Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்

Featured Replies

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்

சிங்கள மக்கள் ஒரு அடி வைத்தால் தமிழ் மக்கள் 10 அடி வைக்க தயார்

February 6, 2016  09:19 am

Bookmark and Share
 
இலங்கையின் 68 வது சுதந்திரதினத்தில் தழிழரின் உரிமைக்காக தேசிய கீதம் தமிழில் இடம்பெற்றது மிகவும் வரவேற்கதக்கது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

தழிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சரிசமமாக சகோதரத்துவத்துடன் இருக்க இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்ற செய்தியினை நேற்று முன்தினம் அரசாங்கம் தந்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அந்த சந்தோசத்தினை எடுத்துக்காட்டும் முகமாக நான் யாழ் நாக விகாரகைக்கு வந்து வழிபாட்டில் ஈடுபட்டதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ் ஸ்ரீ நாக விகாரையில் நேற்றைய தினம் சமய வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற போது வடமாகாண முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடரந்து தெரிவிக்கையில்,

புத்த பெருமானின் அன்பும் கருணையும் இலங்கை மக்களிடையே வரவேண்டும். புதியதொரு வழிபிறக்க வேண்டும்.

நாம் புத்த பெருமானிடம் வேண்டுவது நல்லிணக்கமும், நன்மையும், சமாதானமும், சிறப்பும் மிகவிரைவில் கிடைக்க வேண்டும் என்று.

சிங்கள மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து ஒரு அடி முன்னோக்கி வைப்பார்களேயானால் அதற்காக 10 அடி முன்னோக்கி வைக்க தமிழ் மக்கள் தயார்.

இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட்டமை நல்லிணக்கத்திற்காக செய்த சிறிய காரியம் என்றாலும் அது பாராட்டத்தக்கது.

இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தையும் சகோதரத்துவத்தையும் அதிகரித்து கொள்ளவதற்கான சிறந்த பின்புலம் உருவாகியுள்ளது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழ் மக்களின் மனதை வெல்ல சிங்களவர்கள் செய்யும் முயற்சி போன்ற ஒன்று. ஆக குறைந்த பட்சமாகவேனும் ஒரு குறித்த தொகை சிங்கள மக்களின் ஆதரவு நம் பக்கம் இருக்க வேண்டும். இது நல்முயற்சிக்கான ஒரு படி. வரவேற்கத்தக்கது.

  • தொடங்கியவர்

தமிழில் தேசிய கீதம் மகிழ்ச்­சியில் சி.வி. :  புத்­த­பெ­ரு­மா­னையும் வழி­பட்­டார் 

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ளிக்கின்றது என யாழ். நகரில்அமைந்­துள்ள நாக­வி­கா­ரையில் புத்­த­பெ­ரு­மானின் வழி­பாட்­டைய­டுத்து வட­மா­காண முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.CV.jpg

நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் ஆரி­ய­குள சந்­தி­யி­லுள்ள நாக விகா­ரைக்கு சென்று புத்­த­பெ­ருமான் வழி­பாட்­டை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையின் 68ஆவது சுதந்­தி­ர­தினம் நேற்று முன்­தினம் கொழும்பில் கொண்­டா­டப்­பட்­ட­போது தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டி­ருந்­தது.

இச்­செ­யற்­பா­ட­னது சிறிய விட­ய­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களை பொறுத்­த­வரை ஒரு மகிழ்ச்­சி­யான அவர்­க­ளுக்கு பிடித்­த­மான விட­ய­மாகும். அத்­துடன் அத்­த­கைய செயற்­பாடு என்­னையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. என் மனதில் ஏற்ப்­பட்ட மகிழ்ச்­சியை எடுத்­து­காட்டும் வித­மா­கவே நாக­வி­கா­ரைக்கு வந்து புத்­த­பெ­ருமான் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தேன்.

நாக­வி­கா­ரைக்குச் சென்று புத்த பெரு­மானை வழி­பட வேண்டும் என பல­முறை முயற்­சித்­தி­ருந்த போதும் ஏதோ­வொரு கார­ணங்­களால் அது நடை­பெ­றா­மலே தடைப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்று இரத்து செய்­யப்­பட்­டதால் எனக்கு வழி­பட வாய்ப்புக் கிடைத்­தி­ருந்­தது.

புத்த பெரு­மா­னு­டைய அன்பும் கரு­னையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்­ற­டைய வேண்டும். நாட்டில் புதி­ய­தொரு யுகம் பிறந்து சாந்தி சமா­தானம் நிலவ வேண்டும் என நான் புத்­த­பெ­ரு­மா­னிடம் வேண்­டிக்­கொண்டோன் என்றார்.

மேலும் சுதந்­திர தினத்தில் முன்­மா­தி­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/2820

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, குமாரசாமி said:

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

அதுதானே சொல்லியிருக்கிறார், சிங்களவர் ஒரு அடி வைத்தால், தமிழர் பத்து அடி வைக்கத் தயார் என்று. எல்லாம் நல்லிணக்கத்தை நோக்கி வைக்கப்படும் அடி. சிங்களவர் அதை எப்படிப்பார்ப்பார்கள், எப்படி விளங்கிக் கொள்வார்கள்? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

இலங்கை சுதந்திரதினத்திற்கும் புத்தசமயத்திற்கும் என்ன சம்பந்தம்? ஏன் கோட்டைமுனியப்பர் கோவில் இதுக்கெல்லாம் சரிப்படமாட்டாரோ?tw_glasses:

முனியப்பர் பக்கத்தில் இருந்த கோட்டையையே பாதுகாக்காதவர்.

புத்தர் இந்தியாவையும் சீனாவையும் அமெரிக்காவையும் ஒன்றாக இணைத்து சிங்கள பௌத்தார்களுக்கு வெற்றி பெற்று கொடுத்தவர். அவரிடம் ஒரு தீர்வு கேட்டு முதலைச்சர் தானும் போய் இருக்கிறார். செய்ய கூடியவர்களிடம் தானே கேட்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்

On February 6, 2016 at 5:40 AM, நவீனன் said:

தமிழில் தேசிய கீதம் மகிழ்ச்­சியில் சி.வி. :  புத்­த­பெ­ரு­மா­னையும் வழி­பட்­டார் 

நாட்டின் 68ஆவது சுதந்­திர தினத் தில் தேசிய கீதம் தமிழில் பாடப்­பட்ட­மை­யா­னது தமிழ் மக்­க­ளுக்கும் எனக்கும்மகிழ்ச்சி­ய­ளிக்கின்றது என யாழ். நகரில்அமைந்­துள்ள நாக­வி­கா­ரையில் புத்­த­பெ­ரு­மானின் வழி­பாட்­டைய­டுத்து வட­மா­காண முதல்வர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.CV.jpg

நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் ஆரி­ய­குள சந்­தி­யி­லுள்ள நாக விகா­ரைக்கு சென்று புத்­த­பெ­ருமான் வழி­பாட்­டை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்­கையின் 68ஆவது சுதந்­தி­ர­தினம் நேற்று முன்­தினம் கொழும்பில் கொண்­டா­டப்­பட்­ட­போது தேசிய கீதம் தமி­ழிலும் பாடப்­பட்­டி­ருந்­தது.

இச்­செ­யற்­பா­ட­னது சிறிய விட­ய­மாக இருந்­தாலும் தமிழ் மக்­களை பொறுத்­த­வரை ஒரு மகிழ்ச்­சி­யான அவர்­க­ளுக்கு பிடித்­த­மான விட­ய­மாகும். அத்­துடன் அத்­த­கைய செயற்­பாடு என்­னையும் மகிழ்ச்­சிப்­ப­டுத்­தி­யுள்­ளது. என் மனதில் ஏற்ப்­பட்ட மகிழ்ச்­சியை எடுத்­து­காட்டும் வித­மா­கவே நாக­வி­கா­ரைக்கு வந்து புத்­த­பெ­ருமான் வழி­பாட்டில் ஈடு­பட்­டி­ருந்தேன்.

நாக­வி­கா­ரைக்குச் சென்று புத்த பெரு­மானை வழி­பட வேண்டும் என பல­முறை முயற்­சித்­தி­ருந்த போதும் ஏதோ­வொரு கார­ணங்­களால் அது நடை­பெ­றா­மலே தடைப்­பட்­டி­ருந்­தது.

எனினும் இன்று (நேற்று) ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்று இரத்து செய்­யப்­பட்­டதால் எனக்கு வழி­பட வாய்ப்புக் கிடைத்­தி­ருந்­தது.

புத்த பெரு­மா­னு­டைய அன்பும் கரு­னையும் இலங்கை மக்கள் அனைவர் மீதும் சென்­ற­டைய வேண்டும். நாட்டில் புதி­ய­தொரு யுகம் பிறந்து சாந்தி சமா­தானம் நிலவ வேண்டும் என நான் புத்­த­பெ­ரு­மா­னிடம் வேண்­டிக்­கொண்டோன் என்றார்.

மேலும் சுதந்­திர தினத்தில் முன்­மா­தி­ரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்ட இவ்வாறான செயற்பாடுகள் தமிழ் மக்களை சிங்கள மக்களுடன் சகோதரத்துவத்துடன் சரிக்கு சமமானவர்களாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறன என்ற செய்தியை வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.

http://www.virakesari.lk/article/2820

அடடா, தமிழில் தேசியகீதம் பாடப்பட்டது தமிழ் மக்களுக்குப் பிடித்ததும் மகிழ்ச்சியானதுமான விடயம் என்று விக்கி சொல்லியிருக்கிறர். அதோட இத்தகைய செயற்பாடு தன்னையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கின்றது என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் அந்த மகிழ்ச்சியைக் காட்டும் விதமாக நாகவிகாரைக்குப் போய் புத்தர் பெருமானையும் வழிபட்டிருக்கின்றார். இது எங்கடை விசில் அன்பர்களுக்கு இனிப்பான செய்தியாக இருந்துவிடப் போவதில்லை. இதே செயற்பாட்டை சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ செய்திருந்தால் அது தமிழ்த் தேசியத்துக்கு எதிரான துரோகமாகவே இருந்திருக்கும். ஒரு அன்பர் கூறுகின்றார் எல்லாம் நல்லிணக்கத்தை நோக்கி வைக்கப்படும் அடி என்பதாக. இதனைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தனும் சுமந்திரனும் செய்துகொண்டு இருக்கிறார்கள். இந்த வரிசையில் சீக்கிரமே விக்கியும் இணைந்துகொள்வார் போல இருக்கின்றது. விக்கியின் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கது. அவர் இதுகாறும் செய்த உருப்படியான ஒரேயொரு செயற்பாடு இது. வாழ்த்துக்கள் முதல்வர் விக்கிக்கு!

38 minutes ago, வாலி said:

அப்படியில்லை சம் அல்லது சும் தமிழ் மக்கள்  சிங்ககளவருக்கு கட்டுப்பட்டு வாழ விரும்பிகிறார்க்ள் என்று தான் வந்திருக்கும்.

உதாரணமாக,
1.புலிகள் பயங்கரவாதிகள்

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு.

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது.

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது.

இப்படியான கேடுகெட்ட விடயங்களை தான் கூறிய்ருப்பார்கல் இந்த கூத்தாடிகள்.

ஆனால் விக்கினேஸ்வரன் அவர்கள் அப்படி எதுவும் கூறவில்லை.மிகவும் நிதானமாக  நடக்க வேண்டியவை பற்றி குறிபிட்டுள்ளார்.

எனவே விக்கினேஸ்வரன் போன்ற தமிழ் மக்களுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதத்தை அரசியல் சாக்கடைகளான கூத்தமைப்புடன் ஒப்பிடக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Dash said:

1.புலிகள் பயங்கரவாதிகள் - புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லையா? அய்நாவும் பன்னாட்டுச் சமூகமும் அப்படித்தான் கூறுகின்றன

2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை - புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறிச் சவாரி செய்யமுயன்றனர். ஆனால் முற்பகல் செய்த வினை விதிவடிவில் விளையாடிது. (இதுபற்றி எமில்காந்தன் செய்திகள் முழுமையாக வந்தவுடன் மேலும் ஆராயலாம்). புலிகள் தனித்து நின்று தேர்தலில் இறங்கியிருக்கலாமே! ஏன் தமிழரசுக்கட்சி தலைமையிலான கூட்டமைபில் போட்டியிட்டனர். 

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு. - இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை என எங்கும் கூட்டமைப்போ சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சொல்லவில்லை. 

4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது. - முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தது. வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இனம் ஒன்று ஓரிரவுக்குள் ஆயுதமுனையில் இருந்து அவர்களுக்கும் உரிய தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்புத்தான்.

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது. - இலங்கைத்தீவில் தமிழருக்கான தீர்வு வரும்போது முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு ஒருபோதும் தீர்வுகாணமுடியாது. கூட்டமைப்பு ஒருபோதும் சரணாகதி அரசியல் நிகழ்த்தவில்லை. அவ்வாறு பேசப்படுமானால் முள்ளிவாய்க்காலில் தமிழரை ஏக பிரதிநிதித்துவப்படுதியவர்கள் சரணடைந்தபோது தமிழர்கள் சிங்களவரிடம் சரணடைந்து விட்டதாகவே கொள்ளப்படும். 

Edited by வாலி

விக்னேஸ்வரன் VS தமிழர்.
       6-0, 7.6, 0-6, 0-6, 1-5
செற்றை வெண்டாகணும் தலைவா.

6-0 மாகாணசபை தேர்தல்
7.6 பொறுப்பற்ற நிர்வாகம், பிதற்றல்கள். கடைசி சுற்றில் அனந்தியின் முரண்பாட்டால் வெற்றி
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், பாராளுமன்ற தேர்தல் குழறுபடிகள்.
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், மக்களவை பிதற்றல்கள்.
1-5 உருப்படியாக ஒரு நல்லிணக்க கருத்து.

தலைவா எப்படியாவது கடைசி செற்றை வென்றிடு.

13 minutes ago, ஜீவன் சிவா said:

இது பேய் பகிடி ,

அடுத்த விம்பிள்டன் சம்பியன் விக்கியர்தான் .

1 hour ago, வாலி said:

1.புலிகள் பயங்கரவாதிகள் - புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லையா? அய்நாவும் பன்னாட்டுச் சமூகமும் அப்படித்தான் கூறுகின்றன

,அப்படியாயின் 1948 முதல் சிங்களவன் நடத்திய வன்முறையெல்லாம் என்ன விவசாயமா ? (56,77,83 கலவரம் தொடக்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் நடத்திய  வன்முறைகள வரை. இதிலிருந்து விளங்குவது என்னவென்றால் சர்வதேசம் தமிழருக்கு ஆதரவாக இல்லை. எனவே  அவர்கள் புலிகளை பயங்கரவாதிகள் என்று கூறினால் அது சரி என்று ஆகாது. 
 
2. புலிகளுக்கும் கூத்தமைப்புக்கும் சம்பந்தம் இல்லை - புலிகள் கூட்டமைப்பின் முதுகில் ஏறிச் சவாரி செய்யமுயன்றனர். ஆனால் முற்பகல் செய்த வினை விதிவடிவில் விளையாடிது. (இதுபற்றி எமில்காந்தன் செய்திகள் முழுமையாக வந்தவுடன் மேலும் ஆராயலாம்). புலிகள் தனித்து நின்று தேர்தலில் இறங்கியிருக்கலாமே! ஏன் தமிழரசுக்கட்சி தலைமையிலான கூட்டமைபில் போட்டியிட்டனர். 

அப்படியானால் இந்த தமிழ் இனத்தை ஏலம்  விட்டுக்கொண்டிருக்கும் சம்பந்தன் ஓடிக்கோடு இருந்தார். ஆனந்த சங்கரி போல் விலகி இருக்கலாம்  ஆனால்  அதை செய்யவில்லை.

இப்படி வேணுமானால் கூறலாம்  "புலிகளுக்கும் கூட்டமைப்பின் கூத்துக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை" 

3. இனச்சுத்திகரிப்பு நடக்கவில்லை தமிழருக்கு. - இனச்சுத்திகரிப்பு தமிழருக்கு நடக்கவில்லை என எங்கும் கூட்டமைப்போ சம்பந்தனோ அல்லது சுமந்திரனோ சொல்லவில்லை. 

அப்படியானால்  ஜெனிவாவில் சுயமாக தலைவராக நியமித்துக் கொண்ட சுமந்திரன் எதோ  ஆதாரம் இல்லை என்று உளறினாரே.
 
4.முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நடந்தது. - முஸ்லிம்களுக்கு இனச்சுத்திகரிப்பு நிகழ்ந்தது. வரலாற்று ரீதியாக தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இனம் ஒன்று ஓரிரவுக்குள் ஆயுதமுனையில் இருந்து அவர்களுக்கும் உரிய தாயகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது இனச்சுத்திகரிப்புத்தான்.

முதலாவது முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஏன் என்றால் 
இலங்கை முழுவதும்  இந்து நாகரீகத்தை மையமாக கொண்டது (உதாரணமாக  சைவம் பௌத்தம்) ஆனால் அரபு மொழியை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை மையமாக கொண்டது இல்லை. எனவே முஸ்லிம்கள்  வந்தேறு குடிகள் பூர்வீக குடிகள் இல்லை. அப்படியாயின்  பூர்வீகக் குடிகளான தமிழருடைய எண்ணத்துக்கு அமைய தான்   வாழ வேண்டும், அதமிசரை அவர்களது சொந்த பூமியில் இருந்து அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது.அப்படி போனபடியால் தான்  தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி புல்களால் வெளியீற்றப்பட்டனர். அப்படி இல்லாவிடில் இப்பொழுது நல்லூரில் தேருக்கு பதிலாகா அல்லா க்கு அக்பர் தான் கேட்டு இருக்கும்.

1 hour ago, வாலி said:

5. முஸ்லிம்களிடம் சரணகதி அரசியல் நடத்துவது. - இலங்கைத்தீவில் தமிழருக்கான தீர்வு வரும்போது முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு ஒருபோதும் தீர்வுகாணமுடியாது. கூட்டமைப்பு ஒருபோதும் சரணாகதி அரசியல் நிகழ்த்தவில்லை. அவ்வாறு பேசப்படுமானால் முள்ளிவாய்க்காலில் தமிழரை ஏக பிரதிநிதித்துவப்படுதியவர்கள் சரணடைந்தபோது தமிழர்கள் சிங்களவரிடம் சரணடைந்து விட்டதாகவே கொள்ளப்படும். 

பிரச்சனை  தமிழனுக்கும் சிங்களவனுக்கும் மட்டும் தான், இடையில் வந்து வேடிக்கை பார்த்தவன் எல்லாம் பங்கு கேட்க  முடியாது.  அதே போல் புலிகள் சரணடைந்ததுக்கு  காரணம் கிட்டத்தட்ட 50 நாடுகள்  மலையாளி கும்பலுடன்  சேர்ந்து நடத்திய போர் , சிங்களவன் தனியாக வந்திருதால்  நிச்சயமாக அந்த நிலை வந்திருக்காது அதே போல் அப்படி எல்லாரும் சேர்ந்து அடித்தும்  3 வருடங்கள் தனியாக் போராடி இறுதியல் அனந்தபுரத்தில் இரசாயன் ஆயுத்தங்கள் பாவித்து தான் அவர்களை தோல்வி நிலைக்கு தள்ள முடிந்தது.

1 hour ago, ஜீவன் சிவா said:

விக்னேஸ்வரன் VS தமிழர்.
       6-0, 7.6, 0-6, 0-6, 1-5
செற்றை வெண்டாகணும் தலைவா.

6-0 மாகாணசபை தேர்தல்
7.6 பொறுப்பற்ற நிர்வாகம், பிதற்றல்கள். கடைசி சுற்றில் அனந்தியின் முரண்பாட்டால் வெற்றி
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், பாராளுமன்ற தேர்தல் குழறுபடிகள்.
0-6 பொறுப்பற்ற நிர்வாகம், மக்களவை பிதற்றல்கள்.
1-5 உருப்படியாக ஒரு நல்லிணக்க கருத்து.

தலைவா எப்படியாவது கடைசி செற்றை வென்றிடு.

அப்படி சொல்ல முடியாது ,இவை அனைத்தும் கூட்டமைப்பு கூத்தாடிகள் தம்மை எதிர்த்து நிக்கும் விக்கி ஐயாவுக்கு எதிராக வைக்கும் ஆதாரம் அற்ற  வசைபாடல்கள்.

அவரை  எலி என்று நினைத்தார்கள் ஆனால் அவரோ  ஒரு புலி என்று இப்பொழுது தான் விளங்கியது. அதனால் தான் கூத்தாடி அமைப்பால் இந்த ஓலம்.

அதை விட முஸ்லிம்கள் தமிழார் நிலம் 16000 ஏக்கரை கொள்ளை அடித்த போது சம் -சும்  என் வாயை மூடி இருந்தனர். ஆனால் முதலமைச்சர் அவர்கள்  ஜனாதிபதியிடம் இந்த பிரச்சனை பற்றி பேசியிருந்தார். 

முஸ்லிம் தமிழார் நிலத்தை கொள்ளை அடிக்கும் போதும் சும்மா இருக்கும் அளவுக்கு சரண்டர் பூல் உள்ளது.

23 minutes ago, Dash said:

முதலாவது முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து இருக்க சாத்தியம் இல்லை. ஏன் என்றால் 
இலங்கை முழுவதும்  இந்து நாகரீகத்தை மையமாக கொண்டது (உதாரணமாக  சைவம் பௌத்தம்) ஆனால் அரபு மொழியை அல்லது இஸ்லாமிய கலாச்சாரத்தை மையமாக கொண்டது இல்லை. எனவே முஸ்லிம்கள்  வந்தேறு குடிகள் பூர்வீக குடிகள் இல்லை. அப்படியாயின்  பூர்வீகக் குடிகளான தமிழருடைய எண்ணத்துக்கு அமைய தான்   வாழ வேண்டும், அதமிசரை அவர்களது சொந்த பூமியில் இருந்து அழிக்கும் நடவடிக்கைகளுக்கு துணை போகக் கூடாது.அப்படி போனபடியால் தான்  தமிழ் மக்களின் பாதுகாப்பு கருதி புல்களால் வெளியீற்றப்பட்டனர். அப்படி இல்லாவிடில் இப்பொழுது நல்லூரில் தேருக்கு பதிலாகா அல்லா க்கு அக்பர் தான் கேட்டு இருக்கும்.

பிரச்சனை  தமிழனுக்கும் சிங்களவனுக்கும் மட்டும் தான், இடையில் வந்து வேடிக்கை பார்த்தவன் எல்லாம் பங்கு கேட்க  முடியாது.  அதே போல் புலிகள் சரணடைந்ததுக்கு  காரணம் கிட்டத்தட்ட 50 நாடுகள்  மலையாளி கும்பலுடன்  சேர்ந்து நடத்திய போர் , சிங்களவன் தனியாக வந்திருதால்  நிச்சயமாக அந்த நிலை வந்திருக்காது அதே போல் அப்படி எல்லாரும் சேர்ந்து அடித்தும்  3 வருடங்கள் தனியாக் போராடி இறுதியல் அனந்தபுரத்தில் இரசாயன் ஆயுத்தங்கள் பாவித்து தான் அவர்களை தோல்வி நிலைக்கு தள்ள முடிந்தது.

அப்படி சொல்ல முடியாது ,இவை அனைத்தும் கூட்டமைப்பு கூத்தாடிகள் தம்மை எதிர்த்து நிக்கும் விக்கி ஐயாவுக்கு எதிராக வைக்கும் ஆதாரம் அற்ற  வசைபாடல்கள்.

அவரை  எலி என்று நினைத்தார்கள் ஆனால் அவரோ  ஒரு புலி என்று இப்பொழுது தான் விளங்கியது. அதனால் தான் கூத்தாடி அமைப்பால் இந்த ஓலம்.

அதை விட முஸ்லிம்கள் தமிழார் நிலம் 16000 ஏக்கரை கொள்ளை அடித்த போது சம் -சும்  என் வாயை மூடி இருந்தனர். ஆனால் முதலமைச்சர் அவர்கள்  ஜனாதிபதியிடம் இந்த பிரச்சனை பற்றி பேசியிருந்தார். 

முஸ்லிம் தமிழார் நிலத்தை கொள்ளை அடிக்கும் போதும் சும்மா இருக்கும் அளவுக்கு சரண்டர் பூல் உள்ளது.

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்கள். ஜீனியஸ்தான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை நான் கூறமுனையவில்லை. ஆனால் சிங்களத்துக்கு நிகராகப் புலிகளும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அதனால்தான் நியமான விடுதலைப் போராட்டம் பன்னாட்டு சமூகத்தினால் பரங்கரவாதமாகப் பார்க்கப்பட்டு அழிக்கப்பட்டது.

ஏன் சம்பந்தன் விலகவேண்டும். புலிகள் தாங்கள்மட்டுதான் சமர்த்தியசாலிகள் தமது தலைவர் மட்டும்தான் தீர்க்கதரிசனம் மிக்கவர் என கனவில் மிதந்து செயற்படவும் செய்தனர். சம்பந்தரையும், கூட்டமைப்பின் மற்ற கடைகளில் உள்ளவர்களையும் போட்டுத்தள்ளவும் புலிகள் முயன்ற காலம் ஒன்றும் இருந்தது. நேரடியாக எல்லாக் கட்சிகளையும் தமது தேவைக்குப் பயன்படுத்த் புலிகள் முயன்றனர். ஆனால் முடிவு பாதமாகிவிடவே சம்பந்தன் அடங்கிப்போனது அவருக்கே வாய்ப்பாக அமைந்தது. இது எல்லாம் அரசியலில் "கிவ் அண்ட் டேக்" விளையாட்டு. அதில் சம்பந்தர் பொறுத்தார், பின்னர் நடந்தது உலகறியும். புலிகள் இப்போது இலங்கைஅரசியலில் செல்லாக் காசு. புலிகளின் முன்னைய செயற்பாடுகளுக்கும் கூட்டமைப்புக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

சுமந்திரன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் தெளிவாகவே சொல்லி இருக்கின்றார்.  

இலங்கையில் தமிழ் பேசும் முஸ்லிம்கள் அரபு தேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் அல்லர். ஒரு சிலர் அரேபிய வியாபாரிகளை மணமுடித்து இருந்தனர். பெரும்பான்மையானோர் இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்ட தமிழர்களே. மத்திய மகாணத்தில் வாழும் முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய தமிழகம் மற்றும் கேரள முஸ்லிம்கள். இலங்கையின் பலபாகங்களிலும் உருது பேசும் "பாய்" முஸ்லிம்களும், குஜராத்தின் "போரா" முஸ்லிம்களும், மலாய் முஸ்லிம்களும் சிறியளவில் வாழ்கின்றனர். பொதுவாக அனைவருமே தமிழ் மொழியினை அறிந்திருப்பர்.

இங்கு இலங்கை முழுவதும் இந்து நாகரிகத்தை மையமாகக் கொண்டது என எழுதி அதற்குள் பௌத்தத்தினையும் சைவத்தினையும் உதாரணமாகக் காட்டியிருக்கின்றீர்கள். இலங்கை முற்று முழுக்க பௌத்த பின்னணியைக் கொண்ட நாடு, இலங்கையின் ஆதித் தமிழ்க் குடிகள் சமணராகவோ அல்லது பௌத்தராகவோதான் இருந்தார்கள். இலங்கையை நோக்கிய இரண்டு தென்னிந்திய குடியேறங்கள், சேனன்-குத்திகன் காலத்திலும் எல்லாளனின் காலத்திலும் நிகழ்ந்திருக்கின்றன. இந்தக் காலகட்டங்களிலேயே சைவசமயம் இலங்கக்குள் வந்திருக்கவேண்டும். அத்துடன் சாதியமும் வந்திறங்கியது. அதுவரை இலங்கையின் பூர்வீகக்குடிகள் பள்ளரும், பறையருமே! இதன் தொடர்ச்சியாகவே இஸ்லாமும், கிறிஸ்தவமும் இலங்கைக்குள் பரவின.

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

Edited by வாலி

43 minutes ago, வாலி said:

சிங்களம் .......... இலங்கைக்குள் பரவின.

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

இப்ப எனக்கு பச்சை போட்டாகணும்.

Bilderesultat for பச்சை

போட்டுட்டேன்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வாலி said:

இலங்கையில் முஸ்லிம்களை புறந்தள்ளிவிட்டு தமிழர் தரப்புக்கு மட்டும் ஒருபோதும் தீர்வுவராது. 

யார் இவர்களை புறக்கணிக்க சொன்னார்கள் ....அவர்கள் அவர்கள் தீர்வுக்கு உழைக்கட்டும் அது அவர்களது சொந்த விடயம். பழம் கனிவதும் அழுகுவதும் நமக்கு வேண்டாமே   ...நாம் எமது தீர்வுக்கு ஆகவேண்டியதை பார்ப்போம் 
உந்த அண்ணன் தம்பி வேஷமும் ....மூஞ்சுறு தான் போக வழியில்லாமல் இருக்கைக்க விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு போக வேண்டாம் என்று தான் சொல்கிறோம்... 

  • கருத்துக்கள உறவுகள்

சித்தார்த்தன் (புத்தர்) பிறப்பால் இந்து தானே. அவரை வழிபடுவதில் ஒரு இந்துவுக்கு பிரச்சனை இல்லை.

சொறிலங்காவில் தமிழர்கள் எதுக்கு போராட்டம் நடத்தினார்கள் என்ற அறிவில்லாதவர்கள் எல்லாம் முன்னாள் போராடப் போனவை என்ற முத்திரையோடு திரியினம். அதுதான் வேடிக்கையாக உள்ளது.

தமிழர்களின் போராட்டம்.. சிங்கள பெளத்த பேரினவாத அடக்குமுறை ஆக்கிரமிப்பு அதிகாரப்பறிப்பு.. இன அழிப்புக்கு.. சிங்கள மயமாக்கத்திற்கு.. எதிரானதே தவிர... புத்தருக்கு.. பெளத்த மதத்துக்கு.. சிங்கள இனத்துக்கு.. எதிரானதல்ல.

புலிகள் ஒரு புத்த கோவிலையும் தகர்க்கவில்லை. தலதா மாளிகை தாக்குதல்.. மாவீரர் துயிலும் இல்லங்கள் மீதான சிங்கள பெளத்த பேரினவாத மிலேச்சத்தனத்துக்கு கொடுக்கப்பட்ட ஒரு அடையாள பதிலடி மட்டுமே ஆகும்.

---

இங்கு சிலருக்கு தெரியவில்லை.. சொறிலங்காவில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தான் அதிக முஸ்லீம்கள் வசிக்கிறார்கள் என்று. ஆனால் அங்கெல்லாம்.. அவைக்கு தனி அலகு தேவைப்படவில்லை. மாறாக வடக்குக் கிழக்கில் தேவைப்படுகுது. மலையக தமிழ் மக்களுக்கு தனி அலகு கொடுக்கும் போது முஸ்லீம்களுக்கும் கொடுப்பது குறித்து சிந்திக்கலாம்.

முஸ்லீம்களை முன்னிறுத்தி எல்லாத்தையும் குழப்பி அடிக்க நினைக்கும் எம்மவர் போக்கிரிகள் சில.. சொறீலங்காவின் பொருண்மிய முதுகெலும்புகளில் ஒன்றாக இருக்கும் உழைக்கும் வர்க்கமான மலையக தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பில் மூச்சும் விடுவதில்லை. இத்தனைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட மலையக இளைஞர்கள்.. விடுதலைப் போராட்டத்தில் இணைந்து உயிர் தியாகம் செய்துள்ளனர். இது முஸ்லீம்கள் அளித்த பங்களிப்பை விட பல மடங்கு அதிகம். முஸ்லீம்கள் காட்டிக்கொடுத்து சந்தர்ப்பவாதிகளாக சிங்களவனை தாஜா பண்ணி.. வாழ்ந்தது தான் அதிகம். tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2016 at 10:58 PM, ஜீவன் சிவா said:

எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்கள். ஜீனியஸ்தான்

யோசிக்கிறதுக்கு ஜீனியஸ் ஆக இருக்கவேண்டியதில்லை. அதுக்கு மண்டையில கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால்  மட்டும் போதுமே..

Edited by Eppothum Thamizhan

  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2016 at 5:32 AM, Eppothum Thamizhan said:

யோசிக்கிறதுக்கு ஜீனியஸ் ஆக இருக்கவேண்டியதில்லை. அதுக்கு மண்டையில கொஞ்சமாவது பொது அறிவு இருந்தால்  மட்டும் போதுமே..

மாற்றி சொல்லி விட்டீர்களே?

நீங்கள் எழுதியது போல யோசிப்பதற்கு மண்டையில் என்ன இருந்தாலும் அந்த பொது அறிவு மட்டும் இல்லாமல் போனாலே சாத்தியம்!! இப்படி பொது அறிவு மட்டும் இல்லாமல் இருப்பவர்களும் அபூர்வமான "ஜீனியஸ்" வகை என்ற அடிப்படியில் அவர் எழுதி இருப்பதாகவே தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.