Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சீமானின்.... தேர்தல் வியூகமும், தூரப் பார்வையும் விசாலமானது.
அதற்கு... அவர், நான்கு... ஆண்டுகளுக்கு முன்பே.... தயார் படுத்தி விட்டார்.
அது தான்.... இன்றைய சீமானின், தயார் படுத்தப் பட்ட  இளைஞர்களின்    செந்தமிழ் முழக்கங்கள்.
சீமானைப் பார்த்து....  ஜெயா, கருணா, வைகோ அணி எவருமே.... வாய் திறப்பதில்லை.
ரஜனி காந்தியை.... கூட, விஷயகாந்து விமர்ச்சுப்  போட்டாரு,  
சீமானை.... விமர்சிக்க, தமிழ் நாட்டில் யாருக்கும்.... "தில்" இல்லை என்றே நினைக்கின்றேன்.  

ஐயாவும், அம்மாவும்கூட லேசுப்பட்டவங்க இல்லை.. அவங்களை சுற்றி எத்தினை ஆலோசகர்கள், உளவுத்துறை அதிகாரிகள் என்று இருப்பார்கள்!?இரண்டுபேரும் ஆளை மாற்றி ஆள் விமர்சனம் பண்ணுவாங்களே தவிர மற்றவங்களை மறந்தும் குறிப்பிட மாட்டினம்.. (இரண்டாம் மூன்றாம் கட்ட தலைவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். அவர்கள்கூட சீமானை விமர்சிப்பதில்லை..) காரணம் மிக இலகுவானது.. ஊடக வெளிச்சம் விழுந்துவிடக் கூடாது என் மிகவும் அவதானமாக உள்ளார்கள். "இங்கே எப்பவுமே நாங்கதான் (திமுக, அதிமுக)" என்று மக்கள் மனதில் ஏற்றுகிறார்கள். இதில் முன்னம் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதையும் மீறி விஜயகாந்த் முன்பு வந்தபோது 2011 இல் கூட்டணியில் இணைத்து ஆளை காலிபண்ணிவிட்டார்கள். இவர்களின் கூட்டணியில் சேரும்போது மக்கள் அந்தப் புதிய கட்சியின்மீது நம்பிக்கையை இழந்துவிடுகிறார்கள்.. இதை யோசித்துதான் தேசிய, திராவிடக் கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று அறிவித்துவிட்டார் சீமான்.. அத்துடன் மற்றக் கட்சிகளுக்கும், நாங்கதான் முன்னுக்குப் போவோம்.. நீங்கள் வேணுமானால் கூட்டணியில் சேர்ந்து பின்னால் வரலாம் என்கிறார் (அதுவும் இந்த தேர்தலில் கிடையாது..).. இது மிக சுவாரசியமானது. அதனால்தான் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும்.. tw_blush:

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, இசைக்கலைஞன் said:

விரிவான... உங்கள்,  தமிழ் நாட்டு அரசியல் விளக்கத்துக்கு நன்றி இசை.
நமக்கே.... இப்படி என்றால்,  

பஞ்சாயத்து போர்டு, ஊர் பூசாரி, நாட்டாண்மை... சொல்லுற  ஆக்களுக்கு தான்.... ஒட்டு விழும்.
இதிலை....  உலக ஜன நாயகம் மிக்க நாடு என்றும், அகிம்சையால்.... சுதந்திரம் பெற்ற நாடு என்றும்....
பீத்திக் கொண்டு, திரிபவனை... கண்டால்....... செருப்பால், அடிக்கணும் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

கைப்புள்ளை ரேஞ்சுக்கு நல்லாத்தான் உஷார் பண்ணுறாங்க நம்ம பயலுக. 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவு சபேசன் ??

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1)  நான் இந்த காணொளிகளை பல முறை பார்த்திருந்தாலும்.....ஏலையா முருகதாசன் சீமானின் இதர முன்னேற்ற திட்டங்களை கவனத்தில் எடுக்கவில்லை என்றே எண்ணுகின்றேன். ஒரு அரசியல்வாதியின் தனி ஒரு கருத்தை மட்டும் எடுத்து விவாதிப்பது அரசியல் ஆரோக்கியம் அல்ல. அரசியல் பரந்துபட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"தமிழ்நாடு ஒரு பன்னாட்டு நகரமாகிவிட்டது.. பல்லினங்களும் வாழும் நகரமாகிவிட்டது.. இதில் தமிழர் ஆளவேணுமெண்டு சொல்லுறது மக்களை திசை திருப்பும் வேலை.." - ஏலையா முருகேசன்

அப்பிடியா?! அப்ப பெங்களூர் இன்னும் அதிகமா பன்னாட்டு தலைநகர் ஆகிவிட்டுது.. அப்ப கர்நாடகாவை தமிழன் ஆள கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்களேன் ஏலையா ஐயா.. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, இசைக்கலைஞன் said:

தமிழர்களுக்கு மட்டும் தான் சட்டங்களும் விதிகளும். ஏனையவர்கள் தமக்கு ஏற்றாற் போல் சட்டங்களை வகுக்கலாம். சட்ட ஓட்டைக்குள் புகுந்து விளையாடலாம். அது சரி மைக் டவியும் (கனடா) இப்ப அச்சாப்பிள்ளையாம். என்றை கடவுளே !!!!. ஒரு அப்பாவி 1000 டொலர் காசை வரிப்பணத்தில் ஏமாற்றி இருந்தால்  அவரை உலுக்கி எடுத்து விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இசைக்கலைஞன் said:

"தமிழ்நாடு ஒரு பன்னாட்டு நகரமாகிவிட்டது.. பல்லினங்களும் வாழும் நகரமாகிவிட்டது.. இதில் தமிழர் ஆளவேணுமெண்டு சொல்லுறது மக்களை திசை திருப்பும் வேலை.." - ஏலையா முருகேசன்

அப்பிடியா?! அப்ப பெங்களூர் இன்னும் அதிகமா பன்னாட்டு தலைநகர் ஆகிவிட்டுது.. அப்ப கர்நாடகாவை தமிழன் ஆள கொஞ்சம் ஏற்பாடு பண்ணுங்களேன் ஏலையா ஐயா.. tw_blush:

அதெல்லாம் ஏலாதைய்யா.. ஏலையாக்கு. அவரால முடிஞ்சது குந்தி இருந்து குதர்க்கம் பேசுவது மட்டும் தான். அதுக்கு ஏற்ற நல்ல சோடிகள். tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, இசைக்கலைஞன் said:

நல்ல காலம் அஞ்சலாவை( angela merkel) கலைக்காமல் விட்டார்...

அங்கிருந்து ஆரம்பிக்கலாமே..

51 minutes ago, nedukkalapoovan said:

அதெல்லாம் ஏலாதைய்யா.. ஏலையாக்கு. அவரால முடிஞ்சது குந்தி இருந்து குதர்க்கம் பேசுவது மட்டும் தான். அதுக்கு ஏற்ற நல்ல சோடிகள். tw_blush::rolleyes:

அதெல்லாம் ஏலாதைய்யா.. சபேசனுக்கு. அவரால முடிஞ்சது குந்தி இருந்து குதர்க்கம் பேசுவது மட்டும் தான். அதுக்கு ஏற்ற நல்ல சோடிகள். tw_blush::rolleyes:

நமக்கு நன்றாக தெரிந்தவர்கள் பற்றி தானே நாம் பேசுவது சரியானது...tw_blush::rolleyes:

இதில பெரிய பகிடி என்னவென்றால்

சீமான் ஒன்றுமே இல்லை

வெறும் பூச்சியம் என எங்கும் எழுதிவரும் சபேசன்

இத்தனை நேரத்தை செலவளித்து கூத்தடித்தபடி

சீமான் கூத்தடிக்கிறார் என்பது தான்.....

Edited by விசுகு

Non-Tamizhar சினிமா... நாம் தமிழர் சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்குக்கு ஒரு முதல்வர் வேட்பாளர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் தமிழகத் தேர்தல் களத்தில். வாரமொரு முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ் அலசலாம். அதில் முதல் வாரம்.... வெற்றிவேல் வீரவேல் சீமான்!

 சீமான் மீது ஏன் இந்த கவனம்?

குரலால் கூட்டம் கூட்ட ஒரு காலத்தில் கருணாநிதி. அடுத்து வந்தார் வைகோ. இதோ இது சீமான் காலம்!

தமிழ்நாட்டு மேடையில் தெள்ளு தமிழ் வாடை பரவ சீமான் காரணமாய் அமைந்ததுதான் அவரது அரசியலின் முதல் வெற்றி. தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். அதனால், உணர்ச்சி வார்த்தைகளை முறையான உச்சரிப்புடன் உரக்கச் சொல்லும் தலைவர்களுக்குப் பின்னால் உடனடியாக அணி சேர்ந்து விடுவார்கள். சீமானின் கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அவரது கூட்டத்துக்குச் செல்பவர்களைவிட அவரது தமிழ் பேச்சை கேட்கலாம் என்று செல்பவர்களே அதிகம்.

seeman3.jpg

சீமானின் ப்ளஸ்!

தமிழின் அருமையை, தமிழனின் பெருமையை, தமிழ்நாட்டின் கடந்த கால விழுமியங்களை பற்றிப் பேச,  அதைப்பற்றி மட்டும் பேச,  ஒரு கட்சியாக நாம் தமிழர் கட்சியை சீமான் கட்டமைத்து உள்ளார். இந்த மூன்றுமே தமிழ் மக்களின் உள்ள வேட்கையோடு தொடர்புடையது என்பதால், எளிதில் சீமானால் உள்ளே போக முடிகிறது. இளைஞர்களை ஈர்க்க முடிகிறது. மாற்றாரையும் கவனிக்க வைக்க முடிகிறது. எதிர்கட்சிகளையும் விமர்சனங்கள் வைக்க விடாமல் தடுக்கவும் செய்கிறது. கருணாநிதி மீது சீமான் பாய்ந்தாலும், வைகோவை வசைபாடினாலும், திருமா மீது விழுந்தாலும் அவர்கள் இவருக்கு  பதில் சொல்லாமல் இருக்க காரணம், தமிழர்களின் உணர்ச்சி மீது கட்டமைக்கப்பட்ட கட்சி, நாம் தமிழர் கட்சி என்பதால்தான்!

மேலும், எல்லாப் பெரிய கட்சிகளின், எல்லா பெரும் தலைவர்களின் அடிமடியில் கைவைக்கிறார் சீமான். ‘‘நீங்கள் யாரும் தமிழர்கள் இல்லை. தமிழர் அல்லாதவர்களுக்கு வாழ உரிமை உண்டு. ஆனால், ஆள உரிமை இல்லை’’ என்கிறார் சீமான். அவரைப் பொருத்தவரை ஜெயலலிதா, கருணாநிதி, விஜயகாந்த் போன்றவர்கள் ஆள உரிமை இல்லாதவர்கள். வைகோவுக்கும்தான்!

இந்த இனத்தூய்மை வாதம் இங்கும் புதியதல்ல. இந்தியாவுக்கும் புதிதல்ல. ம.பொ.சி-யின் தமிழரசுக் கழகமும், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் இயக்கமும் அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதுதான். இறுதியில் இவர்கள் இருவரும் திராவிட இயக்கத்திடம் பதவிகள் பெற்று, பழசை மறந்ததே பழைய வரலாறு. இன்னும் மகாராஷ்டிராவில் சிவசேனாவும், கர்நாடகாவில் வாட்டாள் நாகராஜூவும் சொல்லிக் கொண்டு இருப்பதுதான். பீகாரியை விரட்டுகிறது சிவசேனா; தமிழர்களை விரட்டுகிறான் வாட்டாள். திருமலை நாயக்கர் மஹாலை இடிக்கச் சொல்கிறார் சீமான். அதனால்தான், பெரியாரைப் பிடிக்காத சீமானுக்கு ஹிட்லரைப் பிடிக்கிறது. பாசிசமும் நாசிசமும் பிறந்ததே இந்த, தூய்மை வாதத்தில்தானே.

seeman1.jpg

தேர்தல் அரசியல் என்பதே தொகுதி பறிக்கும் அரசியல்தான். அந்த அரசியலுக்குள் இனத் தூய்மையும் இன வெறுப்பும் பேசுவதே மற்றவரை ஈர்க்கும் உத்திதான்.

அபத்த அடிப்படை!

கருணாநிதி எதிர்ப்பில் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் கட்டமைத்தது போல, இஸ்லாமிய எதிர்ப்பில் பாரதிய ஜனதா உயிர் வாழ்வது போல, ‘திராவிட இயக்க எதிர்ப்பு’ என்ற கருத்தாக்கத்தில் தன்னுடைய அரசியலை நிலை நிறுத்திக் கொள்ள சீமான் திட்டமிட்டுள்ளார்.
 
‘‘தமிழர்கள் தங்களது உடமைகளையும் உரிமைகளையும் திராவிட கட்சிகளிடம் பறி கொடுத்து வருகிறார்கள். அதனை மீட்கவே நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. இது தேர்தல் அல்ல. அடிமை தேசிய இனத்தின் உரிமை மீட்பு போர்’’ என்று பிரகடனப்படுத்தி உள்ள சீமான், ‘‘எந்தவொரு தத்துவமும் 50 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியாது என்ற தத்துவத்தின் கீழ் திராவிட இயக்கம் அழியும்’’ என்ற கண்டுபிடிப்பையும் செய்துள்ளார். இந்த புது தத்துவத்தை எந்த போதியில் கண்டடைந்தாரோ! மார்க்சியத்தின் வயதை யாராவது அவருக்கு படித்துச் சொல்லுங்கள். வயது மூப்பு வந்ததும் செத்துப் போக மனித உடல் அல்ல தத்துவம். காலங்கள் தோறும் புதுப்புது பொழிப்புரைகளால் உயிர்ப்பிக்கப்படுவதே தத்துவம். அந்த புரிதலே இல்லாமல் தத்துவத்துக்கு வைரவிழாவும் மணிவிழாவும் கொண்டாடுவது கோமாளித்தனம்.

திராவிடம் என்பதை இனச்சொல்லாக பெரியார் கட்டமைக்கவில்லை. ஆரியம் என்ற எதிர் சிந்தனைக்கு மாற்று சிந்தனையாக வைத்ததே திராவிடம். அந்த திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஒரு குடும்பத்தின் சொத்தாக தி.மு.க-வையும், ஒரு தனி மனுஷியின் விளையாட்டுப் பொம்மையாக அ.தி.மு.க-வையும் மாற்றி காட்டிய கீழ்த்தர அரசியலே தமிழகத்தின் இன்றைய அரசியல். கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு பண மலைகளின் அதிகாரப் பசி அரசியலை அம்பலப்படுத்தாமல் அவர்கள் இருவருக்குமே, ‘தத்துவார்த்த முகமூடி’ போட்டு மறைத்துக் குழப்புவதால் தான் சீமான் பேச்சு பொதுமக்களுக்கு புரியாமல் அந்நியமாய் இருக்கிறது.

சீமானின் மைனஸ்!

இந்த குழப்பம் போதாது என்று பச்சை துண்டு, பச்சை வேட்டியுடன் கையில் வேலுடன் கிளம்பிவிட்டார் சீமான். பல ஆண்டுகளுக்கு முன்னர் பெரியாரின் கைத்தடியை பிடித்திருந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரபாகரனின் துப்பாக்கியை ஏந்தியவர், இப்போது முருகனின் வேலை ஏந்தியுள்ளார். ‘முருகன் தமிழ் கடவுள், தமிழர் பண்பாட்டை மீட்கப் போகிறோம்’ என்கிறார். போகட்டும் - மீட்கட்டும். ‘முப்பாட்டன் முருகன்! எம்பாட்டன் சிவன்’ என்றால் என்ன பொருள்? முருகனுக்கும் சிவனுக்கும் என்ன தொடர்பு? இவர் சொல்லும் முருகன், மாயோனாக இருந்தபோது சிவன் என்ற அப்பா கிடையாதே? பழசை மீட்கிறோம் என்றால் பழசாக அல்லவா மீட்க வேண்டும். என்ன புரிதல் இது? இது தவறான புரிதல் அல்ல. தெளிவான குழப்பம்!

அழகான தமிழும், உணர்ச்சிமயமான குரலும், துடிப்பான இளைஞர்களும் இருந்தும் குறிப்பிட்ட சிலரைத்தாண்டி, பலரை சீமான் சென்றடைய முடியாமல் போவதற்கு தடைகற்கள் இவை. பெரியார் பிறந்த தினம் கொண்டாடி முடித்துவிட்டு கிராமப்பூசாரிகள் மாநாடு நடத்துவமும்,  ஏகாதிபத்தியங்களுக்கு சிம்ம சொப்பனமான சேகுவேரா படத்தோடு ஹிட்லர் படத்தை வைப்பதும், முத்துராமலிங்கதேவருக்கு முதல் மாதம் மாலைபோட்டு, இம்மானுவேல் சேகரனுக்கு இரண்டாம் மாதம் மாலை போடுவதும் , ‘பூஜா’வை வைத்து படம் எடுத்துவிட்டு, பின்னர் ராஜபக்சேவை எதிர்ப்பதும், மாதவனை, ‘தம்பி’யாக உருவாக்கிவிட்டு விஷால் ரெட்டியை வீழ்த்தக் கிளம்புவதும்,  வட இந்திய முதலாளிகள் மீது வெறுப்பைக் கிளப்பிவிட்டு வைகுண்டராஜனோடு சிரிப்பதும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு மாற்றான அரசியலாக எப்படி மாறும்?

seeman111.jpg

சினிமாக்காரர்கள் நாட்டை ஆளக்கூடாது என்கிறார். சரிதான். ஆனால் இவர் யார்? 2008-க்கு முன்பு வரை எங்கே இருந்தார்? பாஞ்சாலங்குறிச்சி, இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் (1997 - 2008) என்று Non Tamizhar - கள் பலரை வைத்து படம் எடுத்த இயக்குநர்தானே? சினிமாக்காரர்கள் நடத்திய ராமேஸ்வரம் ஆர்ப்பாட்டத்தில் சினம் கொண்டு பேசியதால் கைதாகி, பிறகு ‘நாம் தமிழர்’ தொடங்கியவர்தானே. ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என்ற சீமான் குரலை மறக்க முடியுமா? ‘வாழ்த்துக்கள்’ என்ற தனது படத்தின் பெயருக்கு ‘க்’ வருமா வராதா என்று கருணாநிதியிடம் ஐயம் கேட்ட காட்சிகள் மறக்கத்தக்கதா? எனவே, பல மாற்றங்கள் காட்டியவர்தான் இன்று புதுமாற்றம் காட்ட வந்துள்ளார்.

வரட்டும் தவறு இல்லை. வந்தவர் ஏதாவது ஒரு கட்சியுடன் அண்டிப் போய்விடாமல் ஐந்து, பத்து இடங்களுக்கு கை ஏந்தாமல்... தகுதி இல்லாதவரை முதலமைச்சர் ஆக்க, இல்லாத தகுதி எல்லாம் இருப்பதாக இட்டுக் கட்டி பேசித் திரியாமல்... தன்னையே நம்பி களத்தில் நிற்கும் தைரியத்தை பாராட்டவே வேண்டும்.

‘‘நமக்கு என்னதான் வாக்கு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வோமே’’ என்று ஏதோ ஒரு இடத்தில் சீமான் சொல்லி இருக்கிறார். இந்த எதார்த்தம் ஒரு மனிதனுக்கு இருக்கத்தானே வேண்டும். இன்னும் கொஞ்சம் யதார்த்தத்துக்கு சீமான் வர வேண்டும். தடித்த வார்த்தைகளை விடுத்து தணிக்கும் தமிழை அவர் கை கொள்ள வேண்டும். அனைத்து அரசியல் சக்திகளையும் சக பயணிகளாக எதிர்கொள்ளும் பக்குவம் பெற வேண்டும். அடுத்தவரை அச்சுறுத்துவதற்காக தனது ரத்தத்தை கொதிநிலையில் வைத்திருப்பது எதிரிகளுக்கு அல்ல; அவருக்கே ஆபத்தானது. கருத்துக்களை விதையுங்கள். காலம் இருக்கிறது.

-ப.திருமாவேலன்

http://www.vikatan.com/news/politics/62933-plus-and-minus-of-chief-minister-candidate-seeman.art

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

 நாம் தமிழர் சீமான்! 

நிழலி, 

லேட், நேற்றே போட்டு விவாதிச்சாச்சே.

இருந்தாலும், திருமாவேலன் தப்பு தப்பா சொல்கிறார்.

கப்டன், தி.மு.க கூட்டணி போவார் என்று அடித்து விட்டார்.

அம்மா, பா.ஜ.க அல்லது தா.ம.க கூட்டணி என்றார்.

இப்ப சீமான் குறித்து ஏதோ சொல்கிறார். பார்ப்போம்.

கருணாநிதி, வாழ்த்துக்களில், 'க்' வை தூக்கச் சொன்னதை பெரிய விடயமாக சொல்கிறார். 

அதே கருணாநிதி, கப்டன் கலியாணத்தில் தாலி எடுத்து கொடுத்தவர். தனது மகன் முத்து சினிமாவில் எடுபடாமல் போனபின் எங்கள் தங்கம் படத்தில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை வைத்து படம் எடுத்தார்.

இவர்கள் அணைவரும் பின்னாள் அரசியல் எதிரிகள்....

ஆகவே, இவர் சொல்வதே அபத்தம்.

Edited by Nathamuni

1 hour ago, நிழலி said:

Non-Tamizhar சினிமா... நாம் தமிழர் சீமான்! முதல்வர் வேட்பாளரின் ப்ளஸ்/மைனஸ்

முழுசா புரிஞ்சு தெளிவா குழம்பிட்டேன்  :grin:

பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் போது மதராசை தலைநகரமாக கொண்டுதான் தென்னிந்தியாவையே ஆண்டார்கள் .தலைநகர் தமிழ் நாட்டில் இருந்தால் தமிழர்கள் இல்லாத இனங்களும் அங்கு குடியேறுவார்கள் .தெலுங்கு கன்னட மலையாளிகள் தமிழ்நாட்டில் பெரும்தொகையாக அந்த காலத்தில் குடியேறிவிட்டார்கள் .

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் பொது தென்னிந்தியா மாநிலங்களாக பிரிக்கப்படவில்லை அதன் பின்னர்தான் மொழிவாரியாக நாலாக பிரிந்தது ஆனால் தமிழ் நாட்டில் குடியேறியவர்கள் பலர் அங்கேயே தங்கிவிட்டார்கள் .

உதாரணமாக பாகிஸ்தான் பிரிவினை கோரி முஸ்லிம் நாடாக பிரிந்தாலும் இந்தியாவில் இருந்து முழு முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்கு செல்லவில்லை .பாகிஸ்தான் முஸ்லிம் நாடாக ஆனதே ஒழிய இந்தியா இந்து நாடு ஆகவில்லை .

அதே போலதான் இங்கும் நடந்தது .மொழிவாரியாக பிரிந்தவர்கள் தமக்கென மாநிலங்களை உருவாகும் போது அது அந்த மொழிக்கான மாநிலம் ஆகிவிட்டது அதனால் தான் அவர்களின் மாநிலங்களில் அந்த மொழி பேசுபவர்களே முதலமைச்சர் ஆகின்றார்கள் ஆனால் தமிழ் நாட்டின் நிலை அதுவல்ல .

அனைத்து இனங்களும் இரண்டற கலந்து ஒன்றாக இருந்த மாநிலம் இன்றும் அப்படியே உள்ளது .தமிழ் நாட்டில் அரசியல் ,சினிமா ,வர்த்தகம் ,பத்திரிகை,கல்வி இப்படி  என்று எந்த துறையை எடுத்துபார்த்தாலும் அனைத்து இனத்தவர்களும் இருப்பார்கள் .

சீமான் சும்மா தனது அரசியலுக்கு இனத்தை முன் வைத்து கத்துகின்றார் . புலம் பெயர்ந்த எம்மவர் பற்றி கேட்க தேவையில்லை நாட்டில் கோட்டை  விட்டதை தமிழ்நாட்டில் பிடித்து தொங்க நிற்கினார்கள் .

எக்காலமும் தமிழ்நாட்டில் இனவாதம் எடுபடப்போவதில்லை எம் ஜி ஆர் ,கருணாநிதி ,ஜெயலலிதா இப்படி பல பரம்பரையாக தமிழ்நாட்டில் இருப்பவர்களை தமிழர்கள் ஆகவே அவர்கள் பார்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, arjun said:

அண்ண,

மாராட்டியில் சிவசேனாவும், இலங்கையில் பண்டாவும், தென்னாபிரிக்காவில் மண்டேலாவும் முயன்று வென்றது தான்.

திராவிடம் என்று சொல்லி அண்ணா வென்ற அதே வித்தையின் உல்டா தான்.

சாதி, மதம் வாதம் வெவ்லுமாயின் இதுவும் அதே தான்!

11 minutes ago, Nathamuni said:

அண்ண,

மாராட்டியில் சிவசேனாவும், இலங்கையில் பண்டாவும், தென்னாபிரிக்காவில் மண்டேலாவும் முயன்று வென்றது தான்.

திராவிடம் என்று சொல்லி அண்ணா வென்ற அதே வித்தையின் உல்டா தான்.

சாதி, மதம் வாதம் வெவ்லுமாயின் இதுவும் அதே தான்!

இலங்கை ,தென்னாபிரிக்கா ஒப்பீடு தவறு .

அண்ணா என் திராவிடம் என்றார் ?

ஏன் இன்றும் கட்சிகள் பலதும்  திராவிடம் என்று இருக்கு ?

3 minutes ago, Nathamuni said:

திராவிடம் என்று சொல்லி அண்ணா வென்ற அதே வித்தையின் உல்டா தான்.

சாதி, மதம் வாதம் வெவ்லுமாயின் இதுவும் அதே தான்!

தெளிவா தமிழ் நாட்டு தமிழர்களை புரிஞ்சு வைத்திருக்கிறீர்கள் - நன்றி 

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Nathamuni said:

அண்ண,

மாராட்டியில் சிவசேனாவும், இலங்கையில் பண்டாவும், தென்னாபிரிக்காவில் மண்டேலாவும் முயன்று வென்றது தான்.

திராவிடம் என்று சொல்லி அண்ணா வென்ற அதே வித்தையின் உல்டா தான்.

சாதி, மதம் வாதம் வெவ்லுமாயின் இதுவும் அதே தான்!

பூனை இல்லாதவீட்டில்  எலிகளின் ஆட்டம் தானே.....?

பார்க்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

13015515_10207502848871089_7200493027598

இதை எல்லாம் சரியென்னனுன்னா.. தமிழகத்தில்.. நாம் தமிழர் ஆட்சி அமையனும். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

இலங்கை ,தென்னாபிரிக்கா ஒப்பீடு தவறு .

அண்ணா என் திராவிடம் என்றார் ?

ஏன் இன்றும் கட்சிகள் பலதும்  திராவிடம் என்று இருக்கு ?

அண்ண,

ஒரு கணம் சீமானை ஒரு பக்கமாக வைத்து விட்டு பாருங்கள்.

அண்ணா, தமிழர், தெலுங்கர், கன்னடர் எல்லோருக்கும் மேலாக, ஒரு புள்ளியாக திராவிடத்தினை எடுத்து, வென்றார்.

ஆனால், அண்ணா பின்னர் வந்தர்வர்கள் (கருணாநிதியின்) நரித்தனத்தினால் , தமிழர்களிடையே, சாதி மத வேறுபாட்டினைத் உருவாக்கி தாம் குளிர் காய்ந்து கொண்டனர்.

கருணாநிதியினதும் அவர் குடும்பத்தினதும் ஊழல் இந்தியா எங்கும் நாறுகின்றதே. 94 வயதில், தள்ளு வண்டியில், குரலும் தளர்ந்த நிலையில்,  மீண்டும் முதல்வராக என்ன தேவை? தமிழகத்துக்கு சேவை செய்யும் ஆவலா?

அதே போல் அம்மா 70 வயதில் ?

கேரளத்து, புலி வால் பிடித்த நாயர் கதை போல் (விட்டால் புலி அடிக்கும், பிடித்துக் கொண்டு இருந்தால் புலி, அங்கும், இங்கும் இழுத்துக் கொண்டே திரியும் ) தமது ஊழல் வழக்குகள் தம்மை விழுங்கி விடும் என்பதால் பதவி, அதனால் வரும் பாதுகாப்பு தேவை.

இது தான் இலங்கையில் மகிந்தர் நிலையும்.

இப்போது சீமான்:

சாதி, மத ரீதியில் பிரித்து ஆளப் பட்ட தமிழர்களை, தமிழர்களாக, (முன்னர் திராவிடர் என்ன நோக்கில் வந்ததோ ) ஒரு புள்ளியில் குவிக்க முனைகிறார்.

கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்த இமாலய ஊழல் தவறுகளால், சீமான் செய்வது, தவறாக இருந்தாலும் கூட, சரியாகிறது. 

இலங்கையில் 24 மணி நேரத்தில் சிங்களம் ஆட்சிக் கடலில் என்றார், பண்டா, வென்றார். நாம் இதை அனுபவித்தவர்கள். அதனால் எமக்கு தவறாக தெரியலாம்.

மொழி வெறி, இனவெறி ஆகியன சாதி வெறிக்கு எவ்விதத்திலும் குறைவானதல்ல.

Edited by Nathamuni

நான் கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ நியய்யப்படுத்தி கருத்து வைக்கவில்லை .

தமிழ் நாட்டு மக்களின் அரசியல் தெரிவு பற்றியே எழுதினேன் .

பண்டா இனவெறி செய்து வென்றார் தமிழ் நாட்டில் இனவெறி செய்து வெல்லமுடியாது .இதுதான் என் கருத்து .

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, arjun said:

நான் கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ நியய்யப்படுத்தி கருத்து வைக்கவில்லை .

தமிழ் நாட்டு மக்களின் அரசியல் தெரிவு பற்றியே எழுதினேன் .

பண்டா இனவெறி செய்து வென்றார் தமிழ் நாட்டில் இனவெறி செய்து வெல்லமுடியாது .இதுதான் என் கருத்து .

இனவாதத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். இருந்து பாருங்கள், இமமுறை சீமான் ஓரளவாவது வென்றால், அடுத்து பலர் புற்றீசல் போல கிளம்புவார்கள், இலங்கையில் நடந்தது போல்.

பாரதிய ஜனதா மதவாதம் பேசியே இந்தியாவில் மத்தியில் பதவிக்கு வரமுடியுமாயின், இனவாதம் தமிழகத்தில் வேலை செய்யாது என்று எவ்வாறு சொல்ல முடியும்.

இனவாதம் பேசி வெல்ல டொனால்ட் றம்ப், முயல்கிறாரே அதுவும் அமெரிக்காவில்...

பண்டார'நாயக்க', சேன'நாயக்க', தக'நாயக்க' எங்கிருந்து வந்தார்கள்?

ஒரிசாவில் பட்'நாயக்'...

சீமான் வைக்கும் குற்றச்சாட்டுக்கள், ஆணித்தரமானவை, மறுதலிக்க முடியாதவை.

உதாரணமாக, வீரப்பன் படம் வைக்காதே என்றார்கள், பொலீஸ்காரர்கள். ஏன் என்றார் சீமான். அவன் திருடன், அதுதான் என்றார்கள்.... அப்படியானால், ஜெயலலலிதா, கருணாநிதி படங்களையும் தூக்குங்க, நாமும் வீரப்பனை தூக்குறோம் என்ற, பொலீஸ்காரர், அய்யா, ஆளை விடு சாமி என்று போய் விட்டனர்.

ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. எமக்கு வேலை இல்லாமல் இவரது பேச்சுக்களைப் பார்க்கவில்லை அண்ண. 

இவரது புத்திசாலித்தனமான இந்த தர்க்க (logical) பூர்வ விவாதங்கள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.

பலரைக் இவர் கவர்வதும் அதே காரணத்துக்கு தான்.

4 hours ago, Nathamuni said:

நிழலி, 

லேட், நேற்றே போட்டு விவாதிச்சாச்சே.

ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள் என்று இந்த திரிக்குள் வந்தால் இப்படித்தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.