Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிப் போரில் இந்திய இராணுவம் பங்கேற்கவில்லை! - என்கிறது இராணுவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருணா இந்திய இராணுவம் இந்தப் போரில் பங்கு பற்றியது என சொல்கிறார்...அவர் இப்ப "றோ"வின் ஆள் என கொஞ்சப் பேர் சொல்லினம்.அவர் "றோ"வின் ஆளாக இருந்தால் இந்திய இராணுவம் போரில் பங்கு பற்றியதாக சொல்வரா?

  • Replies 74
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நீங்க வேற ரதி,

அவையளுக்கு நான் றோவா? இல்லையா எண்ட குழப்பமே இன்னும் தீரவில்லை.

ஆனால் கருணா இந்தியாவின் சுற்று வட்டத்துக்குள் வந்துவிடவில்லை என இதை வைத்து தீர்மானிக்க முடியாது.

ஆங்கிலத்தில் இதை double bluff என்பார்கள் அப்படியும் இருக்கலாம்.

சகாறா,

இப்பெல்லாம் எனக்கு பிளேட்டில் சோத்தை கண்டாலும், மாலைதீவின் போஸ்டல் ஸ்டாம்பை கண்டாலும் அர்ஜூன் நினைப்பே வருகுது.

அந்தளவுக்கு அவர் மேல் இங்கே சேற்றை வாரி இறைத்துள்ளார்கள் வெள்ளை வேட்டிக் கண்ணியவான்கள்.

முப்பது வருடங்களுக்கு முன்னர் உங்களைப் போன்றவர்கள் வெளிக்கிட்டு மக்களை போராட்டப்பாதைக்கு இழுத்துவிட்டு சில வருடங்களிலேயே மக்களை  அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய் எந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட வெளிக்கிட்டீங்களோ அவர்களிடமே அடைக்கலமாகி நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள் புலிகள் அப்படியல்ல மக்களோடே தங்கள் வாழ்வு முடியும்வரைக்கும் பயணித்தார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் இடைவெளியில் விட்டுவந்ததால் மக்களுக்கும் புலிகளுக்குமான உறவைப் புரிந்து கொள்ள முடியாத நிலைக்குள் நீங்கள்... புலிகள் தவறு செய்யவில்லை என்று இங்கு யாரும் முக்கி முனகவில்லை தவறுகள் இருந்துள்ளன. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு முன்னர் உங்களைப் போன்றோர் இப்படி உச்சாணிக் கொம்பில் ஏறிநின்று குத்தி முறியவில்லை. இப்போதும் புலி வெற்றியடைந்திருந்தால்  பொத்திக் கொண்டு போயிருப்பீர்கள். புலிகள்தான்  பெரும் சதிக்குள் அகப்பட்டு தங்களைப்பலியாக்கி அற்றுப்போய்விட்டார்களே இப்போது தியாகங்களால் கட்டியமைக்கப்பட்ட அமைப்பையும் தன்னலம் கருதாத போராளிகள் மாவீரர்கள் அனைவரையும் இழுத்து வைத்து சப்பி துப்புவதில் என்ன ஒரு வில்லத்தனம்? நீங்கள் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களைப் பட்டியல் இடுங்கள் அவர்களை அடையாளங்காட்டுங்கள் தூய்மையான தாயக வேட்கைக்கு தங்களையே ஆகுதியாக்கி தங்கள் வாழ்வையே இரணமாக்கிய போராளிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அத்தகையோர் மேல்தான் உங்கள் ஆவேசம் என்றால் சந்திக்கு அவர்களை இழுத்து வாருங்கள். அதைவிட்டுவிட்டு இரணங்களைச்சுமந்து கொண்டு வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி இருக்கும் போராளிகளைப் பதம் பார்க்கும் அளவுக்கு உங்கள் எழுதுகோலை நகர்த்தாதீர்கள். திரும்பத் திரும்ப முப்பது வருடம் முன்னால் என்று நாங்கள் சொல்வது நீங்கள் ஆரம்பித்துவிட்டு காணாமல் போன பிரதேசத்தில் அந்த முப்பது வருடங்களுக்குள் வாழ்ந்து துயர் பட்டதனால்தான்......

கண்ணுக்கு முன் நடந்த எமது ஆயுத போரட்டத்தை பற்றி பொய் எழுத கூடாது .அடுத்த தலைமுறைக்கு வேண்டுமென்றால் அந்த பொய்களை சொல்லி நம்ப வைக்கலாம் .

"முப்பது வருடங்களுக்கு முன்னர் உங்களைப் போன்றவர்கள் வெளிக்கிட்டு மக்களை போராட்டப்பாதைக்கு இழுத்துவிட்டு சில வருடங்களிலேயே மக்களை  அம்போ என்று விட்டுவிட்டு காணாமல் போய் எந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட வெளிக்கிட்டீங்களோ அவர்களிடமே அடைக்கலமாகி நம்பிய மக்களை நட்டாற்றில் விட்டுவிட்டு உங்களைக் காப்பாற்றிக் கொண்டீர்கள் புலிகள் அப்படியல்ல மக்களோடே தங்கள் வாழ்வு முடியும்வரைக்கும் பயணித்தார்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்"

இப்படி ஒரு பொய்யை எழுத எப்படி மனம் வந்தது .

புலிகள் தடை செய்ய முதல் எந்த இயக்கம் போய் அரசின் காலடியில் விழுந்தது .தடை செய்த பிறகு போக வழியின்றி அலைந்தவர்கள் தான் சிங்கள அரசின் காலடியில் விழுந்தார்கள் .பிறகு இந்திய இராணுவ காலத்தில் புலிகளுக்கும் அதே நிலைமை ஏற்பட்டதுதான் பெரும் துயரம் .

எனக்கு  கூட வெளிநாடு திரும்பி வரும் நோக்கம் எள்ளவும் இருக்கவில்லை . நாட்டில் மாற்று இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் பலர் வேலை படிப்பு என்று இருந்தவர்களை கூட புலிகள் வேட்டையாட தொடங்கினார்கள் .புளொட்டின் உள்முரண்பாட்டை புத்தகமாக கொண்டுவந்த கோவிந்தனை கூட கொன்றது புலிகள் தான் .வேட்டை தொடரத்தான் இருந்த இயக்கத்தை விட்ட பிறகும் இந்த நிலையா என்று பலர் நாட்டை விட்டு ஓடினார்கள் .

கடைசி வரையும் புலிகள் தான் நின்றார்கள் என்பது முழுஅபத்தம் தாங்கள் தான் நிற்கவேண்டும் என்று பிரபா  போட்ட திட்டம் அது  .நாலு இயக்க தலைவர்களும் கை கோர்த்து எடுத்த படம் வந்தபோது உமா சொன்னது இவர்கள் சாவு பிரபாவால் தான் என்று .அதுதான் நடந்தது .

மிக நம்பிக்கையுடன் எழுச்சியுடன் தொடங்கிய ஆயுத போராட்டம் தோற்றதற்கு ஒரே காரணம் -தானே எல்லாம் என்று நினைத்தவர் தான் .

நிழலியின் பச்சையை பார்க்க சிரிப்பு வந்தது இவரா சரிநிகரில் வேலை செய்தார் .

  • கருத்துக்கள உறவுகள்

#நாட்டில் மாற்று இயக்கங்களில் இருந்து பிரிந்தவர்கள் பலர் வேலை படிப்பு என்று இருந்தவர்களை கூட புலிகள் வேட்டையாட தொடங்கினார்கள்#

இது நச்

#வேட்டை தொடரத்தான் இருந்த இயக்கத்தை விட்ட பிறகும் இந்த நிலையா என்று பலர் நாட்டை விட்டு ஓடினார்கள் #

இது டபுள் நச்

பிரபா பிரேமதாசாவிடம் சரணாகதி = ராஜதந்திரம்.

புலிகளின் கொலைவெறித்தாக்குதலுக்கு பயந்து ஆமியிடம் சரண்டர் ஆனவர்கள் = துரோகிகள்.

அநேகமாய் நல்லா அயன் பண்ணி கட்டிவந்த வெள்ளை வேட்டியை இண்டைக்கு அர்ஜூன் கிழிக்காமல் விடார் போல இருக்கு.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் தாங்கள் செய்யும் அராஜகத்தின் வலி தெரியாது ஆனால் அதை உணர்பவன் நிலை அப்படி அல்ல .

சிங்கள அரசுகள் செய்த இந்த அராஜகங்களை பெரும்பான்மை சிங்கள மக்கள் உணரவில்லை ஏனெனில் அவர்களுக்கு அந்த வலி தெரியாது .

அதேதான் புலிகளுக்கும் அவர்கள் ஆதரவாளர்களுக்கும் தாங்கள் செய்த அராஜங்கங்கள் மாற்று இயக்கத்தவர்களுக்கு எப்படி வலித்திருக்கும் என்று இன்றுவரை புரியவில்லை .

நிழலியின் பச்சையை பார்க்க சிரிப்பு வந்தது இவரா சரிநிகரில் வேலை செய்தார் .

நீங்கள் யாரை எதிர்க்கிறீர்களோ அவர்களைப் பட்டியல் இடுங்கள் அவர்களை அடையாளங்காட்டுங்கள் தூய்மையான தாயக வேட்கைக்கு தங்களையே ஆகுதியாக்கி தங்கள் வாழ்வையே இரணமாக்கிய போராளிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் அத்தகையோர் மேல்தான் உங்கள் ஆவேசம் என்றால் சந்திக்கு அவர்களை இழுத்து வாருங்கள். அதைவிட்டுவிட்டு இரணங்களைச்சுமந்து கொண்டு வாழ்க்கையையே கேள்விக் குறியாக்கி இருக்கும் போராளிகளைப் பதம் பார்க்கும் அளவுக்கு உங்கள் எழுதுகோலை நகர்த்தாதீர்கள். திரும்பத் திரும்ப முப்பது வருடம் முன்னால் என்று நாங்கள் சொல்வது நீங்கள் ஆரம்பித்துவிட்டு காணாமல் போன பிரதேசத்தில் அந்த முப்பது வருடங்களுக்குள் வாழ்ந்து துயர் பட்டதனால்தான்......

சரிநிகர் பத்திரிகை என்றுமே உங்களைப் போன்று காழ்ப்புணர்வுடன் புலிகளை விமர்சித்தது கிடையாது. புலிகளின் பெண் போராளிகள் கூட அதில் கட்டுரைகளையும் பதில்களையும் எழுதிக் கொண்டு இருந்தார்கள் என்பதை நீங்கள் அறிந்து இருக்க மாட்டீர்கள். சரிநிகரின் புலிகளின் மீதான விமர்சனம் அனைத்தும் புலிகளின் படுகொலைகளுக்கு எதிரானதாகவும் சகோதர யுத்ததிற்கு எதிரானதாகவும், ஆயுதம் தரிக்காத அரசியல்வாதிகள் / ஊடகவியலாளர்கள் /இலக்கியவாதிகள் மீதான  தாக்குதல்களையே விமர்சித்துக் கொண்டு இருந்தது. இதன் காரணத்தினால் தான் மகிந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் அன்று ஆசிரியராக இருந்த சிவக்குமாரை கைது பண்ணியும் இருந்தது.

சரிநிகரின் விமர்சனங்களுக்கும் உங்களின் விமர்சனங்களுக்கும் இடையில் மிகப் பெரும் இடைவெளி இருக்கின்றது. உங்களால் என்றுமே எம்மைப் போல ஆரோக்கியமாக விமர்சிக்கவும் முடியாது. அந்தளவுக்கு வெறுப்புணர்வும், பழிவாங்கும் உணர்வும் மட்டுமே உங்களுக்கு உள்ளது

சகாறாவுக்கு பச்சை குத்தியது நான் highlight பண்ணி இருக்கும் அவரது கருத்துக்குத்தான். ஆனால் அதை புரியும் அளவுக்கு உங்கள் அரசியல் கருத்துகள் ஆரோக்கியமானவை அல்ல.

நன்றி

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

அட வாங்க மச்சி உங்களைத்தான் இந்தத்திரிப்பக்கம் காணவில்லை என்று யோசித்தேன் வாங்கோ உங்கள் பங்குக்கு எடுத்து விடுங்கோ  சொல்லாத விடயங்களை எல்லாம் கொண்டு வந்து போட்டு சும்மா போகிறவர்களையும் ஒரு தடவை கல்லை எடுத்து எறியுங்கோ என்கிற மாதிரி இருக்கிறது உங்கள் இரத்தினச்சுருக்கம்.:grin:

சகாறா அக்கா 
உங்களுக்கு தெரியாததா ....இந்த நாட்டாமைகள் எல்லாவற்றுக்கும் கருத்தெழுதுவதில் வல்லவர்கள் என்று 
கோச்சா போற போக்கில் மற்றவர்களுக்கு வகுப்பெடுக்கிறேன் என்ற கணக்கில் அவரே அர்யுனுக்கு சோத்துப்பாசல், மாலைதீவு என்று கூழ்முட்டை அடித்துவிட்டார் ....இவங்க எல்லாம் தாங்களே தங்களை நாத்திக்கொள்வினம் ....வேற ஒருவர் தேவையில்லை  

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி,

சிண்டு முடியுறாராம் ???

அமெச்சூர் பசங்க.

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி,

சிண்டு முடியுறாராம் ???

அமெச்சூர் பசங்க.

உலகமே சேர்ந்து அழிக்கும் அளவுக்கு எம் நியாயமான போராட்டத்தை யார் திசை திருப்பினார்கள்?

இதை யோசிக்க மூளை கனஅளவு காணாது, ஆனால் உலகமே சேர்ந்துதான் எம்மை அழிக்க முடிந்தது என்று வீண் ஜம்பம் காட்ட ரெடி.

எல்லாமே நாமே நமக்கு கொடுத்துகொள்வது தானே 
சமீப காலமாக யாழில் ஒன்று மட்டும் நடக்கிறது ....தங்களை தாங்களே பீத்திக்கொள்வது 

கடைசியாக நீங்களே சொல்லுங்கள் மேலே கிழிந்து தொங்கியது யார் என்று ......விழுந்தாலும் எங்களுக்கு மீசையில ஒன்றும் ஒட்டுவதேயில்லை தெரியுமோ 

முதல் வரியில் உலகமே சேர்ந்து அழிக்கும் அளவுக்கு 
ரெண்டாவது வரியில் உலகமே சேர்ந்து தான் அழித்தது என்று வீண் ஜம்பம் 

என்ன சொல்ல வருகிறீர்கள் முதல் வரியில் உலகமே அழித்ததை ஏற்று கொள்கிறீர்கள் .....ரெண்டாவது வரியில் அதனை சொன்னதை வீண் ஜம்பம் என்கிறீர்கள் .....அப்ப உண்மை என்ன உலகம் அழித்ததா இல்லையா ......அப்ப சிங்களவனிண்ட அடி அப்படி என்றது ......சொல்லுங்கள் கோபால் ....அத்தனையும் வாந்தியா  கோப்பால்  

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் மூளை கனவளவுப் பற்றாக்குறை என்றேன்.

அரிவரி லெவலுக்கு இறங்கி விளக்குகிறேன் அப்பவாவது விளங்குதா எண்டு பாப்பம்.

1) உலகமே சேர்ந்துதான் அழித்தது. இதை நான் ஒருபோதுமறுத்ததில்லை.

2) ஏன் ஜென்ம விரோதிகளான அமரிக்கா,சீனா, இந்தியா, பாக்கி எல்லாம் ஒன்றாக சேர்ந்து எம்மை அழித்தனர். அங்குதான் எமது நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக்கி, ஊருடன் பகைத்து வேருடன் கெட்டவரின் முட்டாள்தனம் மிளிர்கிறது.

3) இந்த முட்டாள்தனத்தை - பார்தீர்களா சிங்களவனால் முடியாமல் ஊருடன் சேர்ந்துதான் எம்மை அழிக்க முடிந்ததது என்று மார்தட்ட அடிப்படை அறிவு கூட அற்றவர்களால் தான் முடியும்.

எதிரியின் பக்கம் உலகநாடுகள் அனைத்தையும் திருப்பி எமது இனத்தின் வரலாற்றுத்தோல்வியை ஏற்படுத்தியவர்களை தீர்கதரிசி என்று சொல்லுபவர்களை பார்த்து பின்பக்கத்தால் சிரிப்பதை - ஆணவம் என்று நீங்கள் கருதினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 ஏன் ஜென்ம விரோதிகளான அமரிக்கா,சீனா, இந்தியா, பாக்கி எல்லாம் ஒன்றாக சேர்ந்து எம்மை அழித்தனர். அங்குதான் எமது நியாயமான போராட்டத்தை பயங்கரவாதமாக்கி, ஊருடன் பகைத்து வேருடன் கெட்டவரின் முட்டாள்தனம் மிளிர்கிறது.

மரம் பழுத்தால் வௌவாலை கூவி அழைப்பதில்லை.

இலங்கையின் முக்கியத்துவம் அது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அதற்காக போட்டி போட்டுக்கொண்டு உதவி செய்தார்களே தவிர வேறொரு புண்ணாக்கு காரணங்களுமில்லை.

அவர்களின் சுயநலபாதையில் ஈழத்தமிழர் பலிக்கடாவாக்கப்பட்டார்கள்.

மூளை கன அளவு பற்றாக்குறையில்லாமல் இருந்தால் மட்டும் போதாது. பல கோணங்களில் சிந்திக்கும் தன்மையும் வேண்டும்.

அதற்கு  முதல் 'மூளை 'இருக்கவேண்டும் .:grin:

முள்ளிவாய்க்காலில் வெளுக்கும் போது உலகமே கண்டுகொள்ளுதில்லை ஏனென்டால் எங்களிட்ட எண்ணெய் இல்லை என்றார்கள் .

இப்ப என்னவெண்டால் மரம் பழுத்தால் வௌவால் கதை விடுகின்றார்கள் .

உலகம் ஏன் சொல்லுவான் எங்களுக்கே தெரியும் எமது போராட்டம் பயங்கரவாதமாக மாறிவிட்டது அது அழிய வேண்டும் என்று .

அழியாவிட்டால் இன்று நடப்பவைகள் அனைத்தும் கனவுதான் .

உங்களுக்கு என்ன இன்னமும் பெரிய மண்டபத்தில் மூவாயிரம் அதிக மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றிவிட்டு கொத்துறோட்டியுடன் போய்விடுவீர்கள் .உண்டியல் நிரம்பிவிடும் .

சிரியாவில் நடப்பதை பார்த்தாவது எமது போரட்டத்தில் நடந்தது நடந்துவிட்டது என்று இனியாவது மனிதர்கள் ஆகமுயலுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு எங்கடை அரசியல் போராட்டத்தை ஆயுதபோராட்டம் ஆக்கினது ஆரெண்டு இன்னும் தெரியாது போலை கிடக்கு....
சிரியாவிலை உண்மையாய் என்ன நடக்குதெண்டு தெரிஞ்சால் இப்பிடியெல்லாம் கன்னா பின்னா எண்டு எழுதமாட்டியள்.
இனியாவது உண்மையான செய்திகளை படியுங்கள் கேளுங்கள் பாருங்கள். :innocent:

அட சிரியாவில் யுத்தம் இல்லாமல் அமைதி பூங்காவாக இருக்கு போல கிடக்கு ,

நான் இந்த பிபிஸி,சி என் என் ,அல்சியரா  பார்த்து பிழையா கதைக்கின்றன்  .

அண்ணருக்கு எமது இறுதி போரில் இந்தியன் ஆமியை கண்ட ஆட்கள் இப்ப சிரியா களத்தில் நிற்கினம் போல .

  • கருத்துக்கள உறவுகள்

 (போர்) ஆடத் தெரியலேன்னா  அரங்கு பிழை. யாராவது ஆடி சாதிச்சிட்டா ஆட்டம் பிழை  (தப்பு). இப்பிடிப் போகுது பிழைப்பு. எல்லாம் பாதியில ஓடியதால் ஏற்ப்பட்ட வியாதி.

.

ஐயாமாரே ஒண்டு  செய்வோமா? 
வீம்புக்கு  வேளாமை  செய்யாமல்  எல்லோரும்  சேர்ந்து  எந்த எந்த  இராணுவம் எப்போது, எப்படி  ஸ்ரீலங்கா  இராணுவத்துக்கு  உதவியது  எனப்  பட்டியலிடுவோமா?
உதாரணத்துக்கு வவுனியாவில்  இந்திரா 2 முப்பரிமாண ரேடார்.

மன்னிக்கவும் நியோ
இந்திரா 2 இருபரிமாண ரேடார் (2 D) முப்பரிமாணமல்ல  
முப்பரிமாண ரேடார் இந்திரா லான்சா வகையை சேர்ந்தது அது இலங்கைக்கு வழங்கப்படவில்லை 
ஓசியாக கொடுக்க கட்டுப்படியாகாது .........
இது தவிர பாகிஸ்தான் விமானிகள் ஆரம்பத்தில் இலங்கை விமானிகளுக்கு MIG 27 தொடர்பான பயிற்சிகள் வழங்கியிருக்கிறார்கள் 
அத்துடன் MIG கொள்வனவு செய்த காலத்தில் இலங்கை விமானிகளின் அவ் விமானம் தொடர்பான திறனின்மை காரணமாக 
பல தடவைகள் விடுதலை புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளார்கள் (ஆதாரம் : SLAF இல் Aircraft Maintenance Engineer ஆக வேலை செய்யும் நெருங்கிய முஸ்லிம் நண்பர் சொன்னது ஜெர்மனியில் பயிற்சி பெற்றதால் இவரும் இவரது குழுவினரும் தான் ஆரம்பத்தில் MIG விமான ஹாங்கரில் பணியாற்றினர் .....அவர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார் அதனை நானும் பார்த்திருக்கிறேன் )
 
அமெரிக்கா வழங்கிய புலிகளின் ஆயுதக்கப்பல் தொடர்பான  செய்மதி புகைப்படங்களை ஆராய எங்கட மோட்டு சிங்களவனால் முடியவில்லை என்பதால் இவர்களுக்காவே தங்களுடைய ராணுவ கல்லூரியில் புலமைப்பரிசில் ஒன்றை உருவாக்கி ஒரு சிங்கள ராணுவ அதிகாரியை கூப்பிட்டு அவருக்கு சொல்லிக்கொடுத்து அனுப்பியதாக அமெரிக்க ராணுவ ஆய்வாளரே கூறியுள்ளார் 

இதை தவிர ஆதாரமற்ற கதைகள் பல (வெள்ளை பொஸ்பரஸ் ,கொத்தணிக்குண்டுகள் -இவை ஓரளவு நிரூபிக்கப்பட்டுவிட்டன, ஆழ ஊடுருவும் படைக்கு British SAS பயிற்சியளித்தது )
எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி 
2009 இற்கு முன் சிங்கள ராணுவம் இப்படி புத்தி சாலிகளாக இருக்கவில்லை ....2009 இற்கு முன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமலா இருந்தது 
அதெப்பிடி 2009 இல் அதி புத்திசாலிகளாக மாறினர் 

எல்லாவற்றையும் விட பெரிய கேள்வி 
2009 இற்கு முன் சிங்கள ராணுவம் இப்படி புத்தி சாலிகளாக இருக்கவில்லை ....2009 இற்கு முன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமலா இருந்தது 
அதெப்பிடி 2009 இல் அதி புத்திசாலிகளாக மாறினர்.

(80 ) எங்கட பழைய போடியலத்தான்  கேக்கணும் .ஆனால் அவை tw_dissapointed_relieved:

2009 இற்கு முன் சிங்கள ராணுவம் இப்படி புத்தி சாலிகளாக இருக்கவில்லை ....2009 இற்கு முன் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கூட கிடைக்காமலா இருந்தது 
அதெப்பிடி 2009 இல் அதி புத்திசாலிகளாக மாறினர் 

அவர்கள் அதி புத்திசாலிகளாக மாறவில்லை. புலிகளின் தலைமை அடிமுட்டாள்தனமான முடிவுகள் எடுத்ததுதான் காரணம். சிறுகச் சிறுக செய்த தவறுகள் 2009ல் பூதாகரமாக திருப்பி தாக்கியது. அப்பாவி வன்னி சனமும் சேர்ந்து அதற்கான விலையை குடுக்க வேண்டியதாயிற்று. 

மோட்டு சிங்களன் துவக்கு பிடிக்க கூட தெரியாமல் 30 வருடம் போர் புரிந்தான் என்று நம்பும் ஒரு கூட்டம் இன்னும் எம்மத்தியில் இருப்பது வேடிக்கை. புகைப்படங்களையே ஆராய தெரியாமல் இருந்தாங்களாம் அமெரிக்கன் வந்து வாழைப்பழத்த உரிச்சு தீத்தி விட்டவனாம்.  என்ன கொடுமை சரவணா இது

US played crucial role in LTTE defeat - Gotabaya

http://www.adaderana.lk/news.php?nid=24058

One turning point in the war came when the Sri Lankan navy was able to sink these Tiger supply ships: “Between 2006 and 2008 we destroyed 12 of these floating armouries.” What made this possible? “The Americans were very, very helpful. Most of the locations of these ships were given to us by the Americans,” Rajapaksa says.

American satellite technology located the ships and enabled the Sri Lankans to hit them. Before that, the Americans had been somewhat ambivalent about the Sri Lankan struggle. They never remotely justified or approved of the Tigers,

ஸ்டேட்மன்ட் தந்திருப்பது குப்பனோ சுப்பனோ அல்ல கோத்தபாய ராஜபக்ஷ ....ஆகவே எல்லா லோகேசன்களையும் சொறிலங்கா நேவியே கண்டுபிடித்து அழித்தது என்று இப்போது தான் தெரிகிறது 

But what the SLAF didn’t envisage was one of the precious US aircraft coming under friendly fire by the Sri Lanka Navy (SLN). The incident, involving a Beechcraft and the SLN, in Trincomalee, on the night of June 5, 2007, sent shock-waves through the defence establishment. SLN gunners fired anti-aircraft guns at the aircraft approaching China Bay airfield, believing an LTTE fixed-wing aircraft was approaching SLN troop career, Jetliner. The SLAF China Bay, too, had wrongly identified the approaching aircraft as an LTTE fixed- wing plane, on a destruction mission, and directed a missile attack, though it didn’t materialised.

http://slwaronterror.blogspot.com/2014_09_01_archive.html

ஒரு காலத்தில் விமான சத்தம் கேட்டாலே கரண்டை கட்பன்னிவிட்டு கண்ட பாட்டிற்கு சுட்டு தள்ளியதன் பலன் (வந்த விமானம் யாருடைய விமானம் என்று கூட கண்டறிய முடியாதவர்கள் ) அதிலும் கொடுமை இதை உலகத்துக்கே சொல்லி கொடுக்கிறினம் 

Also, on a request made by the Sri Lankan government, the US government the 7th Fleet USS Blue Ridge under the purview of the US-Hawai Pacific Fleet that was stationed in the Indian Ocean had continuously provided satellite images of the activities of the ships belonging to the LTTE, especially in the transportation of arms. The satellite images were provided to the Sri Lankan military through the US embassy in Colombo.

Since the Sri Lanka Army did not have a qualified officer to read these satellite images, the US embassy in Colombo made arrangements to grant a scholarship to Major Kelum Maddumage to follow an intense course at the Colorado Military Academy.

Afterwards, then Navy Commander, Rear Admiral Wasantha Karannagoda was taken to the famous Pearl Harbor in Honolulu to give him a special training on preventing activities of the LTTE that take place in 700 nautical miles off the shore in the deep seas and to pursue and attack.

Following the special training, the 7th Fleet USS Blue Ridge has provided technical assistance and supervision for the Sri Lanka Navy to carry out operations to destroy the LTTE’s activities in the deep seas based on the satellite images received by the military.

The Sri Lanka Navy managed to destroy all LTTE vessels that were transporting hi-tech military weapons and equipment in the deep seas due to the assistance received by the US military.

எப்பிடி  இருக்கு .....வாழைப்பழம் 

அர்யூன் அது தவறு இது தவறு என்று 30 வருடத்திற்கு முந்திய விடயத்தை மட்டுமே பேசுகிறீர்களே அன்றி இன்று ஆற்றக்கூடிய விடயங்களை அவற்றை முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மற்றும் இங்கு இருக்கக்கூடிய தவறுகளையும் அத்தவறுகளை களைவதற்கான வழிகளையும் சுட்டிக் காட்டுவதைவிட்டுவிட்டு நீங்கள் சொல்ல முற்படும் விடயத்தை தேவையில்லாத திசையில் நகர்த்துவதாக உங்கள் பதிவுகள் மலினப்படுகின்றன. இன்றைய தவறுகள் பற்றி விவாதியுங்கள் எதிர்வரும் காலத்தில் எவ்வகையில் எல்லோரும் கரம் கோர்த்து நன்மைகளை உருவாக்கலாம் என்று எதிர்காலம் நோக்கிய விடயங்களை  இன்று செயற்படவேண்டிய விடயங்களை பதிவிட்டால் உங்கள் மீதான இருக்கக்கூடிய புரிதல் இல்லாத தன்மையை அகற்றமுடியும் அல்லவா...

"வரலாறு எனது வழிகாட்டி" சொன்னவர் வேறு யாருமில்லை. இங்கு குத்தி முறியும் பலரது தானைத் தலைவர்தான் அது. முருகனுக்கே நிகரானவன் என்று போற்றிப் புகழும் தலைவர் தேவை ஆனால் அவர் கருத்து தேவையில்லை - இங்கு பலருக்கு.

அறிவு என்பது வெறும் புத்தகப் படிப்பில்லை. தேதா கூறியது போன்று அது கடந்த காலங்களின் அனுபவம், அவற்றினால் கிடைத்த அறிவு என்பவை சேரந்துதான் ஒரு முழுமையான அறிவை கொடுக்க முடியும்.

இங்கு சிலர் 30 வருடங்களை இலகுவாக மறந்து விட்டு எமது பிரச்சனைகளை அணுகலாம் என்பது பகடியான விடயம். வருங்காலம்/எதிர்காலம் பற்றிய திட்டமிடலில் இறந்தகாலம் பற்றிய ஆய்வு முக்கியமானது. இறந்த காலத்தில் விட்ட தவறுகள் நிச்சயமாக விமர்சிக்கப்பட வேண்டியதே. இதனூடாகவே எதிர்காலம் பற்றிய சிந்தனை, திட்டங்கள் சிறப்படையும்.

இங்கு அர்ஜுன் கடந்த காலங்களை விமர்சிப்பது கூட எதிர்காலமாவது நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு எதிர்பார்ப்பில்தான் என்பது எனது ஊகம். வெறுமனே கடந்த கால தவறுகளை ஏற்க மறுப்பதாலோ, நியாயப் படுத்துவதாலோ எதுவுமே நடக்கப் போவதில்லை. மாறாக எமது எதிர்காலமும் கடந்த 30 வருடம் போல சூன்யமாவதற்கே வழிவகுக்கும்.

அர்ஜுனின் பல கருத்துக்கள் கடந்த கால விமர்சனங்களே. சில வேளைகளில் அர்ஜுனின் வார்த்தைப் பிரயோகங்கள் தப்பாக இருக்கலாம். ஆனால் அவரது பல கருத்துக்களின் பின்னால் எமது தாயகத்தின், மக்களின் எதிர்காலம் பற்றிய ஏக்கம், பயம் இருப்பதை என்னால் உணர முடிகின்றது.

முடிந்தால் வெறுமனே புலி ஆதரவாளர்கள் எதிர் ஏணையவர்கள் என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து கருத்தாடுவோம். நடந்தவை நடந்தவைதான் மறக்க முடியாது மறக்கவும் கூடாது. இவை படிப்பினைகள் மட்டுமில்லை படிப்பிக்கப்பட்ட பாடங்கள். மறுபடியும் இப்பிழைகள் நடக்கக் கூடாது என்றால் முதலில் பிழைகள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பின்னர் பிழைகளை எதிர் காலத்தில் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் படவேண்டும்.

தாயகத்தில் மற்றவர்களை ஆயுத முனையில் அழித்து, விடுதலைக்கான போராட்டத்தை ஆயுத முனையில் தமது கையில் எடுத்து இத்தனை அழிவிற்கும் காரணமான புலிகளை விமர்சிக்காமல் எமக்கு எந்த விதமான தீர்வுக்கும் வழியில்லை. 

கடந்த 30 வருட கால தவறுகள் யாவற்றிற்கும் ஸதாபன ரீதியாக புலிகள் இயக்கமும் பொறுப்பு. இவ் இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் பிரபாகரனே தார்மீகப் பொறுப்புக்குள்ளாகின்றார். எனவே இங்கு பிரபாகரன் மீதான குற்றச்சாட்டல்களும் விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே.

இங்கு யாரும் விதிவிலக்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

2000ஆண்டு சிங்கள  பள்ளி சிறுவர்கள் 
"ஜெயசிக்குறு" என்று கொண்டு வன்னிக்குள் கல்லெறிந்துகொண்டு வந்ததால் 
ஓயிற அலை ஓயாத அலை என்று புலிகள் படம் காட்டிச்ச்சினம்.

அப்பவே எங்களது சிங்கள இராணுவம் வந்திருந்தால் ......?
புலிகளுக்கு ஆப்பு அன்றே அடிக்கபட்டு இருக்கும். 

இது கூட சில வாலுகளுக்கு இன்னும் புரியல்லை ......

US played crucial role in LTTE defeat - Gotabaya

http://www.adaderana.lk/news.php?nid=24058

One turning point in the war came when the Sri Lankan navy was able to sink these Tiger supply ships: “Between 2006 and 2008 we destroyed 12 of these floating armouries.” What made this possible? “The Americans were very, very helpful. Most of the locations of these ships were given to us by the Americans,” Rajapaksa says.

American satellite technology located the ships and enabled the Sri Lankans to hit them. Before that, the Americans had been somewhat ambivalent about the Sri Lankan struggle. They never remotely justified or approved of the Tigers,

ஸ்டேட்மன்ட் தந்திருப்பது குப்பனோ சுப்பனோ அல்ல கோத்தபாய ராஜபக்ஷ ....ஆகவே எல்லா லோகேசன்களையும் சொறிலங்கா நேவியே கண்டுபிடித்து அழித்தது என்று இப்போது தான் தெரிகிறது 

But what the SLAF didn’t envisage was one of the precious US aircraft coming under friendly fire by the Sri Lanka Navy (SLN). The incident, involving a Beechcraft and the SLN, in Trincomalee, on the night of June 5, 2007, sent shock-waves through the defence establishment. SLN gunners fired anti-aircraft guns at the aircraft approaching China Bay airfield, believing an LTTE fixed-wing aircraft was approaching SLN troop career, Jetliner. The SLAF China Bay, too, had wrongly identified the approaching aircraft as an LTTE fixed- wing plane, on a destruction mission, and directed a missile attack, though it didn’t materialised.

http://slwaronterror.blogspot.com/2014_09_01_archive.html

ஒரு காலத்தில் விமான சத்தம் கேட்டாலே கரண்டை கட்பன்னிவிட்டு கண்ட பாட்டிற்கு சுட்டு தள்ளியதன் பலன் (வந்த விமானம் யாருடைய விமானம் என்று கூட கண்டறிய முடியாதவர்கள் ) அதிலும் கொடுமை இதை உலகத்துக்கே சொல்லி கொடுக்கிறினம் 

Also, on a request made by the Sri Lankan government, the US government the 7th Fleet USS Blue Ridge under the purview of the US-Hawai Pacific Fleet that was stationed in the Indian Ocean had continuously provided satellite images of the activities of the ships belonging to the LTTE, especially in the transportation of arms. The satellite images were provided to the Sri Lankan military through the US embassy in Colombo.

Since the Sri Lanka Army did not have a qualified officer to read these satellite images, the US embassy in Colombo made arrangements to grant a scholarship to Major Kelum Maddumage to follow an intense course at the Colorado Military Academy.

Afterwards, then Navy Commander, Rear Admiral Wasantha Karannagoda was taken to the famous Pearl Harbor in Honolulu to give him a special training on preventing activities of the LTTE that take place in 700 nautical miles off the shore in the deep seas and to pursue and attack.

Following the special training, the 7th Fleet USS Blue Ridge has provided technical assistance and supervision for the Sri Lanka Navy to carry out operations to destroy the LTTE’s activities in the deep seas based on the satellite images received by the military.

The Sri Lanka Navy managed to destroy all LTTE vessels that were transporting hi-tech military weapons and equipment in the deep seas due to the assistance received by the US military.

எப்பிடி  இருக்கு .....வாழைப்பழம் 

இப்போ உண்மை பேசும் உத்தம புருசர்கள் என்று உதாரணம் காட்டபடுபவர்கள் 

மகிந்தா ,கோத்தா ,கருணா .:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ உண்மை பேசும் உத்தம புருசர்கள் என்று உதாரணம் காட்டபடுபவர்கள் 

மகிந்தா ,கோத்தா ,கருணா .:grin:

அண்ணையிண்ட கொமடிக்கு அளவே இல்லை .....
இதே வாத்தி அணியினர் தான் கருணா தலைவரை கடத்தி கொண்டுவந்து கொழும்பில் வைத்து போட்டார்கள் என்று சொன்னதற்கு விசில் அடித்தவர்கள் 
அண்ணை அப்ப எங்கே போனது இந்த அறிவு .....எங்களுக்கு மூளை கனவளவு குறைய இருக்கலாம் ....ஆனால் மூளை குழம்பிப்போகவில்லை 
அதிலும் ஒருவர் சாலியபுர வீடியோ வேற ரிலீஸ் பண்ணினார் ..... நான் அப்பவே சொல்லல இந்த அணியால மட்டும் தான் எல்லாவற்றுக்கும் கருத்து எழுத முடியும் என்று 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பொய்யர்களின் பொய்க்கு உள்ளேயே 
இவளவு விடயம் எட்டி பார்க்குது .....

உண்மை வாய் திறந்தால் ......?

இது கூட இன்னும் புரியல்ல ...
இதுக்குள்ள ராணுவ விடயம் பற்றி பேச்சு 

சந்திரனும் சூரியனும் சும்மா இருக்க 
விளக்கு விளம்பரம் கேட்டிச்சாம் 

கோத்தபாயா பாதுகாப்பு அமைச்சர் .

அது என்ன என்று தெரியுமா ?
என்று கூட புரியல்ல ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.