Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு தமிழ்கடை முதலாளிகள்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

420598_10151535585107226_961096635_n.jpg

தொழில் ---- முதலாளி
பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு )
சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள்
வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை
பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது
வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள்
எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள்
தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள்
வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன்
ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன்
customers ------ எப்பவும் காசாகவே குடுப்பவர்கள் ,( கார்ட் வேண்டாம்)
rice ------ பூநகரி கைகுத்தல் என்று கேரளா rice கொடுப்பது
ஆட்டு இறைச்சி----- செம்மறியோ ,மரியாடோ எல்லாம் விற்கப்படும்
ஊர் கோழி இறைச்சி ---- முட்டை போட்ட வயதான கோழிகளை தமிழ் சனத்துக்கு ஏமாத்தி விற்பது
மரக்கறி ------ அழுகும் வரை விற்கப்படுவது
காசு வாங்குபவர் ------- கடை போனில் இலங்கை or இந்தியாக்கு போனில் கதைத்து கொண்டு பில் போடுபவர்
மீன் பக்கட்----- ஆப்ரிக்க கடலில் பிடித்த மீனை யாழ்ப்பாணத்தில் பிடித்ததாக காட்டும் (லேபில் )
காலாவதி திகதி ------ அழுகும் வரை , வாடும் வரை , மணக்கும் வரை
சம்பளம் ------ திட்டி திட்டி கொடுப்பது
மது பானம்----- தமிழில் கதைத்தால் 24 மணிநேரமும் வாங்கலாம்
மனைவி ------- சம்பளம் இல்லாத தொழிலாளி
வீடு ........------ கமராவில் கடை தொழிலாளர்களை பார்க்கும் இடம்
தமிழ் ரவுடிகள் ----- களவு எடுத்த சாமான்களை அரை விலையில் குடுப்பவர்கள்
நெல்லி கிரஸ்------- 1987 இல் தரை மட்டமாக்கிய தோலைக்கட்டி பேரில் இருப்பது
தேங்காய் ---- 5 வாங்கினால் 2 அழுகி இருப்பது
hollyday ,போனஸ்,sick , பிள்ளைபேறு ------ அப்படி எந்த லீவும் எங்களிடம் இல்லை
குறிக்கோள் ------ பணம் மட்டும் (not family )

ஆக்கம் === பிரகாஷ் uk

  • கருத்துக்கள உறவுகள்

மேலேயுள்ள அவ்வளவு பாவங்களைக் கழுவவும், எப்போதாவது உறுத்துகின்ற மனச்சாட்சியைச் சமாதானப் படுத்தவும் உதவுபவை... தமிழ்த் தெய்வங்களும், அவர்களின் பெயரில்... வயிறு நிறைந்தவர்களுக்குக் கொட்டப்படும் அன்னதானங்களும் தான் .!

Edited by புங்கையூரன்

இதனால்தான் இவர்கள் முதலாளி.  மேலும் பணத்துடன் பல வருத்தங்களையும் சேர்த்து வாழ்பவர்கள்.  பணம்.... பணம்..... என்று  கடசியில் வாயைப் பிழந்து கிடப்பவர்கள்.

அப்பிடியே இந்த தமிழ் புறக்கிராசி கூட்டத்தையும் ஒரு பிடி பிடியப்பா பிரகாஸ் கோடி புன்னியம்.

  • கருத்துக்கள உறவுகள்

எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள்

இதை நானும் சிலவருடங்கள் மனசாட்சிக்கு விரோதமாக செய்யவேண்டி ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலும் உண்மை.

இப்புடியே பிரக்கிராசியள், பிரக்கிராசியில்லாமலே விக்கிப்பீடியா அறிவோட இமிகிரேசன் அட்வைஸ் கொடுக்கிற கள்ளப் பிரக்கிராசியள், சீமா 1 ஓட எக்கவுண்டன் எண்டு பில்டப் கொடுக்கிற ஆக்கள், சட்டவிரோத பெண்சிசுக் கொலை வைத்தியர்கள், முருகனுக்கு குத்தின அலகை சித்திரவதை என்று பொய்ரிப்போர்ட் குடுக்கிற டாக்குத்தர்மார், மோர்ட்கேஜ் ஏஜெண்ட் எண்டு கள்ள டொக்குமெண்ட் செய்து பாக்ங்கை சுத்துற ஆக்கள், கோயில் வளர்த்து காசு பாக்கும் கூட்டம், தமிழ் பள்ளி நடத்தி காசு பார்க்கும் கூட்டம், நேரடியாகவே போதை பொருள் கடத்தும் கூட்டம், கிழக்கைரோப்ப பெண்களை வைத்து விபச்சாரம் செய்யும் கூட்டம், எல்லாவற்றுக்கும் அப்பால் புலம்பெயர் தமிழரின் ஆஸ்தான தொழிலாலன கள்ள மட்டை எல்லாத்துக்கும் ஒரு பயோடேட்டா போடய்யா பிரகாசு.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

வணக்கம் கோசான் அண்ணை 
கன காலத்திற்கு பிறகு ,,,,,,சுகமாய் இருக்கிறீர்களா ......?
அண்ணை நம்மட ஊரிலையும் 2008 இல கள்ள போலிஸ் என்ட்ரி எடுத்து (இயக்கம் சுடத்தேடுது என்று ) லண்டன் போன ஒருத்தர் 
இப்ப ஊரில முக்கால்வாசி பகுதியை வாங்கிவிட்டார் ....80 களில் லண்டன் போன ஒருவரும் இருக்கிறார் அவர் தனது மக்கள்களை டாப் யுனியில் 
படிப்பிச்ச என்ற பெயரை தவிர வேறேதும் சொல்லிகொள்ளும் அளவுக்கு இல்லை (இங்கே ஒரு குண்டூசி நிலம் கூட இல்லை)......சமீபத்தில் இவரை சந்தித்த போது 2008 இல் போனவரை பற்றி விசாரித்தேன் அப்போ அவர் கடும் கள்ளமட்டை என்று சொன்னார் ....ஆள் அவசரத்தில் இருந்ததால் கனக்க கதைக்க முடியவில்லை ....அண்ணை அதென்ன கள்ளமட்டை ..உது credit card விளையாட்டு என்று தெரியும் ஆனால் மாட்டுபடாமல் எப்படி சுத்துகிறார்கள் ....? என்னென்ன ஜில்மாட் வேலைகள் எல்லாம் பார்கிறார்கள் என்று கொஞ்சம் தெளிவாக சொன்னீர்கள் என்றால் நாங்களும் அறிந்து கொள்ளுவோம் ....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்னி,

கனநாளுக்கு பிறகு கண்டது சந்தோசம்.

என் அனுபவத்தில் புலத்தமிழர்கள் 70% ஏதோ ஒரு வகை திருட்டை செய்து வாழ்கை ஓட்டுபவர்களாயே இருக்கிறார்கள். நான் மேற்சொன்ன வகை மட்டுமில்லை. வட்டிக்கு கொடுப்பது, 16 மணிதான் வேலை செய்கிறேன் எனப் பொய்கணக்குக் காட்டியபடி இலவச வீடு அரச உதவிப் பணம் பெற்றபடி 24/7 டாக்ஸி ஓட்டுவது. இப்படி வகை தொகை, எண்ணிக்கை இல்லாமல், புது புதுப் வகைகளில் நூதனத்திருட்டு.

லிஸ்ட் போட்டால் தலை சுத்தும்.

அநேகமாய் பெற்றோல் செட்டில் வேலை செய்பவர்கள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலும் இந்த மட்டை மூலம் முன்வந்த மகராஜாக்கள். இதுக்கு ஓக்ஸ்போர்ட்டில் படித்த ஒரு புரோகிராமிங் தமிழ் மண்டைகாயும் உதவி.

மட்டை போடுதலை புலத்தமிழர்கள் பல பரிணாம வளர்சியோடு நகர்த்தி, டார்வினின் கொள்கையை நிறுவி உள்ளார்கள்.

ஆரம்பத்தில் பின் நம்பர் இல்லாத காலத்தில் மட்டை எல்லா நாட்டுக்காரரும் போட்டார்கள். போலீஸ் நடைமுறைகளை இறுக்கிய பிறகு பின் வந்தது. தமிழர்கள் அதற்கேற்ப மாறி தாங்களும் அட்டைகளை புரோகிராம் செய்து களவெடுத்தார்கள்.

பிறகு தாமே மட்டைகளை clone செய்தார்கள்.

எப்பவும் பொலீசிக்கு ஒரு படி முன்னே நின்று தக்கணப் பிழைக்கிறார்கள்.

இந்த கள்ள மட்டை கோஸ்டிகள் பின் தூள்கடத்தல், வீடுமனை, விபச்சாரம் என மட்டைக்காசை பல்நோக்கு முதலீடு செய்தார்கள்.

இப்படி சிறுக சிறுக, "உழைத்து" சேர்த்தபணத்தை உடையோரைதே "மட்டைக்காரர்" என வியந்து போற்றுகிறது தமிழ்கூறும் நல்லுலகு.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள கூத்துக்கள் அனைத்தும் எந்த நாட்டில் நடந்தாலும் அந்த நாட்டு பொலிசுக்கு முழுவதும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தமிழ் சிங்களம் ஆங்கிலம பிரேஞ்சு என்று எதுவுமில்லை

வியாபாரம் என்றாலே இப்படியாகிவிட்டது...

பணத்துக்கும் பொருளாதாரத்துக்கும் முன்னுரிமை கொடுக்கத்தொடங்கிய ஒரு சமூக அமைப்பில் தான் பிரச்சினையே ஆரம்பம்.

மற்றதெல்லாம் அதனுடன் சேர்ந்தோடுவது மட்டும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வணக்கம் அக்னி,

கனநாளுக்கு பிறகு கண்டது சந்தோசம்.

என் அனுபவத்தில் புலத்தமிழர்கள் 70% ஏதோ ஒரு வகை திருட்டை செய்து வாழ்கை ஓட்டுபவர்களாயே இருக்கிறார்கள். நான் மேற்சொன்ன வகை மட்டுமில்லை. வட்டிக்கு கொடுப்பது, 16 மணிதான் வேலை செய்கிறேன் எனப் பொய்கணக்குக் காட்டியபடி இலவச வீடு அரச உதவிப் பணம் பெற்றபடி 24/7 டாக்ஸி ஓட்டுவது. இப்படி வகை தொகை, எண்ணிக்கை இல்லாமல், புது புதுப் வகைகளில் நூதனத்திருட்டு.

லிஸ்ட் போட்டால் தலை சுத்தும்.

அநேகமாய் பெற்றோல் செட்டில் வேலை செய்பவர்கள் வைத்திருப்பவர்களில் பெரும்பாலும் இந்த மட்டை மூலம் முன்வந்த மகராஜாக்கள். இதுக்கு ஓக்ஸ்போர்ட்டில் படித்த ஒரு புரோகிராமிங் தமிழ் மண்டைகாயும் உதவி.

மட்டை போடுதலை புலத்தமிழர்கள் பல பரிணாம வளர்சியோடு நகர்த்தி, டார்வினின் கொள்கையை நிறுவி உள்ளார்கள்.

ஆரம்பத்தில் பின் நம்பர் இல்லாத காலத்தில் மட்டை எல்லா நாட்டுக்காரரும் போட்டார்கள். போலீஸ் நடைமுறைகளை இறுக்கிய பிறகு பின் வந்தது. தமிழர்கள் அதற்கேற்ப மாறி தாங்களும் அட்டைகளை புரோகிராம் செய்து களவெடுத்தார்கள்.

பிறகு தாமே மட்டைகளை clone செய்தார்கள்.

எப்பவும் பொலீசிக்கு ஒரு படி முன்னே நின்று தக்கணப் பிழைக்கிறார்கள்.

இந்த கள்ள மட்டை கோஸ்டிகள் பின் தூள்கடத்தல், வீடுமனை, விபச்சாரம் என மட்டைக்காசை பல்நோக்கு முதலீடு செய்தார்கள்.

இப்படி சிறுக சிறுக, "உழைத்து" சேர்த்தபணத்தை உடையோரைதே "மட்டைக்காரர்" என வியந்து போற்றுகிறது தமிழ்கூறும் நல்லுலகு.

நெஞ்சை நிமிர்த்தி உரத்துச் சொல்வேன் இந்த 70% நானும் என் குடும்பமும் இல்லை.
கோஷன் சொன்ன மிகுதி 30% வீதத்தில் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பதில் பரம சந்தோசம்.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, விசுகு said:

இதில் தமிழ் சிங்களம் ஆங்கிலம பிரேஞ்சு என்று எதுவுமில்லை

வியாபாரம் என்றாலே இப்படியாகிவிட்டது...

பணத்துக்கும் பொருளாதாரத்துக்கும் முன்னுரிமை கொடுக்கத்தொடங்கிய ஒரு சமூக அமைப்பில் தான் பிரச்சினையே ஆரம்பம்.

மற்றதெல்லாம் அதனுடன் சேர்ந்தோடுவது மட்டும் தான்...

எனக்கு இதில் உடன்பாடு இல்லை விசுகு ஐயா.

மேற்கூறிய அனைத்தும் தமிழர்களுக்கே பொருந்தும்.  

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Sasi_varnam said:

நெஞ்சை நிமிர்த்தி உரத்துச் சொல்வேன் இந்த 70% நானும் என் குடும்பமும் இல்லை.
கோஷன் சொன்ன மிகுதி 30% வீதத்தில் உள்ளவர்கள் பட்டியலில் இருப்பதில் பரம சந்தோசம்.

அவரது கணிப்பு வியாபாரிகளில் 70% ஆக  இருக்கலாம்  சசி

ஆனால் புலம் பெயர் தமிழர்கள் என்று பார்த்தால்

அவர்களுக்கு புலம் பெயர் தேச அரசுகளில் பெரும் நன்மதிப்பே உள்ளது.

எமது அடுத்த சந்ததிக்கு அது பெரும் பயன்தருகிறது...

11 minutes ago, colomban said:

எனக்கு இதில் உடன்பாடு இல்லை விசுகு ஐயா.

மேற்கூறிய அனைத்தும் தமிழர்களுக்கே பொருந்தும்.  

அண்மையில் ஒரு உறவு 

25 வருடங்களாக ஒரு பிரெஞ்சு முதலாளியிடம்  வேலை செய்து 

வேலையை விட்டு நீக்கப்படும் போது கொடுக்கவேண்டிய பணத்தை 12 செக்களாக பெற்றுக்கொண்டு வந்து

ஏமாற்றப்பட்டதால் வழக்குக்கு  சென்றபோது

அந்த வேலை சம்பந்தமான நீதிமன்றில் அவரிடம் கூறப்பட்ட விடயம்

எங்களிடம் இவ்வாறு வரும் ஏமாற்றவழக்குகளில் 85 வீதம் தமிழர்களுடையது தான் வருகிறது.

காரணம் அவ்வளவு விசுவாசம். நம்பிக்கை. அவற்றை முதலாளிகள் பாவித்துவிடுகிறார்கள் என்று.

அகதிகளாக வந்து மொழி தெரியாமல் விசுவாசமாக வேலைசெய்யும் இவர்களை எம்மவர்கள் ஏமாற்றுவது மிகவும் துயரமானது என்று.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

எனக்கு இதில் உடன்பாடு இல்லை விசுகு ஐயா.

மேற்கூறிய அனைத்தும் தமிழர்களுக்கே பொருந்தும்.  

கொழும்பான் வாழ்க்கையில தெரிஞ்சு கொள்ள நெறையவே இருக்கு.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புறிய செல்வோரை அரபுக்காரன் எப்படி ஆட்டிப்படைகிறான் என்பதை நாங்கள் அறிவோம்.  இங்கே அப்படி அல்ல, அவனவன் அவனவனுக்கு கைதேர்ந்த கலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருப்பான். 
இங்கே சீக்கியர் முதல், சிங்களவர் வரை
பாக்கிஸ்தானி முதல்  பாலஸ்தீனியன் வரை 
அயர்லாந்துக்காரன் முதல் ஆப்கானிஸ்தான் காரன் வரை
ஆக மொத்தம் வெள்ளையன் முதல் கருப்பன்வரை
ஒரு கொஞ்ச பேர் இந்த இந்த மாதிரியான முறை கேடான வேலைகள தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருப்பார்கள் , இதில் தமிழர் ஒன்றும் விதி விலக்கல்ல.
இவர்களில் கொஞ்ச பேர் நொந்து போன தமிழனையே தேசியம் என்ற பெயரில் குறி வைகிறார்கள்.

கனேடிய பாராளுமன்ற செனட்  சபையில் இருந்த மைக் டாப்பி, பர்மேலா வாலின், இன்னும் கொஞ்ச பேர் பொய்யான கணக்கு வழக்குகளை காட்டி அரசாங்க பணத்தை கையாடி கோர்ட்டு, கேஸு என்று இன்னும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி எத்தனையோ தில்லாலங்கடி இருக்கு கொழும்பான்.
நமக்கென்னவோ கண்ணில் படுவது "புலம் பெயர் ~ ஈழத்து தமிழரின்" ஜில்மால் மட்டும்தான்.
அதற்காக அவர்கள் செய்வது சரி என்று மட்டும் நான் சொல்ல வரவில்லை.
அவர்கள் பத்தோடு பதினொன்று மட்டுமே. 
மற்றையவர்கள் எல்லாம் புனிதர்கள் என்ற உங்கள் விம்பம் தவறானது.

3 hours ago, colomban said:

எனக்கு இதில் உடன்பாடு இல்லை விசுகு ஐயா.

மேற்கூறிய அனைத்தும் தமிழர்களுக்கே பொருந்தும்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில வேடிக்கை என்னவென்றால்.. 99% வெளிநாட்டு தமிழர்கள்.. பிற தமிழர்களின் கள்ளம் கபடம் அறிந்தும்.. தெரிந்தும்.. தெரியாமலும்.. தமக்குள் மறைச்சு வைச்சுக் கொண்டு தமிழர்களை தமிழர்கள் சந்திக்கும் போதுதான் இப்படி சந்தர்ப்பம் அமைச்சு திட்டித் தீர்த்துக் கொண்டு.. நான் அவனை விட திறம் என்ற ஒரு போலி முகத்திரையை போர்த்திக் கொள்ள விளைகின்றனர்.

இவ்வளவு தவறு செய்யும் போது அதனை தட்டிக்கேட்கவோ.. திருத்தவோ.. சம்பந்தட்ட அதிகார மையங்களில் முறையிடவோ.. நிர்வாக மையங்களில் முறையிடவோ.. முனையாதது கூட.. இவ்வளவு கேடுகெட்ட செயலுக்கும் இங்கு வெள்ளாந்திங்க என்று தம்மை போலியாகக் காட்ட நினைக்கும் தமிழர்களும் உடந்தை ஆவர். அது புரியாமல்.. சிலர்.. பிரகாஷ்க்கு வகுப்பெடுக்கினம். 

என்னே நாடகமடா... நடக்குது இங்கு. tw_blush::rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.

இவற்றை அதிகாரிகளிடம் சொல்லிக்கொடுத்தா நம்மை "துரோகி" என்றும் அழைப்பார்கள்.

போதை கடத்தல் மன்னர்களுக்கே தமிழன் எண்டு ஆதரவு கொடுத்த ஆக்களாச்சே நாம்.

சும்மா பட்டியல் போடவும் அதை பதியவும்தான் நாம் லாயக்கு.

யார் கண்டது பிரகாசே கூட இதை மட்டைக் காசில் வாங்கிய லேப்டொப்பில் தான் தட்டி இருக்கலாம் ???

பிகு: வெட்டி ஒட்டியபரை பற்றி நான் ஏதும் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போராளியை காட்டிக்கொடுத்தால் துரோகி.. கொடுமை பண்ணுறவனை கள்வனை.. களவாணியை.. காட்டிக் கொடுத்தாலும்.. துரோகி என்பாய்களாம்.. அப்படின்னு வெள்ளாந்தி தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ள விரும்புவர்கள் தம்மை போர்வையால் போர்த்திக்க விளைகின்றனர்.:rolleyes:tw_blush:

பிகு: வெட்டி ஒட்டினவர் 99% தமிழரில் அல்ல. 1% தமிழரில். கண் முன்னால.. அநியாயம் நடந்தால்.. ஆதாரம் கிடைத்தால்.. அது போய் சேர வேண்டிய இடத்தில் சேரும்.  tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் கேட்டுகோங்கப்பா,

அண்ணர் இருக்கப்போய்த்தான் மழையே பெய்யுது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி மழை பெய்யிதுன்னு.. தெரிஞ்சுக்கிட்டிங்கல்ல.. கிளம்புங்க.. வெள்ளாந்தி வேசம் போட்டது காணும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உண்மைதான்.

இவற்றை அதிகாரிகளிடம் சொல்லிக்கொடுத்தா நம்மை "துரோகி" என்றும் அழைப்பார்கள்.

போதை கடத்தல் மன்னர்களுக்கே தமிழன் எண்டு ஆதரவு கொடுத்த ஆக்களாச்சே நாம்.

சும்மா பட்டியல் போடவும் அதை பதியவும்தான் நாம் லாயக்கு.

யார் கண்டது பிரகாசே கூட இதை மட்டைக் காசில் வாங்கிய லேப்டொப்பில் தான் தட்டி இருக்கலாம் ???

பிகு: வெட்டி ஒட்டியபரை பற்றி நான் ஏதும் சொல்லவில்லை என்பதை கவனிக்கவும்.

ஐயா சந்தடி சாக்கில் நீங்கள்தான் இறைவன் என்ற நினைப்பில் 
எடுத்துவிடாதீர்கள் 

போதைபொருள் கடத்தல் சரி என்று யாரும் சொல்லவில்லை.

இன்னதுக்கு இன்ன தண்டனை என்று ஏற்கனவே அந்த அந்த நாட்டு சட்டங்களில் இருந்தது 

இந்தோனேசியா மீது அவுஸ்த்ரேலியா கொண்டுவந்த 
கெடுபிடிகளின் பின் 
அது வெறும் பழிவாங்கலாகவே மரண தண்டனை கொடுக்கபட்டது.

அடிமுதல் என்ன நடந்தது என்று தெரிந்தவர்கள் 
மனிதாபிமான அடிப்படியில் குரல் கொடுத்தார்கள் 

நுனிப்புல் மேய்ந்து விட்டு எது வேண்டுமானலும் பேசலாம்.
 இது பற்றி மேற்கொண்டு எந்த  கருத்தையும் நான் வைக்க மாட்டேன் 

ஒரு கருத்துகளத்தில் இது மிகவும் ஒரு கீழ்த்தரமான செயல் 
என்னுடைய கருத்தை ஒருவர் சாடினால் கருத்தை வைத்தவன் என்ற பொறுப்பில் 
அதற்கான விளக்கம் என்னால் தரப்பட வேண்டும்.

ஆனால் வீண் விரண்டா விவாதங்களில் இருந்து ஒதுங்கி 
நேரத்தை மீதிபடுத்த விரும்புகிறேன். 
தவிர நிர்வாகத்தினருக்கு தொடர்ந்தும் இடையுறு கொடுப்பதில் இஸ்டம் இல்லை.

ஆறறிவு சார்ந்து 
ஒரு தர்க்கம் செய்வதில் தவறில்லை 
ஆறாம் அறிவை அகற்றிவிட்டு தர்க்கம் செய்வதில் பலன் இல்லை. 

ஏற்கனவே இது பற்றி போதிய அளவில் அளாவி விட்டோம் 
இனி தொடர ஒன்றும் இல்லை 

On 2/17/2016 at 3:26 PM, nedukkalapoovan said:

420598_10151535585107226_961096635_n.jpg

தொழில் ---- முதலாளி
பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு )
சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள்
வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை
பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது
வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள்
எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள்
தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள்
வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன்
ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன்
customers ------ எப்பவும் காசாகவே குடுப்பவர்கள் ,( கார்ட் வேண்டாம்)
rice ------ பூநகரி கைகுத்தல் என்று கேரளா rice கொடுப்பது
ஆட்டு இறைச்சி----- செம்மறியோ ,மரியாடோ எல்லாம் விற்கப்படும்
ஊர் கோழி இறைச்சி ---- முட்டை போட்ட வயதான கோழிகளை தமிழ் சனத்துக்கு ஏமாத்தி விற்பது
மரக்கறி ------ அழுகும் வரை விற்கப்படுவது
காசு வாங்குபவர் ------- கடை போனில் இலங்கை or இந்தியாக்கு போனில் கதைத்து கொண்டு பில் போடுபவர்
மீன் பக்கட்----- ஆப்ரிக்க கடலில் பிடித்த மீனை யாழ்ப்பாணத்தில் பிடித்ததாக காட்டும் (லேபில் )
காலாவதி திகதி ------ அழுகும் வரை , வாடும் வரை , மணக்கும் வரை
சம்பளம் ------ திட்டி திட்டி கொடுப்பது
மது பானம்----- தமிழில் கதைத்தால் 24 மணிநேரமும் வாங்கலாம்
மனைவி ------- சம்பளம் இல்லாத தொழிலாளி
வீடு ........------ கமராவில் கடை தொழிலாளர்களை பார்க்கும் இடம்
தமிழ் ரவுடிகள் ----- களவு எடுத்த சாமான்களை அரை விலையில் குடுப்பவர்கள்
நெல்லி கிரஸ்------- 1987 இல் தரை மட்டமாக்கிய தோலைக்கட்டி பேரில் இருப்பது
தேங்காய் ---- 5 வாங்கினால் 2 அழுகி இருப்பது
hollyday ,போனஸ்,sick , பிள்ளைபேறு ------ அப்படி எந்த லீவும் எங்களிடம் இல்லை
குறிக்கோள் ------ பணம் மட்டும் (not family )

ஆக்கம் === பிரகாஷ் uk

இந்திய இராணுவம் சென்ற பின்பு 
மீண்டும் இயங்கியது நான் 1989 - 1990இல் எல்லாம் அங்கே 
வாங்கி குடித்திருக்கிறேன்

பின்பு 1990 இறுதியில் வந்த இராணுவ படை எடுப்பால் 
இல்லாமல் போயிருக்கலாம்.

ஐரோப்பாவில் காணும்போதெல்லாம் 
அவர்கள் வேறு இடத்தில் இருந்து இயங்குகிறார்கள் என்று நினைத்தேன். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Sasi_varnam said:

கொழும்பான் வாழ்க்கையில தெரிஞ்சு கொள்ள நெறையவே இருக்கு.
மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புறிய செல்வோரை அரபுக்காரன் எப்படி ஆட்டிப்படைகிறான் என்பதை நாங்கள் அறிவோம்.  இங்கே அப்படி அல்ல, அவனவன் அவனவனுக்கு கைதேர்ந்த கலையை செவ்வனே செய்து கொண்டுதான் இருப்பான். 
இங்கே சீக்கியர் முதல், சிங்களவர் வரை
பாக்கிஸ்தானி முதல்  பாலஸ்தீனியன் வரை 
அயர்லாந்துக்காரன் முதல் ஆப்கானிஸ்தான் காரன் வரை
ஆக மொத்தம் வெள்ளையன் முதல் கருப்பன்வரை
ஒரு கொஞ்ச பேர் இந்த இந்த மாதிரியான முறை கேடான வேலைகள தொடர்ந்தும் செய்து கொண்டு தான் இருப்பார்கள் , இதில் தமிழர் ஒன்றும் விதி விலக்கல்ல.
இவர்களில் கொஞ்ச பேர் நொந்து போன தமிழனையே தேசியம் என்ற பெயரில் குறி வைகிறார்கள்.

கனேடிய பாராளுமன்ற செனட்  சபையில் இருந்த மைக் டாப்பி, பர்மேலா வாலின், இன்னும் கொஞ்ச பேர் பொய்யான கணக்கு வழக்குகளை காட்டி அரசாங்க பணத்தை கையாடி கோர்ட்டு, கேஸு என்று இன்னும் இழுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி எத்தனையோ தில்லாலங்கடி இருக்கு கொழும்பான்.
நமக்கென்னவோ கண்ணில் படுவது "புலம் பெயர் ~ ஈழத்து தமிழரின்" ஜில்மால் மட்டும்தான்.
அதற்காக அவர்கள் செய்வது சரி என்று மட்டும் நான் சொல்ல வரவில்லை.
அவர்கள் பத்தோடு பதினொன்று மட்டுமே. 
மற்றையவர்கள் எல்லாம் புனிதர்கள் என்ற உங்கள் விம்பம் தவறானது.

சசி 

நான் நேரிடையாக இவற்றை அனுபவித்தவன் என்ற அனுபவத்தின் அடிப்படையில் கூறினேன். விதி விலக்குகக் இருக்கலாம். பொதுவாக இது எல்லோரினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எழுதி இருப்பது போல் எல்லோரும் இல்லை. முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்து கூடக் குறையச் சொல்வதுதானே எம்மவர் வழக்கம்.  தேங்காய்களை உடைத்துப் பார்த்தே வாங்கும் வசதி பல கடைகளில் உண்டு.

மரக்கறிகள் அழுகும் வரை அவர்கள் வைத்திருந்தால் அழுகியத்தை நீங்கள் ஏன் வாங்குகிறீர்கள்??

கவுன்சிலில் காசையும் எடுத்துக்கொண்டு களவா வேலை செய்தால் மூண்டு பவுன்சு இல்லை அதிலும் குறைவாத் தரத்தான் பார்ப்பான். இந்தக் காசுக்கு வேலை செய்ய மாட்டன் எண்டு சொல்ல ஒருத்தனுக்கும் துணிவில்லை.

எல்லாத் தமிழ் கடைக் காரனும் பத்து கடைகளே வச்சிருக்கிறான்.???

அவங்கள் என்ன  கோழி வளர்த்து முட்டை இட்டு முடியவே விக்கிறாங்கள். பிஞ்சுக் கோழி கடைகளில விக்குதுதானே. காசு குடுத்து அதை வாங்காமல் மலிவு என்று வந்து முத்தல் கோழி வாங்கிறது. 

தமிழ் ரவுடியள் குடிவகையைத்தான் களவெடுக்கிறது.அதை எடுத்த ஆண்டே குடிச்சு முடிச்சிடுவாங்கள். பிறகெங்க கடையில கொண்டு வந்து குடுக்கிறது ??/

ஒரு கடைக்காரனும்  கடையில ஓசியில வெளிநாட்டுக்குக் கதைக்கிற போன் கடையில வச்சிருக்கிறதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.