப் பெற்றுள்ளது. 

பெறப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததிலும் பார்க்க சற்று குறைவாக இருந்த போதிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர்.

தமிழ்க் கூட்டமைப்பை வட – கிழக்கு மக்கள் தங்களுடைய நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாக இத்தேர்தலில் தெரிவு செய்திருக்கின்றார்கள். இதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை. 

துரதிஷ்ட வசமாக தேர்தலுக்கு முன்பாக சில விஷமத்தனமான பிரசாரங்கள் எம்மீது மேற்கொள்ளப்பட்டன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது எமது வெற்றி வாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 

http://www.tamilwin.com/show-RUmtyISdSVlu2F.html

எமது செயற்பாட்டைப் பொறுத்தவரை அரசியல் தீர்வு விடயத்தில் கால தாமதம் செய்யாமல் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பது கூட்டமைப்பின் முக்கியமானதும் உறுதியானதுமான நிலைப்பாடாகும். 

இது விடயம் குறித்து எடுக்க வேண்டிய முயற்சிகளை இனி வேகமாக மேற்கொள்வோம். 

எம்மை பொறுத்தவரையில் ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக புதிதாக அமையவிருக்கும் அரசாங்கம் இருக்க வேண்டும். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மக்களால் வழங்கப்பட்ட ஆணையை தொடரும் வகையில் அமையவிருக்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

அவ்விதமான நிலைமைக்கு நாங்கள் ஆதரவாக இருப்போமென்று கூற முடியும். 

அமையவிருக்கும் புதிய அரசாங்கமானது தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்க்கமான ஒரு அரசியல் தீர்வை கொண்டு வருவதற்கு கடுமையான காத்திரமான முயற்சிகளை காலதாமதம் இன்றி மேற்கொள்ள வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும். 

யாழ். மாவட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களைப் பெற்று பாரிய சாதனை படைத்திருக்கின்ற போதும் 6 ஆசனங்களை பெறுவதற்குரிய வாய்ப்பை மிக மிக சொற்பளவு வாக்கான 6 வாக்குகளால் இழந்துள்ளது என்பது கவலை தருகின்ற விடயமாகும். 

நாம் இவ் விடயம் சம்பந்தமாக தேர்தலுக்கு முன்பே கூறியுள்ளோம். சிறு கட்சிகள் அதாவது ஒரு ஆசனத்தைக் கூட பெற தகுதியற்ற கட்சிகள் மக்களுடைய செல்வாக்கைப் பெறாத கட்சிகள் இவ்வாறானதொரு நிலைக்கு மக்களைத் தள்ளலாமென முன்பே கூறியிருந்தோம். 

இதன் காரணமாக மக்களுடைய உரிமைக்கு பாதகம் ஏற்படுமெனக் கூறினோம். இக்கட்சிகளை தேர்தலில் இருந்து விலகும்படி கோரிக்கை விடுத்தோம். அவர்கள் விலகவில்லை. அடம்பிடித்து போட்டியிட்டார்கள். தற்பொழுது மக்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். 

அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. 

யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன. 

இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்.

  • Replies 67
  • Views 2.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வடக்கு கிழக்கு மக்கள் எம்மீது கொண்ட நம்பிக்கையை மீண்டும் உலகம் அறிய நிரூபித்துள்ளார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டவர்கள். அவர்களின் நம்பிக்கையை எப்பொழுதும் நாம் காப்பாற்றியே தீருவோம்.

உந்த வசனத்தை நாற்பது வருசத்துக்கு முந்தியும் கேட்டமாதிரி கிடக்கு......:cool:

  • கருத்துக்கள உறவுகள்

2016 உடன் எல்லாம் முடியும் என்றும் சொன்னவர்.....சொன்னமாதிரியே சபாநாயகர் பதவியையும் ..வெளீநாட்டமைச்சர் பதவியையும் எடுத்திட்டால் இனப்பிரச்சினை பூச்சியமாகிவிடும் ...

  • கருத்துக்கள உறவுகள்

//யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன. //

அந்த... ஆறு வாக்குகளும், நமது சொந்தக்காரங்க போட்ட வாக்குகள்.
சம்பந்தன்... யாழ்ப்பாணத்தில், சிங்கக் கொடியை ஆட்டியதற்கு கிடைத்த எதிர்ப்பு  வாக்குகள்.:)

  • தொடங்கியவர்

இழப்பு தமிழ் சனத்துக்கும் எடுக்கவிருக்கும் அரசியல் னடவடிக்கைகளுக்கும். சம்பந்தருக்கு இல்லை.

உங்களுக்கு தெரியாதா? சம்பந்தர் மீண்டும் தெரிவாகிவிட்டார்.

அந்த இழப்பில உங்களுக்கு சந்தோசம், எதிர்பார்க்கப்பட்டதுதான்.

அந்த இழப்பு தமிழரசு கட்சிக்கு மட்டும் தான். எதிர்காலத்தில் ஶ்ரீலங்காவின் தேசியக்கட்சிகளில் நம்பிக்கை வைத்து அக்கட்சிகளுக்கு நேரடியாக வாக்களித்து தமது தமக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திக்கு தமிழ்மக்கள் பெற்று கொள்ளவேண்டும். சம்ந்தன் போன்ற அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் தமிழர்களை ஏமாற்றாமல் இருக்க ஶ்ரீலங்கா தேசியத்தின் இணைந்து அந்த  தேசியக்கட்சிகளை எதிர்காலத்தில் பலப்படுத்த தமிழ்மக்கள் முன்வரவேண்டும். 

ha ha

  • கருத்துக்கள உறவுகள்
 
அவர்கள் பெற்ற சிறியளவு வாக்குகள் காரணமாக கூட்டமைப்பின் பெரிய வெற்றி பாதிக்கப்பட்டிருக்கிறது. 

யாழ். மாவட்டத்தில் 6, ஆசனங்களை பெறுவதற்கு 6 வாக்குகள் தான் போதாமல் இருந்துள்ளன. 

இந்நிலைக்கு பொறுப்பானவர்கள் அந்தக் கட்சிகள் மக்களுக்கு பதில் கூற வேண்டும். தமது பொறுப்பை அவர்கள் முழுமையாக ஏற்க வேண்டும்

அந்த ஆறாவது உறுப்பினர்  கிடைக்காதபடியால் ஈழத்தமிழர்களின் பிரச்சனைக்கு எட்ட இருந்த தீர்வுக்கான காலவரை அடுத்த பாராளுமன்றத் தேர்தல் வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாம்.

ha ha

என்ன சிரிப்பு சூறாவளி சார். கிழக்கு மாகாண மக்கள் 1977 பல ஆண்டிலேயே முன்மாதிரியாக தேவநாயம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார்கள். அவரை துரோகியாக்கி இந்த கூட்டணி பயன் பெற்றது. அன்று கிழக்கு மாகாண கல்குடா தொகுதி மக்களின் முன்மாதிரியைப் அனைத்து பின்பற்றி இருந்தால் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கும். பாழாய்போன தமிழரசு கூட்டணிகள் தமது உணர்ச்சிப்பேச்சுகளால் அதை கெடுத்து பதவிகளை பெற்று எதை சாதித்தார்கள். 

இதெல்லாம் எங்களுக்குத்தெரியாத

அல்லது அனுபவப்படாத பகுதி என்று சிலர் இங்க நினைச்சு எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

எல்லாம் செய்து பார்த்து

வரலாற்றை புரட்டித்தான் பிரபாகரன் சொன்னார்

சிங்களவன் உண்மையான புத்தனாக இருந்தால் நான் எதற்கு ஆயுதம் தூக்கணும் என்றும்

தமிழீழக்கோரிக்கையிலிருந்து விலகினால் என்னையும் எவரும் சுடலாம் என்றும்...

  • கருத்துக்கள உறவுகள்

இழப்பு தமிழ் சனத்துக்கும் எடுக்கவிருக்கும் அரசியல் னடவடிக்கைகளுக்கும். சம்பந்தருக்கு இல்லை.

உங்களுக்கு தெரியாதா? சம்பந்தர் மீண்டும் தெரிவாகிவிட்டார்.

அந்த இழப்பில உங்களுக்கு சந்தோசம், எதிர்பார்க்கப்பட்டதுதான்.

எடுக்கவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் எவை என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா சூறாவளி.
அப்போதான் எங்களுக்கு அந்த ஆறாவதின் தாக்கம் விளங்கும்.

எடுக்கவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் எவை என்பதை கொஞ்சம் விளக்க முடியுமா சூறாவளி.
அப்போதான் எங்களுக்கு அந்த ஆறாவதின் தாக்கம் விளங்கும்.

ஐயோ அது ராஜதந்திரம். வெளியே சொல்லக்கூடாது. 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சிரிப்பு சூறாவளி சார். கிழக்கு மாகாண மக்கள் 1977 பல ஆண்டிலேயே முன்மாதிரியாக தேவநாயம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தார்கள். அவரை துரோகியாக்கி இந்த கூட்டணி பயன் பெற்றது. அன்று கிழக்கு மாகாண கல்குடா தொகுதி மக்களின் முன்மாதிரியைப் அனைத்து பின்பற்றி இருந்தால் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்திருக்கும். பாழாய்போன தமிழரசு கூட்டணிகள் தமது உணர்ச்சிப்பேச்சுகளால் அதை கெடுத்து பதவிகளை பெற்று எதை சாதித்தார்கள். 

1977 ஆம் ஆண்டு 500 வாக்குகளால் கல்குடா தொகுதியில் தேவநாயகம் வெற்றி பெற்றவர்........அதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் மக்கள் அதிகமாக அந்த தொகுதியில் வாழ்கின்றனர்(ஒட்டமாவடி,வாழைச்சேனை,ஏறாவூர்)கிழக்கு மாகாண கல்குடா தொகுதி  தமிழ் மக்கள் இன்றும் தமிழ்தேசியத்திற்குதான் ஆதரவாக உள்ளனர்

அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.  எதிர்காலத்தில் ஶ்ரீலங்க தேசிய கட்சிகளில் சேருவதற்கு மூலம் எம்மக்கள் எதிர் நோக்கும் அபஙிருத்தி வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் போன்ற  பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும். 

Edited by trinco

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்களத்தில் சிலர் தமிழ்கூட்டமைப்பின் வெற்றியை ஏதோ இதுவரைக்கும் கிடக்காத வெற்றி போல் துள்ளிக்குதிக்கின்றனர். அவர்களுக்கு உண்மையில் இலங்கையின் அரசியல் வரலாறு தெரியாது என்றே நினைக்கின்றேன்.:grin:

அனுபவம் இல்லாத குரங்கின் கதைதான் அண்ணா

இனித்தான் இறுகப்போகுது ஆப்பு...

புலிகள் பொறுப்பில் இருக்கும் போது எம்மைப்போட்டு வதைத்தார்கள் அல்லவா?

இனி எங்க காலம்....

சிங்களம் தட்டில வைச்சிருந்தது

பிரபாகரனிடம்  கொடுக்க விருப்பமில்லையாம்

ஐனநாயக வேட்டியோட வந்தா கொடுப்பார்களாம்

எடுத்து வரட்டும் 2016க்குள்.......

குறிப்பு - ஆனால் நாங்க வாந்தி எடுக்கமாட்டம். பொறுப்பாக இருப்பம். முடிந்தவரை உதவுவம்.

Edited by விசுகு

யாழ்களத்தில் சிலர் தமிழ்கூட்டமைப்பின் வெற்றியை ஏதோ இதுவரைக்கும் கிடக்காத வெற்றி போல் துள்ளிக்குதிக்கின்றனர். அவர்களுக்கு உண்மையில் இலங்கையின் அரசியல் வரலாறு தெரியாது என்றே நினைக்கின்றேன்.:grin:

1950 களில் இருந்து தமிழரசுக்கட்சி வெற்றி பெற்று வருகிறது. இது தான் இந்த இனத்தின் இழி நிலைக்கு காரணம். 

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தான் தவறு என்று கூறுகிறேன்.  எதிர்காலத்தில் ஶ்ரீலங்க தேசிய கட்சிகளில் சேருவதற்கு மூலம் எம்மக்கள் எதிர் நோக்கும் அபஙிருத்தி வேலைவாய்ப்பு பொருளாதார முன்னேற்றம் போன்ற  பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியும். 

அதைதவறு என்று  நாங்கள் சொல்ல முடியாது......இவ்வளவு அழிவை கண்ட பின்பும் தமிழ் தேசியம் அல்லது தமிழன் என்ற அடையாளத்தை வெளிபடுத்த அந்தமக்கள் பாடுபடுகிறார்கள்......ஆகவேதான் இந்த தேர்தலிலும் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு அதிக வாக்குகளை வழங்கியுள்ளனர்.......

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு தசாப்தத்துக்கும் மேலாக இது தான் நடக்குது மிஸ்டர் சம்பந்தன். நீங்களும் கதிரைக்கு போனதோட செய்ய வேண்டியதை மறந்திட்டே இருக்கிறீங்க. சனமும்.. செத்தவன்.. வீழ்ந்தவன் போக.. மறதியில் வாக்குப் போட்டுக்கிட்டு தான் இருக்குது. 

ஆனால் பாருங்க.. இதனால் ஒரு விமோசனமும் இல்லை. எல்லாம் சுத்த வேஸ்டு. :grin::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

1950 களில் இருந்து தமிழரசுக்கட்சி வெற்றி பெற்று வருகிறது. இது தான் இந்த இனத்தின் இழி நிலைக்கு காரணம். 

எதை இனத்தின் இழிவு நிலை என்று நீங்கள் சொல்கின்றீர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா நீங்கள் இப்படி குத்தி முரியிறீங்கள் .....இன்னும் நாலு மாசம் தான் 
நாப்பது ...அம்பது வருட பிரச்சினைக்கு நாலு மாசத்தில தீர்வு எடுத்து தாறவைகளை பாராளுமன்றம் அனுப்பாமல் விட்டால் நமது பிள்ளைகள் மட்டுமல்ல அவர்களது பிள்ளைகளும் நமது கல்லறையை தோண்டி பிணத்தை எடுத்து செருப்பால அடிப்பினம் ...அப்படியான வரலாற்று தவறினை நாம் செய்யவில்லை...இவற்றை அப்படியே விட்டுவிடுவோம் நாலு மாசம்தான் ....இன்னும் நாலு மாசம்தான் 

வடிவாக

தெளிவாக கேட்டனீங்களே

2016 ஆ

12016ஆ???

பலர் திரும்ப திரும்ப சிங்களம் என்ன செய்யும் என்று எமக்கு தெரியும் எமது வரலாறு அதை தெளிவாக சொல்லி நிற்கின்றது என்கின்றார்கள் .அனைத்து தமிழர்களுக்கும் அது தெரியும் எமது அரசியல்வாதிகள் உட்பட .

வெள்ளையன் விடுதலை தரான் என்று தொடர்ந்து போராடாமல் இருந்திருந்தால் வெள்ளையர்களிடம் இருந்து விடுதலை அடைந்த நாடுகள் எதுவும் விடுதலை அடைத்திருக்க மாட்டாது .

வாக்கே இல்லாமல் இருந்த பெண்கள் ஆண்கள் எம்மை காலம் பூராக இப்படியே தான் வைத்திருப்பார்கள் என்று போராடாமல் விட்டிருந்தால் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தே இருக்க மாட்டாது .இன்றும் பெண்கள் தங்கள் முழு விடுதலைக்கு போராடிக்கொண்டே இருக்கின்றார்கள்

அமெரிக்காவில் இருந்த கருப்பர்கள்  நினைத்தே பார்த்திருக்கமாட்டார்கள் நிறவெறிக்கு எதிராக போராடி தாம் இன்று இப்படி ஒரு நிலைக்கு வருவார்கள் என்று இன்றும் நிறவெறிக்கு எதிராக தொடர்ந்தும் போராடித்தான் வருகின்றார்கள் .

இந்த வெற்றியடைந்த போராட்டங்களுடன் ஒப்பிடும் போது எமது எதிரி ஒரு கால் தூசு.

எம்மில் சிலர் நாங்கள் இயன்ற மட்டும் போராடிவிட்டோம் இனி எதுவும் சரிவராது என்பது போல கருத்துக்கள் வைக்கின்றார்கள், இந்த சலிப்பு ஆயுத போராட்டம் தந்த தோல்விதான் காரணம் .

இலங்கையில் இன அடக்குமுறை இருக்கு மட்டும் அடக்கப்படுபவர்கள் வெற்றி பெறமட்டும் ஏதோ விதத்தில் அதற்கு எதிராக போராடிக்கொண்டு தான் இருக்கபோகின்றார்கள் .

இது சிங்களத்திற்கும் மிக தெளிவாக தெரியும் ஆனால் அட்சியில் உள்ளவர்கள் அதிகாரமும் ஆணவமும் அடுத்த தேர்தல் வெற்றி பற்றிய அரசியலும் இருக்கமட்டும் ஒரு தீர்வை கொடுக்க மறுத்துக்கொண்டே இருப்பார்கள் .நடந்து முடிந்த யுத்தமும் ஆணவத்தில் ஆடியவர்களின் அரசியலும் அவர்களுக்கும்  மிக பெரியதொரு  பாடம்.

சுதந்திரத்தின் பின் தொடங்கிய இனப்பிரச்னைக்கெதிரான போராட்டம் வெவ்வேறு பரிணாமங்களை அவ்வப்போது கடந்து இலங்கை தீவில் அரசியல் தீர்வு ஒன்று வரும் சாத்தியம்  நெருங்கிக்கொண்டே வருகின்றது .

சர்வதேச அரசியலும் நிலைமைகளிலும் பெரிய மாற்றம் வந்திருகின்றது அதனால் தான் ஒன்றுபட்டு ஒரு யதார்த்தமான தீர்விற்கு தமிழர்கள் முன் வரவேண்டும்.

குறிப்பு -இன்று இந்த நிலைமைக்கு தமிழர்  போராட்டம் வந்திருக்கின்றதென்றால் சரி பிழைகளுக்கு அப்பால் சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து இன்று வரை அதற்காக போராடிய அனைவரும் தான் காரணம் .  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜனநாயக வேட்டுக்கள் முடிந்து வெற்றியும் வந்து விட்டது.......இனியென்ன வித்தைகள் தான்......வரிசை வரிசையாக வருவார்கள் பாருங்கள். :cool:

அர்ஜீன் அண்ணை சூப்பர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.