Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி

Featured Replies

வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
 
சிங்கள கிராமங்களுக்குள் புகுந்து குழந்தைகளையும் கர்ப்பிணி பெண்களையும் கொலை செய்விட்டுத்தான் பிரபாகரன் அன்று மாவீரர் தினத்தை நினைவு கூரினார் எனவும் தெரிவித்தார்.
 
காலி நாக்கியாதெனிய விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் அங்கு குழுமியிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வாரம் இலங்கைக்கு மிகவும் முக்கியமான வாரமாகும். வட கிழக்கில் பிரபாகரனின் மாவீரர் வாரம் ஆரம்பமானது இந்த வாரமாகும்.
 
முழு உலகத்துக்கும் பாரிய அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையையும் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு நான் கடந்த வருடம் வரைக்கும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை நிறுத்தியிருந்தேன். இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்து மாவீரர் தினத்தை நினைவு கூருகின்றனர்.
 
அன்று பிரபாகரன் சிங்கள கிராமங்களுக்குள் நுழைந்து சிறு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பிக்குமார் உட்பட அப்பாவி மக்களை வெட்டிக் கொலை செய்துவிட்டுதான் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தார். அப்படி இல்லாவிட்டால் மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் குண்டு வெடிக்கவைத்து மக்கள் அழிவை ஏற்படுத்திவிட்டே நினைவு கூர்ந்தார்.
 
மேலும் நாட்டுக்காக யுத்தக் களத்துக்கு சென்ற இராணுவத்தினரை கொலை செய்வதும் பிரபாகரனின் மாவீரர் வாரத்தை நினைவு கூருதலில் ஓர் அங்கமாகும். என்றாலும் இந்த அரசாங்கம் இதற்கு அனுமதி அளித்திருப்பதானது மிகவும் கவலைக்குரிய நிகழ்வாகும். எங்களால் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர். அத்துடன் நாட்டை பாதுகாத்த இராணுவ வீரர்களை கைது செய்கின்றார்கள்.
 
நாட்டையும் தேசத்தையும் பாதுகாத்தது தானா எமது இராணுவ வீரர்கள் செய்த குற்றம்? என நான் கேட்க விரும்புகின்றேன். இராணுவத்தினருக்கு பதக்கம் அணிவித்து அவர்களை கௌரவப்படுத்துவதற்கு பதிலாக இந்த அரசாங்கம் அவர்கள் சிறை உணவு சாப்பிடுவதற்கான வழிவகைகளை மேற்கொள்கின்றனர். வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவற்கே இவர்கள் தயாராகின்றனர். அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. அந்த பயங்கரமான நிலைமைக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும்.
 
தற்போது பாராளுமன்றத்தில் வரவு– செலவுத் திட்ட விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் மக்களுக்கு வழங்கியிருந்த நிவாரணங்கள் பாரியளவில் குறைக்கப்பட்டுள்ளன. என்னுடைய அரசினால் மேற்கொள்ளப்பட்ட அதிவேகப் பாதை, கொழும்பு துறைமுகம் போன்ற பாரிய வேலைத் திட்டங்கள் மூலம் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்தினோம். இவை அனைத்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளன. மாறாக இன்று நிதி மோசடி பிரிவொன்றை ஏற்படுத்திக் கொண்டு விசாரணை நடத்துவதையே செய்கின்றனர். பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி நாளாந்தம் ஒரு தலைவரை விசாரணைக்காக அழைத்து வருகின்றனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு பணம் செலுத்தவில்லையென கூறி தற்போது என்னிடமும் விசாரணை நடத்துகின்றனர்.
 
எங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்கி மக்கள் மத்தியில் இருந்து தூரமாக்குவதற்கே இவற்றையெல்லாம் இவர்கள் செய்கின்றனர். எந்தக் குற்றச்சாட்டை சுமத்தினாலும் எந்த விசாரணையை மேற்கொண்டாலும் மக்களிடம் இருந்து எங்களை ஒருபோதும் தூரமாக்க முடியாது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். எனவே வைராக்கிய அரசியலை கைவிட்டு மக்களுக்கு ஏதேனும் நன்மை பயக்கக் கூடிய வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, நவீனன் said:
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
வடக்கில் ஈழக் கொடியை ஏற்றுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது இதற்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உங்கள் கோரிக்கையை தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பர். கவலை வேண்டாம். :cool:

58 minutes ago, நவீனன் said:
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
சிங்களக் குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும் கொலை செய்துவிட்டு பிரபாகரன் மாவீரர் தினத்தை நினைவு கூர்ந்தாராம் : மகிந்த எம்.பி
 
இதை மகிந்த சொன்னதா? இல்லை சுமந்திரன் சொன்னதா? ... 

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கோரிக்கையை தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பர். கவலை வேண்டாம். :cool:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

14 minutes ago, வாலி said:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

ஓ ... உங்கள் போன்றவர்கள் இனத்தில் இருக்கும் மட்டும் ... முள்ளிவாய்க்கால் என்ன? எது சிங்களத்துக்கு சாத்தியமாகாது???

  • கருத்துக்கள உறவுகள்

ஒரிஜினல் சிங்களவனை விட இந்த தமிழ் மஹிந்தா "கூத்தாடிகள்" அதிகமாக துள்ளுவது ஏன் ? 
.......

Edited by நியானி
ஒரு சொல் தணிக்கை

மகிந்தாவிற்கும் பல எம்மவருக்கும்இடையில் பெரிய வித்தியாசம் இல்லை .அவர் அந்த மூலை இவர்கள் இந்த மூலை.

சிலருக்கு பல முதல்  கிறுக்குகள் கண்ணில் படாமல் போகும் மாயம் என்ன ?

சமூக அவலங்களுக்கு  இதுதான் முக்கிய காரணம் தாம் செய்யும் அல்லது தாம் சார்ந்தவர்கள் செய்யும் பிழைகள் கண்ணில் தெரியாது அல்லது கண்டும் காணாமலும் விட்டுவிடுவார்கள் .மற்றவர்கள் விடும் பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் .

இவர்கள் பதிவுகள் பார்க்கும்போது சன் டிவி ,ஜெயா டிவி ,கலைஞர் டிவி பார்க்கும் எண்ணம் தான் இங்கும் ஏற்படுகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகள் விட்ட பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் "

நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு வார்த்தை ஜஸ்ட்டு மிஸ்ட்டு 

11 minutes ago, arjun said:

அண்ணோய் ... சுட்டு விரலை நீட்டூறீங்கள் ... ஒருக்கால் குனிந்து பாருங்கள் .... நான்கு விரல்கள் உங்களை நோக்கி!

  • கருத்துக்கள உறவுகள்

1952 இல் இருந்து ஆயிரக்கணக்கான தமிழ் குழந்தைகளையும் கர்ப்பிணிகளையும் ரயர் போட்டு எரித்துக் கொன்றது முதல் முள்ளிவாய்க்காலில் வன்புணர்ந்து சுட்டுக்கொன்றது வரை மனித இனமே வெட்கித்தலைகுனியக் கூடிய அக்கிரமங்களை செய்துவிட்டு.. வெற்றி விழாக் கொண்டாட இவரால் முடியும் என்றால்.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களை தமிழ் கிராம மக்களின் பாதுகாப்பின் நிமித்தம் அகற்றி தமிழ் மக்களை பாதுகாத்த பிரபாகரன் மக்களை காத்த வீரர்களை நினைவு கூர்ந்து மாவீரர் தினம் ஏன் அனுஷ்டிக்க முடியாது.

அனுதாரபுரத்திலும்... ஹொரவப்பத்தானையிலும் பஸ்ஸில் வந்த தமிழ் பயணிகளை வகைதொகை இன்றி சுட்டும் வெட்டியும் கொன்ற சிங்கள காடைப்படைகளை விட புலிகள் ஒன்றும் அதிகமாகச் செய்துவிடவில்லை.

எதற்கும் அருமை மச்சானைக் கொண்டு இவற்றை படித்து விளங்கிக் கொண்டு தெளிவது நல்லம். புலிகளை நோக்கி குற்றம் சுமத்த சிங்களத்தில் என்ன இந்த உலகில் எந்த அரசபயங்கரவாதிகளுக்கும் அருகதை கிடையாது என்பது தான் யதார்த்தம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வாலி said:

ஆனால் தமிழ் மகிந்தக்கள் முள்ளிவாய்க்கால் வரை முன்னெடுக்க மாட்டார்களென நம்பலாம்.:cool:

குழந்தைபெடிக்கு இருக்கிற மூக்குச்சளிமாதிரி எப்பவும் முள்ளிவாய்க்கால்..முள்ளிவாய்க்கால்...முள்ளிவாய்க்கால்.......

வரலாறு மறந்த மமதைகளே!!!!

சிங்கள அரசுகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள் உங்கள் நினைவலைகளுக்கு வருவதேயில்லையா??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

குழந்தைபெடிக்கு இருக்கிற மூக்குச்சளிமாதிரி எப்பவும் முள்ளிவாய்க்கால்..முள்ளிவாய்க்கால்...முள்ளிவாய்க்கால்.......

வரலாறு மறந்த மமதைகளே!!!!

சிங்கள அரசுகள் அரங்கேற்றிய இனப்படுகொலைகள் உங்கள் நினைவலைகளுக்கு வருவதேயில்லையா??

சிங்கள அரசு அரங்கேறிய இனப்படுகொலைகளை விட முள்ளிவாய்க்கால் வெண்கொடி வேந்தர்(கள்) தம் சொந்த இனத்தின் மீது இறுதிவரை நிகழ்த்திய சொந்தப் படுகொலைகள்தான் நினைவலைகலிள் பிறஸ்ஷா வந்து துலைக்குது! 

குமாரசாமி அண்ணோய் முதலில் தமிழ் மகிந்தக்கள் முன்னெடுப்பார்கள் எண்டு கூட்டமைப்பை வம்புக்கு இழுத்தது நீங்கள். வம்புத் தனமா எழுதினால் அதைவிட பத்துமடங்கு வம்புத் தனமாத்தான் பதில் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை இழந்து, மனோ வியாதியில் இருக்கும் சிங்களவன் மஹிந்த இதை விட எதைத்தான் சொல்லுவான்.

இந்த மாதிரி திரிகளுக்கு வரும் போது வெறும் காலோட தான் வரவேணும்.. இல்ல செருப்பு பிஞ்சிடும்... நட்டம் நமக்குதான்.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

அரச பயங்கரவாதிகளும் அதற்கு ஆதரவானவர்களும் களையப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Sasi_varnam said:

"புலிகள் விட்ட பிழைகளை பிடிக்க கண்ணில் எண்ணெய் ஊற்றிகொண்டு பார்த்திருந்துவிட்டு பின் அதை ஊதி பெருப்பித்து காலத்தை ஓட்டிவிடுவார்கள் "

நல்ல அழகாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு வார்த்தை ஜஸ்ட்டு மிஸ்ட்டு 

அது ஞானிகளுக்கு பொருந்தாது ....
அவர்கள் பூமியில் இருப்பத்தில்லை ...... நித்தியத்தில் இருப்பவர்கள். 

பூமியில் வாழ்பவர்கள்தான் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி போகவேண்டும். 

8 hours ago, Sasi_varnam said:

பதவியை இழந்து, மனோ வியாதியில் இருக்கும் சிங்களவன் மஹிந்த இதை விட எதைத்தான் சொல்லுவான்.

இந்த மாதிரி திரிகளுக்கு வரும் போது வெறும் காலோட தான் வரவேணும்.. இல்ல செருப்பு பிஞ்சிடும்... நட்டம் நமக்குதான்.

நான் நினைக்கவில்லை ...
இது மத்தமங்களுக்கு விளங்கும் என்று ...

இது விளங்கும் சாத்தியம் இருந்திருந்தால் ...
மற்றதெல்லாம் எப்பவோ விளங்கி இருக்க வேண்டும். 

பரிதப படமட்டுமே முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களாகிய எமது விடுதலையை நேசிப்பவர்கள் யாவரும், யாழ்களத்தில் எவராலும் நடத்தப்படும் சேறடிப்புவேலைகளை மாவீரர்வாரத்தை முன்னிட்டுக் கவனியாது அவைகளுக்குப் பதிலிடாது விரதம் காக்கவும். இது எனது தாள்மையான வேண்டுகோள். தவறாகில் மன்னிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
59 minutes ago, ragunathan said:

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

ரகுநாதன் உங்கள் கருத்தையே நானும் கொண்டிருக்கின்றேன். ஆனால் ஒரு சிலரின் மூன்றாம்தர கருத்துக்களால் முட்டி மோதவேண்டியிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

 திரும்பியே வரமாட்டம் தெரிந்தும் ஆனால் ஒரு வெடி பொதுமக்களின் மீது பாயாது அண்ணை என்று சிரித்தவாறு விடைபெற்ற கட்டுநாயகாவில்  ஆகுதியான மாவீரர் (இவர்களை போல் ஆயிரம் ஆயிரம்பேர் தியாகம்களின் வரலாறு உள்ள )படங்களுக்கு மத்தியில் எனது சகோதர்கள் கூட்டியும் கொலை செய்த  கேடு கேட்ட கும்பல்களின் படங்களையும் வைக்க சொல்றிங்களா?

தியாகங்களின் வலி தெரியாதவர்கள் இழப்புகளின் வலி அறியாதவர்கள் இங்கு வேதம் ஓதுவது புதிதல்ல நடக்கட்டும் tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ragunathan said:

நாம் என்றுதான் விமர்சனங்களை விமர்சனங்களாகப் பார்க்கப் பழகப் போகிறோம் ? எதற்கு இந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் ?

இங்கே தவறு செய்யாதவர் எவரும் இருக்கிறார்களா ? அப்படியிருக்க ஏன் இந்த குரோதங்கள் ?

தாயக விடுதலைக்காகப் போராடப் போன எல்லோரும் போராளிகளே, உயிர்தந்த எல்லோரும் தியாகிகளே ! இதில் புலிகள், புளொட், ஈரோஸ், டெலோ என்று வேறுபாடு வேண்டாம்.

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிரை ஈந்த அனைத்துப் போராளிகளையும் இன்று நினைவு கூர்வோம் !!!!

அவர்களுக்கு எனது வீரவணக்கம் !

அதை வலியுறுத்திதானே புலிகள் மாவீரர் நாளையே உருவாக்கினார்கள் ...
இவளவு நாளும் தமிழர்கள் கொண்டாடினார்கள்.

நேற்றுதான் விடிஞ்ச மாதிரி வந்து ...
நீங்கள் இந்த கருத்தை எழுத யார் காரண கர்த்தாக்கள் ? 

1989ஆம் ஆண்டு இருந்த கருத்தை 
எதோ புதிய விடயம் மாதிரி நீங்கள் 
2015இல் எழுத வேண்டிய நிலை ஏன் இருக்கிறது ? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.