Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆணவக்கொலை: எமனாக வந்த போன் கால்... கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்!

Featured Replies

ஆணவக்கொலை: எமனாக வந்த போன் கால்... கவுசல்யாவின் கதறல் வாக்குமூலம்!

 
 

udumalai%20murder01.jpgள்ளம் கபடமற்ற இரு உள்ளங்களின் காதல் கதை, சாதி வெறியாட்டத்தால் இப்போது கண்ணீரில் முடிந்திருக்கிறது. உடுமலையில் தலித் இளைஞரை காதலித்து கரம்பிடித்தார் என்பதற்காகவே, இளம்பெண்ணையும், அவரை திருமணம் செய்த இளைஞரையும் நடுரோட்டில் நூற்றுக்கணக்கானோருக்கு மத்தியில் மிகக் கொடூரமாக,  அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளது ஒரு கும்பல். இதில் இளைஞர் சங்கர் இறந்து விட... படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார் கவுசல்யா.

கல்லூரியில் துவங்கிய காதல்

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள கொமரலிங்கம், சாவடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மூத்த மகன்தான் சங்கர். டிப்ளமோ படித்து முடித்த சங்கர், பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வியில் சேர்ந்தார். அதே கல்லூரியில் படித்து வந்த பழனியைச் சேர்ந்த கவுசல்யாவுக்கும், சங்கருக்குமிடையே காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்த நிலையில், கவுசல்யாவின் வீட்டுக்கு இது தெரியவந்தது.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மிகக் கடுமையாக எதிர்த்தனர் கவுசல்யாவின் பெற்றோர். அத்தோடு அவரது உறவினர் வழியில் ஒருவருக்கு கவுசல்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடக்க, அதிர்ந்து போன சங்கர் - கவுசல்யா ஜோடி,  வீட்டை விட்டு வெளியேறி கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் செய்து கொண்டது. அப்போது சங்கர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். கவுசல்யா 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் பெற்றோர், தனது மகளை சங்கர் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தனர். அப்போது 'என்னை யாரும் கடத்தவில்லை. நானாக விரும்பிதான் இவரோடு வந்தேன்' என கவுசல்யா சொல்ல... அவர் மேஜர் என்பதால் சங்கருடனே அனுப்பி வைக்கப்பட்டார். 'கவுசல்யா இல்லாவிட்டால் நான் உயிர் வாழவே மாட்டேன்' என சங்கர் சொல்ல, சங்கரின் தந்தை இருவரையும் ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு அழைத்து சென்றார். சில நாட்களில் நிலைமை சீராகும். நிம்மதியாக வாழலாம் என நினைத்திருந்த சங்கர் - கவுசல்யா ஜோடிக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

'காதல்' பட பாணியில் ஒரு மிரட்டல்

திருமணமான சில தினங்களில் அதாவது ஜூலை 24-ம் தேதி,  சங்கரின் வீட்டுக்கு வந்தார் கவுசல்யாவின் தாத்தா. மிக அன்பாக பேசினார். ஸ்கூட்டி பைக் ஒன்றை கொண்டு வந்து கவுசல்யாவுக்கு கொடுத்தார். 'எல்லாம் சரியாகிடும். பாத்துக்கலாம். நீ ஒண்ணும் பயப்படாதே' என ஆறுதல் கூறினார். சிறிது நேரத்தில் என்னை இந்த ஹாஸ்பிட்டல் வரைக்கும் விட்டுட்டு வந்துடுறியாமா என தாத்தா கவுசல்யாவிடம் கேட்க, மகிழ்ச்சியுடன் பைக்கில் சென்றார் கவுசல்யா. ஹாஸ்பிட்டல் முன்பு தயாராக இருந்த காரில் அப்படியே கடத்தி செல்லப்பட்டார். காதல் படத்தில் நாயகனையும், நாயகியையும் சந்திக்கும் நாயகியின் சித்தப்பா, அவர்களுக்கு ஆதரவாக பேசி கடத்தி செல்லும் சம்பவத்தை போன்றே அரங்கேறியது இந்த சம்பவம்.

கவுசல்யாவை காணவில்லை என சங்கர் மடத்துக்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, ஒரு வாரத்துக்கு பிறகு போலீசில் ஆஜர்படுத்தப்பட்டார் கவுசல்யா. இந்த ஒரு வாரகாலம் கெஞ்சியும், மிரட்டியும் துளியும் அவர் அசரவில்லை. காவல்நிலையத்தில் சங்கரை பார்த்த உடன்,  வேகமாய் வந்து கட்டியணைத்துக்கொண்டார் கவுசல்யா. ஆனால், அத்தோடு கவுசல்யாவின் குடும்பத்தினர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழிகளில் கவுசல்யாவை மிரட்டிக்கொண்டே வந்தனர். அவ்வப்போது சங்கரும் இதில் சிக்காமல் இல்லை. அவரும் மிக இழிவான பேச்சுகளை கவுசல்யாவின் பெற்றோர்களிடம் இருந்து பெற நேர்ந்தது.

udumalai%20murder02.jpg

தொடர்ந்து வந்த மிரட்டல்கள்

'நீ வா. அவன் உன்னையா லவ் பண்றான். அவனுக்கு படிச்சா வேலை கூட கிடைக்காது. நீ கடைசி வரைக்கும் இப்படித்தான் இருக்கணும்' என பெற்றோர் எதிர்காலத்தை காட்டி அச்சுறுத்திய அத்தனை வார்த்தைகளையும் எளிதில் சமாளித்தார் கவுசல்யா. நாட்கள் சென்று கொண்டே இருந்தது. அவ்வப்போது மிரட்டலையும், இழிச்சொற்களையும் கேட்டுக்கொண்டே இருந்தார். சங்கர் கல்லூரி படிப்பை முடிப்பார். நல்ல வேலை கிடைக்கும். அப்போது வாழ்க்கையை இனிதாக துவங்கலாம் என காத்திருந்தார் கவுசல்யா.

எதிர்பார்த்த நேரம் வந்தது. கடந்த வாரத்தில் கல்லூரி படிப்பை நிறைவு செய்தார் சங்கர். அத்தோடு வளாக நேர்காணலில் வென்று வேலையும் பெற்றார். சென்னை சென்று வந்து வேலையை உறுதி செய்தார். ஏப்ரல் மாதத்தில் கவுசல்யாவின் பிறந்த நாள். இந்த மகிழ்வோடு, கவுசல்யாவுக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க நினைத்தார் சங்கர். எல்லாம் சரியாய் போய்க்கொண்டிருந்த நேரம், கவுசல்யாவுக்கு வந்த ஒரு போன் கால் எல்லாவற்றையும் மாற்றியது.

எமனாக வந்த போன் கால்

போனில் பேசியது கவுசல்யாவின் குடும்பத்தார். எப்போதும் போல் எங்களோடு வந்து விடு என்ற அழைப்பு தான் அங்கு பிரதானமாய் இருந்தது. 'அவனுக்கு வேலை கிடைக்காது. அவனை நம்பி போய் என்ன பண்ணப்போறேன்?'னு கேட்டது கவுசல்யாவுக்கு நினைவுக்கு வந்தது. பெருமிதமாக சொன்னார். 'அவருக்கு வேலை கிடைச்சிருச்சு. சீக்கிரம் சென்னை போகப்போறோம். இப்போ என் பர்த்டேவுக்கு டிரெஸ் வாங்கித்தர்றேன்னு சொன்னார். இப்போ டிரஸ் எடுக்கதான் கிளம்பிட்டு இருக்கோம்'னு சொல்லியிருக்கார்.

அங்குதான் வந்தது பிரச்னை. இவர்கள் எப்படி நன்றாக இருக்கலாம் என நினைத்தார்களோ அல்லது சென்னை சென்று விட்டால் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தார்களோ தெரியவில்லை. உடுமலை பஸ் நிலையம் அருகே துணிக்கடையில் இருந்து வெளியே வந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்தவர்கள்,  அரிவாளால் இருவரையும் சரமாரியாக வெட்டினர். ஓடஓட இவர்களை கொடூரமாக வெட்டியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதில்தான் சங்கர் உயிரிழந்தார். படுகாயமடைந்த நிலையில் கவுசல்யா சிகிச்சை பெற்று வருகிறார்.

காதல் அல்ல... சாதி வெறியாட்டமே காரணம்

ஒரு காதல்தான் இத்தனை அட்டூழியங்களுக்கும் காரணமா என்றால் நிச்சயம் இல்லை. சாதி வெறியாட்டம் தான் காரணம்.  சங்கர் என்ற தலித் இளைஞன், கவுசல்யா எனும் மேல்சாதி என சொல்லப்படும் மற்றொரு சாதி இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதை தான் இது காட்டுகிறது. ஊர் பெரியவர்கள் மூலம், காவல்துறை மூலம் என எப்படியாவது கவுசல்யாவை பிரித்துவிட திட்டமிட்டனர். ஆனால், நாங்கள் இணைந்து வாழ விரும்புகிறோம் என உறுதிபட கூறி மறுத்து விட்டனர் காதல் ஜோடி. ஆனால், அத்தோடு இதை விட யாருக்கும் மனமில்லை. மீண்டும் மீண்டும் மிரட்டல், கடத்தல் என பல வகையில் காதல் ஜோடியை பிரிக்க முயற்சி நடக்கிறது. தான் உறுதியாக நின்று அத்தனையையும் தவிர்க்கிறார் கவுசல்யா. 'அவன் உன்னை வைச்சு காப்பாத்த மாட்டான். நீ நல்லாவே இருக்க மாட்டே' என பல சாபங்களை கடந்துதான், சங்கருக்கு வேலை கிடைத்து, சென்னை செல்ல தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இவர்கள் நன்றாக இருக்க கூடாது என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். சாதி மறுப்புத் திருமணங்கள் தமிழகத்தில் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. சாதியமைப்பை தகர்ப்பதில் இவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுதான் இவர்களுக்கான பிரச்னை. இதுதான் சாதி வெறியை அதிகரிக்கச் செய்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக இருக்கின்றன.

udumalai%20murder03.jpg

நாடக காதல் என்றால் பெண்ணை கொல்வது ஏன்?

காதலித்து கரம் கோர்த்த இவர்கள்,  கண்ணியமாக வாழ வேண்டியதை தடுப்பது ஏன் என்று கேட்டால் இது நாடக காதல் என்கிறார்கள். தங்கள் சாதிப் பெண்ணை மயக்கி, திருமணமும் செய்து கொண்டு பின்பு நட்டாற்றில் கழற்றி விட்டு விடுவதாகவும் சொல்கிறர்கள். அப்படியென்றால் வேலை கிடைத்து வாழ்வை இனிமையாக துவங்க வேண்டிய இவர்களை கொன்றது ஏன்? அப்படியே இளைஞர்தான் ஏமாற்றினார் என்றால், அந்த பெண்ணையும் வெட்டி வீழ்த்த உங்களை தள்ளியது எது?

திருமணமான 8 மாதங்களில் தன் காதல் கணவரை இழந்து விட்டு நிற்கிறார் கவுசல்யா. இப்போது கூட, ''இத்தனைக்கும் காரணம் என் பெற்றோரும், மாமாக்களும்தான். நான் நன்றாக வாழ்வது அவர்களுக்கு பிடிக்கவில்லை" என வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

"இந்த கல்யாணத்துல எங்க அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. முதல்ல என்னை கடத்திட்டதாக சங்கர் மேல புகார் கொடுத்தாங்க. ஆனா, நான் மேஜருங்கறதாலயும், நான் அவரோடதான் போவேன்னு சொன்னதாலேயும் என்னை பிரிக்க முடியலை. தொடர்ந்து என் கணவரை பத்தி தப்பா சொல்லியும், சாதி பெருமை பேசியும் என்னை கூப்பிட்டாங்க. நான் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கலை. கண்டிப்பா வரமாட்டேன்னு சொல்லிட்டேன். கெஞ்சியும், மிரட்டியும் பாத்து நான் ஒத்துக்காததால எங்களை கொல்ல முடிவு பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு நான் முக்கியமில்லை. சாதியும், வறட்டு கவுரமும்தான்.

ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே எங்களை துரத்துனாங்க. அப்போ தப்பிச்சிட்டோம். கல்யாணம் ஆகி 8 மாசமாகிட்டதால இனி எந்த பிரச்னையும் இருக்காது. நல்லா வாழலாம்னு நினைச்சோம். இப்படி பண்ணிட்டாங்க. இதுக்கு என் அப்பா, அம்மா, மாமாக்கள்தான் காரணமா இருப்பாங்க" என தனது உடல் பிரச்னைகளை மறந்து ஆவேசமாக முறையிடுகிறார் கவுசல்யா.

இந்த சமூகம் சாதி வெறிப்பிடித்த சமூகமாக மாறிக்கொண்டிருப்பதை தடுத்து நிறுத்தும் கடமை அரசுக்கும், வாக்கு கேக்க தயாராகும் அரசியல் அமைப்புகளுக்கும் உள்ளது.

இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்காதிருக்கும் வகையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை பாய வேண்டும்.

http://www.vikatan.com/news/tamilnadu/60561-udumalai-honour-killing-victims-statement.art

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

'இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே...' - கவிஞர் பழனி பாரதியின் 'சுளீர்' கவிதை!

palanibharathi%20250.jpgடுமலையில் நிகழ்ந்த ஆணவக் கொலை தமிழகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்கள் மற்றும் ஆதங்கத்தினை பதிவுசெய்துவருகின்றனர். 

திரைப்படக் கவிஞர் பழநிபாரதி இந்த சம்பவம் குறித்து தனது முகநூலில்  பதிவிட்டுள்ள 'சுளீர்' கவிதை இங்கே...

---------------------------------------

வனது இரத்தத்தை...
அவளது கண்ணீரை...

பார்க்க கண்கள் இல்லை...
துடைக்க கைகள் இல்லை...
பேச வாயில்லை...
நினைக்க இதயமும் இல்லை...
இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே

- பழநிபாரதி

http://www.vikatan.com/news/tamilnadu/60567-udumalai-honour-killing-palanibharathis-poem.art

  • தொடங்கியவர்

இரண்டு வருடத்தில் 81 ஆணவக் கொலைகள்... பகீர் தகவல்!

murder%20for%20love%20300.jpgமிழகத்தில் ஆணவக் கொலை வெறியாட்டங்கள் தொடர்கின்றன. இந்த பட்டியலில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பட்டப்பகலில் நடந்த கொலை பதறவைக்கிறது. இந்தக் கொலை பாதகம் அரங்கேறும் காட்சியின் வீடியோ பதிவு வாட்ஸ் அப்பில் பரவி மேலும் பதற்றத்தை கூட்டி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த சின்னசாமி என்பவரது மகள் கவுசல்யா. இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப்பிறகு இருவரும் குமரலிங்கத்தில் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று 13-ம் தேதி சங்கர்-கவுசல்யா இருவரும் மளிகைப் பொருட்கள் வாங்க சென்றனர். அப்போது நாலைந்து பேரால் வழிமறிக்கப்பட்ட சங்கர் கொடூரமாக வெட்டப்பட்டார். அவர்களை தடுத்த சங்கரின் மனைவி கவுசல்யாவுக்கும் வெட்டு விழுந்துள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம், அங்கு நின்று கொண்டிருந்தவர்களை குலைநடுங்க செய்தது. காதல் தம்பதியை வெட்டி சாய்த்த கொலையாளிகள் எந்த பயமும் இல்லாமல் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளை தோளில் தொங்கவிட்டபடி தப்பிச்சென்றனர்.

#‎TNHonourkilling

மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சங்கர், ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். கவுசல்யா கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

shankar%20600%201.jpg

தலித் சமூகத்தை சேர்ந்த சங்கர், பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்த கவுசல்யாவை காதலித்து திருமணம் செய்ததுதான் கொலைக்கு காரணம். இந்தக்கொலைக்கான பின்னணியில் கவுசல்யாவின் தாய்மாமன் பாண்டித்துரை இருப்பதாக தகவல் வருகிறது. இந்நிலையில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி நிலக்கோட்டை கோர்ட்டில் சரணடைந்துள்ளார். கொலையாளிகள் எந்தவொரு பதற்றமோ, மனிதாபிமானமோ இல்லாமல் வந்து சென்றுள்ளனர்.

சாதி மாறி திருமணம் செய்தால் கொலைதான் தண்டனை  என்று மீண்டும் சமூகத்துக்கு சாதி வெறியர்கள் அறிவித்துள்ளார்கள். தேர்தல் வேலைகள் தீவிரமடைந்திருக்கும் நிலையில்,  இந்த ஆணவக்கொலைகள் பற்றி ஒவ்வொரு அரசியல் கட்சியும்  என்ன மாதிரியான நிலைப்பாடு எடுக்கும் என்று தெரியவில்லை. எல்லோருடைய வாக்கும் அவர்களுக்கு தேவை.

murder%20600%201.jpg

சங்கர் படுகொலை விவகாரத்தில் நீதி கேட்டு மக்கள் போராடி வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து சமூகச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் கூறுகையில், “ வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும்,  கவுசல்யாவும் ஒன்றாக படிக்கும்போது காதலித்து விரும்பி திருமணம் செய்திருக்கிறார்கள். ஆரம்பத்திலிருந்து இருவருக்கும் மிரட்டல் வந்திருக்கிறது.

இடையில் பெண்ணை கடத்தி விட்டார் என்று சங்கர் மேல் பொய் புகார் கொடுத்திருக்கிறார்கள். அந்த பெண் என்னை யாரும் கடத்தவில்லை என்று சொல்லியிருக்கிறார். அதோடு எனக்கு மகள் இல்லை என்று கூறிவிட்டு கௌவசல்யாவின் பெற்றோர் கோபத்துடன் சென்று விட்டனர்.

Evidance%20kathir%20200.jpgஆனாலும் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் படுகொலை நடந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் எந்தவொரு ஆணவக்கொலை குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை, அந்த தைரியம்தான் இதுபோன்று கொடூரங்கள் தொடர காரணமாக உள்ளன.

இந்த ஆணவ கொலைகளை தடுக்க தனி சட்டம் கொண்டு வரவேண்டும். இந்தியாவில் 22 மாநிலங்கள் ஆணவக்கொலைகள் நடப்பதாக ஒப்புக்கொண்டுள்ளன. 2013 லிருந்து இதுவரை தமிழகத்தில் 81 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன. 

இதில் கொலை செய்யப்பட்டவர்களில் 80 சதவீதம் பெண்கள். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம், இளவரசன், கோகுல்ராஜ், இப்போது சங்கர் வரிசையாக பார்த்துக் கொண்டே வருகிறோம். .....’’ என்கிறார் வேதனையுடன்.

http://www.vikatan.com/news/tamilnadu/60551-81-honour-killings-occured-in-the-span-of-years.art

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களுக்கு ஒரே தண்டனைதான். ஆயுள் பூராவும் ஜெயிலில் தள்ளி, அங்கே குறைந்த சாதி என இவர்களால் சொல்லப்படும் சாதியை சேர்ந்த கைதிகளின் கழிவறையை தினமும் துப்பரவு செய்யும் படி செய்ய வேண்டும். கூடவே மாதம் ஒருமுறை சொந்த ஊரில், மாற்றுசாதிக்காரர் பகுதியில், ரோட்டு கூட்ட வைக்க வேண்டும்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்

உடுமலைப் பேட்டை இளைஞர் கொலை, மனைவியின் தந்தை சரண்

160314104701_india_honour_killing_512x28
Image caption காயங்களுடன் உயிர்தப்பிய கவுசல்யா

தமிழகம், உடுமலைப் பேட்டையில் ஜாதி மாறி திருமணம் செய்துகொண்டதால் ஷங்கர் என்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சங்கரின் மனைவி கவுல்யாவின் தந்தை சின்னச்சாமி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். இருந்தபோதும் இந்தக் கொலைக்கும் சின்னசாமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவரது வழக்கறிஞர் சதீஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

சின்னச்சாமியை மார்ச் 21ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்ட நபர்களை திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் தனிப்படைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை தங்களிடம் தாக்கல் வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆகியவை தமிழக அரசுக்கு கோரியுள்ளன.

இதனிடையே, உடுமலைப்பேட்டையில் கொல்லப்பட்ட தலித் இளைஞர் சங்கரின் தந்தை வேலு, இது திட்டமிடப்பட்ட கொலை தான் என செய்தியாளர்களிடம் உறுதியாக குற்றம் சாட்டினார்.

பெண்ணின் குடும்பத்தார் பலமுறை மிரட்டல் விடுத்துவந்ததாக குறிப்பிட்ட அவர், பொறியியல் மாணவரான தமது மகனின் இறப்பு, தங்கள் குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றும் தெரிவித்தார்.

சங்கரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் இந்த விவகாரத்தில் தமிழக அரசை குற்றம் சாட்டுகின்றனர்.

கௌரவக் கொலைகளை தடுக்கவும் ஜாதி ரீதியான கொலைகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தி நீதி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டப்படுகின்றது.

இதனிடையே, இன்று செய்தியாளர்களின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இந்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததும் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். அவருக்கு வயது 22. நேற்று ஞாயிறன்று மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் மூன்று பேர் கொண்ட கும்பலால் அவர் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார்.

பொள்ளாச்சியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த அவர், பழனியைச் சேர்ந்த கவுசல்யா என்ற 19 வயது பெண்ணை காதலித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். இருவரும் வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள்.

சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண் வீட்டில் இவர்களின் காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் அதையும் மீறி திருமணம் செய்துகொண்ட இருவரும் தனியாக வசித்து வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

http://www.bbc.com/tamil/india/2016/03/160314_udumalai_killing?ocid=socialflow_facebook

  • கருத்துக்கள உறவுகள்

சாதி ஒழிக்கிறோம் என்ற போலிக் கூச்சலோடு.. தமிழகத்தில் தமிழர்களைடே சாதியை ஆழப்படுத்தி அவர்களைப் பிரித்தாள திராவிடக் கட்சிகளும் ஹிந்திய தேசியக் கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக நடத்திய கொடுங்கோண்மையின் விளைவுகள் இவை.

நாம் தமிழர் போன்ற சாதிகளற்ற சமத்துவமான தமிழர் அரசியல் தமிழகத்தில் பலம்பெற்றால் அன்றி.. இந்தக் கொடுமைகளை  அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது.

முன்னொரு காலத்தில் ஈழத்திலும் இதே நிலை. பின்னர் அது கனடாவுக்கும் போனது. விடுதலைப்புலிகள் பலம்பெற்ற போது ஈழத்தில் மெளனித்துப் போன சாதியம்.. இன்று மீண்டும் தலைகாட்டச் செய்யப்படுகிறது. இதற்கு ஆக்கிரமிப்பு சக்திகளின் ஆசீர்வாதங்களும் உண்டு. இதே நிலை தான் தமிழகத்திலும். பன்னெடுங்காலமாக இந்தச் சாதிய மாயை தமிழர்களைப் பலவீனப்படுத்தி பிரித்தாளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையை எதிரிகளும் தமக்குச் சார்ப்பாகப் பாவிக்கின்றனர். எதிரிகளுக்கு வால்பிடிக்கும் தமிழர்களும் இதனைப் பாவிக்கின்றனர்.. இன அக்கறையின்றி. 

இன்னும் கொஞ்சப் பேர் சாதியத்தை அழிக்கிறம் என்ற போர்வையில்.. அதனை விதைக்க மறைமுகமாக இயங்கியும் வருகின்றனர். அதன் மூலம் வெளிப்படையாக தம்மை புரட்சியாளர்கள் என்று காட்டிக்கொண்டு அல்லது தம்மை சுயவிளம்பரப்படுத்திய படி.. சமூகப் பிற்போக்குத் தனங்களை நாசூக்காக விதைத்து வருகின்றனர். ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்தபடி. இந்த தீயசக்திகளும் சாதியம் மறக்கப்பட மெளனிக்கப்பட ஒழிக்கப்பட முடியாமல் செய்கின்றனர். tw_warning:

Edited by nedukkalapoovan

Edited by raja.m1982

  • தொடங்கியவர்

கணவர் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்: போலீசாரிடம் மன்றாடும் கௌசல்யா

 
 

kousalya%20sankar.jpgகோவை : கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என ஆணவக்கொலை தாக்குதலில் படுகாயமடைந்த கௌசல்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என்று கூறி அவரை அனுமதிக்க போலீசார் மறுப்பதால் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே  கொமரலிங்கத்தில் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சங்கரின் உடலை வைத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாதி மாறி காதலித்து, திருமணம் செய்து கொண்டதால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் திருப்பூர் மாவட்டம் உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் எனும் 22 வயது இளைஞர். அவரோடு அவரின் காதல் மனைவி கவுசல்யாவும் கொடூரமான கொலை வெறித் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பட்டப்பகலில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்த இடத்தில் 3 பேர் சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். சிசிடிவியில் பதிவான தாக்குதல் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கடும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று பல இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடந்தன.. உடலை வாங்க மறுத்து சங்கரின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். பல மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு உறவினர்களைச்  சமாதானப்படுத்தி உடலை ஒப்படைத்தனர்.  உடனடியாக இறுதி சடங்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

போலீஸ் பாதுகாப்போடு சங்கரின் உடல், சொந்த ஊரான கொமரலிங்கத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. உடல் ஊருக்குக் கொண்டு செல்லப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போலீசார் உத்தரவுப்படி நேரடியாக எரியூட்டும் மயானதுக்குக்  கொண்டு செல்லப்பட்டது. உடலை எரியூட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கு அப்பகுதி இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடலை எரியூட்ட வைத்திருந்த பொருட்களை அகற்றினர். டியூப் லைட் உள்ளிட்ட சில பொருட்களையும் சேதப்படுத்தி உடலை எரியூட்ட எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையடுத்து உடல் மீண்டும் ஊருக்குள் ஊர்வலமாகக்  கொண்டு வரப்பட்டது. அங்கு உடலை வைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கௌசல்யா, தனது கணவர் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதி கோரினார். ஆனால் போலீசாரால்  அனுமதி மறுக்கப்பட்டதாகத்  தெரிகிறது.

இந்நிலையில் அவரை சந்தித்த சிலர், கௌசல்யாவை சங்கரின் இறுதி சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் அதற்கு போலீசார் மறுத்து விட்டனர். கௌசல்யா அங்கு சென்றால் தேவையில்லாத பதற்றம் உருவாகும் என போலீசார் கருதுகின்றனர். இந்நிலையில் தன்னை அனுமதித்தே ஆக வேண்டும் என தொடர்ச்சியாக மன்றாடி வருகிறார் கௌசல்யா.

ஒரு புறம் உடலை ஊருக்குள் கொண்டு செல்லாமல் நேரடியாக சங்கரின் உடலை மயானம் கொண்டு சென்று எரித்து விடுவது செய்வது என்ற திட்டம் பொய்த்து விட்ட நிலையில்,  மறுபுறம் கௌசல்யா இறுதிச்  சடங்கில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என கோரி வருவதும் போலீசாருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

கௌசல்யா நல்ல உடல் நிலையோடு இருக்கிறார். அபாய கட்டத்தை அவர் தாண்டி விட்டார். ஆனால் கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க அனுமதி மறுப்பது நியாயமற்றது என மாதர் சங்கம், தலித் விடுதலை கட்சி ஆகியவை கோரியுள்ளன. இதனால் பதற்றம் நீடிக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/60577-kousalya-want-participate-for-her-husband-funeral.art
 

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான காணொளியும் உள்ளது.. tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்

இவரெல்லாம் ஒரு தமிழ்தேசியவாதி - இவர்கூட கூட்டணி வைக்கிறதில் தனக்கு சங்கடமில்லை என்கிறார் இன்னொரு முருகனின் பேரன்.

தலித் இளைஞர் படுகொலை: ராமதாஸுக்கு முக்கியச் செய்தி இல்லையாம்

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-ramadoss-refuses-answer-248968.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, nedukkalapoovan said:

சாதி ஒழிக்கிறோம் என்ற போலிக் கூச்சலோடு.. தமிழகத்தில் தமிழர்களைடே சாதியை ஆழப்படுத்தி அவர்களைப் பிரித்தாள திராவிடக் கட்சிகளும் ஹிந்திய தேசியக் கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக நடத்திய கொடுங்கோண்மையின் விளைவுகள் இவை.

நாம் தமிழர் போன்ற சாதிகளற்ற சமத்துவமான தமிழர் அரசியல் தமிழகத்தில் பலம்பெற்றால் அன்றி.. இந்தக் கொடுமைகளை  அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது.

முன்னொரு காலத்தில் ஈழத்திலும் இதே நிலை. பின்னர் அது கனடாவுக்கும் போனது. விடுதலைப்புலிகள் பலம்பெற்ற போது ஈழத்தில் மெளனித்துப் போன சாதியம்.. இன்று மீண்டும் தலைகாட்டச் செய்யப்படுகிறது. இதற்கு ஆக்கிரமிப்பு சக்திகளின் ஆசீர்வாதங்களும் உண்டு. இதே நிலை தான் தமிழகத்திலும். பன்னெடுங்காலமாக இந்தச் சாதிய மாயை தமிழர்களைப் பலவீனப்படுத்தி பிரித்தாளப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையை எதிரிகளும் தமக்குச் சார்ப்பாகப் பாவிக்கின்றனர். எதிரிகளுக்கு வால்பிடிக்கும் தமிழர்களும் இதனைப் பாவிக்கின்றனர்.. இன அக்கறையின்றி. 

இன்னும் கொஞ்சப் பேர் சாதியத்தை அழிக்கிறம் என்ற போர்வையில்.. அதனை விதைக்க மறைமுகமாக இயங்கியும் வருகின்றனர். அதன் மூலம் வெளிப்படையாக தம்மை புரட்சியாளர்கள் என்று காட்டிக்கொண்டு அல்லது தம்மை சுயவிளம்பரப்படுத்திய படி.. சமூகப் பிற்போக்குத் தனங்களை நாசூக்காக விதைத்து வருகின்றனர். ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்தபடி. இந்த தீயசக்திகளும் சாதியம் மறக்கப்பட மெளனிக்கப்பட ஒழிக்கப்பட முடியாமல் செய்கின்றனர். tw_warning:

உண்மைதான் நெடுக்கர்! விடுதலைப்புலிகளின் காலத்தில் சாதீயம் தலைகாட்டவேயில்லை. சாதி கதைத்தவர்களுக்கு  விழிப்புணர்வு கொடுக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்

உடுமலை ஆணவக் கொலையில் கூண்டோடு சிக்கிக் கொண்ட கொலையாளிகள்!

உடுமலையில் காதல் திருமணம் செய்து கொண்ட வாலிபர் பட்டப்பகலில் கொடூரமாக கொலை செய்த கொலையாளிகள் 4 பேரை திண்டுக்கல்லில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பெண்ணின் தாயார், மாமாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பவரது மகள் கவுசல்யா (19) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கவுசல்யாவின் திருமணம் நடந்தது.
 


Udumalai%20murder%20Criminals.jpg

ந்த நிலையில், இவர்கள் இருவரும் கடந்த 13ம் தேதி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகே சாலையை கடக்க நின்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், கவுசல்யாவையும், சங்கரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சங்கர் சம்பவ இடத்திலேயே பலியானார். கவுசல்யா படுகாயமடைந்தார். கொலையாளிகள் சர்வ சாதாரணமாக பைக்கில் ஏறி தப்பி சென்றனர். பொதுமக்கள் முன்னிலையில், பட்டப்பகலில் நடந்த இந்த கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து கொலையாளிகள் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி என்ற பகுதியில் பதுங்கி இருந்த கொலையாளிகள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரை தனிப்படையினர் இன்று காலை செய்தனர்.

இதனை உறுதி செய்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர், கொலையாளிகளின் பெயர்களை தற்போது வெளியிட முடியாது. 24 மணி நேரத்தில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம் என்றார்.

இதனிடையே, கொலையாளிகள் 4 பேரும் ரகசிய இடத்தில் வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்த கொலையில் தொடர்புடைய கவுசல்யாவின் தந்தை சின்னசாமி நிலக்கோட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை நடப்பதற்கு ஒருநாள் முன்பே பழனியில் உள்ள கவுசல்யாவின் பெற்றோர் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. திட்டமிட்டே இந்த கொலையை கவுசல்யாவின் பெற்றோர் நடத்தியுள்ளனர். தற்போது கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/60616-person-arrested-udumalai-honour-murder-case.art

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் பெரிய கோயிலில் கோபுரத்தில்
நிறைய புறாக்கள் வாழ்ந்து வந்தன,

திடீரென்று கோயிலில் திருப்பணி நடந்தது
அதனால் அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு
இடம் தேடி பறந்தன 

வழியில் ஒரு தேவாலயத்தை கண்டன 
அங்கு சில புறாக்கள் இருந்ததன 

அவைகளோடு இந்த புறாக்களும்
அங்கு குடியேறின.
சில நாட்கள் கழித்து கிறிஸ்துமஸ்
வந்தது.

தேவாலயம் புதுப்பிக்க தயாரானது

இப்போது இங்கு இருந்து சென்ற
பறவைகளும் அங்கு இருந்த பறவைகளும்
வேறு இடம் தேடி பறந்தன .

வழியில் ஒரு மசூதியை கண்டது அங்கும்
சில புறாக்கள் இருந்தன.
அவைகளோடு இந்த புறாக்களும் குடியேறின 

சில நாட்கள் கழித்து ரமலான் வந்தது 
வழக்கம் போல் இடம் தேடி பறந்தன.

இப்போது மூன்று இடத்திலும் உள்ள
புறாக்களும் கோயிலில் குடியேறின.

கீழே மனிதர்கள் சண்டை போட்டு ஒருவரை
ஒருவர் வெட்டி சாய்த்துக்கொண்டு இருந்தனர்.

ஒரு குஞ்சுப்புறா தாய் புறாவுடன் கேட்டது 
"ஏன் இவர்கள் சண்டை போடுகிறார்கள் ?"
என்று...

அதற்கு அந்த தாய் புறா சொன்னது "நாம்
இங்கு இருந்த போதும் புறா தான்,
தேவாலயத்துக்கு போனபோதும் புறா
தான், மசூதிக்கு போன போதும் புறா தான் ",

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு 
போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம், 
இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது

  • கருத்துக்கள உறவுகள்

10173721_852556734870509_757199082669954

வெட்டிக்கொலை செய்தவரகள்

  • தொடங்கியவர்

ஆணவக்கொலை: 'யாரைக்கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள்...?'

 
 

udumalai%20murder01.jpg டுமலையில் நடந்த சாதி வெறியாட்ட படுகொலை விவகாரத்தை, மீண்டும் விஸ்வரூபமெடுக்க விடாமல் அடக்கி வைக்கப்பதற்காக படாதபாடுபடுகின்றனர் போலீசார்.

சாதி மாறி காதலித்து, திருமணம் செய்தார் என்ற காரணத்துக்காக நூற்றுக்கணக்கானோரின்  முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் உடுமலை கொமரலிங்கத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர். அவரோடு அவரது காதல் மனைவி கவுசல்யாவும் தாக்குதலுக்குள்ளானார். படுகாயமடைந்த கவுசல்யா,  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் வெட்டுக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட இவர், நினைவோடுதான் இருந்து வருகிறார்.

"கவுசல்யாவுக்கு அறுவை சிகிச்சை எதுவும் இப்போதைக்கு தேவையில்லை. அவர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்.  தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை செய்யப்படும். மற்றபடி அவர் நலமோடும், நல்ல நினைவோடும் இருக்கிறார்" என மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆனால், இவரை சந்திக்க கடந்த இரு தினங்களாக யாரையும் காவல்துறை அனுமதிப்பதில்லை. 2 இன்ஸ்பெக்டர் தலைமையில் 10 போலீசார் கவுசல்யா அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

கணவரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க கவுசல்யா மன்றாடிய போதும் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்க என சொல்லப்பட்டாலும்,  இந்த பிரச்னையை இன்னும் பெரிதுபடுத்தாமல் இருக்க கவுசல்யாவை மற்றவர்கள் சந்திக்காதது நல்லது என போலீஸ் நினைக்கிறது. அதுதான் இருதினங்களாக யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை.

இன்று காலை பல்வேறு அமைப்பினர் கவுசல்யாவை சந்திக்க முற்பட,  அதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் அவர்கள் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஒருவர் மட்டும் அனுமதிக்கப்பட்டார். செல்போன் எதுவும் கொண்டு செல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன், போலீஸ் முன்னிலையில் பேச அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது கவுசல்யா இந்த சம்பவத்துக்கு எனது அப்பா, அம்மாதான் காரணம் எனக் கூறியுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்த சிசிடிவி வீடியோ காட்சிதான் காரணம். அது வெளியான உடனே போலீசார் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினர். யாரைக்கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள் என சிசிடிவி கேமராவை பொருத்திய வர்த்தக நிறுவனத்தினரை எச்சரித்தார்கள். அதன்பின்னர் உஷாரான போலீசார், எந்த வகையிலும் இந்த செய்தி மீண்டும் விஸ்வரூபமெடுக்க கூடாது என்பதால்தான், கவுசல்யாவை சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. குறிப்பாக மீடியாக்களுக்கு.

அடுத்து,  இறந்த சங்கரின் உடலை தகனம் செய்து விட வேண்டும் என போலீசார் துடித்தனர். அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் இருந்து சங்கரின் உடலை வீட்டுக்கு கொண்டு செல்லாமல் எரியூட்டும் மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் உடலை எரியூட்ட விடாமல் போராடி,  உடலை மீண்டும் ஊருக்குள் கொண்டு சென்றனர் அப்பகுதி மக்கள். 'யாரைக்கேட்டு உடலை எரிக்க முயல்கிறீர்கள்? அடக்கம் தான் செய்ய வேண்டும்' என்றார்கள் மக்கள். சரி என போலீசார் ஒப்புக்கொள்ள, 'முதலில் குற்றவாளிகளை கைது செய்யுங்கள்;  அதன் பின்னர் அடக்கம் செய்யலாம்' எனச் சொல்ல அதிர்ந்து போனது போலீஸ்.

இரவு கடந்தும் நீண்டது போராட்டம். எப்படியாவது இரவுக்குள் அடக்கம் செய்து விட வேண்டும் என நினைத்தனர் போலீசார். ஐ.ஜி. உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தியும் எந்த பலனும் இல்லை. இனியும் தாமதித்தால் மீண்டும் போராட்டம் திசைமாறலாம் என நினைத்தார்களோ என்னவோ, இரவு 11 மணிக்கு தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து, போலீசாரே உடலை அடக்கம் செய்ய இடுகாடுக்கு கொண்டு சென்றனர்.

உறவினர்களையும் அழைத்து சென்று, இறுதி சடங்கை நடத்தி முடித்த பின்னரே போலீசார் நிம்மதியடைந்தனர். தற்போதைய சூழலில் கவுசல்யா மீண்டும் பேசினால் அது பதற்றத்தை உருவாக்குமென்பதால் அவரை யாரும் சந்திக்க போலீசார் மறுத்து வருகின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/60640-police-tries-coverup-udumalai-honour-killing-issue.art

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு அரசு, பொலிஸ்படை அதை விட சாதி பெயரில் கட்சி வளர்த்து வயிறு வளர்க்கும் அரசியல் வாதிகள் அனைவருமே வெட்கப் பட வேண்டிய சம்பவம்! 

  • தொடங்கியவர்

கொலையை கொண்டாடும் சமூகத்திலா நாம் வாழ்கிறோம்?

 

ல நூறு கண்கள் உற்று நோக்க அரங்கேறியுள்ளது அந்த கொடூரக் கொலை. அங்கிருந்த கண்காணிப்பு கேமராவின் கண்களில் பதிவான காட்சிகள் நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரை சென்றடைந்துள்ளது. சர்வ சாதாரணமாக கணவனையும், மனைவியையும் அரிவாளால் வெட்டி சாய்த்து விட்டு, நிதானமாக இரு சக்கர வாகனத்தில் ஏறி மூன்று பேர் தப்பி செல்லும் காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது. சாதியின் வெறியாட்டத்தால் நிகழ்ந்த இந்த கொடூரக் கொலையால் தேசமே அதிர்ந்து நிற்கிறது.

இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு முன்னோடியாக  திகழ்ந்த தமிழகத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி,  தமிழகம் பின்னோக்கி செல்வதாக தேசிய ஊடகங்கள் விமர்சிக்க துவங்கி விட்டன. எல்லோரும் வெட்கி தலை குனிய வேண்டிய தருணம் இது. ஆனால், இந்த நேரத்திலும் ஒரு தரப்பு இந்த கொடூரக் கொலையை கொண்டாடுகிறது என்றால், நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்ற கேள்வி உருவாவதை தவிர்க்க முடியவில்லை.

udumalai%20facebook01.jpg

கொலையாளிகளை வாழ்த்தி பதிவு

உடுமலையில் காதல் ஜோடியை வெட்டி வீழ்த்திய சில நிமிடங்களில் முகநூல் புத்தகத்தில் 'வெட்டியவர் நீடூடி வாழ்க' என பதிவிட்டார் ஒருவர். இந்த கொடூரக் கொலையை வரவேற்பதாகவும், இதைத்தான் எதிர்பார்த்தோம் என்ற ரீதியிலும் பல பதிவுகள் குவிந்தன. இதற்கு வந்த பின்னூட்டங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவே அமைந்தன. அடுத்த சில நிமிடங்களில் பதிவுகள் இன்னும் மோசமான நிலையை எட்டியது.

'இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. எந்த சாவு விஷயமும் காதுல விழலையேனு இருந்தேன். அப்பாடா. இந்த கருமாந்திரங்களை வெட்டி என் காதுல தேன் ஊத்திட்டாங்க. அவர்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துகள்" என்றும், 'எவனாவது எங்க *** பொண்ணை தொட்டா அந்த இடத்துல அருவா மட்டும்தான் பேசும்' என துவங்கி அச்சிட முடியாத வார்த்தைகளால் விரிகிறது அந்த பதிவு. இந்த கொலை தங்கள் சாதியின் பெருமையை உயர்த்தி விட்டதாக பெருமை பீத்திக்கொண்டனர். இவர்கள் அனைவரும் சாதி அமைப்புகளிலும், கட்சியிலும் அங்கம் வகிப்பவர்கள். சுருக்கமாக சொன்னால் சாதியை வைத்து அரசியல் நடத்துபவர்கள்.

udumalai%20facebook02.jpg

சாதி அமைப்புகள் மட்டுமா காரணம்?

தமிழகத்தில் சாதி ஒழிப்பை முன்னெடுத்தவர் தந்தை பெரியார். கலப்பு திருமணம் என்ற வார்த்தையே அவர் எதிர்த்தார். 'மாட்டுக்கும் மனிதருக்குமா கல்யாணம் பண்றோம். மனிதருக்கும் மனிதருக்கும் தானே' என சொன்னவர் சாதி மறுப்பு திருமணம் என்ற பெயரையும் முன்மொழிந்தார். பெரியார் தலைமையிலான திராவிட இயக்கம் மட்டுமல்லாது,  பொதுவுடமை இயக்கங்களும், காங்கிரசும் கூட தமிழகத்தில் சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்தன.

இன்னும் இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பெயருக்கு பின்னால் சாதியை இட்டுக்கொள்ளும் வழக்கம் இருந்து வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும்தான் சாதி பெருமையை பின்னால் போட்டுக்கொள்வது என்பது இழிவான ஒன்றாக கருதப்படும் நிலை உருவானது என்றால், அதற்கு பெரியார் போன்றவர்கள் மேற்கொண்ட சாதி ஒழிப்பு போராட்டங்களே காரணம்.

இதற்கு சாதிக்கட்சிகள்தான் காரணமா என்றால், இருக்கலாம். ஆனால், அவர்கள் மட்டுமே காரணமில்லை என்பதுதான் முக்கியம். பெரியார், சாதியை எதிர்த்து போராடியபோது சாதி அமைப்புகள் இருந்தன. சொல்லப்போனால் வலுவாக இருந்தது. ஆனால், அப்போது இருந்த அரசியல் தலைவர்கள் சாதியை நேரிடையாக எதிர்த்தனர். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ்.

உடுமலை ஆணவக்கொலை குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி கேட்டால், 'முக்கியமான செய்தி சொல்லியிருக்கிறேன். முதலில் அதைப் போடுங்கள்' எனச்சொல்லி வெளியேறுகிறார். ராமதாஸூக்கு, தேசத்தையே உறைய வைத்த செய்தி முக்கியமாக படவில்லை. ராமதாஸூக்கு சாதி பின்புலம் இருக்கிறது. அவர் சாதி அரசியல் மேற்கொண்டவர் என்பதால் அவர் தவிர்த்திருக்கலாம்.

ஆனால் தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற கட்சிகளின் நிலை இதில் என்னவாக இருந்தது? கோவையிலும், உடுமலையிலும் தேசிய ஊடகங்கள் எல்லாம் படையெடுத்துள்ளன. தமிழக தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது, வட இந்திய ஊடகங்களிலும் பெரும் விவாதப்பொருளானது இந்த சாதியப் படுகொலை. ஆனால், தமிழகத்தில் ஆண்ட, ஆள்கின்ற கட்சிகள் இதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளவில்லை. இப்போது சொல்லுங்கள் நாம் பின்னோக்கி செல்ல சாதிய கட்சிகள் மட்டுமா காரணம்?

udumalai%20facebook03.jpg

சாதி ரீதியிலான ஒரு கொலை வழக்கில் போலீஸாரால் தேடப்பட்டுக்கொண்டிருந்த ஒருவர், அந்த கொலைக்கு காரணமானவர் என நம்பப்படும் ஒருவர், வாட்ஸ் அப் வழியாக பேட்டிக் கொடுக்கிறார்; தொலைக்காட்சிகளுக்கு பேட்டி கொடுக்கிறார்.  அவர் ஒரு கதாநாயகன் போல போலீசில் சரணடைகிறார். இவரை ஒரு தரப்பு கொண்டாடுகிறது. தொலைக்காட்சியிலும், வாட்ஸ் அப்பிலும் பேட்டிக்கொடுப்பவரை ஆளும் அரசின் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை ஏன் கைது செய்யவில்லை என கேட்கும் துணிவும் எதிர்கட்சியான தி.மு.க.வுக்கோ, இன்னும் சில கட்சிகளுக்கோ இல்லை. இவர்கள் இயங்குவது எல்லாம் சாதி ரீதியில்தான்.

கொலையை ஊக்குவிக்கும் முயற்சிதான் இது

முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு பெரும் சாதி கலவரம் ஏற்படும் போது அதை தடுக்க எதுவும் செய்யாமல் அமைதியாக இருப்பார் முதல்வர் ரகுவரன். 'என் நாற்காலியில இருக்குற 4 கால்ல ஒரு கால் சாதி அமைப்புகளோடது. அவர்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது' என சொல்வார். அந்த நிலைதான் இப்போது நடக்கிறது. வாக்கு வங்கியை குறிவைத்தே அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. அதுதான் இப்படி ஒரு மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

சாதிய கட்டமைப்பில் இருந்து நாம் மெல்ல மெல்ல விடுபட்ட நிலை மாறி, மீண்டும் பின்னோக்கி சென்று சாதிய கட்டமைப்பில் சிக்கிக்கொள்ளுவோமா என்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது தற்போது நிகழும் சம்பவங்கள். சமூக வலைதளங்களில் இந்த கொடூர கொலையை ஆதரித்து எழும் குரல்கள், அடுத்தடுத்த கொலைகளை ஊக்குவிக்கும் முயற்சிதான் என்பதை நாம் உணர்ந்தபாடில்லை.

இந்த கொலைக்காட்சியை கண்டு மிகப்பெரும்பாலானோர் துடிக்கிறார்கள். ஆனால், ஒரு சிலரின் இந்த பதிவு வேறு வகையிலான கற்பிதங்களை ஏற்படுத்த முயற்சிக்கிறது. ஆண்ட, ஆளும் கட்சிகள் மவுனமாய் இருந்து அதற்கு துணைபோகிறார்கள். நாம் தெளிவாக இருக்க வேண்டிய தருணம் இது. சாதிய கட்டமைப்பை உடைத்து மனிதம் வளர்க்க வேண்டிய நேரம் இது. இல்லாவிட்டால் நாம் கற்காலத்தை நோக்கி பயணிப்பவர்களாக மாறி விடுவோம்.

சாதி மறந்து மனிதம் வளர்ப்போம் வாருங்கள்...!
http://www.vikatan.com/news/tamilnadu/60632-are-we-living-in-society-that-celebrates-killing.art

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

தமிழ் நாட்டு அரசு, பொலிஸ்படை அதை விட சாதி பெயரில் கட்சி வளர்த்து வயிறு வளர்க்கும் அரசியல் வாதிகள் அனைவருமே வெட்கப் பட வேண்டிய சம்பவம்! 

ஐயனே! நீங்கள் அமெரிக்கா எண்டபடியாலை கேக்கிறன்.  இனவெறிக்கும் சாதி வெறிக்கும் என்ன வித்தியாசம்?

உலகம் உருண்டை எல்லா நாடுகளிலும் எல்லாம் இருக்கின்றது.....

பேச்சுக்களும் நடக்கும் விதங்களும் இன மொழி மத பணங்களுக்கேற்ப வேறுபடுகின்றது.

அவ்வளவேதான் :cool:

  • தொடங்கியவர்

'கவுசல்யாவின் அப்பா சொல்லித்தான் கொன்றோம்!'- 5 பேரின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

 
 

கோவை: உடுமலை ஆணவக்கொலையில் தொடர்புடைய 5 பேரை கைது செய்துள்ள போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை செய்ததாக 5 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

3.jpg

சாதி மாறி காதலித்து, திருமணம் செய்த காரணத்துக்காக தலித் இளைஞர் சங்கர், அவரது மனைவி கவுசல்யா ஆகியோரை கடந்த 13-ம் தேதி பட்டப்பகலில் உடுமலை பஸ் நிலையம் அருகே மர்ம கும்பல் கொடூரமாக வெட்டியது. இதில் சங்கர் உயிரிழக்க, படுகாயமடைந்த கவுசல்யா கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கவுசல்யா அளித்த புகாரில்,கொலைக்கு  தனது தந்தை சின்னசாமி மற்றும் தாய், மாமா உள்ளிட்டோர்தான் காரணம் என தெரிவித்து இருந்தார். அதன்படி  அவரது அப்பா, அம்மா, மாமா மற்றும் சிலர் மீது கொலை, கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், இந்த சம்பவம் பதிவான சி.சி.டிவி காட்சிகளை கொண்டும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் அடிப்படையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக 5 பேர் கொண்ட கும்பலை திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி பகுதியில் போலீசார் நேற்று கைது செய்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் பழனியைச் சேர்ந்த மணிகண்டன் (25), திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகதீசன் (31), மைக்கேல் என்கிற மதன் (24), செல்வக்குமார் (25), மணிகண்டன் (39) என்பது தெரியவந்தது. இவர்கள் கவுசல்யாவின் உறவினர்கள் என்பதும், கவுசல்யாவின் தந்தை சொல்லியே இந்த கொலையை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

2.jpg

மேலும், ''மகள் சாதி மாறி திருமணம் செய்ததால் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி அவமானத்தில் இருந்ததார். ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட அவமானத்தில் ஆத்திரமடைந்து இவர்களை கொல்ல வேண்டும் என எங்களிடம் கூறினார். அதன் அடிப்படையிலே இந்த கொலையை நாங்கள் செய்தோம்'' என்று 5 பேரும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதில், கவுசல்யாவின் உறவினர்கள் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாகவும் அவர்கள் அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.

கைதான ஜெகதீசன், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் டிராவல் ஏஜென்சியில் பணியாற்றி வருகிறார். மகளின் செயலால் ஏற்பட்ட அவமானத்தைச் சொல்லி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி இருவரையும் கொன்றுவிடச் சொல்லி 50 ஆயிரம் ரூபாயை முன்பணமாக கொடுத்ததாக ஜெகதீசன் போலீசாரிடம் தெரிவித்து இருக்கிறார். மேலும், கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணம், இரு பைக் மற்றும் ஆயுதங்களையும் போலீசார் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஏற்கனவே நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்த சின்னசாமியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளன

http://www.vikatan.com/news/tamilnadu/60652-kowsalya-father-told-we-killed-shocking-confession.art

8 hours ago, குமாரசாமி said:

உலகம் உருண்டை எல்லா நாடுகளிலும் எல்லாம் இருக்கின்றது.....

பேச்சுக்களும் நடக்கும் விதங்களும் இன மொழி மத பணங்களுக்கேற்ப வேறுபடுகின்றது.

அவ்வளவேதான் :cool:

அண்ணை உலகம் எப்படியிருந்தாலும் இந்த மிருகத்தனமான (மிருகங்கள்கூட இதனைச் செய்வதில்லை) கௌரவக் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். சின்னஞ்சிறுசுகள் ஆசப்பட்டவருடன் வாழ்வதைத் தடுக்கும் இந்த மிருகங்களை விட கேவலமானவர்களை ஐ.எஸ் முறையில் தண்டித்தாலும் தகும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2016 at 8:12 AM, nunavilan said:

"ஆனால் மனிதன் கோயிலுக்கு போனால் இந்து"
"சர்ச்க்கு போனால் "கிறிஸ்த்தவன்"
"மசூதிக்கு போனால் "முஸ்லிம்" என்றது;

குழம்பிய குட்டி புறா "அது எப்படி நாம் எங்கு 
போனாலும் புறா தானே அதுபோல தானே மனிதர்களும் "என்றது.

அதற்கு தாய் புறா "இது புரிந்ததனால்
தான் நாம் மேலே இருக்கிறோம், 
இவர்கள் கீழே இருக்கிறார்கள்" என்றது

நான் இந்துமதத்தை எதிர்ப்பது இதனால்தான் 

முதல்காரணம் தமிழராகிய எமக்கும் அதற்கும் தொடர்பில்லை 
வலு கட்டாயமாக எம்மீது திணிக்கபட்ட மதம் இந்துமதம் 

மற்றது மனிதனை மனிதனாகவே மதிக்காத ஒன்று 
எப்படி போதிக்கும் மதமாக முடியும் ??

பலர் குருட்டு பக்தியில் திகழ்வதால் என்னை இங்கே எதிர்கிறார்கள் 

மேலோட்டமாக பார்த்தால் இந்துமதம் ஒரு கட்டுபாடு அற்ற சுதந்திரமான மதம்போல தெரியும்.
காரணம் மற்றைய மாதங்கள் கடவுளை நம்புகின்றன 
அதனால் மனிதன் கடவுளிடம் அடிபணிய வேண்டும் என எதிர்பார்கின்றன.

இந்துமதம் கடவுளை நம்புவதில்லை உண்மையை சொன்னால் சாதியை தவிர்த்து 
வேறு எதையும் நம்புவதில்லை. அதனால் அதில் எந்த கட்டுபாடும் இல்லை.

சாதி மாறி  காதல் செய்தால் இந்து மதத்தின் உண்மை முகம் தெரியும்! 

13 வயதிக்கு உட்பட்டவர்களை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டத்தை 
இந்தியாவில் கொண்டுவந்தவன் வெள்ளைக்காரன்.
அதை எதிர்த்து பாரிய அளவில் (எதை எதிர்த்தும் பிராமணன் போராடியதில்லை. கூட்டி கொடுத்த மாமா வேலை மட்டுமே அதுவரை  பார்த்து வந்தார்கள்) ஆர்ப்பாட்ட போராட்டம் செய்தது இப்போ 125 வருடம் முன்புதான்.

காரணம் 14 வயதில் பெண்களுக்கு உடல் ரீதியான மாறுதல்கள் தோன்றி 
அவர்கள் காதல் செய்து யாருடனும் ஓடி விடுவார்கள் என்ற பயம் மட்டுமே காரணம்.
அதலால் வயதிற்கு வரமுதலே திருமணம் செய்து வந்தார்கள்.

தமிழனுக்கு சைவ சமயம் உலகில் இல்லாத அவூர்மமெல்லாம் கொடுத்திருக்கிறது 
ஆனாலும் சாய்பாபா  குரங்கிற்கு (ஆஞ்சநேயர்) கோயில்கட்டி கூத்தடுறது என்றால் 
அது ஒரு வெறி போன்ற கலை. 

தொன்று தொட்டு சைவம் சொல்லிவந்தது எல்லாம் சிவ மயம் என்று.
ஓம் என்ற நாமம் ! 
இப்போ அண்டவெளியிலும் அதிரும் ஒரே ஒரு சத்தம் என்று நாசா சொல்கிறது 
இப்போதான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் இன்னொரு சக்தி இருக்கிறது என்று 
அதை கணிக்க முடியாத காரணத்தால் கறுப்பு சக்தி ( black energy  ) என்று சொல்கிறார்கள்.
இவை சைவத்தில் எப்போதோ இருக்கிறது 
சைவம் ஜோதி சார்ந்த விஞ்ஞானமாகவே இருந்திருக்கிறது.

எல்லாத்தையும் தொலைத்துவிட்டு 
சாதியை தத்தெடுத்து கல்லுக்கு பாலை ஊற்றி மனிதனை வெட்டி 
தெருவில் இரத்தத்தை ஊற்றி திரியும் கேவலம் கெட்ட நிலையில் தமிழன்! 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

தொன்று தொட்டு சைவம் சொல்லிவந்தது எல்லாம் சிவ மயம் என்று.
ஓம் என்ற நாமம் ! 
இப்போ அண்டவெளியிலும் அதிரும் ஒரே ஒரு சத்தம் என்று நாசா சொல்கிறது 
இப்போதான் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் இன்னொரு சக்தி இருக்கிறது என்று 
அதை கணிக்க முடியாத காரணத்தால் கறுப்பு சக்தி ( black energy  ) என்று சொல்கிறார்கள்.
இவை சைவத்தில் எப்போதோ இருக்கிறது 
சைவம் ஜோதி சார்ந்த விஞ்ஞானமாகவே இருந்திருக்கிறது.

ஒரு அழகிய பூமாலையொன்று ஆரியக் குரங்குகளின் சிக்கி விட்டதனால்...வந்த விளைவே இந்து மதம் என்பது....!

புத்தர் காலத்தில் .. ஓம குண்டங்களில் மிருகங்களைத் தீயிட்டு எரித்து அதனை ஆரியர்கள் உண்டார்கள்! அதனை இந்து மதம் நியாயப் படுத்தியது!

புத்தன் ஏன் அந்த மிருகங்களை ..அநியாயமாக நெருப்பில் எரிக்கின்றீர்கள் என்று கேட்டார்!

அதற்கு.. ஆரியர்கள்.. அந்த மிருகங்கள் மோட்சத்துக்குப் போகின்றன ..அவற்றிற்கு நான் உதவுகின்றோம் என்றார்கள்!

ஓகோ.. அப்படியானால்..நீங்கள் ஏன் பூஜை, புனஸ்காரம் எண்டு மினக்கடுகின்றீர்கள்? நீங்களும் அந்த ஓம குண்டத்தில் பாயலாமே என்று கேட்க ஆரியர்கள் என்ன செய்தார்கள்?

புத்தரைக் கிருஷ்ணனது பத்தாவது அவதாரமாகப் பிரகடனப் படுத்தினார்கள்!

இதே போல காலத்துக்காலம் எல்லா முரண்பாடுகளையும் ஒன்றாகச் சேர்த்து உருவானதே இந்து மதம்!  

சைவம், சாக்தம், வைணவம், காணபத்தியம், காபாலம், சௌரம் என்று அனைத்தும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டு உருவானதே இந்து மதம்!

இதில் காபாலம் என்பது மண்டையோட்டு வழிபாட்டை அடிப்படையாகக் கொண்டது!

சைவம் ..சாத்வீகத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது!

வைணவம்.. தர்மம் அழியும் போது... நான் வந்து உலகை ஆட்கொள்வேன் என்பதை அடிப்படையாகக் கொண்டது! அதைத் தான் கிறீஸ்தவ மதமும் சொல்கின்றது!

சாக்தம்.. துர்க்கை வடிவில் ... இரத்தம் வழிய நிற்கின்றது!

சைவத்தில் சக்தி... சாந்த வடிவமாக, அன்னை வடிவாக நிற்கின்றது!

இந்த மதங்களுக்கு... யாராவது... ஒரு பொதுச்சினை  ( Common Factor)  எடுத்துத் தாருங்களேன்!

  • கருத்துக்கள உறவுகள்

பட்டப்பகலில் இந்தக் கொலை நடந்த போது சுத்தியிருந்த ஒருத்தர் கூட தடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள்...கேடு கெட்ட சமூகம்

  • கருத்துக்கள உறவுகள்

அதை உயிர்பயம் எண்டும் எடுக்கலாம் ரதி. நானாய் இருந்தாலும் அரிவாளுடன் இப்படி மிருகம் போல தாக்குபவர்களை போய் தடுத்திருக்க மாட்டேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.