Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

“ஏசுவார்கள் எரிப்பார்கள்

உண்மையை எழுது

உண்மையாகவே எழுது” – யோகர் சுவாமிகள்

“எழுத்தாளனின் பணியென்ன அதில் என்னென்ன இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது பற்றித் தெளிவாகத் தெரிந்த நிலையில் சுவாமிகள் கூறிய கருத்து அது.

ஒரு எழுத்தாளனுக்கு, சமூகச் சிந்தனையாளனுக்கு எதிர்ப்புக்கள் உருவாவது இயல்பானதே. அவற்றைத் தடுத்துவிட முடியாது. வேறு வகையில் கூறுவதானால் அத்தகைய எதிர்ப்புக்களே எழுத்தாளன் சரியான திசையில் பயணிக்கிறான் என்பதற்கான காட்டிகள் எனலாம். உண்மைகள் பிடிவாதமானவை அவற்றை நீண்ட காலத்துக்கு மறைத்துவிட முடியாது. அமாவாசை நாட்களில் சந்திரன் மறைந்து போவதை வைத்துக்கொண்டு சந்திரனே காணாமற் போய்விட்டது எனக் கூறி விடலாமா? அது ஒரு சில நாட்களில் தானாக வெளிப்பட்டுத் தானே ஆகும்?.

அந்த வகையில் உண்மைகளை எவராவது வெளிப்படுத்தாவிட்டாலும் கூட இயல்பாகவே அவை தாமாகவே வெளிப்பட்டு விடும் தன்மை கொண்டவை. அதேவேளை, உண்மைகளை மறைத்து விடுவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற ஒவ்வொரு செயற்பாடும் உண்மை வெளிப்படுவதை விரைவுபடுத்துவதாகவே ஆகிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் கண்டிருக்கின்றோம். இன்று புலம்பெயர் தமிழ் மக்களிடையே ஒரு உண்மையை மறைத்து விடுவதற்குப் பகிரங்க முயற்சி நடப்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இதற்காக சிறுபிள்ளைத்தனமான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு போய் விடும் என்ற அப்பாவித்தனமான எதிர்பார்ப்புடன் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இக்கருத்து இணையத்தில் ஜூன் 24, 2009 பகிரப்பட்டது. இன்னமும் நன்றாகவே பொருந்துகின்றது.
 
Edited by ஜீவன் சிவா

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி,

உங்களுக்கு அறுகம் குடா முதல் மாபிள் பீச் வரை மட்டுமே தெரியலாம். நான் பானமை முதல் தென்னமரவாடி வழியாக தலைமன்னார், பருத்தி துறை வரை போய் நிலைமைய நேரில் தரித்துள்ளேன் தரிசிக்கிறேன்.

வெளிநாட்டில் வேலை மட்டும்தான். புரியும் என நினைக்கிறேன்.

மன்னிக்கவும் யாழில் கோசான் யாரையும் இதுவரை சந்தித்ததில்லை. இனியும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கருத்துக்கள் விளங்குவதில்லை என்றுதான் பலரும் எழுதுகிறார்கள் 
நீங்களும் அப்படி எழுதுவதால் .... எனது கருத்தில் தவறு இருக்கலாம்.

நீங்கள் கூறியதுபோல் ...
பனைக்கும் தென்னைக்கும் சம்மந்தம் இல்லை.
ஆனால் தென்னை பற்றி பேசும்போது புரியாதவிடத்து   ஒரு வேளை சிலருக்கு பனையை பற்றி பேசும்போது புரியலாம்.
எனது கேள்விக்கு உங்களிடம் ஏதும் பதில் இருந்தால் தாருங்கள்.
மேலே இருக்கும் கருத்தில் அது எந்த இடத்தில் உடன்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறேன். 

நான் கஸ்ட்ரபட்டு அதிகாலை அலாரம் வைத்து எழும்பி வேலைக்கு போய் கடினமாக உழைக்கிறேன்.
அமெரிக்க அரசு சொகுசாக எனது உழைப்பில் 25% வலு கட்டாயமாக புடுங்கி கொள்கிறது.
இந்த அடாவடி தனத்தை பல அரசுகள் செய்கின்றன .....
ஏன் மக்களாகிய நாங்கள் ஒரு ஆர்பாட்டம் செய்து இனி வரி தரமாட்டோம் என்று சொல்ல முடியாது ??

புலிகள் விட்ட எல்லா தவறுகளையும் தட்டி கேட்கும் நாம் ...
ஏன் இந்த அரசுகளின் அடவடிதனத்தை கேட்க கூடாது ..... என்று நீங்கள் எண்ணியதில்லையா ? 

செய்யலாமே? அலாரம் வைத்து எழும்பாமல், வேலைக்குப் போகாமல், 25% வரி கட்டாமல் வெல்ப்fயார் செக் எடுத்துக் கொண்டு இருந்து பாருங்கள்! வீடு தேடி வந்து சுட மாட்டார்கள்! இங்கே பங்கரும் இல்லை! (வரி எதற்குக் கட்டுகிறோம் என்பதே தெரியாமல் பிரஜையாகி விட்டீர்கள்! குதிரையா?)

ஒரு இன போர் நடந்த நாட்டில் பிறந்த ஒரு ஆண்மகனாக 
உங்களுக்கு ஏதும் கடமைகள் இருந்தாக நீங்கள் உணர்ந்து இருந்தால் ...?
அவை என்ன என்று அறிய ஆவல் ....

உங்களுக்கிருந்த அதே கடமை தான் அவருக்கும் இருந்தது! நீங்கள் அமெரிக்காவில் இருந்து கீ போர்ட்டில் கடமையாற்றுவதால் போய்ச் செய்ய வேண்டிய கடமையை மறந்து விடலாம் என்று அர்த்தம் இல்லை!:cool: கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கற்களைத் தாறுமாறாக எறிகிறீர்கள்! யோசிக்கவே மாட்டீர்கள் இந்தக் கேள்விகள் உங்களிடமும் திரும்பி வரலாம் என! 

எண்டை அம்மே ....இதுக்கும் மேல நம்மால மல்லுக்கட்ட முடியாதுப்பா 
முடிஞ்சவரைக்கும் Simple ஆகவே முடித்து கொள்வோம் 

ஜஸ்டின் அண்ணை உங்களது கேள்வி 
புலிகள் தவறு செய்தார்கள் என்பதை ஏற்று கொள்கிறீர்களா ....? ஏற்று கொள்கிறேன்  (ஆனால் புலிகள் மட்டும் தான் தவறு செய்தார்கள் என்று ஏற்று கொள்ளமாட்டேன் )
புலிகள் பலவந்தமாக ஆட்களை இணைத்தார்கள் என்று ஏற்று கொள்கிறீர்களா ...? ஏற்று கொள்கிறேன் 

புலிகள் ஆட்கடத்தல் செய்தார்கள் என்று ஏற்றுகொள்கிறீர்களா ...? ஏற்று கொள்கிறேன் 

இன்னும் மற்ற இதர ..மனித உரிமை மீறல் அது இது எல்லாம் செய்தார்கள் என்று ஏற்று கொள்கிறீர்களா ....? ஏற்று கொள்கிறேன் 

இப்போது என்னுடைய கேள்வி 

புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு வழங்கவேண்டும் என்ற திட்டத்தை இங்கே  முன்வைத்தவர் நீங்கள் 

இதனை யார் முன்னெடுப்பது ....?  நடைமுறைப்படுத்துவது .....? 
யார் மேற்பார்வை செய்வது .....?

இந்த தீர்வுத்திட்டத்தில் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்குரிய  தீர்வு வழங்கியபின் ... சிங்களவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் தீர்விட்குள்ளும்  சேர்த்து கொள்ள படுவார்களா .....?  இவர்கள் புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆயிற்றே ...ஒருவேளை ரெண்டு தீர்வும் இவர்களுக்கு செல்லுபடியாகுமா .? ..பிடித்தனுப்பியது புலிகள் ....கொன்றது சிங்களவன்...
மனாதால விரும்பி பிள்ளையை போராட அனுப்பிய சில குடும்பங்கள், பிள்ளையே விரும்பி போராடப்போன குடும்பங்கள்  நீங்கள் வழங்கப்போகும் பொருளாதார தீர்வில் ஆசை கொண்டு ...புலிகளால் பாதிக்கப்பட்டதாக கூறினால் அவர்களது உண்மை தன்மையை எப்படி அறிந்துகொள்வீர்கள் ...?  

ஏன் அதனை அமுல்படுத்த தமிழ் தேசிய தூண்களை துணைக்கு இழுக்கிறீர்கள் ...இவர்கள் பயங்கரவாதத்திற்கு துணை போனவர்கள் அல்லவா ...?இவர்கள் மீண்டும் இதற்குள் வருவது பாதிக்கப்பட்டவர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தாதா ....?

எனக்கென்னவோ என்ற சிற்றறிவுக்கு ஏற்ற வகையில் இந்த தீர்வு திட்டத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பதாக தெரிகிறது ...எல்லாம் அல்லாவுக்கே வெளிச்சம் 

அக்னி, உணர்ச்சி வசப்பட்டு எழுத முதல் சிம்பிளாக யோசியுங்கள்! புலிகள் பிடித்ததை இன்னும் நியாயப் படுத்தும் தேசியத்தூண்கள் தான் புலிகளின் குற்றத்திற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்! இவற்றைச் சுட்டிக் காட்டும் நாங்கள் அல்ல! அதனால் அவர்கள் தான் நட்ட ஈடு கொடுப்பதை ஒழுங்கு படுத்த வேண்டும், அப்படி நடப்பதானால்! ஏதோ எங்களுக்குச் சவால் விடுவது போல நினைத்துக் கொண்டு உங்கள் சைடிலேயே கோல் மேல் கோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

ஒரு விடயத்தை அணுகும் போது big picture ஐப் பாருங்கள்: உதாரணமாக , பூனைக்கு எப்படி மணி கட்டலாம் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வந்து பூனைக்குக் கட்டும் மணியை தங்கத்தில் கட்டலாமா வெள்ளியில் கட்டலாமா என்று புது விவாதம் தொடங்காதீர்கள்! முதலில் பூனைக்கு மணி கட்டலாம்!. (இவ்வளவு விவரம் எல்லாம் கேட்கும் நீங்கள், புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை ஒதுக்கிச் செல்கையில் ஒரு டவுட்டும் கேட்காமல் ஏற்றுக் கொண்டது எப்படி என்று தான் யோசிக்கிறேன்!:cool:)  

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அர்ஜுன், ஜஸ்டின்,
நெல்சன் மாண்டேலாவின் இணைப்பை இட்டதற்கு காரணம் நாமும் அவர் போல என்று காட்டுவதற்கு அல்ல.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை...
நேற்று தூற்றப்பட்டவன் .நாளை போற்றப்படுவான் 
நேற்று போற்றப்பட்டவன் நாளை தூற்றப்படுவான் (இப்போது நடப்பது)

காந்தியும்  இன்னும் 100 ஆண்டு முதல் பிறந்து அஹிம்சா போதித்து இருந்தால் ... இன்றைக்கு கடவுளாக கோயிலுக்குள் அமர்ந்து பூஜை, புணஸ் காரங்களை அனுபவித்துக்கொண்டு இருப்பார்.
புத்தன் கூட அப்படிதான் ...
(பின் குறிப்பு : நான் புலிகளை கடவுளாக காட்டப் பார்கிறேன் என்று மட்டும் கச்சை கட்டாதீர்கள்)

தியாகி திலீபனை வரலாறு எப்படி பார்க்கும்  என்பது இனி வரும் காலங்கள் பதில் சொல்லும்.
அதன் பெருமை குலைப்பதற்கும் ஒரு கோஷ்டி எப்போதும் இருக்கும். 

இங்கு நடப்பது ஒரு 15 நபர்கள் தங்களுக்கு தெரிந்த ஞாயங்களை, தான் சொல்வது சரி என்ற என்னப் பாடோடு எதிரும் புதிருமாய் வைக்கும் கருத்துக்களே அன்றி வேறொன்றும் இல்லை.
இனி தீலிபன் எப்படி செத்தார் என்றும் பின்னூட்டங்கள் வரும். 
தயவு செய்து அந்த அசிங்கத்தை செய்யாதீர்கள் என்று மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்.

புலிகள் தவறு செய்தார்கள்... இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? 

திரிக்கு திரி இதை தெளிவு படுத்தியாகி விட்டது.... நம்பகத்தன்மை யாரிடமிருந்து அதிகரிக்கும் என்பது தான்  புரியவில்லை.
 
யாழ்களத்தில்  எனக்கு தெரிய ஒரு சிறு அங்கத்தினர் புலிகள் குறித்த அவர்கள் நிலையில் பிடிவாதமாக நிற்கிரார்கள்.
அவர்களை மூளை சலவை, மன மாற்றம் செய்ய இத்தனை பாடு...

உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து யு என் ஊடாக இலங்கையில் யுத்தத்தில் என்ன மானுட அழிவு நடந்தது என்று ஆராய்ந்து அந்த அநியாயங்களை  செய்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று வருடக்கணக்கில் எத்தனயோ பேர்களை சந்தித்து ஆதரங்களை திரட்டி அறிக்கையும் சமர்ப்பித்து ஒரு விசாரணை வேண்டும் என்று எல்லோரும் கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ,

இங்கு ஒருவர் "புலிகள் தவறு செய்தார்கள் .. இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம் ?  என்று கேள்வி கேட்கின்றார் .

இனி ஒருவர் ஆமி தவறு செய்தது அதை நிறுவுவதால் என்ன லாபம் என்று கேட்பார் .

என்ரை தலையை எந்த சுவரில் முட்டுவது என்று யோசிக்கின்றேன் .

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால் சசிக்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த திரியில் கடைந்தெடுத்து மூவரை திட்டவிரும்புகின்றேன்....எனக்கு வேறு வழிதெரியவில்லை...மன்னிக்கவும்

இராஜபக்சே ....இராஜபக்சே ......இராஜபக்சே tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் செய்தகுற்றங்கள்  பல உள்ளன.
மிகப்பெரிய குற்றம்  சகோதரப்படுகொலைகள்.
இரண்டாவது உள் வீட்டுக் கொலைகள்.
மூன்றாவது சிறுவர்களைப் படையில் சேர்த்தமை
நான்காவது குற்றம்  கட்டாயமாக ஆட்களைப் படையில் சேர்த்தமை.
இன்னும் பல இருக்கலாம்

ஆனால் இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய குற்றம் தமிழனுக்காகப் போராடச் சென்றமை.
தமிழனுக்காகப் போராடப் புலிகளை அனுமதித்தது யார் என்று மட்டும் கேட்க வேண்டாம் ப்ளீஸ் 

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை தலையை எந்த சுவரில் முட்டுவது என்று யோசிக்கின்றேன் .

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால் சசிக்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன் .

எனக்கும் முட்ட வேண்டும் போலத்தான் இருக்கு! ஆனாலும் இந்த மாதிரியான ஒரு கேள்வியை இன்னொரு புலி ஆதரவாளரிடமும் கேட்டேன்: "அங்கே போய்ச் சொல்ல முடியாததால் தானே இங்கே நின்று சொல்கிறேன்? உங்களுக்குப் புரியவில்லையா?" என்ற அர்த்தத்தில் பதில் சொன்னார்! :cool:

புலிகள் செய்தகுற்றங்கள்  பல உள்ளன.
மிகப்பெரிய குற்றம்  சகோதரப்படுகொலைகள்.
இரண்டாவது உள் வீட்டுக் கொலைகள்.
மூன்றாவது சிறுவர்களைப் படையில் சேர்த்தமை
நான்காவது குற்றம்  கட்டாயமாக ஆட்களைப் படையில் சேர்த்தமை.
இன்னும் பல இருக்கலாம்

ஆனால் இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய குற்றம் தமிழனுக்காகப் போராடச் சென்றமை.
தமிழனுக்காகப் போராடப் புலிகளை அனுமதித்தது யார் என்று மட்டும் கேட்க வேண்டாம் ப்ளீஸ் 

  போய் முதலில் இருந்து என்ன சொல்ல முயற்சி நடக்கிறது என்று வாசித்து விட்டு வந்து ஆக்கபூர்வமாக ஏதாவது இருந்தால் எழுதுங்கள்! அல்லது இந்த தேசபக்தி ஹீரோ வெர்ஷிப் வசனத் தொடர்களோடு காலங்களைக் கடத்துங்கள்! உலகம் ஒன்றும் திசைமாறிச் சுற்றப் போவதில்லை! 

  • கருத்துக்கள உறவுகள்

செய்யலாமே? அலாரம் வைத்து எழும்பாமல், வேலைக்குப் போகாமல், 25% வரி கட்டாமல் வெல்ப்fயார் செக் எடுத்துக் கொண்டு இருந்து பாருங்கள்! வீடு தேடி வந்து சுட மாட்டார்கள்! இங்கே பங்கரும் இல்லை! (வரி எதற்குக் கட்டுகிறோம் என்பதே தெரியாமல் பிரஜையாகி விட்டீர்கள்! குதிரையா?)

உங்களுக்கிருந்த அதே கடமை தான் அவருக்கும் இருந்தது! நீங்கள் அமெரிக்காவில் இருந்து கீ போர்ட்டில் கடமையாற்றுவதால் போய்ச் செய்ய வேண்டிய கடமையை மறந்து விடலாம் என்று அர்த்தம் இல்லை!:cool: கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கற்களைத் தாறுமாறாக எறிகிறீர்கள்! யோசிக்கவே மாட்டீர்கள் இந்தக் கேள்விகள் உங்களிடமும் திரும்பி வரலாம் என! 

அக்னி, உணர்ச்சி வசப்பட்டு எழுத முதல் சிம்பிளாக யோசியுங்கள்! புலிகள் பிடித்ததை இன்னும் நியாயப் படுத்தும் தேசியத்தூண்கள் தான் புலிகளின் குற்றத்திற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்! இவற்றைச் சுட்டிக் காட்டும் நாங்கள் அல்ல! அதனால் அவர்கள் தான் நட்ட ஈடு கொடுப்பதை ஒழுங்கு படுத்த வேண்டும், அப்படி நடப்பதானால்! ஏதோ எங்களுக்குச் சவால் விடுவது போல நினைத்துக் கொண்டு உங்கள் சைடிலேயே கோல் மேல் கோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

ஒரு விடயத்தை அணுகும் போது big picture ஐப் பாருங்கள்: உதாரணமாக , பூனைக்கு எப்படி மணி கட்டலாம் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வந்து பூனைக்குக் கட்டும் மணியை தங்கத்தில் கட்டலாமா வெள்ளியில் கட்டலாமா என்று புது விவாதம் தொடங்காதீர்கள்! முதலில் பூனைக்கு மணி கட்டலாம்!. (இவ்வளவு விவரம் எல்லாம் கேட்கும் நீங்கள், புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை ஒதுக்கிச் செல்கையில் ஒரு டவுட்டும் கேட்காமல் ஏற்றுக் கொண்டது எப்படி என்று தான் யோசிக்கிறேன்!:cool:)  

ஐயோ ஐயோ .......
ஜஸ்டின் அண்ணர் ! இங்கு நூறுமுறை எழுதியாச்சு நான் சுயலவாதி ..... நான்தான் குற்றவாளி தவிர.
உங்களது சுத்த சுய நலத்தை தூக்கி 
தமது உயிரை நாட்டுக்கு அர்பணித்த போராளிகள் மீது போடுவதைத்தான் நான் சுட்டி காட்டுகிறேன்.

அவரவர் தமது கடமைகளை தமது சமூகம் சார்ந்து செய்திருப்பின் 
கொமின்சயம் உலகில் தோன்றியிருக்க வாய்ப்பில்லை.

முதாளித்துவமும் ஒரு வகை இண்டிரெக்ட் கொமுனிசயம்தான் 
ரிவார்ட்ஸ் அடிப்படையில் அமைகிறது.
குதிரை ரேசில் ஓடும் குதிரைகளுக்கு கேற்றை திறந்தால்  வேகாமாக ஓடவேண்டும் என்று பழக்க படுத்தி வைத்திருப்பதுபோல். 
அலராம் அடித்ததால் ஒழும்பி ஓட முதாளிகளால் பழக்க படுத்த வைத்திருக்கபட்டிருக்கிறது. 

அமெரிக்காவில் சும்மா கிடந்தால் வெல்பேர் கிடைக்கும் சோமாலியாவில் கிடைக்குமா ?
அந்த அந்த நாட்டு உள்ளிருப்பு பொறுத்தே சட்டம் அமைகிறது 
நீங்கள் எந்த தளத்தில் நிற்கிறீர்கள் என்பதே புரியவில்லை.

என்மீது இனி விரலை நீட்டும் வேலையை விடுங்கள் ....
நான் தானகவே குற்றவாளி கூண்டில்தான் ஏறி நிற்கிறேன்.
நான் ஒரு பொறுக்கி ..... சும்மா கிடந்த எல்லா தமிழனும் பொறுக்கிகள்தான் !
இந்த பொறுக்கித்தனத்தை ஒப்பாரி வைத்து ஒழிக்காதீர்கள் எனபதே எனது வாதம். 

உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து யு என் ஊடாக இலங்கையில் யுத்தத்தில் என்ன மானுட அழிவு நடந்தது என்று ஆராய்ந்து அந்த அநியாயங்களை  செய்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று வருடக்கணக்கில் எத்தனயோ பேர்களை சந்தித்து ஆதரங்களை திரட்டி அறிக்கையும் சமர்ப்பித்து ஒரு விசாரணை வேண்டும் என்று எல்லோரும் கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ,

இங்கு ஒருவர் "புலிகள் தவறு செய்தார்கள் .. இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம் ?  என்று கேள்வி கேட்கின்றார் .

இனி ஒருவர் ஆமி தவறு செய்தது அதை நிறுவுவதால் என்ன லாபம் என்று கேட்பார் .

என்ரை தலையை எந்த சுவரில் முட்டுவது என்று யோசிக்கின்றேன் .

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால் சசிக்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன் .

ஏன் இந்த அச்சாபிள்ளை உலக நாடுகள் இதை ருவாண்டாவில் செய்யவில்லை ...?
ஏன் கை காட்டி கொண்டு நின்று மியான்மாரை வேடிக்கை பார்கிறார்கள் ?

இந்த விசுக்கோத்து கதையை யாரும் காது கேளாதவனிடம் அவியுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

  போய் முதலில் இருந்து என்ன சொல்ல முயற்சி நடக்கிறது என்று வாசித்து விட்டு வந்து ஆக்கபூர்வமாக ஏதாவது இருந்தால் எழுதுங்கள்! அல்லது இந்த தேசபக்தி ஹீரோ வெர்ஷிப் வசனத் தொடர்களோடு காலங்களைக் கடத்துங்கள்! உலகம் ஒன்றும் திசைமாறிச் சுற்றப் போவதில்லை! 

ஆரம்பத்திலிருந்து எல்லாம் வாசித்தாயிற்று.
அதிலிருந்து ஒன்று மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிகின்றது.
உங்களுக்கு இப்போது நிறைய நேரம் கிடைத்திருக்கின்றது.
சந்தர்ப்பமும் கிடைத்திருக்கின்றது விளாசித்தள்ளுங்கோ
மற்றவர்கள் எதை எழுதினாலும் உங்களுக்கு காகத்தின் நிறம் கறுப்புத்தான்

ஆமாம்! வெள்ளை என்று நிரூபிக்க முனைவோருடன் விவாதிக்க நிறைய நேரம் கிடைத்திருக்கிறது! அப்ப இது தான் நீங்கள் இவ்வளவு நீளத் திரியில் இருந்து அள்ளி வந்ததா? உங்கள் பாத்திரம் ரொம்பப் பெரிசு போங்கள்!:cool:

இந்த திரியில் கடைந்தெடுத்து மூவரை திட்டவிரும்புகின்றேன்....எனக்கு வேறு வழிதெரியவில்லை...மன்னிக்கவும்

உங்களிடம் வேற வழி இருக்கும் என்று நாங்களும் எதிர்பார்க்கவில்லை! அதனால் பரவாயில்லை! திட்டி விட்டுப் போங்கள்! :rolleyes:

புலிகள் செய்தகுற்றங்கள்  பல உள்ளன.
மிகப்பெரிய குற்றம்  சகோதரப்படுகொலைகள்.
இரண்டாவது உள் வீட்டுக் கொலைகள்.
மூன்றாவது சிறுவர்களைப் படையில் சேர்த்தமை
நான்காவது குற்றம்  கட்டாயமாக ஆட்களைப் படையில் சேர்த்தமை.
இன்னும் பல இருக்கலாம்

ஆனால் இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய குற்றம் தமிழனுக்காகப் போராடச் சென்றமை.
தமிழனுக்காகப் போராடப் புலிகளை அனுமதித்தது யார் என்று மட்டும் கேட்க வேண்டாம் ப்ளீஸ் 

போராட போனால் இவை எல்லாம் செய்ய வேண்டும் போலிருக்கு உங்கள் கதை .

இதை விட மோசமான சிந்தனை வேறு எதுவும் இல்லை .

அப்ப சிங்கள ஆமிகாரனும் சொல்ல போறான் நாட்டை காப்பாற்ற இராணுவத்தில் சேர்ந்ததுதான் பிழை என்று .

இராணுவத்தில் சேர்ந்தது பிழை இல்லை அங்கு அவர்கள் நடந்து கொண்ட விதம்தான் பிழை 

அதே போல போராட போனதை பிழை எவர் சொன்னார் .போராட போன இடத்தில் விட்ட பிழை பற்றித்தான் இப்ப கதைகின்றம்.

அருவரி பாடம் நடத்தி களைத்து போனன். 

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில் இருந்து காயப்பட்டு 2001 இல் விலகியவருக்கே 2008/9 களில் புலிகளில் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகத் தெரியவில்லை. எப்படி 80களிலும், 90 களிலும் வந்தவர்களுக்கு தெரியப்போகின்றது! எனவே எதையும் எப்படியும் நியாயப்படுத்தலாம்.

கலப்பு நீதிமன்று உருவாக்கப்பட்டு அதில் விசாரணைகள் வருமானால், புலிகள் செய்த மனிதவுரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் கொண்டுவர சிங்களத் தரப்பும், புலிகளுக்கு எதிரான தரப்புக்களும் என்று பல உள்ளன. சிலநேரம் சிங்கள இராணுவத்தால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களை விட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் மீறல்கள் அதிகமாகவும் இருக்கலாம். அப்படியான நிலையை எவ்வாறு எதிர்கொள்ளத் தமிழர் தரப்பு திட்டமிட்டுள்ளது?

  • கருத்துக்கள உறவுகள்

செய்யலாமே? அலாரம் வைத்து எழும்பாமல், வேலைக்குப் போகாமல், 25% வரி கட்டாமல் வெல்ப்fயார் செக் எடுத்துக் கொண்டு இருந்து பாருங்கள்! வீடு தேடி வந்து சுட மாட்டார்கள்! இங்கே பங்கரும் இல்லை! (வரி எதற்குக் கட்டுகிறோம் என்பதே தெரியாமல் பிரஜையாகி விட்டீர்கள்! குதிரையா?)

உங்களுக்கிருந்த அதே கடமை தான் அவருக்கும் இருந்தது! நீங்கள் அமெரிக்காவில் இருந்து கீ போர்ட்டில் கடமையாற்றுவதால் போய்ச் செய்ய வேண்டிய கடமையை மறந்து விடலாம் என்று அர்த்தம் இல்லை!:cool: கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கற்களைத் தாறுமாறாக எறிகிறீர்கள்! யோசிக்கவே மாட்டீர்கள் இந்தக் கேள்விகள் உங்களிடமும் திரும்பி வரலாம் என! 

அக்னி, உணர்ச்சி வசப்பட்டு எழுத முதல் சிம்பிளாக யோசியுங்கள்! புலிகள் பிடித்ததை இன்னும் நியாயப் படுத்தும் தேசியத்தூண்கள் தான் புலிகளின் குற்றத்திற்குப் பொறுப்பெடுக்க வேண்டும்! இவற்றைச் சுட்டிக் காட்டும் நாங்கள் அல்ல! அதனால் அவர்கள் தான் நட்ட ஈடு கொடுப்பதை ஒழுங்கு படுத்த வேண்டும், அப்படி நடப்பதானால்! ஏதோ எங்களுக்குச் சவால் விடுவது போல நினைத்துக் கொண்டு உங்கள் சைடிலேயே கோல் மேல் கோல் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!

ஒரு விடயத்தை அணுகும் போது big picture ஐப் பாருங்கள்: உதாரணமாக , பூனைக்கு எப்படி மணி கட்டலாம் என்று விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது வந்து பூனைக்குக் கட்டும் மணியை தங்கத்தில் கட்டலாமா வெள்ளியில் கட்டலாமா என்று புது விவாதம் தொடங்காதீர்கள்! முதலில் பூனைக்கு மணி கட்டலாம்!. (இவ்வளவு விவரம் எல்லாம் கேட்கும் நீங்கள், புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை ஒதுக்கிச் செல்கையில் ஒரு டவுட்டும் கேட்காமல் ஏற்றுக் கொண்டது எப்படி என்று தான் யோசிக்கிறேன்!:cool:)  

அண்ணை உங்கட பிரச்சினை என்ன .....? புலிகளின் குற்றங்களை ஒப்புக்கொள்ளுங்கள் என்றீர்கள் ...ஒப்புக்கொண்டால் சேம் சயிட் கோல் என்கிறீர்கள் 
நாங்கள் எப்படி பதில் தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்  என்று குறிப்பிட்டால் எங்களுக்கு பதில் தர இலகுவாக இருக்கும்....

இந்த தீர்வு விவகாரத்தை இங்கே கொண்டுவந்தது நீங்கள் .....புலிகளின் செயல்பாட்டை சரி என்பவர்கள் தான் அதனை செய்யவேண்டும் என்று அவர்கள் பக்கம் இதனை தள்ளிவிட்டாயிற்று ....மேற்கொண்டு தோண்டத்தான் உங்கடை Big picture வெளியில வருகுது ...ஆக மொத்தத்தில் நாங்கள் கையை காட்டுவதோடு எங்கள் வேலை முடிகிறது...எங்கட பக்கம் Full Clean Sheet ....

உங்கட பூனையின் மணியை பார்த்தால் ஒட்டுமொத்த Yay Sayers தோல்விகளை எல்லாம்  புலி ஆதரவாளர்களின் தலையில் கட்டும் முன்னெடுப்பு போல தெரிகிறது ...இனி எதிர்காலத்தில் உங்கட சாணக்கியவான்களால் எதுவும் கிழிக்க முடியாவிட்டாலும் மெதுவாக பிளேட்டை இங்கால தள்ளி விட்டிடலாம் ..அண்ணை மணி உங்களோடது ..இதனை நாங்கள் கட்டினால் ....அது பித்தளையா ...வெண்கலமா என்று திரும்பவும் தொடங்குவீர்கள் ....உங்களது மணியை நீங்கள் தான் கட்ட வேண்டும்...உங்களது பூனையின் மணியை பார்த்தால் எனக்கு மூஞ்சுறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு போச்சுதாம் தான் ஞாபகம் வருகுது   

(புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை ஒதுக்கிச் செல்கையில்---பிறகென்ன No Fire Zone இல செல்லடி வாங்கி இறந்தவர்களையும் புலிகளின் கணக்கில் சேர்த்தாயிற்று...கடைசியில சரணடைந்தவர்களை பஸ்களில் ஏற்றி கொண்டு போய் போட்டுதள்ளியதையும் அவர்களின் கணக்கில் சேர்த்தால் உங்களோட தேவை முடிவடைகிறது   )....ஆகவே நீங்கள் சொல்லும் நீதி இலங்கை ராணுவம் அப்படித்தான் போட்டு தள்ளும் ...நீங்கள் ஒழுங்காக இருந்திருக்க வேண்டும் என்பதா ....? 
  
  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில் இருந்து காயப்பட்டு 2001 இல் விலகியவருக்கே 2008/9 களில் புலிகளில் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகத் தெரியவில்லை. எப்படி 80களிலும், 90 களிலும் வந்தவர்களுக்கு தெரியப்போகின்றது! எனவே எதையும் எப்படியும் நியாயப்படுத்தலாம்.

கலப்பு நீதிமன்று உருவாக்கப்பட்டு அதில் விசாரணைகள் வருமானால், புலிகள் செய்த மனிதவுரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் கொண்டுவர சிங்களத் தரப்பும், புலிகளுக்கு எதிரான தரப்புக்களும் என்று பல உள்ளன. சிலநேரம் சிங்கள இராணுவத்தால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களை விட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் மீறல்கள் அதிகமாகவும் இருக்கலாம். அப்படியான நிலையை எவ்வாறு எதிர்கொள்ளத் தமிழர் தரப்பு திட்டமிட்டுள்ளது?

 (பகிடிப் பதில்) இதை ஊகிப்பது கஷ்டமா? எதுவும் நடக்கவில்லை என்று மணலில் தலையைப் புதைத்துக் கொள்வோம்! 

சீரியசாகச் சொன்னால்: இந்தக் குற்றங்களை இப்போதே எங்களிடையே விவாதித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது எது ஏற்றுக் கொள்ளத் தயங்கவேண்டியது எது என்று வீட்டுப் பாடம் செய்து வைத்துக் கொள்வோம்! பிறகு வெளியார் கேட்கும் போது ஒருமித்த நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவோம். ஒட்டு மொத்தமாக எதுவும் ஆகவில்லை என்பதும், நடந்தது என்போரைத் கிரியேட்டிவாகத் திட்டித் தீர்ப்பதும் இப்படியே நீடித்தால் நீங்கள் சொல்வது போல, புலிகள் தான் எல்லாம் செய்தார்கள், ஆமி துலங்கல் மட்டுமே காட்டியது என்று விசாரணை முடியும்! சர்வதேசத்திற்கும் இது மிக உவப்பான முடிவாக இருக்கும்! சில வளங்களாவது உள்ள ஒரு தீவின் அரசையா இல்லாமல் போன ஒரு தடை செய்யப் பட்ட இயக்கத்தையா சர்வதேசம் காப்பாற்ற முயலும்? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல பெரிய அரசியல் அறிவு தேவையில்லை!  

புலிகள் தவறுசெய்தார்கள் என்பதை மருதர், விசுகர் ஏற்றுகொண்டிருந்தால்  அந்த பதிலுடன் உடனே கொழும்பு சென்று கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுகு எதிராக இனப்படுகொலைகளை செய்த சிங்கள தலைவர்களை சந்தித்து  அவர்கள் புலிகள் உருவாக முன்னரே அவர்கள்  தமிம்மக்களுக்கு  செய்த மாபெரும் குற்றங்களை கூட ஒத்து கொள்ள வைத்து நீதியான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு உடனடியாக வழங்க வைக்க ஜஸ்டின் ஐயாவிற்கு முடிந்திருக்கும். மருதுவும் விசுகரும் அதை கெடுத்துவிட்டார்கள் பாவிகள்.

ஓ .. என்று அங்காலை சிங்கள கோத்தபாயாவும் ... "யுத்தத்தை முடித்ததை பற்றிக் கவலைப் படுகிறேன்" ... என போடும் ஓலமும் கேட்கத்தான் செய்கிறது!

சரி புலிகள் சில பிழைகள் விட்டார்கள்தான்! அப்ப நீங்கள்? .. போராட .. மன்னிக்கவும் சோத்து* பா*சலுக்காக .. போன இடத்தில் பிழை விட வில்லையா?

1) பிள்ளை பிடிக்க வில்லையா?

.. அதை முதலில் தொடங்கவில்லையா? புலிக்கு வாவா ... என்று 83/84ல் புலிக்கல்லாமல் பூனைக்கு கொண்டு போனவையளையும் தெரியும்!

2) சகோதர படுகொலைகள்? .. 

3) சேர்ந்திருந்து ஆதரவளித்தவர்களை போட்டுத்தள்ளவில்லையா?

4) உள்ளுக்குள்ளை போட்டுத்தள்ளவில்லையா?

5) அதவிட பொதுசனங்கள் .. கொலைகள், கோள்லைகள், பாலியல் வன்முறை ... எதையாவது விட்டு வைத்தீர்களா? 

... மகா பொதுசனத்துக்கு விபரங்கள்/ஆதாரங்கள் ஏதாவது வேணுமா????

... உதுகளை அரிவரிப்பாடத்துக்கே போதாத, . பிடித்து மூ*தா பெய்யதெரியாததுகளே கேட்குதுகள் பாருங்கோ?????????????

சொடுகுச்செய்தி: உள்விசாரணைக்கு .. இப்ப கூத்தமைப்புக்குள் நுளைந்த வவுனியாவில் மக்கள் மக்கள் மக்கள் சேவை செய்தவர்கள் ..., மற்றும் மட்டக்களப்பில் செய்தவர்கள் சிலருக்கு நடுங்குதாம் ... சிங்களவன் தான் தப்ப உந்த எடுபிடிகளை சிம்பிளாக போடுவனாம்! ... ஆனால் மகா பொதுசங்கள் பயப்படத்தேவையில்லை ... நாம அடித்ததோடு அசைலமும் அடித்து இப்ப குரூஸும் ... பாரின் பாஸ்போட் கோல்டர்களாக ... போறம்!!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தவறுசெய்தார்கள் என்பதை மருதர், விசுகர் ஏற்றுகொண்டிருந்தால்  அந்த பதிலுடன் உடனே கொழும்பு சென்று கடந்த 60 வருடங்களாக தமிழ் மக்களுகு எதிராக இனப்படுகொலைகளை செய்த சிங்கள தலைவர்களை சந்தித்து  அவர்கள் புலிகள் உருவாக முன்னரே அவர்கள்  தமிம்மக்களுக்கு  செய்த மாபெரும் குற்றங்களை கூட ஒத்து கொள்ள வைத்து நீதியான அரசியல் தீர்வை தமிழ் மக்களுக்கு உடனடியாக வழங்க வைக்க ஜஸ்டின் ஐயாவிற்கு முடிந்திருக்கும். மருதுவும் விசுகரும் அதை கெடுத்துவிட்டார்கள் பாவிகள்.

எனக்கு வெறும் தகர ரின் கிலு கிலுப்பை தான் கேக்குது! கிலு கிலுப்பைகளுக்கு நான் பதில் சொல்வதில்லை! ஆனாலும் உங்கள் power of deduction மெய் சிலிர்க்க வைக்குது! இப்படியே இருங்கள்! சாதிப்பீர்கள்! சரியா??<_<

அண்ணை உங்கட பிரச்சினை என்ன .....? புலிகளின் குற்றங்களை ஒப்புக்கொள்ளுங்கள் என்றீர்கள் ...ஒப்புக்கொண்டால் சேம் சயிட் கோல் என்கிறீர்கள் 
நாங்கள் எப்படி பதில் தர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்  என்று குறிப்பிட்டால் எங்களுக்கு பதில் தர இலகுவாக இருக்கும்....

இந்த தீர்வு விவகாரத்தை இங்கே கொண்டுவந்தது நீங்கள் .....புலிகளின் செயல்பாட்டை சரி என்பவர்கள் தான் அதனை செய்யவேண்டும் என்று அவர்கள் பக்கம் இதனை தள்ளிவிட்டாயிற்று ....மேற்கொண்டு தோண்டத்தான் உங்கடை Big picture வெளியில வருகுது ...ஆக மொத்தத்தில் நாங்கள் கையை காட்டுவதோடு எங்கள் வேலை முடிகிறது...எங்கட பக்கம் Full Clean Sheet ....

உங்கட பூனையின் மணியை பார்த்தால் ஒட்டுமொத்த Yay Sayers தோல்விகளை எல்லாம்  புலி ஆதரவாளர்களின் தலையில் கட்டும் முன்னெடுப்பு போல தெரிகிறது ...இனி எதிர்காலத்தில் உங்கட சாணக்கியவான்களால் எதுவும் கிழிக்க முடியாவிட்டாலும் மெதுவாக பிளேட்டை இங்கால தள்ளி விட்டிடலாம் ..அண்ணை மணி உங்களோடது ..இதனை நாங்கள் கட்டினால் ....அது பித்தளையா ...வெண்கலமா என்று திரும்பவும் தொடங்குவீர்கள் ....உங்களது மணியை நீங்கள் தான் கட்ட வேண்டும்...உங்களது பூனையின் மணியை பார்த்தால் எனக்கு மூஞ்சுறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு போச்சுதாம் தான் ஞாபகம் வருகுது   

(புலிகள் முள்ளிவாய்க்காலுக்கு மக்களை ஒதுக்கிச் செல்கையில்---பிறகென்ன No Fire Zone இல செல்லடி வாங்கி இறந்தவர்களையும் புலிகளின் கணக்கில் சேர்த்தாயிற்று...கடைசியில சரணடைந்தவர்களை பஸ்களில் ஏற்றி கொண்டு போய் போட்டுதள்ளியதையும் அவர்களின் கணக்கில் சேர்த்தால் உங்களோட தேவை முடிவடைகிறது   )....ஆகவே நீங்கள் சொல்லும் நீதி இலங்கை ராணுவம் அப்படித்தான் போட்டு தள்ளும் ...நீங்கள் ஒழுங்காக இருந்திருக்க வேண்டும் என்பதா ....? 
  
எங்கே? 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரும் நிலை உருவானால், புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று ஐ.நா.வால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிலை உருவாகும். சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்றது என்று சான்றிதழ் கொடுக்கப்படும். இதற்கு மேல் ஒரு சில சிங்கள இராணுவ அதிகாரிகளை தண்டிப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. குறிப்பாக மகிந்த குடும்பத்தில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. 

ஒரு சிலர் அப்போதும் புளட் போன்ற மற்ற இயக்கங்களால்தான் அப்படியான நிலைமை உருவானது என்று திட்டிக்கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெறும் தகர ரின் கிலு கிலுப்பை தான் கேக்குது! கிலு கிலுப்பைகளுக்கு நான் பதில் சொல்வதில்லை! ஆனாலும் உங்கள் power of deduction மெய் சிலிர்க்க வைக்குது! இப்படியே இருங்கள்! சாதிப்பீர்கள்! சரியா??<_<

எங்கே? 

சசியர், ஆங்கிலத்தில் சொன்னது மட்டும் சரி! யாருக்குத் தண்டனை கொடுக்கலாம் என்று தேடியல்ல நான் அலைவது. தண்டிக்க ஒருவரும் இல்லாவிட்டால் ஒரு குற்றம் நடக்கவேயில்லை என்று அர்த்தம் இல்லை. victims இருக்கிறார்கள் அல்லவா? அவர்களுக்கு வேறு வழியில் நீதி கொடுப்பது பற்றி யோசிக்கலாம்! இப்படிக் குற்றங்களே நடக்கவில்லை என்று நழுவும் தமிழர்களால் பாதிக்கப் பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நீதி கிடைக்காது! இப்படியான திரிகளில் வந்து சுட்டிக் காட்டுவதன் மூலம் இவர்களின் கள்ளத் தனத்தை வெளிக்காட்டுவது மட்டுமே என் நோக்கம்! யாரும் மாற மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்!
ஏற்றுக்கொள்ளுங்கள் புலிகள் தவறு செய்தார்கள், அவர்களால் பாதிக்கப் பட்ட மக்களுக்கும் நீதி வேண்டும்

அண்ணை யாருக்கு Selective Amnesia ...ஓ ஒருவேளை நீதி வேறு தீர்வு வேறோ ....? You Mean  ஒரு சொல் பல பொருள் 
இல்லை எங்களுக்கு விளங்காத வேற அர்த்தம் ஏதும் வைத்திருக்கிறீர்களோ ...இராஜதந்திர வார்த்தை 
Reconciliation and Move Forward இல் தென்னாபிரிக்கா வந்து போனது போல  

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினி,

உங்களுக்கு அறுகம் குடா முதல் மாபிள் பீச் வரை மட்டுமே தெரியலாம். நான் பானமை முதல் தென்னமரவாடி வழியாக தலைமன்னார், பருத்தி துறை வரை போய் நிலைமைய நேரில் தரித்துள்ளேன் தரிசிக்கிறேன்.

வெளிநாட்டில் வேலை மட்டும்தான். புரியும் என நினைக்கிறேன்.

மன்னிக்கவும் யாழில் கோசான் யாரையும் இதுவரை சந்தித்ததில்லை. இனியும் இல்லை.

கோசான் 
நான் கிழக்கு மாகாணத்தவன் என்ற ரீதியில் தான் இங்கே எல்லாம் அழைத்து செல்ல முடியும் என்று குறிப்பிட்டேன் .........நீங்கள் பருத்தித்துறையிலிருந்து தெய்வேந்திர முனை வரைக்கும் செல்பவராக இருக்கலாம் ...நல்லது ...உங்களுக்கு நான் புலத்திலிருந்து எழுதுபவன் என்று காண்பிக்கவே  இந்த பின்னூட்டத்தை இட்டேன் ...சந்திப்பது உங்களது தனிப்பட்ட உரிமை ....அதில் கருத்து தெரிவிக்க எனக்கு அதிகாரமில்லை ...

  • கருத்துக்கள உறவுகள்

நீதி- Justice

தீர்வு- Solution

உங்களுக்குப் பரிச்சயமான தமிழ் மொழியிலேயே உரையாடுங்களேன்?. ஏன் பழக்கமில்லாத மொழிக்குப் போய் கயிட்டப் படுறியள்! :cool:

FYI: 

"சரி புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கொடுப்பீர்கள் ...புலிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் (புலிகளுக்கு ஏற்க்கனவே கொடுத்தாகிவிட்டது-இனி கொடுப்பதென்றால் தோண்டிஎடுத்துதான் கொடுக்கவேண்டும்)......தீர்வு கொடுக்கும் போது புலிகளை காரணம் காட்டி 
போரை காரணம் காட்டி அசைலம் அடிச்சவர்கள் எல்லாம் இங்க வர வேண்டும் ....போரில் புலிகளின் பங்கும் உண்டு எனவே நீங்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒருவகையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர் ..ஆகவே எல்லோருக்கும் (எப்படி உள்நாட்டு விசாரணை ஆரம்பித்து தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறதோ அப்படி  ) பாரபட்ச்சமற்ற முறையில் இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தீர்வு வழங்கப்படும் .....வெளிநாட்டில அசைலம் அடிப்பது சர்வதேச தீர்வு அது சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாகும் எனவே அதை வழங்க முடியாது

என்ன ஜஸ்டின் அண்ணை தீர்வு குடுத்திடுவமா ......புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இங்கே வந்து தீர்வு பெற்றுக்கொண்டு செட்டில் ஆக ரெடியா.....?நீங்க ரெடி என்றால் நாங்களும் ரெடி"   

செலக்ரிவ் அம்னீசியா..ம்ம்?

அண்ணை யாருக்கு Selective Amnesia ...ஓ ஒருவேளை நீதி வேறு தீர்வு வேறோ ....? You Mean  ஒரு சொல் பல பொருள் 
இல்லை எங்களுக்கு விளங்காத வேற அர்த்தம் ஏதும் வைத்திருக்கிறீர்களோ ...இராஜதந்திர வார்த்தை 
Reconciliation and Move Forward இல் தென்னாபிரிக்கா வந்து போனது போல  

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பன்னிரண்டு வருடம் இயக்கத்தில் இருந்து காயப்பட்டு 2001 இல் விலகியவருக்கே 2008/9 களில் புலிகளில் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் சரியாகத் தெரியவில்லை. எப்படி 80களிலும், 90 களிலும் வந்தவர்களுக்கு தெரியப்போகின்றது! எனவே எதையும் எப்படியும் நியாயப்படுத்தலாம்.

கலப்பு நீதிமன்று உருவாக்கப்பட்டு அதில் விசாரணைகள் வருமானால், புலிகள் செய்த மனிதவுரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் கொண்டுவர சிங்களத் தரப்பும், புலிகளுக்கு எதிரான தரப்புக்களும் என்று பல உள்ளன. சிலநேரம் சிங்கள இராணுவத்தால் செய்யப்பட்ட போர்க்குற்றங்களை விட புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்லப்படும் மீறல்கள் அதிகமாகவும் இருக்கலாம். அப்படியான நிலையை எவ்வாறு எதிர்கொள்ளத் தமிழர் தரப்பு திட்டமிட்டுள்ளது?

கடவுள் போல் நீதி நியாஜம் மட்டுமே பேசும் ஐ நா அப்படி சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும் ?
எஞ்சிய தமிழர்கள் உடன் கட்டை ஏறலாம் ....?

கிருபன் என்ன பகிடி பேசுகிறீர்கள் என்பதே புரியவில்லை .....
எல்லா அரசுகளும் ஒரு அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை இருக்கத்தான் செய்கிறது 
நோக்கம் என்ன ?
என்பதுதான் இங்கு கேள்விக்கு உள்ளானது.
அரசு வரி வெட்டுகிறது என்று குமுறும் பலரையும் கடந்து போய்கொன்டுதான் இருக்கிறோம்.
அரசு என்ன தண்ணியிலா ஓடுவது என்ற சிந்தனை இல்லாதவர்களுக்கு எதை விளங்க படுத்த முடியும்?

புலிகள் திருநெல்வேலியில் குண்டுவைத்தால்தான் 
83 கலவரமே உருவானது.
ஏன் புலிகளிகளின் இந்த கொடூர செயலை யாரும் பேசவில்லை ?
83 இறந்தவர்களை உயிர்பித்து விட்டீர்களா ?

தும்பளையான் 2012இற்கு பின்பு புலிகள் மாறினார்களாம் .....
அதற்கு முன்பு புலிகளால் சாகடிக்க பட்டவர்களை ஏன் லாபகமாக மறைக்க வேண்டும் ?

புலி பிழை என்றால் நான் ஏற்றுகொள்கிறேன் என்பதை இதே திரியில் நான் 5 தடவைக்கு மேல் எழுதிவிட்டேன்.
அதை  விடுத்து இவர்களின் வீடு எரிய தொடங்கிய பின்தான் புலி பிழை என்ற 
பித்தலாட்டம்தான் விளங்கவில்லை. 

முள்ளி வாய்க்காலில் எதை எதிர்கொண்ட்டர்கள் ?
என்ற நிலையில் இருந்துதான் ஒரு மனிதன் சிந்திக்க முடியும் ....

இந்தக் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரும் நிலை உருவானால், புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று ஐ.நா.வால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிலை உருவாகும். சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்றது என்று சான்றிதழ் கொடுக்கப்படும். இதற்கு மேல் ஒரு சில சிங்கள இராணுவ அதிகாரிகளை தண்டிப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. குறிப்பாக மகிந்த குடும்பத்தில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. 

ஒரு சிலர் அப்போதும் புளட் போன்ற மற்ற இயக்கங்களால்தான் அப்படியான நிலைமை உருவானது என்று திட்டிக்கொண்டிருப்பார்கள்.

அடுத்தவனை சிலர் கை நீட்டும்போது ...
அவர்களின் அழுக்குகளையும் சிலர் சுட்டி காட்டுகிறார்கள் 
அவ்ளவே 
 
தவிர புளட் ஈப்பி எல்லாம் 
மழைக்காலம் வந்த போது வரும் ஈசல் போல வந்து 
சிலர் இந்தியா போய் சினிமா பார்த்து நடிகைகளை சந்தித்து விட்டு சென்றார்கள் 

எஞ்சியவர்கள் ஆமியோடு சேர்ந்து மக்களை நரவேட்டை ஆடினார்கள் 
அவர்கள் கதைகளை யார் கணக்கில் எடுக்கிறான் ? 

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் போல் நீதி நியாஜம் மட்டுமே பேசும் ஐ நா அப்படி சொல்லிவிட்டால் என்ன செய்ய முடியும் ?
எஞ்சிய தமிழர்கள் உடன் கட்டை ஏறலாம் ....?

கிருபன் என்ன பகிடி பேசுகிறீர்கள் என்பதே புரியவில்லை .....
எல்லா அரசுகளும் ஒரு அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலை இருக்கத்தான் செய்கிறது 
நோக்கம் என்ன ?
என்பதுதான் இங்கு கேள்விக்கு உள்ளானது.

என்னைப் பொறுத்தவரை இந்த கலப்பு நீதிமன்றம் என்பதுதான் தமிழர்களுக்கு எதுவித நீதியையும் தரப்போவதில்லை. வெறும் கண்துடைப்பாகவும், ஒப்புக்கு சிங்கள அரசைத் தண்டிப்பதான தோற்றப்பாட்டைத் தருவதாகவும் முடியும். ஏனெனில் சிங்கள கடும்போக்குவாதிகளை மேலெழும்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை மேற்கு நாடுகளுக்கு இருக்கின்றது. ஆகவே கடுமையான தொனியில் பேசி தமிழர்களைக் குளிர்வித்து, மென்மையான நடவடிக்கைகளை சிங்கள அரசு மேலும், அதன் படைகள் மேலும் எடுத்து எல்லாவற்றையும் முடித்துவிடும் அபாயம்தான் தெரிகின்றது.

தமிழர்கள் வழமைபோன்று எதுவித அழுத்தங்களையும் பிரயோகிக்கமுடியாத நிலையில்தான் இருக்கின்றார்கள். ஆகவே திணிப்புக்களை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைதான் உள்ளது. அதனைத் தமிழர்கள் மீது விற்கும் பொறுப்புத்தான் சம்பந்தர், சுமந்திரன் போன்றவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நீதி- Justice

தீர்வு- Solution

உங்களுக்குப் பரிச்சயமான தமிழ் மொழியிலேயே உரையாடுங்களேன்?. ஏன் பழக்கமில்லாத மொழிக்குப் போய் கயிட்டப் படுறியள்! :cool:

FYI: 

"சரி புலிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன தீர்வு கொடுப்பீர்கள் ...புலிகளுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள் (புலிகளுக்கு ஏற்க்கனவே கொடுத்தாகிவிட்டது-இனி கொடுப்பதென்றால் தோண்டிஎடுத்துதான் கொடுக்கவேண்டும்)......தீர்வு கொடுக்கும் போது புலிகளை காரணம் காட்டி 
போரை காரணம் காட்டி அசைலம் அடிச்சவர்கள் எல்லாம் இங்க வர வேண்டும் ....போரில் புலிகளின் பங்கும் உண்டு எனவே நீங்கள் போரால் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் ஒருவகையில் புலிகளால் பாதிக்கப்பட்டவர் ..ஆகவே எல்லோருக்கும் (எப்படி உள்நாட்டு விசாரணை ஆரம்பித்து தமிழர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறதோ அப்படி  ) பாரபட்ச்சமற்ற முறையில் இலங்கை சட்டதிட்டத்திற்கு உட்பட்டு தீர்வு வழங்கப்படும் .....வெளிநாட்டில அசைலம் அடிப்பது சர்வதேச தீர்வு அது சர்வதேச விசாரணைக்கு ஒப்பானதாகும் எனவே அதை வழங்க முடியாது

என்ன ஜஸ்டின் அண்ணை தீர்வு குடுத்திடுவமா ......புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இங்கே வந்து தீர்வு பெற்றுக்கொண்டு செட்டில் ஆக ரெடியா.....?நீங்க ரெடி என்றால் நாங்களும் ரெடி"   

செலக்ரிவ் அம்னீசியா..ம்ம்?

இனி இந்த நொண்டிச்சாட்டுகளை எடுத்து விடுங்கோ .....உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும் நாம் குறிப்பிட்டது ஒரே  விடயத்தை தான் என்று 
உங்கள் விதண்டாவாதத்தை தொடருங்கள் ....நான் போய்  வருகிறேன் 

Edited by அக்னியஷ்த்ரா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.