Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் அஞ்சினார்'

Featured Replies

புலிகளை தவிர வேறு யார் தமிழீழம் எடுப்பார்கள் என்று நம்பினார்கள்? தமிழரசுக்கட்சி ? கூட்டணி ? அல்லது 30க்கும் மேற்பட்ட இயக்கத்தில் ஒன்று? 

இங்கு பதில் எழுதுவது சாயி பாபாவின் பஜனைக்கு சென்று இவர் சங்கிலியை ஒழித்து வைத்து எடுக்கின்றார் என்று சொல்வது போல .பக்தர்களுக்கு தெரியாது ஆனால் சாயிபாபாவிற்கு உண்மை தெரியும் 

தமிழ் ஈழம் என்பது சிங்களம் எதுவும் தராது அதனால் தமிழர்களின் ஒரே தீர்வு அதுதான் என்று உருவாக்கபட்ட ஒருவிடயம் அதன் சாத்தியங்கள் பற்றித்தான் நாம் உணரவேண்டும் ,அதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு அது அமிர் தொடக்கம் அனைத்து இயக்க தலைமைகளுக்கும் தெரியும் ,ஆக கூடிய அதிகாரம் கிடைக்கும் தீர்வு கிடைக்க வைத்த மைல் கல் தான் தமிழ் ஈழமே ஒழிய இலக்கு அதுவல்ல ,

அதற்கான சந்தர்ப்பங்கள் ஆயிரம் வந்தும் அதை விட்டு இவ்வளவு உயிரையும் காவு கொடுத்த கோபம் தான் புலிகள் மீது அந்த யதார்த்தத்தை சொன்னாலே இலகுவாக இவர்கள்  ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு தான் லாயக்கு என்றுவிடுவார்கள்,

யதார்த்தம் இதுவாக இருக்க வலிந்து புணர்ந்து ,முலை என்று கவிதைக்குள் வார்த்தைகளை திணிக்கும் கவிஞர்கள்  போல எமது விடுதலை போராட்டத்திலும் சம்பந்தமே இல்லாமல் சாதி ,மத பிரதேசவாதத்தை என்பது போன்ற நாலு விடயங்களை திணித்து   நடந்த தவறுகளுக்கு நியாயம் கற்பித்துகொண்டே இருக்கலாம் .

ஒவ்வொரு அடியையும் பிழையாக எடுத்து வைத்து விட்டு கிட்ட சென்றுவிட்டோம் இலக்கை அடையமுடியாமல் போய்விட்டது என்றால் எதுவும் செய்யமுடியாது .

 

  • Replies 95
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இதுபற்றி பேசுவதற்கான அவசியம் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்கள் களத்தில் இருந்தபோது அலசி ஆரந்திருக்கலாம். 

கோத்தபாயவின் காரியதரசி கேணல் சுரேஷ் சாலே (குறியீட்டு சொல் - சாம் சேர்) (கபில கெந்தவிதாரன - கோத்தபாய ஒருங்கிணைப்பாளர்) தமிழினியை சிறையில் சந்தித்து உரையாடிய விடயத்தை,

திரு அப்பாத்துரை விநாயகமூர்த்தியை தமிழினி வழக்கில் இருந்து நீக்கி சிங்கள வழக்கறிஞரை சாம் சேர் நியமித்த விடயத்தை இன்னொரு கூர்வாளின் நிழலில் எழுதுவதற்காக மறைத்து வைத்திருக்கிறீர்களா..?

இந்த விடயத்தில் சிங்கள அரசு இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறது.

1. புலிகளின் தளபதியாக இருந்த ஒருவரை வைத்தே புலிகளை விமர்சனம் செய்து புலிகள்மீதான மிச்சம் சொச்சம் நல்மதிப்பை சேதப்படுத்துவது. ( இன்னும் இருக்கிறதாக சிங்கள அரசு இன்னும் நம்புகிறது)

2. புலிகளின் முன்னாள் தளபதியை பேசு பொருளாக்கி,  துரோகி ஆக்குவதன் மூலம் இனி எந்த தளபதி எது சொன்னாலும் நம்ப முடியாமல் பண்ணுவது.

இது இரண்டும் நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நடந்து கொண்டு தான் இருக்கிறது.

சாம் சேர் - கெந்த விதாரணவின் திட்டங்கள் படிப்படியாக நிறைவேறி கொண்டுதான் இருக்கிறது.

திரு  ஜெயகுமாரன் அவர்களுக்கு, 

தமிழினி தந்த அடையாளத்தை காசாக்க தெரிந்த உங்களுக்கு தமிழினி கடைசியாக நின்ற சண்டை ஒன்றை கூற முடியுமா. இறுதிபோரில்  எந்த முனையிலாவது ஆயுதம் எடுத்து எதிரியை சுட்ட சம்பவம் ஒன்றை கூறமுடியுமா.? 1 km கூட நடக்கதெரியாத  தளபதிகளில் எந்த தளபதியுடனாவது களமுனையில் இருந்த சம்பவம் ஒன்றை கூற முடியுமா.?

கல்லறையில் மாவீரர்கள் தூங்குகின்றார்களே தவிர, அவர்களுக்கு காது கேட்காது என்று அர்த்தம் இல்லை.

பதில் தெரிந்தால் கூறுங்கள்.இல்லை, உங்களுக்கு தந்த வேலையை செவ்வனே செய்தேன் என்ற மிதப்பில்  நீங்கள் நகருங்கள்.

நன்றி 

 

உண்மைகளும் அதை சுமப்பவர்களும் அமைதியாக பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

மேலே கோசான் கூறியது போல புலி, தலைவர் பிரபாகரனுடன் முடிந்துவிட்டது. இனிமேலும் நீங்கள் யாரவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் புலி என்ற முத்திரை இல்லாமல் நல்லது செய்து காட்டி உங்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொள்ளுங்கள். 

அது தான் நீங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடன்.

 

 

 

 

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

சில காரணங்களுக்காக தான்[தமிழினி] இந்த பதவியில் இருந்து விலகி இருந்ததாகவும்,பிறகு தமிழ்செல்வனே கூப்பிட்டு பதவியை திரும்ப ஏற்கச் சொன்னதாகவும் நூலில் இருக்கு

2 minutes ago, ரதி said:

சில காரணங்களுக்காக தான்[தமிழினி] இந்த பதவியில் இருந்து விலகி இருந்ததாகவும்,பிறகு தமிழ்செல்வனே கூப்பிட்டு பதவியை திரும்ப ஏற்கச் சொன்னதாகவும் நூலில் இருக்கு

அந்த காரணங்கள் தான் என்ன.? ஏன் அதை சுயசரிதையில் கூறவில்லை.

பொட்டம்மானை விமர்சிப்பதற்கும் அந்த காரணங்களுக்கும் தொடர்புகள் இருக்கின்றனவா..??

Edited by பகலவன்

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய ஆட்சேர்ப்பும்,அதைத் தொடர்ந்து சில மனக் கசப்புகள்,மனச்சோர்வுகள் தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போக அதைச் த.செல்வனிடம்,தமிழினி சொன்னவுடன் அவரைப் பதவியில் இருந்து நீக்கி விட்டதாக உள்ளது.

மன்னிக்கவும் பிறகு த.செனின் மறைவுக்குப் பிறகு 6 மாதங்களுக்குப் பிறகு நடேசனும்,தலைவரும் சொல்லி தான் திரும்ப பதவி ஏற்றதாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பகலவன் said:

இனிமேலும் நீங்கள் யாரவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் புலி என்ற முத்திரை இல்லாமல் நல்லது செய்து காட்டி உங்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொள்ளுங்கள். 

அது தான் நீங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடன்.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நூல் 12 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.அவை ஒன்றுக்கொன்று சம்மந்தமில்லாமல் உள்ளது.பொட்டம்மான் மீதான் விமர்சனத்திற்கு தனிப்பட்ட காரணம் எதுவும் வைக்கவில்லை...புலிகளது புலனாய்வுத் துறையின் வீழ்ச்சி தான் தோல்விக்கு காரணம் என்று நினைக்கிறாவோ தெரியாது!

  • கருத்துக்கள உறவுகள்

ரதியக்கா,

எங்கே வங்கினீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கூர்வாளின் நிழலில் நூலில் 90 பக்கம் படித்துவிட்டேன். சர்ச்சைக்குரியதான விடயங்கள் இனித்தான் வரும்போல உள்ளது. ஆனால் தலைவர் பிரபாகரன் அஞ்சினார் என்ற தொனிப்பட நூலில் எழுதப்பட்டிருக்காது என்றுதான் நினைக்கின்றேன்.

மாத்தயாவின் விவகாரம் வெறும் மேலோட்டமாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. 

5 minutes ago, goshan_che said:

ரதியக்கா,

எங்கே வங்கினீர்கள்?

ஈஸ்ற் ஹாமில் பெளசரிடம் வாங்கலாம்.   என்னிடம் இரண்டு உள்ளன!

  • கருத்துக்கள உறவுகள்

கோசான்,மக்கள் ஜனநாயக அமைப்பைப் சேர்ந்த பைசர் என்பவரிடம் இருந்து எனது நண்பர் மூலம் பெற்றுக் கொண்டேன்

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்/ரதியக்கா,

நன்றி.

பெளசரின் நம்பர் கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

பெளசர்- 07817262980

இந்த நூலின் கடைசி அத்தியாயத்தில் ஜேர்மனியில் இருக்கும் நண்பி ஒருவர் தனக்கு மாப்பிள்ளை தேடியதாக தமிழினி எழுதியுள்ளார்...சாந்தி அக்காவோ அது?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரதியக்கா.

2 hours ago, arjun said:

புலிகளை தவிர வேறு யார் தமிழீழம் எடுப்பார்கள் என்று நம்பினார்கள்? தமிழரசுக்கட்சி ? கூட்டணி ? அல்லது 30க்கும் மேற்பட்ட இயக்கத்தில் ஒன்று? 

இங்கு பதில் எழுதுவது சாயி பாபாவின் பஜனைக்கு சென்று இவர் சங்கிலியை ஒழித்து வைத்து எடுக்கின்றார் என்று சொல்வது போல .பக்தர்களுக்கு தெரியாது ஆனால் சாயிபாபாவிற்கு உண்மை தெரியும் 

தமிழ் ஈழம் என்பது சிங்களம் எதுவும் தராது அதனால் தமிழர்களின் ஒரே தீர்வு அதுதான் என்று உருவாக்கபட்ட ஒருவிடயம் அதன் சாத்தியங்கள் பற்றித்தான் நாம் உணரவேண்டும் ,அதற்கான சாத்தியம் எப்போதும் இருக்கவில்லை என்பதுதான் எனது நிலைப்பாடு அது அமிர் தொடக்கம் அனைத்து இயக்க தலைமைகளுக்கும் தெரியும் ,ஆக கூடிய அதிகாரம் கிடைக்கும் தீர்வு கிடைக்க வைத்த மைல் கல் தான் தமிழ் ஈழமே ஒழிய இலக்கு அதுவல்ல ,

அதற்கான சந்தர்ப்பங்கள் ஆயிரம் வந்தும் அதை விட்டு இவ்வளவு உயிரையும் காவு கொடுத்த கோபம் தான் புலிகள் மீது அந்த யதார்த்தத்தை சொன்னாலே இலகுவாக இவர்கள்  ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு தான் லாயக்கு என்றுவிடுவார்கள்,

யதார்த்தம் இதுவாக இருக்க வலிந்து புணர்ந்து ,முலை என்று கவிதைக்குள் வார்த்தைகளை திணிக்கும் கவிஞர்கள்  போல எமது விடுதலை போராட்டத்திலும் சம்பந்தமே இல்லாமல் சாதி ,மத பிரதேசவாதத்தை என்பது போன்ற நாலு விடயங்களை திணித்து   நடந்த தவறுகளுக்கு நியாயம் கற்பித்துகொண்டே இருக்கலாம் .

ஒவ்வொரு அடியையும் பிழையாக எடுத்து வைத்து விட்டு கிட்ட சென்றுவிட்டோம் இலக்கை அடையமுடியாமல் போய்விட்டது என்றால் எதுவும் செய்யமுடியாது .

 

அதாகப்பட்டது தமிழீழம் என்று பேச்சை எடுத்தால் ஏதோ கிடைக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பதற்காக தமிழீழம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது என்கின்றீர்கள். மற்றபடி அதில் நம்பிக்கை இல்லை என்கின்றீர்கள்.

அப்படியானால் அனைத்து படுகொலைகளுக்கும் புலிகளுக்கு முன்னர் இக்கருத்தை உருவாக்கியவர்கள் குற்றவாளிகளாகின்றனர். இது ஒன்றும் பிள்ளைவிழையாட்டிலலை ஏனெனில் சிங்களவர்களின் உறுதியான நிலைப்பாடானது சிறு அதிகாரத்தைக் கொடுத்தால் அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழீழம் என்ற நாடடை அடைநதுவிடுவார்கள் என்றளவிலேயே அவர்கள் பஞ்சாயத்து அதிகாரமளவுக்கும் கொடுக்க மறுக்கின்றார்கள். நீங்கள சொல்லும் ஆயிரம் சந்தர்ப்பங்களும் நாம் பிறக்க முதல் இருந்தே வெறும் பேச்சுவர்த்தைகளும் காலக்கடத்தல்களுமே அன்றி ஒருபோதும் அவை நடமுறைச்சாத்தியமானதாக இருந்ததில்லை. அவ்வாறு இருந்தது என்பது கற்பனையே!

தமிழீழத்துக்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் இருக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொள்கின்றார்கள். சிலர் புறக்காரணிகளான இந்திய சர்வதேச விருப்பங்களை பிரதானமாக்குகின்றார்கள். சிலர் நேரெதிர்காரணியான சிங்களம் தராது என்பதை முன்வைககின்றார்கள். எனது கருத்துக்கள் இனத்திற்குள் இருக்கும் சமூக முரண்பாடுகளும் இரண்டாம் பட்சமாக இனத்தேசீயத்தை வைத்திருக்கும் நிலைப்பாடும் அதன் நிமிர்தமான பிரிவினைவாதங்களும் மோதல்களும் என அகநிலையைய அடிப்படையாகக்கொண்டு சாத்தியம் இல்லை என்பதை பிரதிபலிக்கின்றது. 

புலிகள் மீதான குற்றச்சாடு என்பது எமது அகநிலை முரண்பாடுகளை மூடி மறைத்து பூசி மொழுகும் காரியமாகவே இன்றளவும் இருக்கின்றது. இக்காரியம் எம்மை நாமே எப்போதும் ஏமாற்றும் போக்கு. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் இந்த சமூகத்தில் இருந்து உருவானவை. அவற்றின் செயற்பாடு அசைவியக்கத்திற்கான உந்துசக்தி இச் சமூகத்தில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றது. தமிழர்களின் தோல்வி புலிகளின் தோல்வியாக முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிமனிதர்களின் தோழ்களில் இத்தோல்விகளின் காரணங்களை இறக்கிவைக்கவும் முடியாது. ஏனெனில் அனைத்து முரண்பாடுகளையும் நிலுவையில் வைத்துக்கொண்டும் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் அரசோடு அண்டியிருந்துகொண்டும் போரட்டத்தை காரணம்காட்டி புலப்பெயர்வுகளுடாக வாழ்வை மேம்படுத்திக்கொண்டும் புலிமூலம் தமிழீழம கிடைக்கும் என்ற காரணத்தின் விழைவுதான் புலி உட்பட அனைத்து உயர்க்காவுகொடுத்தலும் ஆகும். இந்த ஆட்டத்தில் நான் இல்லை நீ இல்லை நாங்கள் எப்பவும் அப்படிச்சொன்னம் இப்படிச்சொன்னம் இருபது வருசமா சொல்லிக்கொண்டிருக்கிறம் முப்பது வருசமா முக்கிக்கொண்டிருக்கிறம் என்று அந்நியப்பட்டு கத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை. தோல்வியிலும் சாவுகளிலம் எல்லோருக்கும் பங்குண்டு. யாரும் யோக்கியனாக முடியாது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

140 பக்கம் வாசித்ததில் நூல் தமிழினியின் குரலாகவே தெரிகின்றது. இவற்றில் தலைவர் அஞ்சினார் என்ற தொனிப்படும்படி வரவில்லை.

 

தமிழினியின் கூர் வாளின் பின்னணியில்… : வியாசன்

thamiliniவன்னி இனப்படுகொலை நடத்தி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் வெறுமையோடு கலைந்துவிட்டன. போராட்டமும் சுய நிர்ணைய உரிமைக்கான நியாயமும் சர்வதேச மயப்படுத்தப்படுகிறது என்ற தலையங்கத்தில் அவற்றை அழிப்பதற்கான அத்தனை வழிமுறைகளும் கையாளப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை உட்பட இராசதந்திரிகள் என உலாவரும் அதிகாரிகளின் பார்வைக்குள் மட்டுமே மக்களின் உயிர்களும் தியாங்களும் முடக்கப்பட்டுவிட்டது. வரலாற்றின் வரைபடங்களில் கூட இடம்பெற்றிராத தீவுகளின் போராட்டங்கள் கூட உலகின் ஜனநாயகவாதிகளை மையப்படுத்தி சர்வதேச மயப்பட்டிருக்க, ஈழப்போராட்டம் மட்டும் அதிகாரிகளின் பிடிக்குள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டது.

தமிழ்ப் பேசும் மக்களின் தன்னுரிமையைக்கான நியாயத்தை சர்வதேச மயப்படுத்துகிறோம் என அதனைக் கையகப்படுத்தி அழித்த பெருமை புலம்பெயர் அமைப்புக்களையே சாரும்.

தவிர, போராட்டம் தொட ர்பான காத்திரமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்குக் கூட இக் கால இடைவெளி பயன்படுத்தப்படவில்லை. உலகின் அத்தனை போராட்டங்களின் தோல்விகளும் வெற்றிகளும் உலக மக்களுக்கும் புதிய சந்ததிக்கும் நிறையவே கற்பித்திருக்கின்றன. ஈழப் போராட்டத்தின் அழிவு இரண்டு ஆபத்தான முகாம்களுக்குள் அரசியலை முடக்குவதில் முடிவடைந்திருக்கிறது.

புலி ஆதரவு இல்லையெனின் புலி எதிர்ப்பு என்ற இரண்டு வியாபாரக் கும்பல்களின் பிடிக்குள் அரசியல் முடக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எதிரெதிர்த் துருவங்களுக்கு அப்பால் சமூகத்தின் இயக்கம் தடுத்துவைக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றது.

இந்த இரண்டு துருவங்களைக் கடந்து தமிழ்ப் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் நியாயம் வெளியே வராத வரைக்கும் அது மேலும் அழிவுகளுக்கே உள்ளாக்கப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் தலைவர்களின் ஒருவரான தமிழினியின் கூர் வாள் என்ற நூல் அவரின் அரசியல் வாழ்வு என்பதை புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த பலரும் ஏற்றுக்கொள்ள, நூல் தொடர்பான விமர்சனங்களும் இந்த இரண்டு முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது.

புலிகளின் ஆரம்பகாலங்கள் தொடர்பான விமர்சனம் சுய விமர்சனம் என்ற அடிப்படையிலான நூலான ஐயரின் ‘ஈழபோராட்டத்தில் எனது பதிவுகள்’ வெளியான நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழினியின் ‘கூர் வாளின் நிழலில்’ நூல் வெளியாகியிருக்கிறது.

ஈழப் போராட்டம் தொடர்பான இன்றைய ‘நாடுகடந்த’ அரசியலை நாடி பிடித்துப் பார்ப்பதற்கு தமிழினியின் நூலை விட அது தொடர்பான விமர்சனங்களே போதுமானவை.

நூலின் பல்வேறு கூறுகள் புலிகள் இயக்கத்தை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதனை முதலில் கையகப்படுத்திக்கொண்டவர்கள் புலியெதிர்பாளர்களே. நூல் வெளியிடு, அது தொடர்பான விமர்சனங்கள் போன்ற அனைத்து சம்பிரதாயங்களும் புலியெதிர்ப்பாளர்களாலேயே முன்வைக்கப்படுகின்றன. இவர்களி ல் பெரும்பாலனவர்கள், இலங்கை அரச சார்புக் குழுக்களையும், ஏகாதிபத்திய நிதி வழத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்களையும், இது போன்ற அதிகாரம் சார்ந்த நிறுவனங்களையும் மையமாகக்கொண்டு செயற்படுபவர்கள்.

இலங்கை அரசின் பெருந்தேசிய ஒடுக்குமுறையிலிருந்து அதன் இனப்படுகொலை வரைக்கும் இந்த நபர்களின் பார்வைக்கு ஒடுக்குமுறை என்ற பக்கத்திலிருந்து எட்டுவதில்லை. அதிகாரவர்க்கத்தின் பிரதி விம்பங்களான இக் குழுக்களைப் பொறுத்தவரை புலி எதிர்ப்பு என்பது அரசைச் சார்ந்து செயற்படுவதற்கான தந்திரோபாயம். புலிகள் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது எதிர்காலத்தைச் செழுமைப்படுத்துவதற்கானதா அன்றி அதனை அழிப்பதற்கா என்ற வினவப்பட வேண்டும். ‘புலி எதிர்ப்புக்’ கும்பல்களைப் பொறுத்தவரை போராட்டத்தையும், உரிமைக்கான குரலையும் புலிகளின் தவறுகளை முன்வைத்து அழிப்பதற்கான ஆயுதமாகவே விமர்சனம் பயன்படுகிறது. அதிகாரவர்க்கத்தின் தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனமாகவே புலியெதிர்ப்புக் கும்பல்களின் கூச்சல்கள் கணிக்கப்பட வேண்டும்.

இந்தச் சூழலில் புலிகள் இயக்கத்தின் தவறுகளை முன்வைத்து மொத்தப் போராட்டத்தையும் அழிக்க முனையும் புலி எதிர்ப்புக் கும்பல்களுக்கு தமிழினியின் நூல் பொன்முட்டை போடுகின்ற வாத்து! எந்தக் கூச்சமுமின்றி முன்னை நாள் பெண் போராளி ஒருவரின் வாக்குமூலத்தை அரச பாசிஸ்டுக்களின் சார்பில் கையகப்படுத்திக்கொண்ட இக் குழுக்கள் தமக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக உழைக்கும் கைக்கூலிகள்.

இதன் மறுபக்கத்தில் புலி ஆதரவுக் குழுக்கள் தமது வியாபார இருப்பிற்காகப் புலிகளைப் புனிதப்படுத்தி வழிபட வேண்டியை கட்டாயத்திலுள்ளனர். தவறுகளை நியாயப்படுத்துவதன் ஊடாக புலி எதிர்ப்புக் குழுக்களை வளர்க்கும் இவர்கள் போராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் எந்த நம்பிகையும் அற்றவர்கள்.மக்களின் கண்ணீரையும் அவலத்தையும் தமது சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காகப் பயன்படுத்திக்கொள்பவர்கள்.

புலிகள் இயக்கம் மட்டமன்றி கடந்த காலப் போராட்டம் மற்றும் வரலாறு தொடர்பான மதிப்பீடு ஒன்றை முன்வைப்பதை தமது பிழைப்பிற்கு ஆபத்தானது என்பதை அறிந்துவைத்திருப்பவர்கள். இக் கும்பல்களின் சதியை அறிந்துகொள்ளாத அப்பாவிப் போராளிகள் உட்படப் பலர் இவர்களின் பின்னால் அணிவகுத்து நிற்கின்றனர்.

கடந்த காலத்தை விமர்சிப்பது என்பதே எதிர்காலத்தைச் செழுமைப்படுத்தும் என்ற அடிப்படையை துரோகத்தனம் என்று கூறும் இக்குழுக்களைப் பொறுத்தவரை புலி அடையாளம் என்பது வெற்றிகரமாக நடைபெறும் வியாபாரத்திற்கான சின்னம். இந்த அடையாளம் தென்னிந்தியாவில் வாக்குப் பொறுக்கும் சீமான் வை.கோ போன்ற பிழைப்புவாதிகளிலிருந்து மக்களின் பணத்தைச் சூறையாடிய புலம்பெயர் குழுக்கள் வரைக்கும் பயன்பட்டுப் போகிறது.

தமிழினியின் நூல் தொடர்பாக அவதூறுகளை கட்டவிழ்த்துவிடும் இக் கும்பல்கள் மக்களுக்கு உண்மையை அறிந்துகொள்ளும் உண்மையை மறுத்துவருகின்றன. கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொண்டு புதிய மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பதற்குப் பதிலாக அவற்றை நியாயப்படுத்தி அழித்துவருகின்றன.

தமிழினியின் நூல் வெளியானதும் பதைபதைத்துப்போன இக் குழுக்கள் அவர்மீதானதும் நூல் மீதானதுமான அவதூறுகளை கட்டவிழ்த்துவிட்டன. தமிழ் நாட்டிலிருந்த ‘சினிமப்பாணி’ கதைகளைத் தமிழினியைக் கொச்சப்படுத்தும் வகையில் புனைய ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டு புலி ஆதரவுப் பிழைப்புவாதிகள் முன்னைநாள் போராளியையும் அவரின் படைப்பையும் கொச்சைப்படுத்தி தமது பிழைப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

இன்றைய புலம்பெயர் மற்றும் தமிழ் நாட்டை மையமாகக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு அரசியலின் இரண்டு பிரதான முகாம்களின் மோதல் தமிழினீயின் கூர் வாளை மட்டுமன்றி சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தையும் அழித்துத் துவம்சம் செய்கின்றது.

ஆக, பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் சார்ந்த அரசியல் என்பது இந்த இரண்டு முகாம்களின் அழிவிலிருந்தே தோன்ற முடியும். இவர்களின் வஞ்சக அரசியலை நீக்கம் செய்வதலிருந்தே புதிய அரசியல் உதித்தெழ முடியும். அடிப்படை அரசியல் நேர்மையற்ற, மக்கள் விரோதக் குழுக்களான இந்த எதிரெதிர் முகாம்கள் ஒன்றையொன்று ஊட்டி வளர்க்கின்றன. தமிழினியின் நூல் மக்கள் சார்ந்த அரசியல் தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டும். புலியெதிர்ப்பு மற்றும் புலியாதரவுக் கும்பல்களின் பிடியிலிருந்து கூர் வாள் மட்டுமன்றி, தமிழ்ப் பேசும் அரசியலும் விடுவிக்கப்பட வேண்டும்.

 

http://inioru.com/background-critics-of-tamilinis-koor-vaal/

2 hours ago, சண்டமாருதன் said:

paavamஅதாகப்பட்டது தமிழீழம் என்று பேச்சை எடுத்தால் ஏதோ கிடைக்கக் கூடிய அதிகாரத்தைப் பெற்றுவிடலாம் என்பதற்காக தமிழீழம் என்ற கருத்து உருவாக்கப்பட்டது என்கின்றீர்கள். மற்றபடி அதில் நம்பிக்கை இல்லை என்கின்றீர்கள்.

அப்படியானால் அனைத்து படுகொலைகளுக்கும் புலிகளுக்கு முன்னர் இக்கருத்தை உருவாக்கியவர்கள் குற்றவாளிகளாகின்றனர். இது ஒன்றும் பிள்ளைவிழையாட்டிலலை ஏனெனில் சிங்களவர்களின் உறுதியான நிலைப்பாடானது சிறு அதிகாரத்தைக் கொடுத்தால் அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு தமிழீழம் என்ற நாடடை அடைநதுவிடுவார்கள் என்றளவிலேயே அவர்கள் பஞ்சாயத்து அதிகாரமளவுக்கும் கொடுக்க மறுக்கின்றார்கள். நீங்கள சொல்லும் ஆயிரம் சந்தர்ப்பங்களும் நாம் பிறக்க முதல் இருந்தே வெறும் பேச்சுவர்த்தைகளும் காலக்கடத்தல்களுமே அன்றி ஒருபோதும் அவை நடமுறைச்சாத்தியமானதாக இருந்ததில்லை. அவ்வாறு இருந்தது என்பது கற்பனையே!

தமிழீழத்துக்கான சாத்தியக்கூறுகள் எப்போதும் இருக்கவில்லை என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புரிந்துகொள்கின்றார்கள். சிலர் புறக்காரணிகளான இந்திய சர்வதேச விருப்பங்களை பிரதானமாக்குகின்றார்கள். சிலர் நேரெதிர்காரணியான சிங்களம் தராது என்பதை முன்வைககின்றார்கள். எனது கருத்துக்கள் இனத்திற்குள் இருக்கும் சமூக முரண்பாடுகளும் இரண்டாம் பட்சமாக இனத்தேசீயத்தை வைத்திருக்கும் நிலைப்பாடும் அதன் நிமிர்தமான பிரிவினைவாதங்களும் மோதல்களும் என அகநிலையைய அடிப்படையாகக்கொண்டு சாத்தியம் இல்லை என்பதை பிரதிபலிக்கின்றது. 

புலிகள் மீதான குற்றச்சாடு என்பது எமது அகநிலை முரண்பாடுகளை மூடி மறைத்து பூசி மொழுகும் காரியமாகவே இன்றளவும் இருக்கின்றது. இக்காரியம் எம்மை நாமே எப்போதும் ஏமாற்றும் போக்கு. புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் இந்த சமூகத்தில் இருந்து உருவானவை. அவற்றின் செயற்பாடு அசைவியக்கத்திற்கான உந்துசக்தி இச் சமூகத்தில் இருந்தே கிடைக்கப்பெறுகின்றது. தமிழர்களின் தோல்வி புலிகளின் தோல்வியாக முடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் தனிமனிதர்களின் தோழ்களில் இத்தோல்விகளின் காரணங்களை இறக்கிவைக்கவும் முடியாது. ஏனெனில் அனைத்து முரண்பாடுகளையும் நிலுவையில் வைத்துக்கொண்டும் போராட்டத்தில் இருந்து அந்நியப்பட்டும் அரசோடு அண்டியிருந்துகொண்டும் போரட்டத்தை காரணம்காட்டி புலப்பெயர்வுகளுடாக வாழ்வை மேம்படுத்திக்கொண்டும் புலிமூலம் தமிழீழம கிடைக்கும் என்ற காரணத்தின் விழைவுதான் புலி உட்பட அனைத்து உயர்க்காவுகொடுத்தலும் ஆகும். இந்த ஆட்டத்தில் நான் இல்லை நீ இல்லை நாங்கள் எப்பவும் அப்படிச்சொன்னம் இப்படிச்சொன்னம் இருபது வருசமா சொல்லிக்கொண்டிருக்கிறம் முப்பது வருசமா முக்கிக்கொண்டிருக்கிறம் என்று அந்நியப்பட்டு கத்துவதால் எந்த பிரயோசனமும் இல்லை. தோல்வியிலும் சாவுகளிலம் எல்லோருக்கும் பங்குண்டு. யாரும் யோக்கியனாக முடியாது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. 

 

மீண்டும் யோனி முலை புணர்ந்து என்று கவிதை வரைந்துள்ளீர்கள் ,

ஓவியம் என்னவென்று புரியாமல் மொடேர்ன் ஆர்ட்டை பார்த்து வியப்பவர்கள் பலரை சந்தித்துள்ளேன்.

அது என்ன ஏது என்று தமக்கு தெரியாது என்றால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று   அச்சமும் பயமும் அவர்களை ஆட்டுவிக்க தலையை அப்படி இப்படி ஆட்டி ரசிப்பார்கள் ,

பல ஆங்கில ,வேற்றுமொழி மொழி பட ரசிகர்களையும் இதே விதமாக பார்த்து சிரித்ததுண்டு .விளங்காததுதான் அவர்களின் பெருமிதம் .

உந்த அகநிலை புறநிலை முரண்பாடுகள் எல்லாம் நான் தாண்டி பலவருடங்கள் .

வெறும் வார்த்தைகளால் மொடோர்ன் ஆர்ட் வரைந்து ஆகபோவது எதுவும் இல்லை தமக்கு விளங்கியதாக காட்டிக்கொள்ள நாலு பேரின் பச்சை கிடைக்கலாம் 

ஆனால் செல்வா முதல் இன்று வரை எமது போராட்டம் கருப்பு வெள்ளையாக பதிவில்  இருக்கு .

அதற்கு நீங்கள் விரும்பியபடி எந்த வர்ணமும் மற்றவர்களுக்கு விளங்காமல் பூசி உங்களை நீங்களே ஏமாற்றலாம் .

இப்படி எத்தனையோ  கவிஞர்களை ,எழுத்தாளர்களை ,ஓவியர்களை ,நாடக சினிமா இயக்குனர்களை நான் பார்த்துவிட்டேன் 

அனுதாப்படுவதை தவிர வேறு வழியில்லை . தொடருங்கள் நாலு பேர்கள் விளங்காமல் வாழ்த்த காத்திருப்பார்கள் . 

கடைசி என்ன எழுதினிர்கள் என்று உங்களுக்கு புரிந்தாலே அது பெரிய விடயம் தான் .

"அப்படியானால் அனைத்து படுகொலைகளுக்கும் புலிகளுக்கு முன்னர் இக்கருத்தை உருவாக்கியவர்கள் குற்றவாளிகளாகின்றனர் "

எங்கு போய் முட்டுவது .தமிழ் ஈழம் என்று ஒரு கருத்தை உருவாக்கினால் படுகொலைகள் தானாக நிகழுமா ?

கியுபெக் ,ஸ்கொட்லான்ட் பிரிவு என்று ஒரு சொல்லை உருவாக்கினால் படுகொலைகள் நிகழுமா ?

 

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, arjun said:

.

உந்த அகநிலை புறநிலை முரண்பாடுகள் எல்லாம் நான் தாண்டி பலவருடங்கள் .

 

நீங்கள் இப்படி ஆகிவீட்டீர்களென்று சில வருடங்களுக்கு முன்தான் தெரிந்து கொண்டேன். இந்த இரண்டும் இல்லாதவர்களிடம் புரிதல் என்பது கடினம். உங்கள் மூளைக்கும் முண்ணானுக்கும் மிடையில் பல மைல் தூர இடவெளி, நீங்கள் இன்னும் என்னவும் எழுதலாம், உங்களை உலக மகா புத்திசாலியென காட்ட, ஆனா - 0.

19 minutes ago, arjun said:

 தொடருங்கள் நாலு பேர்கள் விளங்காமல் வாழ்த்த காத்திருப்பார்கள் . 

 

 

இப்ப 5.

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணருக்கு சண்டமாருதன் அண்ண எழுதினதில்

ஒரு இழவும் விளங்குது இல்லை.

தனக்கு விளங்கவில்லை என்பதால

அவர் எழுதினது மொடேர்ன் ஆர்ட் ஆகிட்டு

(மொடேர்ன் ஆர்ட்டும் அண்ணருக்கு விளங்குது இல்லை)

அப்படி தனக்கு விளங்காததுக்கு மற்ற ஆட்கள்

பச்சை குத்தி இருப்பதால் அவர்களும் விளங்காமல்

சும்மா பம்மாத்துக்கு பச்சை குத்திருக்கினம் என்று ஒரு வியாக்கியானம்

(மெடேர்ன் ஆர்ட்டை புரிந்து கொள்ள உலகில் ஒருவரும் இல்லையாம்,

புரிந்து கொண்டு ரசிப்பது எல்லாம் சும்மாச்சுமாம்)

 

ஒன்று தனக்கு  விளங்கவில்லை என்பதை புரிபவர் அறிவாளி

தனக்கு புரியாமல் எழுதியவரை மட்டம் தட்டுபவர் ஒரு முட்டாள்

தனக்கு புரியாமல் எழுதியவதை புரிந்து கொண்டவர்களை ஏளமானப் பார்ப்பவர்

கடைந்தெடுத்த படு முட்டாள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் ஆர்வத்துடன் கூர்வாளின் .... புத்தகத்தை  Google Play Book வேண்டி 90 பக்கம் வாசிச்சாச்சு. பல  விடயங்கள் முன்பு கேட்ட/வாசிச்சவைதான் எனினும் தமிழினியின் எழுத்து முன்பு  நம்ப மறுத்தவைகளை நம்ப  வைக்குது. 

1 hour ago, M.P said:

மிகவும் ஆர்வத்துடன் கூர்வாளின் .... புத்தகத்தை  Google Play Book வேண்டி 90 பக்கம் வாசிச்சாச்சு. பல  விடயங்கள் முன்பு கேட்ட/வாசிச்சவைதான் எனினும் தமிழினியின் எழுத்து முன்பு  நம்ப மறுத்தவைகளை நம்ப  வைக்குது. 

அப்ப MP ஒரு தெளிவு நிலைக்கு வந்திட்டியல்....அதுவே பெரியசந்தோஷம்...............ஆனால் நீங்கள் படித்த புத்தகத்தின் பெயரை சொல்லலாம், தமிழினி அக்காவின் என்று சொல்வதை நிறுத்துங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
On 3/23/2016 at 8:32 PM, நந்தன் said:

புலிகளை ,இலங்கை அரசியலில் இருந்து எவ்வளவு விரைவாக அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக அகற்றுவது 

அங்கு அரசியல் செய்வோருக்கு அவசியம் .

அதுக்குப்புறம் என்ன பல்லாங்குழி ஆடுறதா ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினியின் எழுத்துக்களைப் படித்தமையால் அவரின் குரலாகவே ஒரு கூர்வாளின் நிழலில் புத்தகம் உள்ளது என்று சொல்லமுடியும்.

புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பும், இராணுவக் கட்டமைப்பும்,  துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களால் நிர்வகிக்கப்பட்டது என்பது தெளிவாக உள்ளது. இன்னும் 100 பக்கங்கள் படிக்க உள்ளன. அவற்றில்தான் போரின் இறுதிப் பகுதிகள் சொல்லப்பட்டுள்ளன.

 

அர்ஜுன் அண்ணா, நாலு விசயம் தெரிந்தவர்களுடன் சேர்ந்து நின்று படம் எடுத்தால் அவர்களின் அறிவு எங்களுக்கு வந்துவிடாது. அதை நாம்தான் தேடித்தான் பெறவேண்டும்.

தமிழினியின் நூலிலும் சண்டமாருதன் சுட்டிக்காட்டிய விடயங்கள் உள்ளன.

சாதீய, பிரதேச வகையில் மாற்றம் காணாத சமூகமும், உண்மையற்ற சமாதான முன்னெடுப்புக்களும், இராணுவ பலத்தின் மீதான அதீத நம்பிக்கையும் முள்ளிவாய்க்காலில் கொண்டுபோய் விட்டது என்று புத்தகத்தில் உள்ளது. இது எல்லோருக்கும் தெரிந்தவைதான். ஆனால் தமிழினி சொல்லும்போது இக்காரணங்களின் மீதான பெறுமதி இன்னும் கூடுகின்றது.

புலிகள் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை என்று அன்ரன் பாலசிங்கம் சொன்னதாக உள்ளது. அது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. அதில் 2009 க்கு முன்னர், பின்னர் என்ற வேறுபாடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பகலவன் said:

இந்த விடயத்தில் சிங்கள அரசு இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறது.

1. புலிகளின் தளபதியாக இருந்த ஒருவரை வைத்தே புலிகளை விமர்சனம் செய்து புலிகள்மீதான மிச்சம் சொச்சம் நல்மதிப்பை சேதப்படுத்துவது. ( இன்னும் இருக்கிறதாக சிங்கள அரசு இன்னும் நம்புகிறது)

2. புலிகளின் முன்னாள் தளபதியை பேசு பொருளாக்கி,  துரோகி ஆக்குவதன் மூலம் இனி எந்த தளபதி எது சொன்னாலும் நம்ப முடியாமல் பண்ணுவது.

இதனை எதிரிகள் செய்வதை விட அவனுக்காகவே இருக்கும் எம் மக்களில் சிலர் தாராளமாகச் செய்கிறார்கள்... துரோகிகளாகி. 

தமிழினி அக்கா.. 2009 இல் புனர் வாழ்வுக்குப் போய் மீண்டு வந்தவா..?! ஆனால்.. புனர் வாழ்வுக்குப் போன முக்கிய தளபதிகளில் பலர் இன்னும் மீளவே இல்லை.. குறிப்பாக புலிகள் அமைப்பில்.. ஆயுதம் தூக்காத... பேனா தூக்கிய.. பாலகுமாரன் அண்ணா.. புதுவை உள்ளடங்க.

எல்லாம்.. எங்கோ.. நீக்கமற நிறைந்துள்ளது. ஏலவே தீர்மானிக்கப்பட்டவை.. தமிழினி அக்காவின் மறைவின் பின் அவர் பெயரால்.. அரங்கேறுகிறது.

போர் காலத்தில் ஒரு தயா மாஸ்டர்.. பின் முள்ளிவாய்க்கால் வைத்தியர்கள்.. பின்... தமிழ்செல்வனின் மனைவி.. சூசை மனைவி.. இப்ப.. தமிழினி அக்கா.. 

எதிரியும் துரோகிகளும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள்.. அங்கு கூட்டு வியாபாரம் அவர்களுக்கு நல்லாவே களை கட்டுவதால்.

அதில் இன்னொரு போன்ற புறஞ்சொல்லி ஊடகங்கள்.. துணைக்கிருக்கு.. சொல்லி வேலை இல்லை.tw_blush:tw_angry:

இப்ப புலிகளை சம்பந்தன் பயங்கரவாதி ஆக்கிறார்.. தமிழினி தோற்றுப் போனவர்கள் ஆக்கிறார்.. (அவாவும் இயக்கதில தானே இருந்தவா.. தன் சொந்தக் குரல் வெளில வர முடியல்லைன்னா.. இயக்கத்திட்ட எடுபடல்லைன்னா.. இயக்கத்தை விட்டு அதன் நடைமுறைகளுக்கு அமைய.. வெளியேறி இருக்கலாமே..??? அது அங்கு ஒரு மாற்றத்துக்கு சரியான நேரத்தில் உதவி இருக்குமே...  இப்ப எல்லாம் முடிந்த பின் ஆயிரம் நொட்டை சொல்லுறவா.. இவை நடக்க முதல் முக்கிய பொறுப்பில ஏன் மெளனியாக இருந்தவா...இல்ல ஒரு பேச்சுக்கு.. இந்த எழுத்துக்கள் அப்படி கேட்க வைக்குது..இது உண்மையில் அவாட எழுத்தா.. அல்லது புனைவுகளின் கூட்டா.. என்பதை ஆராய தனி நூல் வேண்டும்.. அதை எழுத சாட்சி சொல்ல தமிழினி அக்காவும் இல்லை நூலோடு சம்பந்தப்பட்ட.. புலிகளும் இல்லை..).. இன்னும் சிலர் புலிகளை புனிதர்களா என்று ஆராய்கிறார்கள்...

கேள்வி.. புலிகள் இப்ப எங்க.. ?! புலிகள் இப்ப என்னத்திற்கு தடை...?! புலிகள் இப்ப எதற்கு அச்சுறுத்தல்..?! புலிகள் உங்கள் அரசியலை தடுக்கினமா..?! புலிகள் சாதாரண தமிழ் மக்களின் கெடுகுடி வாழ்கை முறைக்கு சவாலா இருக்கினமா..?! இல்லை இல்ல. பிறகு என்ன மண்ணாங்கட்டிக்கு இவை எல்லாம்..?!

பிரச்சனை தமிழ் மக்கள் எனி உரிமை குறித்து சிந்திக்கக் கூடாது. சிந்தித்தால்.. பயங்கரவாதி ஆக்கப்படுவார்கள்.. புலிகள் போல் அழிக்கப்படுவார்கள்.. இந்த சிந்தனை விதைப்பையே எதிரியும் வல்லாதிக்க சக்திகளும்.. இப்படியான ஆக்கங்களின் ஊடு நாசூக்காக விதைக்க முனைகிறார்கள்.

சம்பந்தன் போன்றவர்கள் கூட இவற்றை வரவேற்பார்கள்.. அவர்களின் அரைவேக்காட்டு அரசியல் சாணக்கியமானது எனக் காட்ட. துரோகிகள் சொல்லி வேலை இல்ல.. இதனை எவ்வளவுக்கு எவ்வளவு மக்கள் மத்தியில்.. மக்களின் அரசியல் எண்ணங்களைப் பலவீனப்படுத்த காவுகிறார்களோ.. அவ்வளவுக்கு அவ்வளவு அவர்களுக்கு பல்வேறு ஊதியங்கள்.. உழைப்புக்கள்.

இதனை விட வேறு இங்கு ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. tw_blush:

Edited by nedukkalapoovan

4 hours ago, கிருபன் said:

தமிழினியின் எழுத்துக்களைப் படித்தமையால் அவரின் குரலாகவே ஒரு கூர்வாளின் நிழலில் புத்தகம் உள்ளது என்று சொல்லமுடியும்.

 

உண்மையில் கிருபன் இங்கே எழுதப்பட்ட விடயங்கள் பற்றியல்ல எனது ஆதங்கம். இங்கே எழுதப்படாமல் விடுபட்ட விடயங்கள் (தமிழினி அறிந்திருந்தும்). அவை தமிழினியால் எழுதப்படாமல் விட்டவையா அல்லது எழுதி மறைக்கப்பட்டவையா, என்பதில் இந்த புத்தகம் வெளிவருவதன் நோக்கமும் வெளியிடுபவர்களின் நோக்கமும் தங்கி உள்ளது.  

பிழை பிடிபதல்ல எனது நோக்கம். அப்படியாயின் இரண்டாவது பக்கத்தில் தொடங்குகிறது பிழை. தமிழினி 2015 இல் மரணத்தை தழுவி கொண்டார். 2014இல் புற்றுநோயிற்குள்ளாகி மரணமடைந்தார் என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். 

தமிழினி இந்த புத்தகங்களில் வரும் சில பகுதிகளை ஏற்கனவே கதையாகவோ நேரடியாகவோ சொல்லியுமுள்ளார். நான் இதை தமிழினி தான் எழுதினாரா என்று கேள்விக்கு உள்ளாக்கவில்லை. ஏன் சிலவற்றை எழுதவில்லை/எழுதி தணிக்கை செயப்பட்டது என்றே ஆராய விரும்புகிறேன். 

இறுதியுத்தத்தை  நேரடியாக அனுபவித்த ஒரு அரசியல்துறை தளபதிக்கு, புலிகளால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்களை தனக்கு தெரிந்த விதத்தில், தன்னுடைய கருத்தில் சொல்ல தெரிந்தவருக்கு, இராணுவத்தால் ஏற்படுத்தபட்ட இழப்புகள், போர்க்குற்றங்களை எந்த வரியிலும் வாராமல் மறைபதற்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. புலிகள் தவறிழைக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நிச்சயமாக தவறிழைத்துள்ளார்கள். 

ஆனாலும் புலிகளின் இராணுவ தாக்குதல்களையும் அவர்களின் இராணுவ வல்லமையையும் தனக்கு தெரிந்த விதத்தில் எடுத்து கூறிய தமிழினி, சிங்கள இராணுவம் அக்கால பகுதியில் தமிழ் பிரதேசங்களில் செய்த எந்த ஒரு படுகொலையையும் வெளிபடுத்தாத/வெளிபடுத்தி மறைக்கப்பட்டத்தில் தான் சந்தேகமே தொடங்குகிறது.

கிளைமோர் தாக்குதலில் புலிகளின் தளபதி சங்கர் அண்ணை கொல்லப்பட்டதை விவரித்த தமிழினி, மன்னார் பண்டிவிரிச்சான் வெள்ளாங்குளம் பகுதியில் பாடசாலை விளையாட்டு போட்டிக்கு சென்று வந்த சின்னஞ்சிறு பாலகர்களை ஏற்றி வந்த வண்டிக்கு கிளைமோர் தாக்குதல் நடாத்தி 20 இற்கும் மேற்பட்ட பள்ளிச்சிறார்கள் கொல்லப்பட்டதை நேரில் பார்த்ததை ஏன் சொல்லவில்லை.

மல்லாவி பகுதியில் தமிழினியின் நட்பு வட்டாரத்தில் இருந்த மனித உரிமை கண்காணிப்பகத்தை சேர்ந்த கிளி பாதர் சிங்கள் ராணுவத்தில் கிளைமோரில் கொல்லப்பட்டதை சொல்லவில்லை. கிளிநொச்சி வைத்தியசாலை. புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான விமான தாக்குதல்கள் எறிகணை வீச்சுகள் , மனித நேய அமைப்புகளின் வெளியேற்றம்இன்னும் எத்தனயோ படுகொலைகள். போர்குற்றங்கள் (எல்லாமே அரசியல் சம்பந்தபட்டவை.) இதெல்லாம் தமிழினி சொல்லவில்லையா அல்லது இதை வெளியிடுபவர்களின் எஜமானர்களால் தணிக்கைக்கு உட்பட்டவையா என்று ஆராயவேண்டும்.

தமிழினி தன்னுடன் சம்பதப்படாத எத்தனையோ இராணுவ வியுகங்களையும், நடவடிக்கைகளையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் செவி வழி கேள்வியாக, தனது பக்கத்தில் இருந்து கூறியிருப்பதால் மட்டும் அவை உண்மையாகிவிடாது.  இராணுவ தாக்குதல் வியுகங்கள் தமிழினிக்கு என்றைக்குமே விளங்குவதில்லை என்பதை, தணிகைச்செல்வியுடன் இருந்த போராளிகளை கேட்டால் தெரியும்.

புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்பு, ராணுவம் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்த சுதந்திரபுரம், உடையார்கட்டு பகுதிகளில் ஆட்லெறிகளை நிலை நிறுத்தியமை, இராணுவத்திடம் செல்லும் மக்களை கால்களுக்கு கீழே சுடும்படி பணிக்கப்ட்டமை, இன்னும் இன்னோரன்ன போர்குற்றங்களுக்கு சாட்சி சேர்த்த தமிழினி ஒரே ஒரு சிங்கள் இராணுவ போர்குற்றத்துக்கு கூட சாட்சி தராமல் மறைத்ததை என்னவென்று சொல்லுவது.

(புலிகளின் ஆயுத களஞ்சியங்களும், வெடிபொருள் உற்பத்தி நிலையங்களும் காலம் காலமாக உடையார்கட்டு, சுதந்திரபுரம் பகுதியில் தான் இருந்தன என்பது வன்னியில் சின்ன குழந்தைகளுக்கும் தெரியும். ஆட்டிலேறிகளின் குறுந்தூர-நீண்ட தூர எறிகணை வீச்சு தெரிந்த எந்த ராணுவ ஆய்வாளனும், சுதந்திரபுர-உடையார்கட்டு பகுதியை தான் பாதுகாப்பு வலயமாக அறிவிப்பான் என்பதை நீங்களோ விதுஷாவோ அறியாதது எங்களின் துரதிஷ்டம் தான்)

  உண்மையில் மக்களை காப்பாற்றும் எண்ணம் தான் அரசாங்கத்திற்கு இருந்தது என்றால் புலிகள் உடையார்கட்டு சுததிரபுரத்தில் ஆட்டிலெறிகளை வைத்து சண்டையிடும்போது புதுமாத்தளன் ,முள்ளிவாய்க்கால் பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து கடலூடகவோ, வட்டுவாகல் ஊடகவோ மக்களை அரசாங்க கட்டுபட்டு பகுதிக்கு எடுத்திருக்க முடியும். இது சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும் தெரியும், சர்வதேச இராணுவ மேலாதிக்கத்துக்கும் தெரியும். உங்களுக்கு தெரியாமல் விட்டது தான் புலிகளின் அரசியல் வல்லமை என்று இப்போதாவது மக்களுக்கு புரியவேண்டும்.

உடையார்கட்டு பகுதியில் போராளிகளுடன் நின்ற நீங்கள், நிரோசன் விளையாட்டு மைதானத்தினுள் மக்களுக்கு உணவுப்பொருள் வழங்க வந்த ஐநா பணியாளர்களை (அதில் ஒருவர் பங்களாதேஷ் ஓய்வுபெற்ற ராணுவ கேணல் - ஏன் ஐநா பணியாளராக வந்தவர் என்பதை உங்களிடம் விடுகிறேன்) இராணுவத்தின் எறிகணை வீச்சு தாக்கியதை நேரில் பார்த்த நீங்கள் சொல்லாமல் விட்டது/சொல்லி மறைக்கப்பட்டது  ஏன்.?

உடையார்கட்டு மருத்துவமனை மீது எறிகணை தாக்குதல் நடந்து 50 இற்கும் மேற்பட்ட காயமடைந்த நோயாளிகள் கொல்லப்பட்டதுக்கு யார் காரணம். சின்ன குழந்தைக்கும் தெரியும் புலிகளின் ஆட்டுலேறி எறிகணைகளின் குறுந்தூர வீச்சு. இருப்பினும் ஐநா, சரவதேசம் யார் நடாத்தியது என்று தெரியாது என்று தான் அறிக்கை விடும். அது தான் உலக நியதி. உங்களுக்கு அதுவும் தெரியாதா..?மறைக்கப்பட்டதா.?

லக்ஷ்மன் கதிர்காமர் புலிகளின் புலானாய்வு பிரிவினரால் கொல்லப்பட்டதால் தான் சர்வதேசம் புலிகளை தடை செய்ததை நியாயபடுத்தும் தமிழினி, மனித நேய பணியாளர்களும், நிறுவனங்களும் அரசினால் தாங்கள் செய்யப்போகும் இனப்படுகொலைக்கு சாட்சியமில்லாமல் பண்ணும் நோக்கில் வெளிஏற்றியதை தட்டிகேட்க நாதியற்று உலகம் இருந்ததை ஏன் சொல்லவில்லை.? 

 

உண்மையில் எவ்வளவோ எழுதி கொண்டு போகலாம். ஆனால் எனக்கும் (சிலகாலம் உங்கள் தோழியின் பெயரில் சாம்பவியாக)  பழக்கமான தமிழினி உங்களுக்காக உங்கள் கணவரையும், அதனை வெளியிடுபவ்ர்களையும் மதித்து நான் எழுதாமல் விடுகிறேன். ஆனால் உண்மைகள் அப்படி பழக்கம் பார்ப்பதில்லை. 

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிகொள்கிறேன். உங்களிடம் புதுக்குடியிருப்பு சிவபுரத்தில் பொட்டம்மான் சொன்னது தொடர்பானது. ஆவணங்களை அழித்துவிடுதல் தொடர்பானது.

நாங்கள் மற்றும் நீங்கள், ஒரு விடுதலைக்காக கொள்கை உறுதியுடன் குடும்பங்களை விடுத்து போராட வந்தவர்கள். சாவு நிச்சயம் என்று தெரிந்தும். ஆனாலும் எங்களுக்காக தங்களின் உயிர்களை துச்சமென மதித்து, தங்கள் குடும்பங்களின் பாதுகாப்பை கூட துச்சம் என்று மதித்து, நேரடியாக களமாட முடியாத குற்ற உணர்வுகளுடன் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் எங்களுக்காக வேலை செய்தவர்களையும் எங்களுடன் சேர்த்து சாகடிக்க கூடாது என்று தான் பொட்டம்மான் ஆவணங்களை எரிக்க சொன்னவர். இன்றும் கொழும்பில், யாழ்பாணத்தில், வவுனியாவில், சிங்களத்தில் எத்தனை பேர்/ எத்தனை குடும்பங்கள்/ எத்தனை வர்த்தக நிறுவனங்கள்/எத்தனை அரசியல்வாதிகள்/ வெளிநாட்டு ராஜதந்திரிகள்  புலிகள் ஆவணங்களை எரித்தமையால் உயிர் வாழ்கிறார்கள் என்று நீங்கள் அறிவீர்களா.? அவர்கள் இன்றும் புலிகளையும் பொட்டம்மானையும் மனசுக்குள்ளே வாழ்த்துவதை நீங்கள் அறிவீர்களா.?(இது உங்கள் எஜமானர்களை கோபபடுத்தி இருக்கலாம்)

இதனை சாட்டாக வைத்து சேர்த்த பணத்தை  பதுக்கிய்வர்களும்/ இயக்க சொத்துகளை தங்களின் பெயர்களின் மாற்றி எழுதியவர்களும், புலிகளின் பினாமியாக, புலிகளின் வாரிசாக தங்களை காட்டுபவர்களும் இருக்கத்தான்  செய்கிறார்கள். ஆவணங்கள் எரிந்துவிட்டன என்ற நம்பிக்கையில்.

என்ன செய்வது பலரை காப்பற்ற எரித்த ஆவணங்கள் சிலர் கொள்ளையடிக்க உதவுகிறது. மழையும் அப்படி தான் நெல்லுக்கு மட்டும் பெய்வதில்லை, களைக்கும்  சேர்த்து தான் பெய்கிறது.

(ஒவ்வொரு ஆவணத்தை சேர்ப்பதற்கும், ஆவணத்திற்கு தேவையான தகவல்களை சேகரிக்க எத்தனை போராளிகளை இழந்திருப்போம். கடைசிவரை அவற்றை எதிரிகளிடம் கொடுக்க கூடாது மட்டுமல்ல, எந்த கட்டத்திலாவது நாங்கள் எதிரிகளை பின்னகர்த்தினால் அநியாயமாக ஆவணங்களை எரித்துவிட்டோமே என்று கலங்க கூடாது என்பதற்காக, தேவிபுரத்தில் ஒரு கட்டடத்தில் கரும்புலிகளை நிறுத்திவைத்து அந்த இடம் இராணுவத்திடம் கைப்பற்றியதை உறுதிசெய்து பொட்டுஅம்மானின் கட்டளையில் வெடிக்கவைத்து அழித்தார்கள். அந்த அழிவு தான் இன்று பலபேருக்கு வாழ்க்கை)

 

ரதி, 

உண்மையில் அது தான் காரணம் என்றால், ஆட்சேர்ப்பு எங்களின் கொள்கைகளுக்கு விரோதமானது என்று ஒற்றைக்கையுடன் மங்கிய கண்பார்வையுடன் வந்து சொன்ன வெற்றிச்செல்விக்கு, தமிழினியால் என்ன சொல்லப்பட்டது என்பதை இப்போது உயிரோடு இருக்கும் வெற்றிச்செல்வியிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி.

நான் இங்கு எழுதியது யாரையும் காயபடுத்தவோ, நியாபடுத்தவோ இல்லை. வரலாறை மாற்றி எழுதுவதும், சொல்லப்பட வேண்டியவற்றை மறைப்பதும் என்பார்வையில் ஒன்று தான்.

இந்த யாழ்களத்தை கூட நான் ஒரு வரலாற்று ஆவணமாக கருதியே  எழுதுகிறேன். தவறு இருந்தால் சுட்டி காட்டுங்கள் / விமர்சனம் இருந்தால் நேரடியாக சொல்லுங்கள் ஏற்று கொள்கிறேன்.

ஏன் என்றால்

உண்மை என்பது எப்பவும் ஒன்று தான். பொய்களுக்கு தான் பல வடிவங்கள் இருக்கும்.- என் அப்பா எனக்கு  சொன்னது. 

Edited by பகலவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.