Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன்

Featured Replies

எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன்
 
இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது  நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வேண்டி எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருமளவில் திரண்டு வந்து எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்திருப்பது மீண்டுமொரு முறை எமது  மக்களது அரசியல்  ஞானத்தினை முழு உலகிற்கும் வெளிக்காட்டியிருக்கின்றது. முதற்கண்  எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.

மேலும், என் மீது நம்பிக்கை வைத்து 58,043 விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கி யாழ்.தேர்தல் தொகுதியில் என்னை பெரு வெற்றி பெறச் செய்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன். இந்த வெற்றி வெறும் ஆரம்பமேயாகும்.

எதுவித மறு பலனும் எதிர்பாராது தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு எனது வெற்றிக்குத் துணை நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள் உரித்தாகுக.  உங்கள் உதவியும், ஒத்துழைப்பும் எதிர் வரும் காலங்களிலும் நிச்சயமாக எனக்கு அவசியம்.

வீடு வீடாகச் சென்று என்னை அறிந்திரா மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்ததிலும், எனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளோடு இருந்தவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைத்ததிலும் எனக்கென உழைத்த இளைஞருக்குப் பெரும் பங்குண்டு. அவர்களது தெளிந்த சிந்தனையும், அரசியல் விளக்கமும் தமிழர் அரசியலின் எதிர்காலம் தொடர்பில் எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கின்றது.

இதில் முகநூல் வளியே எனது முகநூல் தளத்தைத் தாண்டிப் பல இளைஞர்கள் எனது வெற்றிக்குப் பங்காற்றியதை நான் அறிவேன். உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

எனக்குக் கிட்டிய வெற்றியை  எனது அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இந்தத் தேர்தலில் களமாடி வீழ்ந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறியே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.

பெருவாரியான பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிப் பிரச்சாரங்களைத் தாண்டி மக்கள் என்னைத் தெரிவு செய்தது எனது மென்வலு அரசியலின் மீதான அவர்களது நாட்டத்தையும், நம்பிக்கையையுமே பிரதிபலிக்கின்றது. இந்த வெற்றி மென்வலுவிற்கான வெற்றி. இந்த வெற்றி எம் எதிர்காலத்திற்கான வெற்றி. இந்த வெற்றி எமது இளைஞருக்கு உரித்தான வெற்றி.

இனியும் தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்கவியலாது. இனியும் எம் இளைஞர் தொகை தொகையாய் மாளக் கூடாது. இதுவரை கண்ட இன்னல்களின் பிரதிபலனை நோக்கி மதியுடன் முன்செல்ல வேண்டிய காலமிது. உணர்ச்சிப் பேச்சுக்களும், வெற்றுக் கோஷங்களும் எமது அரசியலைப் பலவீனப்படுத்துமேயன்றி ஒரு போதும் விடியலைத் தராது.

தந்த ஆணைக்குப் பணிகிறேன். அதற்கே சேவை செய்வேன். எமது தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை எட்டவென முழு மூச்சுடன் பணியாற்றும் அதேவேளை மக்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், எமது இளைஞரைப் பலப்படுத்துவதிலும் எனது காத்திரமான பங்களிப்பை வழங்குவேன்.

வாக்களித்ததுடன் மக்களாகிய உங்களது பங்களிப்பு நின்று போவதில்லை. என்னை நெறிப்படுத்துவதிலும், எமது அரசியலை வலுப்படுத்துவதிலும் உங்கள் வகிபாகம் என்றும் இருக்க வேண்டும்.

- See more at: http://www.tamilmirror.lk/152486#sthash.rukLspIR.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது கிருஷ்ணகிரி. தமிழர்களின் விதியை எனி கடவுளாலும் மாற்ற முடியாது. அதள பாதாளத்தில் விழுந்து கிடக்கப் போகும் தமிழரை இரட்சிக்க.. இன்னும் எத்தனை தசாப்தங்கள் கடக்க நேருமோ. எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். :rolleyes::unsure:

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் தான் சம்பந்தருக்குப் பிறகு தலைவர். இவர் இந்த ஜங்ஸரில தமிழருக்குக் கிடைத்தது பெரிய வரப்பிரசாதம். நிதானமும் தெளிவும் அறிவும் உள்ள ஒரே தமிழ் அரசியல்வாதி இவர். 

  • கருத்துக்கள உறவுகள்
எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன்

இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது என்றும் அந்த வெற்றிக்கு வழிசமைத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துகொள்வதாக தெரிவித்துள்ள யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், எம் விதியை நாம் வரைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பில், வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி கூறும் வகையில் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரே வருடத்தில் இத்துடன் இரண்டாம் தடவை தெளிவான சிந்தையுடன், தமது  நீண்ட நாள் போராட்டத்தின் இலட்சியம் சிதறாமல், தம் வாழ்வின் மறுமலர்ச்சியை வேண்டி எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பெருமளவில் திரண்டு வந்து எமது மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்திருப்பது மீண்டுமொரு முறை எமது  மக்களது அரசியல்  ஞானத்தினை முழு உலகிற்கும் வெளிக்காட்டியிருக்கின்றது. முதற்கண்  எமக்கு வாக்களித்த அனைவருக்கும் எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன்.

மேலும், என் மீது நம்பிக்கை வைத்து 58,043 விருப்பு வாக்குகளை எனக்கு வழங்கி யாழ்.தேர்தல் தொகுதியில் என்னை பெரு வெற்றி பெறச் செய்த அத்தனை தமிழ் உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றேன். இந்த வெற்றி வெறும் ஆரம்பமேயாகும்.

எதுவித மறு பலனும் எதிர்பாராது தமது நேரத்தையும், உழைப்பையும் செலவிட்டு எனது வெற்றிக்குத் துணை நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கும் எனது பணிவன்பான நன்றிகள் உரித்தாகுக.  உங்கள் உதவியும், ஒத்துழைப்பும் எதிர் வரும் காலங்களிலும் நிச்சயமாக எனக்கு அவசியம்.

வீடு வீடாகச் சென்று என்னை அறிந்திரா மக்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்ததிலும், எனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் கேள்விகளோடு இருந்தவர்களது சந்தேகங்களைத் தீர்த்து வைத்ததிலும் எனக்கென உழைத்த இளைஞருக்குப் பெரும் பங்குண்டு. அவர்களது தெளிந்த சிந்தனையும், அரசியல் விளக்கமும் தமிழர் அரசியலின் எதிர்காலம் தொடர்பில் எனக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கின்றது.

இதில் முகநூல் வளியே எனது முகநூல் தளத்தைத் தாண்டிப் பல இளைஞர்கள் எனது வெற்றிக்குப் பங்காற்றியதை நான் அறிவேன். உங்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

எனக்குக் கிட்டிய வெற்றியை  எனது அரசியலுக்குக் கிடைத்த வெற்றியாகவே நான் பார்க்கின்றேன். இந்தத் தேர்தலில் களமாடி வீழ்ந்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் எனக் கூறியே இந்தத் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.

பெருவாரியான பொய்க் குற்றச்சாட்டுக்கள், போலிப் பிரச்சாரங்களைத் தாண்டி மக்கள் என்னைத் தெரிவு செய்தது எனது மென்வலு அரசியலின் மீதான அவர்களது நாட்டத்தையும், நம்பிக்கையையுமே பிரதிபலிக்கின்றது. இந்த வெற்றி மென்வலுவிற்கான வெற்றி. இந்த வெற்றி எம் எதிர்காலத்திற்கான வெற்றி. இந்த வெற்றி எமது இளைஞருக்கு உரித்தான வெற்றி.

இனியும் தமிழ் மக்கள் இழப்புக்களை சந்திக்கவியலாது. இனியும் எம் இளைஞர் தொகை தொகையாய் மாளக் கூடாது. இதுவரை கண்ட இன்னல்களின் பிரதிபலனை நோக்கி மதியுடன் முன்செல்ல வேண்டிய காலமிது. உணர்ச்சிப் பேச்சுக்களும், வெற்றுக் கோஷங்களும் எமது அரசியலைப் பலவீனப்படுத்துமேயன்றி ஒரு போதும் விடியலைத் தராது.

தந்த ஆணைக்குப் பணிகிறேன். அதற்கே சேவை செய்வேன். எமது தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை எட்டவென முழு மூச்சுடன் பணியாற்றும் அதேவேளை மக்களது அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், எமது இளைஞரைப் பலப்படுத்துவதிலும் எனது காத்திரமான பங்களிப்பை வழங்குவேன்.

வாக்களித்ததுடன் மக்களாகிய உங்களது பங்களிப்பு நின்று போவதில்லை. என்னை நெறிப்படுத்துவதிலும், எமது அரசியலை வலுப்படுத்துவதிலும் உங்கள் வகிபாகம் என்றும் இருக்க வேண்டும்.

காத்திருக்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கதிர்காமர் என்ன செய்வார் என்பது தெரிந்ததே. இதுக்கு காத்திருப்பு வேறையா..?! :rolleyes:

சுமந்திரன் தன்னை பெரிய அரசியல்வாதியாக காட்ட விளையும் ஒரு அப்புகாத்து காரியக் கோமாளி. 

தந்தை செல்வா போன்றவர்களை விட இவர் ஒன்னும் வெட்டிப்புடுங்கப் போறதில்லை. அவர்களாலேயே முடியாததை.. இவர் கிழிப்பார். இவர் வெறும் வார்த்தைகளால் வர்ணம் காட்டி தன் பிழைப்பை ஓட்ட தமிழ் மக்கள் மீது சவாரி செய்ய தயாராகி வருகிறார். இவரின் அனைத்து நடவடிக்கைகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு இவர் மக்களை ஏய்க விளையும் தருணங்கள் சரியாக இனங்காணப்பட்டு முன் கூட்டி மக்கள் எச்சரிக்கப்படுவது அவசியம். இன்றேல்.. இன்னொரு கதிர்காமரை உருவாக்கி தமிழ் மக்களை பெரும் அழிவுக்குள் தள்ளிவிட்ட தவறு மீள திரும்ப நேரிடும். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சின்னக் கதிர்காமர் என்ன செய்வார் என்பது தெரிந்ததே. இதுக்கு காத்திருப்பு வேறையா..?! :rolleyes:

சுமந்திரன் தன்னை பெரிய அரசியல்வாதியாக காட்ட விளையும் ஒரு அப்புகாத்து கோமாளி. 

தந்தை செல்வா போன்றவர்களை விட இவர் ஒன்னும் வெட்டிப்புடுங்கப் போறதில்லை. அவர்களாலேயே முடியாததை.. இவர் கிழிப்பார். இவர் வெறும் வார்த்தைகளால் வர்ணம் காட்டி தன் பிழைப்பை ஓட்ட தமிழ் மக்கள் மீது சவாரி செய்ய தயாராகி வருகிறார். இவரின் அனைத்து நடவடிக்கைகளும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு இவர் மக்களை ஏய்க விளையும் தருணங்கள் சரியாக இனங்காணப்பட்டு முன் கூட்டி மக்கள் எச்சரிக்கப்படுவது அவசியம். இன்றேல்.. இன்னொரு கதிர்காமரை உருவாக்கி தமிழ் மக்களை பெரும் அழிவுக்குள் தள்ளிவிட்ட தவறு மீள திரும்ப நேரிடும். tw_angry:

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளித்தல்

அவர்களது உத்தரவாதம் 2016

பொறுத்துத்தான் பார்ப்பமே...

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் வரதராஜப் பெருமாளுக்கும் வாக்குப் போட்டவை தான் ஒரு காலத்தில். அன்றைய சூழலில் இருந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி போட்டவை. அதேபோல் இன்றுள்ள சூழலில் உள்ள அச்சுறுத்தல்களை சுமந்திரனும் டக்கிளசும் சித்தார்த்தனும் பாவித்துக் கொண்டிருக்கிறார்களே ஒழிய.. இந்த சந்தர்ப்பவாதிகளின் குள்ள நரித்தனம் தெரிந்து மக்கள் வாக்களிக்கவில்லை. இந்த குள்ள நரிகள் தொடர் கண்காணிப்புக்குள் வைக்கப்பட்டு இவற்றால் மக்களும் அவர் தம் உரிமைகளும் குதறப்படுவது தடுக்கப்பட முன் கூட்டிய எச்சரிக்கைகள் வழங்கப்படுவது கட்டாயம். சிங்களத்தை சர்வதேசத்தை கண்காணிக்கும் அதே தீவிரம் இவர்கள் மீதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்று கொண்டிருந்தால்.. மக்கள் தமக்கு தாமே மண் அள்ளிப் போடும் முடிவுகளில் இருந்து அவர்களை காக்க முடியாமல் போகும். :rolleyes:

Edited by nedukkalapoovan

நாங்கள் எங்கேயோ போய் விட்டோம் .

யாரோ தூரத்தில் நின்று ஏதோ இப்பவும் சொல்வது போல கிடக்கு .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் தேர்வு செய்த பின்னும் உங்க என்னம்மா முக்கல், முனகல்...

வாங்கையா, போய் புள்ள குட்டிங்கள படிக்க வைப்பம் :oO:

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு அரசியலில்ல அடியும் தெரியாது நுனியும் தெரியாது. வரதராஜ பெருமாள் ஒருபோதும் மக்களால் தெரிவுசெய்யப்பட்டு முதல்வராகவில்லை. போட்டியில்லாத காரணத்தால் நேரடியாக முதல்வரானவர் என பெரிசுகள் சொல்லக் கேள்விப்பட்டதுண்டு. என்ன செய்ய்யிறது இப்பிடி பாங்க்ரப்ட் ஆயிடுச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

மீராவின் லிங்கிலே சொல்லப்பட்டு இருக்கு வடக்கில் uncontested என்று.

இப்பெல்லாம் புலவாளிகளின் தானைத்தலைவர் எழுதுறதுக்கு அவங்களே லைக் போடுவதில்லை :)

பாம்புக்குப் பல்லுப் புடுங்குவது ஓகே

ஆனா பாம்பாட்டிக்கே புடுங்கீட்டாங்களே, பல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி பெரிசுகள் சொல்லக் கேள்விப்பட்டது என்று எழுதியதாலேயே நான் அந்த இணைப்பை இணைத்தேன். வேறொரு காரணமும் இல்லை. 

மீராவின் லிங்கிலே சொல்லப்பட்டு இருக்கு வடக்கில் uncontested என்று.

இப்பெல்லாம் புலவாளிகளின் தானைத்தலைவர் எழுதுறதுக்கு அவங்களே லைக் போடுவதில்லை :)

பாம்புக்குப் பல்லுப் புடுங்குவது ஓகே

ஆனா பாம்பாட்டிக்கே புடுங்கீட்டாங்களே, பல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிலருக்கு வரதராஜப் பெருமாளின் அராஜக இந்திய எசமான அரசியல் காலம் பற்றி சரியாகத் தெரியவில்லைப் போலும். அதுங்களுக்கு வாலுங்க விசிறிகள் வேற. இதில லைக் கணக்குப் பண்ண ஒருத்தர். முடியல்லடா சாமி. இதுங்க தான் இப்ப தமிழ் மக்களின் அரசியல் வழிகாட்டிங்க. ஊர் உருப்பட்ட மாதிரித்தான். tw_blush:

EPRLF and some other radical groups entered into mainstream politics and the elections were conducted for the newly created provincial council. EPRLF and its allies won the election with the help of Indian Peace Keeping Force (IPKF). Perumal became chief minister on 10 December 1988.[1]  

https://en.wikipedia.org/wiki/Annamalai_Varadaraja_Perumal

இங்கு சிலர் எங்கேயோ போயிட்டினமாம். உண்மை தான்.. முன்னர் இந்தியாவில் இருந்து கொண்டு செய்ததை.. இப்ப ரொரன்டோவில் இருந்து கொண்டு செய்யினம். ------------------------------------------- tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

உருவாக்கப் படவிருக்கும் சுமந்திரன் கண்காணிப்புக் குழுவுக்குத் தலைவராக நான் நெடுக்கை வழி மொழிகிறேன்! ஆனா தலைவரானால் இங்கிலாந்தில நிண்டு துள்ளப் படாது, சிறிலங்காவுக்குப் போய் அங்க இருந்து நேரடியா பூதக் கண்ணாடி வைச்சுக் கண்காணிக்க வேணும்! பொது மல சலகூடத்தில அலுவலகம் வைச்சு இயங்கும் பதிவு.கொம் செய்தி எல்லாம் கண்காணிப்பு ஆதாரமாகப் பாவிக்கக் கூடாது? ஓகேயா? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த தைப்பொங்கல் தமிழீழத்தில்: அமரர் அமிர்தலிங்கம்.

எம் விதியை நாம் வரைவோம்: சுமந்திரன்

அழிந்ததும் அழிவதும்  அழியப்போவதும் ஈழத்தமிழ் மக்கள் மட்டுமே
 
  • கருத்துக்கள உறவுகள்

காஸ்  அடுப்பு வெடித்து...மனைவி மரணம்.....செய்தி..!

கணவன்...எம் விதியை நாமே வரைந்து கொள்ளுவோம்...!

வெளியாட்கள் ஒருவரும் எட்டிப் பார்க்கக் கூடாது!:innocent:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசிய முன்ளணி தொடர்ந்தும் தனது செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். அதன் கிளைகள் கிராமங்கள் தோறும் நிறுவப்பட வேண்டும். Nhதல்விகளால் மனம் துவண்டு விடாமல் அனைத்துத் தேர்தலில்களிலும் பங்கு பெற வேண்டும். அப்பொழுதுதான் கட்சி உயிர்ப்புடன் இருக்கும். 5 வருடத்திற்கொருமுறை செயற்படுவதால் மக்கள் மனதில் ஆழமாக பதிய முடியாது. தமிழத் தேசியக் மகூட்டமைப்பின் தொடர்சியான தமிழர் விரோத செயற்பாடுகளில் மக்கள் வெறுப்படையும் வேளையில் அவர்க் ஒரு மாற்றுத் தெரிவைத் தேடும் பொழுது தமிழ்த்தேசிய முன்னணி அங்கு உயிர்ப்புடன் இருந்தால்அக்கள் இதனைத் தெரிவு செய்வார்கள்.தங்களிலும்பார்க்க அதிக விருப்பு வாக்குகளைப் பெறும் அரசியல்வாதிகளை கூட்டமைப்பின் தலைப்பீடம் ஓரங்கட்டியே வந்திருக்கிறது.கஸன்>கஸேந்திரகுமார்>பத்மினி>விக்கிஐயா>அனந்தி அந்த வரிசையில் அடுத்த குறி சிறிதரனாக இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.