Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் பதுங்கியுள்ளார் மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா?

Featured Replies

நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா!

 

விஜய் மல்லையா இந்தியாவில்  இல்லை என்றும்,  கடந்த மார்ச் 2-ம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு,  உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா,  ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார். 

vija%20.jpg

கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து,  உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது,  மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ம் தேதியே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக சி.பி.ஐ.  தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம் விஜய் மல்லையா,  இதற்கு 2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும்,  அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளது. 

விஜய் மல்லலையாவின் ராஜ்யசபா எம்.பி. மெயில் விலாசத்திற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணையின்போதாவது விஜய் மல்லையா  நேரில் ஆஜராக வேண்டும் என்று வங்கிகள் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடை யே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்து விஜய் மல்லையா விலகியதற்காக,  டியாஜியோ நிறுவனம் வழங்கிய ரூ.  515 கோடியை பெறவும் இந்திய கடன் வசூலிப்பு முகமை விஜய் மல்லையாவுக்குத்  தடை விதித்துள்ளது.

http://www.vikatan.com/news/india/60291-vijay-mallya-left-country-on-march.art

  • தொடங்கியவர்

லண்டனில் பதுங்கியுள்ளார் மோசடி தொழிலதிபர் விஜய் மல்லையா?

 

VIJAYA%20MALLAIH.jpgபுதுடெல்லி: 9 ஆயிரம் கோடிரூபாய் கடனாக வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்டு திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டனில் பதுங்கியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.  

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா கிங் ஃபிஷர், யுனைடெட் ப்ரூ வரீஸ் உள்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்தத்  தொழில் நிறுவனங்களுக்காக அவர் இந்தியாவில் உள்ள  முக்கிய வங்கிகளிடம் இருந்து சுமார்  ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்.

குறிப்பாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய இரு வங்கிகளிடம் அதிக தொகையை அவர் கடனாகப் பெற்றுள்ளார். இந்த கடனை விஜய் மல்லையா திருப்பி செலுத்தவில்லை. இதைத் தொடர்ந்து ''வேண்டும் என்றே கடனை திருப்பித் தராதவர்' என்று இந்த வங்கிகளால் விஜய் மல்லையா அறிவிக்கப்பட்டார்.

மேலும் அவருக்கு கடன் கொடுத்த 13 வங்கிகள் ஒன்று சேர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத்  தொடர்ந்தன. மேலும், விஜய் மல்லையா வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க வேண்டும் என்று வங்கிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நேற்று (புதன்) நடந்தது. அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கூறுகையில், "விஜய் மல்லையா கடந்த 2ம் தேதியே வெளிநாட்டுக்கு சென்று விட்டார். மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும். அவரது சொத்துக்களைப்  பறிமுதல் செய்ய வேண்டும். அவருக்கு எவ்வளவு கோடி சொத்துக்கள் உள்ளன என்ற தகவலையும் வெளியிட உத்தரவிட வேண்டும்" என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க விஜய் மல்லையாவுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு லண்டனில் வீடு இருப்பதாகவும் எனவே அவர் அங்கு சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. தொடர்ந்து, லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலம் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவின் வீட்டு முகவரி யாருக்கும் தெரியாத நிலையால் குழப்பம் ஏற்பட்டது.

பின்னர் ஒருவழியாக அவரின் வீடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரின் மையப் பகுதியான பகெர் தெருவில் புகழ் பெற்ற வாக்ஸ் மியூசியம் அருகில் விஜய் மல்லையாவின் பங்களா உள்ளது என்றும், இது தவிர லண்டன்  அருகே உள்ள  திவென் எனும் கிராமத்திலும் விஜய் மல்லையாவுக்கு பெரிய பண்ணை வீடு உள்ளதும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதற்காக அவரது ஆவணங்களை முடக்க திட்டமிடப்பட்டுள்ளது. விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் வெளிநாடுகளில்தான் உள்ளன. எனவே அந்தச்  சொத்துக்களை முடக்குவது பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

 

http://www.vikatan.com/news/india/60337-is-vijay-mallya-hiding-in-the-uk.art

  • கருத்துக்கள உறவுகள்

How to escape "personal loan / car loan etc" calls from banks.

 

Bank: Sir this is Sonali calling from ICICI bank, would you be interested in a loan?

Me: Sure..why not?

Bank: Your good name sir?

me: Vijay Mallaya ....

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக வாடிக்கையாளர்கள்தான் வரிசையில் நின்று வங்கிகளிடம்  கடன் கேட்பார்கள்.... இங்கு வங்கிகள் வரிசையில் நின்று கடன் குடுத்துள்ளார்கள்...!

7000 கோடி என்கிறார்கள், 9000 கோடி என்கிறார்கள் , எல்லாம் குமாரசாமி கணக்காய்க் கிடக்கு...!  tw_blush:

  • தொடங்கியவர்

http://sim03.in.com/2f8bd7124e294bcc8020a8bfc7b01c27.jpg

அவர் கடன் எடுத்து இப்படி கலண்டர் அடித்ததுதான் மிச்சம்..:cool:

இந்த வருடத்திற்கான போர்முலா 1 போட்டிகள் நாளை அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகின்றன. இதில் மல்லையாவின் அணியான Force India வும் பங்குகொள்கின்றது. ஆள் எப்படியும் தலைகாட்டுவார். 120 மில்லியன் டொலர்களுக்கு மேல் Force India வுக்காகச் செலவு செய்துள்ளார்.

  • தொடங்கியவர்

IPL இல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இவரது அணி. இன்று அதன் இயக்குனர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் தான் எல்லா காடை கடைப்புளியும் தங்கி இருக்குது. உவருக்கும் அசைலம் கொடுத்தால்.. நல்லாத் தேறும். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹார்வேர்ட்சியார் ரில் ஒரு வில்லாவில் ஒளிந்திருக்கிறாராம். என்கிறது என் டி டி வி.

 

  • கருத்துக்கள உறவுகள்

அதிகாரத்தின் பாதுகப்பில் இவனெல்லாம் ஒதுங்கி குளிர் காய்கின்றான்

பாவம் ஏழைகள் கடனும் வாங்க முடியாது வங்கிகளில், வாங்கி ஒரு முறை கட்டாவிட்டாலும் எத்தனை மிரட்டல்கள், அதனால் மனமுடைந்து தற்கொலை செய்தவர்கள் எத்தனை பேர்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை உடையார்.

பல பில்லியன்களுக்கு பொல்லய போட்டுவிட்டு இவர்கள், உலகெங்கும் சுற்றித்திர்வார்கள்.ஏழைகள் 1, 2 தவணகள் கட்டமுடியாவிட்டால், அவர்களை அழைத்து இந்த வங்கிகள் மிரட்டி கடனை வசூலிப்பார்கள்.

  • தொடங்கியவர்

மல்லையா போலவே டபாய்க்கும் 5275 பேர்: பரபரப்புப் பட்டியல் வெளியீடு!

 

மல்லையா வாங்கிய ரூ. 9000 கோடி கடனுக்கே இப்படி வாயைப் பிளக்கிறோமே, இவரைப் போலவே இன்னும் 5275 பேர் வங்கிகளில் கடனை வாங்கி திருப்பிக் கட்டாமல் மோசடி செய்திருப்பதாக சிபில் பட்டியல் வெளியிட்டுள்ளது. இவர்கள் வாங்கிய மொத்த கடன் மதிப்பு ரூ. 56,521 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1311064515_latest_news_Vijaya-Mallya-4911453308075-7438660.jpg

திட்டமிட்டு மோசடி செய்யும் இவர்களைப் போன்ற பெரும் பண முதலைகள் வாங்கிய கடன் கடந்த 13 ஆண்டுகளில் 9 மடங்கு உயர்ந்துள்ளது. 2002-ல் வங்கிகளுக்கு இருந்த திட்டமிட்ட மோசடிக்காரர்களின் வாராக்கடன் ரூ. 6,291 கோடி. ஆனால் தற்போது அது 9 மடங்கு உயர்ந்து ரூ. 56,621 கோடியாக உள்ளது. இது இந்த நிதி ஆண்டில் விவசாயத்துறையின் வளர்ச்சிக்கு ஒதுக்கியிருக்கும் நிதியைவிட 1.5 மடங்கு அதிகம்.

விவசாயி ஒருவர், காய்ந்துபோய் வாடும் பயிருக்கு உரம் போட கடன் வாங்கிவிட்டு வங்கியாளர்களின் டார்ச்சர் தாங்காமல் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் வங்கிகள் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் இதுபோன்ற பெரும்பணக்காரர்களுக்கு கடனை கோடி கோடியாகக் கொட்டி கொடுத்துள்ளன. அவர்களால் வாராக் கடன் சுமை அதிகரித்தது மட்டுமல்லாமல், மாபெரும் பொருளாதார சீர்கேட்டுக்கும் வழிவகுத்துள்ளன. இவற்றில் தனியார் வங்கிகளைக் காட்டிலும் பொதுத்துறை வங்கிகள் தான் 73 சதவிகித வாராக் கடன்களினால் சிக்கி தவிக்கின்றன.

நிறுவனங்களைப் பொறுத்தவரை கடன் இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள்தான் நன்றாக செயல்படும் நிறுவனங்களாகப் பார்க்கப்படுகின்றன. ஒரு நிறுவனத்தின் விரவாக்கத்துக்கும் வளர்ச்சிக்கும் அவசியம் நிதி உதவி அவசியம்தான். ஆனால் இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் கடன் வாங்கியத் தொகையைத் தங்கள் இஷ்டத்துக்கு ஆடம்பரத்துக்கும், பகட்டு விளம்பரத்துக்கும், பிற நிறுவனங்களுடனானப் போட்டிக்கும் என திட்டமிடாமல் செலவிட்டதன் விளைவுதான் இது.

இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ. 1.44 லட்சம் கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 30 சதவிகித தொகையைத் திருப்பி செலுத்த வேண்டிய நிறுவனங்களின் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அதிக மோசடிக்காரர்கள் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. மொத்தம் 1,138, பேர் ரூ. 21,647 கோடி கடனை வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளனர்..

டாப் 10 திட்டமிட்ட மோசடிக்கார நிறுவனங்கள்:

வின்சம் டைமண்ட்ஸ் ஜுவல்லர்ஸ் அண்ட் ஃபார்எவர் பிரீசியஸ் ஜுவல்லரி                                 (ஜெயின் மேத்தா, ரவிச்சந்திரன், ரமேஷ் பாரிக்,மற்றும் பலர்) - ரூ. 3263 கோடி
ஜூம் டெவலப்பர்ஸ்  (விஜய் சவுத்ரி, பிஎல் கெஜ்ரிவால்) -  ரூ. 1647 கோடி
கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் (விஜய் மல்லையா) - ரூ. 1201 கோடி
பீட்டா நாப்தோல் (தீபக் பவேஜா, சதிஷ் தேஷ்பாண்டே, மற்றும் பலர்) - ரூ. 951 கோடி
ராசா டெக்ஸ்டைல்ஸ் (ஶ்ரீவத்சவ்) - ரூ. 694 கோடி
ராங்க் இண்டஸ்ட்ரீஸ் (டிவி ரமேஷ், ஶ்ரீனிவாசராவ், மற்றும் பலர்) - ரூ. 551 கோடி
எக்ஸ்எல் எனர்ஜி (பெருந்தோட்டத்தில் ரவிந்திரநாதன், விகாஸ், மற்றும் பலர்) - ரூ. 413 கோடி
டெக்கான் கிரானிக்கல் (வெங்கட்ராம் ரெட்டி, விநாயக் ராவ் ரெட்டி) - ரூ. 409 கோடி
எலக்ட்ரோதெர்ம் லிட். (முகேஷ் பந்தாரி, பலர்) - ரூ. 385 கோடி
சைலோக் சிஸ்டம் லிமிட்டெட்                                                                                                                           (சுதர்ஷன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷாத்ரி, பலர்)-
ரூ. 361 கோடி

மேலும் பட்டியலை விரிவாகப் படிக்க http://bit.ly/1nTA60D

வங்கிகள் இன்று மக்களுக்குக் கட்டாய ஒன்றாக மாறிவிட்டது. உழைத்து சம்பாதித்தது 100 ரூபாயாக இருந்தாலும் அதனை வங்கியில் வைத்து சேமிக்கவே மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் வங்கிகள் இதுபோன்று கடனை வாங்கி ஏப்பம் விடும் பெரு நிறுவனங்களுக்கு மக்கள் பணத்தை வாரிக் கொடுத்துவிட்டு தற்போது நெருக்கடி என்று புலம்பிக்கொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/personalfinance/article.php?aid=12258

 

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு வேறு ஒரு திரியில் நான் எழுதினேன் தடர்ந்தும் உலக வங்கியிடம் கடன் வாங்கும் 
சிறிலங்கா நிலைமை சிறிலங்காவை பொருளாதார ரீதியாக பின்தள்ளும் என்று.

கோசன் சொன்னார் இதையெல்லாம் யார் திருப்பி கொடுக்க போகிறார் என்று.
 கொடுத்தால் என்ன கொடுக்கா விட்டால் என்ன 
பாதிப்பு இரு பக்கமும் இருக்கிறது.

நேற்றைய செய்தி ....
அர்ஜென்டீனா தவனை முறையில் கடனை திருப்பி செலுத்துவதாக அறிவித்து இருக்கிறது.
13 வருடம் ற்றேசரி நோட்டுக்களை திருப்பி வாங்க மாட்டோம் என அர்ஜென்டீனா அறிவித்தது 
ஞாபகம் இருக்கலாம்.
இப்போ பொருளாதார ரீதியாக வளர்ந்துவரும் அர்ஜண்டீனாவிட்கு 
கடனை கட்டவேண்டிய நிலை வந்திருக்கிறது.

மல்லையாவின் கடனில் தப்பு வங்கிகளின் மேல்தான் ....
கடன் வீதம் (debt ratio)  தெரியாது எந்த அடிப்படையில் கடன் கொடுத்தார்கள் ?

எனக்கு கடன் தந்து என்னை கடன் காரன் ஆக்கினார்கள் என்று இவர் வழக்கு போட வேண்டும். 

தனி நபர் நிறுவனம் பங்க்ரப்சி அடிக்கலாம் 
அரசுகள் அதை செய்ய முடியாது.
இரண்டிற்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது.

அரசுகளுக்கு கடன் கூடும்போது ....
சுரண்டல் ஆதிக்கம் வலுவாகிகொண்டு போகும். 

  • கருத்துக்கள உறவுகள்

மருது,

உங்களுக்கு ஒரே வார்த்தையில் பதில்.

கிரேக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

மருது,

உங்களுக்கு ஒரே வார்த்தையில் பதில்.

கிரேக்கம்.

உங்களின் பார்வையை நான் புரிகிறேன் ......

எனது வாதம் 
நீங்கள் சொல்வதுபோல் தற்போதையைய நிலையில் கிரேக்கம் 
இலவசமாக பணத்தை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது 

எனது பார்வை 20 வருடம்களித்து உலக பொருளாதார நிலைமை 
மாறும்போது கிரேக்கம் அதல்லாம் முன்பு வாங்கியது என்று கூற முடியாது 
இனி கிரீஸ் நாடு முன்னேறினால் ......
அதில் லாபம் பெற போவது ஜெர்மனிதான். 

அல்லது இந்த உன்னுடைய கடனை வைச்சுக்கோ 
ஆளை விடு என்று கடனை கொடுக்க வேண்டும்.
அதுவரையில் கிறிஸ் ஜெர்மனியின் பிடியில்தான்.

Argentina: Government Pays Back IMF Debt

 after years of an openly hostile relationship with the International Monetary Fund (IMF), Argentina cleared its entire $9.81 billion debt with the multilateral financial institution. Announcing the decision last December, President Néstor Kirchner, said the payment “will allow us to build a more just future, with greater flexibility in the design and implementation of economic policies.”

Opinion polls indicate that over 70% of Argentines supported the move, a sign of the bitterness left by the Fund’s role in the country’s economic collapse in 2001-2002. But despite praise from varying sides of the political spectrum, some left-wing critics blamed Kirchner for ignoring the “social debt” owed to the Argentine people, saying the money would be better spent alleviating the country’s internal social problems.

உங்கள் பார்வையில் இதில் 
அர்ஜண்டினாவிட்கு லாபம் 
காரணம் இவளவு காலமும் வட்டி கட்டவில்லை
வட்டியில் பாரிய அளவில் அர்ஜென்டினா சேமித்து இருக்கிறதுதான்.

ஆனால் முதளித்துவ உலகு அப்படி கணக்கு பார்ப்பதில்லை 
அர்ஜெண்டினாவின் பண வீக்கத்தை சதகமாக்கிவிட்டு 
பொருளாதார சுரண்டலை குறைந்த செலவில் கொள்வனவு செய்கிறார்கள் 
இறுதியில் முதளித்துவ நாடுகள்தான் துரதிஸ்டவசமாக லாபம் பெறுவதோடு 
உதவி செய்தோம் என்று ஒரு பாசாங்கும் அதில் இருக்கிறது. 

 

21 hours ago, நவீனன் said:

http://sim03.in.com/2f8bd7124e294bcc8020a8bfc7b01c27.jpg

அவர் கடன் எடுத்து இப்படி கலண்டர் அடித்ததுதான் மிச்சம்..:cool:

அவர் கடன்வாங்கி இந்த அழகிகளை வைத்து படமெடுத்து கலண்டர் மட்டும்தானே அடிச்சார். இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? இது உங்களுக்கே அடுக்குமா.

21 hours ago, suvy said:

7000 கோடி என்கிறார்கள், 9000 கோடி என்கிறார்கள் , எல்லாம் குமாரசாமி கணக்காய்க் கிடக்கு...!  tw_blush:

அம்மான்ரை குமாரசாமி எண்டு தெளிவா சொல்லுங்கோ. எங்கட குமாரசாமி அண்ணையாக்குமெண்டு நினைக்கப் போறாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அம்மான்ர குமாரசாமி ஜோக்கை யாராவது தனிமடல் பண்ணுங்கப்பா. சஸ்பென்ஸ் தாளவில்லை.

18 minutes ago, goshan_che said:

இந்த அம்மான்ர குமாரசாமி ஜோக்கை யாராவது தனிமடல் பண்ணுங்கப்பா. சஸ்பென்ஸ் தாளவில்லை.

அம்மா கணக்கு படத்தின் தயாரிப்பாளர் குமாரசாமி.. மனுஷ்யபுத்திரன் கிண்டல் By: Veera Kumar Updated: Friday, March 4, 2016, 11:01 [IST] சென்னை:

'அம்மா கணக்கு' என்ற பெயரில் உருவாகி உள்ள படத்தின் தயாரிப்பாளர் யார்? என்று வார இதழ் ஒன்று கேட்ட கேள்விக்கு, குமாரசாமி என்று பதிலளித்துள்ளார் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்.

'அம்மா கணக்கு' என்ற பெயரில் புதிய படம் தயாராகியுள்ளது. இதன் தயாரிப்பாளர் நடிகர், தனுஷ் ஆகும். ஆனந்த விகடன் முக்கிய புள்ளிகளின் பொது அறிவு, சினிமா அறிவை சோதிக்கும் விதமாக, சில பிரமுகர்களிடம், அப்படத்தின் தயாரிப்பாளர் பெயரை கேட்டது.

இதற்கு முன்னாள் நீதிபதி சந்துரு அளித்த பதிலில் `எப்போது இருந்து காந்தி கணக்குக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது? தயாரிப்பாளர் யாராக இருப்பினும் பட வெளியீட்டுக்கு தியேட்டர் கிடைப்பதற்குக் கஷ்டப்படுவார். அது மட்டும் அல்ல, அது தமிழ்ப் பெயராக இருப்பினும் வரிச் சலுகைக்கு வழி இருக்காது என்று கூறியுள்ளார்

டிவி தொகுப்பாளினி, லட்சுமி ராமகிருஷ்ணன்: `அடப்பாவீங்களா, என்னைச் சிக்க வைக்கணும்னே கேள்வி கேட்கிறீங்க போல. எங்க அம்மாவோட கணக்கே எனக்குத் தெரியாது. இதுல `அம்மா கணக்கு' தயாரிப்பாளரைப் பற்றி என்ன சொல்றது? சரி, ஒரு யூகத்துல பதில் சொல்றேன். உதயநிதி ஸ்டாலின், என்று கூறியுள்ளார்.

ஆர்.ஜே.பாலாஜி சற்று பயந்தவராக, நீங்க ஏன் இந்த சீஸன்ல இந்தக் கேள்வி கேட்கிறீங்கனு தெரியும். உங்க வலையில் சிக்காமல் பதில் சொல்லிடுறேன். `அம்மா கணக்கு' படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். இந்தப் படத்துல அமலா பால், ரேவதி எல்லாம் நடிச்சிருக்காங்க என்றுள்ளார்.

ஆனால், மனுஷ்ய புத்திரனிடம் இதே கேள்வியை கேட்டபோது, `குமாரசாமி' என்று பதில் சொல்லியுள்ளார். அவர் எந்த கணக்கில், குமாரசாமி என்ற பெயரை சொன்னாரோ அது அவருக்குத்தான் வெளிச்சம். அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/amma-kanakku-film-s-producer-is-kumaraswamy-manushyaputhiran-248239.html

 

குமாரசாமி தீர்ப்பு

குமாரசாமி ராமாயணத்தில் “அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்”

ட்டம் சமம்
சட்டம் பொது
சந்தேகமே வேண்டாம்
தீர்ப்புதான் தனித் தனி!

லாலு, சவுதாலா…
ஜெயலலிதா
சாதி வேறு
நீதி வேறு!

மகாபாரதம்
ராமாயணம் மட்டுமல்ல
அரசியல் சட்டத்தையும்
ஆளுக்கு ஏற்ற மாதிரி
வியாக்கியானம் செய்யலாம்.

குன்கா ராமாயணத்தில்
அவர் மட்டுந்தான்
நோக்கினார்,
குமாரசாமி ராமாயணத்தில்
“அண்ணலும் நோக்கினார்
அவளும் நோக்கினாள்”

நீதி... நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!

நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம் அனைத்துக்குமே விடுதலை!

அரசியல் சட்ட அதிகாரத்தில்
ஜெயா- சசி
காற்சிலம்பு தெறித்த
கடைசிக் காட்சியில்
நல்லவேளை
“யானோ அரசன்
யானே கள்வன்-” என்று
குமாரசாமி
குப்புற விழுந்து
உயிரை விடாமல்
“யானே அள்ளுவேன்”
என,
நீதியை அள்ளும் காட்சியில்
சுப்பிரமணிய சாமிக்கே
சுரணை வந்தது.

இத்தனை சதவீதம்
சொத்துக் குவிக்கலாம்
என ஒத்துக்கொண்ட பிறகு
எதற்கு நீதி மன்றங்கள்?
கட்டிடங்களை எல்லாம்
கமிஷன் மண்டியாக
மாற்றிவிடலாம்.

சாலையோர மக்களை
காரை ஓட்டிக் கொன்ற
சல்மான் கானுக்கு
உடனே ஜாமீன்.

வேலை தேடி
வெளி மாநிலம் போகும்
அப்பாவி தொழிலாளிகளுக்கு
துப்பாக்கிச் சூடு!

கட்டைகளை கடத்தியதாக பழி
சட்டத்தையே கடத்திய
ஜெயா- சசி கும்பலுக்கு
நீதிமன்றமே வழி!

நீதிமன்ற அருகதை

அம்மாவின் வருகைக்காகவே காத்திருந்தது போல், நீதிமன்றத்தின் அலங்காரத் திரை அவிழ்ந்தது

ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்,
நீதிமன்றங்களி்ன் தரத்தை
ஜெயலலிதாவை விட
யாரால் சிறப்பாக விளக்கமுடியும்?

அம்மாவின்
வருகைக்காகவே
காத்திருந்தது போல்,
நீதிமன்றத்தின்
அலங்காரத் திரை அவிழ்ந்தது
ஏதோ
அங்க ஒண்ணு இருக்கு
என்று
நீதி மன்றத்தை உற்றுப்பாத்தவர்களின்
கண்களையே நோண்டிவிட்டது
காவல் தெய்வம்!

பாருங்கள்!
பரம்பொருளின் அருள்வாக்கு,
“இனி ஊழலை ஒழிக்க முடியாது
நீதியை ஒழித்துவிடு!”

அம்மா குடிநீர்,
அம்மா உணவகம் மாதிரி
இது அம்மா தீர்ப்பு!

சந்தேகமேயில்லை,
அம்மாவுக்கு மட்டுமா? விடுதலை?
நீதி… நேர்மை .. வெட்கம்.. மானம்
அனைத்துக்குமே விடுதலை!

– துரை. சண்முகம்

http://www.vinavu.com/2015/05/12/jaya-acquittal-in-corruption-case-ds-kavithai/

Edited by ஜீவன் சிவா

  • தொடங்கியவர்
1 hour ago, ஜீவன் சிவா said:

அவர் கடன்வாங்கி இந்த அழகிகளை வைத்து படமெடுத்து கலண்டர் மட்டும்தானே அடிச்சார். இதுக்குப்போய் அலட்டிக்கலாமா? இது உங்களுக்கே அடுக்குமா.

p86a.jpg

p86b.jpg

அவர் கலண்டர் அடிப்பதில் மட்டும் அல்ல... அவரது வாழ்க்கை இப்படித்தான்..:cool:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

p86a.jpg

p86b.jpg

அவர் கலண்டர் அடிப்பதில் மட்டும் அல்ல... அவரது வாழ்க்கை இப்படித்தான்..:cool:

எங்களுக்கும் கொஞ்சம் புரியிறமாதிரி சொல்ல கூடாதா ???

எந்த போட்டோவை பார்த்தாலும் ஐந்து ஆறு அழகான பொம்பிளை பிள்ளைகளுக்கு 
நடுவில்தான் நிற்கிறார்.

நீங்கள் வேற .............
அவர் கலண்டர் மட்டும் அடிக்கவில்லை...... என்று இழுக்கிறீர்கள். 

இந்த இழுவைக்கு பின்னால் ஏதும் தணிக்கை இருக்குமோ ? 

  • கருத்துக்கள உறவுகள்

Models-At-Kingfisher-Calendar-2014-Launc  

3.jpgkingfisher_calendar_girls_2011_hunt_08.jaqua_marine.jpg14.jpg

திரௌபதிகளின் சம்மதத்துடனேயே ............
துகில் உரிந்த நவீன துரியோதனானாகவே 
நான் அண்ணர் மல்லையை பார்கிறேன்.

இந்த படங்களை நான் இணைத்தது
சில விடயங்களை பார்ப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக 

சுதந்திரம் என்பது ...
என்ன என்று தெரியாத இடத்தில் 
அது சிறைபட்டுதான் இருக்கும் 
சுதந்திரம் சுதந்திரம் பெறுவது என்றால் 
முதலில் சுதந்திரத்தை புரிய வேண்டும். 

சவூதி மன்னர் வீட்டு வேலைகாரிக்கும் 
சவூதி ஒரு பணக்கார வீட்டு வேலைகாரிக்கும் 
நிறைய வித்தியாசம் இருக்கலாம் 

தொழில் எனும்போது 
இருவருமே வேலைகார்கள்தான் 

அதை விடுத்து வெளிவருவதே 
ஒரு சுதந்திரத்தை கொடுக்கும்.

இருவருக்கும் இரு வேறு சுதந்திரங்கள் இருக்கலாம் 
அவரே சுதந்திரமானவர் 
இவரே சுதந்திரமானவர் 
என்று தர்க்கம் செய்யலாம் 
வேறு வேறாக பிரித்துவைத்தால் 
சேர்த்து பார்த்தால் 
இருவரின் இருப்பும் ஒன்றுதான். 

kingfisher-calendar-hunt-2011-babes-biki

நவ நாகரீக உலகத்தின் கைப்பாவைகள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பிடி சோத்துக்கு வழியில்லாதவன் 5 ரூபாய் கட்டாட்டிலும் 68 ரெட் நோட்டீஸ் வரும்.....tw_angry:
இப்பிடி பெருங்கோடி சுத்துமாத்துக்களை வாசிச்சால் எனக்கென்னமோ அண்டு முழுக்க வெரி ஹப்பியான பீலிங் தானாய் வரும்.:cool:

பேஷ் பேஷ் உங்க ரசனை ரொம்ப நன்னாயிருக்கு.

  • தொடங்கியவர்

இது மல்லையாக்களின் தேசம்!

 

காட்சி - 1

தஞ்சாவூரைச் சேர்ந்த விவசாயி பாலன்,  2011-ம் ஆண்டில் ஒரு தனியார் வங்கியிடம் இருந்து 3.8 லட்ச ரூபாய் கடன் வாங்கி டிராக்டர் வாங்கினார். கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தியும் வந்தார். இதுவரை 4.11 லட்ச ரூபாய் திரும்பக் கட்டியிருந்தாலும் இன்னும் 1.30 லட்ச ரூபாய் மீதம் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களாகப் பணமுடை. அதனால் பணத்தைக் கட்ட இயலவில்லை. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென போலீஸுடன் ஊருக்குள் நுழைந்த தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள், விவசாயி பாலனை வழிமறித்து கடன் தொகையைக் கேட்டுத் தகராறு செய்துள்ளனர். `இப்படி திடுதிப்புன்னு வந்து நின்னா எப்படிங்க?’ என அவர் கேட்க, எதிர்பாராதவிதமாக அவரை நடுரோட்டில் வைத்து ஊரார் பார்க்க அடித்து இழுத்துச் சென்றது போலீஸ். அவருடைய டிராக்டரையும் பறிமுதல்செய்து எடுத்துச் சென்றனர்.

காட்சி - 2

டிசம்பர் 18-ம் தேதி, தன் 60-வது பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடினார் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விஜய் மல்லையா. இதற்காக மூன்று நாட்கள் கோவாவில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்காக வெளிநாட்டில் இருந்து பல இசைக் கலைஞர்களும் நடன மங்கைகளும் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் டாப் அரசியல்வாதிகளும் மீடியா பிரபலங்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சி நடந்த அதே நேரத்தில்தான், ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை ஏமாற்றிய ‘டிஃபால்ட்டர்’ என விஜய் மல்லையாவை அறிவித்திருந்தது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. ஆனால், அதைப் பற்றி அவர் அலட்டிக்கொள்ள வில்லை. கடந்து மூன்று மாதங்களாக அவர் இந்தியாவில் இருந்தபோதிலும், அவரை யாரும் நெருங்கக்கூட முடியவில்லை. இப்போது `அவர் அப்பவே லண்டனுக்குப் போயிட்டாரே?’ எனக் கையை விரிக்கிறது சி.பி.ஐ.

p86a.jpg

காட்சி - 3

மார்ச் 2015-ம் ஆண்டுடன் முடிந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகள்,  52,242 கோடி ரூபாய் வாராக் கடனை கணக்கில் இருந்து நீக்கியுள்ளன. அதாவது இந்தக் கடன் இனிமேல் வரவே வராது என்று அர்த்தம். இதில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு மட்டும் 21,313 கோடி ரூபாய். 6,587 கோடி ரூபாய் வாராக் கடனுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த இடத்திலும், 3,131 கோடி ரூபாயுடன் ஐ.ஓ.பி வங்கி அடுத்த இடத்திலும் இருக்கின்றன. 100 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத `மாபெரும் கடன்கார ஏழை(?)களின்’ பட்டியலை ஆர்.பி.ஐ-யிடம் கேட்டபோது ‘எங்களிடம் அந்தத் தகவல் இல்லை’ என்று சொல்லி கைவிரித்திருக்கிறது.

இந்த மூன்று காட்சிகளுக்கு ஒரு தொடர்பும் நீதியும் இருக்கின்றன. தொடர்பு - இந்தியாவில் நிறையப் பேர் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார்கள். நீதி - கோடிக்கணக்கில் கடன் வாங்கினால் உல்லாசமாக இருக்கலாம்;

லட்சக்கணக்கில் கடன் வாங்கினால் அடிபட்டுச் சாகவேண்டியிருக்கும். 

விஜய் மல்லையா... இன்று நேற்று அல்ல. அவரது ஆரம்பமே நிதி நிறுவன மோசடிதான். 1990-களில் மெக்டோவல் க்ரஸ்ட் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தைத் தொடங்கினார் மல்லையா. பொதுத்துறை வங்கிகளைவிட அதிக வட்டி தருவதாகக் கூறி நிதி வசூல் செய்தார். அதில் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் தனது சாராய கம்பெனியான யுனைட்டெட் பிரீவரிஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். பிறகு, முந்தைய மெக்டோவல் நிறுவனத்தின் பெயரை மாற்றி கோல்மால் செய்ய... அது பிரச்னையாகி, மல்லையா மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அந்த வழக்கு இப்போது வரை நடைபெற்றுவருகிறது.

அதன் பிறகு ஏராளமான வங்கிகளில் வகைதொகை இல்லாமல் கடன் வாங்கியிருக்கும் மல்லையா, மொத்தம் 17 பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 7,000 கோடி ரூபாய் கடனாகப் பெற்றிருக்கிறார். அது வட்டியுடன் சேர்த்து சுமார் 9,000 கோடி ரூபாயைத் தொடுகிறது. இந்தப் பிரமாண்டமான தொகையை அவர் இப்போது அல்ல... 2012-ம் ஆண்டில் இருந்தே திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்துவருகிறார். அவரிடம் இருந்து கடன் தொகையை மீட்பதற்காக, மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள் ஒன்றிணைந்து மும்பையில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். 2012-ம் ஆண்டில் நடந்த இந்தக் கூட்டத்துக்கு மல்லையாவும் அழைக்கப் பட்டிருந்தார்.  ஆனால் அவர், தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், வருவதற்கு நேரம் இல்லை என்றும் கூறி, வரவே இல்லை. இவ்வளவுதான் அவர் வங்கிகளை மதிக்கும் லட்சணம்.

p86b.jpg

அவர் மோசடிக்காரர் என அறிவித்த வங்கிகள், கடனை வாங்கிவிட பின்னால் அலையோ அலை என அலைந்துகொண்டிருக்கிற இந்த நிலைமையில்கூட விஜய் மல்லையா ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கிறார். வங்கிப் பிரச்னை உச்சத்தில் இருந்த மார்ச் 1-ம் தேதிகூட அவர் நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். ஆனால் `மார்ச் 2-ம் தேதி வெளிநாட்டுக்குப் பறந்துவிட்டார்' எனச் சொல்கிறது சி.பி.ஐ. 
நீதிமன்றமும் வங்கிகளும் அவரிடம் இருந்து கடனை வசூலிக்க தீவிரமாக முயற்சி செய்துகொண்டிருந்த வேளையில் மல்லையா என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? பல கோடி ரூபாய்க்கு குதிரை வாங்கினார். ஐ.பி.எல் போட்டிகளுக்காக கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுத்துக்கொண்டிருந்தார். கோவா கடற்கரையில் பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தார். கிங்ஃபிஷர் நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு வரவேண்டிய சம்பளத்தைக் கேட்டுப் போராடிக்கொண்டிருந்தபோது அவர் லட்சத் தீவுகளில் ஒரு தீவை வாங்கி, அதில் சொகுசு பங்களா கட்டி திறப்பு விழா நடத்தினார். நம் அரசு அமைதியாக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. மல்லையா வாழும் இதே நாட்டில்தான் கடன் தொல்லை காரணமாக 2014-ம் ஆண்டில் 6,710 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோனார்கள். (தேசிய குற்ற ஆவணக் காப்பக ஆய்வறிக்கை-2014).

நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருந்த கிங்ஃபிஷர் நிறுவனத்துக்கு ஏன் இத்தனை கோடிகள் கடனாகக் கொட்டித் தரப்பட்டது? பதில் இல்லை. மூடப்பட்ட நிறுவனத்தின் கடனை ஏன் இதுவரை வசூலிக்கவில்லை? பதில் இல்லை. மல்லையா மீது ஏன் சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை, ஏன் அவர் கைதுசெய்யப்படவில்லை? பதில் இல்லை. இது ஒரே ஒரு மல்லையாவின் கதை அல்ல. இந்தியாவில் இதுபோல் ஆயிரம் மல்லையாக்கள் அப்பாவி மக்களின் பணத்தை ஆட்டையைப் போட்டுவிட்டு அர்த்தராத்திரி பார்ட்டிகளில் பிஸியாக இருக்கிறார்கள்.

p86c.jpgஇவர்களில் பலரும் நாடாளுமன்ற இன்னாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லகடபடி ராஜகோபால்... விசாகப்பட்டினம் முன்னாள் எம்.பி-யான  இவர்தான் இந்தியாவின் மிகப் பெரிய கடன்காரர். இவர் நம்முடைய வங்கிகளுக்கு திருப்பிச்செலுத்த வேண்டிய தொகை 34 ஆயிரம் கோடி ரூபாய். பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இருக்கிறார் ஒய்.எஸ்.சௌத்ரி (அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்). இவர் தற்போது மொரீஷியஸ் வங்கி ஒன்றில் 106 கோடி கடன் வாங்கி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியவர்களில் 73 சதவிகிதம் பேர் இதுவரை திருப்பி அடைக்கவில்லை. 

வீட்டுக்கடன் கட்டுகிறவர்களுக்குத் தெரியும், திருப்பிச் செலுத்தாத மூன்றாவது தவணை என்பது மரண தண்டனைக்கு ஒப்பானது. 91-வது நாளில் இருந்து உளவியல் தண்டனைகள் தொடங்கும். 121-வது நாளில் உங்கள் வீட்டு வாசலில் கும்பல் கும்பலாக வங்கி ஆட்கள் வந்து நிற்பார்கள்.

151-வது நாளில் மிரட்டல்கள் வரும். உங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்து மானத்தை வாங்குவார்கள். இவை எல்லாம் சாதாரண நடுத்தர வர்க்கத்துக்கு. ஆனால் மல்லையா போன்றோர் 9,000 கோடி கடன் இருந்தாலும் அதைப் பற்றி கவலையே படுவது இல்லை. ஏனெனில், மல்லையாக்களைக் காப்பாற்ற எப்போதும் மீட்பர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதிகார மையங்களின் தரகர்களாகவும் இருக்கிறார்கள்!

http://www.vikatan.com/anandavikatan/2016-mar-23/petti---katturaikal/117100-vijay-mallya-escapes-from-india.art

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.