Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்

Featured Replies

2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்

2016ம் ஆண்டு தமிழ் மக்களுக்கு சரித்திரம் வாய்ந்த ஆண்டாக இருக்கும்

பிறக்க இருக்கும் 2016 ஆம் ஆண்டு சரித்திரம் வாய்ந்த ஒரு வருடமாக மாறும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாணத்தில் அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்.

2016 ஆம் ஆண்டிலே அரசியல் தீர்வு கிடைக்கும்.

அதற்கு ஜனாதிபதி அவர்களின் யோசனையின் கீழ் புதியதொரு அரசியல் சட்ட பொறிமுறையினை முன்வைக்க இருக்கின்றார்.

அந்த ஜனாதிபதி அவர்களின் யோசனையிலே மூன்று விடயங்கள் முக்கியமாக கூறப்பட்டிருக்கின்றது.

அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் சட்டம் திருத்தம் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு என்பன அடங்குகின்றன.

மிகவும் தெட்டதெளிவாக தேசிய இனப்பிரச்சணைக்கான தீர்வு என அதில் கூறப்பட்டுள்ளது என்று எம்.ஏ. சுமந்திரன் கூறினார்.
  • கருத்துக்கள உறவுகள்

இன்று 

அரசார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகளுடான சந்திப்பு

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம்..

முக்கிய மாநாடுகள் யாழில் தான் சுழல்கிறது போலும்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 2016 ஆம் ஆண்டு மகிந்த அணியினருக்கும் புலம்பெயர் அணியினருக்கும் உவப்பானதாக இருக்கமாட்டாது! 

ஒஸானியா பகுதியில் உள்ள நாடொன்றிலிருந்து குறிப்பிடத் தக்க படையணியொன்று மீண்டும் களமிறங்கப் போவதாக அதன் தலைவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!

58 minutes ago, வாலி said:

இந்த 2016 ஆம் ஆண்டு மகிந்த அணியினருக்கும் புலம்பெயர் அணியினருக்கும் உவப்பானதாக இருக்கமாட்டாது! 

ஒஸானியா பகுதியில் உள்ள நாடொன்றிலிருந்து குறிப்பிடத் தக்க படையணியொன்று மீண்டும் களமிறங்கப் போவதாக அதன் தலைவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது!

எப்போது பார்த்தாலும் தனக்கு பிடிக்காத தரப்பினரைப் பார்த்து நக்கலடித்து பொழுது போக்குவது தமிழ் குணத்தில் ஒன்று. அந்த தமிழ்க் குணம் தமிழர் தரப்பில் உள்ள எல்லா தரப்பிலும் உண்டு. (நாங்கள் நீங்கள்) அந்த ரீதியில் நானும் ஒரு தமிழன். நீங்களும் ஒரு தமிழன்.

2000ல் ஈழம் பிறக்கும்..2008ல் இறுதி போர் முடிய நாடு கிடைக்கும்..இப்படி பல ஆண்டுகளை நாம் கடந்து வந்து விட்டோம். கடைசியில் கிடைத்தது இனப்படுகொலை மட்டுமே. 
இவை வீண் பேச்சுக்கள். கைதிகள் விடுதலையே இன்னும் முடிந்த பாடில்லை..இதற்குள் ஒரு வருடத்தினுள் இனப்பிரச்சனை தீர்வே வந்துவிடும் என்று அறிக்கை விடுவது மக்களின் அவநம்பிக்கையையே கூட்டும். 2016ல் தமிழ் தலைமைகள் அறிக்கைகள் விடுவதை குறைத்து அவற்றை செயலில் காட்ட வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்.. பேசாமல் சம் சும் கும்பல் ஒரு குடுகுடுப்பை கிலுக்கிட்டு திரியலாம்..!tw_blush:

2016ம் தமிழர் அரசியலில் ஒரு வெற்று ஆண்டாகக் கடந்து போகும்.. அதைவிட வேறு எதுவும் நடக்காது.. சம் சும் கும்பல் இப்ப ஆரூடம் சொல்லி பிழைக்க வேண்டிய நிலை அவ்வளவு தான்..! tw_blush:

சிலபேருக்கு 2009 இல் நடந்தது மட்டும் தான் இனப்படுகொலை.. அதுக்கு முன்னர் நடந்தது எல்லாம்.. சும்மா..!

இவை கனடாவில போய் செற்றிலாகின கணக்கை விட்டிட்டினம்...! அதுவும் 30 வருட போராட்டம் போட்ட பிச்சை தான். ஏன் அதுக்கு முதல் அவைட பரம்பரை போய் கனடாவில் அசூல் அடிக்கேல்ல. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

1544360_10153276824802944_66829353265743

1950களில் இருந்து பலர் தமிழருக்கு குடுகுடுப்பையை ஆட்டி விட்டார்கள். ஆனால் கிடைத்தது எதுவும் இல்லை. 2009 வரை குடுகுடுப்பையை கேட்க உயிரையும் உடமைகளையும் இழக்க வேண்டியதாயிற்று..இப்ப சும்மா கேட்க கூடியதாக இருக்கிறது. அது தான் வித்தியாசம். 

குண்டு சத்தத்தை ரசித்தவர்களுக்கு குடுகுடுப்பை சத்தம் கேட்பது கஷ்டம் தான் tw_dissapointed:

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் அவலக்குரலையும் சங்கீதமாகக் கேட்டுத் தாளம்போட்டு ஒரு கூட்டம் 2016ம் ஆண்டும் ரசித்துக்கொண்டுதான் இருக்கும்போல் தெரிகிறது. :(

அவலத்தை வேண்டுமென்றே  ஏற்படுத்தியவர்கள் ,

அதை ஓடி வந்தநாட்டில் இருந்து  அப்படி போடு அப்படி போடு என்று சங்கீதம் விரும்பி கேட்டவர்கள் அவலம் பற்றி கதைப்பது வேடிக்கையிலும் வேடிக்கை .

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதத்தை தூக்கி.. அவலத்தை ஆரம்பித்து வைத்தவர்கள்.. ஆயுதத்தை தூக்கி ஓரமாப் போட்டிட்டு.. அகதி என்ற போர்வையில்...பஞ்சம் பிழைக்க வந்திட்டு.. இப்போ.. அரசியல்..ஆரோகரணம் அவரோகணம் பாடுவதைப் போல கொடுமை வேறு எதுவும் இல்லை பாஞ்ச் அண்ணா. எல்லாம் காலத்தின் கோலம். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

2016 ல்  தமிழ் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டாலே பெரிய அதிசயம்.இதற்குள் சுமந்திரனின் வாய்ச்சவாடலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. 
அது சரி முழு இலங்கையையும் பிடிச்சு தாற ஆட்களும் வெட்கம் இல்லாமல் இப்பவும் எழுதுகினமே??

எப்ப பார்த்தாலும் ஒரு மனிதர் இங்கு வந்து,  ஓடி வந்தவன் கருத்து சொல்லக்கூடாது ஓடி வந்தவர் ஓடி வந்தவர் கருத்து சொல்லக்கூடாது என்று ஓரே ரோதனை இங்கே. ஆனால் தான் மட்டும் கனடாவுக்கு தலை தெறிக்க ஓடி வந்து ஜாலியாக கனடாவில் வாழ்ந்து கொண்டு,  நாள் முழுவதும் யாழில் வெட்டியா உட்காந்திருந்து பிரசங்கம் பண்ணலாம். இது என்ன நியாயம் என்ன மனிதர்களப்பா இவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nedukkalapoovan said:

ஆயுதத்தை தூக்கி.. அவலத்தை ஆரம்பித்து வைத்தவர்கள்.. ஆயுதத்தை தூக்கி ஓரமாப் போட்டிட்டு.. அகதி என்ற போர்வையில்...பஞ்சம் பிழைக்க வந்திட்டு.. இப்போ.. அரசியல்..ஆரோகரணம் அவரோகணம் பாடுவதைப் போல கொடுமை வேறு எதுவும் இல்லை பாஞ்ச் அண்ணா. எல்லாம் காலத்தின் கோலம். tw_blush:

முன்னால் பொரித்துவரும் கழுகுக் குஞ்சு பின்னால் பொரித்துவரும் குஞ்சுகளைக் கொத்திக் குதறிவிடுமாம். முன்னால் பஞ்சம்பிழைக்க வந்தவர்கள் சிலரின் கதையும் அப்படித்தான் தொடர்கிறது... :(

3 hours ago, nunavilan said:

2016 ல்  தமிழ் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டாலே பெரிய அதிசயம்.இதற்குள் சுமந்திரனின் வாய்ச்சவாடலுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. 
அது சரி முழு இலங்கையையும் பிடிச்சு தாற ஆட்களும் வெட்கம் இல்லாமல் இப்பவும் எழுதுகினமே??

முழு இலங்கையையும் பிடிப்பதற்கு வெளிக்கிட்ட ஆட்கள், அதற்கான பயிற்சியைப்பெற முதலில் மாலைதீவுக்குத்தான் போனவர்கள். அங்கு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கோமணமும் இல்லாமல் போன நிலையில், இலங்கைவர வெட்கம் அடைந்ததுதான் சரித்திரம். <_< :shocked:
 
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

முழு இலங்கையையும் பிடிப்பதற்கு வெளிக்கிட்ட ஆட்கள், அதற்கான பயிற்சியைப்பெற முதலில் மாலைதீவுக்குத்தான் போனவர்கள். அங்கு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கோமணமும் இல்லாமல் போன நிலையில், இலங்கைவர வெட்கம் அடைந்ததுதான் சரித்திரம். <_< :shocked:
 
யாழில் இப்ப மீண்டும் அதே பல்லவி தொடங்கி விட்டது...சுவ‌ரொட்டிகள் பல அங்காங்கே பார்க்க கூடியதாகவுள்ளது. இலங்கை பூராவும் புர‌ட்சி புண்ணாக்கு வெடிக்குமாம்,....:cool:

17 hours ago, தெனாலி said:

1950களில் இருந்து பலர் தமிழருக்கு குடுகுடுப்பையை ஆட்டி விட்டார்கள். ஆனால் கிடைத்தது எதுவும் இல்லை. 2009 வரை குடுகுடுப்பையை கேட்க உயிரையும் உடமைகளையும் இழக்க வேண்டியதாயிற்று..இப்ப சும்மா கேட்க கூடியதாக இருக்கிறது. அது தான் வித்தியாசம். 

1950 களில் இருந்து சிங்கள மக்களோடு சமரசமாக தமிழரை இருக்க விடாமல் சிங்கள மக்களுக்கு எதிராக  குடுகுடுப்பை ஆட்டி இளைஞர்களை  உசுப்பேற்றி வன்முறையை தூண்டி  இலாபமீட்டிய வேட்டித் தரப்பு மீண்டும் வித்தியாசமாக குடுகுடுப்பை ஆட்டி பஞ்சம் பிழைக்கிறார்கள். குடுகுடுப்பை ஆட்டி பஞ்சம் பிழைக்க உகந்த இனம் உலகிலேயே தமிழினம் தான். 

இங்கு கருத்து எழுதும் முக்கால்வாசி ஆட்கள் வெடிகொழுத்த காகம் பறப்பதுபோல நாட்டில் போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு பறந்த கோஸ்டி .

உங்களை எல்லாம் போராளிகள் பேடிகள் ஆக கணித்த காலங்களும் புதுவை கவிதை எழுதியதும் நினவிருக்கு ,நாலு காசை கொடுத்துவிட்டு வீதியில் இறங்கி கொடிபிடித்து இப்போ தாங்கள் தான் போராளிகள் என்ற கணக்கில் இப்போ இணையங்கள் எங்கும் குப்பைகள் நிரம்பி வழிகின்றது .இன்றும் கூட இந்த ஓடிவந்து  கொடிபிடித்தவர்களுக்கு மாறாகத்தான் நாட்டில் பல விடயங்கள் நடக்கிறது ,நீங்கள் எவ்வளவு குத்தி முறிந்தாலும் நாட்டில் இருப்பவர்கள் தான் தமது அரசியல் தலைமையையும் தமது அரசியல் தீர்வையும் தீர்மானிப்பவர்கள் .

தலிவருக்கு நாலு காசு கொடுத்து ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிட்ட காலம் மலையேறிவிட்டது .

முழு இலங்கை புரட்சியோ மாலை தீவு பிடிப்பதோ போராட போன அவர்களது தெரிவு .சரியோ பிழையோ அனைத்து இயக்கங்களும் தமக்கு தேவையானதை செய்தார்கள் .

ஒரு போராட்ட அமைப்புடன் தொடர்பில்லை ,பல போராளிகளை யாரென்று தெரியாது .போரட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியாது தமிழ்நெட்டும் விக்கிபிடியாவும் புலிசார்பு ஊடகங்களும் தான் நீங்கள் செய்யும் அரசியல்  .முடிந்தால் உங்கள் போராட்ட வரலாறுகளை தெரிந்த போராளிகள் பற்றிய விபரங்களையாவது எழுதுங்கள் பார்ப்பம் .எல்லாம் வெறும் பப்படங்கள் என்று எனக்கு தெரியும் .புலிகளில் இருந்தவர்களை கூட இங்கிருக்கும் வித்துவான்களை விட எனக்கு அதிகம் தெரியும் .

நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் ஓடிவந்துவிட்டு நாட்டில் இருப்பவர்கள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என்று எழுத உங்களுக்கு வெட்கமாயில்லை .

நாட்டிற்கு எதுவும் செய்யாத குற்ற உணர்வுதான் உங்களை இப்படி நடிக்க வைக்குதோ தெரியவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, arjun said:

நாட்டிற்கு எதுவுமே செய்யாமல் ஓடிவந்துவிட்டு நாட்டில் இருப்பவர்கள் எப்படி அரசியல் செய்யவேண்டும் என்று எழுத உங்களுக்கு வெட்கமாயில்லை .

உங்களுக்கு மட்டுந்தான் அந்த உரிமையும், தகுதியும் உண்டு. நல்லாய் எழுதுங்கோ. 

16 hours ago, arjun said:

வேலை வெட்டியில்லாதவர்களின் தளமாக மட்டும்  இல்லாமல்,  புலம் பெயர்ந்து வாழும் எல்லா மக்களுக்கும் யாழில் தமது கருத்துகளை கூறலாம். அதுவும் இது போல் கிறுக்குத்தனமாக தன்னைப்போலவே புலம் பெயர்ந்த சக  மக்களை சதா அவமதிக்கும் முட்டாள்தனமான கருத்து அணுகுமுறை மாற்றம் காணவேண்டும். அனைவருமே வேலைக்கு போய் வரும் உழைப்பாளிகளாகவும் நேரம் கிடைக்கும் போது நல்ல உடற்பயிற்சி  செய்து வருவதன் மூலம்   உடலின்  இரத்தவோட்டம் சீராக்கப்பட்டு தனது   சக கள உறவுகளை, மற்றைய மனிதர்களை மதிக்கும் மனப்பாங்கு  வளரும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2015 at 6:20 PM, arjun said:

குண்டு சத்தத்தை ரசித்தவர்களுக்கு குடுகுடுப்பை சத்தம் கேட்பது கஷ்டம் தான் tw_dissapointed:

நாங்க 2009இல் முற்று முழுதாக கைவிட்டு மௌனமாக்கிவிட்ட ஒன்றை

இன்னும் தூக்கி தாங்கி

எதிர்பார்ப்போடு திரிவது யார்??

யாழ் அறியும்.

நான் இந்த திரிக்கு என்று இந்த பதிவை போடவில்லை, பொதுவாகவே கேட்கிறேன்.முள்ளிவாய்க்கால் என்பது தமிழ் இனத்துக்கு மட்டுமல்ல  மனித குளம் பார்க்காத பேரழிவு. ஆனால் இங்கு சிலர் யாராவது தமிழ் தேசியம் கதைத்தால் உடனே  முள்ளிவாய்க்காலை காட்டி மிரட்டுவது வழமை.அது எதோ பொழுது போக்கு மாதிரி.
 இவ்வாறான கருத்துக்கள்ளை என் யாழ் களம் அனுமதிக்கிறது ??

  • கருத்துக்கள உறவுகள்

1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் அடுத்த பொங்கல் தமிழீழத்தில் என்றுடி வாக்குக் கேட்ட சம்பந்தர். இப்ப 2016இல் இக்கிய இலங்கைக்குள் தீர்வு கிடைக்கும் என்று சொல்லி வருகிறார். 2015 நவம்பர் 7ஆம் திகதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவார்கள் என்று சொன்னீங்களே அது என்ன ஆச்சு.????

  • கருத்துக்கள உறவுகள்

பிறகு கொஞ்சப்பேர் 1976 இக்குப் பிறகு ஈழம் பிடிச்சுத்தாறம் எண்டு உண்டியல் குலுக்கிக்கொண்டும் திரிஞ்சவையள். வாக்குக் கேட்டவைக்கும் உண்டியல் குலுக்கினவைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. 

Edited by வாலி

  • கருத்துக்கள உறவுகள்

சம் சும் மாவை குடுகுடுப்பைக்காரர்களுக்கு 2016 சரியில்லைப் போல. தமிழ் மக்கள் பேரவை மீது வெளிநாட்டு ராஜதந்திரிகளும் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதனை ஒரு சனநாயக நடைமுறையின் அம்சமாகப் பார்க்கவும் தலைப்பட்டுள்ளனர். tw_blush:

எனி சம் சும் மாவை கும்பல் தன்னிச்சையாக குடுகுடுப்பை கிலுக்கலாம் என்று கனவு காண்பதை நிறுத்தி.. மீண்டும்.. 1998 ப் போல்.. சந்திரிக்காவின்  அரைகுறைப் பொதியோடு அவவின் சேலைக்குள் பதுங்கலாம் என்று கனவு காண்பதை நிறுத்தி.. தமிழ் மக்கள் சொல்வதை கேட்டு அவர்கள் விரும்புவதை பெற்றுக் கொண்டுக்கும் வகைக்கு நடவடிக்கைகள் அமைவது அவசியம். தமிழ் மக்கள் பேரவையின் வரவு இதன் தொடக்கமாக அமையின் மிகவும் நல்லது. நல்ல ஆரம்பமாக அது அமையும். tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.