Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!

Featured Replies

யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!
 
 
யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகச் சிறந்த கல்விக் களஞ்சியம். ரவுடிக் கும்பல்கள் அதன் கௌரவத்தைக் கெடுப்பதற்கு அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, உடனடியாகக் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு நேற்று திறந்த நீதிமன்றத்தில் அவர் நேரடியாக உத்தரவிட்டுள்ளார்.
 
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் ஞாயிறன்று பட்டப்பகலில் 10, 15பேர் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்து தெரு ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, வாள்வெட்டு நடத்தியிருந்த சம்பவத்தையடுத்தே நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பை புதிதாக ஏற்றுள்ள இன்ஸ்பெக்டர் வீரசிங்கவிற்கு பணித்துள்ளார்.
இந்த ரவுடிக்கும்பல்களை ஒரு வார காலத்திற்குள் கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் புதிய யாழ். பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு காலக்கெடு வழங்கியுள்ளார்.
 
பொலிசாருக்கு வழங்கியுள்ள பணிப்புரையில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்திருப்பதாவது,
இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபட்ட கும்பல்களை உடனடியாகக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பவம் பற்றி பத்திரிகைகள் வாயிலாக அறிந்தவுடன் குறுந் தகவல் மூலமாக வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு, நீதிபதி என்ற முறையில் தான் தகவல் அனுப்பியுள்ளதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐ.நா. படைப்பிரிவில் பணியாற்றுவதற்காக தென் சூடானுக்குச் சென்றுள்ள இன்ஸ்பெக்டர் வூட்லர் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய போது குற்றச் செயல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததைத் தொடர்ந்து புதிய இன்ஸ்பெக்டர் வீரசிங்கவும் நிலைநிறுத்த வேண்டும்.
 
நேற்று (ஞாயிறன்று) யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் பட்டப்பகலில் 10 15 பேர் மோட்டார் சைக்கிளில் வலம் வந்து வாள்வெட்டுக்களில் ஈடுபட்டதாகவும் இதனால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்ற பத்திரிகைகளில் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
 
பத்திரிகைகளில் வரும் செய்திகளை, பொலிசாருக்குக் கொடுக்கப்படுகின்ற தகவல்களாக கருதி பொலிசார் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். சம்பவங்கள் குறித்து பொலிசாருக்கு முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என அலட்சியமாக இருக்கக் கூடாது.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்த செய்தியையடுத்து, வடபிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் ஆகியோருக்கு, சம்பந்தப்பட்ட ரவுக் கும்பல்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி என்ற முறையில் நான் அறிவித்துள்ளேன்.
 
யாழ்ப்பாணத்தில் 75 வீதம் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் உள்ள போது 25 வீதமான இத்தகைய ரவுடித் தனங்கள் இன்றும் காணப்படுவதை அனுமதிக்க முடியாது.
இடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் மற்றும் ஐந்து நீதிமன்றங்கள் என்பன கால் கிலோ மீற்றர் தொலைவில், அமைந்துள்ள ஒரு இடச் சூழலிலேயே, கேகேஎஸ் வீதியில் தெரு ரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆயினும் அந்த ரவுடிக் கும்பல்களை உடனடியாக சட்டத்தினால் அடக்க முடியாமல் போயுள்ளதே என்பதை எண்ணும்போது வெட்கமாக உள்ளது.
 
இந்தச் சம்பவமானது, தெரு ரவுடித்தனம் மற்றும் வாள் வெட்டுச் சம்பவங்களில் எவரும் ஈடுபடக்கூடாது என நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவுக்கு சவால் விடும் சம்பவமாகவே நோக்க வேண்டியுள்ளது. ஆயினும் நீதிமன்றம் சற்று தாமதமாகவே குற்றம் புரிபவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் என்பதை பொலிசார் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
 
சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸ் நிலையம் மற்றும் நீதிமன்றங்கள் அமைந்துள்ள ஒரு சூழலில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் காட்டு மிராண்டித்தனமாக ரவுடித்தனத்தில் ஈடுபட்ட அந்த 15 பேரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், வாள்கள் என்பவற்றையும் உடனடியாக்க கைப்பற்ற வேண்டும்.
 
இந்தச் சம்பவத்தில் காயமடைந்துள்ளவரிடம் இருந்து ரவுடித்தனத்தில் ஈடுபட்டவர்கள் பற்றிய தகவல்களைப் பெற்று சந்தேக நபர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்படுகின்ற நபர்களிடம் மேல் விசாரணைகள் நடத்தி தெரு ரவுடித்தனத்தினலும் வாள்வெட்டுச் சம்பங்களிலும் ஈடுபடுபவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மிகவும் பிரபலமானது. யாழ்ப்பாணத்தின் கல்விக் களஞ்சியமாகிய அது சமூகத்தில் உச்ச நிலையிலான புத்தி ஜீவிகளை படைத்து வருகின்ற ஒரு கல்விச் சாலையாகும். அந்தக் கல்லூரியின் பெயரையும், அதன் கௌரவத்தையும் கெடுக்கும் வகையில் சில மாணவர் குழுக்களும்இ சில பழைய மாணவர் குழுக்களும் இத்தகைய தெரு ரவடித்தனம் மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றர்கள்.
 
கேகேஎஸ் வீதிச் சம்பவத்தில் யாழ். இந்துக் கல்லூரியின் பழையை மாணவர் குழுவொன்றும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
 
அண்மையில் இந்துக்கல்லூரி அதிபருடைய வீட்டுக்கு இரவு 3 மணிக்குச் சென்று தாக்குதல் நடத்தியிருக்கின்றார்கள். இந்தச் சம்பவம் தொடர்பில், இந்துக் கல்லூரி அதிபர் ஆசியர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளைக் கைது செய்ய வேண்டும்.
 
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் பெற்றோர்களை விசாரணைக்கு உட்படுத்தி, அந்த சந்தேக நபர்களுக்கு உணவு உடை வசதிகள் கொடுத்திருக்கின்றார்களா என கண்டறிந்து, குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டில் அந்தப் பெற்றோரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும்.
 
பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே பொலிசார் இருக்க வேண்டாம். அனைவரும் வீதிக்கு இறங்குங்கள். வீதிகளில் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்து குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்காணித்து குற்றச் செயல்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த வேண்டும்.
 
வீதிகளில் வேலையற்று வீணே கூட்டமாக நிற்கும் இளைஞர்களைக் கைது செய்து, அவர்களுடைய பெற்றோரை பொலிஸ் நிலையத்;திற்கு அழைத்து எச்சரிக்கை செய்து அவர்களிடம் கையளியுங்கள். தெரு ரவுடித்தனத்தில் ஈடுபடுகின்ற கும்பல்களின் செயற்பாடுகளினால், இந்துக் கல்லூரி சுற்றாடல் தற்சம்யம் வன்செயலுக்கு முகம் கொடுத்து வருகின்றது.
 
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இந்துக் கல்லூரி கல்விமான்களை மட்டும் உருவாக்கல்ல... நிறைய தலைக்கனங்களையும் ரவுடிகளையும் உருவாக்கி உள்ளது. ************************

5 பிள்ளைப் பெற்றால்.. 5 உம் நல்லா அமைவது அரிது. அமைய வேண்டும். யாழ் இந்துக் கல்லூரி அதைச் செய்யத் தவறி வருவது வருத்தமளிக்கிறது. கல்லூரி நிர்வாகம்.. கல்வியோடு சமூக நீதி.. ஒழுக்கம்.. கல்லூரிக்குப் பின்னான வாழ்க்கைக் காலத்தில் வாழும் முறை இவை குறித்து தொலைநோக்கில் நல்ல போதனைகளையும் பயிற்சித் திட்டங்களையும் வகுத்துச் செயற்படுத்த வேண்டும் மாணவர்களுக்கு. 

Edited by nedukkalapoovan
மறைமுகமாக சீண்டும் கருத்து நீக்கப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியின் ஆலோசனைகள் பிரமாதமானவை..., பொறுத்திருந்து பார்ப்போம்....!

யாழ் களத்தில் எங்கையப்பா ரவுடித்தனம் நடக்குது....! பொழுது போகாத நேரத்தில வந்திருந்து காத்தவராயன் கூத்து நடத்திட்டுப் போறம், அவ்வளவுதான்...! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

.

Quote

இத்தகைய ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர் குழுக்கள், பழைய மாணவர் குழுக்களை இனங்கண்டு, 

 

பழைய மாணவர்கள் என்று நீதிபதி ஐயா குற்றம் சாட்டுகிறார்.....புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் அங்க போய் கள்ளு குடிச்சு போட்டு அட்டாகாசம் செய்யினமோ?:rolleyes:

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, putthan said:

.பழைய மாணவர்கள் என்று நீதிபதி ஐயா குற்றம் சாட்டுகிறார்.....புலம்பெயர்ந்த பழைய மாணவர்கள் அங்க போய் கள்ளு குடிச்சு போட்டு அட்டாகாசம் செய்யினமோ?:rolleyes:

அண்மையில் நடந்த பிக் மச் படங்களைப் பார்க்கத் தெரியுதில்ல. என்ன கூத்து நடக்குதுன்னு..!

இதைச் சொன்னதற்காக.. நீதிபதிக்கு வயிற்றெரிச்சல் என்று சொல்லும் சில சனம்... விடுங்க புத்து. இதுகளை திருத்தனுன்னா.. கடும் நடவடிக்கைகளால் தான் முடியும். 

வெளிநாட்டில இருந்து போய் கலாட்டா பண்ணுபவர்களை அடக்க பாஸ்போட்டை முடக்கி உள்ள தூக்கிப் போடனும். அப்படி ஒரு 25 க்கு செய்தால்.. 26 வது தன்பாட்டில் திருந்தும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

 

வெளிநாட்டில இருந்து போய் கலாட்டா பண்ணுபவர்களை அடக்க பாஸ்போட்டை முடக்கி உள்ள தூக்கிப் போடனும். அப்படி ஒரு 25 க்கு செய்தால்.. 26 வது தன்பாட்டில் திருந்தும். tw_blush:

அப்படி செய்து போடுவாங்கள் என்று தான் சனம் இரட்டை குடியுரிமை எடுத்து வைச்சிகொண்டு அட்டகாசம் பண்ணினம்

  • தொடங்கியவர்

பிக் மேட்ச் இல் நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஒன்றும் புதிது அல்ல...

அது காலம் காலமாக நடந்தது... நடப்பதுதான்..

அதைவிட இம்முறை பிக் மேட்ச் வெகு சிறப்பாக செய்து இருந்தார்கள்.

மத்திய கல்லூரி இன் 200 வது வருட நிறைவு விழா நடப்பதால்.

 

38 minutes ago, நவீனன் said:

பிக் மேட்ச் இல் நடக்கும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஒன்றும் புதிது அல்ல...

அது காலம் காலமாக நடந்தது... நடப்பதுதான்..

அதைவிட இம்முறை பிக் மேட்ச் வெகு சிறப்பாக செய்து இருந்தார்கள்.

மத்திய கல்லூரி இன் 200 வது வருட நிறைவு விழா நடப்பதால்.

என்ன இந்தமுறை புலம்பெயர்பெண்களின் குத்தாட்டம் அதிகமாய் இருந்தது.

பார்பவர்களின் முகம் சுழிக்க வைத்தது 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

அப்படி செய்து போடுவாங்கள் என்று தான் சனம் இரட்டை குடியுரிமை எடுத்து வைச்சிகொண்டு அட்டகாசம் பண்ணினம்

அது இன்னும் வசதி எல்லோ.. உள்ளூர் சட்டத்தை ஒரு அசமத்தமும் இல்லாமல் பிரயோகிக்கலாம். ஒரேடியா உள்ள தூக்கி வைக்கலாம். tw_tounge:

18 minutes ago, Surveyor said:

என்ன இந்தமுறை புலம்பெயர்பெண்களின் குத்தாட்டம் அதிகமாய் இருந்தது.

பார்பவர்களின் முகம் சுழிக்க வைத்தது 

பந்தா குறூப் கறுப்புக் கண்ணாடியோட இறங்கி நின்றப்பவே விளங்கிட்டு.. ஏதாவது வில்லங்கம் அரங்கேறும் என்று. புகலிடத்தில் பழைய மாணவர் சங்கம் என்று பாடசாலைகளின் பெயரால்.. அடுத்தவர் காசைப் புடுங்கி அதில ஆட்டம் போடுற கூட்டம் ஓசி விளம்பரமுன்னா.. சும்மா விடுங்களா..?!

பழைய மாணவர்கள் என்ற போர்வையில்.. பாடசாலையின் பெயர்.. நன்மதிப்பு.. நிதி இவற்றைத்.. தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது கல்லூரி நிர்வாகங்கள் செல்வாக்கும் கட்டுப்பாடும் கொண்டு வரும் வகையில்.. தற்போதைய காலாவதியான பழைய மாணவர் சங்க நடைமுறைகள்.. களையப்பட்டு.. புதிய காத்திரமான விதிகளுடன் கூடிய பொதுக் கோவைகள் வரயப்பட்டு அதன் கீழ் எல்லாம் பழைய மாணவர் சங்கங்களும் பொது விதிகளுக்கு கட்டுப்படவும் பதில் சொல்லவும் வேண்டும் என்ற நிலையை உருவாக்கினால்... அன்றி.. பிரபல்ய கல்லூரிகளின் பெயரால் நடந்தேறும் சமூகச் சீரழிவுகளை கட்டுப்படுத்துவது வருங்காலத்தில் கடினமாகலாம்.

ஆளாளுக்கு பழைய மாணவர் சங்கம் வைக்கிறாங்கள்.. புலம்பெயர் நாடுகளில். போராட்டக் காசுக்கு கணக்குப் பார்க்கும் பலர் இங்கு ஆண்டாண்டுகளாக நடக்கும் கூத்தடிப்புக்கு அநியாயமாகக் கொட்டப்படும் காசுக்கு கணக்கும் இல்லை.. கதையும் இல்லை.  :rolleyes::unsure:

Edited by nedukkalapoovan

நவீனன் ,

ஏதாவது நிகழ்வை நடத்தியிருந்தால் அல்லது கடைசி பங்கு பற்றியிருந்தால் என்றாலும் என்ன நடக்கின்றது என்று விளங்கும் ,எல்லாமே குருடன் யானை பார்த்த கதைதான் .

நேற்றும் இருவருடன் கதைத்தேன் மிக சந்தோசமான ஒரு அனுபவம் என்றார்கள் .எவரை முன்னிலை படுத்தி ஒரு நிகழ்வும் நடைபெறாமல் மிக சீராகவும் ஒழுங்காகவும் நடந்து என்றார் .

கொழும்பில் நடந்த பார்டி அதி உச்சம் என்றார் .டக்கிளசும்  டிக்கெட் (50பவுண்ஸ்) வாங்கிகொண்டு ஒரு பழையமாணவர் போலவே அனுமதிக்கபட்டாராம் .

46 minutes ago, Surveyor said:

 

என்ன இந்தமுறை புலம்பெயர்பெண்களின் குத்தாட்டம் அதிகமாய் இருந்தது.

பார்பவர்களின் முகம் சுழிக்க வைத்தது 

வியாழன்,வெள்ளி, சனி மதியம்வரை மைதானத்திலிருந்த சாட்சி இங்க குத்துக்கல்லாட்டம் குந்தியிருக்கிறேன். ஏனப்பு இந்த காதுகுத்தல்.

22 minutes ago, arjun said:

கொழும்பில் நடந்த பார்டி அதி உச்சம் என்றார் .

இதைத்தான் எல்லாரும் சொன்னது மட்டுமில்லாம நீ எங்கடா போய் துலைஞ்சாய் என்ற கேள்வி வேற. 

சனி இரவும் யாழில் இரவு விருந்து நடை பெற்றது. ஞாயிறு இரவு இன்னிசை இரவாக வீரசிங்கம் மண்டபத்திலும் நடைபெற்றது - எப்படி இருந்ததென்று தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துவின் கௌரவத்தைக் கெடுக்கும் ரவுடிகளை உடன் கைது செய்யுங்கள்!

 

பொறுப்புடன் சொல்லப்பட்டிருக்கிறது...

அதிகாரமுள்ளவர் உததரவாகவும் சொல்லியுள்ளார்

ஆனால் களியாட்டங்களுக்கும் மதுபானப்பிரயோகங்களுக்கும் அடிமையாகிவரும்நிலை அதிகமாகிவரும் நிலையிலும்

புலம் பெயர்ந்தோரது பணபலமும் சுற்றுலா ஆலவட்டங்களும் 

இதற்குப்பின்னால் இருப்பது வெளிப்படை

அதை யாழிலும் திண்ணையிலும் காணலாம்.

இந்த வளங்களை பயன்படுத்தி

பாடசாலைகளையும்

இளைய சமூகத்தையும் வளர்த்தெடுக்கும் நடவடிக்கைகளைவிடுத்து..

ஏதாவது ஒன்று கூடல் அல்லது விழாக்கள் என்றாலே

பாட்டி எப்படி?

அந்த இடமே கலங்கியிருக்குமே என்பது பேச்சின் உச்ச பயனாக உள்ளது...

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

கொழும்பில் நடந்த பார்டி அதி உச்சம் என்றார் .டக்கிளசும்  டிக்கெட் (50பவுண்ஸ்) வாங்கிகொண்டு ஒரு பழையமாணவர் போலவே அனுமதிக்கபட்டாராம் .

அண்ண,

டக்கியர், யாழ் இந்துவா? 

அல்லது சும்மா உள்ளிட்டவரோ?

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

டக்கு சென்றல் பழைய மாணவர்.

  • தொடங்கியவர்

நாதமுனி,

டக்லஸ் மத்திய கல்லூரி.

பார்ட்டி யாழ் இந்துவினது அல்ல. அது மத்திய கல்லூரி சம்மந்தபட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தர வைத்திகளே,

நீதிபதி இதில் புலம் பெயர் பழைய மாணவர் என்று எங்கும் சொல்லவில்லையே?

யாழ் இந்து வில் அண்மையில் வெளியேறிய 2011, 2012, 13 பட்ச் இப்படி பல காங்குகள் இருக்கு. இவை எல்லாம் உள்ளூர் காங்குகள், இவைதான் அரிவாள் பார்டியள்.

நிறைமாத வண்டியோடு, வந்தோமா கள்ளடித்தோமா, ஜாலி பண்ணினோமா என்று திரியும் தாத்தாக்களை எல்லாம் அரிவாள் காங் ஆக்குவது உங்கள் வயிற்றிச்சலின் பால் எழுந்த கற்பனையே.

புலம் பெயர் சமூகம் ஒரு புண்ணாக்கு பேக்டரி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் யாழ் இந்துவில் பரவி வரும் அரிவாள் கலாச்சாரத்தை அவர்கள் தலையில் கட்டுவது, பிரச்சினையை திசை திருப்பவே உதவும்.

அண்மையில் ஒரு டீச்சர் யாழ் இந்து அட்மிசன் கிடைத்தும் தன் பிள்ளையை கொக்குவில் இந்துவிற்கு அனுப்புவதாய் சொன்னார். ஏன் என்று கேட்ட போது ஒவ்வொரு தவணையும் குறைந்தது ஒரு ஆசிரியர் ஆவது மாணவர்களால் தாக்கப் படுவதாய்ச் சொன்னார்.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த சென்றல் பின் 85-95 இல் ரவுடிக் ஸ்கூல் என்றாகியது. இப்போ யாழ் இந்து.

இந்த காங் குகளை வளர்த்து விடுவதில் ஐங்கரநேசனுக்கும் சுரேசுக்கும் பங்கிருக்கிறது. அவரின் தேர்தல் வேலை முழுக்க இந்த பொடியள்தான் செய்தார்கள். வேலை எடுத்து தருவதாக ஆசை வார்தை கூறி ரவுடிகள் ஆக்கப் படுகிறார்கள் எம் இளையோர்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நடந்த பார்டிக்கு 50 பவுண்ஸ்??? பரவாயில்லை கொழும்பில் பவுண்ஸ் ££££ 

யாழ் இந்து வெள்ளையன் ஆட்சியிலேயே அசையவில்லை இந்த பெடிகள் எல்லாம் எம்மாத்திரம் .

இப்படி பல நிகழ்வுகளை கண்டுதான் வந்தது இனியும் காணும் .

முப்பது வருட யுத்தம் எத்தனயோ அவலங்களை விட்டு சென்றுவிட்டது அதில் இதுவும் ஒன்று .

காலம் அனைத்தையும் ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு அதற்காக தான் பல விடயங்களை தொடர்ந்தும் பலர் செய்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, goshan_che said:

இந்த காங் குகளை வளர்த்து விடுவதில் ஐங்கரநேசனுக்கும் சுரேசுக்கும் பங்கிருக்கிறது. அவரின் தேர்தல் வேலை முழுக்க இந்த பொடியள்தான் செய்தார்கள். வேலை எடுத்து தருவதாக ஆசை வார்தை கூறி ரவுடிகள் ஆக்கப் படுகிறார்கள் எம் இளையோர்.

அப்ப இருந்து இப்ப வரை, யாழ் இந்துவில் மூன்று குறூப்: படிப்பு மட்டும், படிப்புடன் குழப்படி, குழப்படி மட்டும்.

முதலாவது குறூப், படிப்பு, ஒரு வேலை, ஒரு சீதனத்துக்காக கலியாணம், அம்புட்டுத்தான்.

படிப்புடன் குழப்படி குறூப் உலகெங்கும் சாதிக்கிறது. ஏனெனில் எதிலும் பூந்தும் ரிஸ்க் எடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை.

இந்த கடைசி குறூப் தான் ஒண்டுக்கும் உதவாத பாடாவதி குறூப். இவர்கள் தான் இங்க, பாடசாலைப் பாசத்தில, காசு சேர்த்து ஆட்டைய போடும் கோஸ்டிகள். அப்பப்ப பாடசாலைக்கும் ஆங்கே பொசியும்.

இவரகள் தான் அடுத்த இரு கோஸ்டிகளையும் பாடசாலை பற்றிய எண்ணமே வராமல் பார்ப்பவர்கள்.

அப்பவும் வாத்திமாருடன் கொழுவுப்பட்ட கோஸ்டிகள் இருந்ததே. மோதகம் சோமரோட கொழுவி, சலேஞ்ச் பண்ணி, பேராதனை போன ஒரு அண்ணையையும் தெரியும்.

மக்கியருடன் அடிபட்ட பொடியளும் இருந்தார்களே. ஆணைக்கோட்டைல தண்ணியப் போட்டு, வழியில மப்டில மறிப்த பொலீஸ்காரரோட கொழுவி, இரண்டு தட்டு வாங்கி, இரவு உள்ளார படுத்து, காலைல இனஸ்பெக்டர் ஐயாவிட்ட, கொழும்பு மெடிக்கல் கிடைத்த சந்தோசத்தில பாட்டி... என்று சொல்லி அறிவுரையுடன் மீண்ட, இங்கே டாக்டராயிருக்கும் இருவரும் யாழ் இந்து தான்.

ஆகவே பதற வேண்டாம். Boys are boys!

Edited by Nathamuni

நீங்கள் சொன்ன மூன்று குரூப்பும் சரியான உண்மை .

புலம் பெயர் நாடுகளில்  பழைய மாணவர்கள் அமைப்பில் பெரும்பாலும் இரண்டாம்  குரூப் தான் அனைத்தும் செய்கின்றார்கள் .தேவைஎன்றால் புரோபைல் தரலாம் .

"மக்கியருடன் அடிபட்ட பொடியளும் இருந்தார்களே. ஆணைக்கோட்டைல தண்ணியப் போட்டு, வழியில மப்டில மறிப்த பொலீஸ்காரரோட கொழுவி, இரண்டு தட்டு வாங்கி, இரவு உள்ளார படுத்து, காலைல இனஸ்பெக்டர் ஐயாவிட்ட, கொழும்பு மெடிக்கல் கிடைத்த சந்தோசத்தில பாட்டி... என்று அறிவுரையுடன் மீண்ட, இங்கே டாக்டராயிருக்கும் இருவரும் யாழ் இந்து தான்."

இது வேறு நபரோ தெரியவில்லை ஆனால் இதே மாதிரி எனது நண்பருக்கு நடந்தது அவரும் இப்ப லண்டனில டொக்குத்தான் .அன்று தண்ணியடித்து கொஸ்டலில் இருந்து சிவராமர் வெளியேற்றிய படியால் தான் அவர் பிறகு ஒழுங்காக படித்தார் 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

இந்த கடைசி குறூப் தான் ஒண்டுக்கும் உதவாத பாடாவதி குறூப். இவர்கள் தான் இங்க, பாடசாலைப் பாசத்தில, காசு சேர்த்து ஆட்டைய போடும் கோஸ்டிகள். அப்பப்ப பாடசாலைக்கும் ஆங்கே பொசியும்.

இது கண்ட அளவில் உண்மை (பச்சையும் இதற்கே). புலம்பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கத் தலைவர்.. நிர்வாகியாக இருப்பது யாருன்னு பார்த்தால்.. கல்லூரிக் கழிவுகள் தான். ஏஜென்சி வேலைன்னு சனத்திட்ட காசடிச்சவனும்.. கடை போட்டு வங்கிக் கடனெடுத்திட்டு... தூர ஓடினவனும்... மாமன் மச்சானுன்னு கடன வாங்கிட்டு.. ஓடிறவனும்.. கள்ள காட் கோஸ்டியும்.. குடிவெறின்னு திரியுறதுகளும்.. தான். tw_blush::rolleyes:

 

ஆனால் வெளில நல்ல பாடசாலைப் பாசம்.. பசப்புக்கு. போதைக்கு.. காக்ரெயில் ஓசில சாப்பிட. பொண்டாட்டி மாருக்கு பருக்கிவிட்டு.. பிள்ளைகளுக்கு விலாசம் காட்டிக்... கவுக்க. tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூன், நாமு,

நீங்கள் சொல்வது எல்லாம் சரியே ஆயினும்.

இப்போ நடக்கிற பிரச்சனை முன்னம் மாரி இல்ல.  முன்னர் நானறிந்தவரை எப்பாலும் ஒருக்கா தண்ணிப்பார்டி, கைக்கலப்பு மிஞ்சி போனால் சைகிள் செயின் அப்படித்தான் இருக்கும். ஆசிரியருக்கு அடி விழுந்ததது எனக்குத் தெரிய ஒருதரம்தான்.

இப்போ அப்படியில்லை. சோமரோடு சேலஞ் பண்ணி பேராதனை எல்லாம் போவதில்லை. இப்ப ஒரே வெட்டுத்தான்.

தண்ணி அடி சர்வசாதாரணம். கொஞ்சம் சீரியசான பார்டிகள் கஞ்சா, தூள் என்று அடுத்த கட்டத்துக்கு நகருதுகள்.

கிட்டத்தட்ட யாழின் குற்றச் செயல்களின் உற்றுவாயாக மாறுகிறது யாழ் இந்து.

ஒரு மாவட்ட நீதிபதி பப்ளிக்காக ஒரு பள்ளிகூடத்தை சுட்டி அறிக்கை விட்டு, போலீசை நடவடிக்கை எடுக்கும் படி கேட்பது இலங்கை வரலாற்றில் இதுவே முதல்தடவை.

இதில் பாடசாலை நலன் விரும்பிகளின் உடன் நடவடிக்கை அவசியம். பழைய கதை பேசி உண்மையை யதார்தத்தை தரிசிக்க மறுத்தால் - அழிவில் இருந்து மீளுவது கஸ்டமே.

2 hours ago, arjun said:

கொழும்பில் நடந்த பார்டி அதி உச்சம் என்றார் .டக்கிளசும்  டிக்கெட் (50பவுண்ஸ்) வாங்கிகொண்டு ஒரு பழையமாணவர் போலவே அனுமதிக்கபட்டாராம் .

அது சரி உங்கட பார்ட்டி என்றால் டக்கர் தோழர் வராமல் நடக்குமே. ஏதோ அவர் தோட்டம் கொத்தி உளைச்ச 50பவுண்ஸ் மாதிரி போகுது கதை 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, arjun said:

முப்பது வருட யுத்தம் எத்தனயோ அவலங்களை விட்டு சென்றுவிட்டது அதில் இதுவும் ஒன்று .

யுத்தம்தான் ரவுடிகளை உருவாக்கினது என்பதற்கு என்ன ஆதாரம் இருக்குது? ரவுடி கும்பல்கள் யுத்தத்துக்கு முன்னும் இருந்தது, யுத்தத்தின் போதும் மிக மிக மிகக் குறைந்த அளவில் (இல்லை என்று சொல்லுமளவுக்கு)  இருந்தது. இப்ப யுத்தம் நின்ற பிறகு மீண்டும் தொடக்கி இருக்குது. இது விளங்காமல் சும்மா எல்லாதுக்கு காலைத் தூக்கிகொண்டு ....... யுத்தம் தான் கரணம் என்பது சுத்த அறிவிலித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Surveyor said:

அது சரி உங்கட பார்ட்டி என்றால் டக்கர் தோழர் வராமல் நடக்குமே. ஏதோ அவர் தோட்டம் கொத்தி உளைச்ச 50பவுண்ஸ் மாதிரி போகுது கதை 

சேர்வையர், திடீரெண்டு நித்திரையால எழும்பி "டக்கி ஏன் யாழ் இந்துப் பார்ட்டிக்கு வந்தவர்?" எண்டு கேட்டதோடையே விட்டிருக்கலாம். இப்படி உங்கட அறிவீனத்தை நீங்களே காட்டிக் கொள்ளக் கூடாது! :grin:

டக்கியும், டக்கியின் சகோதரர்களும் மத்திய கல்லூரிப் பழைய மாணவர்கள். இவர்களின் தாய் மத்தியில் ஆசிரியையாக இருந்தவர். இந்தத் தொடர்பு தான் அமரர் இராஜதுரை அதிபராக வந்த போது அமைச்சராக இருந்த டக்கி மத்திக்கு பல சலுகைகளை அளிக்கக் காரணமானது. பிறகு கோப்பாய்  அதிபரை இராணுவப் புலனாய்வு கொலை செய்ய, புலிகள் அமரர் இராஜதுரையைக் கொன்றதோடு, இந்த சார்பு அரசியலில் ஈடுபடாமல் இருந்த பழைய மாணவர்கள் சிலரும் ஆசிரியர்களும் டக்ளசின் உதவிகளைப் பாராட்ட ஆரம்பித்தார்கள். ஆக, டக்ளஸ் மத்திய கல்லூரியில் வரவேற்கப் பட டக்கி மட்டும் காரணமல்ல! காரணமின்றி ஆயுதம் ஏந்தாத அப்பிராணிகளைப் போட்டுத் தள்ளும் புலிகளின் கொள்கையும் காரணம்! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.