Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவுக்கு - நாகதீபவுக்கு வேண்டும் ஒரு "ம்"

[ Wednesday, 16 December 2015 ,04:56:47 ]
nainadevu.jpg

இலங்கையின் அரசியல் நிலவரங்கள் பிராந்திய, மற்றும் வல்லரசுகளுக்கிடையிலான பனிப் போர்களின் சங்கூது தரவையாக காணப்படுகின்றன. இவற்றில் இந்தியா, சீனா, அமெரிக்கா என களத்தில் அடையாளம் காட்டும் பெரிய நாடுகளும் சிறிய கேந்திர நாடுகளும் கபடியாடிக் கொண்டிருக்கின்றன. உள்நாட்டு அரசியலில் பேரினவாதம் சாயம் வெளுக்காமல் சால்வைகள் மட்டும் மாறிக் காணப்படுகின்றன.

ஏதோ கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மாற்றம் விரும்பிய எங்கள் மக்களுக்கும் விதிப்பயன் இயங்கத் தொடங்கிவிட்டது. எங்கள் அரசியல் வழிநடத்துநர்கள் ஒத்தூதிகளாக - நல்லபிள்ளைகளாக - எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டியும் உள்ளுக்குள்ளே கலம்பம் கிளப்பி – செய்யவிழைபவர்களையும் குழப்பியடித்து தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளையும் தன் தனிப்பட்ட உள்வீட்டுப் பிரச்சினையாக மட்டும் எடுத்து - தீர்வுகளுக்கும் தீ வைக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர்.

வட மாகாண சபையோ தமிழ்த்தேசிய கூட்டமைப்போ எமது மக்களின் பிரச்சினைகளுக்கு வறைமுறையான தீர்வுகளை தொடர்புபட்ட எமது உள்ளூர் மூளைவளங்கள் புலம்பெயர் மூளைவளங்களை ஒருங்கிணைத்து செயற்படுத்தி குறுங்கால உயர் அடைவு மட்டத்தை எய்தமுடியும். ஆனால் முதலமைச்சர் தும்முகிறாரா என்பதை கண்காணிப்பதிலேயே   கட்சிக்காரர்களின் காலம் காலாவதியாகின்றது.

அண்மையில் இலங்கையின் தலைப்பகுதியில் அமைந்துள்ள நயினாதீவின் நாகதீப என்ற பெயர்மாற்றம் - எங்களை உங்களால் நிமித்த முடியாது என்ற பேரினவாதத்தின் பக்கவாதத்தையே தோலுரித்து காட்டுகிறது எதையும் சர்வசூசகமாய் செயல்படுத்தும். பிரதமர், கடந்தகால அரச ஆட்சியாளர்களோடு எதிர்க்கட்சிகளும் இணைந்தே ஆதரவும் கூக்குரலுமிட்டு நாகதீப தமிழிலும் நாகதீப தான் என ஆர்ப்பரிக்கிறார்கள். இப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் ஒத்து ஆமோதிக்கிறார் போல.

வரலாற்றில் ஆகப்பிந்திய பெயர் நாகதீபம் என்றால் எங்களுக்கு ஒரு "ம்" வேண்டும். இப்போதைக்கு அதைத்தான் நாங்கள் கேட்கமுடியும். அரசியல் கைதிகள் விடயத்தில் கிட்டடியில் காட்டப்பட்ட ஒற்றுமை நயினாதீவு நாகதீபவாக மாறியமைக்கு எதிராகவும் அமைதியாக அமைய வேண்டும்.இன்றேல் அடுத்த பெயர் மாற்றத்துக்காக பேரினவாதம் பெயர்ப்பலகைகளை இப்போதே கூகிளில் தட்ட தொடங்கிவிட்டது எனலாம்.

இவை எதிர்ப்பதற்கு பதிலாக அடுத்த நாட்டு வெள்ள அவலத்துக்கு ஒரு அனுதாப கவிதை வாசிக்கலாம் என்று இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் நினைத்துவிட்டார்.நயினாதீவு என அழைக்கப்பட்ட நாகதீபவில் விகாரைக்கடல் முனைப்பில் விரைவில் அமையவுள்ள 110 அடி உயரமான புத்த பகவானின் சிலை திறப்பில் எதிர்க்கட்சித்தலைவர் கண்டிப்பாக கலந்து எமது தமிழ் மக்களுக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் உண்மையான பணியினை காட்டுவார் என்பதும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் ஒன்று தான்.

64 சக்திபீடங்களில் ஒன்றான புவனேஸ்வரிபீடம் என அழைக்கப்படும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் அமர்ந்து பிள்ளைவரம் கேட்டும் லட்சோபலட்சம் மக்களின் குறைகள் களையும் நாகேஸ்வரி அமைந்துள்ள பெரும்பதியல்லவா? இந்த ஆண்டு மகோற்சவம் அருள்மிகு நாகதீப ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் என அமையும்போது சற்று மொழிச்சங்கடம் உண்டாகும்தான்.

இருந்தாலும் பொறுமையின் எல்லைகளாக அதனையும் இராஜதந்திரம் என்ற மாப்பூசி ஏற்றுக்கொள்வோமா என்பது இன்றைய தமிழ் அரசியல் காவலாளிகளின் வினாவாக எழுந்திருக்கும். காலாகாலமாக நயினாதீவில் வாழும் மக்களின் வாழ்வாதார பொருளாதார சமூக அரசியல் விழுமியங்களில் பாதிப்பில்லாத தாக்கத்தை இந்த பெயர் மாற்றம் கொண்டுவருமா என்பது சந்தேகமே.

தமிழ் அரசியல்வாதிகள் ஆணித்தரமான செயல்பாடுகளை எடுக்கவேண்டிய தருணம் இது. மாகாண சபை பெயர்மாற்றதுக்கு எதிராக கைதடியில் தீர்மானம் நிறைவேற்றியதோடு வேலை முடிந்ததென நினைக்ககூடாது. ஏனெனில் அடுத்த தடவை பெயர் மாற்றும் இடம் கைதடியாக கூட இருக்கலாம்.இப்போதைக்கு எங்களால் எதுவும் கேட்டு பெறமுடியாத கையாலாகாத்தனத்தில் உள்ளோம் என்பதை வெட்கத்தை விட்டு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நாகதீபவுக்கு ஒரு "ம்" போட்டு நாகதீபம் என்றாவது கடிதம் அனுப்புங்கோ.

நயினாதீவான் எஸ்.குணசீலன் 

http://ibctamil.com/articles/index/605

  • கருத்துக்கள உறவுகள்

இற்கு எதிர்கட்சித்தலைவர் மீது காழ்ப்புனர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையாளருக்கு நயினாதீவு பெயர்மாற்றம் செய்யப்பட்டது பிரச்சினையில்லை. இந்த விடயத்தை சம்பந்தன் மீது சேறு பூச முயன்றிருக்கின்றார். இந்த விடயத்தினை மாகாண சபைதான் கையாளவேண்டும். கையாலாகாத முதல்வரினால் வெற்றுத்தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற முடியுமென கட்டுரையாளர் நினைத்தாரோ தெரியவில்லை. இவ்விடயம் தொடர்பாக முதல்வர் என்ன செய்திருக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்

நயினாதீவான் எஸ்.குணசீலன் புலனாய்வு பிரிவால்  விசாரிக்கப்படவில்லையா??

தீர்வு வரும் வேளையில் யாரப்பா இப்படி போட்டு குழப்பி அடிக்கிறது??

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nunavilan said:

நயினாதீவான் எஸ்.குணசீலன் புலனாய்வு பிரிவால்  விசாரிக்கப்படவில்லையா??

தீர்வு வரும் வேளையில் யாரப்பா இப்படி போட்டு குழப்பி அடிக்கிறது??

நுணா ஸார், அநேகமாக உப்பிடி கட்டுரை எழுதுபவர்கள் எல்லோரும் தாங்கள் பவ்வியமாக புலத்தில் வாழ்ந்துகொண்டு தாயகத்தில் வாழ்வதுபோன்ற ஜில்மாட் கதைகளையே விடுவார்கள். குழப்பி அடிக்கிற ஆக்கள் யாரண்டு பிளாஷ் லைட் அடிச்சுக்காட்டத் தேவையில்லை" 

  • கருத்துக்கள உறவுகள்
govarmant.jpg

வடக்கில் காணிகளை எதிர்வரும் ஜனவரியில் விடுவித்து தருவதாக ஜனாதிபதியும் பிரதமரும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறினால் ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் முன்னெடுத்த அதே போராட்டத்தை இந்த அரசாங்கத்திலும் முன்னெடுக்க நாம் தயங்க மாட்டோமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

இடம் பெயர்ந்தவர்களுக்கு காணியுடன் காணி உறுதிப்பத்திரமும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் அந்த காணிகளில் தமது வாழ்வாதாரத்தை மீள ஆரம்பிக்க முடியுமாயுள்ள போதே அந்த மக்களால் காணியை பெற்றுக் கொண்டதற்கான முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

வடக்கு, கிழக்கு, மலையகத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளாலேயே இந்த அரசாங்கம் பதவியேற்றது.

எனவே ஜனாதிபதி தேர்தலின் போதும் அதற்கு முன்பும் பின்பும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியது அவசியமென்றும் மாவை எம்.பி. வலியுறுத்தினார்.

வரவு - செலவு திட்டத்தின் காணி, மகாவலி அபிவிருத்தி, சற்றாடல், சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய கலாசார அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற போது உரையாற்றுகையிலேயே மாவை எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

தமிழர்கள் பாரம்பரியமாக வாழும் காணிகளில் சிங்களவர்கள் குடியேறுவதும் குடியேற்றப்படுவதும் பாரதூரமான பிரச்சினையான போதும் நாம் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை. என்ற போதும் தமிழ், முஸ்லிம் மக்கள் வீடு, காணியின்றி தமது வாழ்வாதாரங்களை தொலைத்து நிர்க்கதிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இராணுவத்தினர் அந்த காணிகளை ஆக்கிரமித்து விடுதிகளை கட்டி, வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என்றும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுமார் 02 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து 11 அகதி முகாம்களிலும் நண்பகர்கள், உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். சுமார் 25 வருடங்களாக இவர்கள் தமது சொந்த மண்ணில் குடியேறுவதற்காக காத்திருக்கின்றனர்.

இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவித்தால் தான் அம்மக்கள் தமது சொந்த காணிகளில் குடியேறி வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த முடிமென்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் இராணுவத்தினரை குவித்து இராணுவ மயமாக்கி, பின்னர் சிங்கள மயமாக்கி, பெளத்த விகாரைகளை அமைப்பதே மஹிந்த சிந்தனையின் கோட்பாடாக இருந்தது. இதற்கு எதிராக நாம் போராடியதன் விளைவாகவே ஜனவரி 08ம் திகதி புதிய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்த உதவினோம். சிறுபான்மையினரின் தேவை தொடர்ந்தும் இழுத்தடிக்கப்பட்டால் நாம் போராட பின்வாங்க மாட்டோமென்றும் அவர் கூறினார்.

சிறைக் கைதிகளை விடுவிப்பது முதல் அனைத்து விடயங்களிலும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்குவது இல்லை என்ற பொதுவான கருத்து இருந்து வருகிறது.

எனவே, கால இழுத்தடிப்பை மேற்கொள்ளாது சட்டமா அதிபர் திணைக்களம் சிறுபான்மையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

http://thinakaran.lk/?q=2015/12/15/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D

நுணாவிலான் - தேவை நிமிர்த்தம் இன்று காங்கேசன்துறை சென்றிருந்தேன் அங்கு விடுவிக்கப்பட்ட, விடுவிக்கப்படாத பகுதிகளில் பழைய பாதைகளை புதிதாக போடுதலும், மின்கம்பங்கள் நடுவதும் துரிதகதியில் நடைபெறுகின்றது. செப்ரெம்பர் முதல்வாரமும் சென்றிருந்தேன் - ஆனால் அப்போது வெறும் மண்வீதிகள்தான். மாற்றம் நிகழ்கிறது - அது ஜனவரியில் நடந்தாலென்ன மார்ச்சில் நடந்தாலென்ன. 1948இலிருந்து மாற்றத்திற்காக ஏங்கிய மக்களிற்கு திகதி முக்கியமல்ல  மாற்றம்தான் முக்கியம். 

காங்கேசன்துறை எனது இடம் என்பதற்காக இதை பதியவில்லை. பலாலி விமான நிலையத்திற்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையே உள்ள பகுதிகள் யாவும் 1985இன் இறுதியில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. பின்னர் இந்திய இராணுவ பிரசன்னத்தால் விடுவிக்கப்பட்டது. பின்னர் மறுபடியும் மேலதிக பகுதிகளுடன் 1990இல் மறுபடியும் கையகப்படுத்தப்பட்டது. இத்தனை வருடங்களாக வைத்திருந்த நிலத்தை விடுவிப்பது அவர்களிற்கும் சுலபமில்லை. எமது சேலைதான் முள்மீது வீழ்ந்தது - நாம்தான் பொறுமையாக அதை எடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லவேக்கேன்று விட்டால் .....
ஆனந்தத்தில் ஆர்பரித்து தமிழருக்கு கார்ட் அட்டாக் வந்துவிடும் என்பதால்தான்
கொஞ்சம் கொஞ்சமாக விடுகிறார்கள்.

 

பிடித்து வைத்திருக்க அவர்கள் பொல்லாதவர்களா ???

 

அங்கிருந்து கிடைக்கும் நேரடி செய்திகளின்படி
உணவுக்கு கூட நேரம் ஒதுக்காமல் ....
மின்கம்பங்கள் துரித கதியில் இரவு பகலாக நடபடுகிறது
வீதிகள் பதனிட படுகிறது.

 

எல்லாம் முடிய கொஞ்சமாக கொஞ்சமாக "உள்ளே" விடுவார்கள்.

41 minutes ago, Maruthankerny said:

லவேக்கேன்று விட்டால் .....
ஆனந்தத்தில் ஆர்பரித்து தமிழருக்கு கார்ட் அட்டாக் வந்துவிடும் என்பதால்தான்
கொஞ்சம் கொஞ்சமாக விடுகிறார்கள்.

 

பிடித்து வைத்திருக்க அவர்கள் பொல்லாதவர்களா ???

 

அங்கிருந்து கிடைக்கும் நேரடி செய்திகளின்படி
உணவுக்கு கூட நேரம் ஒதுக்காமல் ....
மின்கம்பங்கள் துரித கதியில் இரவு பகலாக நடபடுகிறது
வீதிகள் பதனிட படுகிறது.

 

எல்லாம் முடிய கொஞ்சமாக கொஞ்சமாக "உள்ளே" விடுவார்கள்.

என்ன செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை, ஆனால் மக்களுக்கு பிடித்திருக்கே. அவர்கள் காத்திருப்பார்கள் - நல்லது நடக்கும்.

இது நடப்பது இலங்கையில். 
 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவை.. பழைய படி.. சிலோன் என்று அழைத்தால் பல பிரச்சனை தீரும்.  நயினாதீவில் நாகதீப என்ற ஒன்றிருந்ததே இல்லை. நயினாதீவுன்னே இருக்கட்டும். வட்டாரங்கள் தான் இருந்தன. நாகவிகாரையை மையப்படுத்தி வட்டாரங்களுக்கு சிங்களப் பெயர் சூட்ட அனுமதிக்கக் கூடாது. சிலோன் சிறீலங்காவனது போலவே விட்டால்.. நாளை யாழ்ப்பாணம்.. யாப்பா பட்டுவ என்று பெயர்மாற்றம் செய்யப்படும். எம்மவர்கள் ழ் ம் இழக்கப்பட்டிருக்கு என்று அப்ப கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்கள். tw_blush:tw_angry:

Edited by nedukkalapoovan

12 minutes ago, nedukkalapoovan said:

சிறீலங்காவை.. பழைய படி.. சிலோன் என்று அழைத்தால் பல பிரச்சனை தீரும்.  நயினாதீவில் நாகதீப என்ற ஒன்றிருந்ததே இல்லை. நயினாதீவுன்னே இருக்கட்டும். வட்டாரங்கள் தான் இருந்தன. நாகவிகாரையை மையப்படுத்தி வட்டாரங்களுக்கு சிங்களப் பெயர் சூட்ட அனுமதிக்கக் கூடாது. சிலோன் சிறீலங்காவனது போலவே விட்டால்.. நாளை யாழ்ப்பாணம்.. யாப்பா பட்டுவ என்று பெயர்மாற்றம் செய்யப்படும். எம்மவர்கள் ழ் ம் இழக்கப்பட்டிருக்கு என்று அப்ப கட்டுரை எழுதிக் கொண்டிருப்பார்கள். tw_blush:tw_angry:

யாழ்பாணம் யாப்பட்டுவ என்று மாற்றம் செய்யபட்டால் அதை வரவேற்கதானே வேண்டும். மாற்றங்களை வரவேற்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 minutes ago, trinco said:

யாழ்பாணம் யாப்பட்டுவ என்று மாற்றம் செய்யபட்டால் அதை வரவேற்கதானே வேண்டும். மாற்றங்களை வரவேற்போம்.

அவர்கள் மாற்றங்கள் எனும் பெயரில் ஒரு இனத்தையே இல்லாதொழிக்க போகின்றார்கள். 
நம்மவர்கள் சுயநலத்திற்காக மாற்றங்கள் வேண்டுமென சொல்லி சோற்றுப்பானையை மாற்றாத மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஜீவன் சிவா said:

என்ன செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை, ஆனால் மக்களுக்கு பிடித்திருக்கே. அவர்கள் காத்திருப்பார்கள் - நல்லது நடக்கும்.

இது நடப்பது இலங்கையில். 
 

எனக்கு என்ன பிடிக்கும்
எது பிடிக்காது என்பதைகூட நீங்கள்தான் தீர்மானிக்க முடியும்.

 

அகங்காரம் தலைக்கு ஏறினால்.....
இன்னும் நிறைய வரும்.

19 hours ago, ஜீவன் சிவா said:

என்ன செய்வது உங்களுக்கு பிடிக்கவில்லை, ஆனால் மக்களுக்கு பிடித்திருக்கே. அவர்கள் காத்திருப்பார்கள் - நல்லது நடக்கும்.

இது நடப்பது இலங்கையில். 
 

சிலருக்கு ஆக்க பிடிக்கும் சிலருக்கு அழிக்க பிடிக்கும் இதுதான் வித்தியாசம் .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, arjun said:

சிலருக்கு ஆக்க பிடிக்கும் சிலருக்கு அழிக்க பிடிக்கும் இதுதான் வித்தியாசம் .

சிலருக்கு அகலாமை மட்டுமே பிடிகிறது
அந்த அறியாமைகளை விட

 

அதனோடு  பார்த்தால் இது எவ்ளவோ மேல்.
இறைவனின் படைப்பு ...
உலக இயல்பு இவற்றில்  ஆக்கமும் அழிப்பும் இரண்டற கலந்தவை.
அதில் ஒன்றை ஒன்று விஞ்சினாலே சிக்கலே உருவாகும்.

 

மொறேசியஸ் தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவில்  இப்போ மக்கள் யாரும் வசிப்பதில்லை. பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் வெளியேறி விட்டார்கள். காரணம் கலானிஆதிக்க காலத்தில் பிரிடிஸ் இராணுவம் அங்கு முகம் அமைத்து இருந்தார்கள். இவர்களுடைய இராணுவ தளபாடங்களுடன் ஆப்ரிக்க நாட்டில் இருக்க கூடிய ஒரு மண் விச பாம்பு அங்கு போய்விடுகிறது. அந்த தீவில் இந்த பாம்பை பிடித்து தின்ன ஒரு விலங்கோ பறவையோ கிடையாது. பலன் அது பல்கி பெருகி மக்களால் கட்டுபடுத்த முடியாத அளவில் பெருகி விட்டது இறுதியில் மக்களை வெளியேற்றி வேறு தீவில் குடியேற்றினார்கள்.

 

விஷ  பாம்புகளை  சமூகத்தில் இருந்து போட்டுத்தள்ள  இறைவன் எங்களை  கருடனை படைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன்.
விஷ பாம்புகள் எங்களை கண்டாலே ஒரு மாதிரி பம்புகிறது .......
இது ஜென்ம படைப்பாளியின் சூட்சமமாகவே இருக்கமுடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, arjun said:

சிலருக்கு ஆக்க பிடிக்கும் சிலருக்கு அழிக்க பிடிக்கும் இதுதான் வித்தியாசம் .

பலருக்கு ஆக்க பிடிக்கும்...ஆக்கியதை எடுத்துச்சென்று சுவைக்க சிலருக்கு பிடிக்கும். இது கண்ணால் பார்த்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம் நடக்குது என்று ஆர்ப்பரிப்பவர்கள், போராட்ட காலத்தில் எந்த இழப்பையும் சந்திக்காமல் வெறும் பொருளாதார நோக்கை மட்டும் கொண்டு ஓடிப்போனவர்கள், இப்போ வேண்டியளவு சேர்த்து ஓய்வு பெறும் காலத்தில் இங்கு முதலீடுகளை செய்து இன்னும் சேர்க்க, பொழுதுபோக்க  மாற்றம் இருக்கோ, இல்லையோ அப்படி ஒரு மாயை உருவாக்க வேண்டிய தேவை அவர்களுக்கு. ஓடிப்போக ஒரு காரணம், தேவை. திரும்பி வர ஒரு காரணம், தேவை. எரிகிற வீட்டில் புடுங்கினது லாபம். சிக்கல் படுகிறது போக்கிடம் இல்லாமல் இருக்கும் ஏழைகள், உள்நாட்டுப் பிரசைகள். இவர்கள் வெளிநாட்டு பிரசைகள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, arjun said:

சிலருக்கு ஆக்க பிடிக்கும் சிலருக்கு அழிக்க பிடிக்கும் இதுதான் வித்தியாசம் .

நீங்கள் இதுவரை ஆக்கிய ஒன்றைச்சொல்லுங்கள்.....

On 12/16/2015 at 5:36 PM, ஜீவன் சிவா said:

நுணாவிலான் - தேவை நிமிர்த்தம் இன்று காங்கேசன்துறை சென்றிருந்தேன் அங்கு விடுவிக்கப்பட்ட, விடுவிக்கப்படாத பகுதிகளில் பழைய பாதைகளை புதிதாக போடுதலும், மின்கம்பங்கள் நடுவதும் துரிதகதியில் நடைபெறுகின்றது. செப்ரெம்பர் முதல்வாரமும் சென்றிருந்தேன் - ஆனால் அப்போது வெறும் மண்வீதிகள்தான். மாற்றம் நிகழ்கிறது - அது ஜனவரியில் நடந்தாலென்ன மார்ச்சில் நடந்தாலென்ன. 1948இலிருந்து மாற்றத்திற்காக ஏங்கிய மக்களிற்கு திகதி முக்கியமல்ல  மாற்றம்தான் முக்கியம். 

என்ன காங்கேசன் துறை சீமெந்து தொழில்சாலையை திறக்க போகினமோ...? 

 

 

20 hours ago, arjun said:

சிலருக்கு ஆக்க பிடிக்கும் சிலருக்கு அழிக்க பிடிக்கும் இதுதான் வித்தியாசம் .

பலமான மக்கள் ஆதரவோடை இருந்த PLOTE  அமைப்பை  கட்டி எழுப்ப முடியாமல் அழித்தோம் எண்று பெருமையாக நீங்கள் சொன்னது  ஞாபகத்தில் வந்து தொலைக்கிறது...  

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2015 at 8:09 AM, குமாரசாமி said:

அவர்கள் மாற்றங்கள் எனும் பெயரில் ஒரு இனத்தையே இல்லாதொழிக்க போகின்றார்கள். 
நம்மவர்கள் சுயநலத்திற்காக மாற்றங்கள் வேண்டுமென சொல்லி சோற்றுப்பானையை மாற்றாத மாற்றுக்கருத்து மாணிக்கங்கள்.

நீங்கள் வேற .....அவ‌ர்கள் "ரைஸ் கூக்க‌ருக்கு" மாறி ரொம்ப நாள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.