Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

1 hour ago, Nathamuni said:

இனவாதத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள். இருந்து பாருங்கள், இமமுறை சீமான் ஓரளவாவது வென்றால், அடுத்து பலர் புற்றீசல் போல கிளம்புவார்கள், இலங்கையில் நடந்தது போல்.

பாரதிய ஜனதா மதவாதம் பேசியே இந்தியாவில் மத்தியில் பதவிக்கு வரமுடியுமாயின், இனவாதம் தமிழகத்தில் வேலை செய்யாது என்று எவ்வாறு சொல்ல முடியும்.

இனவாதம் பேசி வெல்ல டொனால்ட் றம்ப், முயல்கிறாரே அதுவும் அமெரிக்காவில்...

பண்டார'நாயக்க', சேன'நாயக்க', தக'நாயக்க' எங்கிருந்து வந்தார்கள்?

ஒரிசாவில் பட்'நாயக்'...

சீமான் வைக்கும் குற்றச்சாட்டுக்கள், ஆணித்தரமானவை, மறுதலிக்க முடியாதவை.

உதாரணமாக, வீரப்பன் படம் வைக்காதே என்றார்கள், பொலீஸ்காரர்கள். ஏன் என்றார் சீமான். அவன் திருடன், அதுதான் என்றார்கள்.... அப்படியானால், ஜெயலலலிதா, கருணாநிதி படங்களையும் தூக்குங்க, நாமும் வீரப்பனை தூக்குறோம் என்ற, பொலீஸ்காரர், அய்யா, ஆளை விடு சாமி என்று போய் விட்டனர்.

ஆரம்பத்தில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. எமக்கு வேலை இல்லாமல் இவரது பேச்சுக்களைப் பார்க்கவில்லை அண்ண. 

இவரது புத்திசாலித்தனமான இந்த தர்க்க (logical) பூர்வ விவாதங்கள் ஆச்சரியத்தை உண்டாக்குகின்றன.

பலரைக் இவர் கவர்வதும் அதே காரணத்துக்கு தான்.

பாரதிய ஜனதா மதவாதம் பேசி ஆட்சியை பிடிக்கவில்லை காங்கிரசில் மக்களுக்கு இருந்த வெறுப்பு கொண்டுவந்த மாற்றம் அது ,பாரதிய ஜனதா மதவாதத்தை அடக்கித்தான் வாசிகின்றார்கள் இருந்தும் அடுத்த தேர்தலில் வெற்றி கிடைக்குமோ தெரியாது .

சுதந்திரம்  கிடைத்தது முதல் இந்திய வரலாற்றை பார்த்தால் சாதியம் எடுபடுவது போல இன, மத வாதங்கள் அங்கு பெரிதாக எடுபடாது .

சீமானின் அரசியல் தமிழ் நாட்டில் ஒரு சிறு வட்டத்திற்குள் இருக்கு அது பெரிய அளவில் மக்களை சேர்ந்து தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறும்போதுதான் இந்தியா தனது முகத்தை காட்டும் .

அதுவரை தமிழ்நாட்டிற்குள் என்னத்தை செய்தாலும் சிரித்துகொண்டு இந்தியா வேடிக்கை பார்க்கும் ..

திரிக்கு சம்பந்தமில்லை ஆனால் நேற்று பழைய தோழர்கள் சிலரை சந்தித்தேன் அவர்கள் சொன்ன சில விடயங்கள் நினைத்து பார்க்கமுடியாதவை .

  • Replies 1.7k
  • Views 119.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, arjun said:

பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் போது மதராசை தலைநகரமாக கொண்டுதான் தென்னிந்தியாவையே ஆண்டார்கள் .தலைநகர் தமிழ் நாட்டில் இருந்தால் தமிழர்கள் இல்லாத இனங்களும் அங்கு குடியேறுவார்கள் .தெலுங்கு கன்னட மலையாளிகள் தமிழ்நாட்டில் பெரும்தொகையாக அந்த காலத்தில் குடியேறிவிட்டார்கள் .

சரியண்ணை நீங்கள் சொல்லுறது நியாயம்தான்! ஆனால் இப்ப இலங்கை தமிழ்பிரதேசங்களிலை சிங்கள குடியேற்றமும் புத்தவிகாரையளும் முழத்துக்கு முழம் கூடிக்கொண்டு வாறதை எந்தக்கண்ணோட்டத்தோடை பார்க்கிறியள்?

6 minutes ago, குமாரசாமி said:

சரியண்ணை நீங்கள் சொல்லுறது நியாயம்தான்! ஆனால் இப்ப இலங்கை தமிழ்பிரதேசங்களிலை சிங்கள குடியேற்றமும் புத்தவிகாரையளும் முழத்துக்கு முழம் கூடிக்கொண்டு வாறதை எந்தக்கண்ணோட்டத்தோடை பார்க்கிறியள்?

இதுவும் திரிக்கு சம்பந்தம் இல்லாதது ஆனாலும் ஒரு சிறு எனக்கு தெரிந்த பதில் .

மன்னர் ஆட்சி காலத்தை விடுங்கோ ,

பின்னர் போத்துகீசர் ,ஒல்லாந்தர்கள் இலங்கையை ஆண்டாலும் முழு இலங்கையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தவர்கள் வெள்ளையர்கள் ஆனால் வெள்ளையர்கள்  ஆட்சி அதிகாரம் தமது கையில் இருந்தாலும் சிவில் நிர்வாகத்தை அந்த அந்த நாட்டு மக்களை கொண்டே நடத்தினார்கள் . இந்த காலகட்டத்தில் தான் தமிழர்கள் சிங்களவர்களை விட வெள்ளையர்களின் ஆட்சியில் பல அரச உத்தியோகங்களில் இருந்த நாட்கள் .இது சிங்கள அரசியல்வாதிகளுக்கு நன்கு தெரியும் ஆனால் தமிழ் அரசியல்வாதிகளுக்கு வர்க்க நலனில் இருந்த அக்கறை இனத்தில் இருக்கவில்லை (வெள்ளை ,சிங்கள மேட்டுக்குடி உறவுதான் முக்கியம் )சுதந்திரம் கிடைக்கமுதலே சில தமிழர்கள் தமது உரிமைகளுக்காக போராடியதும் நடந்தது .

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த அன்றே சிங்களவன் தனது இனம் சார்ந்த அரசியலில் இறங்கிவிட்டான் .அதாவது சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதற்கான அரசியல் தான் அது .சிங்களவர்கள் வசிக்கும் ஒரே நாடு என்ற எண்ணமும் அயலில் இந்தியா என்ற நாட்டில் தமிழர்கள் என்ற இனமும் இருப்பது அவனது பயத்திற்கான பெரிய காரணம் அதை விட மகாவம்சம் வேறு துணை .

* பிரச்சனை இங்குதான் ஆரம்பம் .நீங்கள் உங்கள் இனத்தின் இருப்பிற்கான பயத்தால் இன்னொமொரு இனத்தை அடக்க ,அழிக்க வேண்டும் என்று நினைப்பதில் எந்தவொரு நியாயமில்லை ஆனால் இன்று வரை அதுதான் தொடர்கின்றது .

அப்ப தமிழர்களின் தெரிவு என்ன ? 

நீங்கள் செய்வது பிழை இதானால் இலங்கை என்ற நாடே எக்காலமும் இனப்பிரச்னையால் பாழ்படும்  அதற்கு ஒரு தீர்வு வேண்டும்  என்று சிங்கள அரசியல்வாதிகளுக்கு சொல்லி ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர முயற்சித்தார்கள் .

அதுதான் டட்லி -செல்வா ,பண்டா -செல்வா ஒப்பந்தங்கள் ஆனால் இவை பௌத்த சிங்கள பேரினவாதிகளின் நெருக்குதலால் கிழித்து எறியப்ட்டது .தொடர்ந்தும் அடக்குமுறை ,குடியேற்றங்கள் ,பாரபட்சங்கள் தொடர இனி சிங்களவனிடம் தீர்வை எதிர்பார்க்க முடியாது என்று ஆரம்பித்ததுதான் எம்மை நாமே ஆழும் தமிழ் ஈழமும் அதற்கான அரசியலும் சர்வதேச ஆதரவும் .

*சிங்களவன் தரமாட்டான்,எம்மால் முடியாது எனவே மூன்றாம் தரப்பிடம் கையேந்துவது எந்த தவறும் இல்லை . 

கலவரத்துடன் இந்தியா அந்த உதவியை செய்ய முன்வந்தது தனது சுய லாப நோக்குடன் சேர்த்து .தீர்வு தமிழ் ஈழம்  இல்லை தமிழர்களுகான தன்னாட்சியுடன் கூடிய மாகாணசபை ..அதற்கு கூட சிங்களவன் ஒத்துவரமாட்டான் எனவே ஆயுதம் ,ஆயுத பயிற்சி ,அதற்கான இடமும் தருகின்றோம் அடியுங்கோ சிங்களம் வழிக்கு வரும் என்றான் .அத்தனயும் இந்தியாவிடம் இருந்தது வாங்கிவிட்டு அடித்து சிங்களவனை தீர்விற்கு இறங்கிவர செய்துவிட்ட பின் உந்த தீர்வு எங்களுக்கு வேண்டாம் எமக்கான தீர்வை நாமே எடுப்போம் என்று நிலையை மாற்றியதில் சிங்களத்திற்கு எதிராக களம் இறங்கிய இந்தியா தமிழர்களுக்கு எதிராக களம் இறங்கியது .

*சிங்களவன் வரலாற்று ரீதியாக என்றும் பயப்பட்ட இந்தியா அவனது நண்பனாகி எமக்கு எதிரியாகியது தான் வரலற்றில் நாம் விட்ட மாபெரும் பிழை .இந்தியா எங்களுடன் என்ற பூச்சாண்டியை காட்டியே பல விடயங்களை சாதித்திருக்கலாம் சிங்களவன் பயத்தில் வாயை பொத்திக்கொண்டு இருந்திருப்பான் .

அண்ணை உங்கட கேள்விக்கு பதில் ,

மீண்டும் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் நாங்கள் பிழை செய்துவிட்டோம் என்று கையேந்தி எப்படியாவது ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று கேட்பதை தவிர வேறு வழியில்லை .அவர்கள் எதுவும் செய்தால் ஒழிய எமக்கு ஒரு வழியுமில்லை அதுவரை சிங்களம் முடிந்தவரை கேட்பார் இன்றி அநியாங்களையும் தொடரும் .

 சம் ,சம் விக்கி எல்லோரும் அவர்களுக்கு ஒரு தூசு .சும்மா சவுண்டு மட்டும் கொடுங்கோ என்று விட்டு வைத்திருகின்றார்கள் .

(முடிந்தால் வேறு திரியில் இதை இணைத்துவிடுகின்றேன் )

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, arjun said:

மீண்டும் இந்தியாவிடமும் சர்வதேசத்திடமும் நாங்கள் பிழை செய்துவிட்டோம் என்று கையேந்தி எப்படியாவது ஒரு தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று கேட்பதை தவிர வேறு வழியில்லை .அவர்கள் எதுவும் செய்தால் ஒழிய எமக்கு ஒரு வழியுமில்லை அதுவரை சிங்களம் முடிந்தவரை கேட்பார் இன்றி அநியாங்களையும் தொடரும் .

இதில் எனக்கு உடன் பாடு இல்லை அண்ண,

முன்னரும் பல திரிகளில் குறித்து உள்ளேன். 

என்று இலங்கை சீன ஆளுமைக்கு போக முனைந்ததோ, அன்றே இந்தியாவின் ஆளுமை கையறு நிலை. இதனாலே, மேற்கு நேரடியாக கள மிறங்கி, புலிகளை மேற்கில் தடைகள் மூலம் பலம் இழக்க வைத்து, மகிந்தவை வைத்து அழித்தது.

இன்று மகிந்தவையும் இறக்கி, தமது சார்பான ஆட்சியாளர்களை அமர்த்தி, மறைமுகமாக ஆளுகின்றது. (நீங்கள் மேலே சொன்ன அதே விடயம் தான் நடக்கின்றது: 'வெள்ளையர்கள்  ஆட்சி அதிகாரம் தமது கையில் இருந்தாலும் சிவில் நிர்வாகத்தை அந்த அந்த நாட்டு மக்களை கொண்டே நடத்தினார்கள்'. இன்றைய நவீன காலனித்துவம், அவர்கள் போய் ஆளுவது இல்லை. தமக்கு சார்பான ஆட்களை அமர்த்துவது.) 

எமக்கான தீர்வு, இந்த புரிதலுடன் அரசியல் செய்தால் தான் கிடைக்கும்.  அதே வேளை, விக்கியர் செய்யும் அரசியலுக்கும். சம்பந்தர் செய்யும் அரசியலுக்கும், காரணம் உண்டு. அவர்கள் தாமாக இயங்கவில்லை என்பதே எனது அனுமானம். இன்னும் சரியாக சொல்வதானால், தமிழருக்கு கொடுக்கும் போது எதிர்க்க, சிங்கள கோஸ்டிகள் இருக்கும் போது, சம்பந்தர் கேட்கையில், அது காணாது, கூட வேணும் என்ற இன்னுமோர் கோஸ்டி பின்னால் இருக்க வேண்டும் என்பதே விக்கிக்கு கொடுக்கப் பட்டுள்ள அசைஞ்மென்ட் என்பது எனது கணிப்பு.

ஓரளவுக்கு மேல், 'சுஜநிர்ணய தேர்தல்' கோரிக்கை வைக்கப் படும் என்றே நினைக்கிறன்.

சரி இந்த திரியில் இல்லாமல் வேறு திரியில் விவாதிக்கலாம்.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

//திராவிடம் என்பதை இனச்சொல்லாக பெரியார் கட்டமைக்கவில்லை. ஆரியம் என்ற எதிர் சிந்தனைக்கு மாற்று சிந்தனையாக வைத்ததே திராவிடம். //

- திருமாவேலன்

இதைவிட ஒரு சப்பைக்கட்டு வேறு இருக்க முடியாது.. திராவிடம் எனும் சொல்லே ஒரு வடமொழிச் சொல். இந்த வடமொழிச்சொல் எவ்வாறு ஆரியத்தை எதிர்க்கிறது? முழுப் பித்தலாட்டம் என்பது இதுதான்.. அதை ஒரு சொல்லாக ஆரியத்துக்கு எதிராக கட்டமைத்தாராம்.. tw_blush:

Quote

The Sanskrit word drāviḍa is used to denote the geographical region of South India.[4] Southern Brahmins are known as Pancha Dravida while northern Brahmins are known as Pancha Gauda, denoting geographical region.

அதுபோக இந்தி எதிர்ப்பு தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டபோது திராவிடக் கட்சியும், இயக்கங்களும் வாய்மூடியே இருந்தன.. ஒரு கட்டத்தில் தமிழர்கள் தங்களையே எரித்து போராட்டத்தை வீரியமாக்கியபோது திராவிடமும் அதில் குதித்து காமராஜரை வீழ்த்தி ஆட்சிக்கு வந்தது. இதுதான் வரலாறு. ஏமாந்த தமிழினம் இன்றுவரை ஏமாந்து வருகிறது.

குறிப்பு: இந்தி எதிர்ப்பில் குதித்த இயக்கமான திராவிடம் என்பது சமஸ்கிருத சொல் என்பதை நினைவில் கொள்வோம். 

இன்றுகூட திமுக, அதிமுக என மாறி மாறி ஆட்சிக்கு வருவதற்கு ஒரே காரணம்தான். கலைஞர் ஆட்சி ஒன்று முடியும்போது ஏற்படும் வெறுப்பு ஜெயலலிதாவுக்கு வாக்காக மாறுகிறது. ஜெயாவுக்கு போடுவதே கலைஞருக்கான தண்டனை என எண்ணுவது மக்களின் உளவியல்.. அதுபோல ஜெயாவுக்கான தடனை கலைஞர் என எண்ணுகிறார்கள். ஆனால் இந்த இரண்டுபேருமே ஒன்றுதான் என்கிற புரிதல் பல மட்டங்களில் இன்னும் வரவில்லை.

எம்.ஜி.ஆருக்குப் பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தல்களில் வென்ற கட்சிகள்.

1989: திமுக

1991: அதிமுக

1996: திமுக

2001: அதிமுக

2006: திமுக

2011: அதிமுக

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டை தமிழனே ஆளவேண்டும் - சீமான்

இவர் இப்படி சொல்வதை இனவெறி என கட்டமைக்கிறார்கள். ஆனால் சீமான் சொல்வது முழுமையாக கீழே உள்ளதுதான்..

"யார் வேண்டுமானாலும் இங்கே வரலாம். வாழலாம். ஆனால் நாங்கள்தான் ஆளுவோம்."

இது இனவெறியா அல்லது ஒரு ஒரு இனத்துக்கான உரிமையைக் கேட்கும் செயலா? எதுவாக இருந்தாலும் இது ஒரு முழக்கம்தானே?! முடிவு எடுக்கப் போவது மக்கள் அல்லவா? யாருடைய கையைப் பிடித்தும் திருகவில்லையே.

சரி.. இத்தகைய ஒரு முழக்கம் உலகில் வேறெங்கும் இல்லாததா? இருக்கிறது. ஆனால் வெளிப்படையாக இல்லை.

கனடாவின் குபெக் மாநிலத்தில் ஒரு வெள்ளையர் முதல்வராக வரமுடியுமா? மக்களே வாக்கு செலுத்த மாட்டார்கள். காரணம் கனடாவில் அவர்கள் சற்று சிறுபான்மையினராக உணர்கிறார்கள். சிறுபான்மையினருக்கு அடிமனத்தில் உள்ள எச்சரிக்கை உணர்வு இது. இலங்கைத் தீவின் வடக்கிலும் இதே நிலைதான்.. வட மாகாணசபைத் தேர்தலில் ஒரு சிங்களவருக்கு மக்கள் வாக்குப் போட வாய்ப்பில்லை.

தமிழ்நாட்டில் சற்று வேறுபட்ட நிலையாக இருந்தது.. இந்தியா என்கிற தேசிய உணர்ச்சி நிறைந்தவர்களாக இருந்தார்கள். இந்தித் திணிப்பு நேரத்தில் திராவிடக் கட்சியை தேர்ந்தெடுத்தார்கள். இன்று தமிழ் தேசியம் மேலெழுந்து வருகிறது. மாற்றம் என்பது மக்கள் மனத்தில் இருந்து உருவாக வேண்டும். அதற்கு எவ்வளவு காலம் செல்லும் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியாது. ஆனால் இந்தத் தலைமுறை திராவிட சித்தாந்தத்தில் இல்லை என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

சினிமாக்காரர்கள் நாட்டை ஆளக்கூடாது என்கிறார். - திருமாவேலன்

இப்படி சீமான் சொல்லவில்லை. இதை ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். அவர் சொன்னதன் சாராம்சம் இதுதான்.. "யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். தலைவர் ஆகலாம். சினிமாவில் இருந்தும் வரலாம். ஆனால் சினிமாவில் இருந்து வருவது ஒன்று மட்டுமே தகுதியாகப் பார்க்கப்படக் கூடாது."

இப்படி சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி காலத்தைப் போக்குகிறார்கள். நேற்று நியூஸ் 7 தமிழில் ஒரு உரையாடலைப் போட்டார்கள். அதில் எழுவர் விடுதலையைப் பற்றி இந்த தமிழ் தமிழ் என்று பேசும் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் ஒன்றும் சொல்லவில்லை என்றார்கள். நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வரைவில் அது உள்ளது என்று சுட்டிக்காட்டியபிறகு வருத்தம் தெரிவித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தற்பொழுது தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வு மந்தமாகி மரத்துப்போயிருக்கலாம்..ஆனால் அவற்றை மறுமலர்ச்சியுடன் துயிலெழுப்ப சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோர் எப்போதும் அவசியம் தேவை.. இல்லையென்றால் சோறு கண்ட இடமே சொர்க்கமென நிரந்தரமாக உறங்கிவிடுவர்.

காற்றுள்ள பந்தை நீருக்குள் அமுக்கினால் சீறியெழுவது போன்றதே..ஈழத்தில் தமிழுணர்வு. வீறுகொண்டெழுவது சிங்களத்தின் அடக்குமுறையால்தான்..

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இசைக்கலைஞன் said:

http://tamilcat.com/news7-tamil-wrong-information-about-naam-tamilar-21-april-2016/

1 minute ago, ராசவன்னியன் said:

தற்பொழுது தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வு மந்தமாகி மரத்துப்போயிருக்கலாம்..ஆனால் அவற்றை மறுமலர்ச்சியுடன் துயிலெழுப்ப சீமான், வைகோ, நெடுமாறன் போன்றோர் எப்போதும் அவசியம் தேவை.. இல்லையென்றால் சோறு கண்ட இடமே சொர்க்கமென நிரந்தரமாக உறங்கிவிடுவர்.

காற்றுள்ள பந்தை நீருக்குள் அமுக்கினால் சீறியெழுவது போன்றதே..ஈழத்தில் தமிழுணர்வு. வீறுகொண்டெழுவது சிங்களத்தின் அடக்குமுறையால்தான்..

வைகோவின் பலமும், பலவீனமும் அவரது பேச்சு....

தமிழ் தேசியம் பேசிக்கிட்டு கொஞ்ச பேரு கிளம்பிருகிறாங்க.... என்று, 
ஏன் இந்த விடயத்தில், கருணாநிதியோ, அம்மாவோ, விஜயகாந்தோ வாய் திறக்கவில்லை என்ற, எந்த சிந்தனையும் இல்லாம சொல்லி விட்டு, இப்ப 'taken out of context' என்கிறார்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Nathamuni said:

நன்றி நாதம்.. என்னைப் பொறுத்தவரையில் எழுவர் விடுதலை குறித்து நாம் தமிழர் வரைவில் இல்லாவிட்டால்கூட இவர்களுக்கு என்ன பிரச்சினை?! திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் இதுபற்றி எதுவும் இல்லையே.. அவர்களிடம் கேட்க முடியாததை நாம் தமிழரிடம் கேட்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, இசைக்கலைஞன் said:

நன்றி நாதம்.. என்னைப் பொறுத்தவரையில் எழுவர் விடுதலை குறித்து நாம் தமிழர் வரைவில் இல்லாவிட்டால்கூட இவர்களுக்கு என்ன பிரச்சினை?! திமுக, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளில் இதுபற்றி எதுவும் இல்லையே.. அவர்களிடம் கேட்க முடியாததை நாம் தமிழரிடம் கேட்கிறார்கள்.

இதில நடிப்பவர் முன்னர் லொள்ளுசபா வில் நடித்தவர். இங்கே பிரச்னை என்னவெனில் யார் தமிழர் அல்லாத தமிழ் பேசும் நபர் என்பதே....

கொழும்பு டெய்லி மிரர் பத்திரிகையில் ஒரு பதிவு இட்டேன். தமிழகத்தில் ஒரு கட்சி, ஒரியினல் தமிழர்களையும், ஒரிஜினல் சிங்களவர்களையும் , நாயக்கர்கள் தான் ஆள்கின்றனர் என்று சொல்கிறது. அந்த கட்சி, கருணாநிதி, கண்டி கடைசி
மன்னன், பண்டார'நாயக்க', சேன'நாயக்க', தக'நாயக்க', திஸ்ஸ'நாயக்க' என்று சில பெயர்களையும் குறிகின்றது என்றேன்.

பலர், ஆச்சரியம் தெரிவித்து பதில் குறிப்பு போட்டார்கள்.
 
Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

எனக்கும்கூட இந்தப் புரிதல் போன வருடம்தான் கிடைத்தது. tw_astonished:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, இசைக்கலைஞன் said:

எனக்கும்கூட இந்தப் புரிதல் போன வருடம்தான் கிடைத்தது. tw_astonished:

இன்னுமோர் விடயம், ஒரிசாவில் பட்'நாயக்'

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அப்பாவிச் சிங்களவர்களுக்கு (ஆதிகுடிகள்.. காலப்போக்கில் சிங்களவர் ஆனவர்கள்) இனவெறியை மூட்டி குளிர்காய்ந்தது இலங்கையின் தெலுங்கு நாயக்கர் வம்சம். தமிழ்நாட்டில் அப்பாவி தமிழ் ஆதிகுடிகளை ஏமாற்றி அதே தெலுங்கு நாயக்கர்கள் விளையாடுகிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் மூன்றாம் கட்ட தேர்தல் பரப்புரை பயணத்திட்டம்

1)27.4.16-செவ்வாய்

குறிஞ்சிப்பாடி(காலை 9 மணி)

காட்டுமன்னார்கோயில் (காலை 10.00 மணி)

திருவிடைமருதூர் (காலை 11 மணி)

கும்பகோணம் (மாலை 5மணி) மதியஉணவு தங்குதல்

பாபநாசம் (இரவு 7மணி)

தஞ்சை ( இரவு பொதுக்கூட்டம்) தங்கல்

2) 28.4.16 -புதன்

கந்தர்வக்கோட்டை (காலை 9மணி)

புதுகோட்டை (காலை 11மணி)

திருமயம் ( பிற்பகல் 12 மணி)

திருப்பத்தூர் (மாலை 5மணி) மதிய உணவு

மேலூர் (மாலை 6 மணி)

மதுரை வடக்கு (மாலை 8 மணி)

மதுரை மேற்கு ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

3) 29.4.16 -வியாழன்

திருப்பரங்குன்றம் ( காலை 9 மணி)

வாடிப்பட்டி (காலை 11 மணி)

நிலக்கோட்டை ( பிற்பகல் 12 மணி) மதிய உணவு ஒய்வு

ஆத்தூர் ( மாலை 4 மணி)

நத்தம் ( 6 மணி )

திண்டுக்கல் ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

4) 30.4.16 -வெள்ளி

ஒட்டன்சத்திரம் ( காலை 9 மணி )

வேடச்சந்தூர் ( காலை 11 மணி)

மணப்பாறை( 12 மணி)

திருச்சி ( இரவு 8 மணி பொதுக்கூட்டம்)

5)1.5.16 – சனி

மணச்சநல்லூர் (காலை 9 மணி )

முசிறி (காலை 11 மணி)

குளித்தலை ( மாலை 5 மணி )

கிருஷ்ணராயபுரம் ( மாலை 6 மணி )

அரவக்குறிச்சி வேலாயுதபாளையம் ( இரவு 8 மணி)

கரூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)

6)2.5.16 – ஞாயிறு

தாராபுரம் ( காலை 9.30 மணி )

பழனி (காலை 11.30 மணி)

உடுமலைப்பேட்டை (மாலை 4.30 மணி )

பல்லடம் ( இரவு 6 மணி)

காங்கேயம் ( இரவு 8 மணி)

திருப்பூர்( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

7) 3.5.16 -திங்கள்

பெருந்துறை ( காலை 9 மணி)

மொடக்குறிச்சி (காலை 10.30 மணி)

பரமத்திவேலூர் ( நண்பகல் 12 மணி)

நாமக்கல் ( மாலை 4.30 மணி)

ராசிபுரம் (மாலை 6 மணி)

வாழப்பாடி ( இரவு 7.30 மணி)

ஆத்தூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்) தங்கல்

8) 4.5.16 செவ்வாய்

தம்மம்பட்டி ( காலை 9 மணி)

துறையூர் ( காலை 11 மணி)

பெர்மபலூர் ( மாலை 4.30 மணி)

உளுந்துர்பேட்டை ( மாலை 6 மணி )

மைலம் ( இரவு 7.30 மணி)

விழுப்புரம் ( இரவு 9 மணி ) தங்கல்

9) 5.5.16 -புதன்

பகண்டை கூட்டு சாலை – ரிஷிவந்தியம் ( காலை 9 மணி)

கள்ளகுறிச்சி ( காலை 10.30 மணி)

கச்சிராபாளையம் ( பிற்பகல் 12 மணி)

போளூர் ( மாலை 6 மணி)

திருவண்ணாமலை ( இரவு 8.30 மணி பொதுக்கூட்டம் ) தங்கல்

10) 6.5.16 வியாழன்

ஆரணி ( காலை 9 மணி)

செய்யாறு ( காலை 11 மணி)

காஞ்சிபுரம் ( மாலை 5 மணி)

அரக்கோணம் ( மாலை 6.30 மணி)

திருத்தணி ( இரவு 7.30 மணி)

திருவள்ளூர் ( இரவு 9 மணி பொதுக்கூட்டம்)

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவரையில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கட்சிகள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் எண்ணிக்கை..

13043641_1723220897957150_65693718171387

13091933_992555154155092_715480374045351

மாற்று அரசியல் புரட்சி என்றால் என்ன?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13082561_235359380186761_685643194744670

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Nathamuni said:

இதில் சில கேள்விகளுக்கு அண்ணன் சீமான் ஏன் தடுமாறினார் என்று புரியவில்லை.

உதாரணத்துக்கு...

குறிப்பாக சீமை மதுவுக்கு தடை.. பனம் பால் தென்னம் பாலுக்கு அனுமதி 3 மைல்களுக்கு அப்பால்..

இதற்கான விடை.. பனம் பால் தென்னம் பாலில் அற்ககோலின் அளவை கட்டுப்படுத்தி.. அதி கூடியது 3% - 4% உள்ள நிலை வரை.. ஊருக்கு வெளியில்.. குறிப்பிட்ட அளவில்.. உடலுக்கும் சமூகத்திற்கும் தொந்தரவு செய்யாத வகைக்கு குடிக்க அனுமதிக்கப்படும். மிகவும் புளிச்ச பனம் கள்.. தென்னம் கள் விற்பனைக்கு அனுமதிக்கப்படமாட்டாது.

மேலும்... இயற்கை..குடிபானங்களை... ஊருக்குள் சாதாரண மக்களும் குடிக்க ஊக்குவிப்பு அளிக்க அரசு முனையாது. அதனால் தான் ஊருக்கு வெளியில் 3 மைல்கள் தள்ளி அந்த மையங்கள் தகுந்த சுகாதார மற்றும் பரிசோதனை அம்சங்களுடம் அமைக்கப்படும்.. என்றிருப்பின்.. கேட்டவர் வாயும் மக்களும் நல்ல விளக்கத்தைப் பெற்றிருப்பர். 

அண்ணன் சீமான்.. சில விடயங்களில் இன்னும் இன்னும்.. நுணுக்கமான பார்வையை கொண்டிருப்பது.. இவ்வாறான கேள்விகளுக்கு விடையிறுக்க வசதியாக இருக்கும். 

வீரப்பன்.. கேள்விக்கு..

வீரப்பன் ஆரம்பத்தில் குற்றவாளியாக இருந்திருக்கலாம்.. ஆனால் இறுதில் அவர் வனங்களுக்கும்.. வனவாழ் மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்கப் பிரியப்பட்டார். அந்த மாற்றத்துக்காக அவரை மன்னிக்கவும்.. மதிக்கவும் வேண்டும் அல்லவா.. என்று ஒரு போடு போட்டிருந்தால்.... விசயம் முடிஞ்சுது. யதார்த்தமும் அது தானே. 

கச்சதீவை.. காவேரி நீரை எப்படி மீட்பாய்..

கச்சதீவை உள்ளடக்கி தமிழக மீனவர்களுக்கான மீன்பிடி கடல்வயலத்தை தமிழகம் பிரகடனப்படுத்தும். அதன் எல்லையில் தமிழக கடல் எல்லைக் காவல்படையை நிறுத்துவேன். இந்திய கடற்படை உதவி கோரப்படும். மீளக் கச்சதீவை மீட்க.. மீளளிக்க.. அரசுகளிடம் உரிய கோரிக்கையும் வைக்கப்படும். ஐநா தலையீட்டையும் கோரும் சாத்தியம் பற்றி ஆராய்வேன்.. என்றிருந்தால்...

காவேரி தண்ணீருக்குப் பதில்.. தமிழகத்தில் இருந்து கர்நாடகம் போகும் வளங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பேன். கர்நாடகத்தில் இருந்தான இறக்குமதிக்கும் கட்டுப்பாடு போடுவேன். போதிய தண்ணீர் எப்ப வரும் என்ற உத்தரவாதம் தரப்படுகுதோ.. அப்போது தமிழகத்தில் இருந்து கர்நாடகம் கோரும்.. வளத்தை  அங்கிருந்தான இறக்குமதி கட்டுப்பாட்டை தளத்தி..அதன் தேவைக்கு ஏற்ப வேண்டியதை.. வழங்குவேன்.

முருகன்.. சிவன்.. பற்றிய கேள்விக்கு..

என் இன மூதாதைப் பரம்பரைகளை நான் மக்களுக்கு இனங்காட்டுவது.. மதத்திற்காக அல்ல.. இனத்திற்காக..!! இதனால்.. இஸ்லாமிய தமிழனோ.. கிறிஸ்தவத் தமிழனோ.. இந்துத் தமிழனோ.. முகம் சுழிக்கத் தேவையில்லை. தன் பரம்பரைகளைப் பற்றி அறிந்திருப்பது அவசியம்.... என்று தான்..

புகை பொருள் தடை... 

இதில் நான் உலகில் தமிழீழத்தினை முன்னுதாரணமாக்கி.. புகை பொருள் தடை மூலம்.. புகைத்தல் வழி நோய்களுக்கு சுகாதார சேவைகளுக்கு ஆகும் செலவீனத்தை கட்டுப்படுத்தி.. வரி இழப்பின் ஒரு பகுதியை அடைக்க முயல்வேன். எனது மக்களின் சராசரி ஆயுள் காலத்தைக் கூட்டி அந்த மனித வலுவை பயன்படுத்தி.. வரி இழப்பீட்டினை இன்னும் இன்னும் நிவர்த்திக்க முயல்வேன். 

தந்தி தொலைக்காட்சி.. ஆக்கள் நாம் தமிழர் அரசியல்.. அதன் வரைபு தொடர்பாக ஒரு கேள்விக் கொத்தை.. யாழ் இணையத்தளத்தில் தொடுத்தால்.. நாம் தமிழர் அபிமான.. நம் கள உறவுகள்.. நல்ல விளக்கம் அளிப்பார்கள் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, nedukkalapoovan said:

ஒரே காரணம்: ஆதீத உடல்களைப்பு... 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13087516_992352397499792_337501084154353

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, இசைக்கலைஞன் said:

13087516_992352397499792_337501084154353

முதல் தலைமுறை வாக்காளர்களிடம் நம்பிக்கையை விதைக்கும் சீமானின் பிரசாரம்
 
சமூக வலைதளங்களே சரணாகதி என 'வலைவாசியாக' வாழ்ந்துவரும் தங்களுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் பிரசாரம் நம்பிக்கையை விதைக்கும் வகையில் இருக்கிறது என்கின்றனர் முதல் தலைமுறை வாக்காளர்கள். சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியல் சக்தி நாங்களே என தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா; பாஜக ஆகியவை களத்தில் நிற்கின்றன. அதே நேரத்தில் ஒட்டுமொத்த தற்போதைய அரசியல் நடைமுறைக்கே 'தத்துவார்த்த' மாற்று நாங்களே என்ற முழக்கத்துடன் சீமானின் நாம் தமிழர் கட்சி முழங்கி வருகிறது.

கடலூரில் சீமான்...

234 தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே களம் இறங்கியுள்ளது. கடலூர் சட்டசபை தொகுதியில் சீமான் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரையில் இது அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல் என்றபோதும் ஒரு அனுபவமிக்க, தத்துவத்தின் அடிப்படையிலான இடதுசாரி கட்சி, தொண்டர்களைப் போல முழுமையான ஒழுங்குடன் தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

அமோக வரவேற்பு 

சீமான் முன்வைக்கும் தத்துவார்த்த மாற்று, தலைகீழான நிர்வாக மாற்றத்தை உள்ளடக்கிய 'நாம் தமிழர் அரசு' என்பது மத்திய அரசிடம் அதிக அதிகாரங்கள் குவிந்திருக்கும் இந்திய அரசியல் அமைப்பில் எத்தகைய சாத்தியம்? ஆட்சி அமைக்கும் வாக்குகளை சீமான் கட்சி முதலில் பெறுமா? என்ற எதிர்கேள்விகள் நிறையவே முன்வைக்கப்படுகின்றன. ஆனால் சமூக வலைதளங்களே வாழ்க்கை என வாழ்ந்து வருகிற முதல் தலைமுறை வாக்காளர்களோ சீமான் முன்வைக்கும் அத்தனை 'மாற்றுகளை'யும் சிலாகிக்கின்றனர். அவற்றை முழுமையாக ஆதரிக்கின்றனர்.

சோசியல் மீடியாக்களில் வலுவாக... 

அதிமுக, திமுகவுக்கு மாற்றாக சீமானுக்கு வாக்களித்து பார்ப்போமே.... ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்துதான் முயற்சிப்போமே என்ற ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பு இந்த முதல் தலைமுறை வாக்காளர்களிடம் இருப்பதை உணரவும் முடிகிறது. கட்சி கட்டமைப்பில் திமுக, அதிமுக அளவுக்கு நாம் தமிழர் கட்சி வலுவானதாக இல்லைதான்.. ஆனால் சமூக ஊடகங்களில் இந்த இரு கட்சிகளுக்கும் கடும் போட்டியாளராக நாம் தமிழர் கட்சிதான் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது.

வாக்குகளாக மாறுமா? 

சீமானின் பிரசாரங்களை சமூகவலைதளங்களில் உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதிலும் தீவிரமாகவே இருக்கின்றனர்... சமூக வலைதளவாசிகளான முதல் தலைமுறை வாக்காளர்களைப் பொறுத்தவரை சீமான் ஒரு நம்பிக்கை விதையை விதைத்திருக்கிறார்... இந்த நம்பிக்கை வாக்குகளாக மாறுமா? இந்த முதல் தலைமுறை வாக்காளர்களின் மவுனம், டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவாலை அரியணையில் ஏற்றியதைப் போல ஒரு மாயவித்தையை தமிழகத்தில் நிகழ்த்துமா? என்பது மே 16-ல் தெரிந்துவிடும்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/young-voters-support-seeman-252088.html

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.