Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச தலையீட்டுடன் கூடிய விசாரணைப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டும் - ஐ.நா:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து யு என் ஊடாக இலங்கையில் யுத்தத்தில் என்ன மானுட அழிவு நடந்தது என்று ஆராய்ந்து அந்த அநியாயங்களை  செய்தவர்களுக்கு தண்டனையும் கொடுக்கவேண்டும் என்று வருடக்கணக்கில் எத்தனயோ பேர்களை சந்தித்து ஆதரங்களை திரட்டி அறிக்கையும் சமர்ப்பித்து ஒரு விசாரணை வேண்டும் என்று எல்லோரும் கெஞ்சி கேட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ,

இங்கு ஒருவர் "புலிகள் தவறு செய்தார்கள் .. இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம் ?  என்று கேள்வி கேட்கின்றார் .

இனி ஒருவர் ஆமி தவறு செய்தது அதை நிறுவுவதால் என்ன லாபம் என்று கேட்பார் .

என்ரை தலையை எந்த சுவரில் முட்டுவது என்று யோசிக்கின்றேன் .

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால் சசிக்கு சரியான பதில் கிடைக்கும் என்று நம்புகின்றேன் .

அர்ஜுன் அண்ணா,
இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும்.
நீங்கள் உங்கள் வாசிப்பு திறன் மற்றும் அதில் எழுதப்படிருக்கும் விடயங்களை கிரகித்துக்கொள்ளும் தன்மையை சற்று வளர்த்துக்கொள்வது நல்லது.

தும்பளையான் எழுதிய கருத்தில் அவர் கூறிய விடயம் இது:
புலிகள் மனித உரிமைகளை மீறல் ~ இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? எமது நம்பகத்தன்மை அதிகரிக்கும். 

இதைதான் நான் எழுதியிருந்தேன் ....
திரிக்கு திரி இதை தெளிவு படுத்தியாகி விட்டது (அதாவது புலிகள் மனித உரிமைகளை மீறினார்கள்)  .... நம்பகத்தன்மை யாரிடமிருந்து அதிகரிக்கும் என்பது தான்  புரியவில்லை.

உங்கள் தலையை எந்த சுவரிலும் மோத வேணாம் ... திரும்ப நிதானமாக வாசியுங்கள் அதுவே போதும்.
உங்கள் கருத்துக்கும் நண்பர் பச்சை குத்தி இருக்கிறார்... 

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால்..
உங்கள் கதையின் படி ஈழத்தில் / இலங்கை தீவில் அம்மாமார் எல்லோரும் தங்கள் உறவுகளை அநியாயமாக பலி கொடுத்தது புலிகளிடம் மட்டும் தான் போல இருக்கிறது..

மற்றும் படி இந்த திரியில் உறவுக்குள் உருப்படியாக எதுவித கருத்துப் பரிமாற்றமும் நடப்பதாக தெரியவில்லை..

  • Replies 168
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 (பகிடிப் பதில்) இதை ஊகிப்பது கஷ்டமா? எதுவும் நடக்கவில்லை என்று மணலில் தலையைப் புதைத்துக் கொள்வோம்! 

சீரியசாகச் சொன்னால்: இந்தக் குற்றங்களை இப்போதே எங்களிடையே விவாதித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது எது ஏற்றுக் கொள்ளத் தயங்கவேண்டியது எது என்று வீட்டுப் பாடம் செய்து வைத்துக் கொள்வோம்! பிறகு வெளியார் கேட்கும் போது ஒருமித்த நிலைப்பாடொன்றை வெளிப்படுத்துவோம். ஒட்டு மொத்தமாக எதுவும் ஆகவில்லை என்பதும், நடந்தது என்போரைத் கிரியேட்டிவாகத் திட்டித் தீர்ப்பதும் இப்படியே நீடித்தால் நீங்கள் சொல்வது போல, புலிகள் தான் எல்லாம் செய்தார்கள், ஆமி துலங்கல் மட்டுமே காட்டியது என்று விசாரணை முடியும்! சர்வதேசத்திற்கும் இது மிக உவப்பான முடிவாக இருக்கும்! சில வளங்களாவது உள்ள ஒரு தீவின் அரசையா இல்லாமல் போன ஒரு தடை செய்யப் பட்ட இயக்கத்தையா சர்வதேசம் காப்பாற்ற முயலும்? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல பெரிய அரசியல் அறிவு தேவையில்லை!  

எதோ நீதி தேவைதைகள் வந்துவிட்டார்கள் .....
நீதி பேச போகிறார்கள் 
நாங்கள் புலிகள் செய்த தவறுகளை எல்லாம் இனி ஏற்றுகொள்ள வேண்டும் 
இல்லாட்டி அவர்களுக்கு கோவம் வந்து விடும் என்று நின்றீர்கள் 

இப்போ அவர்கள் தமது நலன் சார்ந்துதான் செயற்படுவார்கள் என்று தடம் புரளுகிறீர்கள் ......?

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு நீதி மன்றம் எதற்காக? கலப்பு நீதிமன்றத்தில் ஒரு தமிழர் சார்பான ஒரு நீதிபதி இருப்பாரா?கலப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டுநீதிபதிகளும் சிறிலங்கா நீதிபதிகளும் இருப்பார்கள்.சில வேளை சிறிலங்கா நீதிமன்றத்தில் சிங்களவருக்கு வால் பிடிக்கும் சுமசும் போன்ற தமிழர்களும் இருப்பார்கள்.கலப்பு நீதிமன்றத்தில் சிறிலங்கா சார்பாக  முன்ளாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை சிறிலங்கா அனுமதிக்குமா?சரி வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தில் இந்திய >பாகிஸ்தானிய நீதிபதிகள் இருந்தால் எப்படியான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த நீதி விசாரணையில் அமெரிக்காவின் செல்வாக்கு  இந்தியாவின் (பிராந்திய வல்லரசு? என்ற பெயரில்)செல்வாக்க எந்த வகையில் இருக்கும்????

  • கருத்துக்கள உறவுகள்

அதே போல போராட போனதை பிழை எவர் சொன்னார் .போராட போன இடத்தில் விட்ட பிழை பற்றித்தான் இப்ப கதைகின்றம்.

அருவரி பாடம் நடத்தி களைத்து போனன். 

தேர் கட்டியது பிழை இல்லை ...
ஊர் சேர்ந்து இழுத்தால் தேர் நகரும் என்று சொன்னதுதான் 
மன்னிக்க முடியாத குற்றம். 

வருடா வருடம் ....
தேர் திருவிழா நாளில் தானாக ஓடும் 
தேரை செய்திருக்க வேண்டும்.

ஏதும் வசதி இல்லாமல் இருத்திருக்கலாம் அண்ணை 
தேர் செய்த காலங்களில். 

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு நீதி மன்றம் எதற்காக? கலப்பு நீதிமன்றத்தில் ஒரு தமிழர் சார்பான ஒரு நீதிபதி இருப்பாரா?கலப்பு நீதிமன்றத்தில் வெளிநாட்டுநீதிபதிகளும் சிறிலங்கா நீதிபதிகளும் இருப்பார்கள்.சில வேளை சிறிலங்கா நீதிமன்றத்தில் சிங்களவருக்கு வால் பிடிக்கும் சுமசும் போன்ற தமிழர்களும் இருப்பார்கள்.கலப்பு நீதிமன்றத்தில் சிறிலங்கா சார்பாக  முன்ளாள் நீதியரசர் விக்கினேஸ்வரனை சிறிலங்கா அனுமதிக்குமா?சரி வெளிநாட்டு நீதிபதிகள் விடயத்தில் இந்திய >பாகிஸ்தானிய நீதிபதிகள் இருந்தால் எப்படியான தீர்ப்புகளை எதிர்பார்க்கலாம். இந்த நீதி விசாரணையில் அமெரிக்காவின் செல்வாக்கு  இந்தியாவின் (பிராந்திய வல்லரசு? என்ற பெயரில்)செல்வாக்க எந்த வகையில் இருக்கும்????

ஓம்! நம் பிரதமர் உருத்திரகுமாரன் இருப்பார்! போதுமா? நீதி மன்றம் என்கிறார்கள், அதற்குள் போய் தமிழ் சார்பு ஆள் வேண்டுமென்கிறீர்கள்! என்ன ஜோக் இது? 

அர்ஜுன் அண்ணா,
இப்படி எழுதுவதற்கு மன்னிக்கவும்.
நீங்கள் உங்கள் வாசிப்பு திறன் மற்றும் அதில் எழுதப்படிருக்கும் விடயங்களை கிரகித்துக்கொள்ளும் தன்மையை சற்று வளர்த்துக்கொள்வது நல்லது.

தும்பளையான் எழுதிய கருத்தில் அவர் கூறிய விடயம் இது:
புலிகள் மனித உரிமைகளை மீறல் ~ இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? எமது நம்பகத்தன்மை அதிகரிக்கும். 

இதைதான் நான் எழுதியிருந்தேன் ....
திரிக்கு திரி இதை தெளிவு படுத்தியாகி விட்டது (அதாவது புலிகள் மனித உரிமைகளை மீறினார்கள்)  .... நம்பகத்தன்மை யாரிடமிருந்து அதிகரிக்கும் என்பது தான்  புரியவில்லை.

உங்கள் தலையை எந்த சுவரிலும் மோத வேணாம் ... திரும்ப நிதானமாக வாசியுங்கள் அதுவே போதும்.
உங்கள் கருத்துக்கும் நண்பர் பச்சை குத்தி இருக்கிறார்... 

உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமாரிடம் இந்த கேள்வியை கேட்டால்..
உங்கள் கதையின் படி ஈழத்தில் / இலங்கை தீவில் அம்மாமார் எல்லோரும் தங்கள் உறவுகளை அநியாயமாக பலி கொடுத்தது புலிகளிடம் மட்டும் தான் போல இருக்கிறது..

மற்றும் படி இந்த திரியில் உறவுக்குள் உருப்படியாக எதுவித கருத்துப் பரிமாற்றமும் நடப்பதாக தெரியவில்லை..

நீங்களும் தான் கிரகிப்பை வளர்த்துக் கொள்ள வேணும் போல இருக்கு! புலிகளிடம் மட்டும் தான் அம்மாமார் பிள்ளைகளை இழந்தார்கள் என்று யார் சொன்னார்கள்? எங்கே அப்படி எழுதியிருக்கிறது? அர்ஜூன் சொன்னது: "புலிகளின் தவறுகளை ஏற்றுக் கொள்வதால்  எமக்கு என்ன இலாபம்?" என்று நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியை புலிகளிடம் பிள்ளையைப் பறி கொடுத்த அம்மாமாரிடம், அது ஒருவரோ, பத்துப் பேரோ, நூறுபேரோ, போய் கேட்டால் என்ன ஆகும் என்பது தான்! இதே கேள்வியை நானும் பலரிடம் கேட்டு விட்டேன், உடனே வெறேதும் வழியில் வந்து கெரில்லாத் தாக்குதல் தொடுப்பார்கள், பதில் சொல்ல மாட்டார்கள், அதையே இப்ப நீங்களும் செய்து கொண்டு, உருப்படியான கருத்துப் பரிமாற்றங்கள் இங்கே இல்லையெனக் குறைப்படுவது வேடிக்கை! 

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் சார்,
நீங்கள் எழுதிய "புலிகளின் தவறுகளை ஏற்றுக் கொள்வதால்  எமக்கு என்ன இலாபம்?" என்று நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியை "....  நான் அப்படி கேட்கவே இல்லை.!!! விளக்கமும் கொடுத்துதான் இருந்தேன்.
அது தும்பளையானின் வரிகள். அதில் ஒரு விடயம் புரியவில்லை என்று தான் எழுதியிருந்தேன்.
  
புலிகளிடம் மட்டும் தான் அம்மாமார் பிள்ளைகளை இழந்தார்கள் என்று அர்ஜுனும் சொல்லவில்லை 
இந்த திரியில் அவரின் நிலைப்பாடு, எழுதிய பொருள் சார்ந்து நான் எடுத்த அனுமானம் தான் அது.
தவறாகவும் இருக்கலாம். ஆனால் அர்ஜுன் தெளிவாக இவர்கள், இவர்கள் என்றும் யாரையும் பட்டியல் 
படுத்தவும் இல்லை. 
புலிகளின் யுத்த மீறல்கள், ஆட்சேர்ப்புகள், கொலைகள் என கதைக்கும் இடத்தல் ..உறவுகளை அநியாயமாக் பறிகொடுத்து தினமும் ஓலமிடும் அம்மாமார் என பேசப்பட்டது அவ்வாறான ஒரு புரிதலை மட்டும் தான் எனக்கு தந்தது. 

நிறையவே கதைத்து விட்டோம். மீண்டும் ஒரு யாழ்கள சந்திப்பு தேவைப்படுகிறது.

அடப் பாவிகளா... நம்ம பக்க ஞாயங்களை கேட்பதற்கு முன்னமே "பச்சையா".   :rolleyes:

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அன்புள்ளம் படைத்தவர்களே,
சதுர்ப்புஜம் அற்ற சசிவர்ணமாகிய நான் இத்தாள் அறிவிப்பது என்வென்றால் ஒருபோதும் பின்வரும் கூற்றை கூறவில்லை...  
 
"யார் ஏற்றுக்கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் புலிகள் மனித உரிமைகளை மீறியதில் இருந்து போர்க்குற்றங்களைப் புரிந்தது வரை நடந்தது. இது சர்வதேச புலனாய்வு நிறுவனங்களில் இருந்து ஐ.நா வரைக்கும் தெரிந்த விடயம்.... 
இதை ஏற்றுக்கொள்வதால் எமக்கு என்ன லாபம்? ..."

மதிப்புக்குறிய தும்பளையான் அண்ணா அவர்களின் வரியில் எனக்கு புரியாமல் இருந்த  "எமது நம்பகத்தன்மை" குறித்தே நான் கேள்வி எழுப்பி இருந்தேன்.

ஆரோக்கியமான உரையாடல்களுக்கு தடை இது போன்ற தவறுதலான புரிதல்களே.

ஒற்றுமை இல்லாத இந்த இனத்திற்கு விடியல் வேண்டாம். உலகம் முழுதும் பத்துகோடி பரந்து கிடந்தும் என்ன மிச்சம்? நாட்டுக்கு நாடு தனித்தனி அமைப்பு பிரிவு சங்கம் ? ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் அத்தனை பேரையும் ஒன்று சேர்க்க முடியுமா? ஆண்டுகள் ஆறு முடிந்தும் தங்களுக்குள்ளே அடித்து கொள்கிறார்கள் நடந்தது இனஅழிப்பா இல்லையா என்று. 

புலம்பெயர்ந்து உலகம் முழுதும் வாழும் ஈழதமிழர்களின் ஒருமித்த குரல் யார்? அழிக்கப்பட்ட மக்களுக்காய் நீதியை பெற்றுத் தர பணிக்கப்பட்டவர் யார்? யார் நீதியை பெற்றுத்தருவார் என்று எதிர்பார்ர்க்கிறார்கள் ? கொன்று குவித்த சிங்களத்திடமா ? துணைபோன அமெரிக்க, இந்தியத்திடமா? எல்லாம் முடியட்டும் என்று வேடிக்கை பா்ர்த்த ஐ.நா விடமா? 

தமிழர் தரப்பென்றெ ஒன்று இல்லை தமிழர்க்கு நீதியை பெற்று தர, நீங்கள் யாரிடம் நீதியை எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒன்றுமே புரியவில்லை. 

எங்கிருந்தோ ஒரு காலம் மக்ரே வந்திருக்காவிட்டால் இந்த உலகிற்கு ஈழ தமிழர் மீது நடந்த பயங்கராவாதமே தெரியாமல் போயிருக்கும். நம்மீது நடத்தப்பட்ட அழிவை வெளிக்கொணர எங்கிருந்தோ ஒருவர் தேவைப்படுகிறார் அல்லவா? நாம் நம் மீது நடத்தப்பட்டது பாரிய இன அழிப்பு என உலகத்திற்கு பறைசாற்ற தவறிவிட்டோம். அதற்கான வழிமுறைகள் எதையும் கொண்டிருக்கவில்லை. 

விடுதலை புலிகள் மேல் சுமத்தப்படும் குற்றங்களுக்கு பதில் கூற யாருமில்லை. அவ்வியக்கம் விடுதலை இயக்கம் என வாதிட யாருமில்லை. அவர்கள் மீது சுமத்தப்படும் உண்மை குற்றச்சாட்டுகளை மானசீகமாக ஏற்றுகொள்ளவும் யாருமில்லை. ஒருவேளை இந்த தமிழ்ச்சமூகம் புலிகளை தமிழர்களாக ஏற்று கொள்ளவில்லையா? 

லட்சம் பேரை கொன்றொழித்த சிங்கள தரப்பு ஒற்றுமையாய் எல்லாவற்றையும் தனக்கு சாதகமாய் முடித்து கொண்டிருக்கிறது. ஆயிரம் பேரை கொன்ற புலிகளை விசாரித்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டித் திரியும் தமிழ் நடுநிலைவாதிகளை பார்க்க இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என எவ்வளவு பிராயசித்தம் செய்கிறார்கள்?

தமிழரின் விடிவென்பது தமிழர்களின் ஒற்றுமையில் அன்றி எந்நாளும் சாத்தியப்படாது. அதுவரை நீதியும் கிடைக்காது. கிடைக்கவும் கூடாது.

தமிழரின் விடிவென்பது தமிழர்களின் ஒற்றுமையில் அன்றி எந்நாளும் சாத்தியப்படாது. அதுவரை நீதியும் கிடைக்காது. கிடைக்கவும் கூடாது.

நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கும், உங்கள் ஆதங்கத்திற்கும். எமது சபிக்கப்பட்ட சமுதாயத்தில் ஒற்றுமை என்பது கானல் நீர். தேவைப்படின் சிங்களவர்களுடன் கூட ஒறறுமையாக இருப்போம் ஆனால் நமக்குள் ....

இப்போது எமக்கு தேவை ஒரு தீர்வு மட்டுமே. சர்வதேச விசாரணையிலிருந்து இத்தீர்வு எமக்கு கிடைக்கப் போவதில்லை. மாறாக இனங்களிற்கு இடையிலான குரோதத்தை இன்னும் வளர்க்கவே பயன்படும். இவ்விசாரணையினால் ஒரு கீழ் மட்ட இராணுவ சிப்பாய்கூட தண்டிக்கப் படப்போவதில்லை. ஆனால் இவ்வாறான ஒரு விசாரணை எமக்குத் தேவையாக உள்ளது என்பது உண்மை. நடந்தவற்றை விசாரித்து அதற்கான பொறுப்புக் கூறலை அரசு முன்னெடுக்குமாயின் - இழப்புகள் இவ்வளவற்றையும் தாங்கிய தமிழ் சமூகம் மத்தியில் அரசு ஒரு நல்லுணர்வை ஏற்படுத்தும். இந் நல்லுணர்வு இலங்கையின் எதிர்காலத்திற்கான ஒரு அத்திவாரமாகவும், சமூகங்களிற்கிடையேயான ஒரு புரிந்துணர்விற்கும், தீர்விற்கும் ஒரு அடிப்படையாகவும் இருக்கலாம்.

இங்கு அரசினால் நடத்தப்பட்ட அராஜகங்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படும்போது சமாந்தரமாக புலிகள் மற்றும் ஏணைய இயக்கங்களால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அராஜகங்கள் பற்றிய விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும். பொறுப்புக்கூற புலிகள் இல்லாவிடினும், இரு பகுதியினரினதும்  மனித உரிமை மீறல்கள் பகிரங்கப் படுத்தப்படல் வேண்டும். இவையே இனங்களிற்கிடையான நம்பகத் தன்மையை உருவாக்கும்.

தவிர இலங்கையை இரண்டாக வெட்டுவோம், ராஜபக்சாவை மின்சாரக் கதிரையில் இருத்துவோம் என்றால் அது மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான்.

சர்வதேச விசாரணையின் பின்னர் இலங்கை அரசு தமிழர்களிற்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளிற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோருமாயின், தமிழர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும் விடுதலை என்ற பெயரில் நாம் செய்த அழிவுகளிற்காக தார்மீகப் பொறுப்பை ஏற்று மன்னிப்பு கோரவேண்டும்.

இவ்வளவு அழிவிற்குப் பின்னர் வெறும் மன்னிப்பு என்ற வார்த்தைகள்தானா என்று என்னுடன் மல்லுக் கட்டினால், எனது விடை ஆம் என்பதே. இலங்கையின், எமது சமுதாயத்தின் எதிர்காலம் சுபீட்சமாக இருக்க வேண்டுமாயின் செய்த தவறுகளை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கிருந்து தீர்வானது இரு இனங்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வுகளில் இருந்து உருவாக வேண்டும்.

உலகம் முயற்சிப்பதும் இதைத்தான், சம்சும் கொடி ஆட்டுவதும் இதற்குத்தான், மக்கள் வாக்களித்ததும் இதற்குத்தான். தவறுகளை நாம் யாழ்களத்தில் ஏற்க மறுக்கலாம். ஆனால் வேறு தளத்தில் இவை நிச்சயம் வெளிக்கொணரப்பட்டு ஏற்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்! நம் பிரதமர் உருத்திரகுமாரன் இருப்பார்! போதுமா? நீதி மன்றம் என்கிறார்கள், அதற்குள் போய் தமிழ் சார்பு ஆள் வேண்டுமென்கிறீர்கள்! என்ன ஜோக் இது? 

நீங்களும் தான் கிரகிப்பை வளர்த்துக் கொள்ள வேணும் போல இருக்கு! புலிகளிடம் மட்டும் தான் அம்மாமார் பிள்ளைகளை இழந்தார்கள் என்று யார் சொன்னார்கள்? எங்கே அப்படி எழுதியிருக்கிறது? அர்ஜூன் சொன்னது: "புலிகளின் தவறுகளை ஏற்றுக் கொள்வதால்  எமக்கு என்ன இலாபம்?" என்று நீங்கள் இங்கே கேட்கும் கேள்வியை புலிகளிடம் பிள்ளையைப் பறி கொடுத்த அம்மாமாரிடம், அது ஒருவரோ, பத்துப் பேரோ, நூறுபேரோ, போய் கேட்டால் என்ன ஆகும் என்பது தான்! இதே கேள்வியை நானும் பலரிடம் கேட்டு விட்டேன், உடனே வெறேதும் வழியில் வந்து கெரில்லாத் தாக்குதல் தொடுப்பார்கள், பதில் சொல்ல மாட்டார்கள், அதையே இப்ப நீங்களும் செய்து கொண்டு, உருப்படியான கருத்துப் பரிமாற்றங்கள் இங்கே

Edited by புலவர்

நன்றி நண்பரே உங்கள் கருத்திற்கும், உங்கள் ஆதங்கத்திற்கும். எமது சபிக்கப்பட்ட சமுதாயத்தில் ஒற்றுமை என்பது கானல் நீர். தேவைப்படின் சிங்களவர்களுடன் கூட ஒறறுமையாக இருப்போம் ஆனால் நமக்குள் ....

நீங்கள் ஆதங்கப்படும் எமது இனத்தின் ஒற்றுமை தாயகத்தில் அவ்வளவாக பாதிக்கப்படவில்லை.

இங்கு இந்த களத்தின் கருத்துக்களை வைத்து ஒட்டு மொத்த இனத்தையும் மதிப்பிடமுடியாது. இப்போது புலத்தில் இருக்கும் குழப்பகரமான நிலைமை தொடர்ந்து நீடிக்காது. 

சிலரின் கருத்துக்கள் கவலை தந்தாலும் விவாதிப்பது நல்லதுதானே. 

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பு நீதி மன்றத்தில் சிங்களவர் சார்பு நீதிபதிகள் இருக்கலாம் என்றால்தமிழர் சார்பு நீதிபதிகள் ஏன் இருக்கக் கூடாது. அதனால்தான் இருவர் சார்பு நீதிபதிகளும் வேண்டாம் சர்வதேச நீதிபதிகள் மட்டும் இடம் பெற வேண்டும் என்கிறோம். நீங்கள்தான் ஜோக் அடிக்கிறீர்கள்.

புலவர்,

ஐ. நா. பிரேரித்துள்ள கலப்பு நீதிமன்றம், சிங்களவர் சார்பு - வெளிநாட்டவர் சார்பு கலப்பு நீதிமன்றம் அல்ல. மாறாக இது வெளிநாட்டவர் - உள்நாட்டவர் கலப்பு நீதிமன்றம். இதற்கான காரணம் உள்நாட்டவருக்கு அனுபவம் காரணமாக உள்ள உள்நாட்டு பிரச்சினைகள் பற்றிய விளக்கம், வெளிநாட்டவர் எவ்வளவு முயன்றாலும் அவர்களுக்கு கிடைக்காது என்பதாக இருக்கலாம். ஆனால் அனைவரும் அனுபவம் பெற்ற நீதிபதிகளாகவே இருப்பார்கள். மேலும் பாதிக்கப் பட்டவர்கள் எதிர்க்கும் எந்த நீதிபதியும் இந்த நீதிமன்றத்துக்கு நீதிபதியாக இருக்க ஐ. நா. அனுமதிக்காது என்பதே எனது எதிர்பார்ப்பு.

இன்று இலங்கையின் தலைமை நீதிபதியாக இருக்கும் திரு. ஸ்ரீ பவான் ஒரு தமிழர். அவர் இந்த கலப்பு நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக இடம் பெற கூடும். தலைமை நீதிபதி என்ற காரணத்தால்   உள்நாட்டு நீதிபதிகளையும் நியமிக்கவும் கூடும். பிரேரிக்கப்படும் வெளிநாட்டு நீதிபதிகளை இலங்கை அரசு ஏற்றுக்கொள்வதிலும் அவரின் கருத்து முக்கிய பங்கு வகிக்கும். ஆகவே இந்த ஐ. நா. பிரேரித்துள்ள கலப்பு நீதிமன்றம் ஒரு நீதி சார்ந்த சர்வதேச நிருவாக கட்டமைப்பே அன்றி சிங்களவர் -தமிழர்  இன முரண்பாடு பற்றிய ஒரு குழுமம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணைகளை முடிவுக்கு கொண்டுவரும் நிலை உருவானால், புலிகளை ஒரு பயங்கரவாத இயக்கம் என்று ஐ.நா.வால் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கும் நிலை உருவாகும்.

சிங்கள அரசு தமிழர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து ஜனநாயகத்தை நிலைநாட்டுகின்றது என்று சான்றிதழ் கொடுக்கப்படும்.

இதற்கு மேல் ஒரு சில சிங்கள இராணுவ அதிகாரிகளை தண்டிப்பதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. குறிப்பாக மகிந்த குடும்பத்தில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது. 

புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து அமெரிக்க அரசும், கனேடிய அரசும், ஐ. நா.வும் இன்னும் அகற்றவில்லை. இந்த பட்டியலில் உள்ளவையே ஐ. நா.வின் உத்தியோகபூர்வமான பயங்கரவாத அமைப்புகள். இந்த பட்டியலில் இருந்து அகற்றப்பட வேண்டிய தேவை குறித்து எந்த அமைப்போ, நாடுகளோ ஐ. நா திருப்தி படுமளவுக்கு போதுமான ஆதாரங்களை வழங்கவும் இல்லை. மாறாக புலிகளை இந்த பட்டியலில் வைத்திருக்க வேண்டிய தேவை குறித்து இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆதாரங்களை வெளிப்படுத்தி உள்ளன.

இலங்கை அரசு மக்கள் வாக்களிப்பு மூலம் ஆட்சி செய்பவர்களை தொடர்ச்சியாக மாற்றி வந்திருக்கிறது. இறுதியாக நிலையான சர்வாதிகார ஆட்சி என்று கருதி இருந்த இராஜபக்ச ஆட்சி கூட ஜனநாயக முறைப்படி மாற்றப் பட்டுள்ளது. சீன அரசில் தேர்தல் நடந்தாலும் அங்கு ஒரே கட்சி தான் தேர்தலில் வெற்றி பெற முடியும். சிங்கப்பூரில் மக்கள் வாக்களிப்பு மூலம் ஆட்சி மாற்றம் இடம் பெற முடிந்தாலும் அது நடப்பதில்லை. மத்திய கிழக்கில் பல நாடுகளில் அரச ஆட்சியே இடம்பெறுகிறது. அங்கு மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்கள் மாறுவதில்லை. ஆகவே சர்வதேச ரீதியில் ஒப்பிட்டளவில் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இலங்கையில் உள்ள பிரச்சினை சிறுபான்மை இனமக்களின் உரிமைகள் பற்றிய பிரச்சினையே அன்றி ஜனநாயகம் - சர்வாதிகாரம் - ஒற்றை ஆட்சி பற்றிய பிரச்சினை அல்ல.

மகிந்த குடும்பத்தில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க படாது என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தம்மை கடுமையாக பாதித்த ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்க கூட விரும்பாத அளவுக்கு சந்திரிக்காவும் பொன்சேகாவும் மைத்திரியும் புனிதமான மனிதர்களாக இருப்பார்கள் என்று நம்புவது கடினமானது.

மேலும் அமரிக்க அரசு தமக்கு எதிரான சர்வதேச சதியில் இடுபட்ட தமது நாட்டு குடிமகனான கோத்தபாயாவை தேச துரோகியாக கருதுகிறது. அமெரிக்க தேச துரோகிகள் கடுமையாக தண்டிக்க படுவார்கள். அமெரிக்காவுக்கு பெருமளவிலான எதிரிகள் இருப்பதால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க தேச துரோகிகளை மிகக்கடுமையாக தண்டிப்பது அமெரிக்க வழக்கம். கோத்தபாய இதற்க்கு விதிவிலக்கு என்று நீங்கள் உறுதியாக நம்புவதற்கு என்ன காரணம்?

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு அரசினால் நடத்தப்பட்ட அராஜகங்கள் பற்றிய விசாரணைகள் நடத்தப்படும்போது சமாந்தரமாக புலிகள் மற்றும் ஏணைய இயக்கங்களால் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட அராஜகங்கள் பற்றிய விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும். பொறுப்புக்கூற புலிகள் இல்லாவிடினும், இரு பகுதியினரினதும்  மனித உரிமை மீறல்கள் பகிரங்கப் படுத்தப்படல் வேண்டும். இவையே இனங்களிற்கிடையான நம்பகத் தன்மையை உருவாக்கும்.

தவிர இலங்கையை இரண்டாக வெட்டுவோம், ராஜபக்சாவை மின்சாரக் கதிரையில் இருத்துவோம் என்றால் அது மறுபடியும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைதான்.

சர்வதேச விசாரணையின் பின்னர் இலங்கை அரசு தமிழர்களிற்கு ஏற்படுத்தப்பட்ட அழிவுகளிற்காக பொறுப்பேற்று மன்னிப்பு கோருமாயின், தமிழர்களின் பிரதிநிதிகளான கூட்டமைப்பும் விடுதலை என்ற பெயரில் நாம் செய்த அழிவுகளிற்காக தார்மீகப் பொறுப்பை ஏற்று மன்னிப்பு கோரவேண்டும்.

இவ்வளவு அழிவிற்குப் பின்னர் வெறும் மன்னிப்பு என்ற வார்த்தைகள்தானா என்று என்னுடன் மல்லுக் கட்டினால், எனது விடை ஆம் என்பதே. இலங்கையின், எமது சமுதாயத்தின் எதிர்காலம் சுபீட்சமாக இருக்க வேண்டுமாயின் செய்த தவறுகளை இரு பகுதியினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இங்கிருந்து தீர்வானது இரு இனங்களுக்கிடையிலான நல்ல புரிந்துணர்வுகளில் இருந்து உருவாக வேண்டும்.

உலகம் முயற்சிப்பதும் இதைத்தான், சம்சும் கொடி ஆட்டுவதும் இதற்குத்தான், மக்கள் வாக்களித்ததும் இதற்குத்தான். தவறுகளை நாம் யாழ்களத்தில் ஏற்க மறுக்கலாம். ஆனால் வேறு தளத்தில் இவை நிச்சயம் வெளிக்கொணரப்பட்டு ஏற்கப்படும்.

மேலே ஜீவன் சிவா சொல்லியிருப்பதும் நல்ல விடயம். அடுத்த தலைமுறை சிறி லங்காவில் மாறி வருகிறது. எங்கள் தலைமுறை இன்னும் அரை நூற்றாண்டுக்கு உயிர்வாழ்ந்து இனவாதத்தையும் தீவிர வாதத்தையும் இரண்டு தரப்பிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கத் தான் போகுது! இதை தடுத்து நிறுத்த ஒரு வழி,எங்கள் தலைமுறையினரைடையேயும் இப்படி விவாதித்து கருத்துகளின் பன்முகத்தன்மையையும் நிதானத்தையும் கொஞ்சமாவது உருவாக்குவது தான். இதை ராஜன் விஷ்வா ஒற்றுமையின்மையாகப் பார்க்கலாம், இன்னும் சிலர் துரோகமாகப் பார்க்கிறார்கள்,. என் பார்வையில் நாம் பொசிற்றிவான திசையில் நகரக் கூடிய நாகரிகமான இனம் என்பதன் அடையாளமாக இப்படியான விவாதங்களைப் பார்க்கிறேன்.

சில சமயங்களில் ஒரு கருத்தை அழுத்திச் சொல்ல முயல்கையில் தேவையற்ற நக்கல் நளினங்கள் தடித்த வார்த்தைகள் இடம்பெற்று ஏதோ நாங்கள் கோபத்தில் அடிபிடிப் படுவதாகத் தெரியும்! உண்மையில் அப்படி அல்ல, அடுத்த முறை கனடாவில் சந்திக்கும் போது சசியருக்கு இறுக்கிப் பிடிச்சு ஒரு உம்மா குடுக்கத் தான் போறன், அதோட அவர் காலி! அதே போல, அக்னியை சிறி லங்கா போகும் போது சந்திச்சு ஒரு லயன் லாகர் பகிரத்தான் போறன்! கு.சா என்ன கெட்ட வார்த்தையால என்னைத் திட்டினாலும் ஜேர்மனி போனால் அவரோட கள்ளடிக்கத் தான் போறன்! இதுகளில எந்த மாற்றங்களும் இல்லை! (மருதரையும் மறக்கவில்லை!) :grin:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த குடும்பத்தில் எவர் மீதும் நடவடிக்கை எடுக்க படாது என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்? தம்மை கடுமையாக பாதித்த ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்க கூட விரும்பாத அளவுக்கு சந்திரிக்காவும் பொன்சேகாவும் மைத்திரியும் புனிதமான மனிதர்களாக இருப்பார்கள் என்று நம்புவது கடினமானது.

மேலும் அமரிக்க அரசு தமக்கு எதிரான சர்வதேச சதியில் இடுபட்ட தமது நாட்டு குடிமகனான கோத்தபாயாவை தேச துரோகியாக கருதுகிறது. அமெரிக்க தேச துரோகிகள் கடுமையாக தண்டிக்க படுவார்கள். அமெரிக்காவுக்கு பெருமளவிலான எதிரிகள் இருப்பதால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க தேச துரோகிகளை மிகக்கடுமையாக தண்டிப்பது அமெரிக்க வழக்கம். கோத்தபாய இதற்க்கு விதிவிலக்கு என்று நீங்கள் உறுதியாக நம்புவதற்கு என்ன காரணம்?

சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் மகிந்த இப்போதும் கதாநாயகனாகவே உள்ளார். சர்வதேச நாடுகளின் விருப்பங்களையும் மீறி புலிகளின் தலைமையை கூண்டோடு அழிக்க உத்தரவு கொடுத்த கோத்தபாய, மகிந்த போன்றோரை தண்டித்து சிங்கள மக்களின் உணர்வுகளைக் தேவையில்லாமல் சீண்டும் அளவிற்கு அமெரிக்க ராஜதந்திரிகள் செயற்படமாட்டார்கள். இயன்றவரை அனுசரித்தே போவார்கள். இலங்கையில் வன்முறையை நிறுத்த இறுதிப் போர்க்காலத்தில் பல்லாயிரம் மக்களைக் காவுகொடுக்க சம்மதித்த உலகநாடுகள் அதீத மனிதவுரிமையைக் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது.

அமேரிக்கா மனித உரிமைகள் பற்றி அக்கறை கொண்டுள்ளதால் மகிந்த குடும்பத்தை தண்டிக்க முனையும் என்று நான் கருதவும் இல்லை அப்படி எதிர்பார்க்கவும் இல்லை. மகிந்த குடும்பம், முக்கியமாக கோத்தபாய தண்டிக்க பட பின்வரும் காரணங்களே முக்கியமாக அமையும் என்று நான் கருதுகிறேன்.

 தம்மை கடுமையாக பாதித்த ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்க கூட விரும்பாத அளவுக்கு சந்திரிக்காவும் பொன்சேகாவும் மைத்திரியும் புனிதமான மனிதர்களாக இருப்பார்கள் என்று நம்புவது கடினமானது.

மேலும் அமரிக்க அரசு தமக்கு எதிரான சர்வதேச சதியில் ஈடுபட்ட தமது நாட்டு குடிமகனான கோத்தபாயாவை தேச துரோகியாக கருதுகிறது. அமெரிக்க தேச துரோகிகள் கடுமையாக தண்டிக்க படுவார்கள். அமெரிக்காவுக்கு பெருமளவிலான எதிரிகள் இருப்பதால் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க தேச துரோகிகளை மிகக்கடுமையாக தண்டிப்பது அமெரிக்க வழக்கம். கோத்தபாய இதற்க்கு விதிவிலக்கு அல்ல.

நீங்கள் கோத்தபாய தண்டிக்க பட மாட்டார் என்று உறுதியாக நம்புவதற்கு காரணம் சிங்கள மக்களை அமெரிக்கா பகைக்க விரும்பாது என்பதாகும். அமேரிக்கா சிங்களவரிலும் முக்கியாமான எத்தனையோ நாட்டு மக்களை கணக்கில் எடுக்காமல் தனது எதிரிகளை கடுமையாக தண்டித்துள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரை கோத்தபாய ஒரு தேச துரோகி.. தேச துரோகிகளை அமேரிக்கா தண்டிக்காமல் விடுவதில்லை. ஸ்ரீ லங்கா அரசை கொண்டே அமேரிக்கா கொத்தபயவையும் மகிந்த குடும்பத்தையும் தண்டிக்கும். ஸ்ரீ லங்கா அரசும் அதன் நீதிபதிகளும் வழங்கும் தண்டனைக்கு சிங்கள மக்கள் பெரும் எதிர்ப்பை தெரிவிக்க மாட்டார்கள். பசில் ராஜபக்ச சிறைக்கு அனுப்பப்பட்ட போது பெரும் எதிர்ப்பேதும்  காட்டப்படவில்லை. கோத்தபாய தண்டிக்க படும் போதும் எதிர்ப்பு பெருமளவில் இருக்காது.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஜீவன் சிவா சொல்லியிருப்பதும் நல்ல விடயம். அடுத்த தலைமுறை சிறி லங்காவில் மாறி வருகிறது. எங்கள் தலைமுறை இன்னும் அரை நூற்றாண்டுக்கு உயிர்வாழ்ந்து இனவாதத்தையும் தீவிர வாதத்தையும் இரண்டு தரப்பிலும் தக்க வைத்துக் கொண்டிருக்கத் தான் போகுது! இதை தடுத்து நிறுத்த ஒரு வழி,எங்கள் தலைமுறையினரைடையேயும் இப்படி விவாதித்து கருத்துகளின் பன்முகத்தன்மையையும் நிதானத்தையும் கொஞ்சமாவது உருவாக்குவது தான். இதை ராஜன் விஷ்வா ஒற்றுமையின்மையாகப் பார்க்கலாம், இன்னும் சிலர் துரோகமாகப் பார்க்கிறார்கள்,. என் பார்வையில் நாம் பொசிற்றிவான திசையில் நகரக் கூடிய நாகரிகமான இனம் என்பதன் அடையாளமாக இப்படியான விவாதங்களைப் பார்க்கிறேன்.

சில சமயங்களில் ஒரு கருத்தை அழுத்திச் சொல்ல முயல்கையில் தேவையற்ற நக்கல் நளினங்கள் தடித்த வார்த்தைகள் இடம்பெற்று ஏதோ நாங்கள் கோபத்தில் அடிபிடிப் படுவதாகத் தெரியும்! உண்மையில் அப்படி அல்ல, அடுத்த முறை கனடாவில் சந்திக்கும் போது சசியருக்கு இறுக்கிப் பிடிச்சு ஒரு உம்மா குடுக்கத் தான் போறன், அதோட அவர் காலி! அதே போல, அக்னியை சிறி லங்கா போகும் போது சந்திச்சு ஒரு லயன் லாகர் பகிரத்தான் போறன்! கு.சா என்ன கெட்ட வார்த்தையால என்னைத் திட்டினாலும் ஜேர்மனி போனால் அவரோட கள்ளடிக்கத் தான் போறன்! இதுகளில எந்த மாற்றங்களும் இல்லை! (மருதரையும் மறக்கவில்லை!) :grin:

ஜஸ்டின் ஜீ 
இப்பிடி லயன் லாகருடன் எஸ்கேப் ஆகமுடியாது ....குறைந்த பட்சம் Remy Martin உடனாவது வர வேண்டும் ...இல்லாட்டி சந்திக்கவே வரமாட்டேன் 
கருத்துகளால் மோதினாலும் தமிழர்களாய் எழுந்து நிப்போம் ....Hats off to You 

Edited by அக்னியஷ்த்ரா

  • கருத்துக்கள உறவுகள்

ரெமியா?

நம்ம சங்கல்பம் உடைஞ்சிடும் போலதான் கிடக்கு ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.