Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்திய மீனவர்களால் வலைகள் நாசம்

Featured Replies

article_1441804190-aa.png

வல்வெட்டித்துறை கடற்கரையில் இருந்து பத்து கிலோமீற்றர் தூரம் வரை வந்த இந்திய மீனவர்களின் றோலர்கள் செவ்வாய்க்கிழமை (08) , அப்பகுதியிலிருந்து சிறிய கண்ணாடி இழைப்படகுகளில் சென்ற மீன்வர்களின் வலையை நாசமாக்கியதில் இரண்டு இலட்சம் தொடக்கம் மூன்று இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்றைய தினம் காற்றுக்கடலாக இருந்ததனால் கடற்படையினர் கடலில் இல்லாததால், 500 வரையான றோலர்களில் வந்த இந்திய மீனவர்களே இவ்வாறு அட்டகாசம் புரிந்ததாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு கடற்படையினர் தொலைபேசி இலக்கங்களை வழங்கியுள்ள போதிலும், கடலில் காற்று அதிகமாக வீசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் வருவதில்லை என மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 10 மணிக்கு வல்வெட்டித்துறை கடற்பரப்புக்கு வந்த இவர்கள் மறுநாள் புதன்கிழமை அதிகாலை 4  வரை அப்பகுதியில் நின்றிருந்ததாகவும், அவர்களுக்கு அருகில் செல்லும்போது, தமது சிறிய கண்ணாடி இழைப் படகுகளை, பெரிய றோலர்களால் முட்டி சேதப்படுத்துவதாகவும், வாள்களை கொண்டு மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதிக மீன்கள் பிடிபடும் தற்போதைய பருவகாலத்தில், மாதகல் முதல் நாகர்கோவில் வரை இவர்களின் அட்டூழியம் தொடர்ந்து தமது வளங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/153825/2015-09-09-13-10-21#sthash.3OuIjI85.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இந்திய மீனவர்களைப் பிடித்து முதுகில் குறி வைக்கவேண்டும். அப்பதான் அடுத்தமுறை வரப் பயப்படுவர்கள். அத்துடன் மீண்டும் மீண்டும் வருபவர்களைக் கண்டறியலாம்.

இந்த இந்திய மீனவர்களைப் பிடித்து முதுகில் குறி வைக்கவேண்டும். அப்பதான் அடுத்தமுறை வரப் பயப்படுவர்கள். அத்துடன் மீண்டும் மீண்டும் வருபவர்களைக் கண்டறியலாம்.

இதையே சிங்கள மீனவர்கள் செய்தால் சிறு முணுப்பு கூட செய்யாமல் கம்மென்று இருக்க வேண்டும். அப்படியே யாராவது முணுமுணுத்தால் அவர்களை தீவிரவாதிகள் என்று திட்டி யாழ் இணைத்தில் கருத்து எழுதவேண்டும். 

இதையே சிங்கள மீனவர்கள் செய்தால் சிறு முணுப்பு கூட செய்யாமல் கம்மென்று இருக்க வேண்டும். அப்படியே யாராவது முணுமுணுத்தால் அவர்களை தீவிரவாதிகள் என்று திட்டி யாழ் இணைத்தில் கருத்து எழுதவேண்டும். 

ஆக யாருவேனுன்னாலும் அடிக்கலாமா? 

வல்வெட்டித்துறை இலங்கையில் இருக்கு .

இந்தியா வேறு நாடு என்பது கூட இங்கு பலருக்கு தெரியாது போல கிடக்கு .

வல்வெட்டித்துறை தமிழர்களின் தலைவன் பிறந்த தேசம். அது தமிழீழத்தில் தான் இருக்குது.

இங்க ஒருத்தரும் தேசப்படம் குறிப்பது பற்டி கதைக்கேல்ல

வல்வெட்டித்துறை தமிழர்களின் தலைவன் பிறந்த தேசம். அது தமிழீழத்தில் தான் இருக்குது.

இங்க ஒருத்தரும் தேசப்படம் குறிப்பது பற்டி கதைக்கேல்ல

அப்ப சிறிலங்காவின் பொருட்களை வாங்காதையுங்கோ

அரசு தரும் சம்பளத்தை வாங்காதையுங்கோ

அரச வாகனங்களில் பயணிகாதையுங்கோ .

இந்தியா இலங்கை வித்தியாசமே தெரியாது அதற்குள் நாடு ஒரு கேடு. 

அவர் உங்கட தலைவர் மட்டுமே தமிழர்களின் அல்ல .

அண்ணை

தமிழர்கள் சிறீலங்காவை நிராகரித்தார்கள்

எதுவும் வேண்டாம் விட்டுவிடுங்கள்

நாம் எம்மை பார்த்துக்கொள்கின்றோம் என்றார்கள்

இது வரலாறு

இப்பொழுதும் உங்க சிங்களத்தை விட்டுவிடச்சொல்லுங்கள்

ஆகக்குறைந்தது

ஒரு பொதுசன வாக்கெடுப்புக்காகவது வரச்சொல்லுங்கள்....

அண்ணைக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று தெரிந்ததுதான் .

அருவரி பெடிகளுடன் கதைப்பது போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணைக்கும் அரசியலுக்கும் வெகு தூரம் என்று தெரிந்ததுதான் .

அருவரி பெடிகளுடன் கதைப்பது போலிருக்கு .

அண்ணைக்கு கருத்து வறுமை வரும் போது

பதில் தெரியாதபோது...

இப்படித்தான் காலைத்தூக்குவார்

யாழ் அறியும்......

Edited by விசுகு

அடேங்கப்பா புடலங்கா கொடி உறவுகளின்ட செயல் புல்லரிக்க வைக்குது. தமிழ்நாட்டு பொலிஸ் அகதியா போனவர்களை அடிச்சே கொல்லுது என்று பார்த்தா இவர்கள் எங்கள் கடலுக்கே வந்து அட்டகாசம் புரிகிறார்கள். 
இவர்களுக்கு இலங்கை நேவி தான் சரி.

இதையே சிங்கள மீனவர்கள் செய்தால் சிறு முணுப்பு கூட செய்யாமல் கம்மென்று இருக்க வேண்டும். அப்படியே யாராவது முணுமுணுத்தால் அவர்களை தீவிரவாதிகள் என்று திட்டி யாழ் இணைத்தில் கருத்து எழுதவேண்டும். 

சிங்களவன் செய்தா இந்தியனும் செய்ய வேணுமோ?  இலங்கை கடற்பரப்பில் இலங்கையர்கள் மட்டுமே மீன் பிடிக்கலாம். மறுபடியும் இந்த இந்திய ------------------ வந்தால் அவர்களை கைது செய்துவிட்டு அவர்களின் ட்ரோலர்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

Edited by நிழலி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை விடுவோம், படகுகள் விடமாட்டோம்: இலங்கை அமைச்சரின் திமிர்!

கொழும்பு: இந்திய மீனவர்களை விடுவிப்போம்; ஆனால் படகுகளையும், வலைகளையும் விடுவிக்கப் போவதில்லை என்று  இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் புதிய மீன்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மஹிந்த அமரவீர செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக அரசுடன் பேசுவதால் எந்த விதத்திலும் பலனில்லை. நாங்கள் ராஜாங்க ரீதியில் இந்தியாவின் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

தற்போது 16 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நாங்கள் எளிதில் அவர்களை விடுதலை செய்யமாட்டோம். இந்திய தூதரகத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகே இந்திய மீனவர்களை விடுதலை செய்வோம். ஆனால், அவர்களின் மீன்பிடி படகுகள், வலைகளை திருப்பித் தரமாட்டோம். தமிழ்நாட்டில் படகு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் அரசியல்வாதிகளே. அப்பாவி மீனவர்களை அரசியல்வாதிகள் தவறாக வழிநடத்துகின்றனர்.
 
இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளால், எங்களது கடல் வளங்கள் அழிந்து வருகின்றன. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு நாட்களில் தீர்வு காணப்படும் என நம்புகிறேன். இந்திய மீனவர்கள் சுமார் 60 ஆண்டுகளாக இலங்கையின் கடல் வளங்களை சுரண்டி வருகின்றனர். இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை கடற்படையினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது" என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=52207

அப்ப சிறிலங்காவின் பொருட்களை வாங்காதையுங்கோ

அரசு தரும் சம்பளத்தை வாங்காதையுங்கோ

அரச வாகனங்களில் பயணிகாதையுங்கோ .

இந்தியா இலங்கை வித்தியாசமே தெரியாது அதற்குள் நாடு ஒரு கேடு. 

அவர் உங்கட தலைவர் மட்டுமே தமிழர்களின் அல்ல .

அதைப்பற்டி நீங்க கதைக்கக்கூடாது, நீங்கள் லண்டனிலும் கனடாவிலும் தஞ்சம் கோரியவர்கள்..........எங்கள் சொறிலங்காமாதாவை வெளிநாடுகளிடம் காட்டிக்கொடுத்தவர்கள் தான் நீங்கள். நாங்கள் சம்பந்தன் ஐயாவுடன் இணைந்து சொறிலங்காவில் வாழ்கின்றவர்கள். எங்களுக்கு கிடைக்கும் வசதியெல்லாம் சீனாவும் இந்தியாவும்  தான் செய்துதருகின்றது. சொறிலங்கா ஒருமண்ணும் பிடுங்கவில்லை. ஏன் கிந்தியா தான் பயங்கரவாதத்தை அழித்து எம்மை மீட்டது. ஏன் கிந்தியா தான் போராடத்தை உருவாக்கி உங்களை கனடாவுக்கு அனுப்பிவைத்தது. ஒரு நன்றிக்கடன் வேண்டாம்.?????????????

அடுத்து KKSல் தலசெவன என்று ஒரு கொட்டல் இருக்கு உங்களுக்கு தெரியுமோ தெரியாது. அங்கை எத்தனை வெளிநாட்டுக்காரன் கப்பலில் வந்து தங்கிச்சென்றவர்கள் தெரியுமா (2015 ஜனவரி 08 வரை)? ஒரு விசாவும் இல்லை ஒரு மண்ணும் இல்லை.

நீங்கள் நான் பிறக்கமுன் நாட்டைவிட்டு ஓடியவர்கள், நான் பிறந்து வளர்ந்ததே முழுசண்டை காலத்தில். சகல இடப்பெயர்வும் பெயர்ந்து முழுச்சொத்தையும் இழந்தும் மனிதத்தன்மையை இழக்கவில்லை.  

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சேர்வயர் மனிதாபிமானம் கதைக்கிறீங்கள்...இதே எங்கட மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் தமிழ் நாட்டில் மீன் பிடித்தால் வா ராசா வந்து மீன்பிடி என ஆரத்தி ர்டுத்து வரவேற்பினமா?...முதலில் அங்குள்ள மீனவர்களுக்கு வாழ்வதாரத்திற்கான வழியைக் காட்டுங்கோ பிறகு இந்தியா,சீனாவின்ட காலைப் பிடிச்சு தொங்குங்கோ.

உங்களுக்கு இந்தியா வசதி செய்து தருதா?...நீங்கள் என்ன "றோ"வின் ஆளா?...இந்தியாவில் இருக்கும் மக்களது அடிப்படை வசதிகளையே இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை.உங்களுக்கு செய்கிறதாக சொல்கிறீர்கள்.அதற்காக கேட்டேன்

பாதிக்கப்பட்ட வல்வை மீனவர்களின் கருத்தை கேட்ட பின் தான்  எனது கருத்தௌ முன்வைக்கலாம் என  நினைக்கிறேன்:)

யாரவது  பாதிக்கப்பட்ட ஒரு வல்வை மீனவராவது  கூறட்டும் இது  இரண்டு ஒரே  மொழி பேசும் மக்களின் பிரச்சனை  அல்லது ஒரே தொழிலை செய்யும்  ஒரே  இனத்தை சேர்ந்தவர்கள்  பிரச்சனை வெளியாக்கள் தலையிட வேண்டாம்  என<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணைக்கு கருத்து வறுமை வரும் போது

பதில் தெரியாதபோது...

இப்படித்தான் காலைத்தூக்குவார்

யாழ் அறியும்......

விசுகர்! உண்மைக்கு கருத்து வறுமை என்றுமேயில்லை.

என்ன சேர்வயர் மனிதாபிமானம் கதைக்கிறீங்கள்...இதே எங்கட மீனவர்கள் எல்லை தாண்டிப் போய் தமிழ் நாட்டில் மீன் பிடித்தால் வா ராசா வந்து மீன்பிடி என ஆரத்தி ர்டுத்து வரவேற்பினமா?...முதலில் அங்குள்ள மீனவர்களுக்கு வாழ்வதாரத்திற்கான வழியைக் காட்டுங்கோ பிறகு இந்தியா,சீனாவின்ட காலைப் பிடிச்சு தொங்குங்கோ.

உங்களுக்கு இந்தியா வசதி செய்து தருதா?...நீங்கள் என்ன "றோ"வின் ஆளா?...இந்தியாவில் இருக்கும் மக்களது அடிப்படை வசதிகளையே இந்தியாவால் பூர்த்தி செய்ய முடியவில்லை.உங்களுக்கு செய்கிறதாக சொல்கிறீர்கள்.அதற்காக கேட்டேன்

ஓம் அக்கா, நான் றோவிண்ட ஆழ்தான், என்னெண்டு கண்டுபிடிச்சனீங்கள்?

முந்தி றோவிற்கு விளக்கு பிடிச்சனான் 

றோவிண்ட ஆழ் எண்டும் சொல்லலாம் றோவால் எண்டும் சொல்லலாம்.

தேம்ஸ்நதிகரையிலும், CN towerலும் நிண்டு பார்த்தால் இடக்குமுடக்காகதான் தெரியும்.

இந்தியா,சீனாவின்ட காலைப் பிடிச்சு தொங்கினது சொறிலங்காதான்.......அப்புடித்தான் நீங்கள் பிதட்டிகொள்ளும் முள்ளிவாய்காலில் புலிகள் தமிழரை அழியவைத்தனர் எல்லாம் நடந்தது.

இப்பநீங்கள் இந்தியன் வாரான் எண்டு அழுகுறீங்கள் 2009விற்குமுதல் வந்தவனோ?

புலிகள் ரோலர் மீன்பிடியை தடைசெய்தபோது அதை ஏன் தடைசெய்கிறார்கள் என்று பாராமல்.............ஐயோ இந்தப்பாழாப்போனவங்கள் சனத்தை மீன்பிடிக்கவும் விடுறாங்கள் இல்லை எண்டு கத்திய ஆக்கள்தான் நீங்கள்.

அடுத்தது என்னுமொருவிஷயம்....கிந்தியன் இலங்கை நேவிக்கு கஞ்சா கொண்டுவந்தா எங்கைவைச்சு குடுக்கிறது? டீல் பிழைத்தால் நேவி பிடிக்கும்.

வல்வெட்டிதுறையில் இந்தியன் சாரி பிஸினெஸ் நடக்குது உங்களுக்கு தெரியுமோ? எங்கடை ஆக்கள் அங்கபோய்  கொண்டுவாராங்கள்.

கணக்க விடயம் சொரிலன்காவில் நடக்கின்றது ரதிஅக்கா. தேம்ஸ்நதிகரையில் இருந்துபார்த்தால் ஒண்டும் சரியாதெரியாது. கொஞ்சம் நாட்டில வந்துநிண்டு பார்த்திட்டு கதைக்கோணும். அதுக்காக 1month holiday சரிவராது.   

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

சேர்வயர் உங்களை "றோ"வின் ஆள் என சொல்லும் போது எப்படி வலிச்சுதோ அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் நீங்கள் எழுதும் போது வலிக்கும்.

புலிகளுக்கு றோலர் படகினால் வரும் பாதிப்புத் தெரியும்.அதனால் தான் அதை தடை செய்தார்கள்.அப்பவும் அதை ஆதரித்தோம்.இப்பவும் அதைத் தான் சொல்கிறோம் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பதில் எப்பவுமே எங்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்கள் உங்கள மாதிரி இல்லை நீங்கள் புலி இருக்கும் போது புலி செய்கிறது எல்லாம் சரி என சொல்லி பின்னுக்கு போவீங்கள். புலி இல்லை என்டவுடன் மாத்தி செய்வீங்கள்...தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள் பிறகு தான் தமிழன் என்பார்கள்.நீங்கள் உங்களை இலங்கையர் என சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் எங்கட மக்கள் நல்லாய் இருக்க வேண்டும் என்டாவது நினையுங்கோ...நன்றி.வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஈழம் என்று சொன்ன பலர் இப்ப "அப்பே ரட்ட" என்று சொல்லுயினம்........

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ரோலர்கள் மீன்பிடிக்கப்பாவிக்கும் வலை இரட்டைமடிப்பு வலை எனப்படும் அது கடலின் ஆழத்தில் இருக்கும் பவளப்பாறைகளை அழித்துவிடும் அதன்பின்பு மீண்டும் பவழப்பாறைகள் தோன்றுவது கடினம் அப்படி வளந்தாலும் பழையமாதிரி நிறையவே வளர்ச்சியடையாது அப்படி வளர பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும் இந்தியர்கள் தங்கள் கடலில் அனைத்தையுமே இல்லாதொழித்துவிட்டார்கள் இப்போது அவர்களது கடற்ப்பிராந்தியத்தில் மீன்வளம் எனும் பேச்சுக்கெ இடமில்லை. கடந்த முப்பது வருடங்களாக பெருவாரியாக செழித்துக்கிடந்த எமது கடலும் இப்போது இந்திய மீனவர்களால் சூறையாடப்படுவதை எவராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது இந்திய மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடித்தால் அது இன்னுமொரு நட்டின் இறையாண்மையில் கைவக்கும் செயல் அதாவது இன்னுமொரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல் இதனை அனுமதிக்க முடியாது.

கண்ட இடத்தில் சுடவேண்டும் அல்லது இவர்களுக்குப் புத்திவராது.  

ஆந்திராவின் எல்லைக்கிராமங்களில் தேனீர்ர்கடைகளில் போண்டா திண்டுகொண்டு நின்ற இருபது தமிழர்களை பிடித்துக்கொண்டுபோய் என்கவுண்டர் போட்டதுபோன்ற விடையம் இல்லை இது, அதற்கே அந்த ம.... ....ள் கம்மெண்டுதான் கிடக்கினம் அதுவும் ஒரு நாட்டுக்குள் நடந்த விடையம் அதைச் செய்த வேளையில் இந்திய மத்திய அமைச்சர் ஸ்மித்தி இராணி வெங்கையா நாயுடு சந்திரபாவு நாயுடு இவர்கள் எல்லோருமே திருப்பதியில் ஒன்றாகத்தான் நின்றார்கள் ஆந்திர டி ஐ ஜீ  அவர்களை பிடித்ததும் சந்திரபாவு நாயுடுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது போட்டுத்தள்ளுங்கள் ஏனக்கூறும்போது ஏனையவர்கள் அருகில்தான் நின்றார்கள்.   

நாங்கள் கடலுக்கு போண்டா தின்ன வந்தனாங்கள் எனக்கூறமுடியாது

இந்திய அகதிமுகாம்களில் காலைக்கடன் கழிக்க வெளியே போகும் எமது பெண்களை வன்புணர்வு செய்வதற்கென்றே ஒரு கூட்டம் அலைவது இங்கு யாருக்கும் தெரியுமா? இப்பிரச்சினையில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டது யாருக்காவது தெரியுமா? இப்போதும் தமிழ் நாட்டின் காவல்நிலையங்களில் ஈழத்தமிழன் கைது செய்யப்பட்டால் வரவேற்கும் வார்த்தை "சிலோன்காரத் தேவடியாப்பயலே" எனும் வார்த்தை என்பது எத்தனைபேருக்குத் தெரியும்.

என் அடிமடியில் கைவைக்க வழிப்பறி செய்பவனும் எனது வளத்தினை கவர நினைப்பவனும் ஒரே வகையைச் சேர்ந்தவனே.

சுட்டுத்தள்ளு "நாலுநாளிக்குக் கத்துவானுக, அப்புறம் அப்படியியே அமந்திடுவானுக" (இந்த வசனமும் அவங்கள் சொன்னதுதான்)

Edited by Elugnajiru

சேர்வயர் உங்களை "றோ"வின் ஆள் என சொல்லும் போது எப்படி வலிச்சுதோ அதே மாதிரித் தான் மற்றவர்களுக்கும் நீங்கள் எழுதும் போது வலிக்கும்.

புலிகளுக்கு றோலர் படகினால் வரும் பாதிப்புத் தெரியும்.அதனால் தான் அதை தடை செய்தார்கள்.அப்பவும் அதை ஆதரித்தோம்.இப்பவும் அதைத் தான் சொல்கிறோம் இந்திய மீனவர்கள் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடிப்பதில் எப்பவுமே எங்களுக்கு உடன்பாடு இல்லை.

நாங்கள் உங்கள மாதிரி இல்லை நீங்கள் புலி இருக்கும் போது புலி செய்கிறது எல்லாம் சரி என சொல்லி பின்னுக்கு போவீங்கள். புலி இல்லை என்டவுடன் மாத்தி செய்வீங்கள்...தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள் பிறகு தான் தமிழன் என்பார்கள்.நீங்கள் உங்களை இலங்கையர் என சொல்ல வேண்டாம் அட்லீஸ்ட் எங்கட மக்கள் நல்லாய் இருக்க வேண்டும் என்டாவது நினையுங்கோ...நன்றி.வணக்கம்

வணக்கம்,

எங்களுக்கு நீங்கள் றோவென்று கூறினால் வலிக்கப்போவதும் இல்லை சுழிக்கப்போவதும் இல்லை. நாங்கள் ஆருக்கும் வலிக்கோனும் என்று எழுதுவதுமில்லை, சிலரின் அறப்படிச்ச கதைகளுக்கு வேறுவிதத்திலே பதில் எழுதவேண்டியுள்ளது.

"தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள்" என்று நீங்கள் கடுப்பாகுறீர்களே...... வல்வெட்டித்துறை தமிழீழத்தில் தான் இருக்குது என்று நான் கூற அதை அர்ஜுன் அண்ணா மறுத்து எழுதிய கருத்துக்கு பதில்கருத்து அவரின் வழியில் கொடுத்திருந்தேன். அதற்குள் நீங்கள் நுழைந்து அடியாட பிடியடா என்றீர்கள். இப்ப சுத்திவளைச்சு கடைசியில் சொல்குறீர்கள் தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள் என்று.

கொஞ்சம் ஆறுதலாக வாசிக்கவும் என்று விசுகு அண்ணா ஒருதிரியில் உங்களுக்கு கூறியிருந்ததையும் அவதானித்தோம். கருணாவின் பேட்டியை முழுமையாக நம்பியதையும் அவதானித்தோம். தேம்ஸ் நதிக்கரையில் நடந்த போராடத்திகதிகளில் வழு இருந்ததையும் அவதானித்தோம்.  .

நான் இங்கு தமிழ்நாட்டுக்காரன் வந்து மீன்பிடிப்பது சரியென்று எங்கும் கூறவில்லை. எங்களின் ஆக்கள் தமிழ்நாட்டில் இருந்து கள்ளக்கடத்தல் செய்வதையும், கடலில் நடக்கும் கள்ளவியாபரங்களையும், எங்களின் சொறிலங்கா கிந்தியாவிடம் அடிமைவாழ்க்கை வாழ்வதையும் இவ்வாறான சந்தர்பங்கள் கிந்தியர்கள் எல்லைமீறி வருவதற்கு காரணம் எனக்கூறியிருந்தேன்.

புலிகள் இருந்தால் இவை நடைபெறாது என்பதே உண்மை. ஆகவே புலிகள் அழிக்கப்படவேண்டும் அழிந்துவிட்டார்கள் என ஊளையிடுபர்வகள் இப்படியான பிரச்சனைகளுக்கு தூக்கிப்பிடித்துக்கொண்டு வரப்படாது

இது தவிர நாங்கள் புலிகள் இல்லையென்றவுடன் வாலைக்காட்டும் ஆக்களும் இல்லை. ஒருகுழு சத்தியப்பிரமானம் எடுத்ததையும் அவதானித்தோம் "புலிகள், புளொட், ஈபி.ஆர் எல் ஏப், டெலோ இன்னும் பல இயக்கங்கள்  போராட்டகாலத்தில்  செய்த தவறுகளை, செய்த பிழைகளைப் பூசி மெழுகாமல் "அது தவறு தான்!" என்று மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுகிறேன்". ஏனென்றால் புலிகள் வெங்காயம் விதைச்சுப்போட்டு அறுவடைக்கு பார்த்துக்கொண்டிருக்க வெள்ளம் வந்து அழுகினமாதிரிதான் கதை. 

குறிப்பு: நான் வந்திட்டன் எல்லாரும் இடத்தைவிட்டிட்டு மாறுங்கோ என்ற போக்கில் கருத்துக்கள் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.
 
Edited by Surveyor

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் தமிழ் நாட்டு மீனவர்களை தாக்குகிறேன் என்று சொல்லி பலதை எழுதுகிறார்கள். விஷயம் என்ன வென்றால்,தமிழ் நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது. அது தவறு என்று தமிழக அரசு சொல்லாதவரை அவர்கள் செய்து கொண்டு தான் இருப்பார்கள். தமிழக அரசியல் கட்சிகள் இந்த பிரச்சனையை எப்பொழுதோ தீர்த்திருக்கலாம். ஆனால் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். 

ஆம்   கட்ச தீவை இலங்கைக்கு இந்தியா தமிழ் நாட்டின் அனுமதி பெறாமலே தாரை வார்த்து விட்டது. அது மிக பெரிய தவறு. அதை சரி செய்ய வேண்டும். ஆனால் தமிழக மீனவர்கள் ஏன் வல்வெட்டித்துறைக்கு அருகே வந்து மீன் பிடிக்க வேண்டும். அதற்க்கு காரணம், தாங்கள் மாட்டி கொண்டால்  அரசியல் கட்சிகள் காப்பாற்றும் என்ற நம்பிக்கை மற்றும் ஆழ் கடல் மீன் பிடிக்க முடியாத இயலாமை. இந்த இரண்டு பிரச்சனையையும் தீர்த்து வைத்து விட்டால், இந்த யாழிற்கு அருகே வந்து மீன் பிடிக்கும் நிலைமை வராது. 

தமிழக மக்களின் சிலர்  இப்பொழுதும் அமெரிக்காவிற்கு எதிராக தங்களின் போராட்டங்களை சென்னையில் நடத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். எதற்காக. ஏன் . ? அப்படி பட்டவர்களை கொச்சை படுத்தி சிலர் பேசுகிறார்கள் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. 

இந்த பேராசை மீனவர்களுக்கும், சாமானிய தமிழக குடிமகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இப்பொழுது நிறைய மக்கள் இந்த மீனவர்கள் மீது வெறுப்பு அடைந்து உள்ளார்கள் என்பதே உண்மை. இவர்களின் செயல்களால் பாதிக்க படுவது ஈழ தமிழர்கள் தான் என்று கொஞ்சம் கொஞ்சம் புரிய ஆரம்பித்து விட்டது.

ஈழ தமிழ் கூட்டமைப்பும் இந்த விஷயத்தை பற்றி கொஞ்சம் பேசினால் தமிழக அரசியல் கட்சிகளின் காதுகளில் போய் சேரும். விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படும். இந்த பிரச்சனையை கட்ச தீவோடு சம்பந்த படுத்தி அனுகியதாலேயே இந்த பேராசை மீனவர்களின் குற்றம் வெளியில் தெரியாமல் மறைக்க படுகின்றது. 

Edited by kanna123

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்,

எங்களுக்கு நீங்கள் றோவென்று கூறினால் வலிக்கப்போவதும் இல்லை சுழிக்கப்போவதும் இல்லை. நாங்கள் ஆருக்கும் வலிக்கோனும் என்று எழுதுவதுமில்லை, சிலரின் அறப்படிச்ச கதைகளுக்கு வேறுவிதத்திலே பதில் எழுதவேண்டியுள்ளது.

"தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள்" என்று நீங்கள் கடுப்பாகுறீர்களே...... வல்வெட்டித்துறை தமிழீழத்தில் தான் இருக்குது என்று நான் கூற அதை அர்ஜுன் அண்ணா மறுத்து எழுதிய கருத்துக்கு பதில்கருத்து அவரின் வழியில் கொடுத்திருந்தேன். அதற்குள் நீங்கள் நுழைந்து அடியாட பிடியடா என்றீர்கள். இப்ப சுத்திவளைச்சு கடைசியில் சொல்குறீர்கள் தமிழ்நாட்டுக்காரர் முதலில் தங்களை எப்பவுமே இந்தியர் எனச் சொல்வார்கள் என்று.

கொஞ்சம் ஆறுதலாக வாசிக்கவும் என்று விசுகு அண்ணா ஒருதிரியில் உங்களுக்கு கூறியிருந்ததையும் அவதானித்தோம். கருணாவின் பேட்டியை முழுமையாக நம்பியதையும் அவதானித்தோம். தேம்ஸ் நதிக்கரையில் நடந்த போராடத்திகதிகளில் வழு இருந்ததையும் அவதானித்தோம்.  .

நான் இங்கு தமிழ்நாட்டுக்காரன் வந்து மீன்பிடிப்பது சரியென்று எங்கும் கூறவில்லை. எங்களின் ஆக்கள் தமிழ்நாட்டில் இருந்து கள்ளக்கடத்தல் செய்வதையும், கடலில் நடக்கும் கள்ளவியாபரங்களையும், எங்களின் சொறிலங்கா கிந்தியாவிடம் அடிமைவாழ்க்கை வாழ்வதையும் இவ்வாறான சந்தர்பங்கள் கிந்தியர்கள் எல்லைமீறி வருவதற்கு காரணம் எனக்கூறியிருந்தேன்.

புலிகள் இருந்தால் இவை நடைபெறாது என்பதே உண்மை. ஆகவே புலிகள் அழிக்கப்படவேண்டும் அழிந்துவிட்டார்கள் என ஊளையிடுபர்வகள் இப்படியான பிரச்சனைகளுக்கு தூக்கிப்பிடித்துக்கொண்டு வரப்படாது

இது தவிர நாங்கள் புலிகள் இல்லையென்றவுடன் வாலைக்காட்டும் ஆக்களும் இல்லை. ஒருகுழு சத்தியப்பிரமானம் எடுத்ததையும் அவதானித்தோம் "புலிகள், புளொட், ஈபி.ஆர் எல் ஏப், டெலோ இன்னும் பல இயக்கங்கள்  போராட்டகாலத்தில்  செய்த தவறுகளை, செய்த பிழைகளைப் பூசி மெழுகாமல் "அது தவறு தான்!" என்று மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல் சொல்லுகிறேன்". ஏனென்றால் புலிகள் வெங்காயம் விதைச்சுப்போட்டு அறுவடைக்கு பார்த்துக்கொண்டிருக்க வெள்ளம் வந்து அழுகினமாதிரிதான் கதை. 

குறிப்பு: நான் வந்திட்டன் எல்லாரும் இடத்தைவிட்டிட்டு மாறுங்கோ என்ற போக்கில் கருத்துக்கள் இருப்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

சகோதரா..

தமிழ்நாட்டிலிருந்து வந்து அள்ளுகிறார்கள்

கேராளாவிலிருந்து வந்து அள்ளுகிறார்கள்

சீனாவிலிருந்து வந்து அள்ளுகிறார்கள் என்று இங்கு வகுப்பு எடுக்கிறார்களே...

சுட்டுக்கொல்லணும் என்பதுவரை சென்றவர்களுண்டு.....

வெளிநாடுகளிலிருந்தபடி வன்முறையைத்தூண்டுகிறார்கள் என்று வாந்தியெடுப்போரே

இவ்வாறு சுடச்சொல்லி வேறு ஒரு வடிவில் வன்முறையை தூண்டுகிறார்கள்.

ஆனால் பிரச்சினையின் ஆழம் என்ன?

ஏன் ஈழத்தமிழருக்கு உழைக்கத்தெரியாதா?

சோம்பேறிகளா?

அல்லது பயமா?

மற்றவர்களிடம் உள்ள வசதிகள்  எம்மிடமில்லை

பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ளோம்

அதை எம்மால் மாற்றமுடிந்தால் தான் இதற்கு ஒரு தீர்வு வரும்

ஆனால் இங்கு அவர்கள் மீது பாசம் கொண்டு எழுதுவோர்

அது பற்றி எழுதுவதில்லை எதுவுமே செய்வதுமில்லை

ஏனெனில் நோக்கம் தமிழகத்தமிழர் மீது தங்கள் வஞ்சத்தை தீர்ப்பதேயன்றி 

பிரச்சினைக்கு தீர்வு காண்பதல்ல..

இதுதான் நிஜம்

தாளையடி, வெற்றிலைக்கேணி பகுதியில் சிங்களவன் அள்ளுறது பற்றியும் தெரியாது

  • கருத்துக்கள உறவுகள்

வேற என்ன சேர்வையர்,நீண்ட நாளைக்கு அப்புறம் இந்த திரியில் வந்து எழுதி இருக்கிறீங்கள்.எதாவது புதிசாய் எழுதி இருப்பீங்கள் பார்த்தால் என்னை அவதானிக்கிறேன் அது,இது என்று பெரிய மனிசியாக்க பார்க்கிறீங்கள்...அந்த அண்ணா அது சொன்னார்,இந்த அண்ணா இது சொன்னார் என எழுதிறீங்களே.சொந்தமாய் உங்கட கருத்தை எழுத மாட்டீங்களா? யாழில நடக்கிற எல்லாத்தையும் ஒரு திரியில வந்து கொட்டி இருக்கிறீங்கள்.

நான் தேம்ஸ்நதிக்ரையில் இருந்து கொண்டு தான் எழுதுறன்.அதை பப்ளிக்காக புரபைலில் போட்டுத் தான் எழுதுறன்...உங்கள மாதிரி லண்டனில் இருந்து கொண்டு ஊரில் இருக்கிற மாதிரி கதை விடுகின்ற ஆள் நானில்லை...ஆகவே கதை விடுகின்ற வேலையெல்லாத்தையும் யாராவது இளிச்சவாயன்கள் இருப்பார்கள் அவர்களிடம் வைத்துக் கொள்ளுங்கோ...ஆமாம் இப்பத் தான் உங்கட கதையை நம்ப புலத்திலும் ஆட்கள் இல்லை,ஊரிலும் ஆட்கள் இல்லை...போய் பிள்ளை குட்டியை படிக்க வைங்கோ சேர்...அப்ப நான் வரட்டா!

ரதியை துறத்தியாச்சு,திரும்ப வர மாட்டா என நினைச்சீங்கள் இல்லை...திரும்பி வந்தது கலக்கமாய் இருக்குது போல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.